வாழைக்காய்

12 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 8, 2026, 8:01:15 AM (2 days ago) Mar 8
to santhavasantham

Another vegetable veNbA!


2026-03-07

வாழைக்காய்

----------------

(வெண்பா)


சிறுவிலையில் வாழைக்காய் சீப்பாகக் கொண்டேன்

வறுவல் வதக்கலொடும் பஜ்ஜி - நறுமணம்

நாசியில் நாவிலெச்சில் நாரியெழுப் பக்கண்டேன்

ஏசியுறக் கக்கன வென்று.


பதம் பிரித்து:

சிறுவிலையில் வாழைக்காய்! சீப்பாகக் கொண்டேன்!

வறுவல் வதக்கலொடும் பஜ்ஜி! - நறுமணம்

நாசியில்! நாவில் எச்சில்! நாரி எழுப்பக் கண்டேன்

ஏசி உறக்கக் கனவு என்று.


சீப்பு - 1. bunch of bananas; 2. "cheap" என்று இக்காலத் தமிழில் கருதலாம்;

கொள்தல் - வாங்குதல்;

காண்தல் அறிதல்;

ஏசி - 1. A/C - Air-conditioning; 2. இகழ்ந்து


V. Subramanian

Subbaier Ramasami

unread,
Mar 8, 2026, 2:25:20 PM (2 days ago) Mar 8
to santhav...@googlegroups.com
சுண்டைக்காய் நல்ல சுவை

கண்டகண்ட பேரெல்லாம் காய்கறிக்குச் சொல்லுகிறார்
உண்டுவிட்டால்  உள்ளுக்குள் ஊறுதரும்- கொண்டுவா
வெண்டைக்காய் சாம்பார் விருந்தாகும் எம்வீட்டுச்
சுண்டைக்காய் கூடச் சுவை

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM91rmfzK1xw%2BF-i%3D87qmNC1o-ui6sjUCic%3DpH_8wf1sA%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Mar 8, 2026, 2:50:40 PM (2 days ago) Mar 8
to santhav...@googlegroups.com
அற்புதம், தலைவரே. கத்திரியில் தொடங்கி, வெண்டை, கொய்யா, வாழையெனச் சேர்த்துப்பின், சுண்டைக்காயுடன் பரிமாறினது யாவையும் சுவைத்து மகிழ்ந்தேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 8, 2026, at 14:25, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:



Kaviyogi Vedham

unread,
Mar 8, 2026, 8:45:09 PM (2 days ago) Mar 8
to santhav...@googlegroups.com

Siva Siva

unread,
Mar 8, 2026, 8:48:27 PM (2 days ago) Mar 8
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

Reply all
Reply to author
Forward
0 new messages