சவ்வாது விடு தூது

189 views
Skip to first unread message

Subbaiyar Ramasami

unread,
Oct 19, 2018, 11:00:00 AM10/19/18
to santhavasantham
தமிழ் இலக்கியத்தில் சவ்வாது விடுதூது என்ற பிரபந்தத்தை ஒருவர் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த நூல் கிடைக்கவில்லை. நண்பர் கணேசன் சவ்வாது விடு தூது ஒன்று வேண்டும் என்று அடிக்கடி எழுதிவந்திருக்கிறார். சவ்வாது என்றால் என்ன என்று ஆய்வு செய்து பார்த்தேன். புனுகுப்பூனையின் மலம் என்று அதைப்பலரும் தவறாகக் குறிப்பிடுகிறார்கள். சவ்வாது என்பது புனுகுப் பூனையின் வாலில் ஒரு பையில் இருக்கும் வாசமுள்ள ஒரு பொடி. புனுகுப்பூனையை ஒரு கூண்டில் அடைத்துவைத்திருப்பார்கள். அது மலங்களிக்க விழையும் போது தனது ஆசனவாயைக் கம்பியில் தேய்த்து மலமிடும். அப்பொழுது  வாலில் உள்ள பைதிறந்து பையிலிருந்து சவ்வாது கொட்டும். அதைச் சேகரித்து வைத்துக்கொள்வார்கள்.  விலை அதிகம்.  சந்தையில் கிடைக்கும் சவ்வாதெல்லாம் அசல் சவ்வாதல்ல. . அசல் சவ்வாதை வாராகியின் பால் தூதனுப்ப விழைந்தேன். அதன் விளைவுதான் மயிலை வாராகி சவ்வாது விடு தூது.

இலந்தை

மயிலை வாராகி சவ்வாது விடு தூது

உலகம் அனைத்தும் உருண்டோட வைத்தே
      இலகும் இயக்கம் இயற்றி – நலமாய்
      அடியாரைக் காக்கும் அம்மைவா ராகி
      படியாரை வேரறுத்துப் பக்தர் – இடர்தீர்க்கும்
      தேவி திருப்பாதம் சென்று தரிசிக்கும்
      ஆவலில் இவ்விடத்தே ஆர்க்குமனக் – கூவலையும்
      இன்னும் ஒருபிறவி இன்றி அவள்பாதம்
      தன்னில் கிடந்து தரிசிக்கும் – உன்னதமாம்
      முக்தி நிலைவேண்டும் மொய்ம்பினையும்
      அக்கறையாய்ச் சென்றே  அறிவிப்பார் பக்கத்தே                  10
      யாருள்ளார் என்றே அலசினேன் – நேரெதிரே
      கூருள்ள கத்தி, குடுவைகள் – யாரெதனைச்
      சொன்னாலும் கேட்பதனைச் சொல்லும் கிளிப்பிள்ளை
      மின்னும் ஒளிப்புறா  வேல்கம்பு  நேரிதற்கு
      என்னவுண் டென்றே  இயம்புபுகழ்ச் சவ்வாது
      இன்னும் பலவும் இருந்தனவால் – என்னபொருள்
      என்றனுக் கேற்றதென எண்ணியே நான்பார்த்தேன்
      சின்னஞ் சிறுகத்தி சீற்றத்தில் – என்னென்ன
      செய்யும் எனவே தெரியாது.  வேறிடம்
     எய்தக் குடுவைகளுக் கேலாது – மொய்கிளியோ                  20
      வேறெவரின் பேச்சை விரும்பி அதைப்பிடித்தே
      கூறிவிட்ட செய்தியினைக் கூறாது – மீறுமெழில்
      மாடப் புறாவுக்குச் சீட்டெழுதிக் கால்கட்டி
      தேடிச் செலும்போது சிக்கிவிட்டால்--- நாடுகிற
      செய்திபோய் வேறிடத்தே சேர்ந்துவிடும்-வேல்கம்போ
      கொய்து தலையெடுக்கும், கூடாது – மெய்யாகச்
      சவ்வாதுக் கேலுமோ, சற்றேநாம் சிந்திப்போம்
தொடரும்

Ramamoorthy Ramachandran

unread,
Oct 19, 2018, 12:20:45 PM10/19/18
to santhav...@googlegroups.com
அருமை,அருமை! அன்னை வாராகியின் அருளே அருள்! சவ்வாது( ஜவ்வாது) வேறு. புனுகுச்சட்டம் வேறு. புனுகு பிசினாக ஒட்டும். இது இறைவழிபாட்டுக்கே உரியது என்பர்.
ஜவ்வாதுத் தூள் தனியே விற்பனை ஆகிறது. இப்போதும் என்னிடம் உள்ளது.  (ரசாயனக் கலவையற்ற, உடலை உறுத்தாத வாசனைத் தாவரக் கலவை அது. 
அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Ramamoorthy Ramachandran

unread,
Oct 19, 2018, 12:29:24 PM10/19/18
to santhav...@googlegroups.com
வட ஆர்க்காடு திருப்பத்தூர் அருகில்  ஜவ்வாது மலை உள்ளது. பழனி சவ்வாதுப் புலவரை திரு. கணேசன் அறிவார்.

Ramamoorthy Ramachandran

unread,
Oct 19, 2018, 12:45:16 PM10/19/18
to santhav...@googlegroups.com
அடியேன் ஓர் ஆர்வத்தில் எழுதி விட்டேன்.  பிழை இருந்தால் சுட்டிக்(கு)காட்டவும். அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 

Subbaiyar Ramasami

unread,
Oct 19, 2018, 2:00:30 PM10/19/18
to santhavasantham

தமிழ் ஜவ்வாது யின் அர்த்தம்

  •  
  •  
  •  

ஜவ்வாது

பெயர்ச்சொல்

  • 1

    ஜவ்வாதுப் பூனை சுரக்கும் திரவத்திலிருந்து தயாரிக்கப்படும் மணம் உடைய பொருள்.



image.png

Ramamoorthy Ramachandran

unread,
Oct 19, 2018, 2:17:20 PM10/19/18
to santhav...@googlegroups.com
 யூடியூபில் ஜவ்வாது மற்றும் புனுகுப்பூனை பற்றிய தகவல்களைப் படித்தேன். உங்கள் தகவல் ஆதாரமுடையது என்பதை.அறிந்து கொண்டேன்.  மகிழ்ச்சி நன்றி.  அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

Kaviyogi Vedham

unread,
Oct 20, 2018, 1:13:49 AM10/20/18
to santhavasantham
ஆகா! சவ்வாது பற்றிய நம் தலைவரின் அருமையான பாடலும்(தூதும் என் உடலில் பரவி)-
புலவரின் ஜிவ் என்ற “வாதும்’ இங்கே இப்போது என் அருகே விதந்து மகிழ்ந்து வாசனை அப்படியே ஆளைத்தூக்கிஅடிக்கிறதே!
யாவும் என் அன்னை துர்க்கை அருள்
    ஓம் சக்தி!.யோக அன்னை அருள் உமக்குக் கிட்டட்டும்.
என் சந்த வசந்த நண்பரே!!
 யோகியார்

 

  








On Fri, Oct 19, 2018 at 11:47 PM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
 யூடியூபில் ஜவ்வாது மற்றும் புனுகுப்பூனை பற்றிய தகவல்களைப் படித்தேன். உங்கள் தகவல் ஆதாரமுடையது என்பதை.அறிந்து கொண்டேன்.  மகிழ்ச்சி நன்றி.  அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

On Fri, Oct 19, 2018, 11:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:

தமிழ் ஜவ்வாது யின் அர்த்தம்


  •  

  •  

  •  

ramaNi

unread,
Oct 20, 2018, 10:42:20 AM10/20/18
to சந்தவசந்தம்
இலந்தையாரின் சவ்வாது விடு தூது ஆரம்பமே அட்டகாசம்! அவரும், புலவரும் சவ்வாது பற்றித் தந்த தகவல்கள் பயனுள்ளவை.
ரமணி

 

Subbaiyar Ramasami

unread,
Oct 20, 2018, 2:24:35 PM10/20/18
to santhavasantham

எவ்வா சனையினிலும் ஏற்றதெனஇவ்வொன்றே
       
நல்வா சனையாக ஞாலம் கருதுவதும்
     
பொல்லாத போரினிலே போராடி- அல்லாத                                          30

   துர்நாற்றம் மேனியில் தோன்றுவதால் வாராகி
     
சர்வ மணங்களிலும் சவ்வாதே- துர்நாற்றம்
     
போக்குமென எண்ணியே பூசுமொரு நல்லதொரு
     
நோக்கமும் உள்ளதால், நுட்பமாய்- வாய்க்கின்ற
     
தூதாகச் செல்லுதற்குச் சொல்லலாம் ஈதொன்றே
     
தோதாய் அமையுமெனத் தோத்திரங்கள்- மீதூர
     
வேண்டி  விழைந்து  மிகநெருங்கி யான் சொன்னேன்
            “
ஆண்டவனும் வேட்கைகொளும் அற்புதமே- வேண்டுகிறேன்
           
என்றனின் தூதாய் எனக்குதவக் கோருகிறேன்
           
உன்றன் பெருமை உலகறியும்,- மன்னர்களும்                                          40
     
உன்றனைப் பூசி உவகை மிகக் கொள்வர்
           
சென்ற விடமெல்லாம் சிறப்புத்தான்  - உன்றனுக்கு
           
போற்றும் புகழ்சேர் புனுகுப்பூ னையுடலில்
           
வீற்றிருந்து பின்னர் வெளிப்போந்துவேற்று
     
மணத்தையெலாம் வீழ்த்திவிட்ட மாண்புடையோய்,  உன்னை
           
வணங்கிநான் வேண்டுகிறேன் வாழ்த்தி, - இணங்கிநீ
     
என்றனுக் காக இணையில்வா ராகியின்பால்
           
சென்றென்றன் செய்தி தெரிவித்தால்நன்றென்றே
     
எண்ணுகிறேன், வேறெவையும் ஏற்றமுற உன்னைப்போல்
     
கொண்டுசெலும் ஆற்றலினைக் கொள்ளவில்லைவிண்பறக்கும்50
     
மாடப் புறாவுக்கு வக்கணை போதாது -
     
கூடக் கிளியதுவோர் கோமாளிவாடுகிற
     
சந்தனத் துக்குன்போல் சாமர்த்தி யம்மில்லை
     
முந்தியங்கு செல்லுமுன் முற்றும் உலர்ந்துவிடும்
           
என்பதனால் சவ்வாதே ஏற்றம் உளபொருளே
     
அன்புடன் தூதாய் அனுப்புகிறேன்என்னாலே
     
உன்பெருமை கூறுதற் கொண்ணாது  நானுமிங்கே
     
என்சொல்லால் ஏதோ இயம்புகிறேன்முன்பொருநாள்
      
பூனையின் வாலில் புனுகு மெழுகானாய்
      
பூனை மலமென்றே பொல்லாதார்- ஆனதொரு           60
       
கற்பனையை ஏற்றிக் கதைக்கின்றார். வாசனை
     
முற்படச் சந்தன மும்புனுகில்-  பொற்புடனே
       
சேர்த்துன்னைச் சவ்வாதாய்ச் செப்புகிறார் நல்மணத்தின்
    
வார்ப்பே, மணவரசி, மாண்பொருளே- பேர்பெற்றோய்
      
எங்கேநீ உள்ளாயோ அங்கெல்லாம் வாசனைதான்
      
பொங்கும் நறுமணந்தான், பூவாசம்மங்கப்
    
புதுவாசம் உன்வாசம், போகுமிட மெல்லாம்
    
இதுவாசம் என்றே இயம்பி- மதித்திடுவார்
      
என்பதனால் என்தூதாய் இன்றேநீ சென்றிடுக

தொடரும்
On Fri, Oct 19, 2018 at 9:59 AM Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:து.

    


VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 20, 2018, 4:14:09 PM10/20/18
to சந்தவசந்தம்

தூது ஆற்றொழுக்காய் அருமையாகச் செல்கிறது.  

அனந்த்

தூதாகச் செலுத்தும் மற்ற பொருள்களைப் பற்றி முன்னமே கூறியிருப்பதைப் பார்க்கலாம்:

......................................................விண்பறக்கும்  50
      
மாடப் புறாவுக்கு வக்கணை போதாது - 
      
கூடக் கிளியதுவோர் கோமாளி – வாடுகிற


      
சந்தனத் துக்குன்போல் சாமர்த்தி யம்மில்லை
      
முந்தியங்கு செல்லுமுன் முற்றும் உலர்ந்துவிடும்
            
என்பதனால் சவ்வாதே ஏற்றம் உளபொருளே
      
அன்புடன் தூதாய் அனுப்புகிறேன்   

Lalitha & Suryanarayanan

unread,
Oct 20, 2018, 9:35:05 PM10/20/18
to santhav...@googlegroups.com

தூது வெகுவேகமாகச் செல்கிறது.


உலகம் அனைத்தும் உருண்டோட வைத்தே 
      இலகும் இயக்கம் இயற்றி – நலமாய்
      அடியாரைக் காக்கும் அம்மைவா ராகி
  

தட்டச்சு - 
காத்திடும் அம்மைவா ராகி

சிவசூரி.


On Fri, Oct 19, 2018 at 8:30 PM Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:
தமிழ் இலக்கியத்தில் சவ்வாது விடுதூது என்ற பிரபந்தத்தை ஒருவர் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த நூல் கிடைக்கவில்லை. நண்பர் கணேசன் சவ்வாது விடு தூது ஒன்று வேண்டும் என்று அடிக்கடி எழுதிவந்திருக்கிறார். சவ்வாது என்றால் என்ன என்று ஆய்வு செய்து பார்த்தேன். புனுகுப்பூனையின் மலம் என்று அதைப்பலரும் தவறாகக் குறிப்பிடுகிறார்கள்.ps.google.com/d/optout.

Subbaiyar Ramasami

unread,
Oct 20, 2018, 9:59:30 PM10/20/18
to santhavasantham
சிவசூரி அவர்களே  நன்றி. என்னதான் பார்த்தாலும் தப்பிவிடுகிறது.
இலந்தை

--

Ramamoorthy Ramachandran

unread,
Oct 20, 2018, 10:32:50 PM10/20/18
to santhav...@googlegroups.com
அன்னைவா ராகி அருளலையே  பாய்கடலாய்
மன்னும் கவியமுதம் மாந்தினோம்! - இன்னுமினுந்
தேக்கெறிந்தே
யுண்ணுபசித் தீத்தணிந்தோம்!
வாக்கரசர் 
ஆக்கிடுநூ லின்பம் அயின்று! -
அன்புடன், புலவர் இராமமூர்த்தி.
 

Subbaiyar Ramasami

unread,
Oct 20, 2018, 10:54:35 PM10/20/18
to santhavasantham
நன்றி

Subbaiyar Ramasami

unread,
Oct 20, 2018, 10:57:23 PM10/20/18
to santhavasantham
முன்னமே கூறியிருந்தாலும் சவ்வாதுக்குச் சொல்லவேண்டும் என்பதற்காக மீண்டும் வருகிறது


Subbaiyar Ramasami

unread,
Oct 20, 2018, 10:59:14 PM10/20/18
to santhavasantham
என்னசெய்தி சொல்வதென்றும் எங்கேபோய்- அன்னதைச்
           
சொல்வதென்றும் செப்புகிறேன். , தூக்கும் மணமுடையோய்
           
வெல்மணமே, சவ்வாது வித்தகமேநல்லுறவே                                    70
           
வாராகி அம்மை வலிமை மிகவுடையாள்
           
சூராதி சூரர்களும் தோல்வியுறத்- தேரேறி                                                   ஆர்ப்பரித்துக் கொல்லும் அதிகச் சினமுடையாள்
           
தேர்த்தட்டில் நின்று சிலுப்பினால்போர்க்களத்தில்
           
ஆயிரம் காதம் அதிரடிக்கும்கையிலுள்ள
           
பாயுலக்கை கொண்டு பகைவர்களின் ஆயத்தம்
           
தாக்கி அவர்கூட்டம் வேரறுத்து மீளாத
           
வாக்கில் வினைமுடிக்கும் வித்தகியாள்நீக்கமற
           
எவ்விடத்தும் கண்ணில் எதிர்ப்பட்டுச் சக்திகளை
           
அவ்வவ் விடத்தினிலே ஆட்டுவிப்பாள்- இவ்விதமாய்                          80
           
உள்ளவள்பால் கோபம் உடையவள்பால் எப்படிநாம்
           
தள்ளாடி நிற்காமல் சாந்தமாய்க்- கொள்ளும்வகை
           
செய்தியினைச் சொல்வதெனத் திண்டாட்டம் தேவையில்லை
           
உய்வளிக்கும் ட்ஹெய்வமவள், உள்ளத்தில்பொய்யாத
           
பக்தி யுடையவர்பால் பாசம் மிகவுடையாள்
           
சக்தி கொடுப்பாள், தயவாகஎக்கணத்தும்
           
காக்கும் அருளைய காருண்ய நாயகியாள்
           
வாக்குக் கொடுப்பாள், வரம்கொடுப்பாள்- தாக்கவரும்
           
பூதம் பிசாசுகளைப் போட்டுக் கசக்கிடுவாள்
    
போதம் அளிப்பாள் புகழ் கொடுப்பாள், -வாதியினைப்                         90
           
பேதலிக்க வைத்துப் பெருவெற்றி தான் கொடுப்பாள்
           
நீதிப் படிநடப்பாள், நேயமுள்ளாள்தாதனைகள்
           
செய்யென்று சொல்லித் திறம் கொடுப்பாள், அச்சத்தைக்
           
கொய்தழிக்க வைப்பாள், குலையாததைரியத்தை
           
உள்ளுக்குள் எப்போதும் உட்கார வைத்திடுவாள்
           
தெள்ளத் தெளிவான தீர்வுகளைக்கொள்ளென்றே
     
சிந்தை தெளிவாக்கித் தேகம் திடமாக்கி
     
எந்தப் பொழுதும் எதிரிருப்பாள்- வந்தித்தே
           
அம்மா எனவே அடியிணையைப் பற்றிவிட்டால்
           
நம்பாரம் தானேற்கும் நாயகியாள்,- செம்மாந்தே                                      90
           
வாராகி தொண்டனென வாய்நிறையச் சொல்லிடலாம்.
           
சீராக வாழ்வு செழிக்கவைப்பாள்நேரான
           
எண்ணம் கொடுத்தே இனிமை பலகொடுத்தே
           
விண்ணவன் போலே விளையாட- மண்ணகத்தே
     
நல்லருளைத் தந்திடுவாள், நாடகமாம் இவ்வாழ்வில்
           
சொல்வதி யெல்லாம் துலக்கிடுவாள்- வல்லமைகள்
           
வாரி வழங்கிடுவாள், வாராகி என்றேநாம்
           
தீரமாய்ச் சொல்லிச் சிலிர்த்திடலாம்-    

On Sat, Oct 20, 2018 at 3:14 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

Subbaiyar Ramasami

unread,
Oct 20, 2018, 11:05:09 PM10/20/18
to santhavasantham
என்னசெய்தி சொல்வதென்றும் எங்கேபோய்அன்னதைச்
            
சொல்வதென்றும் செப்புகிறேன். , தூக்கும் மணமுடையோய்

            
வெல்மணமேசவ்வாது வித்தகமே – நல்லுறவே
                                    70
            
வாராகி அம்மை வலிமை மிகவுடையாள்
            
சூராதி சூரர்களும் தோல்வியுறத்தேரேறி                                                   ஆர்ப்பரித்துக் கொல்லும் அதிகச் சினமுடையாள்

            
தேர்த்தட்டில் நின்று சிலுப்பினால் – போர்க்களத்தில்
            
ஆயிரம் காதம் அதிரடிக்கும் – கையிலுள்ள 
            
பாயுலக்கை கொண்டு பகைவர்களின் ஆயத்தம்
            
தாக்கி அவர்கூட்டம் வேரறுத்து மீளாத
            
வாக்கில் வினைமுடிக்கும் வித்தகியாள் – நீக்கமற
            
எவ்விடத்தும் கண்ணில் எதிர்ப்பட்டுச் சக்திகளை
            
அவ்வவ் விடத்தினிலே ஆட்டுவிப்பாள்இவ்விதமாய்                          80
            
உள்ளவள்பால் கோபம் உடையவள்பால் எப்படிநாம்

            
தள்ளாடி நிற்காமல் சாந்தமாய்க்கொள்ளும்வகை

            
செய்தியினைச் சொல்வதெனத் திண்டாட்டம் தேவையில்லை

            
உய்வளிக்கும் தெய்வமவள்உள்ளத்தில் – பொய்யாத

            
பக்தி யுடையவர்பால் பாசம் மிகவுடையாள்
            
சக்தி கொடுப்பாள்தயவாக – எக்கணத்தும்

            
காக்கும் அருளுடைய காருண்ய நாயகியாள்

            
வாக்குக் கொடுப்பாள்வரம்கொடுப்பாள்தாக்கவரும்
            
பூதம் பிசாசுகளைப் போட்டுக் கசக்கிடுவாள்
           
போதம் அளிப்பாள் புகழ் கொடுப்பாள், -வாதியினைப்
                         90
            
பேதலிக்க வைத்துப் பெருவெற்றி தான் கொடுப்பாள்
            
நீதிப் படிநடப்பாள்நேயமுள்ளாள் – சாதனைகள்
            
செய்யென்று சொல்லித் திறம் கொடுப்பாள்அச்சத்தைக்

            
கொய்தழிக்க வைப்பாள்குலையாத – தைரியத்தை
 
            
உள்ளுக்குள் எப்போதும் உட்கார வைத்திடுவாள்

            
தெள்ளத் தெளிவான தீர்வுகளைக் – கொள்ளென்றே
           
சிந்தை தெளிவாக்கித் தேகம் திடமாக்கி
            
எந்தப் பொழுதும் எதிரிருப்பாள்வந்தித்தே
            
அம்மா எனவே அடியிணையைப் பற்றிவிட்டால்
            
நம்பாரம் தானேற்கும் நாயகியாள்,- செம்மாந்தே                                      90
            
வாராகி தொண்டனென வாய்நிறையச் சொல்லிடலாம்.
            
சீராக வாழ்வு செழிக்கவைப்பாள் – நேரான
            
எண்ணம் கொடுத்தே இனிமை பலகொடுத்தே

            
விண்ணவன் போலே விளையாடமண்ணகத்தே

            
நல்லருளைத் தந்திடுவாள்நாடகமாம் இவ்வாழ்வில்
            
சொல்வதை யெல்லாம் துலக்கிடுவாள்வல்லமைகள்

            
வாரி வழங்கிடுவாள்வாராகி என்றேநாம்

            
தீரமாய்ச் சொல்லிச் சிலிர்த்திடலாம்-
தொடரும்

On Sat, Oct 20, 2018 at 1:24 PM Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:

                 

   
      

Kaviyogi Vedham

unread,
Oct 21, 2018, 1:39:31 AM10/21/18
to santhavasantham
Super manamutaiya Sav vaathu atiyeenai manaththaal churuttukiRathe!
vedham
   


On Sun, Oct 21, 2018 at 8:35 AM Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:
என்னசெய்தி சொல்வதென்றும் எங்கேபோய்அன்னதைச்
            
சொல்வதென்றும் செப்புகிறேன். , தூக்கும் மணமுடையோய்

            
வெல்மணமேசவ்வாது வித்தகமே – நல்லுறவே                                    70         from it, send an email to s

Lalitha & Suryanarayanan

unread,
Oct 21, 2018, 3:47:23 AM10/21/18
to santhav...@googlegroups.com



தலைவருக்கு வணக்கம்.

சேர்த்துன்னைச் சவ்வாதாய்ச் செப்புகிறார் நல்மணத்தின்
     
வார்ப்பேமணவரசிமாண்பொருளேபேர்பெற்றோய்   

மிகச் சிறப்பு!

எங்கேநீ உள்ளாயோ அங்கெல்லாம் வாசனைதான்
      
பொங்கும் நறுமணந்தான்பூவாசம் – மங்கப்
     
புதுவாசம் உன்வாசம்போகுமிட மெல்லாம்
     
இதுவாசம் என்றே இயம்பிமதித்திடுவார்  

மிக அழகு!   

சில ஐயங்கள்:

பொல்லாத போரினிலே போராடிஅல்லாத                                          30

   துர்நாற்றம் மேனியில் தோன்றுவதால் வாராகி    

நாம் வணங்கும் இறைவியின் மேனியை இப்படி உரைக்கும் வழக்கம் உண்டா?

எண்ணுகிறேன்வேறெவையும் ஏற்றமுற உன்னைப்போல்
      
கொண்டுசெலும் ஆற்றலினைக் கொள்ளவில்லை – விண்பறக்கும்50    

'வேறெதையும்' என்பது இன்னும் பொருத்தாய் இருக்குமோ?

என்றனின் தூதாய் எனக்குதவக் கோருகிறேன்
            
உன்றன் பெருமை உலகறியும்,- மன்னர்களும்                  

' என்றனின்' என்று சொல்லும் வழக்கம் உண்டா? 'என்னுயர்' என்றோ   ' என்றனோர்' என்றோ குறிப்பிடலாமோ?

சிவசூரி.


































சேர்த்துன்னைச் சவ்வாதாய்ச் செப்புகிறார் நல்மணத்தின்
     
வார்ப்பேமணவரசிமாண்பொருளேபேர்பெற்றோய்   

மிகச் சிறப்பு!

எங்கேநீ உள்ளாயோ அங்கெல்லாம் வாசனைதான்
      
பொங்கும் நறுமணந்தான்பூவாசம் – மங்கப்
     
புதுவாசம் உன்வாசம்போகுமிட மெல்லாம்
     
இதுவாசம் என்றே இயம்பிமதித்திடுவார்  

மிக அழகு!   

சில ஐயங்கள்:

பொல்லாத போரினிலே போராடிஅல்லாத                                          30

   துர்நாற்றம் மேனியில் தோன்றுவதால் வாராகி    

நாம் வணங்கும் இறைவியின் மேனியை இப்படி உரைக்கும் வழக்கம் உண்டா?

எண்ணுகிறேன்வேறெவையும் ஏற்றமுற உன்னைப்போல்
      
கொண்டுசெலும் ஆற்றலினைக் கொள்ளவில்லை – விண்பறக்கும்50    

'வேறெதையும்' என்பது இன்னும் பொருத்தாய் இருக்குமோ?

என்றனின் தூதாய் எனக்குதவக் கோருகிறேன்
            
உன்றன் பெருமை உலகறியும்,- மன்னர்களும்                  

' என்றனின்' என்று சொல்லும் வழக்கம் உண்டா? 'என்னுயர்' என்றோ   ' என்றனோர்' என்றோ குறிப்பிடலாமோ?





Lalitha & Suryanarayanan

unread,
Oct 21, 2018, 5:37:50 AM10/21/18
to santhav...@googlegroups.com
வீரதீரமுடை வாராகி அன்னையின் திருக்காட்சியே நேரில் தெரியும் வண்ணம் மிக நேர்த்தியாக, விவரமாகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள். இத்தூது படிப்பவர்களுக்கு மகிழ்வைக் கொடுப்பது திண்ணம்.

சில ஐயங்கள்:

1)
வாராகி அம்மை வலிமை மிகவுடையாள்
 
சூராதி சூரர்களும் தோல்வியுறத்தேரேறி       
தேர்த்தட்டில் நின்று சிலுப்பினால் – போர்க்களத்தில்  
ஆர்ப்பரித்துக் கொல்லும் அதிகச் சினமுடையாள்  

என்பதைவிட,

தேர்த்தட்டில் நின்றுச் சிலுப்பியவள் – போர்க்களத்தில்  
ஆர்ப்பரித்துக் கொல்லும் அதிகச் சினமுடையாள்  

என்பது சரியாக இருக்குமோ?

2)

 எவ்விடத்தும் கண்ணில் எதிர்ப்பட்டுச் சக்திகளை
            
அவ்வவ் விடத்தினிலே ஆட்டுவிப்பாள்  

எனக்குப் பொருள் விளங்கவில்லை ஐயா.

3)

  பூதம் பிசாசுகளைப் போட்டுக் கசக்கிடுவாள்  

பூதப் பிசாசுகளைப் போட்டுக் கசக்கிடுவாள்

' கசக்குதல்' என்பதற்கு ' வருத்துதல்' என்ற பொருள் இருந்தாலும்,பூதங்களையும் பிசாசுகளையும் 'கசக்குதல்' என்று
வேறெந்த இலக்கியத்திலும் சொல்லப் பட்டிருக்கிறதா? 

தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

சிவசூரி.


Lalitha & Suryanarayanan

unread,
Oct 21, 2018, 6:25:53 AM10/21/18
to santhav...@googlegroups.com
தலைவருக்கு வணக்கம்.

ஐயா இன்னுமோர் ஐயம்:

அசுரர்களைக் கொன்று பூதப் பிசாசுகளின் பசி அகற்றியது முருகனின் வேல் என்று வேல் வகுப்பும் வேல் விருத்தமும்  சொல்லும்:

"பசித்தலகை முசித்தழுது முறைப்படுத லொழித்தவுண 
ருரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவரு ணேரும்" 
-வேல் வகுப்பு

"வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்
   வெகுளுறு பசாசகணமும்

வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
   வெம்பசி ஒழிக்கவந்தே

ஆதார கமடமுங் கணபண வியாளமும்
   அடக்கிய தடக்கிரியெலாம்

அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
   அருந்திப் புரந்தவைவேல்"
-வேல் விருத்தம்

சேவல் விருத்தத்தில் அலகை, குறள், பேய், பிசாசுகளை  சேவல் கொத்துவது பற்றியும் வருகிறது:

1)

கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
   கடினமுற வரில் அவைகளைக்

கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற
   கைக்கொட்டி நின்றா டுமாம் 

2)

ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
   ஈனப் பசாசு களையும்

கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
   ககனமுற நிமிரும் வெங்கட்

கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க்
   கரத்தடர்த் துக்கொத் துமாம்

3)

துங்கமா யன்புற்று வன்புற் றடர்ந்துவரு
   துடரும் பிரேத பூதத்

தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
   துண்டப் படக் கொத்துமாம்


வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
   வெங்கட் குறும்புகள் தரும்

விடுபேய்க ளேகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
   வெம்பேய் களைத்துரத்திப்

பேறான .. சரவண பவா .. என்னுமந்திரம்
   பேசியுச் சாடனத்தாற்

பிடர்பிடித் துக்கொத்தி நகநுதியி னாலுறப்
   பிய்ச்சுக் களித்தாடுமாம்
 

சர்வ சக்தி வாய்ந்த வாராஹி அன்னையையே எதிர்த்து பூதப் பிசாசுகள் நின்றதாக ஏதேனும் புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறதா.?

சிவசூரி.


Subbaiyar Ramasami

unread,
Oct 21, 2018, 9:27:54 AM10/21/18
to santhav...@googlegroups.com
நல்ல வினாக்கள் எழுப்பியிருக்கிறீர்கள்

1  வாராகி  சேனைப்படைத்தலைவி.  பல்லால் கடித்துக் குதறியும் முட்டியும் எதிரியின் குடலை உருவுவதாகவெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மேனியில் நிண நாற்றம் இருக்கத் தானே செய்யும். அதனால் அப்படிச்சொன்னேன்.  அதைக் கொஞ்சம் மென்மையாகச் சொல்ல முயல்கிறேன். வாராகி மாலை என்னும் புத்தகத்தில் இப்படிப்பாடல்கள் உண்டு

மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைக்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வாராஹி பகைஞரையே

4. மயக்கு (தண்டினி தியானம்)

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.


பூதம் பிசாசுகளைப் போட்டுக்கசக்கிடுவாள்.   பக்தர்களைத்தாக்கவரும் பூதம் பிசாசுகளை எனக்கொள்ளவேண்டும்

என்றனின் என்பதை என்னுயிர் என மாற்றுகிறேன்



Subbaiyar Ramasami

unread,
Oct 21, 2018, 10:06:20 AM10/21/18
to santhav...@googlegroups.com
வேறெதையும் - மாற்றிவிட்டேன்
எவ்விடத்தும் கண்ணில் எதிர்ப்பட்டுச் சக்திகளை
      அவ்வவ் விடத்தினிலே ஆட்டுவிப்பாள்
 

பண்டாசுர வதத்தின் போது வாராகி சேனாபதியாகித் தண்டநாதாவாக  இயங்குகிறாள்.   வாராகி பக்கத்தில்  போரிடுபவர்கள் எல்லாரும் பெண்சக்திகள். அவர்களை அவ்வவ்விடத்தினிலே ஒரே சமயத்தில் தோன்றிச்  செயல்படுமாறு ஆட்டுவிக்கிறாள் என்று பொருள்

வாசம் உடலிலே தோன்றுவதால் வாராகி
      பூசும் மணங்களிலே சவ்வாதே- வீசுவதைப்

போக்குமென எண்ணியே   எனமாற்றியிருக்கிறேன்.     வீசுவதை என்றால் நாற்றம் வீசுவதை  என்று பொருள்.

இலந்தை


Subbaiyar Ramasami

unread,
Oct 21, 2018, 10:16:33 AM10/21/18
to santhav...@googlegroups.com
       நேரினிலே
      பன்றி முகமுடையாள், பல்லிரண் டும் வளைவாய்
      முன்னிருக்கும், மூக்கில் துளைகளுண்டு – தன்முகத்தில்          100
      நீண்டயிரு கண்கள் இருபக்கத் தேயிருக்க
      கூண்டு கவிழ்த்த கிரீடத்தாள் – காண்டற்குச்
      சற்றே சினமுள்ள தன்மை தெரிந்தாலும்
      முற்றிலும் அன்பிலே மூழ்கியவள் – பற்றுடையாள்
      குன்றாய் நிமிர்தோள்கள் கோலத்தைக் கண்டுவிட்டால்
      ஒன்றா மனமுமதில் ஒன்றிவிடும் – குன்றுகளாய்க்
      கொங்கை இருபுறமும் கொண்டு நிமிர்ந்திருக்கச்
      சங்குக் கழுத்துடையாள், சக்கரம் – அங்கையில்
      பற்றி யிருக்கிறவள், பாங்காக ஆயுதங்கள்
      வெற்றி கொடுக்கவென வீற்றிருக்கும் – கொற்றமுள                 110
      வில்லம்பு , கேடயம், மேவும் திருவுலக்கை
      வல்ல கலப்பையொடு வாள்கதையும்- வெல்லரிய
      சூலமும் தாமரையும் தோதாய்க் கரங்களிலே
      கோலங்கொள் கின்ற கொலுவரசி – சால
      வரத கரமும் அபய கரமும்
      அருளுதற் கென்றே அமைய- உரங்கொள்
      வயிறுடையாள், வாகாய் மலர்க்கொப்பூழ்  மேலே
      உயர்மே கலைபூண்ட ஒண்மை – உயிரிடையாள்
      வைரத் தொடையழகி வஜ்ஜிரக் காலழகி
      வைரிகளைத் தாக்கியே வாகாய் உயிரெடுக்கும்            120
      மோதுமுழங் காலழகி, மொய்ம்புத் திறம்கொண்ட
      பாதங்கள் பற்றிப் பகர்ந்திடவா – ஏதங்கள்
      தீர்க்கும் திருப்பாதம் தீரம் மிகுபாதம்
      சேர்க்கும் அருட்பாதம், திண்ணென்றே – ஆர்க்கும்
      ஒருசமயம், ஆகாயம் தாண்டி அளக்கும்
      ஒருசமயம் , அண்டினோர் வாழ- அருளும்
      ஒருசமயம், மென்மை ஒருசமயம் வன்மை
      ஒருசமயம், வேகத்தில் வேகம் – ஒருசமயம்
      வீரத்தோ டேயூன்ற விண்ணதிரும் மண்ணதிரும்
      நேரத்தே செய்கை நிகழ்த்திவிடும், - பாரத்தை                   130
      ஏற்றுப் புரக்க இயம்பிவிடில் தாமரையாய்
      மாற்றம் எடுத்து வளமருளும்- போற்றுபுகழ்
      பாதங்கள் கொண்டிலங்கும் பரிவுத் திருத்தெய்வம்
      மாதங்கம் கொண்டிலங்கும் வாராகி – போதமருள்
      மாதா லலிதாவின் மாண்புப் படைத்தலைவி
      பாதார விந்தம் பணிந்துநாம்- வாதாடும்
      போதில் வழிகாட்டும் பொற்புடையாள், வார்த்தாளி
      நீதி வழங்கும் நெறியுடையாள், சோதியினால்
      வட்ட த் திகிரியினால், வார்க்கும் பளபளப்பால்
      எட்டியே தேரில் இயங்குவதால் – சுட்டெரிக்கும்            140
      வெம்மையினால் சூரியனாய்த் தோன்றுகிற
      அம்மை பிறையைச் சிரமணிந்து – நம்மையெலாம்
      வாழ்த்திக் குளிர்விக்கும் மாட்சியினை என்சொல்ல?

தொடரும்

N. Ganesan

unread,
Oct 21, 2018, 11:49:36 AM10/21/18
to சந்தவசந்தம்


On Saturday, October 20, 2018 at 7:42:20 AM UTC-7, ramaNi wrote:
இலந்தையாரின் சவ்வாது விடு தூது ஆரம்பமே அட்டகாசம்! அவரும், புலவரும் சவ்வாது பற்றித் தந்த தகவல்கள் பயனுள்ளவை.
ரமணி

நன்றி, இலந்தையாரே. சிறப்பாகச் செல்கிறது.

சவ்வாது - அறபிச்சொல். ரா. பி. சேதுப்பிள்ளை நூலில் படித்தேன்.
இன்னும் சில தகவல்கள் தருகிறேன்.

வாராகி சவ்வாது விடுதூது இயன்றபின்னர், புலவர் பழனி முருகன் பேரில் சவ்வாது விடுதூது இயற்றித்தர வேண்டுகிறேன்.
பழனி சாது சுவாமிகள் திருமடத்தில் அரங்கேற்றம் செய்யலாம்.

நா. கணேசன்
 

 

Ramamoorthy Ramachandran

unread,
Oct 21, 2018, 1:12:23 PM10/21/18
to santhav...@googlegroups.com
தம் வேண்டுகோளை மீண்டும் புதுக்கி விட்டார், கணேசனார்! இலந்தையார் வழிகாட்டலில் 
அதுவும் உருவாகும்! நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

--

Subbaiyar Ramasami

unread,
Oct 21, 2018, 8:59:06 PM10/21/18
to santhav...@googlegroups.com
நிறைவுப் பகுதி.
கருத்துரைக்கவும்

      ஊழ்வினைத் தீமைகளை ஓர்பக்கம் தாழ்த்திவிட்டு
      நன்மை புரிகின்ற நாயகி, பாரதத்தில்
      இன்பத் தமிழ்நாட்டில் ஏற்றமிகு – சென்னையில்
      காற்றுக் கவிதை கடலுக்குப் பாடுகிற
      ஆற்றல்மிகு வேலைக் கருகினிலே – போற்றும்
      மயிலை நகரில் அபிரா மபுரம்
      அயலே கிழக்கில் அமைந்த – நயங்கொள்                 150
      முதல் தெருவில் பச்சையம்மன் ஆலயத்துள்
      இதமுடைய வாராகி அம்மன் – பதம்பணிந்தே
      சீலமாய்ச் செய்தியினைச் செப்பிவா- போவதற்குக்
      காலைப் பொழுதுசற்றுக் கச்சிதம் இல்லை
      அதிகாலைப் போதினில் அவ்வா லயத்தில்    
      பதிவாக அன்னதா னத்தை- நிதமும்
      வழங்குவதால் கூட்டமங்கு வந்திருக்கும் ,நீயும்
      வழிபார்த்துப் பத்து மணிக்குக் குழைவாக
      ”நான்வந்தேன் சவ்வாதென் றேசொல்லித் தாள்பணிக     
      வான்புகழ் உன்மணத்தில் வாராகி -தான்மகிழ்ந்தே                  160
      உன்னை வரவேற்பாள் உற்சாக மாய்த்தடவி
      என்சொல்ல வந்தாய் எனக்கேட்பாள்- முன்னிருந்தே
      ”அம்மையே வாராகி, அன்புமி க்  கொண்டவளே
      உம்மிடம் செய்தி உரைக்கின்றேன் - எம்பால்
      இலந்தைக் கவிஞன் இயம்பிவிட்ட செய்தி
      நலமாக உம்பால் நவில்வேன் – நிலவுலகில்
      எல்லோரும் நன்றாய் இருக்க வரம்கொடுப்பாய்
      பல்லோரும் போற்றப் பாரதம் – வல்லரசாய்
      ஓங்கித் திகழ உனதருளைத் தந்திடுவாய்
      பாங்காய்த் தமிழ்நாடு பல்வளமும் – நீங்காதே                   170
      பெற்றுப் பரிமளிக்கப் பேரருளை வேண்டுகிறேன்
      ஒற்றைத் தலைவலியாம் ஊழலெனும் – குற்றத்தைச்
      செய்தேயெம் தாய்நாட்டைச் சீரழிப்பார் யாரெனினும்
      கொய்தவரை மாய்த்துநீ கூத்திடுக – உய்யும்வகை
      காட்டி எமையென்றும் காத்திடுக, வெற்றிகளைக்
      கூட்டி விருதுகளைக் கொண்டுவந்து நீட்டிடுக
      நல்லதொரு முக்தியினை நல்கிடுக – என்றுரைத்தே
      வல்லமைசேர் குங்குமம் வாங்கிவா – எல்லோரும்
      குங்குமம் பெற்றுக் குறையின்றி வாழட்டும்
      இங்குநீ செய்கின்ற இத்தொண்டால் பொங்குமணம்                 180
      இன்னும் பெருகி இணையில்லை என்றேநீ
      என்றைக்கும் வாழ்க இனிது.                                   182
  

Swaminathan Sankaran

unread,
Oct 21, 2018, 10:16:02 PM10/21/18
to santhav...@googlegroups.com
 'ஒற்றைத் தலைவலியாம் ஊழலெனும் – குற்றத்தைச்

      செய்தேயெம் தாய்நாட்டைச் சீரழிப்பார் யாரெனினும்
      கொய்தவரை மாய்த்துநீ கூத்திடுக '
அருமையான உவமை. அதனிலும் அருமையான கருத்து, வேண்டுகோள்!!

Subbaiyar Ramasami

unread,
Oct 22, 2018, 12:33:45 AM10/22/18
to santhav...@googlegroups.com
நன்றி

Kaviyogi Vedham

unread,
Oct 22, 2018, 12:36:57 AM10/22/18
to santhavasantham
நல்லதொரு முக்தியினை நல்கிடுக – என்றுரைத்தே
      வல்லமைசேர் குங்குமம் வாங்கிவா – எல்லோரும்
      குங்குமம் பெற்றுக் குறையின்றி வாழட்டும்
      இங்குநீ செய்கின்ற இத்தொண்டால் பொங்குமணம்                 180
      இன்னும் பெருகி இணையில்லை என்றேநீ
      என்றைக்கும் வாழ்க இனிது.                                   182
ரொம்ப அற்புதம் இலந்தை!,
 மேற்கண்ட வரிகள் பிடித்திருந்தது.
என் உடம்பிலும் தெம்பும் நலமும் பிடித்தது இன்று. சிலநாள் நலிவின் பின்பு1!
    ஓம் சக்தி!.யோக அன்னை அருள் உமக்குக் கிட்டட்டும்.
 சக்தி வெள்ளப் பரவசத்தில் மிதந்து
 சாகசம் செய்வோம்; சாதனை புரிவோம்/
 யோகியார்


--

Vis Gop

unread,
Oct 22, 2018, 6:58:03 AM10/22/18
to santhav...@googlegroups.com
90 இரண்டுமுறை வரக் காண்கிறேன்.
பணிவுடன் கோபால்.

Vis Gop

unread,
Oct 22, 2018, 7:54:55 AM10/22/18
to santhav...@googlegroups.com
படித்துப் பிரமித்த பின் சில குறிப்புகளை இடுகிறேன். அடி எண்களையும் சுட்டியிருக்கிறேன்.]
பணிவுடன் கோபால்.

உலகம் அனைத்தும் உருண்டோட வைத்தே
      இலகும் இயக்கம் இயற்றி – நலமாய்
      அடியாரைக் காக்கும் அம்மைவா ராகி
      படியாரை வேரறுத்துப் பக்தர் – இடர்தீர்க்கும்
      தேவி திருப்பாதம் சென்று தரிசிக்கும்
      ஆவலில் இவ்விடத்தே ஆர்க்குமனக் – கூவலையும்
      இன்னும் ஒருபிறவி இன்றி அவள்பாதம்
      தன்னில் கிடந்து தரிசிக்கும் – உன்னதமாம்
      முக்தி நிலைவேண்டும் மொய்ம்பினையும்
      அக்கறையாய்ச் சென்றே  அறிவிப்பார் பக்கத்தே                  10
      யாருள்ளார் என்றே அலசினேன் – நேரெதிரே                      [இங்குத் தனிச்சொல் தேவையில்லை
      கூருள்ள கத்தி, குடுவைகள் – யாரெதனைச்
      சொன்னாலும் கேட்பதனைச் சொல்லும் கிளிப்பிள்ளை
      மின்னும் ஒளிப்புறா  வேல்கம்பு  நேரிதற்கு                        [தனிச்சொல்?
      என்னவுண் டென்றே  இயம்புபுகழ்ச் சவ்வாது
      இன்னும் பலவும் இருந்தனவால் – என்னபொருள்
      என்றனுக் கேற்றதென எண்ணியே நான்பார்த்தேன்
      சின்னஞ் சிறுகத்தி சீற்றத்தில் – என்னென்ன
      செய்யும் எனவே தெரியாது.  வேறிடம்
     எய்தக் குடுவைகளுக் கேலாது – மொய்கிளியோ                  20
      வேறெவரின் பேச்சை விரும்பி அதைப்பிடித்தே
      கூறிவிட்ட செய்தியினைக் கூறாது – மீறுமெழில்
      மாடப் புறாவுக்குச் சீட்டெழுதிக் கால்கட்டி
      தேடிச் செலும்போது சிக்கிவிட்டால்--- நாடுகிற
      செய்திபோய் வேறிடத்தே சேர்ந்துவிடும்-வேல்கம்போ
      கொய்து தலையெடுக்கும், கூடாது – மெய்யாகச்
      சவ்வாதுக் கேலுமோ, சற்றேநாம் சிந்திப்போம்
என்னசெய்தி சொல்வதென்றும் எங்கேபோய்- அன்னதைச்
            சொல்வதென்றும் செப்புகிறேன். , தூக்கும் மணமுடையோய்
            வெல்மணமே, சவ்வாது வித்தகமே – நல்லுறவே                                    70 [இது 72]

            வாராகி அம்மை வலிமை மிகவுடையாள்
            சூராதி சூரர்களும் தோல்வியுறத்- தேரேறி                                                  
            ஆர்ப்பரித்துக் கொல்லும் அதிகச் சினமுடையாள்
            தேர்த்தட்டில் நின்று சிலுப்பினால் – போர்க்களத்தில்
            ஆயிரம் காதம் அதிரடிக்கும் – கையிலுள்ள
            பாயுலக்கை கொண்டு பகைவர்களின் ஆயத்தம்
            தாக்கி அவர்கூட்டம் வேரறுத்து மீளாத
            வாக்கில் வினைமுடிக்கும் வித்தகியாள் – நீக்கமற
            எவ்விடத்தும் கண்ணில் எதிர்ப்பட்டுச் சக்திகளை
            அவ்வவ் விடத்தினிலே ஆட்டுவிப்பாள்- இவ்விதமாய்                          80  [82]

            உள்ளவள்பால் கோபம் உடையவள்பால் எப்படிநாம்
            தள்ளாடி நிற்காமல் சாந்தமாய்க்- கொள்ளும்வகை
            செய்தியினைச் சொல்வதெனத் திண்டாட்டம் தேவையில்லை
            உய்வளிக்கும் தெய்வமவள், உள்ளத்தில் – பொய்யாத
            பக்தி யுடையவர்பால் பாசம் மிகவுடையாள்
            சக்தி கொடுப்பாள், தயவாக – எக்கணத்தும்
            காக்கும் அருளுடைய காருண்ய நாயகியாள்
            வாக்குக் கொடுப்பாள், வரம்கொடுப்பாள்- தாக்கவரும்
            பூதம் பிசாசுகளைப் போட்டுக் கசக்கிடுவாள்
           போதம் அளிப்பாள் புகழ் கொடுப்பாள், -வாதியினைப்                         90 [92]

            பேதலிக்க வைத்துப் பெருவெற்றி தான் கொடுப்பாள்
            நீதிப் படிநடப்பாள், நேயமுள்ளாள் – சாதனைகள்
            செய்யென்று சொல்லித் திறம் கொடுப்பாள், அச்சத்தைக்
            கொய்தழிக்க வைப்பாள், குலையாத – தைரியத்தை
            உள்ளுக்குள் எப்போதும் உட்கார வைத்திடுவாள்
            தெள்ளத் தெளிவான தீர்வுகளைக் – கொள்ளென்றே
           சிந்தை தெளிவாக்கித் தேகம் திடமாக்கி
            எந்தப் பொழுதும் எதிரிருப்பாள்- வந்தித்தே
            அம்மா எனவே அடியிணையைப் பற்றிவிட்டால்
            நம்பாரம் தானேற்கும் நாயகியாள்,- செம்மாந்தே                                      90 [102]

            வாராகி தொண்டனென வாய்நிறையச் சொல்லிடலாம்.
            சீராக வாழ்வு செழிக்கவைப்பாள் – நேரான
            எண்ணம் கொடுத்தே இனிமை பலகொடுத்தே
            விண்ணவன் போலே விளையாட- மண்ணகத்தே
            நல்லருளைத் தந்திடுவாள், நாடகமாம் இவ்வாழ்வில்
            சொல்வதை யெல்லாம் துலக்கிடுவாள்- வல்லமைகள்
            வாரி வழங்கிடுவாள், வாராகி என்றேநாம்
            தீரமாய்ச் சொல்லிச் சிலிர்த்திடலாம்- நேரினிலே

      பன்றி முகமுடையாள், பல்லிரண் டும் வளைவாய்
      முன்னிருக்கும், மூக்கில் துளைகளுண்டு – தன்முகத்தில்          100   [112] [மூக்கில் துளை என்பதில் செய்தி இல்லையே. ]
[பன்றி முகமுடையாள், பல்லிரண் டும் வளைவாய்,
[முன்னே விளங்குமெழில் மூக்குடையாள் – தன்முகத்தில்    என்று சொல்லலாமோ?
      நீண்டயிரு கண்கள் இருபக்கத் தேயிருக்க
      கூண்டு கவிழ்த்த கிரீடத்தாள் – காண்டற்குச்
      சற்றே சினமுள்ள தன்மை தெரிந்தாலும்
      முற்றிலும் அன்பிலே மூழ்கியவள் – பற்றுடையாள்
      குன்றாய் நிமிர்தோள்கள் கோலத்தைக் கண்டுவிட்டால்
      ஒன்றா மனமுமதில் ஒன்றிவிடும் – குன்றுகளாய்க்
      கொங்கை இருபுறமும் கொண்டு நிமிர்ந்திருக்கச்
      சங்குக் கழுத்துடையாள், சக்கரம் – அங்கையில்
      பற்றி யிருக்கிறவள், பாங்காக ஆயுதங்கள்
      வெற்றி கொடுக்கவென வீற்றிருக்கும் – கொற்றமுள                 110  [122]

      வில்லம்பு , கேடயம், மேவும் திருவுலக்கை
      வல்ல கலப்பையொடு வாள்கதையும்- வெல்லரிய
      சூலமும் தாமரையும் தோதாய்க் கரங்களிலே
      கோலங்கொள் கின்ற கொலுவரசி – சால
      வரத கரமும் அபய கரமும்
      அருளுதற் கென்றே அமைய- உரங்கொள்
      வயிறுடையாள், வாகாய் மலர்க்கொப்பூழ்  மேலே
      உயர்மே கலைபூண்ட ஒண்மை – உயிரிடையாள்
      வைரத் தொடையழகி வஜ்ஜிரக் காலழகி
      வைரிகளைத் தாக்கியே வாகாய் உயிரெடுக்கும்            120  [132]      [தனிச்சொல் எதுகை
      மோதுமுழங் காலழகி, மொய்ம்புத் திறம்கொண்ட
      பாதங்கள் பற்றிப் பகர்ந்திடவா – ஏதங்கள்
      தீர்க்கும் திருப்பாதம் தீரம் மிகுபாதம்
      சேர்க்கும் அருட்பாதம், திண்ணென்றே – ஆர்க்கும்
      ஒருசமயம், ஆகாயம் தாண்டி அளக்கும்
      ஒருசமயம் , அண்டினோர் வாழ- அருளும்
      ஒருசமயம், மென்மை ஒருசமயம் வன்மை
      ஒருசமயம், வேகத்தில் வேகம் – ஒருசமயம்
      வீரத்தோ டேயூன்ற விண்ணதிரும் மண்ணதிரும்
      நேரத்தே செய்கை நிகழ்த்திவிடும், - பாரத்தை                   130  [142]

      ஏற்றுப் புரக்க இயம்பிவிடில் தாமரையாய்
      மாற்றம் எடுத்து வளமருளும்- போற்றுபுகழ்
      பாதங்கள் கொண்டிலங்கும் பரிவுத் திருத்தெய்வம்
      மாதங்கம் கொண்டிலங்கும் வாராகி – போதமருள்
      மாதா லலிதாவின் மாண்புப் படைத்தலைவி
      பாதார விந்தம் பணிந்துநாம்- வாதாடும்
      போதில் வழிகாட்டும் பொற்புடையாள், வார்த்தாளி
      நீதி வழங்கும் நெறியுடையாள், சோதியினால்
      வட்ட த் திகிரியினால், வார்க்கும் பளபளப்பால்
      எட்டியே தேரில் இயங்குவதால் – சுட்டெரிக்கும்            140  [152]

      வெம்மையினால் சூரியனாய்த் தோன்றுகிற
      அம்மை பிறையைச் சிரமணிந்து – நம்மையெலாம்
      வாழ்த்திக் குளிர்விக்கும் மாட்சியினை என்சொல்ல?
ஊழ்வினைத் தீமைகளை ஓர்பக்கம் தாழ்த்திவிட்டு
      நன்மை புரிகின்ற நாயகி, பாரதத்தில்
      இன்பத் தமிழ்நாட்டில் ஏற்றமிகு – சென்னையில்
      காற்றுக் கவிதை கடலுக்குப் பாடுகிற
      ஆற்றல்மிகு வேலைக் கருகினிலே – போற்றும்
      மயிலை நகரில் அபிரா மபுரம்
      அயலே கிழக்கில் அமைந்த – நயங்கொள்                 150  [162]

      முதல் தெருவில் பச்சையம்மன் ஆலயத்துள்
      இதமுடைய வாராகி அம்மன் – பதம்பணிந்தே
      சீலமாய்ச் செய்தியினைச் செப்பிவா- போவதற்குக்
      காலைப் பொழுதுசற்றுக் கச்சிதம் இல்லை                [தனிச்சொல் எதுகை
      அதிகாலைப் போதினில் அவ்வா லயத்தில்   
      பதிவாக அன்னதா னத்தை- நிதமும்
      வழங்குவதால் கூட்டமங்கு வந்திருக்கும் ,நீயும்
      வழிபார்த்துப் பத்து மணிக்குக் குழைவாக
      ”நான்வந்தேன் சவ்வாதென் றேசொல்லித் தாள்பணிக    
      வான்புகழ் உன்மணத்தில் வாராகி -தான்மகிழ்ந்தே                  160  [172]

      உன்னை வரவேற்பாள் உற்சாக மாய்த்தடவி
      என்சொல்ல வந்தாய் எனக்கேட்பாள்- முன்னிருந்தே
      ”அம்மையே வாராகி, அன்புமி க்  கொண்டவளே              [அன்புமிக
      உம்மிடம் செய்தி உரைக்கின்றேன் - எம்பால்
      இலந்தைக் கவிஞன் இயம்பிவிட்ட செய்தி
      நலமாக உம்பால் நவில்வேன் – நிலவுலகில்
      எல்லோரும் நன்றாய் இருக்க வரம்கொடுப்பாய்
      பல்லோரும் போற்றப் பாரதம் – வல்லரசாய்
      ஓங்கித் திகழ உனதருளைத் தந்திடுவாய்
      பாங்காய்த் தமிழ்நாடு பல்வளமும் – நீங்காதே                   170  [182]

      பெற்றுப் பரிமளிக்கப் பேரருளை வேண்டுகிறேன்
      ஒற்றைத் தலைவலியாம் ஊழலெனும் – குற்றத்தைச்
      செய்தேயெம் தாய்நாட்டைச் சீரழிப்பார் யாரெனினும்
      கொய்தவரை மாய்த்துநீ கூத்திடுக – உய்யும்வகை
      காட்டி எமையென்றும் காத்திடுக, வெற்றிகளைக்
      கூட்டி விருதுகளைக் கொண்டுவந்து நீட்டிடுக
      நல்லதொரு முக்தியினை நல்கிடுக – என்றுரைத்தே
      வல்லமைசேர் குங்குமம் வாங்கிவா – எல்லோரும்
      குங்குமம் பெற்றுக் குறையின்றி வாழட்டும்
      இங்குநீ செய்கின்ற இத்தொண்டால் பொங்குமணம்                 180 [192]

      இன்னும் பெருகி இணையில்லை என்றேநீ
      என்றைக்கும் வாழ்க இனிது.                                   182  [194]


Subbaiyar Ramasami

unread,
Oct 22, 2018, 8:58:39 AM10/22/18
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி கோபால். நான் ஏற்கனவே திருத்திவைத்திருக்கும் படியை இங்கிடாமல் திருத்தப்படாத படியை இங்கிட்டுவிட்டேன். 
மூக்குத் துளை நல்ல திருத்தம்
11 வரி-   கோட்டை எடுத்துவிட்டால் சரியாகிவிடும்.
நேரிதற்கு   என்பதை முன்னீடாய் என மாற்றுகிறேன்
வைரம் என்பது வயிரமென்று ஒலிக்குமாதலால் உயிர் என்பதும் எதுகைதான்

கூர்ந்து படித்துத் திருத்தங்கள் கூறியமைக்கு நன்றி.

இலந்தை

Subbaiyar Ramasami

unread,
Oct 22, 2018, 12:43:34 PM10/22/18
to santhav...@googlegroups.com
சவ்வாது விடு தூது படித்துக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. 

இலந்தை

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 22, 2018, 4:28:11 PM10/22/18
to சந்தவசந்தம்
கோபால் கூறியவாறு உங்கள் பக்தியும் கவித்திறனும் பிரமிக்க வைக்கின்றன. தூதுப் பாடலை எப்படி அமைக்க வேண்டும் என்பதை இப்பாடல் வழியே பிறர் கற்றுக் கொள்ளலாம். 

... அனந்த்

Ramamoorthy Ramachandran

unread,
Oct 22, 2018, 4:45:27 PM10/22/18
to santhav...@googlegroups.com
ஆம், அனந்த்! நானும் கற்றுக் கொள்வேன். 
- புலவர் இராமமூர்த்தி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 22, 2018, 5:20:55 PM10/22/18
to சந்தவசந்தம்
2016-ல் நீங்கள் மீனாக்ஷிக்கு விடுத்த தூதுச் சந்தனத்தின் மணம் இன்றும் எவ்விடத்தும் மணக்கிறது. 350-க்கு மேற்பட்ட வரிகளில் இலக்கியம் படைத்தீர்கள். இன்னும் கற்றுக்கொள்வேண் என்பது புலமையோடு சேர்ந்த அடக்கத்தையே குறிக்கிறது.

... அனந்த்


Siva Siva

unread,
Oct 22, 2018, 6:02:07 PM10/22/18
to santhavasantham
/சவ்வாது / 

தமிழில் புனுகு என்றுதானே பொதுவாகச் சொல்வர்?





On Fri, Oct 19, 2018 at 11:00 AM Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:
தமிழ் இலக்கியத்தில் சவ்வாது விடுதூது என்ற பிரபந்தத்தை ஒருவர் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த நூல் கிடைக்கவில்லை. நண்பர் கணேசன் சவ்வாது விடு தூது ஒன்று வேண்டும் என்று அடிக்கடி எழுதிவந்திருக்கிறார். சவ்வாது என்றால் என்ன என்று ஆய்வு செய்து பார்த்தேன். புனுகுப்பூனையின் மலம் என்று அதைப்பலரும் தவறாகக் குறிப்பிடுகிறார்கள். சவ்வாது என்பது புனுகுப் பூனையின் வாலில் ஒரு பையில் இருக்கும் வாசமுள்ள ஒரு பொடி. புனுகுப்பூனையை ஒரு கூண்டில் அடைத்துவைத்திருப்பார்கள். அது மலங்களிக்க விழையும் போது தனது ஆசனவாயைக் கம்பியில் தேய்த்து மலமிடும். அப்பொழுது  வாலில் உள்ள பைதிறந்து பையிலிருந்து சவ்வாது கொட்டும். அதைச் சேகரித்து வைத்துக்கொள்வார்கள்.  விலை அதிகம்.  சந்தையில் கிடைக்கும் சவ்வாதெல்லாம் அசல் சவ்வாதல்ல. . அசல் சவ்வாதை வாராகியின் பால் தூதனுப்ப விழைந்தேன். அதன் விளைவுதான் மயிலை வாராகி சவ்வாது விடு தூது.

இலந்தை

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Siva Siva

unread,
Oct 25, 2018, 8:04:05 PM10/25/18
to santhavasantham
இன்னுமோர் வினா:

கிருஷ்ணன் தூது, அங்கதன் தூது என்றெல்லாம் மஹாபாரதம் இராமயணத்தில் வருகின்றன.
அவ்வாறே, 'xxxxxxx தூது" என்றுதானே வரும்? 
பாடல்களை ஏன்  'xxxxxxx தூது"   என்னாமல்  'xxxxxxx விடு தூது" என்கின்றோம்?

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

Subbaiyar Ramasami

unread,
Oct 25, 2018, 8:16:23 PM10/25/18
to santhav...@googlegroups.com
அஃறிணைப் பொருள்களை அனுப்பும் போது விடு தூது என்றும் உயர்திணையாளரை அனுப்பும் போது தூது என்று மட்டும் எழுதுவதாகத் தெரிகிறது. அதுமட்டுமன்று அஃறிணைப் பொருள்களை அனுப்பும் போது யார்ய்க்கு அனுப்புகிறோமோ அவரது பெயரையும் சேர்த்துச் சொல்லுவது வழக்கம்.  வாராகி சவ்வாது விடு தூது, மீனாக்‌ஷி ச்ந்தன விடு தூது என்பது போல கிருஷ்ணனை அனுப்பும் போது துரியோதனன் கிருஷ்ணன் தூது என்று சொல்வதில்லை. இராவணன் அங்கதன் தூது என்று சொல்வதில்லை. 
இலந்தை

Siva Siva

unread,
Oct 25, 2018, 8:42:04 PM10/25/18
to santhavasantham
Thanks.
---

Unrelated to my earlier question:
Google showed this page - that may be of interest to SV.




On Thu, Oct 25, 2018 at 8:16 PM Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:
அஃறிணைப் பொருள்களை அனுப்பும் போது விடு தூது என்றும் உயர்திணையாளரை அனுப்பும் போது தூது என்று மட்டும் எழுதுவதாகத் தெரிகிறது. அதுமட்டுமன்று அஃறிணைப் பொருள்களை அனுப்பும் போது யார்ய்க்கு அனுப்புகிறோமோ அவரது பெயரையும் சேர்த்துச் சொல்லுவது வழக்கம்.  வாராகி சவ்வாது விடு தூது, மீனாக்‌ஷி ச்ந்தன விடு தூது என்பது போல கிருஷ்ணனை அனுப்பும் போது துரியோதனன் கிருஷ்ணன் தூது என்று சொல்வதில்லை. இராவணன் அங்கதன் தூது என்று சொல்வதில்லை. 
இலந்தை

On Thu, Oct 25, 2018 at 7:04 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
இன்னுமோர் வினா:

கிருஷ்ணன் தூது, அங்கதன் தூது என்றெல்லாம் மஹாபாரதம் இராமயணத்தில் வருகின்றன.
அவ்வாறே, 'xxxxxxx தூது" என்றுதானே வரும்? 
பாடல்களை ஏன்  'xxxxxxx தூது"   என்னாமல்  'xxxxxxx விடு தூது" என்கின்றோம்?

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


Ramamoorthy Ramachandran

unread,
Oct 26, 2018, 11:34:14 AM10/26/18
to santhav...@googlegroups.com
மக்களைத்  தூது விடும்போது மக்கள் தூதுச் செய்தியைச் சொல்வதைப் பார்க்கிறோம்.
அ .:. றிணைப் பொருள்களைத் தூது விடும்போது அவை தூதுச் செய்தியைச் சொல்வதாக  எழுத 
இயலாது.  ஆகவே தூது செல்வோர் பெயருடன் '' வீரவாகுத்தேவர் தூது '' என்றும் , 
தூதுச் செய்தி சேர்தற்கு உரியோர் பெயருடன் தூது  செல்லும் அ.:. றிணைப்  பெயரும் 
இணைந்து ''அழகர் கிள்ளைவிடு தூது'' என்றும் கொள்ளலாம். ''அன்னம் விடு தூதில் ''
அன்னம் பேசுவது கவிதைச் சலுகையாகிய  கற்பனை என்றும் கொள்ளலாம். 
அன்புடன்  புலவர் இராமமூர்த்தி.    


--
Reply all
Reply to author
Forward
0 new messages