ஓராயிரம் குயில்கள் உட்காரும் சோலையிலே ... (கண்ணதாசன்)

14 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 12, 2021, 9:47:43 PM9/12/21
to Santhavasantham
பல நாளாகத் தேடிய கண்ணதாசன் பாடல், தினமணியில் கண்டேன், (11-9-2021). வெள்ளுரையாக (ப்லெய்ன்-டெக்ஸ்ட்) இடணும்.  முதலில் பாட்டைக் கேட்போம். உணர்ந்து பாடியுள்ளார், https://www.youtube.com/watch?v=MnmeEMt-VCc

நிரஞ்சன் பாரதி: உட்காருதல் என்ற சொல் தமிழ்ச்சொல்லா @N Ganesan uncle?? அது தமிழ்ச்சொல் என்றால் அதன் வினைவேர் என்ன??

ஆமாம். இத் தமிழ்ச்சொல்லைக் கண்ணதாசன் பாரதிவாழ்த்தில் பயன்கொள்கிறார். கேட்டு மகிழ்க: https://www.youtube.com/watch?v=MnmeEMt-VCc

NG
tt1.jpg

--------------
tt3.jpg

N. Ganesan

unread,
Sep 13, 2021, 11:42:26 AM9/13/21
to Santhavasantham
குயில் பாடிய குயில்
          - கண்ணதாசன்
               
ஓராயிரம் குயில்கள்
      உட்காரும் சோலையிலே
ஒருகுயில் கண்டானடி- பாரதி
      உடன் குயிலானானடி!

தேராயிரம் தவழும்
     செந்தமிழ் வீதியிலே
தேரொன்று கொண்டானடி- பாரதி
    சிலையென் றமர்ந்தானடி!

காராயிரம் மிதக்கும்
    ககனத்திலே பறந்து
காரினுள் ஒளிந்தானடி-பாரதி
   கவிமழை பொழிந்தானடி!

தானென்றகந்தை கொண்டு
   தலைசாய்க்கும் மன்னர் முன்னும்
நானென்று நின்றானடி- பாரதி
   நாட்டினை வென்றானடி!

பத்துவிரல்களுள்ளும்
    பாட்டினை ஊற்றிவைத்து
முத்தாய் உதிர்த்தானடி- பாரதி
   முடிகொண் டமர்ந்தானடி!

காணி நிலத்தை எண்ணிக்
    கனிந்து கிடந்த மன்னன்
மாநிலம் பெற்றானடி- மேலும்
    வானையும் தொட்டானடி!

பாரதி பாடிவைத்த
   பாடலுக் கீடுவைக்க
யார்கவி செய்வாரடி- பாவலர்
   வேறெதைச் சொல்வாரடி?

Thanks, Nerkuppai Senthil! By placing the plain-text version on the web, Kannadasan's praise poem will be shown by search engines
centuries from today. NG
Reply all
Reply to author
Forward
0 new messages