சந்த வசந்தத்தின் கவிஞர், அறிஞர், சான்றோர் பெருமக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

11 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Oct 19, 2025, 2:55:39 AM (3 days ago) Oct 19
to சந்தவசந்தம்
தீபாவளி 

கங்கைநீர் ஆடிக்    களிகொள்ளும் பாவனையில் 
அங்கம்எண்ணெய் பூசி அதிகாலை - தங்கள்இல்லில்
நீராடி, கோயிலிலே
நின்று வணங்குபக்தர்
மார்மகிழும் தீபா வளி!

வகைவகையாய் உண்டி வளைக்கைநள பாகம்!
வகைசுவைத்தல் மாந்தர்வாய் பாகம்! - மிகையானால்
இல்லார்க்(கு) இனிதளிக்கும் ஈகை(!) தொடங்குகிற
வல்லமைசேர் தீபா வளி!

"இடிமின்னல் 
சேர்மழையாய் இன்பம் தருமோ
வெடி"என்றால் அல்ல விடையும்! - வெடியால்
கொசுவொழி(ளி)யும்(!)
தீயசக்தி கொட்டம்போம்(!),நம்மை
வசீகரிக்கும் தீபா வளி!

அரசி. பழனியப்பன் 

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 19, 2025, 3:17:52 AM (3 days ago) Oct 19
to santhav...@googlegroups.com
அருமை 

  —தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXY8wyeW7oLymVJjfCOtN8RCveKGJbde5jcNmr0Nd6CV%2Bg%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Oct 19, 2025, 3:33:06 AM (3 days ago) Oct 19
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணா!

Lalitha & Suryanarayanan

unread,
Oct 19, 2025, 4:34:24 AM (3 days ago) Oct 19
to santhav...@googlegroups.com
அரசியார் ஏற்றிவைத்த அழகு வரிசை! பாராட்டுகள்!
சிவசூரி.

On Sun, Oct 19, 2025 at 12:25 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Oct 19, 2025, 4:38:19 AM (3 days ago) Oct 19
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐய!🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 20, 2025, 8:27:36 AM (2 days ago) Oct 20
to santhav...@googlegroups.com
நன்று.

வசிகரித்தல் என்ற சொல்லும் இருக்கிறது. நாகரிகம்/நாகரீகம் போல. 
வசிகரிக்கும் - பொருந்துமோ?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 20, 2025, 8:42:07 AM (2 days ago) Oct 20
to santhav...@googlegroups.com

நன்று.

வசிகரித்தல் என்ற சொல்லும் இருக்கிறது. நாகரிகம்/நாகரீகம் போல. 
வசிகரிக்கும் - பொருந்துமோ?

மண்ணில் உயிரை வசிகரிக்கும் மந்திரமொன்
     றெண்ணி விதிமுறையே நோக்கி யெதிர்சென்று

(12-ம் நூற்றாண்டில்)

Arasi Palaniappan

unread,
Oct 20, 2025, 8:55:54 AM (2 days ago) Oct 20
to சந்தவசந்தம்
நன்றி. அப்படியும் கொள்ளலாம்!

Reply all
Reply to author
Forward
0 new messages