பேரூராதீனம் தமிழ்க்கல்லுரி - பாரதியார் பேச்சுப்போட்டி - முதல்பரிசு ஒரு லட்சம் ரூபாய்

112 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 9, 2021, 4:31:56 PM9/9/21
to Santhavasantham
கோவை மாவட்ட அளவிலான சிறப்புப் பேச்சுப் போட்டி

தேசியக்கவி பாரதியாரின் 100ஆவது நினைவு நாளை ஒட்டி திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூராதீனம் இருப்பத்தைந்தாம் குருமகாசந்நிதானங்கள் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் அருட்தலைமையில்

பாரதிய ஜனதா கட்சி நடத்தும்

மாவட்ட அளவிலான சிறப்புப் போட்டி

நாள்: 11.09.2021
நேரம்: முற்பகல் 10 மணி
இடம் :  முத்தமிழரங்கம்,
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூராதீனம், கோயம்புத்தூர் - 10.


இளநிலை (UG) பட்ட வகுப்புகளில் படிக்கும் கோவை மாவட்ட  அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது.

பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் -

1. பாரதியாரின் தேசிய சிந்தனைகள்
2. பாரதியாரின் தெய்வீகக் கருத்துக்கள்
3. பாரதி எனும் சமூக சீர்திருத்தவாதி
4. பெண்ணின் பெருமை மற்றும்      உரிமை பேசிய பாரதி
5. தமிழ் வளர்த்த பாரதியார்

மேற்காண் தலைப்புகளுள் ஏதேனும் ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும்.


மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டியில் கலந்து கொள்வோரிலிருந்து மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில அளவிலான போட்டியில் பங்குபெற அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மாநில அளவிலான போட்டி நடைபெறும் நாள்: 12-9-2021, ஞாயிறு
நேரம்: காலை 9 மணி
இடம்: இந்திராகாந்தி மகளிர் கல்லூரி, திருச்சி.

பரிசுகள்:

முதல் பரிசு - ரூ. 1,00,000 (ஒரு இலட்சம்)

இரண்டாம் பரிசு - ரூ.50,000 (ஐம்பதாயிரம்)

மூன்றாம் பரிசு - ரூ.25,000 (இருபத்தைந்தாயிரம்)

ஐந்து சிறப்புப் பரிசுகள் - தலா ரூ.5000.


மேலும் விவரங்களுக்குப் பின்வரும் எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

1. 87783 49097
2. 99946 44099
3. 98947 60225

போட்டியில் கலந்துகொள்ள வரும்போது தங்களது கல்வி நிலையம்  வழங்கியிருக்கும் அடையாள அட்டை &
ஆதார் அட்டையின் நகல்களை கொண்டுவருதல் வேண்டும்.

குறிப்பு:
போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்
Reply all
Reply to author
Forward
0 new messages