காலம் - மீ. விசுவநாதன்

7 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Feb 17, 2026, 1:24:24 AMFeb 17
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

அடுத்தவர் துன்பத்தை அப்போதே நீக்கக்
கொடுக்கும் குணத்தோரே தெய்வம் - அடுத்து 
நடப்பது நன்மையே என்றெண்ணி பற்றைக்
கடப்பதே வாழ்வின் களிப்பு. (1070) 16.02.2026

நல்ல விதைதேடி நாளில் பயிர்செய்தால்
புல்லுமே பூமரமாய் ஓங்கிடுமாம் - நல்லோர்கள்
சொல்லும் அதுபோல் சுகந்தரு(ம்) என்பார்கள்!
சொல்லுவோம் நாமும் தினம். (1071) 17.02.2026

M. Viswanathan

unread,
Feb 17, 2026, 8:45:53 PMFeb 17
to Santhavasantham, M. Viswanathan
காலம்"
(மீ. விசுவநாதன்)

அருகோ எருக்கோ அகப்படும் புல்லோ
ஒருகை எடுத்தே உணர்வால் விரும்பியே
தந்து தொழுதால் தலைமேல்தும் பிக்கையால்
பந்தம் துடைப்பான் துணை. (1072) 18.02.2026

Siva Siva

unread,
Feb 17, 2026, 9:06:26 PMFeb 17
to santhav...@googlegroups.com
/  அருகோ எருக்கோ அகப்படும் புல்லோ   /

அறுகு ==> எதுகைக்காக "அருகு" என்று திரிந்ததா?

V. Subramanian

On Tue, Feb 17, 2026 at 8:45 PM M. Viswanathan <meev...@gmail.com> wrote:
காலம்"
(மீ. விசுவநாதன்)

M. Viswanathan

unread,
Feb 17, 2026, 11:16:18 PMFeb 17
to Santhavasantham
ஆம் கவிஞரே..
அன்பன்,
மீ. விசுவநாதன்
18.02.2026

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOLe_6EkZrL9MVP8_%3D_FntQS0N99CeKXBuTW0Qg6aeQNg%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Feb 19, 2026, 6:28:31 AMFeb 19
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

தமிழுக்குத் தன்னெளிய தொண்டினைச் செய்தே
இமைப்போது மோயா திருந்தார் - தமையோர் 
எளியனாய் எண்ணி உவேசா தமிழாய்
பளிச்சென ஆனார் பரந்து.(1073) 19.02.2026

(இன்று (19.02.1855) தமிழ்த் தாத்தா உ.வே. சா. அவர்களின் பிறந்த தினம்)

M. Viswanathan

unread,
Feb 20, 2026, 7:17:59 AMFeb 20
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

நம்பிக்கை வைத்துநம் நட்புக்குள் வந்தோர்கள்
எம்பிரான் போன்ற இறையான தெம்பென்றே 
உள்ளே உறுதியாய் உள்ளோரை அன்புதான்
அள்ளி அணைக்கும் அறி.(1074) 20.02.2026

M. Viswanathan

unread,
Feb 22, 2026, 10:24:09 PMFeb 22
to Santhavasantham, M. Viswanathan
 "காலம்"
(மீ. விசுவநாதன்)

கற்பதற்கே இன்னும் கடல்போ லிருக்கிற
அற்புதக் காவியங்கள் அப்படியே பற்றி
இழுக்கிறதே என்னை பராசக்தி தாயே
அழுக்கின்றிக் கற்க அருள். (1075)21.02.26

வீதி இரைச்சலை வெற்றுச் செவிகளால்
சேதி யெனத்தினம் சேர்க்காதே - சோதிக் 
கருப்பொருள் சிந்தைக்குக் கற்கண்டாம் தூயன்
திருப்புகழ் கேட்கத் திருப்பு. (1076) 22.02.2026

சாமரம் வீசித் தவறான பேரிடம்
தாவரமெ னக்கேட்டுத் தாழாதே - நாவரத்தால் 
பாமரனைத் தூக்கித் துயர்துடைக்கும் பாட்டிசைத்தே
காலத்தை வெல்லலாம் காண். (1077) 23.02.2026

Arasi Palaniappan

unread,
Feb 23, 2026, 7:16:26 AMFeb 23
to சந்தவசந்தம், M. Viswanathan
மீ வி அண்ணா! 

வாக்குவளம் மிஞ்சி மழையாகக் கொட்டுவதால் 
பாக்கள் வரிசைகட்டிப் பண்ணளக்க- ஆக்கங்கள் 
நாளும் தொடர, நவிலவொணாப் பேரின்பம் 
ஆளும் மனங்களிலே ஆழ்ந்து!

மகிழ்ந்து போற்றும் 
அரசி. பழனியப்பன்  

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

M. Viswanathan

unread,
Feb 23, 2026, 10:36:45 AMFeb 23
to Arasi Palaniappan, சந்தவசந்தம்
அன்புக் கவிஞர் அரசி பழனியப்பன் அவர்களின் கருத்துக் கவிதை அருமை. மகிழ்ச்சி. நன்றி.
அன்பன்
மீ. விசுவநாதன்
23.02.2026  21.06 pm

M. Viswanathan

unread,
Mar 2, 2026, 6:13:42 PM (8 days ago) Mar 2
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

சுற்றித் திரிந்து உணவைத்தன் வாயிலே
பற்றிப் பறந்துதன் குஞ்சுக்குப் பற்றுடனே
தந்தாலும் குஞ்சு தனியாய்ப் பறந்தோடப்
பந்தம் துறந்தோடும் பார். (1078) 03.02.2026 

M. Viswanathan

unread,
Mar 4, 2026, 3:22:59 PM (7 days ago) Mar 4
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

இசையை ரசிக்கும் இதயம் இருந்தால்
அசையா திருக்கும் அகத்தின் மிசையில்
அமைதி இருக்கும், அழுக்காம் கவலைச்
சுமையும் மறையும் உணர். (1079) 05.03.2026 

M. Viswanathan

unread,
Mar 5, 2026, 6:50:39 PM (5 days ago) Mar 5
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

நம்பிய பிள்ளைஶ்ரீ நாராய ணாவென்றான்!
துன்பிழைத்த தந்தைமுன் தூண்பிளந்து சீறி
நரசிங்க னாய்த்தோன்றிக்  காத்தகுரு வாயூர்
வரதனை நெஞ்சே வணங்கு.(1080) 06.03.2026

M. Viswanathan

unread,
Mar 6, 2026, 10:59:15 PM (4 days ago) Mar 6
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

வாசிக்கும் எந்த வகைநூலும் உள்ளத்து
மாசினை நீக்கும் மருந்தென்றே நேசித்து
ஆழ்ந்ததில் தோய்ந்தால் அறிவைச் செறிவாக்கி
சூழ்வினை போக்கும் துணிந்து.(1081) 07.03.2026

Arasi Palaniappan

unread,
Mar 8, 2026, 1:58:56 AM (3 days ago) Mar 8
to சந்தவசந்தம்

---------- Forwarded message ---------
From: Arasi Palaniappan <arasipala...@gmail.com>
Date: Sat, 7 Mar 2026, 2:37 pm
Subject: Re: காலம் - மீ. விசுவநாதன்
To: S. Palaniappan <palaniw...@gmail.com>
Cc: M. Viswanathan <meev...@gmail.com>


அருமை அண்ணா!

வாசிக்கும் எந்த வகைநூலும் உள்ளத்து
மாசினை நீக்கும் மருந்தென்று -நேசித்தே 
ஆழ்ந்ததில் தோய்ந்தால் அறிவு  செறிவாகிச் 
சூழ்வினை போகும் 
தொலைந்து

என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
தங்கள் வெண்பாவை மாற்றியமைக்குப் பொறுத்தாற்றுக!

அரசி. பழனியப்பன் 


On Sat, 7 Mar 2026, 9:29 am M. Viswanathan, <meev...@gmail.com> wrote:
"காலம்"
(மீ. விசுவநாதன்)

வாசிக்கும் எந்த வகைநூலும் உள்ளத்து
மாசினை நீக்கும் மருந்தென்றே நேசித்து
ஆழ்ந்ததில் தோய்ந்தால் அறிவைச் செறிவாக்கி
சூழ்வினை போக்கும் துணிந்து.(1081) 07.03.2026

On Fri, Mar 6, 2026, 5:20 AM M. Viswanathan <meev...@gmail.com> wrote:
"காலம்"
(மீ. விசுவநாதன்)

நம்பிய பிள்ளைஶ்ரீ நாராய ணாவென்றான்!
துன்பிழைத்த தந்தைமுன் தூண்பிளந்து சீறி
நரசிங்க னாய்த்தோன்றிக்  காத்தகுரு வாயூர்
வரதனை நெஞ்சே வணங்கு.(1080) 06.03.2026

On Thu, Mar 5, 2026, 1:52 AM M. Viswanathan <meev...@gmail.com> wrote:
"காலம்"
(மீ. விசுவநாதன்)

இசையை ரசிக்கும் இதயம் இருந்தால்
அசையா திருக்கும் அகத்தின் மிசையில்
அமைதி இருக்கும், அழுக்காம் கவலைச்
சுமையும் மறையும் உணர். (1079) 05.03.2026 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

M. Viswanathan

unread,
Mar 8, 2026, 5:41:40 AM (3 days ago) Mar 8
to Santhavasantham
"காலம்"
             (மீ. விசுவநாதன்)

                       "பெண்"
பானை தலைவைத்துப் பாடி நடந்தபடி
ஆனைவரும் காட்டிலே அச்சமின்றித் "தானை"
மறந்து அவள்தினமும் வந்துழைத்தே செல்வாள்
பிறந்த பயன்பெற்ற பெண்.(1083) 08.03.2026

M. Viswanathan

unread,
Mar 8, 2026, 5:50:31 AM (3 days ago) Mar 8
to Santhavasantham
அன்புக் கவிஞர் அரசி பழனியப்பன் அவர்கள் புலவர் கீரன் குறித்த செய்திகளை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டேன். அவரின் உரைகளால் அடியேன் அறிந்துணர்ந்து பெற்றது அனந்தம். அருமையான பகிர்வுக்கு நன்றி.

அன்பன்
மீ. விசுவநாதன்
08.03.2026 15.19pm

M. Viswanathan

unread,
Mar 8, 2026, 9:31:55 PM (2 days ago) Mar 8
to Santhavasantham
"காலம்"
(மீ. விசுவநாதன்)

காசிக்குச் சென்றுநற் கங்கையில் நீராடிப்
பூசித்தும் முன்னோர்க் கடன்செய்தும் யாசித்தோர்
ஏழைப் பசிதீர்க்க ஈய்ந்தோரை நெஞ்சாலே
ஆழவே வாழ்த்தி வணங்கு. (1084) 09.03.2026

M. Viswanathan

unread,
Mar 9, 2026, 9:57:35 PM (2 days ago) Mar 9
to Santhavasantham
"காலம்"
(மீ. விசுவநாதன்)

வாசமுள பூக்களிடம் வட்டமிடும் தேனீபோல்
நேசமுள நெஞ்சமதைத் தேடிவரும் ஈசனவன்
பூங்கருணைப் பொன்வண்டு; ஆகையினால் அன்பான
பூங்கொத்தாய் வாழ்கப் பொலிந்து. (1085)10.03.2026

M. Viswanathan

unread,
Mar 10, 2026, 6:10:32 PM (12 hours ago) Mar 10
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

நட்சத் திரவானம் நாபிளந்து பார்த்திடும்
அட்சய பாத்திரம்!  கற்பனை உட்சமாய்
ஊறிட ஊக்க மருந்திடும்! பாட்டிவாய்
கூறிய வைரமணி ஆறு.(1086) 11.03.2026
Reply all
Reply to author
Forward
0 new messages