vazhiya bharatham

5 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Mar 22, 2026, 10:32:39 PM (3 days ago) Mar 22
to santhavasantham

            வாழிய பாரதம்

 

ஆர்க்கும் கலியதன் ஆட்டமே – இங்கே
     அந்தோ பலப்பல பாட்டமே-புவி
     அங்குமிங்குமெங்கும் வாட்டமே-உடன்
  அதிவேகமே சதிதீர்க்கவே குதிபோட்டுடன் வரவேண்டுமே
     அக்கிரமக் காரர் ஓட்டமே- கொள
     ஆறுமுகா வேண்டும் ஊட்டமே!

பார்க்கும் திசையெலாம் வஞ்சமே – அதைப்
     பார்த்துப் பதைக்குது நெஞ்சமே- எங்கும்
     பட்டினி பாதகம் பஞ்சமே – இந்தப்
  படிவாழவோ பழிதீர்க்கவே பரிவோடுடன் வரவேண்டுமே
      பாதம் பணிந்தனம் தஞ்சமே – உன்றன்
      பார்வை படவேண்டும் கொஞ்சமே

காத்திடுவாய் என நம்பியே -உன்றன்
      காலைப் பிடிக்கிறோம் எம்பியே- உடன்
     காக்க வருவாயெம் நம்பியே- வெகு
கனவேகமே பரிவோடிவண் மயிலேறியே வரவேணுமே
      கற்பக வேழத்தின் தம்பியே – இன்னும்
      காத்திருத்தல் நன்றோ வெம்பியே

தீக்குள் எரிந்தனர் கோடியே – பெருந்
     தியாகம் புரிந்தனர் நாடியே- பலர்
     சென்றனர் வெஞ்சிறை கூடியே- அந்தச்
   செயலேவெறும் விழலாவதோ சரிசெய்யவே வரவேணுமே
       தேவ துதிக்கிறோம் பாடியே – உனைச்
        சேவிக்கிறோம் விழி மூடியே!

தன்முனைப் புக்காக வேண்டியே- பலர்
     சாதிக்கிறார் சதி தூண்டியே-உயர்
      சத்திய நல்வழி தாண்டியே- இந்தச்
   சதிகாரரின் செயல் ஓயவே விரைவாகவே வரவேண்டுமே
       சங்கரனின் மகன் ஆண்டியே- - - எமைத்
       தாக்குகிறார் பலர் சீண்டியே!

மாபெரும்  நாடெங்கள் பாரதம்- இதை
     வாழ்த்திட ஏறுவோம் பாரதம்- இங்கே    
        வாயுரைப்போம்  வந்தே மாதரம்- மிக
 மகிழ்வாகவே இதில்வாழுவோர் புவிமீதிலே தினம்வாழவே
       வைத்திடுவாய் கந்த சாமியே-நலம்
       வாழட்டும் பாரத பூமியே

Siva Siva

unread,
Mar 23, 2026, 9:35:48 AM (2 days ago) Mar 23
to santhav...@googlegroups.com
Nice.
Using this many end-rhymes appears very challenging - but easy for you!

V. Subramanian

yogiyaar

unread,
Mar 23, 2026, 11:09:10 AM (2 days ago) Mar 23
to சந்தவசந்தம்
very  good paravasa poem by thalaivar,
  yogiyar

Sai Ganesan H

unread,
Mar 23, 2026, 11:12:49 AM (2 days ago) Mar 23
to santhav...@googlegroups.com
காவடி சிந்து மெட்டில் அருமையான பாடல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா! 

— சத்ய வேழன் H சாயி கணேசன். 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDk0XfZA8xhQLz%3DJA%3DabhPZHO%3Dfu3yEWD265Q98f7bP9g%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages