You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Santhavasantham
சஷ்டியப்த பூர்த்தி வாழ்த்து
அறுபதாண்டு நிறைவு மணமங்கலம்
திரு . ஆர்.கே குமார் திருமதி : சந்திரலேகா
நாள்: 6-5-2008 இடம் திருக்கடையூர்
தாய்தந்தை மணத்தினைத் தாம்காணும் ஆசையால்
தாம்பெற்ற மக்கள் வேண்டித்
தாமே நடத்திடும் மணவிழா மணிவிழா
சஷ்டியப்த பூர்த்தியாம்
ஓய்வின்றி நாளெலாம் உழைத்திடும் பெற்றோரின்
உன்னதம் தானெண்ணியே
உத்தமப் பிள்ளைகள் தன்நன்றி காட்டிட
ஓங்கிடும் நன் மணவிழா
வாய்க்கின்ற வாழ்விலே நோக்கமும் புதிதாக
மங்கலம் கொள்ளும் விழா
மற்றவர்க்காகவே வாழ்ந்திடும் நிலைமாறி
மனத்தைஉள் திருப்பும் விழா
ஏய்ந்திடும் இவ்விழாக் காண்கின்ற திருகுமார்
எழில்நிறை சந்த்ரலேகா
எந்நாளும் இறைவனின் அருளாலே நலமெலாம்
எய்தியே வாழ்க வாழ்க!
திருமறை ஆய்ந்திடும் நெஞ்சமும் எந்நாளும்
செந்தமிழ் போற்று திறமும்
திருத்தொண்டில் நாட்டமும் தெளிவான நோக்கமும்
சிறப்பான நிர்வாகமும்
ஒருமுறை பார்த்தோரும் உள்ளத்தில் வைத்திடும்
உன்னதப் பண்பூட்டமும்
ஓடோடி எல்லோர்க்கும் உதவிடும் மனப்போக்கும்
உள்ளார்ந்த உபசாரமும்
அருள்ஞான ஆர்வமும் அன்பான நெஞ்சமும்
ஆழமாம் இறைபக்தியும்
அடுத்தடுத்(து) எத்தொண்டு செய்யலாம் எனும்வேட்பும்
அழுத்தமாய்க் கொண்ட மேலோர்
திருகுமார் தன்னரும் `துணையோடு நாளெலாம்
தெம்புடன் வாழ்க வாழ்க!
சிறப்பாக நூறாண்டு நலமோடும் வளமோடும்
செழிப்போடும் வாழ்க வாழ்க!
கவிமாமணி இலந்தை சு இராமசாமி
VETTAI ANANTHANARAYANAN
unread,
May 4, 2008, 11:33:21 AM5/4/08
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to santhav...@googlegroups.com
திரு. குமார் அவர்கள் சிங்கையிலிருந்து இந்தியாவிற்குக் கிளம்பும் முன் அவரிடம் நான் கொடுத்த ஷஷ்டியப்த பூர்த்தி வாழ்த்துப் பாடல்களை இத்துடன் இணைத்துள்ளேன்.