'அனல்' எனும் சொல்.

377 views
Skip to first unread message

Swaminathan Sankaran

unread,
May 21, 2015, 2:39:05 PM5/21/15
to santhav...@googlegroups.com
நான் வெகு நாட்களாக - இன்னமும் கூட, இந்த 'அனல்' எனும் சொல் தூய தமிழ்ச் சொல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
 ஆனால் 'பகவத் கீதை'யின் 7-வது அத்தியாயத்தின் 4-ஆவது  ஸ்லோகம் என்னைச் சிந்திக்க வைத்தது. எனவே, இந்த சந்தேகம், கேள்வி.

இந்த ஸ்லோகமாவது:

பூமீராபோ(அ)னலோ  வாயுஹு ஏவம் மனோ புத்திரேவ ச I
அஹம்கார இதீயம் மே பின்னா பிரக்ருதிரஷ்டதா II

இங்கு  'அனல்' எனும் சொல் 'சூடு'/'தீ' என்ற பொருளில் வருவதாகத் தெரிகிறது. கீதை இந்த சகாப்தத்தின் 3-ஆவது  நூற்றாண்டு  அல்லது அதற்கும் முந்தைய காலத்தது என்று
கொள்வோமேயானால் தமிழ் சங்ககாலம் அல்லது சங்கம் மருவிய காப்பிய காலத்திலேயே ஸம்ஸ்க்ருதத்தில் இந்தச் சொல் பயன் பட்டிருக்கிறது என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது. தமிழில் 6-ஆம் நூறாண்டு காரைக்கால் அம்மையார் 'அனல்' எனும் சொல்லைக் கையாண்டிருக்கிறார். 'இரட்டைமணிமாலை'யின் 14-வது பாடலின் மூன்றாவது அடி:
'ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின் '

என் கேள்வி:
சங்க இலக்கியத்தில் இந்த 'அனல்' எனும் சொல்  எங்கேனும் வருகிறதா?

சங்கரன் 

--
 Swaminathan Sankaran

Pas Pasupathy

unread,
May 21, 2015, 3:09:15 PM5/21/15
to Santhavasantham
நான் தேடியதில் கிட்டவில்லை.  

N. Ganesan

unread,
May 21, 2015, 9:26:27 PM5/21/15
to santhav...@googlegroups.com
பரிபாடலிலே இருக்கிறது:

(1)
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து - பரி 5-57

(2)
அனற்றினை துன்பு அவிய நீ அடைந்த கண்ணும் - பரி 6-84

அனல்- தமிழ்/த்ராவிட சொல், வடமொழி ஏகிய சொல்
என்கிறது Dravidian Etymological Dictionary (DEDR 327).

நா. கணேசன் 

சௌந்தர்

unread,
May 21, 2015, 9:36:26 PM5/21/15
to santhav...@googlegroups.com
'அலம்' என்றால் போதும் என்று பொருள். 'அனலம்' என்றால் போதாது என்று பொருள். தீயில் பொருட்களை இட்டால், அவை தீயை மேன்மேலும் வளர்ப்பதால், தீ 'போதும்' என்ற நிறைவே இல்லாமல், 'இன்னும் தா' என்று கேட்டுக் கொண்டே இருப்பதால், தீயை 'அனலம்' என்பர். இது திரிந்து, குறுகி  'அனல்' ஆகிவிட்டது.

திருநெடுந்தாண்டகத்தில், 'அலம் புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்' என்று திருமங்கை ஆழ்வார், திருமாலைக் குறிக்கிறார். அடியார்களுக்கு வேண்டியதை எல்லாம் கொடுப்பதால், அடியார்கள், இன்னும் பெறுவதற்கு ஒன்றும் இல்லை, நீவிர் கொடுத்தது போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு கொடுத்துக்கொண்டே இருப்பதால், 'அலம் புரிந்த நெடுந்தடக்கை'யாளன் திருமால். அப்படிப் பட்டவன் இன்று மாவலியிடம் சென்று மூன்றடி மண் கேட்கக் செல்கிறான் என்பதைக் குறிக்க வந்த ஆழ்வார், மேற்சொன்னவாறு பாடுகிறார்.

சௌந்தர்

N. Ganesan

unread,
May 21, 2015, 9:43:33 PM5/21/15
to santhav...@googlegroups.com

On Thursday, May 21, 2015 at 6:36:26 PM UTC-7, சௌந்தர் wrote:
'அலம்' என்றால் போதும் என்று பொருள். 'அனலம்' என்றால் போதாது என்று பொருள். தீயில் பொருட்களை இட்டால், அவை தீயை மேன்மேலும் வளர்ப்பதால், தீ 'போதும்' என்ற நிறைவே இல்லாமல், 'இன்னும் தா' என்று கேட்டுக் கொண்டே இருப்பதால், தீயை 'அனலம்' என்பர். இது திரிந்து, குறுகி  'அனல்' ஆகிவிட்டது.

தமிழ்ச் சொற்பிறப்பு அ(அன்) என்ற முன்னொட்டுடன் வராது. கனலுதல் - அனலுதல் தொடர்புடையதாக இருக்கலாம். 

N. Ganesan

unread,
May 21, 2015, 9:53:21 PM5/21/15

ஒல்- என்னும் வேர்ச்சொல்: ஒல்+து = ஒன்று, ஒற்றை, ஒரு, ஒக்க (தெலுங்கு).
ஒல்- = ஒரு ஆதல் போல், கல்- = கன்று- கருகு- ....
கன்றுதல் = கருகுதல், சிவத்தல். இது இலக்கியத்தில் அன்றுதல் என வருவதைப் பார்க்கிறோம்.
இந்தக் கல்- “கருகு-” வேர் கன்று- > அன்று-. கல்- > அல்-, எனவே, கனல் > அனல். கனற்று- > அனற்று- ...

நா. கணேசன்

Vis Gop

unread,
May 22, 2015, 2:15:42 AM5/22/15
to santhav...@googlegroups.com
tato.anyatpupluve veshma mahaapaarshvasya viiryavaan |
mumoca hanumaan agnim kaala anala shikhaa upamam || 5-54-9

Srimad Ramayanam, Sundara kandam.

Best regards.
gopal

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Vis Gop

unread,
May 22, 2015, 3:24:32 AM5/22/15
to santhav...@googlegroups.com
from Mahabharatam:

tasyAShTau vasavaH putrAsteShAM vakShyAmi vistaram.. 1-67-17 (2890)
dharo dhruvashcha somashcha ahashchaivAnilo.analaH.
pratyUShashcha prabhAsashcha vasavo.aShTau prakIrtitAH.. 1-67-18 (2891)
dhUmrAyAstu dharaH putro brahmavidyo dhruvastathA.

N. Ganesan

unread,
May 22, 2015, 8:47:36 AM5/22/15
to santhav...@googlegroups.com

On Friday, May 22, 2015 at 12:24:32 AM UTC-7, visgop wrote:
from Mahabharatam:

tasyAShTau vasavaH putrAsteShAM vakShyAmi vistaram.. 1-67-17 (2890)
dharo dhruvashcha somashcha ahashchaivAnilo.analaH.
pratyUShashcha prabhAsashcha vasavo.aShTau prakIrtitAH.. 1-67-18 (2891)
dhUmrAyAstu dharaH putro brahmavidyo dhruvastathA.

2015-05-22 11:45 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:
tato.anyatpupluve veshma mahaapaarshvasya viiryavaan |
mumoca hanumaan agnim kaala anala shikhaa upamam || 5-54-9

Srimad Ramayanam, Sundara kandam.

Best regards.
gopal

அருமை! இதிகாசங்களில் இருந்து காட்டுகள்.

BTW, I showed, like from ol- various words for digit one are born.
Likewise, kal- root gives rise to karu, kanRu(> anRu-), kanal (>anal).

ஒக்க- என்னும் தெலுங்குச் சொல்: ஓல்- > ஒரு = ஒருங்கு/ஒருக்கு > ஒர்க்க > ஒக்க (consonant assimilation)

Balasubramanian N.

unread,
May 23, 2015, 2:08:48 PM5/23/15
to santhav...@googlegroups.com
'அலம்' என்றால் போதும் என்று பொருள். 'அனலம்' என்றால் போதாது என்று பொருள். தீயில் பொருட்களை இட்டால், அவை தீயை மேன்மேலும் வளர்ப்பதால், தீ 'போதும்' என்ற நிறைவே இல்லாமல், 'இன்னும் தா' என்று கேட்டுக் கொண்டே இருப்பதால், தீயை 'அனலம்' என்பர். இது திரிந்து, குறுகி  'அனல்' ஆகிவிட்டது." 
என்றது உங்கள் ஊகமா, அன்றேல் வேறு ஆதாரங்கள் உளவா?

Soundar

unread,
May 23, 2015, 3:42:02 PM5/23/15
to சந்தவசந்தம்
அன்புள்ள பாலசுப்ரமணியன்,

'அலம்' என்ற வடமொழிச்சொல் பற்றிய விவரம், ஊகத்தின் அடிப்படையில் எழுதியதன்று. வைணவ வியாக்கினகர்த்தாக்கள் எழுதிச் சென்றவை ஆதாரம். காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணன் வியாக்கியானத்தை கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம்.

(அலம்புரிந்த நெடுந்தடக்கை) ‘அலம்‘ என்பது வடசொல்; போதும் என்னும் பொருளதான இடைச்சொல் யாசகர்கள் ‘போதும் போதும்‘ என்று சொல்லும்படியாக அவர்கட்கு அபாரமாகக் கொடுக்கவல்ல பெரிய கையை யுடையவன் எம்பெருமான். தன்னிடத்தில் தானம்பெற்றபின் வேறொரு வாசலிலே சென்று துவள வேண்டாதபடி பர்யாப்தமாகக் கொடுப்பவனென்க. 

N. Ganesan

unread,
May 23, 2015, 4:01:38 PM5/23/15
to Santhavasantham
2015-05-23 12:42 GMT-07:00 Soundar <rsou...@gmail.com>:
அன்புள்ள பாலசுப்ரமணியன்,

'அலம்' என்ற வடமொழிச்சொல் பற்றிய விவரம், ஊகத்தின் அடிப்படையில் எழுதியதன்று. வைணவ வியாக்கினகர்த்தாக்கள் எழுதிச் சென்றவை ஆதாரம். காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணன் வியாக்கியானத்தை கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம்.

(அலம்புரிந்த நெடுந்தடக்கை) ‘அலம்‘ என்பது வடசொல்; போதும் என்னும் பொருளதான இடைச்சொல் யாசகர்கள் ‘போதும் போதும்‘ என்று சொல்லும்படியாக அவர்கட்கு அபாரமாகக் கொடுக்கவல்ல பெரிய கையை யுடையவன் எம்பெருமான். தன்னிடத்தில் தானம்பெற்றபின் வேறொரு வாசலிலே சென்று துவள வேண்டாதபடி பர்யாப்தமாகக் கொடுப்பவனென்க. 

நன்றி. Comp. Dictionary of IA languages பார்த்தேன். அதில் “அல”, அல்லது “அலம்” என்னும்
சொல்லோ, அதற்கு “போதும்” என்ற பொருளோ காணோமே. 

2015-05-23 14:08 GMT-04:00 Balasubramanian N. <n.balasu...@gmail.com>:
'அலம்' என்றால் போதும் என்று பொருள். 'அனலம்' என்றால் போதாது என்று பொருள். தீயில் பொருட்களை இட்டால், அவை தீயை மேன்மேலும் வளர்ப்பதால், தீ 'போதும்' என்ற நிறைவே இல்லாமல், 'இன்னும் தா' என்று கேட்டுக் கொண்டே இருப்பதால், தீயை 'அனலம்' என்பர். இது திரிந்து, குறுகி  'அனல்' ஆகிவிட்டது." 
என்றது உங்கள் ஊகமா, அன்றேல் வேறு ஆதாரங்கள் உளவா?

சௌந்தர்

unread,
May 23, 2015, 7:07:56 PM5/23/15
to santhav...@googlegroups.com
Cologne Sanskrit dictionary-ல் காணலாம்.

N. Ganesan

unread,
May 23, 2015, 7:23:54 PM5/23/15
to Santhavasantham
2015-05-23 16:07 GMT-07:00 சௌந்தர் <rsou...@gmail.com>:
Cologne Sanskrit dictionary-ல் காணலாம்.

நன்றி. CDIAL 604 áram ʻ fitly, readily ʼ RV. 2. álam ʻ enough, able ʼ AV.
1. Pa. araṁ ʻ quickly ʼ; G. ar ʻ readily, swiftly ʼ.
2. Pa. alaṁ ʻ fit for, certainly ʼ; EAś. alaṁ (with inf. in -- tave) ʻ able ʼ; Pk. alaṁ ʻ enough ʼ.
áraṁkarōti, áraṁkr̥ta -- , alaṁkāˊra -- , álaṁkr̥ta -- .
Addenda: áram: †alaṁdhūma -- 

ர/ல மாறுபாடு என்கிறது: அரம்/அலம். நீர/நீல போல் எனலாம்.

இவ்வார்த்தைகளில் இருந்து அனல் = தீ பிறப்பதில்லை என்கிறது DED.

நா. கணேசன்
 
நன்றி. Comp. Dictionary of IA languages பார்த்தேன். அதில் “அல”, அல்லது “அலம்” என்னும்
சொல்லோ, அதற்கு “போதும்” என்ற பொருளோ காணோமே. 

RAJAGOPALAN APPAN

unread,
May 24, 2015, 10:06:12 AM5/24/15
to santhav...@googlegroups.com

திரு. சௌந்தர் அவர்கள் சொல்வது சரியே. 'அனல்' வட சொல். தமிழில் தற்சமமாக வருவது. தமிழில் அதற்கான சொல் 'அழல்'. சிலம்பில் 'அழல்' பல இடங்களில் வருகிறது. (உ.ம்)

" தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்"

" அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட"

அ.ரா

Balasubramanian N.

unread,
May 24, 2015, 12:38:32 PM5/24/15
to santhav...@googlegroups.com
உங்கள் ஊகமா என நான் வினவியது ’அலம்’ -இன் பொருள் பற்றி அன்று. அது நானும் நன்கறிந்ததே                                நான் ஆதாரம் பற்றிக்கேட்டது: அனல் என்பது அன்+அல என்று உருவானதாகத் தாங்கள் செய்துள்ள வாதம்.

N. Ganesan

unread,
May 24, 2015, 12:55:19 PM5/24/15
to santhav...@googlegroups.com

On Sunday, May 24, 2015 at 7:06:12 AM UTC-7, Rajagopalan wrote:

திரு. சௌந்தர் அவர்கள் சொல்வது சரியே. 'அனல்' வட சொல். தமிழில் தற்சமமாக வருவது. தமிழில் அதற்கான சொல் 'அழல்'. சிலம்பில் 'அழல்' பல இடங்களில் வருகிறது. (உ.ம்)

" தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்"

" அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட"

நிழல்/நிணல் போல, தழல்/தணல் > அழல்.
ஆனால், கனல் > அனல்:

இது த்ராவிடபாஷைகள் சம்ஸ்கிருதத்தில் இருந்து பெற்ற கடன் (லோன் வொர்ட்) அன்று
என்கின்றனர் சம்ஸ்கிருதப் பேராசிரியர்கள் (தாமஸ் பர்ரோ (ஆக்ஸ்போர்ட்), மர்ரே எமனோ (பெர்க்கிலி) ).
முக்கியமான காரணம்: எல்லா த்ராவிட பாஷைகளில் இருப்பதும், வினைச்சொல்லாக இருப்பதுமாகும்.
அனத்துதல், அனற்றுக, அன்றுதல், ... இவையெல்லாம் பார்த்தால் அனல் தமிழினின்றும்
சம்ஸ்கிருதம் பகர்ச்சை ஆன சொல் எனக் கருதலாம். பெயர்ச்சொல்லாக மட்டும் இல்லாமல்
வினைச்சொல்லாக எல்லா தென்னிந்திய மொழிகளிலும் ஆழமாக நிற்பது: அனற்று-, அனலுதல்.

நா. கணேசன்

சௌந்தர்

unread,
May 24, 2015, 3:55:43 PM5/24/15
to santhav...@googlegroups.com
அனலம் என்னும் பற்றிய சொல்-பொருள் விளக்கங்களும் திருநெடுந்தாண்டக உபன்யாசத்தில் கேட்டவையே. ஒலி வடிவில் குறுந்தகட்டில் உள. வரி வடிவில் எங்குள என்பதை அறியேன்.

N. Ganesan

unread,
May 24, 2015, 4:48:01 PM5/24/15
to santhav...@googlegroups.com, T. Raguveeradayal

On Sunday, May 24, 2015 at 12:55:43 PM UTC-7, சௌந்தர் wrote:
அனலம் என்னும் பற்றிய சொல்-பொருள் விளக்கங்களும் திருநெடுந்தாண்டக உபன்யாசத்தில் கேட்டவையே. ஒலி வடிவில் குறுந்தகட்டில் உள. வரி வடிவில் எங்குள என்பதை அறியேன்.

பழைய வியாக்கியானங்களில் நிச்சயம் இருக்கும். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் உரைகளில் இருக்கலாம்.
அவர் வியாக்கியானச் சகக்ரவர்த்தி போன்றோர் உரைகளை தழுவிச் செல்வார். இரகுவீரதயாளர் இங்குள்ளார். அவருக்கும்
மடல் அனுப்புகிறே. ரகு தளம் இங்கே:

 ”அரச மரம் ..த்ரேதா அக்னி- மூன்று நெருப்பு..குளித்து மூன்று அனலை ஓம்பும்..அலம் =போரும் அனலம் =போரும் என்ற புத்தி  இல்லை ….மூன்று அக்னி உபாசனம் பண்ணனும்..பிரயாக் திருவேணி சங்கமத்தில் இருந்து ராஜ்ய பரிபாலனம்..பரத்வாஜ ஆஸ்ரமம்…புரூரவஸ்- அமாவசு -இரண்டு பிள்ளை பீமன் காஞ்சனா  –ஜன்னு பிறந்தான் ஜான்கவி பெயர் கங்கை ..தவம் புரிந்து -கல்யாணம் பண்ண மாட்டேன் கங்கை கோபித்து ..யக்ஜா சாலை முழுக்க அடிக்க கங்கையை குடித்தார் அவர் பெண் ஜான்கவி. ”

சுற்றும் கடலாய் அனந்தரம் நாடாய் அனந்தரம் மதிளாய்–அவன் தான் குறி அழியாமல்  இருக்க அவன் பார்க்கும் பொழுதே ஒருவர் கூரை எழுவர் உடுக்கும் படியாக கண்டு கலங்கும் படி லோகம் அடங்க அவன் கையில் பட்ட பாடு இவனே பட்டான் -அவளக்கு மூத்தோனை வென் நரகம் சேரா வகையே -வீர சொர்க்கம்-பட்ட பாடே நரகம் -செந்தீ -இத்தனை நாளும் வெளுத்த அக்நி இன்று தான் செந்தீ ஆனதாம்  அனலம் அலம் புத்தி இல்லை -ஒல்கி-திரு வடி வாலை அண்ட கொண்டு தன நிறம் பெற்று -பாகவதன் நிழலில் ஒதுங்கின பலம் –சேஷத்வம் பார தந்த்ர்யம் -ததீய ”

அனல் (< கனல்) - செந்தீ தான். கருகு/கன்றுதல்/புண் (அ) வீக்கம் கந்தியிருக்கு/கன்றியிருக்கு என்றால் சிவந்துள்ளது எனப்பொருள்.
அனல் - செந்தீ.

ஆனல், அன் என்னும் முன்னொட்டு (ப்ரிஃபிக்ஸ்) உடன் அடிப்படையான ஒரு சொல், வினையாக பலவிதங்களில் பயன்படும் சொல்,
negative prefix உடன் உருவாகுமா என வினவுதிராயின், உருவாகாது எனலாம்.

நா. கணேசன்

Vis Gop

unread,
May 25, 2015, 6:24:48 AM5/25/15
to santhav...@googlegroups.com

293 Anala He whom we never get satisfied

Vishnu Sahasranamam, Translated by P.R. Ramachander

http://www.hindupedia.com/en/Vishnu_Sahasranamam

Regards.
gopal

Vis Gop

unread,
May 25, 2015, 6:50:55 AM5/25/15
to santhav...@googlegroups.com

Bhutavaso vasudevah sarvasu-nilayo analah

Darpaha darpado drupto durdharo-atha-parajitah ..76

Bhutavaso: He in whom all the beings dwell.

Vasudevah: The Divinity who covers the whole universe by Maya.

Sarvasu-nilayo: He in whose form as the Jiva all the vital energy or Prana of all

living beings dissolves.

Analah: One whose wealth or power has no limits.

http://www.chinmayakedar.org/kedar/media/documents/VishnuSahasranama.pdf

Vis Gop

unread,
May 25, 2015, 8:06:37 AM5/25/15
to santhav...@googlegroups.com
http://www.sssbpt.info/ssspeaks/volume05/sss05-08.pdf

The flames of anger, pride, hatred, envy are more devastating than other fires; they arise in the mind stealthily and in spurts; they are ever demanding more and more to feed upon. Fire is called anala in the Geetha, for anala means, "not enough!" Fire never says, "Enough" or "I am satisfied." You dread fire when it leaps at a distance; what then is to be said when it is inside your very self? How to put out these awful flames? Well, Sanaathana Dharma (the ancient  spiritual code) has certain extinguishers tested by experience and guaranteed by sages. They are Sathya, Dharma, Shaanthi and Prema.

Saturate your heart with these and you are rendered fire-proof

gopal.

Madhurabharati

unread,
May 25, 2015, 8:29:01 AM5/25/15
to SanthaVasantham

2015-05-25 17:36 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:

The flames of anger, pride, hatred, envy are more devastating than other fires; they arise in the mind stealthily and in spurts; they are ever demanding more and more to feed upon. Fire is called anala in the Geetha, for anala means, "not enough!" Fire never says, "Enough" or "I am satisfied." You dread fire when it leaps at a distance; what then is to be said when it is inside your very self? How to put out these awful flames? Well, Sanaathana Dharma (the ancient  spiritual code) has certain extinguishers tested by experience and guaranteed by sages. They are Sathya, Dharma, Shaanthi and Prema.

Saturate your heart with these and you are rendered fire-proof

gopal.

​Very beautiful quotation from Swami.

anbudan
Madhurabharati​

N. Ganesan

unread,
May 25, 2015, 9:14:05 AM5/25/15
to santhav...@googlegroups.com

On Monday, May 25, 2015 at 3:50:55 AM UTC-7, visgop wrote:

Bhutavaso vasudevah sarvasu-nilayo analah

Darpaha darpado drupto durdharo-atha-parajitah ..76

Bhutavaso: He in whom all the beings dwell.

Vasudevah: The Divinity who covers the whole universe by Maya.

Sarvasu-nilayo: He in whose form as the Jiva all the vital energy or Prana of all

living beings dissolves.

Analah: One whose wealth or power has no limits.

http://www.chinmayakedar.org/kedar/media/documents/VishnuSahasranama.pdf

2015-05-25 15:54 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:

293 Anala He whom we never get satisfied

Hari - is gold, yellow color. In Tamil, from Hari, we get arimaa for Lions. Lions are unknown in south India for several thousand years. Even in India, except few in Northwest.

Anala looks to me like describing Hari color of the fire embers,

Also, you can see anala in Uddhava Giitha many times:

N. Ganesan
Reply all
Reply to author
Forward
0 new messages