ambalaththAr ammAnai- அம்பலத்தார் அம்மானை

171 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 13, 2010, 9:54:16 AM3/13/10
to சந்தவசந்தம்

<> அம்பலத்தார் அம்மானை <>

அம்மானைப் பாடல்கள் பற்றிச் சந்த வசந்தத்தில் முன்னம் விரிவாகப் பேசியுள்ளோம். அண்மையில், நம்பிக்கை என்னும் இணையத் தளத்தில், அம்பலத்தார் அம்மானை என்ற தலைப்பில் நான் இட்டுவரும் அம்மானைப் பாடல்களை, மஹாசிவராத்திரியும் சனிப் பிரதோஷமும் ஒருங்கே கூடிய இந்த நன்னாளன்று இங்குப் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது. இப்பாடல்களில் பலவற்றை இக்குழுவில் முன்பே இட்டிருந்தாலும், இப்போது அவற்றின் விளக்கத்தையும் சேர்த்து இருக்கிறேன். அத்தோடு, முந்தி இட்ட பாடல்களில் சில மாற்றங்களையும், புதிதாகச் சில பாடல்களையும் காணலாம்.  

அனந்த், 13-3-2010.  

======================== 

அம்மானைப் பாடல்கள் பற்றி ஒரு சிறு முன்குறிப்பு:

தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரக் காலத்தில் தொடங்கி அண்மைக்காலம் வரையாகப் பலவகையான அம்மானைப் பாடல்கள் காணப்படுகின்றன. இங்கு நாம் காண்பவை அவற்றில் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவை. இப்பாடல்கள், வஞ்சப்புகழ்ச்சி (நையாண்டி), சிலேடை அணிகள் அமையப் பெற்று, நகைச்சுவையோடு விளங்கும். இறுதியடியில் சிலேடை நயம் தோன்ற விடையளித்து ஒரு திருப்பத்துடன் முடிக்கும் முறை இவற்றிலுள்ள தனிச் சிறப்பென்னலாம். இவை அம்மானைப் பாடல்களின் அழகிய பரிணாம வளர்ச்சியை பறை சாற்றும். 

இப்பாடல்களின் பின்னணியான அம்மானை விளையாட்டில், பாட்டுடைத் தலைவனின் குணநலன்களைக் கூறும் ஒரு பெண்ணும், அவை பற்றிய கேள்வியொன்றை எழுப்பும் இன்னொரு பெண்ணும், அதற்கு விடையளிக்க மூன்றாவதாக ஒருபெண்ணும் பங்கெடுப்பதாகக் கற்பனை செய்யலாம். அல்லது, இரு மகளிர் மட்டுமே இருப்பதாகவும் கருதலாம். இவ்வகை அம்மானைப் பாடலை வெண்டளை பயிலும் அல்லது பயிலாத தரவு கொச்சகக் கலிப்பா அல்லது 'உறழ்கலிப் பா' (வினா-விடை கொண்ட கலிப்பா) என்னும் வகையைச் சார்ந்தது எனக் கொள்ளலாம். தனக்கென ஒரு தனி நடையை வகுத்துக்கொண்டு படிப்பதற்கு இன்பந்தரும் இவ்வகையான அம்மானை அமைப்பில் நான் முயன்ற சில பாடல்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1.  <> மெய்யில் பாதி <>

கைலாயத்தில் ஒரு காட்சி. சிவபெருமான் தன் அருமை மனையாள் உமையிடம் மாட்டிக்கொண்டு விழிக்கிறார். பார்வதியாளின் சினம் இமயத்தை விஞ்சும் போலத் தோன்றுகிறது. பாவம், அப்படி என்னதான் பிழை செய்து விட்டார் நம் அப்பாவி சங்கரர்?

என்ன செய்தாராவது? இமயமலைக்கு அரசனின் ஒரே புதல்வியாக, உடல் முழுதும் பொன்னும் மணியும் இழைத்துச் செல்வத்தில் திளைக்கும் பார்வதி ஆசைப்பட்டு, தவம் கிடந்து கல்யாணம் செய்துகொண்ட பரமேசன், ஊர் ஊராக அலைந்துகொண்டு பிச்சையெடுப்பது தான் அவர் செய்த தவறு. கையில் ஒரு நல்ல பாத்திரம் கூட இல்லாமல் மண்டையோட்டை ஏந்திப் பிச்சை கேட்கச் செல்வது இன்னும் தவறு. இது போதாதென்று, பிச்சையெடுக்கையில் ஒரு நல்ல ஆடை கூட அணியாமல் தான் என்றோ கிழித்த புலித்தோலை இடுப்பிலும், கரித்தோலைத் தோளிலும் போர்த்துக் கொண்டு போவது தவறிலும்  தவறு. இந்த அலங்கோல உடையில்
ஆங்காங்கு விழுந்த ஓட்டைகளைத் தான் தைத்துக் கொண்டு அந்த ஒட்டுப்போடல்கள் ஊரார்
கண்ணுக்குத் தெரியாமல் ஒரு கையால் மறைத்துக்கொண்டு போகும் அவலம் வேறு. இவற்றிலெல்லாம் பெரிய்ய்ய்ய்ய, மகா மகாத் தவறு இந்தச் செயலைத் தன் மனையாளிடம் கூறாது மறைத்து வைத்திருந்தது. இப்போது, அவர் செய்யும் தொழில் பற்றி அவளுக்குப் பிறர் வழியாகத் தெரிந்து போனது. இமவான் மகள் கண்ணின் கோப ஜ்வாலையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு வழி கண்டுபிடிக்கிறார் அரன். இதை மனத்தில்
வைத்து ஒரு அம்மானைப் பாடலைப் பார்ப்போம்.

கையிலே ஓடேந்திக் காசினியில் போயிரந்தும்
தையலிடம் காட்டாது தான்மறைப்பார் அம்மானை

தையலிடம் காட்டாது தான்மறைப்பார் ஆமாகில்

மைவிழியாள் சீற்றம்எங்ஙன் மாற்றிடுவார் அம்மானை
?
மெய்யிலே பாதியைத்தான் விட்டிடுவார் அம்மானை!
 
(தையலிடம் = உடையில் தைக்கப்பட்ட இடங்கள்; பெண்ணிடம் (மனைவியிடம்); மெய் = உண்மை, மேனி)
 
ஆக, “மெய்யிலே பாதியைத்தான் விடுவதேசிவன் கண்டுபிடித்த வழி. இதற்கு, தன் உடம்பிலே பாதியை உமைக்குக் கொடுத்து இனித்தான் எங்கு போனாலும் உடனிருந்து அவள் கண்காணிக்க இயலுமாறு செய்தது என்றோ அல்லது, தான் வெளியே போனது உண்மைதான் என்று மட்டும் சொல்லி, அது  சும்மா உலகோர் எப்படி இருக்கிறார்கள் என்று க்ஷேமலாபம் விசாரிக்கத்தான், பிச்சையெடுக்க அல்ல என்று அவள் கருதும்படியாகப் பாதி உண்மையைச் சொன்னது என்றோ பொருள் கொள்ளலாம்!
 
அனந்த்
NatarAjan.jpg

OAGAI NATARAJAN

unread,
Mar 13, 2010, 2:12:32 PM3/13/10
to santhav...@googlegroups.com
கையிலே ஓடேந்திக் காசினியில் போயிரந்தும்
தையலிடம் காட்டாது தான்மறைப்பார் அம்மானை

தையலிடம் காட்டாது தான்மறைப்பார் ஆமாகில்

மைவிழியாள் சீற்றம்எங்ஙன் மாற்றிடுவார் அம்மானை
?
மெய்யிலே பாதியைத்தான் விட்டிடுவார் அம்மானை!
 
மெய்யிலே பாதிவிட்டு மேலாறு கொண்டிருப்பார்
மையலர்க்(கு) அளித்தகுறை மேனியினார் அம்மானை
மையலர்க்(கு) அளித்தகுறை மேனியினார் ஆமாகில்
வையகத்தில் பெண்களுக்கு வாழ்வெங்கே அம்மானை?
தையலர்க்(கு) மூன்றிலொன்று தந்தாரே அம்மானை!
 
(1. தன்மேனியில் பாதியைத் தந்து தலையிலும் கங்கைக்கு இடம்தந்து சிவன் குறைமேனியாகி விட்டாரே,
2. அவர் அவ்வள்வு இடம் தந்தாலும் வையகத்தில் பெண்களின் வாழ்வு சிறந்ததாக இல்லையே?
3. பெண்களுக்கு இப்போது இங்கேயும் மூன்றிலொரு பங்கு அரசியலில் தந்துவிட்டாரே!)
ஓகை நடராஜன்.

2010/3/13 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

thangamani

unread,
Mar 14, 2010, 5:33:39 AM3/14/10
to சந்தவசந்தம்
திரு.அனந்த் அவர்களுக்கு,
அம்மானை பாடல்கள் இடுவது குறித்து மிக்க மகிழ்ச்சி!
தாங்கள் இங்கிட்ட முதல்பாடல் அருமை!இன்னும்
ஆவலுடன் படிக்க எதிர்நோக்குகிறோம்.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 13, 7:54 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> *<> **அம்பலத்தார் அம்மானை **<>*

> *1.  <> **மெய்யில் பாதி <>***

>
> கைலாயத்தில் ஒரு காட்சி. சிவபெருமான் தன் அருமை மனையாள் உமையிடம்
> மாட்டிக்கொண்டு விழிக்கிறார். பார்வதியாளின் சினம் இமயத்தை விஞ்சும்
> போலத் தோன்றுகிறது.
> பாவம், அப்படி என்னதான் பிழை செய்து விட்டார் நம் அப்பாவி சங்கரர்?
>
> என்ன செய்தாராவது? இமயமலைக்கு அரசனின் ஒரே புதல்வியாக, உடல் முழுதும்
> பொன்னும் மணியும்
> இழைத்துச் செல்வத்தில் திளைக்கும் பார்வதி ஆசைப்பட்டு, தவம் கிடந்து கல்யாணம்
> செய்துகொண்ட பரமேசன், ஊர் ஊராக அலைந்துகொண்டு பிச்சையெடுப்பது தான் அவர் செய்த
> தவறு. கையில் ஒரு நல்ல பாத்திரம் கூட இல்லாமல் மண்டையோட்டை ஏந்திப் பிச்சை
> கேட்கச் செல்வது இன்னும் தவறு. இது போதாதென்று, பிச்சையெடுக்கையில் ஒரு நல்ல
> ஆடை கூட அணியாமல் தான் என்றோ கிழித்த புலித்தோலை இடுப்பிலும்,
> கரித்தோலைத் தோளிலும்
> போர்த்துக் கொண்டு போவது தவறிலும்  தவறு. இந்த அலங்கோல உடையில்
> ஆங்காங்கு விழுந்த ஓட்டைகளைத் தான் தைத்துக் கொண்டு அந்த ஒட்டுப்போடல்கள்
> ஊரார் கண்ணுக்குத்
> தெரியாமல் ஒரு கையால் மறைத்துக்கொண்டு போகும் அவலம் வேறு. இவற்றிலெல்லாம்
> பெரிய்ய்ய்ய்ய, மகா மகாத் தவறு இந்தச் செயலைத் தன் மனையாளிடம் கூறாது மறைத்து
> வைத்திருந்தது. இப்போது, அவர் செய்யும் தொழில் பற்றி அவளுக்குப் பிறர் வழியாகத்
> தெரிந்து போனது. இமவான் மகள் கண்ணின் கோப ஜ்வாலையிலிருந்து தன்னைக்
> காப்பாற்றிக்கொள்ள ஒரு வழி கண்டுபிடிக்கிறார் அரன். இதை மனத்தில்
> வைத்து ஒரு அம்மானைப் பாடலைப் பார்ப்போம்.
>

> *கையிலே ஓடேந்திக் காசினியில் போயிரந்தும்**
> தையலிடம் காட்டாது தான்மறைப்பார் அம்மானை**
> தையலிடம் காட்டாது தான்மறைப்பார் ஆமாகில்**
> மைவிழியாள் சீற்றம்எங்ஙன் மாற்றிடுவார் அம்மானை**?
> மெய்யிலே பாதியைத்தான் விட்டிடுவார் அம்மானை!*
> **

> (தையலிடம் = உடையில் தைக்கப்பட்ட இடங்கள்; பெண்ணிடம் (மனைவியிடம்); மெய் =
> உண்மை, மேனி)
>
> ஆக, “மெய்யிலே பாதியைத்தான் விடுவதே” சிவன் கண்டுபிடித்த வழி. இதற்கு,
> தன் உடம்பிலே
> பாதியை உமைக்குக் கொடுத்து இனித்தான் எங்கு போனாலும் உடனிருந்து அவள் கண்காணிக்க
> இயலுமாறு செய்தது என்றோ அல்லது, தான் வெளியே போனது உண்மைதான் என்று மட்டும்
> சொல்லி, அது  சும்மா உலகோர் எப்படி இருக்கிறார்கள் என்று க்ஷேமலாபம்
> விசாரிக்கத்தான், பிச்சையெடுக்க அல்ல என்று அவள் கருதும்படியாகப் பாதி உண்மையைச்
> சொன்னது என்றோ பொருள் கொள்ளலாம்!
>
> அனந்த்
>

>  NatarAjan.jpg
> 24KViewDownload

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 14, 2010, 1:23:14 PM3/14/10
to santhav...@googlegroups.com

2. கண்டவிடம்

முந்திய அம்மானைப் பாடலில் சிவபெருமானுடைய பிக்ஷா கோலத்தையும் அதனால் வந்த விளைவுகளையும் பார்த்தோம். இப்போது அவர் செய்யும் வேறு சில விசித்திரமான செய்கைகளைப் பற்றி நமது அம்மானைப் பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம்.

அம்மானைக் காய்களில் சிலவற்றை மேலே தூக்கிப் போட்டு அவை கீழே விழும் முன் தரையில் மீதமுள்ள காய்களை விசுக்கென்று ஒருகையில் வாரி எடுத்துக் கொண்ட ஜோரிலே, முதல் பெண் பாடத்தொடங்குகிறாள்:  எங்கள் சிவனார் இருக்கிறாரே அவர் என்னவெல்லாம் செய்யும் திறமை படைத்தவர் தெரியுமா? கிடைத்தற்கரிய, மிக மிகப் பழையதான ஒரு வாகனத்தைத் தம் வசம் வைத்துக்கொண்டு இருக்கிறார். (தற்போது antique car உரிமையாளர்கள் பீற்றிக் கொள்வது போல). நல்ல உயரமான மாடாகிய அதில் சிரமப்பட்டு ஏறி, அது லொடக்கா லொட்என்று காலை வைத்து நடக்கையில் தான் விழாமல் சமாளித்து அதில் தொற்றிக் கொண்டு நம் பெருமான் உலகிலுள்ள யாவரும் காணும் படி உலாவுவார். இறுதியில், தம் ஊர்தியிலிருந்து, எல்லோரும் திரண்டு கூடும் ஒரு பொதுவான இடத்தில் கீழே இறங்கி, மாட்டுப் பயணத்தின் விளைவாகச் சுளுக்கிக் கொண்ட காலைத் தூக்கிக் கொண்டு நொண்டுவார், தெரியுமா?“

தொண்டுகிழ மாடதன்மேல் தொற்றியுல கோரெல்லாம்

கண்டிடவோர் அம்பலத்தில் கால்நொண்டும் அம்மானை

இதைக் கேட்ட இரண்டாவது பெண் சொல்கிறாள்: அச்சச்சோ! உங்கள் தலைவர் இப்படிக் கிழட்டு மாட்டில் பவனி வருவதையும், எல்லோரும் காண நொண்டுவதையும் அவரை மிக உயர்வாக மனத்தில் கொண்டிருக்கும் அவரது தொண்டர்கள் பார்த்தால் என்னாவது? அதனால், அவர்களைத் தம்மை நெருங்கிப் பார்க்க விடாமல் (கொடுத்த ஜோலியப் பாக்காம, இன்னாடா இங்கே தமாசு பார்த்துகினு நிக்குறேஎன்று சொல்லித்) துரத்தி விடுவாரோ?”
 
கண்டிடவோர் அம்பலத்தில் கால்நொண்டு வாராயின்

தொண்டர்தமைக் கண்டால் துரத்துவரோ அம்மானை?

இதைக் கேட்ட முதல் பெண் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் வகையில், சீச்சீ! அப்படியெல்லாம் எங்கள் தலைவரைப் பற்றி நினைக்காதே! தம் தொண்டர்களை எங்கு எப்போது கண்டாலும், அன்பு வடிவான எங்கள் ஐயன் உடனே போட்டது போட்ட மேனிக்கு விட்டு அவர்கள் வேண்டுவதைக் கொடுத்துக் காப்ப்பாற்றுவாராக்கும்!என்று சொல்லி முடிக்கிறாள்:
 
..கண்டவிடம் தாம்நிறுத்திக் காத்திடுவார் அம்மானை! 
 
அதே சமயம் தான் வாரியெடுத்துத் தன் பக்கம் ஒதுக்கி வைத்திருந்த அம்மானைக் காய்களின் எண்ணிக்கை மற்றவளுடையதை விடக் கணிசமாகக் கூடி விட்டதால், ஒரு பெருத்த வெற்றி முழக்கத்துடன் ஆட்டத்திற்கு முற்றுப் புள்ளியும் வைக்கிறாள்.
 
இப்போது, முழுப் பாடலைப் பார்ப்போம்.    

தொண்டுகிழ மாடதன்மேல் தொற்றியுல கோரெல்லாம்

கண்டிடவோர் அம்பலத்தில் கால்நொண்டும் அம்மானை;

கண்டிடவோர் அம்பலத்தில் கால்நொண்டு வாராயின்

தொண்டர்தமைக் கண்டால் துரத்துவரோ அம்மானை?

 ..கண்டவிடம் தாம்நிறுத்திக் காத்திடுவார் அம்மானை! 
 
மேல் விளக்கம்:

தொண்டு கிழ மாடு = நந்தி; முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாக விளங்குபவனின் வாகனமும் தொன்மை வாய்ந்ததே.(தொண்டு= அடிமை, பழைமை, கடவுள் வழிபாடு).

அம்பலம் = மக்கள் கூடும் பொது இடம்; இங்கு, நடராசப் பெருமான் திருநடம் புரியும் தில்லை, மதுரை, திருநெல்வேலி, திருவாலங்காடு, குற்றாலம் ஆகிய தலங்களில் உள்ள, பொன், வெள்ளி, தாமிர, இரத்தின, சித்திர சபைகளைக் (மன்றங்களைக்) குறிக்கும். 

கால் நொண்டும் = ஒருகாலை மேல் தூக்கி ஒருகால் தரையில் ஊன்றி இருக்கும் நடனத் திருக்கோலத்தைக் குறித்தது.

கண்ட விடம் காத்தல் = தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைகையில் எழுந்த விடத்தைத் தயாஸ்வரூபியான நம் இறைவன் தம் கண்டத்தில் (கழுத்தில்) இருத்தித் தேவர்கள் அமுதம் பெற வழிசெய்து, அவர்களை அசுரரிடமிருந்து காத்தது.

அனந்த்

2010/3/14 thangamani <tvthan...@gmail.com>

OAGAI NATARAJAN

unread,
Mar 15, 2010, 2:05:54 PM3/15/10
to santhav...@googlegroups.com
அனந்த் ஐயாவின் அம்மானை என்னையும் எழுதத் தூண்டிவிடுகிறது. பிழை பொறுப்பீர்.

     கண்டவிடம் கொண்டிருப்பார் கண்ணுதலும் கொண்டிருப்பார்
     நொண்டுநடம் ஆடுகின்ற நம்தலைவர் அம்மானை!
     நொண்டுநடம் ஆடுகின்ற நம்தலைவர் ஆமாகில்
     விண்டமுட மேனியினால் விளைந்ததென்ன அம்மானை?
     அண்டமதை மேனிகொண்டு அளந்தாரே அம்மானை!

ஓகை நடராஜன்.

2010/3/14 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 18, 2010, 9:49:33 PM3/18/10
to santhav...@googlegroups.com

3. விசித்திரக் குடும்பம் **

'

The Addam Family' என்று திரைப்படமாக்கப் பட்ட ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடரில் வரும் குடும்பம் ஒன்றில் எல்லோருடைய முகங்களும் உருவங்களும் விசித்திரமாக இருக்கும் (இணைப்பிலுள்ள படத்தைப் பார்க்கவும்). இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அப்படி இருக்குமே ஒழிய, நம் சிவபெருமானின் குடும்ப நபர்களைப் பற்றி நன்கு தெரிந்துள்ள நமக்கு இது ஒரு பெரிய அதிசயமாக இருக்கவே இருக்காது. இந்தக் குடும்பத் தலைவருக்கு அன்னை தந்தை கிடையாது, அவர் தாமாகவே தோன்றியவர். அதனால் தம் இஷ்டத்திற்கு ஒன்றுக்கு ஐந்தாய் முகங்களைத் தாங்கிக் காட்சி அளிப்பார். அதாவது, நம் பெருமானுக்கு (தலீவருக்கு) அஞ்சுமுகம். அப்படிப்பட்டவருக்கு வாய்த்த பெண்ணாள் அழகிய ஒரு முகத்தைக் கொண்டவள் எனினும், ஏனோ பிள்ளைகள் இருவரும் தகப்பனைப் போல முக விசித்திரம் கொண்டவர்கள். ஒரு பக்கம் மூத்தவனான விநாயகனுக்கு மனித முகமே இல்லாமல் ஒரு யானையின் முகம் உண்டு என்றால், மறுபுறம் இளையவனான வேலனுக்குத் தகப்பனை விட ஒரு முகம் ஜாஸ்தி உண்டு. அவன் ஆறுமுகம் கொண்டவன். (அதனால்தான் தகப்பன் சாமியாகப் பின்னர் ஆனானோ என்னவோ?).

இப்போது, சிவபெருமானை அணுகி அருள் பெறக் கைலாயம் வரும் அடியவர்களின் நிலையைப் பார்ப்போம். சிவபெருமானை நெருங்குமுன் அவர்கள் முன்னே ஓடிவரும் ஆனைமுகன், ஆறுமுகன் இருவரும் சிறு குழந்தைகள் ஆதலால் அவர்கள் முகம் தங்கள் முகங்களிலிருந்து மாறுபட்டிருக்கின்றனவே என்று அடியார்கள் அச்சம் கொள்வதில்லை. ஆனால்.., ஆனால்.. இறைவன் கிட்ட நெருங்க.., நெருங்க அவரது அஞ்சுமுகம் தெரியத் தொடங்குகிறது. அவ்வளவுதான்! எல்லோருக்கும் அச்சம் அடிவயிற்றைத் தாக்குகிறது. இருக்காதா பின்னே? அஞ்சுமுகம் என்பதனால் பிறர் அஞ்சுவது இயற்கைதானே?

சரிதான், சரிதான்! சிவனை அண்டுவோர்கள் எல்லோரும் இப்படிப் பயப்பட்டால், பின்னே அவர் பக்கலில் எந்த அடியார்தாம் அஞ்சாமல் நிற்க இயலும்? அப்படி யாரேனும் உள்ளார்களா? ஏனில்லாமல்? இரண்டு வீர தீர சூரப் புலிகள் உண்டு. ஒரு புலியார் அரனின் தலை மேலேயே ஏறி அமரும் தைரியம் உடையவர். இன்னொருவர், ஐயனின் கால் மாட்டில் நின்று கொண்டு, அவர் எந்த விதமாக தாண்டவம் ஆடினாலும் - ஆனந்தத் தாண்டவமோ, உருத்திரத் தாண்டவமோ, பிரளயத் தாண்டவமோ, எதுவாகிலும் சரி - நம் அஞ்சுமுகனாரைக் கண்டு பயப்படாமல் தாளம் போட்டுக் கொண்டும், மயிர்க்கூச்செறிந்து கொண்டும் (பயத்தால் அல்ல, பரவசத்தால்!) நிற்பார்கள்.

நம் இரு அம்மானைப் பெண்கள்சொல்லிவரும் இந்தக் கதைக்கான பாடலை இப்போது பார்ப்போம்.

பிஞ்சுகளாய் ஆனைமுகன் ஆறுமுகன் பெற்றுத்தான்

அஞ்சுமுகம் பூணுகின்ற ஐயன்காண் அம்மானை;

அஞ்சுமுகம் பூணுகின்ற ஐயனே ஆமாயின்

அஞ்சாது அண்டிடுவோர் யாரோசொல் அம்மானை?

..அம்புலியும் வெம்புலியும் அண்டிடுவார் அம்மானை!

முதல் பெண் சிவபெருமானின் விசித்திரக் குடும்பத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதையும், உடனே அடுத்தவள் அவளை ஒரு கேள்விக் கொக்கியால் மடக்கப் பார்ப்பதையும், அதிசாமர்த்தியசாலியான முதலாமவள் அதற்குத் தகுந்த விடையைத் (நெத்தியடியைத்) தருவதையும் கவனித்தீர்களா? இப்படிப்பட்ட அறிவுக்கூர்மையை வளர்க்கத்தான் அந்தக் காலத்திலே (நான் காலேஜ் படிக்கறப்போ..) அம்மானை போன்ற அற்புத விளையாட்டுகளை ஆடினார்கள் என்பது இப்போதாவது புரிகிறதா?
 
மேல் விளக்கம்: வெம்புலி = சிவபெருமானுக்குத் தாம் பூசை செய்வதற்காக மரங்களின் உச்சியிலுள்ள பூக்களையும் பறிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தமக்குக் கூரிய நகங்கள் கொண்ட புலியின் காலைத் தருமாறு வேண்டி வரம் பெற்ற வியாக்கிர பாதர் என்னும் முனிவர். இவரும் பதஞ்சலி முனிவரும் சதா சர்வகாலமும் சிவ தாண்டவத்தைப் பார்த்து மகிழும் பெரும்பேறு வாய்த்த புண்யசீலர்கள்.
 
அனந்த் 18-3--2010
===============

2010/3/14 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

2. கண்டவிடம்

முந்திய அம்மானைப் பாடலில் சிவபெருமானுடைய பிக்ஷா கோலத்தையும் அதனால் வந்த விளைவுகளையும் பார்த்தோம். இப்போது அவர் செய்யும் வேறு சில விசித்திரமான செய்கைகளைப் பற்றி நமது அம்மானைப் பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம்.

அம்மானைக் காய்களில் சிலவற்றை மேலே தூக்கிப் போட்டு அவை கீழே விழும் முன் தரையில் மீதமுள்ள காய்களை விசுக்கென்று ஒருகையில் வாரி எடுத்துக் கொண்ட ஜோரிலே, முதல் பெண் பாடத்தொடங்குகிறாள்:  எங்கள் சிவனார் இருக்கிறாரே அவர் என்னவெல்லாம் செய்யும் திறமை படைத்தவர் தெரியுமா? கிடைத்தற்கரிய, மிக மிகப் பழையதான ஒரு வாகனத்தைத் தம் வசம் வைத்துக்கொண்டு இருக்கிறார். (தற்போது antique car உரிமையாளர்கள் பீற்றிக் கொள்வது போல). நல்ல உயரமான மாடாகிய அதில் சிரமப்பட்டு ஏறி, அது லொடக்கா லொட்என்று காலை வைத்து நடக்கையில் தான் விழாமல் சமாளித்து அதில் தொற்றிக் கொண்டு நம் பெருமான் உலகிலுள்ள யாவரும் காணும் படி உலாவுவார். இறுதியில், தம் ஊர்தியிலிருந்து, எல்லோரும் திரண்டு கூடும் ஒரு பொதுவான இடத்தில் கீழே இறங்கி, மாட்டுப் பயணத்தின் விளைவாகச் சுளுக்கிக் கொண்ட காலைத் தூக்கிக் கொண்டு நொண்டுவார், தெரியுமா?“

தொண்டுகிழ மாடதன்மேல் தொற்றியுல கோரெல்லாம்

கண்டிடவோர் அம்பலத்தில் கால்நொண்டும் அம்மானை

இதைக் கேட்ட இரண்டாவது பெண் சொல்கிறாள்: அச்சச்சோ! உங்கள் தலைவர் இப்படிக் கிழட்டு மாட்டில் பவனி வருவதையும், எல்லோரும் காண நொண்டுவதையும் அவரை மிக உயர்வாக மனத்தில் கொண்டிருக்கும் அவரது தொண்டர்கள் பார்த்தால் என்னாவது? அதனால், அவர்களைத் தம்மை நெருங்கிப் பார்க்க விடாமல் (கொடுத்த ஜோலியப் பாக்காம, இன்னாடா இங்கே தமாசு பார்த்துகினு நிக்குறேஎன்று சொல்லித்) துரத்தி விடுவாரோ?”
 
கண்டிடவோர் அம்பலத்தில் கால்நொண்டு வாராயின்

தொண்டர்தமைக் கண்டால் துரத்துவரோ அம்மானை?

இதைக் கேட்ட முதல் பெண் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் வகையில், சீச்சீ! அப்படியெல்லாம் எங்கள் தலைவரைப் பற்றி நினைக்காதே! தம் தொண்டர்களை எங்கு எப்போது கண்டாலும், அன்பு வடிவான எங்கள் ஐயன் உடனே போட்டது போட்ட மேனிக்கு விட்டு அவர்கள் வேண்டுவதைக் கொடுத்துக் காப்ப்பாற்றுவாராக்கும்!என்று சொல்லி முடிக்கிறாள்:
 
..கண்டவிடம் தாம்நிறுத்திக் காத்திடுவார் அம்மானை! 
 
அதே சமயம் தான் வாரியெடுத்துத் தன் பக்கம் ஒதுக்கி வைத்திருந்த அம்மானைக் காய்களின் எண்ணிக்கை மற்றவளுடையதை விடக் கணிசமாகக் கூடி விட்டதால், ஒரு பெருத்த வெற்றி முழக்கத்துடன் ஆட்டத்திற்கு முற்றுப் புள்ளியும் வைக்கிறாள்.
 
இப்போது, முழுப் பாடலைப் பார்ப்போம்.    

தொண்டுகிழ மாடதன்மேல் தொற்றியுல கோரெல்லாம்

கண்டிடவோர் அம்பலத்தில் கால்நொண்டும் அம்மானை;

கண்டிடவோர் அம்பலத்தில் கால்நொண்டு வாராயின்

தொண்டர்தமைக் கண்டால் துரத்துவரோ அம்மானை?

 ..கண்டவிடம் தாம்நிறுத்திக் காத்திடுவார் அம்மானை! 
 
மேல் விளக்கம்:

தொண்டு கிழ மாடு = நந்தி; முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாக விளங்குபவனின் வாகனமும் தொன்மை வாய்ந்ததே.(தொண்டு= அடிமை, பழைமை, கடவுள் வழிபாடு).

அம்பலம் = மக்கள் கூடும் பொது இடம்; இங்கு, நடராசப் பெருமான் திருநடம் புரியும் தில்லை, மதுரை, திருநெல்வேலி, திருவாலங்காடு, குற்றாலம் ஆகிய தலங்களில் உள்ள, பொன், வெள்ளி, தாமிர, இரத்தின, சித்திர சபைகளைக் (மன்றங்களைக்) குறிக்கும். 

கால் நொண்டும் = ஒருகாலை மேல் தூக்கி ஒருகால் தரையில் ஊன்றி இருக்கும் நடனத் திருக்கோலத்தைக் குறித்தது.

கண்ட விடம் காத்தல் = தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைகையில் எழுந்த விடத்தைத் தயாஸ்வரூபியான நம் இறைவன் தம் கண்டத்தில் (கழுத்தில்) இருத்தித் தேவர்கள் அமுதம் பெற வழிசெய்து, அவர்களை அசுரரிடமிருந்து காத்தது.

அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 18, 2010, 9:52:51 PM3/18/10
to santhav...@googlegroups.com
அழகான பாடல். விண்டமுட மேனியென்றால் என்ன பொருள்?
அனந்த்

நாளையிலிருந்து அமெரிக்காவில் சில வாரங்கள் இருப்பேன்.  அங்குக் கணினித் தொடர்பு குறைய வாய்ப்பிருக்கிறது.

2010/3/15 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Mar 19, 2010, 2:26:43 AM3/19/10
to santhav...@googlegroups.com
அம்மானைப் பாடலை ரசித்தேன்.. கருத்தும் கற்பனையும் நன்று.வாழ்க!,
 யோகியார்

2010/3/19 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
To unsubscribe from this group, send email to santhavasantham+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

--
யோகியார். வேதம்.(Yogiyar vedham)
Anaivarum vaazhga vaLamudan!--..
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600041
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-41(போன் 64565979)-
*****************************

OAGAI NATARAJAN

unread,
Mar 19, 2010, 1:38:54 PM3/19/10
to santhav...@googlegroups.com
விண்டமுட மேனி = (அவ்வாறு) சொல்லப்பட்ட முடமான மேனி.
 
(கண்டவர் விண்டிலர் என்ற பயன்பாட்டைப் போல் பயன் படுத்தினேன். தவறென்றால் அறியத் தரவும்).
 
     கண்டவிடம் கொண்டிருப்பார் கண்ணுதலும் கொண்டிருப்பார்
     நொண்டுநடம் ஆடுகின்ற நம்தலைவர் அம்மானை!
     நொண்டுநடம் ஆடுகின்ற நம்தலைவர் ஆமாகில்
     விண்டமுட மேனியினால் விளைந்ததென்ன அம்மானை?
     அண்டமதை மேனிகொண்டு அளந்தாரே அம்மானை!
 
1. கழுத்தில் விஷத்தை வைத்துக் கொண்டு நெற்றியிலும் ஒரு கண் வைத்துக் கொண்டு நொண்டியாக நடம் ஆடுகிறார் நம் சிவன்.
2. அவ்வாறு சிவன் முடமேனி கொண்டவர் என்றுசொன்னால் அம்மேனியினால் என்னதான் விளையும்?
3. திருமாலும் பிரம்மனும் அடிமுடி காணாதவாறு இந்தப் பிரபஞ்சத்தையே அந்த மேனியினால் அளந்து நின்றாரே!
 
ஓகை நடராஜன்.
 
2010/3/19 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 24, 2010, 4:07:37 PM3/24/10
to santhav...@googlegroups.com

4. <> ஆடல் காணீரோ <>

பார்வதி அன்னையைப் பார்த்து, “பேயாண்டி தனைக்கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்?” என்று கேட்கும் ஒரு பரத நாட்டியப் பாடல் (பதம், சாரங்கா ராகம்) உண்டு. அதற்கான விடையை இதுவரை யாருக்கும் நம் அன்னை சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை- அவருக்கே விடை தெரியுமா என்பதே சந்தேகம்! சரி, ஏதோ குருட்டுக் காதலின் பிடியில் சிக்கி, மையல் கோண்டு மணமும் புரிந்தாயிற்று. எனவே அதை விடுங்கள். திருமணத்திற்குப் பின் நடந்த கதையைப் பாருங்கள்.

முந்திய அம்மானைப் பாடல்களில் நாம் கண்டவாறு, தாம் தோன்றிய நாள் தொட்டு, கையில் மண்டையோடேந்தி, கிழட்டு மாட்டின் மீதேறி ஊரெங்கும் இரந்துண்ணும் ஏழையாகத் திரிந்த சிவபெருமானுக்கு, உலகிலேயே உயர்ந்த மலைக்கு அதிபரும், அளவற்ற செல்வமுடையவர்

ஆனவருமான ஹிமவானின் ஒரே புத்திரியான பார்வதியை மணந்ததில் பரம குஷி! தனக்கென ஒரு தனி இருப்பிடம், ஒரு குடிசை கூட இல்லாமல், மாடே வீடென்று கதியாகத் திரிந்த கதைக்கு (-சிலசமயம் ரிஷபத்தை விட்டிறங்கி ஒரு ஆலமரத்தடியைக் குடிலாகக் கொள்வதுமுண்டு-) ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்து, இனிமேல் ஜாலியாக மாமனார் வீட்டில் மலைவாசியாகப் பூத கணங்களோடு நிரந்தரமாகக் குடியிருக்கலாம் என்ற நினைப்பில் அவரது சந்தோஷம் குடுமியை, அதாகப்பட்டது, சடையைப் பிய்த்துக் கொண்டு போக முயன்றது (கங்கையும் திங்களுமாகச் சடையை இறுகப்பிடித்து நிறுத்தி வைத்ததாகக் கேள்வி!). இந்த மாதிரியான இண்டர்னல் மேட்டரைஎல்லாம் தவிர்த்து, ’பெர்ம்மனன்ட்இமயமலை வாசியாக ஆன பெம்மான் பற்றிப் பெருமையாகச் சொல்லியவாறே அம்மானை ஆட்டத்தைத் தொடங்குகிறாள் சமத்காரவல்லி (ஆம்,அதுதான் நம் அதி புத்திசாலியான முதல் பெண்ணின் பெயர்).

பெண்ணெடுத்த வீட்டினின்றும் பேர்ந்திடஓர் போக்கின்றித்

தண்பனிசூழ் மாமலையில் தானமர்ந்தார் அம்மானை!

பேர்ந்திட ஓர் போக்கின்றிஎன்ற இடத்தைச் சொல்லும்போது, சிவ பெருமானுக்குத் தம் மனையாளை விட்டுப் பிரிய மனமில்லாததால் அவர் இமயமலையிலேயே தங்கி விட்டார் என்று அர்த்தம் தொனிக்கும்படி அழகாகப் பாடிவிட்டு நிறுத்தினாள் சமத்காரவல்லி.

இதைக் கேட்டுச் சும்மா இருப்பாளா சூரவல்லி? (- இரண்டாவது அம்மானைப் பெண்ணின் நாமதேயம் இது). தன் மூளையைக் கிண்டி, ஒரு கிண்டல் பொதிந்த கேள்வியைச் சமத்காரவல்லியின் முன் போட்டாள். எப்போது என்கிறீர்கள் சமத்காரவல்லிப் பெண் அம்மானைக் காய்களை மேலே தூக்கிப் போட்டு அவற்றின் மேல் முழுக்கவனம் செலுத்தியவாறு இருக்கும் நேரம் பார்த்து! அது என்ன கேள்வி என்பதற்கு முன் சூரவல்லியின் உட்கிடக்கையை நோக்குவோம்.  (உட்கிடக்கையை வெளியிடக் கூடாது ஆகையால் வளைவுக் குறிகளுக்குள் தருகிறேன்: என்ன இருந்தாலும், நம் உமையம்மைக்கு ஈடாக ஒரு பெண்ணையும் சொல்ல முடியாது தான். எந்தப் பெண் கல்யாணமாகி யுகங்கள் ஆனபின்னும் ஒரு தடவையாவது, தன் அகமுடையானை அவரது வீட்டைக் காட்டித் தருமாறு கேட்காமல் இருப்பாள் சொல்லுங்கள். சங்கரியின் இந்த அற்புதமான குணம் சிவனுக்கு மிகப் பிடித்த ஒன்று. உண்மையில், அவரது மானத்தை வானத்தில் பறக்க விடாமல் செய்த அரிய குணமல்லவா இது? உமையாள்மட்டும் புக்ககத்திற்கு அழைத்துச் செல்லக் கேட்டிருந்தால், ஆலமரத்தடியையோ, மாட்டின் முதுகையோ காட்ட வேண்டிய நிர்ப்பந்தம், அதனால் விளையும் அவமானம் எல்லாம்... ஐயோ! நினைக்கவே பயமாயிருக்கிறது. ஆக, சமத்காரவல்லியின் கதாநாயகன், இமயத்தின் உச்சியில், பனியே மலையாக ஆனதோ என்னுமளவிற்குக் குவிந்திருக்கும் பனிக்கட்டிகள் நடுவே, உடலை வெட்டும் குளிர்காற்று அடிப்பதையும் பொறுத்துக் கொண்டு இருப்பது தனது ஏழ்மையின் காரணமாய் விளைந்த வீடில்லாமையினால் அல்லவா? (இதை எழுதும்போது என் படிப்பறை ஜன்னல் வழியாக, வீட்டின் முன் குவிந்திருக்கும் பனிக்குன்றும், கானடாக் குளிர்காற்றில் நடுங்கியவாறு நடக்கும் ஆட்களும் கண்ணில் படுகிறார்கள்!). இதை நாசூக்காகச் சமத்காரவல்லியிடம் சுட்டுவோம், சுட்டிச் சுடுவோம்..). இப்போது கேள்விக்கணை வருகிறது:

ஆமாம், உங்கள் சிவனார் இப்படிக் குளிர்ந்த பனி சூழ்ந்த மலையிலே, பேருக்கு ஒரு புலியோ யானையோ எதனுடையதோ தோலைப் போர்த்திக் கொண்டு நிரந்தரமாக அமர்ந்திருந்தால், உலகத்திற்கே தலைவரான அவரது உடம்பு குளிரில் வெட வெடஎன்று ஆடாதோ?”

தண்பனிசூழ் மாமலையில் தானமரு மேயாயின்

அண்ணலுடல் தான்குளிரில் ஆடாதோ அம்மானை?
 
இந்த மாதிரியான ஒரு கேள்விவரும் என்று முன்பே ஊகித்திருந்த நம் சமத்காரவல்லி, ஒரு கண்சிமிட்டுக் கூட இல்லாமல் அதற்கு அதிரடிப் பதிலளிக்கிறாள்:

ஆடல் அவர்தொழிலாய் ஆனதுவே அம்மானை!

அவர் உடல் ஆடுவது பற்றித்தானே அக்கறையாய் விசாரிக்கிறாய்? நீ கவலையே படவேண்டாம்! எப்போது பார்த்தாலும் தா, தை என்று குதித்துக் கூத்தாடி மகிழும் எங்கள் பரமேட்டிக்கு, ஆடுவதையே தொழிலாகக் கொண்ட என் அம்மானை நாயகனுக்கு, இந்தக் குளிரில் உடம்பு சற்று ஆடுவது ஒரு பொருட்டாகுமோ? (அவள் மேலும் சொல்ல நினைத்துச் சொல்லாமல் விட்டது: அதனால், நீ பாட்டுக்கு சிவனைப் பற்றி நான் சொல்வது பற்றி யெல்லாம் நன்றாக உள்வாங்கிக் கொண்டு, இம்மாதிரியான அசட்டுத்தனமான கேள்விகளை எல்லாம், இதுவரை நீ பிடித்துள்ள ஓரிரண்டு காய்களுடன் தூக்கியெறிந்துவிடு!”). பாவம், சூரவல்லி! அவளது தொங்கிய முகத்தின் பாவத்தை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

முழுப் பாடல்:

பெண்ணெடுத்த வீட்டினின்றும் பேர்ந்திடஓர் போக்கின்றித்

தண்பனிசூழ் மாமலையில் தானமர்ந்தார் அம்மானை

தண்பனிசூழ் மாமலையில் தானமரு மேயாயின்

அண்ணலுடல் தான்குளிரில் ஆடாதோ அம்மானை?

..ஆடல் அவர்தொழிலாய் ஆனதுவே அம்மானை.  

தில்லையில் இடது காலைத் தூக்கியும் மதுரையில் வலது காலைத் தூக்கியும், இன்னும் ஆயிரக்கணக்கான ஆலயங்களில் ஆனந்த நடனம் ஆடியும் அன்பரைப் புரக்கும் எம்பிரான் நம் உள்ள மன்றங்களிலும் ஆடுமாறு, ஆடிக்கொண்டே இருக்குமாறு வேண்டிக்கொண்டு,

அனந்த்

24-3-2010

2010/3/18 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Mar 24, 2010, 11:42:58 PM3/24/10
to santhav...@googlegroups.com
அட்டகாசம் நடராசரே!,
பலே! உம் கருத்து என்னை நன்றாக சிந்திக்கத் தூண்டியது.வாழ்க..
 ஆயின் நொண்டிநடம் என்று இட்டிருக்கலாமே.. ஏன் நொண்டுநடம் என இட்டீர் ..அறியலாமா?.. டு.. என்பதற்கு அந்த அர்த்தம் வருகின்றதா என வேட்டைக்காரரும், சிவா வும் பதில் சொல்ல வேண்டுகிறேன். நன்றி.
 யோகியார்

2010/3/19 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

OAGAI NATARAJAN

unread,
Mar 29, 2010, 2:11:06 PM3/29/10
to santhav...@googlegroups.com
கைலாசத்தின் குளிரால் தன்மேனி ஆடிய ஆட்டத்தால் அஃதே தொழிலாகி காசினையை ஆட்டிவைக்கிறார். கற்பனை அற்புதம்.
 
என் பாடல்:
 
ஆடலதால் தில்லையிலே ஆடவராய் தாமுயர்தார்
வீடதனால் ஆலவாயில் விளையாடல் அம்மானை!
வீடதனால் ஆலவாயில் விளையாடல் ஆமாயின்
பீடதனை மதுரையிலே ஏன்விட்டார் அம்மானை?
கூடலதன் பெயரென்ற குறிப்பறிவாய் அம்மானை!
 
(1. ஆண்மகனாராய் தில்லையிலே வெற்றிகொண்டவர் தாம் பெண் கொண்ட வீடான மதுரையில்(ஆலவாய்) திருவிளையாடல்கள் செய்தார்.
2. ஏன் மதுரையிலே வெற்றிகொள்ளும் பெருமையை விட்டுவிட்டார்?
3. மதுரைக்கு கூடல் என்ற பெயர் இருப்பதை குறிப்பாக உணர்ந்துகொள்யாக!)
 
ஓகை நடராஜன்.

2010/3/25 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com

OAGAI NATARAJAN

unread,
Mar 29, 2010, 2:15:15 PM3/29/10
to santhav...@googlegroups.com

2010/3/25 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

அட்டகாசம் நடராசரே!,
பலே! உம் கருத்து என்னை நன்றாக சிந்திக்கத் தூண்டியது.வாழ்க..
 ஆயின் நொண்டிநடம் என்று இட்டிருக்கலாமே.. ஏன் நொண்டுநடம் என இட்டீர் ..அறியலாமா?.. டு.. என்பதற்கு அந்த அர்த்தம் வருகின்றதா என வேட்டைக்காரரும், சிவா வும் பதில் சொல்ல வேண்டுகிறேன். நன்றி.
 யோகியார்

யோகியார் அவர்களே,
 
நொண்டிநடமென்றால் அது வேற்றுமைத் தொகை அல்லது இறந்தகாலம் காட்டுகிறது. ஆனால் நொண்டுநடம் முக்காலம் காட்டும் வினைத்தொகை அல்லவா!
 
ஓகை நடராஜன்.

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 2, 2010, 9:56:48 PM5/2/10
to santhav...@googlegroups.com

5. <> ஓட்டைக் கையேந்தி...<>

நம் சிவபெருமான் படும் கஷ்டங்களை அம்மானைப் பெண்கள் பாடுவதைக் காணும்போது, “தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்தத்  தாழ்வெல்லாம் வருமோ ஐயா?” என்று கோபாலகிருஷ்ண பாரதியார் தமது பாடலில் வினவியிருப்பது போல (இசை: என்.சி. வசந்தகோகிலம்  http://www.musicindiaonline.com/s), நாமும் அவரைக் கேட்க வேணும் போலத் தோன்றுகிறது. பாவம், சற்று முன் தான் நம்மவர் கிழமாட்டின்  மீதமர்ந்து ஊரெங்கும் இரந்துண்பதைப் பற்றி எவ்வாறு அம்மானைப் பெண்டிர் பேசினார்கள் என்பதைப் பார்த்தோம். அந்த இரு பெண்களில்  முதலாமவள்
(-அவள்தான் நம் சமத்காரவல்லி-) எப்படிச் சிவபெருமானை இரண்டாமவளிடம் விட்டுக் கொடுக்காமல் சமாளித்து விடையளித்து  வருகிறாள் என்பதையும் பார்த்தோம்.

இப்போது சமத்காரவல்லி, வேண்டுமென்றே இறைவன் இரந்துண்பதை மீண்டும் பாடலில் கொணர்ந்து, எவ்வாறு இரண்டாமவளை வசமாகத் தன்  வலையில் மாட்ட வைக்கிறாள் என்பதை கீழே தரப்போகும் அம்மானைப் பாட்டில் நாம் கண்டு களிக்கலாம். இந்தப் பாடலில் வரும் நம் ஐயன் ஒரு  காட்டாளாகக் காட்சி தருகிறான்:

காட்டானைத் தோல்உடுத்திக் காட்டுவெண் நீறணிந்து..

என்று துவங்குகிறது சமத்காரவல்லியின் அம்மானைப் பாட்டின் முதலடி. அதில், ஒரு முரட்டுத்தனமான காட்டானையைச் சிவபெருமான் மீது தாருக  வனத்து இருடிகள் ஏவி விட, அவர் அதன் தோலை உரித்து ஆடையாகத் தரித்துக் கொண்டார் என்ற திரிபுர சம்ஹாரக் கதையை நமக்கு  நினைவுறுத்துகிறாள். அத்தோடு, நள்ளிரவில் சுடுகாட்டில் பேய்கள் மத்தியில் உடல் முழுவதும் வெள்ளை வெளேரென்று திருநீறணிந்து ச்மசான  நடனம்ஆடும் ஐயனின் அழகையும் சொல்லி, மேலே தொடர்கிறாள்:

காட்டானைத் தோலுடுத்துக் காட்டுவெண் ணீறணிந்து

ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கும் அம்மானை

இப்படி ஆடையலங்காரம் செய்து கொண்டு எங்கள் பெருமானார் தாம் பிரமனின் கர்வத்தை அடக்கியவர் என்பதைக் காட்டப் பிரமனின்  தலையையே பிச்சையெடுக்கும் ஓடாகக் கொண்டு இரந்து, தமது உணவைத் தேடிக்கொள்வார்என்று நிறுத்துகிறாள், தான் இதுவரை வென்ற  அம்மானைக் காய்களை எண்ணுவதற்கான இடைவெளியை உண்டாக்கிக் கொண்ட சமத்காரவல்லி. 

இதுவரை நான் எழுதியதை வைத்து நீங்கள் இரண்டாமவளான சூரவல்லி, சமத்காரவல்லி அளவிற்கு அறிவுக் கூர்மை இல்லாதவள் என்று  நினைத்திருக்கும் பக்ஷத்தில், அந்தக் கருத்தை இந்த க்ஷணமே நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது உண்டாகிறது. எப்படி  என்று தெரிய பாட்டின் மூன்றாம் அடியில் அவள் கேட்கும் கேள்வியைப் பாருங்கள்:

ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கு மேயாயின்

வாட்டமுற்றுத் திருமேனி வாடாதோ அம்மானை?”

இதை நன்றாக ஆழ்ந்து படித்திருந்தீர்களானால், ”ஓட்டைக் கை ஏந்திஎன்ற சொல் தொடரை, சூரவல்லி ஓட்டைக்கை ஏந்திஎன்று தன்  சவுகரியத்திற்கு மாற்றிக் கொள்ளப் போகிறாள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஐயையோ! என்ன பரிதாபம்! நீ பெருமையாகச் சொல்லிக்  கொள்ளப் பார்க்கும் சிவனுடைய கையை ஓட்டைக் கை என்று சொல்லிவிட்டாயேடீ? பாவம், தாம் கஷ்டப் பட்டு எடுத்த பிச்சை உணவைத் தம்  கையால் வாயிலிடப் போகும்போது அது ஓட்டைக் கையாக இருந்து உண்டியெல்லாம் அதன் வழியே கீழே தரையில் விழுந்து வீணாகிப் போமே?  அப்படியானால், அவரது பொன்னான திருமேனி என்னாவது? வாடி வதங்கி வற்றலாய்ப் போகாதோ? என்ன கொடுமையடி இது? “ என்று நீட்டி  முழக்கிக் கூறிக்கொண்டு கூறிய சூரவல்லியின் கண்களில், தோழியை மடக்கி விட்ட கர்வம் பளபளத்ததை அவள் கண்களை நேரடியாகப்  பார்க்காமலே உணர்ந்து கொண்டாள் சமத்காரவல்லி. ஒருகணம் சிவனை மனத்தில் தியானம் செய்து கொண்ட அவள் அடுத்த கணமே தனக்கு  உதித்த விடையைப் பாடலின் இறுதி அடியாக அளிக்கிறாள்:
 
பாட்டிதரும் பிட்டுண்டு பசியாறும் அம்மானை!

அடியே, சூரவல்லி! உன் போலிப் பரிதாபத்தைக் குப்பையில் போடு! எங்கள் சிவபெருமான் அன்னை, தந்தை இல்லாதவரே ஆனாலும் அவருக்குப்  பூவுலகில்- ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரையில்- ஒரு பாட்டி இருக்கிறாள் தெரியுமா? அவள் பெயர் வந்தி. (என்ன வரப்போகிறது  என்பதை ஊகிக்கத் தொடங்கிய சூரவல்லியின் முகம் மேல்ல வெளிற ஆரம்பிக்கிறது). கரை பேர்த்து ஓடிக்கொண்டிருந்த வைகை நதியின்  வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, நீண்ட மண்சுவர் எழுப்ப உத்தரவிட்ட பாண்டிய மன்னனின் கட்டளைப்படித் தன் பங்கிற்கு மண்ணைக்  கொட்ட இயலாமல் இருந்த வயதான வந்திப் பாட்டிக்கு, அருள் வடிவினனாகிய ஆலவாய் இறைவன் தானே கூலியாளாகச் சேர்ந்து அவள் அளித்த  பிட்டை வாரி வாரி உண்டது உனக்குத் தெரியுமா? அதனால், எங்கள் ஐயன் இரந்துண்ணுவது போல வேடம் போடுகிறானே அன்றி, உண்மையில்  கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்து உண்ணும் பெருந்தகை என்பதை நினைவில் வைத்துக் கொள்என்று கூறிய சமத்காரவல்லி, அத்தோடு  ஆட்டத்தையும் தன் பக்கம் வெற்றியாக்கி, அடியார் வினைதீர்க்கும் அருமருந்தைத் துதித்தவாறு தன் வீட்டை நோக்கி நடக்கிறாள். அவள் வீடு  சேருமுன் நாம் வெல்லப் பிட்டைச் சுவைப்பது போல முழுப் பாடலையும் படித்துச் சுவைப்போம்:

காட்டானைத் தோலுடுத்துக் காட்டுவெண் ணீறணிந்து

ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கும் அம்மானை;

ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கு மேயாயின்

வாட்டமுற்றுத் திருமேனி வாடாதோ அம்மானை?

பாட்டிதரும் பிட்டுண்டு பசியாறும் அம்மானை!

..அனந்த்

2-5-2010

பின் குறிப்பு:

1. வந்திப்பாட்டி தான் சிவனை வேலைக்கு அமர்த்திக் கூலி கொடுத்த ஒரே எம்ப்ளாயர்என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும் (கூலி

கொடுக்காமல் வேலை வாங்க, பார்வதி தேவி, சுந்தர மூர்த்தி நாயனார் என்று பலர் இருப்பது நமக்க்குத் தெரிந்ததே).

2. சிவனுக்குத் தாயான பெச்சமாதேவி அம்மையார் (அவ்வம்மை”) பற்றித் தெரிந்து கொள்ள: http://www.tamilonline.com/thendral/content.aspx?

id=54&cid=8 காணவும். (Register freely and Log in to see the full story).

2010/3/24 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

4. <> ஆடல் காணீரோ <>

பார்வதி அன்னையைப் பார்த்து, “பேயாண்டி தனைக்கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்?” என்று கேட்கும் ஒரு பரத நாட்டியப் பாடல் (பதம், சாரங்கா ராகம்) உண்டு. அதற்கான விடையை இதுவரை யாருக்கும் நம் அன்னை சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை- அவருக்கே விடை தெரியுமா என்பதே சந்தேகம்! சரி, ஏதோ குருட்டுக் காதலின் பிடியில் சிக்கி, மையல் கோண்டு மணமும் புரிந்தாயிற்று. எனவே அதை விடுங்கள். திருமணத்திற்குப் பின் நடந்த கதையைப் பாருங்கள்.

முந்திய அம்மானைப் பாடல்களில் நாம் கண்டவாறு, தாம் தோன்றிய நாள் தொட்டு, கையில் மண்டையோடேந்தி, கிழட்டு மாட்டின் மீதேறி ஊரெங்கும் இரந்துண்ணும் ஏழையாகத் திரிந்த சிவபெருமானுக்கு, உலகிலேயே உயர்ந்த மலைக்கு அதிபரும், அளவற்ற செல்வமுடையவர்

ஆனவருமான ஹிமவானின் ஒரே புத்திரியான பார்வதியை மணந்ததில் பரம குஷி! தனக்கென ஒரு தனி இருப்பிடம், ஒரு குடிசை கூட இல்லாமல், மாடே வீடென்று கதியாகத் திரிந்த கதைக்கு (-சிலசமயம் ரிஷபத்தை விட்டிறங்கி ஒரு ஆலமரத்தடியைக் குடிலாகக் கொள்வதுமுண்டு-) ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்து, இனிமேல் ஜாலியாக மாமனார் வீட்டில் மலைவாசியாகப் பூத கணங்களோடு நிரந்தரமாகக் குடியிருக்கலாம் என்ற நினைப்பில் அவரது சந்தோஷம் குடுமியை, அதாகப்பட்டது, சடையைப் பிய்த்துக் கொண்டு போக முயன்றது (கங்கையும் திங்களுமாகச் சடையை இறுகப்பிடித்து நிறுத்தி வைத்ததாகக் கேள்வி!). இந்த மாதிரியான இண்டர்னல் மேட்டரைஎல்லாம் தவிர்த்து, ’பெர்ம்மனன்ட்இமயமலை வாசியாக ஆன பெம்மான் பற்றிப் பெருமையாகச் சொல்லியவாறே அம்மானை ஆட்டத்தைத் தொடங்குகிறாள் சமத்காரவல்லி (ஆம்,அதுதான் நம் அதி புத்திசாலியான முதல் பெண்ணின் பெயர்).

பெண்ணெடுத்த வீட்டினின்றும் பேர்ந்திடஓர் போக்கின்றித்

தண்பனிசூழ் மாமலையில் தானமர்ந்தார் அம்மானை!

பேர்ந்திட ஓர் போக்கின்றிஎன்ற இடத்தைச் சொல்லும்போது, சிவ பெருமானுக்குத் தம் மனையாளை விட்டுப் பிரிய மனமில்லாததால் அவர் இமயமலையிலேயே தங்கி விட்டார் என்று அர்த்தம் தொனிக்கும்படி அழகாகப் பாடிவிட்டு நிறுத்தினாள் சமத்காரவல்லி.

இதைக் கேட்டுச் சும்மா இருப்பாளா சூரவல்லி? (- இரண்டாவது அம்மானைப் பெண்ணின் நாமதேயம் இது). தன் மூளையைக் கிண்டி, ஒரு கிண்டல் பொதிந்த கேள்வியைச் சமத்காரவல்லியின் முன் போட்டாள். எப்போது என்கிறீர்கள் சமத்காரவல்லிப் பெண் அம்மானைக் காய்களை மேலே தூக்கிப் போட்டு அவற்றின் மேல் முழுக்கவனம் செலுத்தியவாறு இருக்கும் நேரம் பார்த்து! அது என்ன கேள்வி என்பதற்கு முன் சூரவல்லியின் உட்கிடக்கையை நோக்குவோம்.  (உட்கிடக்கையை வெளியிடக் கூடாது ஆகையால் வளைவுக் குறிகளுக்குள் தருகிறேன்: என்ன இருந்தாலும், நம் உமையம்மைக்கு ஈடாக ஒரு பெண்ணையும் சொல்ல முடியாது தான். எந்தப் பெண் கல்யாணமாகி யுகங்கள் ஆனபின்னும் ஒரு தடவையாவது, தன் அகமுடையானை அவரது வீட்டைக் காட்டித் தருமாறு கேட்காமல் இருப்பாள் சொல்லுங்கள். சங்கரியின் இந்த அற்புதமான குணம் சிவனுக்கு மிகப் பிடித்த ஒன்று. உண்மையில், அவரது மானத்தை வானத்தில் பறக்க விடாமல் செய்த அரிய குணமல்லவா இது? உமையாள்மட்டும் புக்ககத்திற்கு அழைத்துச் செல்லக் கேட்டிருந்தால், ஆலமரத்தடியையோ, மாட்டின் முதுகையோ காட்ட வேண்டிய நிர்ப்பந்தம், அதனால் விளையும் அவமானம் எல்லாம்... ஐயோ! நினைக்கவே பயமாயிருக்கிறது. ஆக, சமத்காரவல்லியின் கதாநாயகன், இமயத்தின் உச்சியில், பனியே மலையாக ஆனதோ என்னுமளவிற்குக் குவிந்திருக்கும் பனிக்கட்டிகள் நடுவே, உடலை வெட்டும் குளிர்காற்று அடிப்பதையும் பொறுத்துக் கொண்டு இருப்பது தனது ஏழ்மையின் காரணமாய் விளைந்த வீடில்லாமையினால் அல்லவா? (இதை எழுதும்போது என் படிப்பறை ஜன்னல் வழியாக, வீட்டின் முன் குவிந்திருக்கும் பனிக்குன்றும், கானடாக் குளிர்காற்றில் நடுங்கியவாறு நடக்கும் ஆட்களும் கண்ணில் படுகிறார்கள்!). இதை நாசூக்காகச் சமத்காரவல்லியிடம் சுட்டுவோம், சுட்டிச் சுடுவோம்..). இப்போது கேள்விக்கணை வருகிறது:

ஆமாம், உங்கள் சிவனார் இப்படிக் குளிர்ந்த பனி சூழ்ந்த மலையிலே, பேருக்கு ஒரு புலியோ யானையோ எதனுடையதோ தோலைப் போர்த்திக் கொண்டு நிரந்தரமாக அமர்ந்திருந்தால், உலகத்திற்கே தலைவரான அவரது உடம்பு குளிரில் வெட வெடஎன்று ஆடாதோ?”

தண்பனிசூழ் மாமலையில் தானமரு மேயாயின்

அண்ணலுடல் தான்குளிரில் ஆடாதோ அம்மானை?
 
இந்த மாதிரியான ஒரு கேள்விவரும் என்று முன்பே ஊகித்திருந்த நம் சமத்காரவல்லி, ஒரு கண்சிமிட்டுக் கூட இல்லாமல் அதற்கு அதிரடிப் பதிலளிக்கிறாள்:

ஆடல் அவர்தொழிலாய் ஆனதுவே அம்மானை!

அவர் உடல் ஆடுவது பற்றித்தானே அக்கறையாய் விசாரிக்கிறாய்? நீ கவலையே படவேண்டாம்! எப்போது பார்த்தாலும் தா, தை என்று குதித்துக் கூத்தாடி மகிழும் எங்கள் பரமேட்டிக்கு, ஆடுவதையே தொழிலாகக் கொண்ட என் அம்மானை நாயகனுக்கு, இந்தக் குளிரில் உடம்பு சற்று ஆடுவது ஒரு பொருட்டாகுமோ? (அவள் மேலும் சொல்ல நினைத்துச் சொல்லாமல் விட்டது: அதனால், நீ பாட்டுக்கு சிவனைப் பற்றி நான் சொல்வது பற்றி யெல்லாம் நன்றாக உள்வாங்கிக் கொண்டு, இம்மாதிரியான அசட்டுத்தனமான கேள்விகளை எல்லாம், இதுவரை நீ பிடித்துள்ள ஓரிரண்டு காய்களுடன் தூக்கியெறிந்துவிடு!”). பாவம், சூரவல்லி! அவளது தொங்கிய முகத்தின் பாவத்தை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

முழுப் பாடல்:

பெண்ணெடுத்த வீட்டினின்றும் பேர்ந்திடஓர் போக்கின்றித்

தண்பனிசூழ் மாமலையில் தானமர்ந்தார் அம்மானை

தண்பனிசூழ் மாமலையில் தானமரு மேயாயின்

அண்ணலுடல் தான்குளிரில் ஆடாதோ அம்மானை?

..ஆடல் அவர்தொழிலாய் ஆனதுவே அம்மானை.  

தில்லையில் இடது காலைத் தூக்கியும் மதுரையில் வலது காலைத் தூக்கியும், இன்னும் ஆயிரக்கணக்கான ஆலயங்களில் ஆனந்த நடனம் ஆடியும் அன்பரைப் புரக்கும் எம்பிரான் நம் உள்ள மன்றங்களிலும் ஆடுமாறு, ஆடிக்கொண்டே இருக்குமாறு வேண்டிக்கொண்டு,

அனந்த்

24-3-2010

thangamani

unread,
May 3, 2010, 8:00:43 AM5/3/10
to சந்தவசந்தம்
ஆகா!அருமை!இரசித்தேன்!
சூரவல்லி,சமத்காரவல்லி இருவரும்
ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை!சிறப்பு!
நன்றி!வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.

On May 2, 6:56 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> 5. *<> **ஓட்டைக் கையேந்தி...**<**>*...

>
> நம் சிவபெருமான் படும் கஷ்டங்களை அம்மானைப் பெண்கள் பாடுவதைக் காணும்போது, “தந்தை
> தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்தத்  தாழ்வெல்லாம் வருமோ ஐயா?” என்று
> கோபாலகிருஷ்ண பாரதியார் தமது பாடலில் வினவியிருப்பது போல (இசை: என்.சி.
> வசந்தகோகிலம்  http://www.musicindiaonline.com/s), நாமும் அவரைக் கேட்க வேணும்
> போலத் தோன்றுகிறது. பாவம், சற்று முன் தான் நம்மவர் கிழமாட்டின்  மீதமர்ந்து
> ஊரெங்கும் இரந்துண்பதைப் பற்றி எவ்வாறு அம்மானைப் பெண்டிர் பேசினார்கள்
> என்பதைப் பார்த்தோம். அந்த இரு பெண்களில்  முதலாமவள்
> (-அவள்தான் நம் சமத்காரவல்லி-) எப்படிச் சிவபெருமானை இரண்டாமவளிடம் விட்டுக்
> கொடுக்காமல் சமாளித்து விடையளித்து  வருகிறாள் என்பதையும் பார்த்தோம்.
>
> இப்போது சமத்காரவல்லி, வேண்டுமென்றே இறைவன் இரந்துண்பதை மீண்டும் பாடலில்
> கொணர்ந்து, எவ்வாறு இரண்டாமவளை வசமாகத் தன்  வலையில் மாட்ட வைக்கிறாள் என்பதை
> கீழே தரப்போகும் அம்மானைப் பாட்டில் நாம் கண்டு களிக்கலாம். இந்தப் பாடலில்
> வரும் நம் ஐயன் ஒரு  ’காட்டாளாக’க் காட்சி தருகிறான்:
>

> *”காட்டானைத் தோல்உடுத்திக் காட்டுவெண் நீறணிந்து..”*

>
> என்று துவங்குகிறது சமத்காரவல்லியின் அம்மானைப் பாட்டின் முதலடி. அதில், ஒரு
> முரட்டுத்தனமான காட்டானையைச் சிவபெருமான் மீது தாருக  வனத்து இருடிகள் ஏவி விட,
> அவர் அதன் தோலை உரித்து ஆடையாகத் தரித்துக் கொண்டார் என்ற திரிபுர சம்ஹாரக்
> கதையை நமக்கு  நினைவுறுத்துகிறாள். அத்தோடு, நள்ளிரவில் சுடுகாட்டில் பேய்கள்
> மத்தியில் உடல் முழுவதும் வெள்ளை வெளேரென்று திருநீறணிந்து ’ச்மசான  நடனம்’ ஆடும்
> ஐயனின் அழகையும் சொல்லி, மேலே தொடர்கிறாள்:
>

> *”காட்டானைத் தோலுடுத்துக் காட்டுவெண் ணீறணிந்து*
>
> *ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கும் அம்மானை”*

>
> ”இப்படி ஆடையலங்காரம் செய்து கொண்டு எங்கள் பெருமானார் தாம் பிரமனின் கர்வத்தை
> அடக்கியவர் என்பதைக் காட்டப் பிரமனின்  தலையையே பிச்சையெடுக்கும் ஓடாகக் கொண்டு
> இரந்து, தமது உணவைத் தேடிக்கொள்வார்” என்று நிறுத்துகிறாள், தான் இதுவரை வென்ற
> அம்மானைக் காய்களை எண்ணுவதற்கான இடைவெளியை உண்டாக்கிக் கொண்ட சமத்காரவல்லி.
>
> இதுவரை நான் எழுதியதை வைத்து நீங்கள் இரண்டாமவளான சூரவல்லி, சமத்காரவல்லி
> அளவிற்கு அறிவுக் கூர்மை இல்லாதவள் என்று  நினைத்திருக்கும் பக்ஷத்தில், அந்தக்
> கருத்தை இந்த க்ஷணமே நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது
> உண்டாகிறது. எப்படி  என்று தெரிய பாட்டின் மூன்றாம் அடியில் அவள் கேட்கும்
> கேள்வியைப் பாருங்கள்:
>

> *”ஓட்டைக்கை ஏந்தி உணவிரக்கு மேயாயின்*
>
> *வாட்டமுற்றுத் திருமேனி வாடாதோ அம்மானை?”*

>
> இதை நன்றாக ஆழ்ந்து படித்திருந்தீர்களானால், ”ஓட்டைக் கை ஏந்தி” என்ற சொல்
> தொடரை, சூரவல்லி “ஓட்டைக்கை ஏந்தி” என்று தன்  சவுகரியத்திற்கு மாற்றிக்
> கொள்ளப் போகிறாள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். “ஐயையோ! என்ன பரிதாபம்!
> நீ பெருமையாகச் சொல்லிக்  கொள்ளப் பார்க்கும் சிவனுடைய கையை ஓட்டைக் கை என்று
> சொல்லிவிட்டாயேடீ? பாவம், தாம் கஷ்டப் பட்டு எடுத்த பிச்சை உணவைத் தம்  கையால்
> வாயிலிடப் போகும்போது அது ஓட்டைக் கையாக இருந்து உண்டியெல்லாம் அதன் வழியே கீழே
> தரையில் விழுந்து வீணாகிப் போமே?  அப்படியானால், அவரது பொன்னான திருமேனி
> என்னாவது? வாடி வதங்கி வற்றலாய்ப் போகாதோ? என்ன கொடுமையடி இது? “ என்று நீட்டி
> முழக்கிக் கூறிக்கொண்டு கூறிய சூரவல்லியின் கண்களில், தோழியை மடக்கி விட்ட
> கர்வம் பளபளத்ததை அவள் கண்களை நேரடியாகப்  பார்க்காமலே உணர்ந்து கொண்டாள்
> சமத்காரவல்லி. ஒருகணம் சிவனை மனத்தில் தியானம் செய்து கொண்ட அவள் அடுத்த கணமே
> தனக்கு  உதித்த விடையைப் பாடலின் இறுதி அடியாக அளிக்கிறாள்:
>

> *“பாட்டிதரும் பிட்டுண்டு பசியாறும் அம்மானை!”*

>
> அடியே, சூரவல்லி! உன் போலிப் பரிதாபத்தைக் குப்பையில் போடு! எங்கள் சிவபெருமான்
> அன்னை, தந்தை இல்லாதவரே ஆனாலும் அவருக்குப்  பூவுலகில்- ஆனைகட்டிப் போரடிக்கும்
> அழகான தென் மதுரையில்- ஒரு பாட்டி இருக்கிறாள் தெரியுமா? அவள் பெயர் வந்தி.
> (என்ன வரப்போகிறது  என்பதை ஊகிக்கத் தொடங்கிய சூரவல்லியின் முகம் மேல்ல வெளிற
> ஆரம்பிக்கிறது). கரை பேர்த்து ஓடிக்கொண்டிருந்த வைகை நதியின்  வெள்ளத்தைக்
> கட்டுப்படுத்துவதற்காக, நீண்ட மண்சுவர் எழுப்ப உத்தரவிட்ட பாண்டிய மன்னனின்
> கட்டளைப்படித் தன் பங்கிற்கு மண்ணைக்  கொட்ட இயலாமல் இருந்த வயதான வந்திப்
> பாட்டிக்கு, அருள் வடிவினனாகிய ஆலவாய் இறைவன் தானே கூலியாளாகச் சேர்ந்து அவள்
>

> read more »

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 7, 2010, 9:11:07 PM5/7/10
to santhav...@googlegroups.com
2010/5/3 thangamani <tvthan...@gmail.com>
ஆகா!அருமை!இரசித்தேன்!
சூரவல்லி,சமத்காரவல்லி இருவரும்
ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை!சிறப்பு!
நன்றி!வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.
------------------
 
6. <> இடம் ஏற்பார் <>

"காலைத் தூக்கி நின்றாடும்என்னும் கோபாலகிருஷ்ண பாரதியர் பாடலை நித்யஸ்ரீ மகாதேவன் பாடுவதைக் கேட்டுகொண்டே (http://www.musicindiaonline.com/p/x/nqv2PrkDN9.As1NMvHdW/) இதை நான் எழுதும்போது, அந்தப் பாடல் நமது அம்மானைப் பெண் சமத்காரவல்லியின் மனத்தில் எப்போதும் ரீங்காரம் செய்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்று என்னை எண்ண வைக்கிறது. ஏனென்று கேட்கிறீர்களா? அவள் தரும் அடுத்த அம்மானைப் பாடலைக் கடைசி வரை கவனித்து ஊன்றிப் பார்த்தால் அதற்கு விடை கிடைக்கும்.
 
முந்தி முந்தி நடந்த, நமக்கு நன்கு பரிச்சயமான ஒரு நிகழ்ச்சியுடன் பாடல் தொடங்குகிறது. பகீரதனின் அடாது மழை பெய்தாலும் விடாது செய்ததவத்தால், கங்கை வானத்திலிருந்து அதிவேகமாகக் கீழிறங்கி வந்து கொண்டிருக்கிறாள். அதே வேகத்தில் அவள் பூமியில் இறங்கினால் பூலோகம் ஒரேயடியாக அமுங்கிப் பாதாள லோகமாக மாறிவிடும் என்று உணர்ந்த பகீரதன் சிவபெருமானை உதவி செய்யும்படி வேண்டுகிறான். (யாரென்ன கேட்டாலும் அலுக்காது உடனே வழங்கும் ஓட்டைக் கையன்என்று நாம் முந்திய பாடலில் தெரிந்துகொண்டபடி) அரனார் உடனே பகீரதனிடம் கவலைப் படாதே, வரச்சொல் அந்த கங்கையை!என்று கூறித் தன் பொன்னிறச் சடையை விரித்து நிற்கிறார். கர்வத்துடன் பூமியை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் வேகவதி சிவபிரானின் சடைக்குள் மாட்டிக் கொண்டு விடுகிறாள். பின்னர் பகீரதனின் அடுத்த வேண்டுகோள்படி கங்கையை அளவான வேகத்துடன் மண்ணுலகிற்குச் செல்லுமாறு சடையைத் தளர்த்துகிறார். இந்த அற்புதமான அருட்செயலைப் பாடலின் துவக்கமாகத் தன் அழகான குரலில் இசைகூட்டிப் பாடுகிறாள் முதலாமவளான சமத்காரவல்லி:

முன்னொருநாள் மண்ணிழிந்து வீழுமொரு மாதினைத்தம்

பொன்சடையில் தாங்கிப் பொதிந்தனர்காண் அம்மானை

பகீரதனுக்கு அருள் பாலிக்கும் வகையில் கங்கையைத் தன் சடையில் தாங்கிக்கொண்டார் நம் பரமேட்டி என்பதுதான் உண்மையில் நடந்தது என்றாலும், ஊர் வாய் சும்மா இருக்குமா? “ஏற்கனவே மணமான ஒருவர் செய்யும் செயலா இது? அதுவும், மகாப் பெரிய இடமான இமயமலை இளவரசியான உமாதேவியை மணந்து அவளை எப்போதும் தன்னோடு இருக்கும்படி உடலில் பாதியைக் கொடுத்தவர், எல்லோரிடமும் இவள்தான் என்னுடைய நற்பாதி (better half) என்று தம்பட்டம் (உடுக்கை) போட்டுக்கொண்டு திரிந்தவர், இப்போது ஒரு பெண்ணை, அவள் பிரம்ம லோகத்திலிருந்து வந்த ஒரு உயர்ந்த நாரீமணி என்று கண்டு மயங்கி, நம்மவர் தலைமேல் வைத்துக் கொண்டு, பொது இடங்களில் கூத்தாடித் திரிகிறாரே? இது என்ன நியாயம்?” என்ற வகையில் நம் அப்பாவிப் பரமசிவனை உலகோர் பேசுவது (சீட்டாட்டத்தில் கிடைக்கும் ஒரு ட்ரம்ப் கார்ட்போல) இரண்டாவது அம்மானைப் பெண்ணான சூரவல்லிகயின் கொக்கிக் கேள்விக்குத் தோதாக அமைகிறது:

பொன்சடையில் தாங்கிப் பொதிந்தனரே யாமாயின்

இன்னொருவள் தன்னைஇடம் ஏற்றதுமேன் அம்மானை?

ஏற்கனவே உமையம்மைக்குத் தன் பொன்னார் மேனியின் இடப்பாகத்தை அன்பு மேலிட்டு விட்டுக் கொடுத்ததை ஊரார், ‘பெண்டாட்டிக்கு இவர் எப்படி இடம் கொடுக்கிறார் பார்த்தாயோஎன்று நீட்டி முழக்கி வம்பு பேசுவதைச் சூரவல்லி கெட்டிக்காரத் தனமாகத் தன் கேள்வியில் நுழைத்து விட்டதை மனத்திற்குள் சற்றுப் பாராட்டி விட்டுத் தனது விடையை ஒருதரம் மனத்தில் சொல்லிச் சரிபார்த்துக் கொண்டு சமத்காரவல்லி பாடலின் பன்ச் லைன்ஆன இறுதியடியைப் பாடுகிறாள்: 

இடமொருகால் ஏற்றும் இயல்புடையார் அம்மானை!

ஆமாமடி, எங்கள் தலைவரான சிவபெருமானுக்கு இடது பக்கம் தான் எப்போதும் உசத்தி. பஞ்சக்ருத்யம் என்னும் ஐந்தொழில் புரியும் அழகைச் சித்தரிக்கும் வண்ணம் தில்லையம்பலத்தில் ஆனந்த நடமாடும் எங்கள் பிரான் எந்தக் காலை உயர்த்திக் காட்டுகிறார் என்று பார்த்திருக்கிறாயே. அது எங்கள் அன்னையான உமாதேவியின் திருப்பாதம் அல்லவோ? அப்பாதம் ஆடும் ஆட்டத்திற்கேற்ப, சிவன் சடையில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கும் கங்கையாள் அங்குமிங்குமாக அலைவதையும் பார்த்திருக்கிறாயே. ஆக, ஐயனை முறையே மணந்து, அவனுடலோடு இணைந்து, அவன் செயல்களைச் சிறக்கச் செய்யும் பார்வதி அன்னையை இடம் ஏற்றது எங்கள் பெருமானின் ஏற்றத்தையே காட்டும்என்று சொன்ன சமத்காரவல்லி பட்என்று தான் பிடித்த அம்மானைக் காய்களைத் தரையில் வைத்து வீட்டிற்குள் செல்லலானாள்.

முழுப்பாடல்:   
 
முன்னொருநாள் மண்ணிழிந்து வீழுமொரு மாதினைத்தம்

பொன்சடையில் தாங்கிப் பொதிந்தனர்காண் அம்மானை

பொன்சடையில் தாங்கிப் பொதிந்தனரே ஆமாயின்

இன்னொருவள் தன்னைஇடம் ஏற்றதுமேன் அம்மானை?

..இடமொருகால் ஏற்றும் இயல்புடையார் அம்மானை!

.. அனந்த்
7-5-2010
குறிப்பு: இது, ‘நம்பிக்கை’ என்னும் இணைய தளத்தில் நான் இட்டதைச் சற்றே மாற்றி அமைத்த வடிவம்.

SUBBAIER RAMASAMI

unread,
May 7, 2010, 10:33:27 PM5/7/10
to santhav...@googlegroups.com

அருமையான அம்மானைப் பாடல். விளக்கமும் எளிமையாக இருக்கிறது.

என்றாலும் இடமொருகால் ஏற்றுவர்  என்பதுதான் இங்கே துருப்புச்சீட்டு மாதிரி. ஒருகால் இடது ஏற்றும் இயல்புடையவர் என்ற காரணத்தினாலே இடப்பாகத்தில் ஏற்றி வைத்துக்கொண்டிருக்கிறார் என்பது இயல்புக்கேற்ப நடக்கும் நிகழ்ச்சியாகக் காட்டுவதுதான் சிறப்பு. அதையும் மீறிப்போய் அது அவரது ஏற்றத்தைக் காட்டுகிறது என்கிறபோது இயல்பின் தன்மை வலிமை இழந்து விடுகிறது பாடலிலே மிகப்பொருத்தமாக இருப்பது உரையிலே சற்றுச் சறுக்கிவிடுவதாக எனக்குத் தோன்றுகிறது

இன்னொருவள்- இன்னொருத்தி-  எது சரி?

இலந்தை

2010/3/13 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
May 8, 2010, 12:43:32 AM5/8/10
to santhav...@googlegroups.com
//

முன்னொருநாள் மண்ணிழிந்து வீழுமொரு மாதினைத்தம்

பொன்சடையில் தாங்கிப் பொதிந்தனர்காண் அம்மானை

பொன்சடையில் தாங்கிப் பொதிந்தனரே ஆமாயின்

இன்னொருவள் தன்னைஇடம் ஏற்றதுமேன் அம்மானை?

..இடமொருகால் ஏற்றும் இயல்புடையார் அம்மானை! //

இனிய பாடல்.

1) 5-ம் அடியைச் சற்று மாற்றினால் இன்னும் தெளிவாகுமோ?
"இடமொருகால் ஏற்றலும் இவர்இயல்பே அம்மானை"

2) பொன்சடை - பொற்சடை - இதைப்பற்றிய இலக்கண விளக்கமும் ஆர்வலர்களுக்குப் பயன் தரலாம்.

அன்புடன்,
வி, சுப்பிரமணியன்

2010/5/7 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

6. <> இடம் ஏற்பார் <>

"காலைத் தூக்கி நின்றாடும்என்னும் கோபாலகிருஷ்ண பாரதியர் பாடலை நித்யஸ்ரீ மகாதேவன் பாடுவதைக் கேட்டுகொண்டே (http://www.musicindiaonline.com/p/x/nqv2PrkDN9.As1NMvHdW/) இதை நான் எழுதும்போது, அந்தப் பாடல் நமது அம்மானைப் பெண் சமத்காரவல்லியின் மனத்தில் எப்போதும் ரீங்காரம் செய்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்று என்னை எண்ண வைக்கிறது. ஏனென்று கேட்கிறீர்களா? அவள் தரும் அடுத்த அம்மானைப் பாடலைக் கடைசி வரை கவனித்து ஊன்றிப் பார்த்தால் அதற்கு விடை கிடைக்கும்.
 
--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 8, 2010, 3:05:46 PM5/8/10
to santhav...@googlegroups.com

இலந்தை, சிவசிவா,

நல்ல கருத்து. நன்றி. இது போல, முன்பிட்ட பாடல்கள் பற்றிக் கருத்து இருப்பின் கூறவும். இத்தகைய பின்னூட்டங்கள் எழுதுபவர்க்கு மிக்கப் பயன்  தருவன. சந்தவசந்ததில் இதுபோன்ற constructive suggestions இப்போதுள்ளதை விட அதிகமாக வர வேண்டும்.

இடது பக்கக் கால் உமைக்குச் சேர்ந்தது என்ற காரணத்தால் அதைத் தரையில் படாமல் தூக்கி (ஏற்றி) வைக்கிறார் என்ற பொருள் வருமாறு உரையில் எழுத முயன்றேன். ஆனால் அது பாட்டில் காணும் அடிக்கு ஒத்ததாக இல்லை என்று நீங்கள் சொன்னது சரியே.  அந்த இடத்தை மாற்றி அமைக்கிறேன். 

இன்னொருத்தி என்பதே சரி. (அமுத சுரபியில் திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்று: http://sify.com/cities/mumbai/fullstory.php?id=13816945)

பொன்சடை/பொற்சடை பற்றி முன்னமே சிவசிவா கேள்வி எழுப்பியிருந்தார். ”மின் (மின்னல், ஒளி), பின் (பெருமை வழி), பன் (ஒருவகைப் புல்), கன் (தராசுத் தட்டு) என்னும் சொற்களின் பின் வல்லின மெய்வரின் ஈற்று னகரம் றகரமாய்த் திரியாது’; ”தன், நின் இவற்றின் பின் வல்லினம் வரின், னகரம் திரிந்தும் திரியாமலும் புணரலாம் (நின்பெருமை, தன்புகழ்ச்சி, தற்புகழ்ச்சி..)” என்று நூலில் காண்கிறது. இவை பொற்சடைக்குச் சரியாகா எனத் தோன்றுகிறது. அதனால் அந்த இடத்தையும் மாற்றுகிறேன்.

அனந்த்      

2010/5/8 Siva Siva <naya...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
May 10, 2010, 1:11:00 AM5/10/10
to santhav...@googlegroups.com
ஆகா.. மாற்றுக்கருத்துக்களையும் ஜீரணித்து வரவேற்கும் என்றன் அன்பு அநந்த் வாழ்க!
யோகியார்

2010/5/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

--
யோகியார். வேதம்.(Yogiyar vedham)
Anaivarum vaazhga vaLamudan!--..
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600041
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-41(போன் 64565979)-
*****************************

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 14, 2010, 10:33:29 PM5/14/10
to santhav...@googlegroups.com

இடம் ஏற்பார்என்னும் தலைப்பில் இங்கிட்ட அம்மானைப் பாடலுக்கு இலந்தையார், சிவசிவா தந்த பின்னூட்டத்தின் விளைவாகவும், சிலேடை நயத்தைச் சற்று மிகுதியாக்கும் எண்ணத்தினாலும் அப்பாடலைச் சற்று மாற்றி அதற்கான விளக்கத்தையும் கீழே தந்துள்ளேன். படித்துக் கருத்துச் சொல்லவும்.

அனந்த் 

14-5-2010

6. <> இடம் ஏற்றல் <>

"காலைத் தூக்கி நின்றாடும்என்னும் கோபாலகிருஷ்ண பாரதியர் பாடலை நித்யஸ்ரீ மகாதேவன் பாடுவதைக் கேட்டுகொண்டே (http://www.musicindiaonline.com/p/x/nqv2PrkDN9.As1NMvHdW/) இதை நான் எழுதும்போது, அந்தப் பாடல் நமது அம்மானைப் பெண் சமத்காரவல்லியின் மனத்தில் எப்போதும் ரீங்காரம் செய்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்று என்னை எண்ண வைக்கிறது. ஏனென்று கேட்கிறீர்களா? அவள் தரும் அடுத்த அம்மானைப் பாடலைக் கடைசி வரை கவனித்து ஊன்றிப் பார்த்தால் அதற்கு விடை கிடைக்கும்.

முந்தி முந்தி நடந்த, நமக்கு நன்கு பரிச்சயமான ஒரு நிகழ்ச்சியுடன் பாடல் தொடங்குகிறது. பகீரதனின் அடாது மழை பெய்தாலும் விடாது செய்ததவத்தால், கங்கை வானத்திலிருந்து அதிவேகமாகக் கீழிறங்கி வந்து கொண்டிருக்கிறாள். அதே வேகத்தில் அவள் பூமியில் இறங்கினால் பூலோகம் ஒரேயடியாக அமுங்கிப் பாதாள லோகமாக மாறிவிடும் என்று உணர்ந்த பகீரதன் சிவபெருமானை உதவி செய்யும்படி வேண்டுகிறான். (யாரென்ன கேட்டாலும் அலுக்காது உடனே வழங்கும் ஓட்டைக் கையன்என்று நாம் முந்திய பாடலில் தெரிந்துகொண்டபடி) அரனார் உடனே பகீரதனிடம் கவலைப் படாதே, வரச்சொல் அந்த கங்கையை!என்று கூறித் தன் பொன்னிறச் சடையை விரித்து நிற்கிறார். கர்வத்துடன் பூமியை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் வேகவதியைத் தமது ஒளிபொருந்திய சடையில் நிறுத்தித் தாங்கிக் கொண்ட நம் பரமேட்டி அவளைத் தம் தலைமேல் தாங்குபவராகக் காட்சியளிப்பார்.  இந்த அற்புதமான அருட்செயலைப் பாடலின் துவக்கமாகத் தன் அழகான குரலில் இசைகூட்டிப் பாடுகிறாள் முதலாமவளான சமத்காரவல்லி: 

முன்னொருநாள் மண்ணிழிந்து வீழுமொரு மாதினைத்தம்

மின்சடையில் வீற்றிருக்க வைப்பார்காண் அம்மானை

பகீரதனுக்கு அருள் பாலிக்கும் வகையில் தான் சிவபெருமான் கங்கையைத் தலையில் தாங்குபவராகத் துலங்குகிறார் என்றாலும், இது நம் சூரவல்லிப் பெண்ணுக்கு வகையாக ஒரு கேள்வியைக் கேட்கும் வாய்ப்பை அளிக்கிறது.

மின்சடையில் வீற்றிருக்க வைப்பாரே யாமாயின்

இன்னொருத்தி தம்மித்தில் ஏற்றலுமேன் அம்மானை?

“சமத்காரவல்லியே, நீ சொல்வது கேட்க அழகாகத் தான் இருக்கிறது. கருணைக் கடலான உங்கள் பெருமான் நீ கூறியபடி கங்கையாளைத் தலையில் வைத்துத் தாங்குவதையும், அதே கோலத்தில் அம்பலத்தில் கூத்தாடுவதையும் உலகோர் நன்றாகவே கண்டுள்ளார்கள். இப்படி ஒரு பெண்ணுக்குத் தனது திருமேனியில் ஒரு இடத்தை, அதுவும் உயர்ந்த இடமாகிய சிரசைக் கொடுத்தவர், எப்படி இன்னொரு பெண்ணை- இமயமலை இளவரசியான உமாதேவியை- மணந்து அவளையும் எப்போதும் தன்னோடு இருக்கும்படி இடம் கொடுக்கலாயிற்று? இது எந்த நியாயத்தில் சேர்ந்தது?” என்று கேட்ட சூரவல்லியின் கேள்வியில் பொதிந்த கேலி சமத்காரவல்லிக்குத் தெளிவாகத் தெரிகிறது. 

இருந்தாலும் தோழியின் கெட்டிக்காரத்தனத்தைத் தன் மனத்திற்குள் சற்றுப் பாராட்டி விட்டுத் தனது விடையை ஒருதரம் மனத்தில் சொல்லிச் சரிபார்த்துக் கொண்டு சமத்காரவல்லி பாடலின் பன்ச் லைன்ஆன இறுதியடியைப் பாடுகிறாள்:  

தம்மிக்கால் ஏற்றும் தன்மையர்காண் அம்மானை!

ஆமாமடி, எங்கள் தலைவரான சிவபெருமான் மற்றத் தெய்வங்களிலிருந்து பலவகையில் மாறுபட்டவர். அவருடைய நடவடிக்கைகள் யாவுமே பார்ப்போருக்கு முரணாகத் தோன்றும். வேறு எவராவது யானைத்தோலும் புலித்தோலும் ஆடையாகவும், பாம்புகளை அணிகலங்களாகவும், சுடுகாட்டுச் சாம்பலைப் பூசுவதும் எருக்கு, தும்பை, கொன்றை போன்ற பூக்களை விரித்துப் போட்ட சடையில் சூடுவதும் அலங்காரங்களாகவும் கொண்டு, நள்ளிரவில் மயான பூமியில் நடனமிடுவதையும் கண்டிருக்கிறோமா? இப்படி எதையும் ஒரு இடக்காக, அதாவது பிடிவாதத்தோடு முரணாகச் செய்யும் எங்கள் அரனார், தம்மை அடையப் பலகாலம் தவமிருந்த உமையன்னையை தம்மிடத்தில், அதாவது இடப்பாகத்தில், ஏற்றுத் தாம் மகிழ்ந்து பிராட்டியையும் மகிழ வைப்பார். இன்னொரு செய்தியையும் உனக்குச் சொல்ல வேண்டும். எம் ஐயனுக்கு மலைமகள் இடங்கொண்ட தமது உடலின் இடது பக்கத்தில் ஒருதனி வாஞ்சை உண்டு. பஞ்சக்ருத்யம் என்னும் ஐந்தொழில் புரியும் அழகைச் சித்தரிக்கும் வண்ணம் ஆனந்த நடமாடும் எங்கள் பிரான் எந்தக் காலை உயர்த்திக் காட்டுகிறார் என்று நீயும் பார்த்திருக்கிறாயே, அது எங்கள் அன்னையான உமாதேவியின் திருப்பாதம் அல்லவோ? அதனால் தான் அதை வான்நோக்கித் தூக்கியும் வலது காலை முயலகன் என்னும் ஒரு அசுரனை அழுத்திப் பிடித்து வைக்குமாறு தரையில் வைத்தும் ஆடுகின்றார். இத்தகைய அரிய தன்மை பொருந்திய எம்பிரான் தம்மிடத்தைத் தேடி வரும் அன்பர்களுக்கும் அருள் புரிந்து பிறவித் துயர் அறச் செய்வார். ஆகவே, நீயும் என்னுடன் சேர்ந்து அவரது புகழை மேலும் சொல்லித் துதிப்போம் வா!” என்று அழகாகப் பேசிய சமத்காரவல்லியின் முகத்தில் அன்பு ஒளிர்கிறது.

இடக்கான கேள்வியொன்றைக் கேட்டுத் தோழியை மடக்கியதாகக் கோட்டை கட்டிய சூரவல்லிக்குத் தான் பயன்படுத்திய தம்மிடத்தில் என்ற சொல்லில் எப்படித் தன் சிநேகிதி சிலேடையைப் புகுத்திப் பலவாறாகத் தன் கட்சியைப் பலப்படுத்திக் கொண்டாள் என்பது வியப்பைத் தந்ததோடு, அவள் உள்ளத்தில் தானும் இனிச் சிவபெருமானைத் துதிக்க வேண்டும் என்ற ஆசையையும் விளைவித்தது.   இந்தச் சிந்தனையோடு அவள் அம்மானைக் காய்களைத் தரையில் வைத்துத் தன் வீடு நோக்கிச் செல்லத் தொடங்குகிறாள்.  நாமும் அந்த அழகிய அம்மானைப் பாடலை நமக்குள்ளாகப் பாடிக் கொண்டு அங்கிருந்து நடையைக் கட்டுகிறோம்.,     

முன்னொருநாள் மண்ணிழிந்து வீழுமொரு மாதினைத்தம்

மின்சடையில் வீற்றிருக்க வைப்பார்காண் அம்மானை

மின்சடையில் வீற்றிருக்க வைப்பாரே யாமாயின்

இன்னொருத்தி தன்னைஇடம் ஏற்றலுமேன் அம்மானை?

தம்மிடக்கால் ஏற்றும் தன்மையர்காண் அம்மானை!

(இடக்கு = முரண்; எதிரிடை; முரட்டுத்தனம், அடங்காமை, பிடிவாதம்)

.. அனந்த்

14-5-2010

2010/5/8 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

இலந்தை, சிவசிவா,

நல்ல கருத்து. நன்றி. இது போல, முன்பிட்ட பாடல்கள் பற்றிக் கருத்து இருப்பின் கூறவும். இத்தகைய பின்னூட்டங்கள் எழுதுபவர்க்கு மிக்கப் பயன்  தருவன. சந்தவசந்ததில் இதுபோன்ற constructive suggestions இப்போதுள்ளதை விட அதிகமாக வர வேண்டும்.

இடது பக்கக் கால் உமைக்குச் சேர்ந்தது என்ற காரணத்தால் அதைத் தரையில் படாமல் தூக்கி (ஏற்றி) வைக்கிறார் என்ற பொருள் வருமாறு உரையில் எழுத முயன்றேன். ஆனால் அது பாட்டில் காணும் அடிக்கு ஒத்ததாக இல்லை என்று நீங்கள் சொன்னது சரியே.  அந்த இடத்தை மாற்றி அமைக்கிறேன். 

இன்னொருத்தி என்பதே சரி. (அமுத சுரபியில் திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்று: http://sify.com/cities/mumbai/fullstory.php?id=13816945)

பொன்சடை/பொற்சடை பற்றி முன்னமே சிவசிவா கேள்வி எழுப்பியிருந்தார். ”மின் (மின்னல், ஒளி), பின் (பெருமை வழி), பன் (ஒருவகைப் புல்), கன் (தராசுத் தட்டு) என்னும் சொற்களின் பின் வல்லின மெய்வரின் ஈற்று னகரம் றகரமாய்த் திரியாது’; ”தன், நின் இவற்றின் பின் வல்லினம் வரின், னகரம் திரிந்தும் திரியாமலும் புணரலாம் (நின்பெருமை, தன்புகழ்ச்சி, தற்புகழ்ச்சி..)” என்று நூலில் காண்கிறது. இவை பொற்சடைக்குச் சரியாகா எனத் தோன்றுகிறது. அதனால் அந்த இடத்தையும் மாற்றுகிறேன்.

அனந்த்      

2010/5/8 Siva Siva <naya...@gmail.com>

//

முன்னொருநாள் மண்ணிழிந்து வீழுமொரு மாதினைத்தம்

பொன்சடையில் தாங்கிப் பொதிந்தனர்காண் அம்மானை

பொன்சடையில் தாங்கிப் பொதிந்தனரே ஆமாயின்

இன்னொருவள் தன்னைஇடம் ஏற்றதுமேன் அம்மானை?

..இடமொருகால் ஏற்றும் இயல்புடையார் அம்மானை! //

இனிய பாடல்.

1) 5-ம் அடியைச் சற்று மாற்றினால் இன்னும் தெளிவாகுமோ?
"இடமொருகால் ஏற்றலும் இவர்இயல்பே அம்மானை"

2) பொன்சடை - பொற்சடை - இதைப்பற்றிய இலக்கண விளக்கமும் ஆர்வலர்களுக்குப் பயன் தரலாம்.

அன்புடன்,
வி, சுப்பிரமணியன்

2010/5/7 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

6. <> இடம் ஏற்பார் <>

"காலைத் தூக்கி நின்றாடும்என்னும் கோபாலகிருஷ்ண பாரதியர் பாடலை நித்யஸ்ரீ மகாதேவன் பாடுவதைக் கேட்டுகொண்டே (http://www.musicindiaonline.com/p/x/nqv2PrkDN9.As1NMvHdW/) இதை நான் எழுதும்போது, அந்தப் பாடல் நமது அம்மானைப் பெண் சமத்காரவல்லியின் மனத்தில் எப்போதும் ரீங்காரம் செய்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்று என்னை எண்ண வைக்கிறது. ஏனென்று கேட்கிறீர்களா? அவள் தரும் அடுத்த அம்மானைப் பாடலைக் கடைசி வரை கவனித்து ஊன்றிப் பார்த்தால் அதற்கு விடை கிடைக்கும்.
 
--

Kaviyogi Vedham

unread,
May 15, 2010, 1:58:22 AM5/15/10
to santhav...@googlegroups.com
ஆகா! நிச்சயமாய் பொருள் இப்போது உயர்ந்தே இருக்கிறது.
 படித்து நெகிழ்ந்து போனேன் அநந்த்!,
 வாழ்க உம் பணி,
 யோகியார்

2010/5/15 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

--
யோகியார். வேதம்.(Yogiyar vedham)
Anaivarum vaazhga vaLamudan!--..
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600041
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-41(போன் 64565979)-
*****************************

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 24, 2010, 5:34:23 PM5/24/10
to santhav...@googlegroups.com

7. <> “ஆடல் காணீரோ” <>

சென்ற அம்மானைப் பாடலில், சிவபிரான் தம் தலைமேல் அமர்ந்து இருக்கும்படி கங்கையாளையும், இடப்பாகத்தில் வதியும்படி உமையவளையும்  ஏற்றுள்ளார்  என்று கண்டோம். இப்போது, அவர்கள் இருவருக்குமே போட்டியாக யார் முளைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள போகிறோம். அதற்காக, மீண்டும் பாடல்நல்லூரில் (-அதுதான் நம் அம்மானைப் பெண்கள் வசிக்கும் சிற்றூரின் பெயர்), ஓடு வேயப்பெற்ற ஒரு சிறிய, ஆனால் தூய்மையும் அழகும் தவழும் வீட்டின் திண்ணையில், தங்கள் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் பெண்களின் அருகே சென்று அவர்கள் பாடும் பாடலைச் செவி மடுப்போம் (-இந்த நேரத்திற்குள் உங்களுக்கு இரு அம்மானைப் பெண்களின் பெயர்களும் நன்கு பரிச்சயம் ஆகியிருக்க வேண்டும் என நம்புகிறேன்).  

ஆலவாய்த் திருத்தலத்தில், சிவபெருமானார் நிகழ்த்திய அருட்செயல்கள் அறுபத்து நான்கைப் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் விரித்துக் கூறும். அந்த விளையாடல்களின் பெருமையை ஆடல் காணீரோஎன்று தொடங்கும் (எனக்கு மிகவும் பிடித்த) திரைப்படப் பாடலில் எம்.எல். வசந்தகுமாரி சாருகேசியில் தொடங்கி ராகமாலிகையாக மிக அழகாகப் பாடியுள்ளதை (http://www.musicindiaonline.com/p/x/Qq32fJ_n5S.As1NMvHdW/) நம் இரு அம்மானைப் பெண்களும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. அடுத்த அம்மானைப் பாடலைத் தனது பாடல் தலைவனான அரனின் திருவிளையாடல்களில் ஒன்றை நினைவுகூர்ந்து சமத்காரவல்லி தொடங்குகிறாள்:

அடியே சூரவல்லி! அம்பலத்தில் கண்டோர் வியக்கும் வண்ணம் நடனமாடும் திறமை மட்டுமன்றி, எங்கள் சிவபெருமானுக்கு. ஒன்றல்ல, இரண்டல்ல, அறுபத்து நான்கு விளையாட்டுகளில் தேர்ச்சியுண்டு. அவை யாவும் மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரைஎன்று பாடப் பெறுமாறு நிலவளமும் நீர்வளமும் நிறைந்த கூடல் மாநகரில் நடந்தவை. அவற்றில் ஒன்றான முப்பத்திரண்டாம் திருவிளையாடலில் எம் இறைவர் என்ன செய்தார் தெரியுமா? பொதுவாக, அடியவர்கள் தாமே இறைவனைத் தேடி அருள்பெறச் செல்வார்கள்? இங்கே நடந்த கதை அப்படியே தலைகீழ்! அக்காலத்தில், ஆலவாய் நகரில் வணிகர் குலத்தில் வாழ்க்கைப் பட்டிருந்த மங்கையர் அனைவரும் தங்கள் முந்தைய பிறவியில் தாருகா வனத்து ரிஷி பத்தினிகளாக இருந்து, தம் கணவன்மார்களால் சபிக்கப் பட்டு வணிகப் பெண்களாகப் பிறந்தவர்கள் ஆவர். அமரர் அமுதுண்டு வாழத் தாம் கொடிய நஞ்சை உண்ணத் தயங்காத தியாகப் பொருப்பு, த்ரியம்பகன்ஆன நம் பரமேட்டி இதை அறிந்து அவர்களை உய்விக்கத் திருவுள்ளம் கொண்டார். சந்திர வம்சத்தின் மணிவிளக்கான தடாதகைப் பிராட்டி, மதுராபுரி ராணி என்று பட்டம் சூட்டிக் கொண்ட காலத்தில், அந்த அங்கயற்கண்ணி அன்னையின் கணவர் சுந்தரபாண்டியனாய் விளங்கிய நம் ஐயன் ஒரு வளையல் விற்போனின் வடிவம் பூண்டு, அந்த வணிகர் குலப் பெண்மணிகளை நாடிச் சென்றார். விதவிதமான வளையல்களை அப்பெண்டிருக்குத் தம் கரத்தாலேயே அணிவித்தார். சோமசுந்தரக் கடவுளால் தீண்டப்படும் பெரும்பேறு பெற்ற அந்த மங்கையர்கள் தம் சாபம் நீங்கி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து சிவலோகம் எய்தினார்கள்.ஒரேமூச்சில் இத்தனையும் சொல்லி முடித்து நிறுத்திய சமத்காரவல்லி, சூரவல்லியின் முகக்குறிப்பைப் பார்த்து,’நான் சொல்லியிராவிடில் இந்தப் பெண்ணுக்கு இந்தக் கதைபற்றி ஒன்றும் தெரிந்திருக்காதுஎன்று மனத்தில் எண்ணிக் கொண்டாள். அதைத் தொடர்ந்து, தன் அம்மானைப் பாடலைச் சற்று உரத்த குரலில் பாடி ஆட்டத்தைத் தொடங்கி வைத்தாள். (அது சாருகேசி இராகத்தில் அமைந்தது என்று கேள்வி!):

விளையாட்டாய் மாமதுரை மெல்லியர்தம் கைதொட்டு

வளைபூட்டித் தாமருளும் வள்ளல்காண் அம்மானை

இதுவரை, சோமசுந்தரர் வளையல் விற்ற திருவிளையாடல் பற்றித் தனக்குத் தெரியாதவள் போல நடித்த இரண்டாமவளான சூரவல்லி, இப்போது தன் சாமர்த்தியத்தைக் காட்டும் தருணம் கனிந்து வந்துள்ளதை உணர்ந்தாள். சென்ற அம்மானைப் பாடலில் கங்கையாளையும் உமையம்மையையும் தலையிலும் இடப்பாகத்திலும் சிவனார் தாங்கிக் கொண்டார் என்று சொன்னதைத் தன் தோழி மறந்து விட்டதையும் புரிந்துகொண்டாள். அப்படி வா வழிக்குஎன்று மனத்தில் கருவிக்கொண்டு இராமபாணம் போலத் தனக்கான அம்மானை அடிகளைச் சமத்காரவல்லியின்பால் எய்தாள்:

வளைபூட்டித் தாமருளும் வள்ளலே ஆமாகில்

சளையாது இருவர்பழி சாற்றாரோ அம்மானை?”

அடியே என் ராசாத்தி, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டாய் மனைவியரைக் கொண்டவர் இப்போது ஒரு பெண்கள் கும்பலையே நாடிச் சென்று கரம் பற்றினார் என்று பெருமையாகச் சொல்ல வந்து விட்டாயே? இந்தச் செய்தியைக் கேட்டதும் அந்த இரு மனைவியரும் இரட்டை நாதஸ்வரம் போல மாற்றி மாற்றி உங்கள் சிவனார் காதில், ஆறாம் கட்டை சுருதியில், தம் குற்றச் சாற்றைக் கூறி/கூவி, அவரை வாங்கு வாங்கென்றுபின்னியிருப்பார்களே? ஐயோ, பாவம் அரனார்!என்று பொருள்படுமாறு அமைத்த தன் வினாவை முதலைக் கண்ணீர் மல்கப் பாடினாள் சூரவல்லி.

தன் உயிர்போனாலும் சிவபெருமானை விட்டுக் கொடுக்காத உள்ளன்பு கொண்ட சமத்காரவல்லிக்குத் தன் தோழியின் கேள்விக்கு விடையளிக்க ஒரு கணநேரப் பொழுது கூடத் தேவையாக இருக்கவில்லை, அவள் வாயிலிருந்து பாடலின் இறுதி அடி, அந்த ஐயனே எடுத்துக் கொடுத்தது போல, ’டாண்என்று வெளிவந்தது:

துளைசெவிபூண் தோடரவம் காக்குங்காண் அம்மானை!

அம்மா, வீர தீர சூரவல்லி! எங்கள் பெருமான் நடக்கப் போவதை எல்லாம் முன்னறிந்தவர். நீ சொன்னவாறு தம் மனைவியர் பழி சாற்றக் கூடும் என்பதை வளையல் வியாபாரி விளையாட்டைத் தொடங்கும் முன்னமே அறிந்திருந்த அவர், தமது காதுகள் இரண்டிலும் அழகிய பெரிய பாம்புகள் இரண்டைத் தோடாக மாட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பதை நீ அறியாயோ? சதா சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் பத்மன், பிங்களன் என்ற இரு தேவர்கள் அல்லவோ அக்காதணிகள்? அந்த அரவங்கள் எம் பிரானுடைய செவித்துளையில் வேறு அரவம் நுழைய இடங்கொடுக்குமோ? இது தெரியாமல் ஏதோ என்னை மடக்கி விட்டதாக மனப்பால் குடித்தாயே? இப்போதைக்கு நம் ஆட்டத்தை நிறுத்திப் பின்னர் தொடருவோம். அதற்குள் நல்ல நூல்களைப் படித்து எங்கள் தலைவனைப் பற்றிய செய்திகளை நன்கு அறிந்துகொண்டு வாஎன்று சமத்காரவல்லி சொல்லி முடிப்பதற்கும் வீட்டினுள்ளிருந்து அவளுடைய அன்னை அவளைத் துணைக்கு விளிப்பதற்கும் சரியாக இருந்தது.

நாம் இப்போது முழுப்பாடலையும் பார்ப்போம்:

விளையாட்டாய் மாமதுரை மெல்லியர்தம் கைதொட்டு

வளைபூட்டித் தாமருளும் வள்ளல்காண் அம்மானை

வளைபூட்டித் தாமருளும் வள்ளலே ஆமாகில்

சளையாது இருவர்பழி சாற்றாரோ அம்மானை?

துளைசெவியில் தோடரவம் காக்குங்காண் அம்மானை!

பின்குறிப்பு:

1. நமது அம்மானைப் பெண்கள் இந்தக் காலத்தவராக இருந்திருந்தால், தாங்களும் சிவபெருமானைப் போலக் காதார் குழையாக, வேறு சத்தம் எதுவும் செவித்துளை வழியே நுழைய விடாமல் தடுக்கும் செவிபேசிகளை (ear phone) அணிந்து கொண்டு தாங்கள் எதுவும் பாடாமல் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள். நமது நல்ல காலம், அவர்கள் அந்தக் காலத்து இளம் பெண்களாக இருப்பது!

2. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் வளையல் விற்ற படலத்திலிருந்து ஒரு பாடல்:
 
மன்னு மறையின் பொருளுரைத்த மணிவாய் திறந்து வளைகொண்மின்

என்னு மளவில் பருவமுகில் இமிழின் இசைகேட் டெழுமயில்போல்

துன்னி மணிமே கலைமிழற்றத் தூய வணிகர் குலமகளிர்

மின்னு மணிமா ளிகைநின்றும் வீதி வாயில் புறப்பட்டார்

அனந்த் 24-5-2010

இணைப்பு: ஓவியர் எஸ். ராஜத்தின் சந்தியா தாண்டவம் (நாளை பிரதோஷ நன்னாள்)

2010/5/14 VETTAI ANANTHANARAYANAN gan...@gmail.com

6. <> இடம் ஏற்றல் <>

"காலைத் தூக்கி நின்றாடும்என்னும் கோபாலகிருஷ்ண பாரதியர் பாடலை நித்யஸ்ரீ மகாதேவன் பாடுவதைக் கேட்டுகொண்டே (http://www.musicindiaonline.com/p/x/nqv2PrkDN9.As1NMvHdW/) இதை நான் எழுதும்போது, அந்தப் பாடல் நமது அம்மானைப் பெண் சமத்காரவல்லியின் மனத்தில் எப்போதும் ரீங்காரம் செய்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்று என்னை எண்ண வைக்கிறது. ஏனென்று கேட்கிறீர்களா? அவள் தரும் அடுத்த அம்மானைப் பாடலைக் கடைசி வரை கவனித்து ஊன்றிப் பார்த்தால் அதற்கு விடை கிடைக்கும்.

முந்தி முந்தி நடந்த, நமக்கு நன்கு பரிச்சயமான ஒரு நிகழ்ச்சியுடன் பாடல் தொடங்குகிறது. பகீரதனின் அடாது மழை பெய்தாலும் விடாது செய்ததவத்தால், கங்கை வானத்திலிருந்து

Sandhya tandavam.jpg

Soundar

unread,
May 24, 2010, 8:13:56 PM5/24/10
to santhav...@googlegroups.com
இப்படியாக இருமனைவியர் உடையார் என்ற பழியேற்றவரைப் பார்த்து, 'என்ன ஸ்வாமி, இப்படி இடிந்துபோய் இருக்கிறீரே!' என்று கேட்டேன். அம்பலத்தார் இரகசியங்களை  இப்படி அம்பலமாக்கும் சூரவல்லி, சமத்காரவல்லி இருக்கும் ஊரை  எனக்குக் காட்டு; அவர்களை ஒருகை  பார்த்து விடுகிறேன்' என்று சொன்னார்.
'இது பெரிய விஷயம் இல்லை, ஸ்வாமி. இதோ  எங்கள் ஊருக்கு அடுத்த ஹாமில்டன்தான் என்றேன்.

ஸ்வாமி இப்போது என்பக்கம் கவனம் செலுத்தலானார். 'நான் இராமன் போலே  ஏகபத்தினி விரதன்தான். இந்த மானிடர்கள்தான் என்மேல் இப்படியொரு குற்றம் சுமத்துகின்றனர்'  என்றார். நானும், 'அப்படியா? உங்கள் மனைவி பெயர் என்ன?' என்றேன். அவரும், 'மலைமகள்' என்றார். இப்படிக் கேட்டால், வழிக்கு வரமாட்டார், 'உங்கள் மாமனார் பெயர் என்ன?' என்று மடக்கினேன். அதற்கு அவரும், 'மலையரசன்' என்றார். 'கையில் சத்தியம் செய்து தருவீரா' என்றேன்.  அவரும் சரியென்றார்.

எனக்கோ  ஒரே  குழப்பம்.  எப்படிக்கேட்டாலும் ஏதோ பதில்  சொல்லிச் சமாளித்து  விடுகிறாரே என்று எண்ணி, நேரே, சமத்கார வல்லியும்,  சூரவல்லியும் அம்மானை  விளையாடிக்கொண்டிருந்த வீட்டுத் திண்ணைக்கே  வந்துவிட்டேன். 'ஐயா  இருக்காரா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஐயா, மலைமகளுடன் பிரதோஷம் காண சென்றுள்ளார்' என்றனர். என்ன,  மலைமகளா? என் மனதிலே இருப்பதை எப்படி அறிந்தார்கள் இவர்கள் என்று ஆச்சரியப்பட்டேன்.

எனக்கும், சிவபெருமானுக்கும் நடந்த விஷயத்தை  அவர்களிடம் சொன்னேன்.

இந்த இருபெண்களும் யாரிடம் தமிழ் கற்றனர்? நாள் முழுதும் அம்மானைப் பாடலாகவே  பொழிகின்றனரே! என் தலையிலே  நானே  குட்டிக் கொண்டேன். அட இதுகூட தெரியாது இருக்கிறேனே! கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்போது,  அனந்த் வீட்டுத்திண்ணையில் விளையாடும் சிறுமிகள் அம்மானை  பாடுவதில் வியப்பென்ன?

மலைமேல் உறையும் மதிசூடு மன்னவரும்
மலையரசன் மகளைத்தான் மணங்கொண்டார் அம்மானை

என்று சமத்காரவல்லி அடியெடுத்துக் கொடுத்தாள்.

அவளை  மடக்கச் சூரவல்லியும்,

மலையரசன் மகளைத்தான் மணங்கொண்டார் ஆமாயின்
அலைபாயும் அணங்கையும் அணைத்ததுமேன் அம்மானை?

என்று ஒரு கேள்வியை  முன்வைத்தாள். அட, இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ளத்தானே  நான் இங்கு வந்தேன்.
திருப்பி என்னையே  கேட்டால் எனக்கு என்ன தெரியும்? பக்கத்தில் சமத்காரவல்லி இருப்பதையே  மறந்துவிட்டேன்.

அவள், உடனே சிவனை விட்டுக்கொடுக்காமல், ஆமாம், அவர் ஏகபத்தினி விரதன்தான் என்று பொருள்படும்படி,

மலைபிறந்த மற்றவளும் மலைமகளாம் அம்மானை

என்று வாக்குவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள். இப்பொழுதுதான் புரிந்தது சிவபெருமான் ஏன் சத்தியம் செய்துதரத் தயங்கவில்லை  என்று.

முழுப்பாடல்

மலைமேல் உறையும் மதிசூடு மன்னவரும்
மலையரசன் மகளைத்தான் மணங்கொண்டார் அம்மானை
மலையரசன் மகளைத்தான் மணங்கொண்டார் ஆமாயின்
அலைபாயும் அணங்கையும் அணைத்ததுமேன் அம்மானை?
மலைபிறந்த மற்றவளும் மலைமகளாம் அம்மானை

இந்த விருத்தாந்தத்தை, மாணிக்கவாசகரும்,

மலைமகளை  யொருபாகம் வைத்தலுமே  மற்றொருத்தி
சலமுகத்தா  லவன்சடையில் பாயுமது என்னேடீ?
சலமுகத்தா  லவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே  புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ

என்று அனுபவிக்கிறார்.

சௌந்தர்

பி.கு. அனந்தின் கதாபத்திரங்களை  அவர் அனுமதியின்றி சந்தித்தற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

2010/5/24 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
May 24, 2010, 8:58:32 PM5/24/10
to santhav...@googlegroups.com
இருவரின் பாடல்களும் அதை ஒட்டிய உரையாடல்களும் கங்கையும் மலைமகள் என்ற விளக்கமும் சிறப்பாக உள்ளன!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2010/5/24 Soundar <rsou...@gmail.com>

இப்படியாக இருமனைவியர் உடையார் என்ற பழியேற்றவரைப் பார்த்து, 'என்ன ஸ்வாமி, இப்படி இடிந்துபோய் இருக்கிறீரே!' என்று கேட்டேன். அம்பலத்தார் இரகசியங்களை  இப்படி அம்பலமாக்கும் சூரவல்லி, சமத்காரவல்லி இருக்கும் ஊரை  எனக்குக் காட்டு; அவர்களை ஒருகை  பார்த்து விடுகிறேன்' என்று சொன்னார்.
'இது பெரிய விஷயம் இல்லை, ஸ்வாமி. இதோ  எங்கள் ஊருக்கு அடுத்த ஹாமில்டன்தான் என்றேன்.

ஸ்வாமி இப்போது என்பக்கம் கவனம் செலுத்தலானார். 'நான் இராமன் போலே  ஏகபத்தினி விரதன்தான். இந்த மானிடர்கள்தான் என்மேல் இப்படியொரு குற்றம் சுமத்துகின்றனர்'  என்றார். நானும், 'அப்படியா? உங்கள் மனைவி பெயர் என்ன?' என்றேன். அவரும், 'மலைமகள்' என்றார். இப்படிக் கேட்டால், வழிக்கு வரமாட்டார், 'உங்கள் மாமனார் பெயர் என்ன?' என்று மடக்கினேன். அதற்கு அவரும், 'மலையரசன்' என்றார். 'கையில் சத்தியம் செய்து தருவீரா' என்றேன்.  அவரும் சரியென்றார்.

எனக்கோ  ஒரே  குழப்பம்.  எப்படிக்கேட்டாலும் ஏதோ பதில்  சொல்லிச் சமாளித்து  விடுகிறாரே என்று எண்ணி, நேரே, சமத்கார வல்லியும்,  சூரவல்லியும் அம்மானை  விளையாடிக்கொண்டிருந்த வீட்டுத் திண்ணைக்கே  வந்துவிட்டேன். 'ஐயா  இருக்காரா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஐயா, மலைமகளுடன் பிரதோஷம் காண சென்றுள்ளார்' என்றனர். என்ன,  மலைமகளா? என் மனதிலே இருப்பதை எப்படி அறிந்தார்கள் இவர்கள் என்று ஆச்சரியப்பட்டேன்.

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Dr Subramanian

unread,
May 24, 2010, 9:19:03 PM5/24/10
to santhav...@googlegroups.com
அம்பலத்தார் அம்பலத்தை அம்பலமாய் ஆக்குகின்ற
நம்மினத்தார் இனம்பெருகும் நாள்வந்த தம்மானை
நம்மினத்தார் இனம்பெருகும் நாள்வந்த  தாமாயின்
அம்பலங்கள் அத்தனையும் அரங்குறுமோ அம்மானை?
00000000000000000000000000000000000000000000000000000

சமத்காரவல்லியே எங்குள்ளாய் பதில் கூறு!
வவேசு

2010/5/25 Siva Siva <naya...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 24, 2010, 10:35:25 PM5/24/10
to santhav...@googlegroups.com

சௌந்தரின் அம்மானைக் கருத்தும் பாடலும் கதையும் அழகு! அவற்றைச் சமத்காரவல்லியிடம் காட்டியபோது, அவள், “ஐயா! நிர்க்குண வடிவில் ஏகனாய் இருக்கும் எம்மிறைவன், சகுண வடிவில் நமக்குக் காட்சி அளிக்கும்போது, எல்லாவற்றையும் ’ஜோடி’யாகவே ஏற்பதை வழக்கமாய்க் கொண்டுள்ளான்” என்று கூறி, இக்குழுவில் முன்னமே இட்ட (19-3-2008) கீழ்க்காணும் பிரதோஷப் பாடலைச் சுட்டினாள்:

கையில் அழல்,மேனி காணு(ம்)நிறம் அழல்;பேணும்

மெய்யில் புலியாடை, மெய்யடியர் புலி;மேலும்

செய்ய சடைதாங்கு தையல்,இடம் ஒருதையல்; 

ஐய! இதுபோல அதிசயந்தான் யாங்குண்டு?

.. அனந்த் 24-5-2010 

2010/5/24 Soundar <rsou...@gmail.com>

--

Kaviyogi Vedham

unread,
May 24, 2010, 10:39:47 PM5/24/10
to santhav...@googlegroups.com
பலே பலே படமும்.ஓவியம். நன்று அழகு.
 சௌந்தர் மற்றும் அநந்தின் பாட்டு&விளக்கமும் ரொம்ப சுவாரஸ்யம்.
ரசித்தேன் சேமித்தேன்.வாழ்க இருவரும்.
யோகியார்

2010/5/25 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

7. <> “ஆடல் காணீரோ” <>

சென்ற அம்மானைப் பாடலில், சிவபிரான் தம் தலைமேல் அமர்ந்து இருக்கும்படி கங்கையாளையும், இடப்பாகத்தில் வதியும்படி உமையவளையும்  ஏற்றுள்ளார்  என்று கண்டோம். இப்போது, அவர்கள் இருவருக்குமே போட்டியாக யார் முளைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள போகிறோம். அதற்காக, மீண்டும் பாடல்நல்லூரில் (-அதுதான் நம் அம்மானைப் பெண்கள் வசிக்கும் சிற்றூரின் பெயர்), ஓடு வேயப்பெற்ற ஒரு சிறிய, ஆனால் தூய்மையும் அழகும் தவழும் வீட்டின் திண்ணையில், தங்கள் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் பெண்களின் அருகே சென்று அவர்கள் பாடும் பாடலைச் செவி மடுப்போம் (-இந்த நேரத்திற்குள் உங்களுக்கு இரு

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 24, 2010, 10:40:10 PM5/24/10
to santhav...@googlegroups.com

பாடல் பற்றிக் கருத்துச் சொன்ன சிவ சிவா மணிக்கும், வ.வே. சு.-வுக்கும் நன்றி. வ.வே.சு.-வின் அம்மானையின் இறுதியடியில் அம்பலம் அம்பலமாவது அருமை! அதைச் சமத்காரவல்லியிடம் நான் காட்டியபோது அவள் அம்மானைக் காய்களைக் கைகளில் உருட்டியவாறே, “ஐயா! தம் இனத்தவரான அடியார்கள் உள்ளத்தே ”வம்பெப் பழுத்து அவர் குடிமுழுதாளும்’ எங்கள் பிறைசூடும் பெருமானார், தாம் செய்த திருவிளையாடல்களை அன்போடு சொல்லித் தமது ஆற்றலைப் பலரும் அறியும்படி செய்பவரை அவ்வாறு செய்யற்க என்று தடுத்து நிறுத்த மாட்டார்” என்று பதிலளித்தாள். அதைச் ’சிவகுமாரர்’ ஏற்றுக் கொண்டாரா என்று தனக்குத் தெரிவிக்கும்படி என்னிடம் வேண்டிக் கொள்ளவும் செய்தாள்:   

அம்பலத்தில் எம்பெருமான் ஆற்று(ம்)விளை யாட்டெல்லாம்

அம்பலந்தான் நம்மினத்தார் ஆக்குவர்காண் அம்மானை

அம்பலந்தான் நம்மினத்தார் ஆக்குவரே ஆமாயின்

வம்பதுவும் ஆகாதோ மானிலத்தில் அம்மானை?

தம்பலத்தைச் சாற்றல் தடுக்கிலர்காண் அம்மானை!
 
(வம்பு = வீண்பேச்சு, புதுமை)

.. அனந்த் 24-5-2010 
 
2010/5/24 Dr Subramanian <vav...@gmail.com>

K.R. Kumar

unread,
May 25, 2010, 7:15:30 AM5/25/10
to santhav...@googlegroups.com
அன்புள்ள அனந்த்,
 
நல்ல கற்பனை.!!
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2010/5/25 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

thangamani

unread,
May 26, 2010, 2:42:48 AM5/26/10
to சந்தவசந்தம்
கனல்கரத்தான் அனல்பறக்கும் கண்விழியான் அம்மானை!
சினச்சிரிப்பில் புரமெரித்தான் தேகம்தழல் அம்மானை!
சினச்சிரிப்பில் புரமெரித்தான் தேகம்தழல் ஆமாயின்,
மனங்கொண்ட அடியாரும் மலையாரோ! அம்மானை!
ஆல்நிழலில் பேசாமல் அமர்ந்திடுவர் அம்மானை!

திரு.அனந்த் அவர்களுக்கு,
ஆர்வத்தில் ஓர் பாடல்!பிழை சுட்டவும்.
உங்கள் பாடல்கள் சிறப்பு!
அருமை!நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

> > 2010/5/25 Siva Siva <nayanm...@gmail.com>

>
> > இருவரின் பாடல்களும் அதை ஒட்டிய உரையாடல்களும் கங்கையும் மலைமகள் என்ற
> >> விளக்கமும் சிறப்பாக உள்ளன!
>
> >> அன்புடன்,
> >> வி. சுப்பிரமணியன்
>

> >> 2010/5/24 Soundar <rsoun...@gmail.com>

> இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -
>
> - Show quoted text -

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 28, 2010, 11:05:26 PM5/28/10
to santhav...@googlegroups.com

அன்புள்ள தங்கமணி,

நல்ல கருத்துடைய நல்ல முயற்சி. அம்மானை என்ற பிரயோகம் முதல், மூன்றாம் அடிகளில் வாராது. அம்மானைப் பாடலில் வெண்டளை பயில்வது சிறப்பு. ‘தேகம்தழல்’ என்ற இடத்தில் ஓசை தட்டுகிறது. இறுதியடிலும் எதுகை மோனை இருப்பது அழகு, ஆனால் சில அம்மானைப் பாடல்களில் இறுதியடி எதுகை இல்லாதிருப்பதையும் காணலாம

அனந்த்  

2010/5/26 thangamani <tvthan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 29, 2010, 11:36:30 PM5/29/10
to santhav...@googlegroups.com

8. <> சீர் தருவோன் <>

நம் அம்மானைப் பெண்கள் வதியும் பாடல்நல்லூர் ஒரு அழகிய சிறு கிராமம். சுமார் ஒன்பது, பத்துத் தெருக்களே உள்ள அவ்வூரையும் அதன் அமைப்பையும் பார்த்தாலே அங்கு இறைவனின் ஸாந்நித்தியம் இருக்கிறதென்று நம் உள்ளுணர்வுக்குத் தெரிந்து விடும். அதற்கேற்ப, கூத்தப்பிரானின் கோயில் ஒன்று கிழக்குத் தெருவின் ஒரு கோடியில் காண்போரை ஈர்க்கும் எழிலுடன் நிமிர்ந்து நிற்பதைப் பார்க்கலாம். எல்லா வீட்டு முன்புறங்களிலும் பசுஞ்சாணி போட்டு  மெழுகி, கலை உணர்வோடு தெருவில் இட்டுள்ள கோலங்களும், வீடுகளின் உள்ளே காணும் அலங்காரங்களும் இவ்வூரில் பெண்களின் கை மேலோங்கி நிற்கிறது என்று சொல்வதைப் போலத் தோன்றும். கச்சேரி அரங்குகள் போல நுழை வாசலின் இருபுறமும் அமைந்த திண்ணைகளும், அதன் மேலமர்ந்து பல்வகை விளையாட்டுக்களைப் பயிலும் பெண்டிர் கூட்டமும் இந்தக் கருத்தை மேலும் வலுவாக்கும். பாவாடை-சட்டை அணிந்த இளம் சிறுமியர் ஆடும் அம்மானை ஆட்டம் அவ்விளையாட்டுகளில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பதையும் நாம் பார்க்கலாம். அம்மானையின் போது அவர்கள் பாடும் பாடலின் இசை, பொருள், சுவை ஆகியவற்றை வைத்தே அவ்வூருக்குப் பாடல்நல்லூர் என்ற பெயர் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. (ஊரில் குடிகொண்டுள்ள அருள்பொழிகண்ணியாள் உடனுறை மாதொருபாகனார் என்னும் திருநாமங்கொண்ட சிவபிரான் பற்றிய துதிப் பாடல்கள் ஏதும் வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை.)

பாடல்நல்லூரில் இப்போது என்ன நடக்கின்றதென்பதைச் சற்றுப் பார்ப்போம். இதற்கு முன் நாம் கேட்ட அம்மானைப் பாடலின் இறுதியில், மன நெகிழ்ச்சியோடு வீட்டிற்குள் சென்ற சமத்காரவல்லிப் பெண், தொலைவில் நாதஸ்வர ஒலி வருவதைக் கேட்டு வாசலுக்கு வந்து பார்க்கிறாள். தெருக்கோடியில், நாதஸ்வர இன்னிசையும் தவிலின் முழக்கமும் ஒலிக்க, அருள்பொழிகண்ணியாள் சமேதனாக மாதொருபாகனார் ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருவதைக் கண்ட அவள் மெய்ம்மறந்து நிற்கிறாள். (ஒரு நிமிடம் கண்னை மூடி நாமும் அந்தப் பெருமானையும் பிராட்டியையும் நெஞ்சத் திரையில் பார்த்து மகிழ்வோம்). தெருவில் வாரானோ, என்னைச் சற்றுத் திரும்பிப் பாரானோ நடராஜன்என்ற முத்துத் தாண்டவர் இயற்றிய கமாஸ் ராகப் பாடலை நாதஸ்வரக் கலைஞர் அமுதமாய்ப் பொழிந்து கொண்டிருக்க, அம்பாளும் சுவாமியும் நம் அம்மானைப் பெண்களுக்கும் தெருவில் கூடியிருந்த அத்தனை பேருக்கும் ஆனந்த தரிசனம் கொடுத்துவிட்டு அடுத்த தெருவிற்குள் நுழைகிறார்.  எம்பிரானை நினைந்தவாறே வீட்டுத் திண்ணைக்கு வந்து அமர்ந்த சமத்காரவல்லி, ஒரு பாடலைத் தொடங்கப் போகிறாள் என்பதற்கான அறிகுறி தெரிகிறது. அதனால் நாமும் விரைந்து அவ்வீட்டருகில் சென்று ஒட்டுக் கேட்கத் தயாராவோம். ஊர்வலம் செய்வதன் மூலமாக சிவலோக நாதன்  எப்படித் தானே வலிய நாடி வந்து மாந்தரை ஆட்கொள்கிறான் என்பது ஒருபக்கமும், நான்என்ற அகம்பாவ உணர்வு கொண்டோரிடமிருந்து அவர்களுடைய அகந்தையைக் கொய்து, அவர்க்கு அருள் புரிய பெருமானது மேன்மை ஒருபக்கமுமாகச் சமத்காரவல்லியின் உள்ளத்தில் தோன்றிக் கொண்டிருந்ததை வெளிப்படுத்துமாறு அமைகின்றன அவள் தொடங்கும் பாடலின் முதல் இரு அடிகள்:

இரத்தற் குகந்ததென ஏடமரும் வேதனது

சிரத்தைக் கரம்ஏந்திச் செல்லும்காண் அம்மானை

சூரவல்லி! முன்பொரு காலத்தில் ஆதியந்தமற்ற எங்கள் சிவபெருமானின் முடியைத் தான் கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடிய தாமரை மலரில் அமர்ந்து மறைகள் புகலும் பிரமதேவன், தன் வாயால் சிவனார் முடியைக் கண்டதாகப் பொய் வார்த்தை உரைத்த கதை உனக்குத் தெரிந்திருக்குமல்லவா? பிரமன் அப்படிச் செய்தது தனது இயலாமையை ஒப்புக்கொள்ளாத அகங்காரத்தினால் அன்றோ? இதை உணர்ந்த எம் ஈசன், தனது சிரத்தைக் கண்டதாகப் பொய் சொன்ன பிரமனின் ஐந்து சிரங்களில் ஒன்றைக் கொய்தான். பின்னர், கொய்த அந்த தலையின் ஓட்டைத் தன் கையில் எடுத்துக் கொண்டு ஊர் ஊராகத் தான் உண்பதற்கான உணவை இரந்து பெறப் பயன்படுத்தினான். இவ்வாறாகச் செய்ததன் மூலம், தான் எல்லாம் வல்ல இறைவன் என்ற செருக்கு ஒருதுளியும் தனக்கு இல்லாமல் இருப்பதையும், தன் அன்பர்களிடம் அகங்காரம் துளியேனும் இருந்தாலும் அதை அழித்து அருள்புரிவான் என்பதையும் உலகிற்கு விளக்கினான் எம் ஐயன். இது எத்துணைப் பெரிய செயல்!என்று விளக்கம் தந்த சமத்காரவல்லி தன் தோழியின் பின்னூட்டத்தை எதிர்பார்த்து நிறுத்தினாள்.  
 
தோழிக்குச் சும்மாவா வைத்தார்கள் சூரவல்லி என்ற பெயரை? ஒருகணம் கூடத் தாமதியாமல் தன் அறிவின் சூரம் விளங்குமாறு, ஒரு கொக்கிப்பிடிக் கேள்வியைத் தொடுக்கிறாள் அவள்:

சிரத்தைக் கரம்ஏந்திச் செல்லுவரே ஆமாயின்

சிரம்குவிக்க அஞ்சுவரோ சேவிப்போர் அம்மானை? 

“ ‘நன்றாயிருக்குது நியாயம், சேலையில் இருக்குது சாயம்என்பது போல உங்கள் சிவனுடைய பெருமையைச் சொல்ல வந்து விட்டாயே! வீடு வீடாகப் பிச்சையெடுப்பவர் தன் கையில் ஒருவரது தலையைக் கொய்து எடுத்த மண்டையோட்டை ஏந்தி வரும் அழகை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும்! (- இந்த இடத்தை ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் ஸ்ரீரஞ்சனி ராகக் கிருதி ஒன்றின் (http://www.raaga.com/player4/id=58890&mode=100&rand=0.6880476248378058) பல்லவியைப் போலப் பாடி அபிநயம் செய்கிறாள்-). இப்படிப்பட்ட திருக்கோலம் பூண்டவரை அணுகித் தங்கள் சிரங்களைத் தாழ்த்தி வணங்க எந்த அடியாருக்குத் தைரியம் வரும்? வணங்கி எழுந்தபின் தங்கள் தலை தம் உடலோடு ஒட்டியிராமல் உன் ஐயன் கையில் ஒட்டிக்கொள்ளுமோ என்று அவர்கள் அஞ்சாரோ?” என்று தன் கேள்விக்கு விளக்கமும் தந்த சூரவல்லியை அன்பும் பரிதாப உணர்வும் கலந்த பார்வையோடு நோக்கிய சமத்காரவல்லி, வழக்கம்போலத் தன் சிலேடைச் சாமர்த்தியமும் பொருள் செறிவும் கொண்ட அம்மானைப் பாடலின் இறுதியடியைப் பாடினாள்:

சிரத்தையுடை யோர்க்குரிய சீர்தருவார் அம்மானை!

அம்மா சூரவல்லி! முதலிலேயே நான் விரிவாக விளக்கியும் அன்பே சிவமாய், அடியார்க்கு ஆரமுதாய் விளங்கும் பேரருளாளனான எங்கள் கயிலைநாதன், அவனிருக்க வேண்டிய நெஞ்சத்தில் அகந்தையை வைத்துக் கொண்டு அவனிடம் வாலாட்டுவோரின்சிரத்தைப் பறித்து அவர்களுக்கு நல்லறிவு ஊட்டும் எம்பிரான் ஆவான். அதேவேளையில், தன்னையே அடைக்கலமாய்க் கொண்டு அவனை அணுகி, அவனுக்குச் சேவை செய்யும் வாய்ப்புப் பெறுவதற்காகத் தலை சாய்த்துப் பணிவோரின் பக்தி சிரத்தையைப் போற்றும் பெம்மானும் அவனே ஆவான். ஆகையால் அவ்வாறு தன்னிடம் அளவிலா அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் சிரத்தை கொண்டு தங்கள் தலைகலைத் தாழ்த்துபவர்க்கு, அவர்கள் இகத்திலும் பரத்திலும் தலைமைப் பதம் பெருமாறு சீரும் சிறப்பும் நல்குவான் என்று புரிந்து கொண்டு இனிமேலாவது என்னுடன் அவன் புகழைச் சேர்ந்து பாட வாராயோடீ?” என்று கேட்டாள்சமத்காரவல்லி. அவள் குரலில் இருந்த குழைவும் சிரத்தையும் சூரவல்லியின் மனத்தில் ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின. தோழி சொல்வது மெய்தான். இனிமேலாவது குதர்க்கமாய்க் கேள்வி கேட்பதை நிறுத்த வேண்டும்என்று அவள் நினைத்ததின் முகப் பிரதிபலிப்பைச் சமத்காரவல்லி கவனிக்கத் தவறவில்லை. இதன் விளைவை இனிவரும் அம்மானைப் பாடல்களில் நாம் காண வாய்ப்பிருக்கிறதா என்று அவனுக்குத் தான் தெரியும்.

இப்போது முழுப்பாடலையும் சேர்த்துப் படிப்போம்:

இரத்தற் குகந்ததென ஏடமரும் வேதனது

சிரத்தைக் கரம்ஏந்திச் செல்லும்காண் அம்மானை

சிரத்தைக் கரம்ஏந்திச் செல்லுவரே ஆமாயின்

சிரம்குவிக்க அஞ்சுவரோ சேவிப்போர் அம்மானை? 

சிரத்தையுடை யோர்க்குரிய சீர்தருவார் அம்மானை!

(ஏடு அமர் வேதன் = தாமரைப் பூவிதழின் மேல் அமர்ந்து மறைகளை ஓதும் பிரமதேவன். சிரத்தை=  அன்பு, முதன்மை, நம்பிக்கை, விசுவாசம், ஊற்றம்) 

அனந்த்
 
பி.கு. இதற்கு முன்னம் இட்ட பாடலுடன் இணைத்திருந்த ஓவியர் ராஜத்தின் படம் அதற்கானதல்ல. வலையல் விற்ற திருவிளையாடலைச் சித்தரிக்கும் சரியான படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்
       
2010/5/24 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
ThiruviLaiyAdal- vaLai viRRal- S. Rajam.jpg

thangamani

unread,
May 30, 2010, 2:43:43 AM5/30/10
to சந்தவசந்தம்
//நல்ல கருத்துடைய நல்ல முயற்சி. அம்மானை என்ற பிரயோகம் முதல், மூன்றாம்

அடிகளில்
> வாராது. அம்மானைப் பாடலில் வெண்டளை பயில்வது சிறப்பு. ‘தேகம்தழல்’ என்ற
> இடத்தில் ஓசை தட்டுகிறது. இறுதியடிலும் எதுகை மோனை இருப்பது அழகு, ஆனால் சில
> அம்மானைப் பாடல்களில் இறுதியடி எதுகை இல்லாதிருப்பதையும் காணலாம//>
> அனந்த்//

திரு.அனந்த் அவர்களுக்கு,

அம்மானைப் பற்றிய தங்களின் விளக்கத்தால்
என் ஐயம் தெளிந்தேன்.மிக்க நன்றி!
மீண்டும் சரிசெய்து பாடலை இட்டிருக்கிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

கனல்கரத்தான் தீப்பறக்கும் கண்விழியான் வெந்தழலான்
சினச்சிரிப்பில் முப்புரமும் செந்தீயாம் அம்மானை!
சினச்சிரிப்பில் முப்புரமும் செந்தீயாம் ஆமாயின்
மனங்கொண்ட அன்பர் மலையாரோ அம்மானை!
முனம்வந்து ஆல்கீழ் மோனமுற்றார் அம்மானை!

On May 29, 8:05 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அன்புள்ள தங்கமணி,...
>
> read more »

>
> நல்ல கருத்துடைய நல்ல முயற்சி. அம்மானை என்ற பிரயோகம் முதல், மூன்றாம் அடிகளில்
> வாராது. அம்மானைப் பாடலில் வெண்டளை பயில்வது சிறப்பு. ‘தேகம்தழல்’ என்ற
> இடத்தில் ஓசை தட்டுகிறது. இறுதியடிலும் எதுகை மோனை இருப்பது அழகு, ஆனால் சில
> அம்மானைப் பாடல்களில் இறுதியடி எதுகை இல்லாதிருப்பதையும் காணலாம
>
> அனந்த்

> 2010/5/26 thangamani <tvthangam...@gmail.com>

> > > > நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்- Hide quoted text -

SUBBAIER RAMASAMI

unread,
May 30, 2010, 8:26:13 AM5/30/10
to santhav...@googlegroups.com

அம்மானைப் பாடல் கொண்டுதரும் அனந்திற்கோர் அம்மானை

நம்மவ ராம் அனந்த் நாடும் உறவெதுவோ

தெம்போடு மாமாவாய்ச் செப்புவேன்நான் அம்மானை

தெம்போடு மாமாவாய்ச் செப்புகிறீ ராமாகில்

அம்மையார் கோபம் அடையாரோ அம்மானை

அம்மானை’(க்) கொண்டிங்கு அனந்த் வருவார் அம்மானை

இலந்தை

2010/5/30 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
May 30, 2010, 9:45:08 AM5/30/10
to santhav...@googlegroups.com
சிலேடை நயத்தோடு அமைந்த இனிய பாடல்.

பாடலில் 'அஞ்சுவரோ' என்று வரும் இடத்தை, விளக்கத்தில் சொன்னாற்போல் 'அஞ்சாரோ' என்று அமைத்தால் இன்னும் தெளிவாக்கும்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2010/5/29 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

8. <> சீர் தருவோன் <>

இப்போது முழுப்பாடலையும் சேர்த்துப் படிப்போம்:

இரத்தற் குகந்ததென ஏடமரும் வேதனது

சிரத்தைக் கரம்ஏந்திச் செல்லும்காண் அம்மானை

சிரத்தைக் கரம்ஏந்திச் செல்லுவரே ஆமாயின்

சிரம்குவிக்க அஞ்சுவரோ சேவிப்போர் அம்மானை? 

சிரத்தையுடை யோர்க்குரிய சீர்தருவார் அம்மானை!

(ஏடு அமர் வேதன் = தாமரைப் பூவிதழின் மேல் அமர்ந்து மறைகளை ஓதும் பிரமதேவன். சிரத்தை=  அன்பு, முதன்மை, நம்பிக்கை, விசுவாசம், ஊற்றம்) 

அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 30, 2010, 11:05:50 AM5/30/10
to santhav...@googlegroups.com

>சிலேடை நயத்தோடு அமைந்த இனிய பாடல்.

நன்றி.  இறுதியடியில் வரும் சிலேடை அம்மானைக்கு முதுகெலும்பு போன்றது! மற்ற இடங்களிலும் சிலேடை பயில வைத்தல் மேலும் சிறப்பு.

>பாடலில் 'அஞ்சுவரோ' என்று வரும் இடத்தை, விளக்கத்தில் சொன்னாற்போல் 'அஞ்சாரோ' என்று அமைத்தால் இன்னும் தெளிவாக்கும்.

அஞ்சல், அஞ்சுதல் இரண்டும் ஒரே பொருள் (= பயப்படல்; ajncutal = to fear, dread) உடையன அன்றோ? (அஞ்சுவரோ = பயப்படுவார்களோ; அஞ்சாரோ = பயப்படாரோ)

>அன்புடன்,
>வி. சுப்பிரமணியன்

அனந்த் 30-5-2010

2010/5/30 Siva Siva <naya...@gmail.com>

--

Soundar

unread,
May 30, 2010, 11:17:21 AM5/30/10
to santhav...@googlegroups.com
அஞ்சாரோ, அஞ்சுவரோ  என்பனவற்றுள் ஒரு நுண்ணிய வேறுபாடு இருப்பதாக என்கணிப்பு.
அஞ்சாரோ-அஞ்ச மாட்டார்களோ (ஒருவேளை  பயந்துவிடுவார்களோ என்ற ஐயத்தை  உள்ளடக்கியது)
அஞ்சுவரோ-அஞ்சுவார்களோ, (மாட்டார்கள் என்ற உறுதியான விடையை  உள்ளடக்கியது)
சிவா  சுரமணியன் சொல்வதுபோல் அஞ்சாரோ என்பதே இங்குப் பொருத்தம் என்று நினைக்கிறேன்.
சௌந்தர்

2010/5/30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 30, 2010, 11:46:07 AM5/30/10
to santhav...@googlegroups.com
> அஞ்சுவரோ-அஞ்சுவார்களோ, (மாட்டார்கள் என்ற உறுதியான விடையை  உள்ளடக்கியது)
 
அஞ்சுவரோ- என்பது அஞ்சுவார்களோ என்ற பொருளுடன் அஞ்ச மாட்டார்கள் என்ற விடையையும் தரக்கூடியது என்று கொண்டால், அது இன்னுமொரு நயத்திற்குத் துணைபுரிய வாய்ப்பிருக்கிறது.
சிரம்குவிக்க அஞ்சுவரோ சேவிப்போர் அம்மானை?” என்பதை சிரத்தைக் கரம் ஏந்திச் செல்லுபவர் என்பதால் அவரை வழிபட வரும் அடியார்கள் அவரை அணுக அஞ்சுவார்கள் அன்றோ?; அல்லது, இறைவன் சிரத்தைக் கரம் ஏந்திச் செல்வதன் காரணம் தெரிந்த அடியார்கள் அவரை அணுக அஞ்சமாட்டார்கள்” என்று இருவழியில் பொருள் கொள்ளலாம்! (இது எப்படி?). ஆனால், இந்தக் கேள்வி சூரவல்லியிடமிருந்து வருவதால், அஞ்சாரோ என்பதே தெளிவான ஆட்சி ஆகும். எனவே:

இரத்தற் குகந்ததென ஏடமரும் வேதனதுசிரத்தைக்

கரம்ஏந்திச் செல்லும்காண் அம்மானை

சிரத்தைக் கரம்ஏந்திச் செல்லுவரே ஆமாயின்

சிரம்குவிக்க அஞ்சாரோ சேவிப்போர் அம்மானை? 

சிரத்தையுடை யோர்க்குரிய சீர்தருவார் அம்மானை! 

அனந்த்

2010/5/30 Soundar <rsou...@gmail.com>

Soundar

unread,
May 30, 2010, 2:43:58 PM5/30/10
to santhav...@googlegroups.com
Knee jerk reaction என்பார்களே, அதுபோன்று, இலந்தையாரின் அம்மானைப் பாடலைப் படித்ததும் எழுதியது. தவறு இருப்பின் மன்னிக்கவும்.

அம்மானின் பின்சென்ற அம்மன்னன் பேருடையார்
அம்மானாய் இன்ற றிமுகமாம் அம்மானை
அம்மானாய் இன்ற றிமுகமாம் ஆமாயின்
அம்மானாய் ஆரணியம் வந்ததுயார் அம்மானை?
. . அம்மானே  அம்மானாய் அன்றுவந்தார் அம்மானை!

சௌந்தர்

பி.கு. மாமா மாரீசன் மான் வடிவில் வந்ததைக் குறித்தது.

2010/5/30 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 8, 2010, 7:50:29 PM6/8/10
to santhav...@googlegroups.com

8. <> யாரே காண்பார்? <>

கடந்த இரண்டு வாரங்களாகப் பாடல்நல்லூர் விழாக்கோலம் பூண்டு அமர்க்களப்பட்டது அம்மானை வாசகர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அவ்வூர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி  மாதத்தில் நடக்கும் பெருவிழாவின் இறுதிக் கொண்டாட்டமாக அருள்பொழிகண்ணி அம்மைக்கும் மாதொரு பாகனாருக்கும் பௌர்ணமி நாளில் திருமண வைபவம் அமையும். அதைக்காண அண்டைக் கிராமங்களான கூத்தநல்லூர், ஆற்றூர், சோலையூர், பழனக்குடில் ஆகியவற்றிலிருந்தும் மக்கள் திரளாக வருவார்கள். திருமணம் என்ற நிகழ்ச்சி வழியாக அகிலப் பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தாக்களாக இறைவனும் இறைவியும் ஒன்று சேரும் தத்துவத்தை ஆலயத்தில் நடக்கும் வழிபாட்டு முறைகளும் பெரியோர்களின் சொற்பொழிவுகளும் மக்களுக்கு விளக்கும். அந்த வேளையில், நம் அம்மானைப் பெண்களான சமத்காரவல்லியும் சூரவல்லியும் தம் தோழியரோடு பற்பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள், அந்தக் காரணத்தால், வழக்கமாக அவர்கள் வீடுகளில் நாம் காணும் திண்ணை மேடை அம்மானை ஆட்டமும் பாடலும் சென்ற பதினைந்து நாட்களாக நமக்குக் கிட்டவில்லை. இன்று மீண்டும் அவர்கள் தொடர்வதாகக் காதில் விழுந்ததால் நாமும் அங்குச் சென்று வழக்கம் போல ஒட்டுக் கேட்கத் தயாராகிறோம்.

பற்றற்ற வாழ்வின் பெருமையை விளக்கும் சிவபெருமானின் குணநலன்களில் பெரும் ஈடுபாடு கொண்ட சமத்காரவல்லி, இன்று கூத்தப்பெருமானின் ஆட்டத்தில் பொதிந்துள்ள தத்துவத்தில் மனத்தைச் செலுத்தியவளாக, அம்மானைப் பாடலைத் தொடங்குகிறாள்:

ஊரெல்லாம் தூங்குகையில் உன்மத்தர் தாம்ஆடச்

சீராய்ச் சுடுகாட்டைச் சேர்ந்திடுவார் அம்மானை

ஒருபுறம், நாம் ஆலய விழாவில் கண்டபடி, இறைவியை மணம்புரிந்து உலகோர்க்கு அருள் வழங்கும் ஐயன், மறுபுறம் அதற்கு நேர்மாறான இன்னொரு கோலத்தையும் கொள்வான். தானே அனைத்துமாய் நிற்கும் ஆனந்த நிலையைக் காட்டும் உன்மத்தக் கோலம் அது. படைக்கப்பட்ட யாவும் தன்னுள் அடங்கி இருப்பதையும், அவற்றைத் தோன்றல்-மறைதல் என்னும் தொடர் நாடகத்தில் தான் மாட்டிவைக்கும் மாயா ஜாலத்தையும், உன்மத்தக் கோலம் பூண்ட இறைவன் ஒரு மகிழ்ச்சி நடனமாக ஆடிக் காண்பிப்பான். அந்த ஆட்டத்திற்காக அவன் தேர்ந்தெடுக்கும் களம் மக்கள் நடமாட்டமற்ற சுடுகாடு. ஆசாபாசங்களைச் சுட்டெரித்த ஞானியர் உள்ளத்தைக் குறிக்கும் அற்புதத் தலம் அது. அவர் தேர்ந்தெடுத்த நேரமோ மாயையின் வசத்தால் புலன்வழிப் பற்றில் சிக்கி, அறியாமை என்னும் தூக்கத்தில் மக்கள் ஆழ்ந்திருக்கும் நேரம்.என்று பொருள் விளக்கிய சமத்காரவல்லி, ”என் அன்புத் தோழியே! இத்தகைய நம் இறையின் இந்த ஆட்டத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்ற கேள்வியுடன்  சூரவல்லியை நோக்குகிறாள்.
 
உடனே, சூரவல்லி தன் வகைக்கான அம்மானை அடிகளில் கீழ்க்காணும் வினாவை விடுக்கிறாள்:

சீராய்ச் சுடுகாடு சேர்வாரே ஆமாகில்

யார்காண்பார் ஆங்கவர்தம் ஆட்டத்தை அம்மானை?”

எளிதில் விளங்காத ஒரு புதிராகத் தோன்றும் சிவபிரானது இடுகாட்டு ஆட்டம் பற்றி நீ சொல்லும் தத்துவ விளக்கமெல்லாம் கேட்க  நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர் தனது அற்புத நடனத்திற்கெனத் தேர்ந்தெடுத்த இடத்தின் பொருத்தம் தான் எனக்கு இன்னும் புரியாத ஒன்றாய் இருக்கிறது. நாட்டியம், பாட்டு போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து இரசிக்க மக்கள் கூட்டம் தேவையான ஒரு அம்சமல்லவா? இவரானால், மக்களெல்லாம் செத்துக் கிடக்கும் இடமான சுடுகாட்டில், அதிலும் பகல் வேளையின் வந்திருந்த ஓரிரு உறவினர் கூட உறங்கச் செல்லும் நள்ளிரவு நேரத்தில், நடனமாடினால் யார்தாம் அதனைக் காணல் ஆகும்?” என்று கேட்ட சூரவல்லியின் அங்கதம் தொனிக்கும் குரல், நாம் சென்ற தடவை அவளிடம் கண்ட மனமாற்றம், அதாவது அவள் சிவனைக் கேலி செய்வதை விடுத்து அவனிடம் நாட்டம் கொண்டது- தாற்காலிகமானதோ என்று ஐயம் கொள்ள வைக்கிறது. சமத்காரவல்லி அவ்வாறு நினைக்கிறாளா என்பது அவள் தரும் விடையிலிருந்து நமக்குத் தெரிவதும் இல்லை:

சூரவல்லி, கூத்தரசனின் இடுகாட்டு ஆடலை யார் காண்பார் என்றா கேட்டாய்? இதோ சொல்கிறேன்,

ஊரெல்லாம் காணும் உடல்விடும்போ(து) அம்மானை! 

ஆம், இந்த ஊரிலுள்ள எல்லோரும், ஒருவர் பாக்கியின்றி, காலம் காலமாக என் ஈசனின் திருநடனத்தைக் கண்டிருக்கிறார்கள், காணவும் போகிறார்கள். எப்படி, என்று தெரியுமா? அவர்கள் இந்த ஊன உடலை விட்டேகும் இடமான மயானத்தில், எம் பிரான் அவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழலிலிருந்து உய்யுமாறு செய்யத் திருவுள்ளம் கொண்டு தனது நடனத்தை உடல் மறைந்த நிலையில் சூக்கும சரீரம் பெறும் ஜீவர்களுக்கும் பேயாய்த் திரியும் ஆவிகளுக்கும் காட்டி அருள்வான். அந்த அளவிலாக் கருணையை உள்வாங்கிக் கொண்ட சீவர்கள் சிவபதத்தை அடைவார்கள். எனவே ஐயனின் திருநடம் காண ஆளில்லையே என்று நீ வருந்த வேண்டிய தேவையே இல்லையடி!என்று உற்சாகமும் உணர்ச்சியும் கலந்த குரலில் சமத்காரவல்லி கூறி அம்மானை ஆட்டத்தை முடிக்கிறாள். நாம்  முழுப்பாடலையும் வாய்விட்டுச் சொல்லிப் பார்த்து சமத்காரவல்லி எளிதாக அள்ளி வீசிய தத்துவக் கருத்துக்களின் ஆழத்தை அசைபோட்டவாறே அவ்விடத்தை விட்டுத் திரும்புகிறோம். உடல்விடும்போது காண்பார்என்பதற்கு, பஞ்சபூதங்களால் ஆகிய உடம்பை மெய்யென்று கொள்ளும் நினைப்பை விட்டுத் தமது உண்மைச் சொருபத்தை உணரும் வேளையில் சிவப்பிரம்மத்தைத் தம்முள் காண்பார் என்ற பொருளும் நமக்கு உறைக்கிறது:  

ஊரெல்லாம் தூங்குகையில் உன்மத்தர் தாம்ஆடச்

சீராய்ச் சுடுகாட்டைச் சேர்ந்திடுவார் அம்மானை;

சீராய்ச் சுடுகாடு சேர்வாரே ஆமாகில்

யார்காண்பார் ஆங்கவர்தம் ஆட்டத்தை அம்மானை?

ஊரெல்லாம் காணும் உடல்விடும்போ(து) அம்மானை!

அனந்த் 8-6-2010

2010/5/24 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Jun 8, 2010, 8:56:31 PM6/8/10
to santhav...@googlegroups.com
// உடல்விடும்போது காண்பார்என்பதற்கு, பஞ்சபூதங்களால் ஆகிய உடம்பை மெய்யென்று கொள்ளும் நினைப்பை விட்டுத் தமது உண்மைச் சொருபத்தை உணரும் வேளையில் சிவப்பிரம்மத்தைத் தம்முள் காண்பார் என்ற பொருளும் நமக்கு உறைக்கிறது:   //

அந்தத்தில் நல்ல தத்துவம்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2010/6/8 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

8. <> யாரே காண்பார்? <>

.......

ஊரெல்லாம் தூங்குகையில் உன்மத்தர் தாம்ஆடச்

சீராய்ச் சுடுகாட்டைச் சேர்ந்திடுவார் அம்மானை;

சீராய்ச் சுடுகாடு சேர்வாரே ஆமாகில்

யார்காண்பார் ஆங்கவர்தம் ஆட்டத்தை அம்மானை?

ஊரெல்லாம் காணும் உடல்விடும்போ(து) அம்மானை!

அனந்த் 8-6-2010

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 12, 2010, 10:25:06 PM6/12/10
to santhav...@googlegroups.com

9. <>  காட்டில் நடமாட்டம் <>

அம்மானைப் பெண்களைப் பார்த்து அவர்கள் ஆட்டத்தையும் அதனூடே இயற்றும் பாட்டையும் நாம் கேட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன என்ற நினைப்பு திடீரென என் மனத்தில் தோன்றியதால் பாடல்நல்லூரை நோக்கி உடனே கிளம்பினேன். போகும் வழியில் தொலைக் காட்சியிலும் செய்தித் தாள்களிலும் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலகக் கால்பந்து விளையாட்டு பற்றிய தகவல்கள் அமர்க்களமாக அடிபட்டுக் கொண்டிருப்பதை எண்ணியவாறே சென்றேன். என்னைக் கண்டதும், ஆட்டத்தில் பாட்டிலும் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் இணைபிரியாத நட்புடன் விளங்கும் சமத்காரவல்லியும் சூரவல்லியும்  புன்னகையுடன் வரவேற்று அவர்கள் அம்மானை ஆடும் தளமாகிய சமத்காரவல்லியின் வீட்டுத் திண்ணையில் அமரும்படி செய்கை காட்டினார்கள். முன் நாட்களில் நான் மறைந்திருந்து ஆட்டத்தைப் பார்த்து உங்களுக்குத் தகவல் கொடுத்துக் கொண்டிருந்ததைக் கவனித்தும் கவனியாதது போலிருந்த அந்த அம்மானைப் பெண்கள் இப்போது என்னை அதிகாரபூர்வமாக அங்கீகாரம் செய்து விட்டதை எண்ணி நான் அகமகிழ்ந்தேன். அத்தோடு என் கண்ணையும் காதையும் தீட்டிக்கொண்டு அவர்கள் தொடங்கவிருக்கும் ஆடல் பாடலைக் கவனிக்கலானேன்.

வழக்கம்போல, கணீரென்ற இனிய குரலில், சிவபெருமான் பெருமை பேசும் அம்மானைப் பாடல் ஒன்றின் முதலிரு அடிகளை இயற்றிப் பாடியவாறே சமத்காரவல்லி ஆட்டத்தைத் தொடங்கினாள்:

காண்பரொரு கால்மதுரை மன்னரென வேறொருகால்

சேண்தில்லைக் காட்டில் திரிவார்காண் அம்மானை

சூரவல்லி! இவ்வுலகில் வாழும் தம் அன்பர்கள் தம்மைக் கண்டு தொழுது இன்பம் துய்த்துப் பல பேறுகள் அடைவதற்காகக் கைலாயத்தை விட்டுப் பல திருத்தலங்களில் காட்சிதரும் எங்கள் ஐயனின் கருணையை எப்படி நான் எடுத்துரைப்பேனடி? ஒவ்வொரு

தலத்திலும் தமது சிறப்பை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட வேடங்கள் தாம் எத்தனை, எத்தனை! பல வேளைகளில் தாம் பூண்ட கோலங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதையும் கூடப் பொருட்படுத்த மாட்டார் எங்கள் அருட்கடல். எப்படி என்று

விளக்குகிறேன் கேள். கடந்த சித்திரைத் திங்களில் நாம் பாடி மகிழ்ந்தவாறு மதுரையம்பதியில் அன்னை தடாதகைப் பிராட்டியின் கணவராய் அரியணையில் அரசர் கோலத்தில் அற்புதமாகக் காட்சி தரும் அண்ணல் அவரைப் போற்றிப் பாடும் புலவர்களுக்கும்

அடியார்களுக்கும் பொன்னும் பொருளும் அருளி அவர்கள் இகத்திலும் பரத்திலும் சுகம் பெறச் செய்வார். இத்தகைய நம் ஈசனார், கூடல்மாநகருக்குச் சற்றுத் தொலைவிலுள்ள தில்லைமரங்கள் நிறைந்த காடுகளை உடையதால் தில்லை மாநகர் என்று பெயர்படைத்த திருத்தலத்தில் எல்லோரும் கூடும் பொதுவான இடத்தில், இடையறாது ஓடியும் சுழன்றும் கூத்தாடிக் கொண்டிருக்கும் கோலத்தை மேற்கொள்வார். தில்லை மூவாயிரவர் என்னும் அந்தணர்கள் ஓதும் வேத மந்திரங்களாலும், சிவநெறிச் செல்வர்கள் ஓதும் திருமுறைகளாலும் சதா துதிக்கப் படுபவராகிய தில்லையம்பலத்தார் தம்மைத் தொழுவோர்க்கு அவர் தமது ஆட்டத்தின் உட்பொருளை உணர்த்தி, வீட்டுப் பேற்றை அளிப்பார்“ - என்று கூறி நிறுத்திய சமத்காரவல்லியை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அம்மானைக் காய்களை அவளிடமிருந்து தான் பெற்றுக் கொண்ட சூரவல்லி தன் வகைக்குப் பாடலின் அடுத்த இரு அடிகளை இப்படி அமைத்தாள்:

சேண்தில்லைக் காட்டில் திரிவாரே ஆமாகில்

பூணுமுடல் தள்ளாடிப் போனதுவோ அம்மானை?

(சேண்= சேய்மை, தொலைவு)

இந்தக் கேள்வியில் பொதிந்துள்ள கேலியை மேலும் விளக்கும் வகையில், “அம்மம்மா! உங்கள் சிவனாருக்குத் தான் என்ன அலைச்சல், என்ன அலைச்சல்! தமது அன்பர்களுக்கு அருள் செய்ய வேண்டியது நியாயமான காரியம் தான். அதற்காக இப்படியா

ஒருவர் ஒருகால் அரச போகத்தை அனுபவிப்பவராகவும், மறுகணத்தில் அதை அடியோடு துறந்து ஒரு முள் நிறைந்த காட்டுப் பிரதேசத்தில் நடமாடுபவராகவும் தம்மை வருத்திக் கொள்வார்? அழகுதான் போ! அது கிடக்க, காட்டுப் பிரதேசமாகிய அந்தத் தில்லையில் அலைந்து திரிவதனால் அவர் களைத்துச் சளைத்துப் போக மாட்டாரோ? சொல்லடி, என் சமத்காரத் தோழிஎன்று நீட்டி முழக்கித் தன் அம்மானைக் காய்களைப் பொறுக்கி வைத்துக் கொண்டு தோழியின் பக்கம் ஆட்டத்தை விட்டாள்.

நல்ல வேளை, இத்தோடு நிறுத்தினாள் இவள்! இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால்,  முந்தைய ஆட்டங்களில் தான் கேட்ட சிவனார் இரந்து ஊண் பெறுவதையும் சேர்த்துக் கூறி,  என் சிவனை இன்னும் களைத்துப் போக வைத்திருப்பாள் இவள் என்று தன் மனத்தில் எண்ணிய சமத்காரவல்லி, தோழியின் போலி அக்கறைக்கு ஏற்ற பதிலை மனத்தில் எண்ணிப் பார்த்தபின், அம்மானைக் காய்களை மேலே எறிந்தவாறு,

கானில்நட மாடுவதில் கைதேர்ந்தார் அம்மானை!

(கான் = கானகம், காடு)

என்று பாடலின் இறுதியடியை அழுத்தமாக இசைத்தாள். இதைக் கேட்ட தோழியின் முகத்தில் தெரிந்த குழப்பதை நீக்குவதற்காக மேல் விளக்கமும் கொடுத்தாள்: எம் இறைவனார் பேரில் உனக்கு உள்ள அக்கறைக்கு நான் எப்படியடி நன்றி சொல்வேன்? தில்லை மரங்கள் நிரம்பிய கானகத்தில் எம் இறைவன் அலைவதால் உடல் வாடிப் போகுமோ என்று நீ கவலையே பட வேண்டாம்! சொல்லப் போனால், மதுரை மாநகரும் கதம்ப விருக்ஷங்கள் அடர்ந்துள்ள கதம்பவனமென்னும் காட்டுப் பிரதேசம் தான். திருமுறை தந்த அடியார்களால் பெரிதும் சிறப்பித்துப் பாடப் பெற்ற இந்த இரண்டு காட்டுத் தலங்களிலும் நடமாடுவதை எம் ஈசர் மிகவும் விரும்புபவர் என்று உனக்குத் தெரியாமலிருக்காது. இவை போதாதென்று தினமும் நள்ளிரவு நேரத்தில், மயான பூமியாகிய சுடுகாட்டிலும் பேய்க்கணங்கள் காண நடம் ஆடுவார். ஆகவே காட்டில் நடமாடித் திரிவது அவருக்குக் கைவந்த கலை என்று புரிந்துகொள். இன்னொரு சேதியும் சொல்கிறேன் கேள். ஒருகணம் தில்லைத் தலத்தில் பொன் கூரை வேய்ந்த அம்பலத்தில், தம் இடது காலை உயரத் தூக்கியாடும் எம்மவர்  மற்றொருகால், கூடல் மாநகரில் மீனாக்ஷிசுந்தரர் ஆலயத்தில் உள்ள வெள்ளியம்பலத்தில், தமது வலது காலைத் தூக்கி ஆடுவார். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? ஒருவகையில்  உன்னைப் போலவே ஐயன் உடல் நோவைப் பற்றிக் கவலைப்பட்ட ஒரு பாண்டிய மன்னன் என் ஐயனே! தில்லைச் சிற்றம்பலத்தில், இடது காலையே சதா தூக்கியும் வலது பாதத்தைப் பூமியில் பதித்தும் நடமாடி நடமாடி உன் இருகால்களும் சோர்வடைந்து போயிருக்கும். அதனால் ஒரு மாற்றத்திற்காக இந்த மதுரையில் பொன்னம்பலத்தில் கால்மாற்றி ஆடலாகாதா?” என்று மனமுருக வேண்டினான். அதை நிறைவேற்றவே சிவபெருமான் மதுரை வெள்ளியம்பலத்தில், ’அதிரவீசியாடிஎன்னும் திருநாமத்துடன் தமது வலது காலை உயரத் தூக்கியும் இடது பாதத்தைப் பூமியில் ஊன்றியும் ஆடுவார். இப்படிக் கால்மாற்றி ஆடும் ஆட்டத்தை ஆடிப் பழகிய எங்கள் அரனாரின் உடலுக்கு மதுரைக்கும் தில்லைக்குமாக நடமாடுவதால் ஒருவிதமான ஊறும் வாராது. 

இவ்வாறு சமத்காரவல்லி விளக்கம் தருவதற்கும் பாடல்நல்லூர் வீடுகளில் வாசலிலும் உள்ளிலும் மாலை நேர விளக்கு வைக்கப் பெண்டிர் வருவதற்கும் சரியாக இருந்தது. நானும் இருட்டுவதற்குள் என் வீட்டை அடையும் நோக்கத்துடன் என் நடையைக் கட்டினேன். வழக்கம்போல, நடக்கையில் நான் கேட்ட அழகிய அம்மானைப் பாட்டு என் காதில் ரீங்காரமிட்டவாறு இருந்தது. அத்தோடு, நம் இறைவனான நடராஜன் கால்களை மாற்றி மாற்றித் தன் ஆட்டத்தில் தேர்ந்தவராய் இருப்பதைக் கால்பந்து விளையாட்டுக்காரர்கள் தம் சிந்தையில் இருத்தி விளையாடினால் உலகக் கோப்பையை எளிதில் கைப்பற்றலாமே என்ற நினைப்பும் என் மனத்தில் நிழலாடியது!

காண்பரொரு கால்மதுரை மன்னரென வேறொருகால்

சேண்தில்லைக் காட்டில் திரிவார்காண் அம்மானை

சேண்தில்லைக் காட்டில் திரிவாரே ஆமாகில்

பூணுமுடல் தள்ளாடிப் போனதுவோ அம்மானை?

கானில்நட மாடுவதில் கைதேர்ந்தார் அம்மானை!

.... அனந்த் 12-6-2010

2010/6/8 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

thangamani

unread,
Jun 13, 2010, 3:51:00 AM6/13/10
to சந்தவசந்தம்
அம்பலத்தார் அம்மானைப் பாடல்களைச்
செம்மையுறப் பாடி ஆடும் பெண்களுக்கென்
வாழ்த்து!

மதுரைப் பொன்னம்பலத்தில்
கால்மாற்றியாடியதற்கு ஒரு பாடல் உண்டு.
அதைக் கேட்க முடியுமோ?

//வீட்டுப் பேற்றை
அளிப்பார்“ //- என்று கூறி நிறுத்திய சமத்காரவல்லியை

வீடுப் பேற்றை என்றிருக்கலாமோ?

அன்புடன்,
தங்கமணி.

On Jun 13, 7:25 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> 9. <>  *காட்டில் நடமாட்டம்* <>...

>
> அம்மானைப் பெண்களைப் பார்த்து அவர்கள் ஆட்டத்தையும் அதனூடே இயற்றும் பாட்டையும்
> நாம் கேட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன என்ற நினைப்பு திடீரென என் மனத்தில்
> தோன்றியதால் பாடல்நல்லூரை நோக்கி உடனே கிளம்பினேன். போகும் வழியில் தொலைக்
> காட்சியிலும் செய்தித் தாள்களிலும் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலகக்
> கால்பந்து விளையாட்டு பற்றிய தகவல்கள் அமர்க்களமாக அடிபட்டுக் கொண்டிருப்பதை
> எண்ணியவாறே சென்றேன். என்னைக் கண்டதும், ஆட்டத்தில் பாட்டிலும் தமக்குள் போட்டி
> போட்டுக் கொண்டிருந்தாலும் இணைபிரியாத நட்புடன் விளங்கும் சமத்காரவல்லியும்
> சூரவல்லியும்  புன்னகையுடன் வரவேற்று அவர்கள் அம்மானை ஆடும் தளமாகிய
> சமத்காரவல்லியின் வீட்டுத் திண்ணையில் அமரும்படி செய்கை காட்டினார்கள். முன்
> நாட்களில் நான் மறைந்திருந்து ஆட்டத்தைப் பார்த்து உங்களுக்குத் தகவல்
> கொடுத்துக் கொண்டிருந்ததைக் கவனித்தும் கவனியாதது போலிருந்த அந்த அம்மானைப்
> பெண்கள் இப்போது என்னை அதிகாரபூர்வமாக அங்கீகாரம் செய்து விட்டதை எண்ணி நான்
> அகமகிழ்ந்தேன். அத்தோடு என் கண்ணையும் காதையும் தீட்டிக்கொண்டு அவர்கள்
> தொடங்கவிருக்கும் ஆடல் பாடலைக் கவனிக்கலானேன்.
>
> வழக்கம்போல, கணீரென்ற இனிய குரலில், சிவபெருமான் பெருமை பேசும் அம்மானைப் பாடல்
> ஒன்றின் முதலிரு அடிகளை இயற்றிப் பாடியவாறே சமத்காரவல்லி ஆட்டத்தைத்
> தொடங்கினாள்:
>

> *காண்பரொரு கால்மதுரை மன்னரென வேறொருகால்***
>
> *சேண்தில்லைக் காட்டில் திரிவார்காண் அம்மானை***
>
> * *

>
> ”சூரவல்லி! இவ்வுலகில் வாழும் தம் அன்பர்கள் தம்மைக் கண்டு தொழுது இன்பம்
> துய்த்துப் பல பேறுகள் அடைவதற்காகக் கைலாயத்தை விட்டுப் பல திருத்தலங்களில்
> காட்சிதரும் எங்கள் ஐயனின் கருணையை எப்படி நான் எடுத்துரைப்பேனடி? ஒவ்வொரு
>
> தலத்திலும் தமது சிறப்பை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட வேடங்கள் தாம்
> எத்தனை, எத்தனை!
> பல வேளைகளில் தாம் பூண்ட கோலங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதையும் கூடப்
> பொருட்படுத்த மாட்டார் எங்கள் அருட்கடல். எப்படி என்று
>
> விளக்குகிறேன் கேள். கடந்த சித்திரைத் திங்களில் நாம் பாடி மகிழ்ந்தவாறு
> மதுரையம்பதியில் அன்னை தடாதகைப் பிராட்டியின் கணவராய் அரியணையில் அரசர்
> கோலத்தில் அற்புதமாகக் காட்சி தரும் அண்ணல் அவரைப் போற்றிப் பாடும்
> புலவர்களுக்கும்
>
> அடியார்களுக்கும் பொன்னும் பொருளும் அருளி அவர்கள் இகத்திலும் பரத்திலும் சுகம்
> பெறச் செய்வார். இத்தகைய நம் ஈசனார், கூடல்மாநகருக்குச் சற்றுத் தொலைவிலுள்ள
> தில்லைமரங்கள் நிறைந்த காடுகளை உடையதால் தில்லை மாநகர் என்று பெயர்படைத்த
> திருத்தலத்தில் எல்லோரும் கூடும் பொதுவான இடத்தில், இடையறாது ஓடியும் சுழன்றும்
> கூத்தாடிக் கொண்டிருக்கும் கோலத்தை மேற்கொள்வார். தில்லை மூவாயிரவர் என்னும்
> அந்தணர்கள் ஓதும் வேத மந்திரங்களாலும், சிவநெறிச் செல்வர்கள் ஓதும்
> திருமுறைகளாலும் சதா துதிக்கப் படுபவராகிய தில்லையம்பலத்தார் தம்மைத்
> தொழுவோர்க்கு அவர் தமது ஆட்டத்தின் உட்பொருளை உணர்த்தி, வீட்டுப் பேற்றை
> அளிப்பார்“ - என்று கூறி நிறுத்திய சமத்காரவல்லியை ஒருமுறை ஏற இறங்கப்
> பார்த்துவிட்டு
> அம்மானைக் காய்களை அவளிடமிருந்து தான் பெற்றுக் கொண்ட சூரவல்லி தன் வகைக்குப்
> பாடலின் அடுத்த இரு அடிகளை இப்படி அமைத்தாள்:
>

> *சேண்தில்லைக் காட்டில் திரிவாரே ஆமாகில்***
>
> *பூணுமுடல் தள்ளாடிப் போனதுவோ அம்மானை**?*
>
> *(**சேண்= சேய்மை**, **தொலைவு) ***

>
> இந்தக் கேள்வியில் பொதிந்துள்ள கேலியை மேலும் விளக்கும் வகையில், “அம்மம்மா!
> உங்கள் சிவனாருக்குத் தான் என்ன அலைச்சல், என்ன அலைச்சல்! தமது அன்பர்களுக்கு
> அருள் செய்ய வேண்டியது நியாயமான காரியம் தான். அதற்காக இப்படியா
>
> ஒருவர் ஒருகால் அரச போகத்தை அனுபவிப்பவராகவும், மறுகணத்தில் அதை அடியோடு
> துறந்து ஒரு முள் நிறைந்த காட்டுப் பிரதேசத்தில் நடமாடுபவராகவும் தம்மை
> வருத்திக் கொள்வார்? அழகுதான் போ! அது கிடக்க, காட்டுப் பிரதேசமாகிய
> அந்தத் தில்லையில்
> அலைந்து திரிவதனால் அவர் களைத்துச் சளைத்துப் போக மாட்டாரோ? சொல்லடி, என்
> சமத்காரத் தோழி” என்று நீட்டி முழக்கித் தன் அம்மானைக் காய்களைப் பொறுக்கி
> வைத்துக் கொண்டு தோழியின் பக்கம் ஆட்டத்தை விட்டாள்.
>
> ”நல்ல வேளை, இத்தோடு நிறுத்தினாள் இவள்! இன்னும் கொஞ்சம் இடம்
> கொடுத்தால்,  முந்தைய
> ஆட்டங்களில் தான் கேட்ட சிவனார் இரந்து ஊண் பெறுவதையும் சேர்த்துக் கூறி,  என்
> சிவனை இன்னும் களைத்துப் போக வைத்திருப்பாள் இவள் ” என்று
>

> read more »

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 13, 2010, 11:25:36 AM6/13/10
to santhav...@googlegroups.com
உங்கள் வாழ்த்துக்களை நான் அடுத்த தடவை பாடல் நல்லூர் செல்லும்போது அம்மானைப் பெண்களுக்குத் தெரிவிக்கிறேன்!
மதுரையில் இருப்பது வெள்ளியம்பலம். கால்மாற்றி ஆடியதற்கான பாடல் இருப்பது எனக்குத் தெரியாது.
வீடு+பேறு புணரும்போது வீட்டுப் பேறு என்றாகும், வீட்டுச் சாவி, மாட்டுக் கொட்டகை என்பன போல.

அனந்த்

2010/6/13 thangamani <tvthan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
Reply all
Reply to author
Forward
0 new messages