அருகன் நற்புகழ் செப்புவோம் - வண்ண விருத்தம்

2 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jun 6, 2026, 12:23:53 PM (6 days ago) Jun 6
to Santhavasantham
அருகன் நற்புகழ் செப்புவோம்  - சமண சமயக் கடவுள் துதி
(வண்ண விருத்தம் : 
தனன தத்தன தனன தத்தன
… தனன தத்தன தத்தனா)

பாடல் 1:
விரியும் முக்குடை நிழலில் முத்தென
… மிளிரும் ஒப்பறு நற்றவன்
முரண்வி ளைக்குமும் மதில்செ றுத்தவன்
… முனைவன் நித்திய வெற்றியன்  
மருள கற்றிய மதிந லத்தினன்
… மறுவில் சத்தியம் மிக்கவன்
அருள்வ ளர்த்திடும் அறிவன் அற்புதன்
… அருகன் நற்புகழ் செப்புவோம். 

பதம் பிரித்து:
விரியும் முக்குடை நிழலில் முத்தென
… மிளிரும் ஒப்பு அறு நல் தவன்
முரண் விளைக்கும் மும் மதில் செறுத்தவன்
… முனைவன் நித்திய வெற்றியன்  
மருள் அகற்றிய மதி நலத்தினன்
… மறு இல் சத்தியம் மிக்கவன்
அருள் வளர்த்திடும் அறிவன் அற்புதன்
… அருகன் நற்புகழ் செப்புவோம். 

பாடல் 2:
தரும சக்கரம் உடைய தத்துவன்
… நெறித ழைத்திடு சற்குணன்
கரும முற்றிலும் உதிர விட்டொரு
… கதித விர்த்திடும் முத்தியன் 
பரவு பொற்பத சரண ளிப்பவன்
… மருவு பற்றவை அற்றவன்
அருள்வ ளர்த்திடும் அறிவன் அற்புதன்
… அருகன் நற்புகழ் செப்புவோம். 

பதம் பிரித்து:
தரும சக்கரம் உடைய தத்துவன்
… நெறி தழைத்திடு சற்குணன்
கருமம் முற்றிலும் உதிர விட்டு ஒரு
… கதி தவிர்த்திடும் முத்தியன் 
பரவு பொற்பத சரண் அளிப்பவன்
… மருவு பற்று அவை அற்றவன்
அருள் வளர்த்திடும் அறிவன் அற்புதன்
… அருகன் நற்புகழ் செப்புவோம். 

இந்தப் பாடலை இசையுடன் கேட்க:
இந்தப் பாடலைப் படித்த பேரா. Dr. கனக. அஜிததாஸ் என்னும் சமண சமயப் பேரறிஞரின் வாழ்த்துரை பின்வருமாறு:
<<
🙏🙏🙏 பேரன்புடையீர் வணக்கம். 
மெய்மறந்தேன்
ஆழ்ந்தேன் தங்களது இசை அணிந்த பாடலில்

முக்குடை  ஜூன் இதழ் அச்சில்
அடுத்த இதழை  இது  அலங்கரிக்கும்

மென்மையான அழுத்தமாக  அருமையான கருத்துகளை வெளிப்படுத்தும் துதிப்பாடல் அற்புதம்!

 நெஞ்சம் நிறைந்த நன்றி பல
>>

- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Jun 6, 2026, 12:35:34 PM (6 days ago) Jun 6
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 6, 2026, at 12:23, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


இந்தப் பாடலைப் படித்த பேரா. Dr. கனக. அஜிததாஸ் என்னும் சமண சமயப் பேரறிஞரின் வாழ்த்துரை பின்வருமாறு:
<<
🙏🙏🙏 பேரன்புடையீர் வணக்கம். 
மெய்மறந்தேன்
ஆழ்ந்தேன் தங்களது இசை அணிந்த பாடலில்

முக்குடை  ஜூன் இதழ் அச்சில்
அடுத்த இதழை  இது  அலங்கரிக்கும்

மென்மையான அழுத்தமாக  அருமையான கருத்துகளை வெளிப்படுத்தும் துதிப்பாடல் அற்புதம்!

 நெஞ்சம் நிறைந்த நன்றி பல
>>

- இமயவரம்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9E0D68E8-BD07-4270-9C58-CEDE1B62B462%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Jun 6, 2026, 2:25:47 PM (6 days ago) Jun 6
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!

- இமயவரம்பன்

Arasi Palaniappan

unread,
Jun 6, 2026, 3:56:41 PM (6 days ago) Jun 6
to சந்தவசந்தம்
அருகன் போற்றும் விருத்தம் அருமை!

b873ec60-b2f5-4d73-9b11-061813e2277c_8461f671.jpeg

இமயவரம்பன்

unread,
Jun 6, 2026, 3:58:33 PM (6 days ago) Jun 6
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி அண்ணலே
Reply all
Reply to author
Forward
0 new messages