அடியேனின் புதிய பாடல்

1 view
Skip to first unread message

Parthasarathy S

unread,
9:06 AM (14 hours ago) 9:06 AM
to santhav...@googlegroups.com

பல்லவி நினைத்த போதிலே துணைக்கு நின்றிடும் வினைக்குள் சிக்காத மாதவா! எனக்கு நின்னருள் நிதமும் சேர்த்திடும் கணக்கைத் தொடர்ந்திடு கோவிந்தா! சரணம் 1 உள்ளத்தில் உனைநிறுத்தி தவமேதும் செய்தேனோ பள்ளத்தில் வீழாமல் எனைக்காத்துக் கொண்டேனோ வெள்ளத்தில் செல்லும்முன் வழி திகைத்து அழைத்தேனோ எள்முனை அளவில்நான் குருபக்தி கொண்டேனோ? சரணம் 2 இருகையும் விட்டு உன்னை அழைத்திட்ட திரௌபதியோ ஒருகைபூ தாள்சேர்க்க பிளிறிட்ட மதக்களிறோ ஒருநாளும் இல்லைநான் சிறுபிள்ளை அறியாயோ? இரங்கியே அருள் செய்யும் திருமால் நீகுறைவாயோ?

--
S. Parthasarathy

Reply all
Reply to author
Forward
0 new messages