2010-01-17
பாவை விளக்குமாறு - (வக்கிரோக்தி)
------------
(பதின்சீர் விருத்தம் - மா மா மா மா தேமா - அரையடி வாய்பாடு)
பாவை விளக்கு மாறு வேண்டி நின்றேன்
.. பார்த்தார் புலவர் ஏனோ உடனே ஏற்றும்
பாவை விளக்கு மாறு தந்து விட்டார்
.. பாரீர் இஃதென் என்றேன் அருகி ருந்த
பாவை தன்னை விளக்கல் ஏனோ என்றார்
.. பரிதா பங்கொண்(டு) அளித்தாள் அன்னார் பெற்ற
பாவை விளக்கு மாறும் பதுமை யுந்தான்
.. பாரீர் பாட்டை எண்ணிக் கலங்கி னேனே.
பாவை விளக்குமாறு வேண்டி நின்றேன் -
பார்த்தார் புலவர்; ஏனோ உடனே ஏற்றும் பாவை-விளக்கும் ஆறு தந்துவிட்டார் -
பாரீர் இஃது என் என்றேன் -
அருகு இருந்த பாவை-தன்னை விளக்கல் ஏனோ என்றார் -
பரிதாபங்கொண்டு அளித்தாள் அன்னார் பெற்ற பாவை விளக்குமாறும் பதுமையுந்தான் -
பாரீர் பாட்டை எண்ணிக் கலங்கினேனே -
V. Subramanian
Reposting something I wrote in 2010.