a new-year "demand"

26 views
Skip to first unread message

veNbA virumbi

unread,
Apr 17, 2026, 2:36:05 PM (8 days ago) Apr 17
to சந்தவசந்தம்
********************
(அறுசீர் விருத்தம்)

கராமலிமா புனல்போலின் றெங்கணும்பே ராபத்துக்
     காத்தி ருக்கப்
பராமுகமாய் இருப்போனீ என்றுலகோர் சுமத்துபெரும்
     பழியைப் போக்கப்
பராபவவாண் டிதிலேனு நிலைமாற்றி உதவுமதி
     பரிவு கூர்ந்தாங்
கராநதிசார் செஞ்சடையிற் போதுமதி சூடிநட
     மாடுந் தேவே.  
********************

Siva Siva

unread,
Apr 17, 2026, 5:21:53 PM (8 days ago) Apr 17
to santhav...@googlegroups.com
/ உதவுமதி பரிவு கூர்ந்தாங்  கராநதிசார்     /

How to split the above phrase?

உதவும் அதிபரிவு கூர்ந்து ....?

If so, is பரிவு a Sanskrit word?
I do not think we should apply Sanskrit prefix அதி to any Tamil word.

V. Subramanian

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 18, 2026, 10:34:29 PM (7 days ago) Apr 18
to santhav...@googlegroups.com
அழகிய அறுசீர்!

புத்தாண்டை அருமையாக வரவேற்று உடனடியாக ஒரு வேலையையும் செய்யப் பணித்துள்ளீர்கள்!
அனந்த்

On Fri, Apr 17, 2026 at 2:36 PM veNbA virumbi <mvms...@gmail.com> wrote:
********************4f9n%40googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Apr 18, 2026, 10:43:10 PM (7 days ago) Apr 18
to santhav...@googlegroups.com
கராமலி - இச்சொல்லிற்குப் பொருள் தருக..

மிக்க நன்றி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 19, 2026, at 08:04, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia04VJfV0CFUz79KcmnbCtmqGNPhMRPLHz5WSx1RcEM6fA%40mail.gmail.com.

Rajagopalan Soundararajan

unread,
Apr 19, 2026, 7:46:57 AM (6 days ago) Apr 19
to சந்தவசந்தம்
 கரா karā (p. 745)
கரா karā , n. prob. grāha. 1. A species of alligator; முதலை. கராவதன் காலினைக்கதுவ (திவ். பெரியதி. 2, 3, 9). 2. Male alligator; ஆண்முதலை. (பிங்.)

Subbaier Ramasami

unread,
Apr 19, 2026, 9:19:54 AM (6 days ago) Apr 19
to santhav...@googlegroups.com
நல்ல கவிதை

On Sat, Apr 18, 2026 at 10:34 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
அழகிய அறுசீர்!

veNbA virumbi

unread,
Apr 19, 2026, 2:44:34 PM (6 days ago) Apr 19
to சந்தவசந்தம்
Thank you for your response.  Apologies for the delayed reply. 

As for your question, this is what I had in mind:

மதி - முன்னிலை இடைச்சொல்.  உதவு மதி = உதவு (i.e., உதவுவாய்)

P.S.  I learned this word (along with the word மியா, which also means the same,  some years ago when going through the second volume of ilakkaNa viLakkam.  For some reason it popped into my head when I was writing this verse.  Taking that to be a "divine command", I left it in:-). Sorry for the confusion it caused.

veNbA virumbi

unread,
Apr 19, 2026, 2:45:25 PM (6 days ago) Apr 19
to சந்தவசந்தம்
Thank you.

veNbA virumbi

unread,
Apr 19, 2026, 2:45:43 PM (6 days ago) Apr 19
to சந்தவசந்தம்
Thank you.

veNbA virumbi

unread,
Apr 19, 2026, 3:02:17 PM (6 days ago) Apr 19
to சந்தவசந்தம்
As pointed out by Sri Rajagopalan, karA means முதலை.  So karAmali means முதலைகள் நிறைந்த.

Thank you.

இமயவரம்பன்

unread,
Apr 19, 2026, 8:12:36 PM (6 days ago) Apr 19
to santhav...@googlegroups.com
மிக அருமை!

ஓர் ஐயம் : சுமத்துபெரும் - இங்கே சுமத்துப்பெரும் என்று வரவேண்டுமா? சுமத்து என்பது வினைத்தொகையாக இருந்தாலும் இது வன்றொடர் குற்றியலுகரம் ஆதலின், இதற்குப் பின் வலிமிகும் என்று படித்திருக்கிறேன். இந்தப் புரிதல் சரியா?

- இமயவரம்பன்

Siva Siva

unread,
Apr 19, 2026, 8:58:22 PM (6 days ago) Apr 19
to santhav...@googlegroups.com
வன்றொடர்க்குற்றியலுகரம்

1) வினைத்தொகையில் வல்லொற்று மிகாது.
3.54.12
எல்லார்களும்பரவு மீசனை யேத்து பாடல்

2) இரண்டாம்வேற்றுமைத்தொகையில் மிகும்.
12.15.17
தள்ளுஞ்செய லில்லவர் சந்தனக்  காப்புத் தேடிக்

V. Subramanian

GOPAL Vis

unread,
Apr 20, 2026, 5:26:29 AM (5 days ago) Apr 20
to santhav...@googlegroups.com
செஞ்சடையிற் போதுமதி சூடியவன் மனிதருக்குச் சுதந்த ரத்தை
வஞ்சமிலா தருளியெலா வளம்தந்தான் ஞானமற்று வாரிக் கொட்டிப்
பஞ்சமிகப் புரட்சிசெய்து வெற்றியென நாம்கண்டோம் பராப வத்தை
சஞ்சலத்தை நாம்படைத்தோம் அவன்மீது பழிசுமத்தத் தக்கார் ஆரே?

கோபால்.

. . . . 

--

Reply all
Reply to author
Forward
0 new messages