10 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 28, 2025, 9:35:10 AM (8 days ago) Oct 28
to santhav...@googlegroups.com

.          காட்சி இன்பம்!

[தொடர் வண்டிப் பயணத்தில்(Train journey)இருபுறமும் கண்ட காட்சி ]

கோடு யர்ந்த மாம லைகள்

  கூட்டம் போடும் தென்னைகள்

ஓடும் மேகம் செல்லு கின்ற

   உச்சி வானின் ஊர்வலம்

நீடு பச்சை நெல்வ யல்கள்

   நீர்நி றைந்த ஆறுகள்

ஈடி லாத காட்சி இன்பம்

   இங்கு மங்கும் தோன்றுமே!

(இங்கும் அங்கும்- இந்தப் பக்கமும்,அந்தப் பக்கமும்)

                              -தில்லைவேந்தன்.

..


Kaviyogi Vedham

unread,
Oct 28, 2025, 11:00:52 AM (8 days ago) Oct 28
to santhav...@googlegroups.com
balebale.. enjoyed,  
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgkUBFcE16Sjne1AUNCyoKsyK2LJbRyAmVp3nb9e%2BUkqQ%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 28, 2025, 11:14:58 AM (8 days ago) Oct 28
to santhav...@googlegroups.com
Thanks Yogiyar

   - தில்லைவேந்தன்

On Tue, Oct 28, 2025 at 8:30 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
balebale.. enjoyed,  
 yogiyar

இமயவரம்பன்

unread,
Oct 28, 2025, 3:45:08 PM (8 days ago) Oct 28
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
காட்சியின் மாட்சியைக் காட்டும் கவிதை சிறப்பு!

Ram Ramakrishnan

unread,
Oct 28, 2025, 10:36:53 PM (8 days ago) Oct 28
to santhav...@googlegroups.com
படமும் கவிதையும் மிகச் சிறப்பு.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 28, 2025, at 19:05, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


<IMG_1576.jpeg>

Arasi Palaniappan

unread,
Oct 28, 2025, 10:47:38 PM (8 days ago) Oct 28
to சந்தவசந்தம்
காட்சி இன்பம் நேர்த்தி நேர்த்தி!

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 29, 2025, 1:51:12 AM (8 days ago) Oct 29
to santhav...@googlegroups.com
திரு இமயவரம்பன்,திரு பழனியப்பன் ஆகியோருக்கு நன்றி 

               — தில்லைவேந்தன்

sudha's creations

unread,
Oct 30, 2025, 10:11:10 AM (6 days ago) Oct 30
to santhavasantham
இளையராஜா டியூன் .. அதில் சேர்த்து..போடணும் போல இருக்கு அவ்ளோ அழகா இருக்கு சார்.. 
தில்லை சார்..
Sv


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 30, 2025, 10:48:19 AM (6 days ago) Oct 30
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.Madam சுதா வேதம்

                   -- தில்லைவேந்தன்

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 1, 2025, 12:25:09 AM (5 days ago) Nov 1
to santhav...@googlegroups.com

.          . எங்கள் வீட்டுக் கிணறு!

              (நேரிசை வெண்பாக்கள்)

கொல்லைப் புறத்தில் கொலுவிருக்கும் கோமகள்
நல்ல நளிர்நீரை நல்கியவள் - இல்லையெனச்
சொல்லா இனியவள், சூழ்மழை பொய்த்துநீர்
இல்லாமல் வாடுகின்றாள் இன்று!

ஆழம்தான் ஐம்பதடி ஆனாலும் நீரில்லை
ஏழை வயிறதுவோ இக்கிணறு? - வாழி
மழையேநீ என்று வருவாயோ,? மீண்டும்
அழையாமுன் செய்வாய் அருள்!

வற்றியே போன வளம்சுரந்த வள்ளலை
குற்றமே கூறிக் குறைசொல்லேன் - உற்ற
மனையில் கிணறிருந்தால் மங்கலம் என்ற
நினைவொன்றே கொள்ளுமென் நெஞ்சு!

                                -- தில்லைவேந்தன்.
..

Kaviyogi Vedham

unread,
Nov 1, 2025, 8:45:41 PM (4 days ago) Nov 1
to santhav...@googlegroups.com
abaram.  thanneer  varum, innum   ore  varaththil,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

sudha's creations

unread,
Nov 1, 2025, 9:02:23 PM (4 days ago) Nov 1
to santhavasantham
அற்புதமான கவிதை... தில்லை சார் 
sv

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 1, 2025, 9:14:09 PM (4 days ago) Nov 1
to santhav...@googlegroups.com
நன்றி யோகியார் 
தங்கள் வாக்கு உண்மையாகட்டும்
நன்றி

           —தில்லைவேந்தன்


NATARAJAN RAMASESHAN

unread,
Nov 1, 2025, 9:15:21 PM (4 days ago) Nov 1
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி Madam சுதா வேதம்

           —தில்லைவேந்தன்

Arasi Palaniappan

unread,
Nov 1, 2025, 11:34:29 PM (4 days ago) Nov 1
to சந்தவசந்தம்
இல்லாத நீர்க்கிணறே என்றாலும் ஏற்றங்கள் 
சொல்லும் கவிதைச் 
சுவையருமை - நல்லமன 
நன்றிஉணர்(வு) ஊற நனிமகிழ்ந்து, கேணியும் 
இன்றுமுதல் ஊறும் இனிது!

அரசி. பழனியப்பன் 

--

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 1, 2025, 11:53:46 PM (4 days ago) Nov 1
to santhav...@googlegroups.com
ஆஹா அற்புதம் 
கவிஞர் அரசி பழனியப்பன் 
தாங்கள் வழங்கிய வாழ்த்துப்பா அருமை
கிணற்றில் கண்டிப்பாக நீர் ஊறும்( தங்கள் வெண்பாவைக் கேட்டு) நன்றி 

         —தில்லைவேந்தன்.
(பின் குறிப்பு- தங்கள் வெண்பாவை இப்பாடல் இடம்பெறும் என் அடுத்த கவிதைத் தொகுப்பில் சேர்க்க விரும்புகிறேன்)
                            — தில்லைவேந்தன்.

Siva Siva

unread,
Nov 1, 2025, 11:54:37 PM (4 days ago) Nov 1
to santhav...@googlegroups.com
Oh. I thought this year many lakes around Cyhennai have received a lot of water due to rains so far.
Maybe the land in your area is so much paved that rain water does not get to replenish the groundwater.

May your well get well soon!

V. Subramanian


On Sat, Nov 1, 2025 at 12:25 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 2, 2025, 12:02:13 AM (4 days ago) Nov 2
to santhav...@googlegroups.com
Thanks Sri  Siva siva 
That is due to indiscriminate sinking of bore wells 
When we came to this area in 1985, we were using only well water for all purposes 
I am sure that my well will get well as it is blessed by a staunch devotee of Lord Siva

                    — தில்லைவேந்தன்        

Arasi Palaniappan

unread,
Nov 2, 2025, 12:17:09 AM (4 days ago) Nov 2
to சந்தவசந்தம்
மிக்க மகிழ்ச்சி. நன்றி அண்ணா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Nov 2, 2025, 1:20:38 AM (4 days ago) Nov 2
to santhav...@googlegroups.com
அருமை, திரு. தில்லைவேந்தன்.

கிணறு, பூதம் இவற்றிற்குண்டான புராதனச் சொற்றொடரை மறப்போம்.

வானமும் இயற்கையையும் சுற்றிச் சூழ்ந்த உங்கள் கவிதைகள் பஞ்சபூதங்களில் மற்றொன்றான பூமியையும் விடவில்லை.

தொடர்வீர்களாக.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 2, 2025, at 09:32, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 2, 2025, 1:24:29 AM (4 days ago) Nov 2
to santhav...@googlegroups.com
ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி திரு ராம்கிராம்
தொடர்ந்து எழுதுவேன். நன்றி 

                         —தில்லைவேந்தன்
Reply all
Reply to author
Forward
0 new messages