எண்சீர் ஆசிரிய விருத்தத் தொடர்

12 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Feb 15, 2026, 1:36:52 AM (4 days ago) Feb 15
to santhav...@googlegroups.com
இன்றைய பா -எண்சீர் விருத்தம்

தவசி யர்க்குச் சொல்கொடுத்த தாசரதீ!

            தவறு டைத்த என்றனையும் காத்திடுவாய்

அவசி யத்தில் அடியேனும் அழைக்கின்றேன்

            அஞ்ச லென்றே கரமென்பால் இட்டிடுவாய்

திவச முன்னை நினைக்காத நெஞ்சுடைத்தேன்

            திசைமு ழுக்க வுன்கருணை காணவைத்தாய்

கவச மென்ன நின்நாமம் பாடவைத்துக்

            கதியெ னக்கு யீயுமந்நாள் எந்நாளோ?     

--
S. Parthasarathy

+91 98441 24542/9980794542

Subbaier Ramasami

unread,
Feb 15, 2026, 9:10:25 AM (3 days ago) Feb 15
to santhav...@googlegroups.com
இன்றையப் பா எண்சீர் விருத்தம் நல்ல முயற்சி

தவறுடைத்த -   என்ன பொருள்

கரமென்பால் இட்டிடுவாய்-       கரம் இடுதல் பொருத்தமில்லை
கதி எனக்கு ஈயும்  கதியெனக் கீயும் என்று மாறும்

எல்லா ஈற்றுச் சீர்களும்  விளங்காய்ச் சீர்களாக இருக்கக் கடைசிச்சீரையும் அப்படி அமைத்தால் ஓசைச் சிறப்பிருக்கும்
இலந்தை

Parthasarathy S

unread,
Feb 15, 2026, 7:31:48 PM (3 days ago) Feb 15
to santhav...@googlegroups.com
நன்றி இலந்தையாரே!  தவறுடைத்த - பிழையுடைய, நெறிபிழன்ற என்ற பொருளில் அமைத்தேன். தாங்கள் குறிப்பிட்டதைக் கருத்திலிட்டு பாவை இவ்வாறு மாற்றி அமைக்கிறேன். தாஸன்

தவசி யர்க்குச் சொல்கொடுத்த தாசரதீ!

            தவறு டைத்த என்றனையும் காத்திடுவாய்

அவசி யத்தில் அடியேனும் அழைக்கின்றேன்

            அஞ்ச லென்றே கரமென்பால்  அருளிடுவாய்

திவச முன்னை நினைக்காத நெஞ்சுடைத்தேன்

            திசைமு ழுக்க வுன்கருணை காணவைத்தாய்

கவச மென்ன நின்நாமம் பாடவைத்துக்

            கதியெ னக்கே யீயுமந்நாள் குறித்திடாயோ?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC9Zu_fz2u0cusS1KRWjXqWkk6Zbnz7m4Nt44SuyhxtPw%40mail.gmail.com.

--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Parthasarathy S

unread,
Feb 16, 2026, 5:23:24 AM (3 days ago) Feb 16
to சந்தவசந்தம்
🪷🪷🪷அடியேனின் இன்றைய பா - எண்சீர் விருத்தம்🪷🪷🪷
புலன னைத்தும் உன்றனிடம் வைத்திடவே
 புரிவாய் நற்கரு ணையென்றன் இருடிகேசா!

நலனு டைத்த நாமமெல்லாம் நாவிலேத்த
 நன்மை யொன்றே நாடிவரும் நறுந்துழாயா!

கலனெ னத்தான் காசினியில் காத்தெனையே
 கரும மெல்லாம் கழிக்கச்செய் கமலைநாதா!

இலையு னக்கோர் ஈடெடுப்பும் எம்பிரானே
 இலையெ னக்கு வினையென்றே இருத்துவாயே!

On Monday, 16 February 2026 at 6:01:48 am UTC+5:30 Parthasarathy S wrote:
நன்றி இலந்தையாரே!  தவறுடைத்த - பிழையுடைய, நெறிபிழன்ற என்ற பொருளில் அமைத்தேன். தாங்கள் குறிப்பிட்டதைக் கருத்திலிட்டு பாவை இவ்வாறு மாற்றி அமைக்கிறேன். தாஸன்

தவசி யர்க்குச் சொல்கொடுத்த தாசரதீ!

            தவறு டைத்த என்றனையும் காத்திடுவாய்

அவசி யத்தில் அடியேனும் அழைக்கின்றேன்

            அஞ்ச லென்றே கரமென்பால்  அருளிடுவாய்

திவச முன்னை நினைக்காத நெஞ்சுடைத்தேன்

            திசைமு ழுக்க வுன்கருணை காணவைத்தாய்

கவச மென்ன நின்நாமம் பாடவைத்துக்

            கதியெ னக்கே யீயுமந்நாள் குறித்திடாயோ?

On Sun, 15 Feb 2026 at 19:40, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
இன்றையப் பா எண்சீர் விருத்தம் நல்ல முயற்சி

தவறுடைத்த -   என்ன பொருள்

கரமென்பால் இட்டிடுவாய்-       கரம் இடுதல் பொருத்தமில்லை
கதி எனக்கு ஈயும்  கதியெனக் கீயும் என்று மாறும்

எல்லா ஈற்றுச் சீர்களும்  விளங்காய்ச் சீர்களாக இருக்கக் கடைசிச்சீரையும் அப்படி அமைத்தால் ஓசைச் சிறப்பிருக்கும்
இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC9Zu_fz2u0cusS1KRWjXqWkk6Zbnz7m4Nt44SuyhxtPw%40mail.gmail.com.

--
S. Parthasarathy

+91 98441 24542

Parthasarathy S

unread,
Feb 17, 2026, 1:33:42 AM (yesterday) Feb 17
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய பா - எண்சீர் விருத்தம்_ 🪷🪷🪷

களிற ழைக்கக் கருடன்மேல் கடுகினாயே
          கணத்தி லங்கு கருதுமனச் சக்கரத்தை

அளறு டைத்த மடுவிருக்கும் நக்கரத்தை
         அடலு டைத்த தலையறுத்தே ஆனைகாலை

வளரும் வண்ணம் விளர்மஞ்சள் துணியெடுத்து
                          வாரி சாத வாயிலொற்றி வெப்பமிட்டாய்

பிளிறி நிற்கும் பெரும்பாவித் துன்பமதைப்
            போக்கப் பட்சிப் பறந்துவரக் காத்திருப்போ? 
3

_(களிறு – கஜேந்த்ரன்; கருதுமனம் – மனம் கருதும் ; அளறு – சேறு; நக்கரம் – முதலை; விளர் – இளமை; வாரிசாதம் – தாமரை.)_

இமயவரம்பன்

unread,
Feb 17, 2026, 7:32:24 AM (yesterday) Feb 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக உயர்ந்த கருத்து அமைந்த பாடல்!

Parthasarathy S

unread,
Feb 17, 2026, 8:44:08 PM (22 hours ago) Feb 17
to santhav...@googlegroups.com
நன்றி! திரு இமயவரம்பரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Parthasarathy S

unread,
Feb 17, 2026, 8:47:31 PM (22 hours ago) Feb 17
to santhav...@googlegroups.com
🪷🪷🪷 அடியேனின் இன்றைய பா - எண்சீர் விருத்தம் 🪷🪷🪷

உருவே அழியும் உள்நிற்கும் ஆன்மாவோ
         ஒளியே அழியா துடல்கொள்ள வோடிடுமே

கருவில் மீண்டும் கதியின்றிப் பிறந்திடவே
       கருமை யேறிக் கதிர்மங்கும் உடலாலே

பொருவில் இல்லாப் புண்ணியவுன் பதமொன்றே
         பொலிவாய் இடுமே போக்காது நலனிருத்தும்

திருவின் திருவே திடவிசும்பில் திண்மையனாய்த்
       திரும்பா வடிமை திண்கழலில் தாராயோ? 
 4

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்
Reply all
Reply to author
Forward
0 new messages