வாழிய பாரதம்
ஆர்க்கும் கலியதன் ஆட்டமே – இங்கே
அந்தோ பலப்பல பாட்டமே-புவி
அங்குமிங்குமெங்கும்
வாட்டமே-உடன்
அதிவேகமே சதிதீர்க்கவே குதிபோட்டுடன் வரவேண்டுமே
அக்கிரமக்
காரர் ஓட்டமே- கொள
ஆறுமுகா
வேண்டும் ஊட்டமே!
பார்க்கும் திசையெலாம் வஞ்சமே – அதைப்
பார்த்துப்
பதைக்குது நெஞ்சமே- எங்கும்
பட்டினி
பாதகம் பஞ்சமே – இந்தப்
படிவாழவோ பழிதீர்க்கவே பரிவோடுடன் வரவேண்டுமே
பாதம் பணிந்தனம் தஞ்சமே – உன்றன்
பார்வை படவேண்டும் கொஞ்சமே
காத்திடுவாய் என நம்பியே -உன்றன்
காலைப் பிடிக்கிறோம் எம்பியே- உடன்
காக்க
வருவாயெம் நம்பியே- வெகு
கனவேகமே பரிவோடிவண் மயிலேறியே வரவேணுமே
கற்பக வேழத்தின் தம்பியே – இன்னும்
காத்திருத்தல் நன்றோ வெம்பியே
தீக்குள் எரிந்தனர் கோடியே – பெருந்
தியாகம்
புரிந்தனர் நாடியே- பலர்
சென்றனர்
வெஞ்சிறை கூடியே- அந்தச்
செயலேவெறும் விழலாவதோ சரிசெய்யவே வரவேணுமே
தேவ துதிக்கிறோம் பாடியே – உனைச்
சேவிக்கிறோம் விழி மூடியே!
தன்முனைப் புக்காக வேண்டியே- பலர்
சாதிக்கிறார்
சதி தூண்டியே-உயர்
சத்திய நல்வழி தாண்டியே- இந்தச்
சதிகாரரின் செயல் ஓயவே விரைவாகவே வரவேண்டுமே
சங்கரனின் மகன் ஆண்டியே- - - எமைத்
தாக்குகிறார் பலர் சீண்டியே!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDk0XfZA8xhQLz%3DJA%3DabhPZHO%3Dfu3yEWD265Q98f7bP9g%40mail.gmail.com.