சந்த வசந்த வாழ்த்து

4 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Nov 6, 2025, 8:05:53 PM (11 hours ago) Nov 6
to santhavasantham

சந்த வசந்த வாழ்த்து

(எண்சீர் விருத்தம் - கட்டளை அடிகளைக் கொண்டது)

இலங்கி லக்கணத் தோடெழி லாரும்

… இலக்கி யப்பசும் பூம்பொழில் ஆடி

அலம்பு வண்டினம் போல்களி கூரும்

… அருந்த மிழ்ப்புல வோர்கணம் கூடி

நலஞ்சி றந்தொளிர் சொல்லிற் சுவையாய்

… நவையில் நற்கவி நல்கும் அவையாம்

இலந்தை யார்தரும் சந்த வசந்தம்

… இசைபு ரிந்தென்றும் வாழிய மன்னோ! 

பதம் பிரித்து:

இலங்கு இலக்கணத்தோடு எழில் ஆரும்

… இலக்கியப் பசும் பூம்பொழில் ஆடி

அலம்பு வண்டு இனம் போல் களி கூரும்

… அருந்தமிழ்ப் புலவோர் கணம் கூடி

நலம் சிறந்து ஒளிர் சொல்லில் சுவையாய்

… நவை இல் நற்கவி நல்கும் அவையாம்

இலந்தையார் தரும் சந்த வசந்தம்

… இசை புரிந்து என்றும் வாழிய மன்னோ! 

(எழில் ஆரும் = அழகு மிகுந்த; அலம்பு = ஒலிக்கும்; கணம் = குழுமம்; நவையில் = குற்றமற்ற; இசை புரிந்து = புகழ் மிகுந்து; மன் ஓ = அசைச்சொல்)

கருத்து:

இலந்தையார் தொடங்கி வைத்த சந்தவசந்தமானது, இலக்கணத்துடன் பொருந்தி அழகு வாய்ந்த இலக்கியம் என்னும் பூஞ்சோலையில் களித்து ஆடும் வண்டுகள் போன்ற அருந்தமிழ்க் கவிஞர்கள் எல்லாம் குழுமி,   சுவை மிகுந்த சொற்களால் கவிதைகளைப் படைக்கும் அவையாகும். அத்தகைய நலம் மிக்க சந்தவசந்தம் என்றென்றும் புகழ் புரிந்து வாழ்க! 

  • இமயவரம்பன் 

Kaviyogi Vedham

unread,
Nov 6, 2025, 8:31:07 PM (11 hours ago) Nov 6
to santhav...@googlegroups.com
mika arumai,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/37314FA1-E5CC-4650-B20B-25C118B40D2A%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Nov 6, 2025, 8:39:34 PM (11 hours ago) Nov 6
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாருக்கு மிக்க நன்றி. 

On Nov 6, 2025, at 8:31 PM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:

mika arumai,
 yogiyar

Ram Ramakrishnan

unread,
Nov 6, 2025, 9:26:39 PM (10 hours ago) Nov 6
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 7, 2025, at 07:09, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Nov 6, 2025, 9:42:13 PM (10 hours ago) Nov 6
to சந்தவசந்தம்
அருமை அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages