முடுகு வெண்பா

518 views
Skip to first unread message

ramaNi

unread,
Sep 5, 2017, 1:35:28 AM9/5/17
to சந்தவசந்தம்
11.66. முடுகு வெண்பா
(நிலைமண்டில ஆசிரியப்பா)

1. முடுகு, முடுகியல், முடுகு வண்ணம், முடுகியல் வண்ணம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

[முடுகு பற்றிக் கோபாலையரின் ’தமிழிப் பேரகராதி’ நூல்தரும் திரட்டு:

முடுகெனும் பதமது விரைவெனும் பொருள்படும்
முடுகியல் செயுள்தனில் விரைவொலி மிகுவரும்
அருகமை யிருகுறில் முடுகொலி தருமெனில்
ஒருநெடி லெழுத்திலை யெனுமடி முடுகுமே. ... 1

முடுகியல் செயுளடி பிறவடி களையும்
கொடுவரும் தான்தனித் திலையென வறிக
அகவற் றளைவரும் அராகம் முடுகியல்
தகவுறும் குறிலிணைத் தொடர்வினில் எழுமே. ... 2

அளவடி நெடிலடி அறுசீர் எழுசீர்
உளவடி யிவற்றில் முடுகியல் இயலும்
ஒற்றுகள் நிறுத்தும் இருகுறில் முடுகும் 
குற்றொலிக் குறுக்க நெடில்களும் முடுகுமே. ... 3

***
முடுகு வண்ணம், முடுகியல் வண்ணம்

முடுகியல் தொடுத்த அடியொடு பிறவடி
அடுத்துவே றுபடத் தொடர்வரும் ஓட்டம்
முடுகியல் வண்ணம் எனும்பெயர் பெறுமே.
திகிரியின் உருட்டலில் நிகழும் முடுகியல்
உருட்டுவ ணமெனத் தொல்காப் பியம்சொலும். ... 4

தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை
உருகெழு முருகிய முருமென வதிர்தொறு
மருகெழு சிறகொடு மணவரு மணிமயில்
எனவரு மடிகளில் முடுகியல் நிகழ்வே. ... 5

இருகுறில் நிரைநடு காய்ச்சீர் களிலும்
கருவிளச் சீரிலும் முடுகியல் நிகழும்
புளிமா புளிமா எனும்தொடர்ச் சந்தம்
பெரிதமை சீர்கள்கொளும் முடுகுவெண் பாவாம். ... 6

(வேறு: பரணித் தாழிசை)
இருவள வொத்த வடிகள் பயில
. வியலும் யாப்பெனும் கலிங்கப்
பரணியின் போரொலி முடுகியல் செவியில்
. பரவும் வகையிது காணீர்! ... 7

எடுமெடு மெடுமென வெடுத்ததோர் 
. இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
. விடும்விடு மெனுமொலி மிகைக்கவே.

***
2. முடுகு வெண்பா என்பது

கருவிளச் சீர்கள் முடுகொலி கொண்டும்
வரும்தொடர் என்றவை வெண்பா விலிலை
இருகுறில் மையமாம் காய்ச்சீர் புளிமா
வரும்தொடர் வெண்பா முடுகு. ... 1

முடுகொலிச் சீர்களில் மாத்திரை வேறாய்த்
தொடரும் ஒலிகள் முடுகியல் ஆகா
எனவே முடுகுவெண் பாவினில் வண்ணம்
ஒலிக்க வெழுமே முடுகு. ... 2

புளிமா முழுதும் குறிலென வந்தால்
புளிமா பெறுவது மாத்திரை மூன்று
புளிமா வொருநெடில் மாத்திரை நான்கு
புளிமா இருநெடில் ஐந்து. ... 3

புரவி எனும்சொலின் மாத்திரை மூன்று
அரிவை எனிலது மாத்திரை நான்கு
உராய்வே எனிலது ஐந்து. ... 4

புதிது புதிது இயலு முலகு
அதுவு மிதுவு மழகு.  ... 5

புளிமா முழுதும் குறிலென வாகப்
புனைவுறு மேற்பாக் குறளின் முடுகு
தனன தனன எனுமொலிச் சந்தம்
எனவே வருவது வாம். ... 6

இதன்வழி தானே முடுகுவெண் பாவில்
இதந்தரும் வண்ணம் இயலும் வகைகளில்
மாறுதல் இல்லாத சந்தம் ஒலிக்கவே
தேறுதல் கொள்ளும் திறம். ... 7

வண்ணம் ஒலிக்கும் முடுகுவெண் பாவினை
எண்ணம் ஒலிக்க எழுத முயல்பவர்
சந்தமும் வண்ணமும் கூறும் இலக்கணம்
சிந்தையில் கொள்ளல் சிறப்பு. ... 8

*****

11.67. அடிப்படைச் சந்த விலக்கணம்
(வெண்பா)

1. சந்தம் என்பது
(வெண்பா)

சந்த விலக்கண வேராம் லகு-குரு
வந்தன யாப்பில் வடமொழி தந்தே
லகுவெனில் மாத்திரை யொன்றென வாகும்
குருவினில் ஆகுமி ரண்டு. ... 1

தனிக்குறில் மட்டும் லகுவகை யாகும்
தனிக்குறில் ஒற்றும் தனிநெடில், ஒற்றுடன்
என்றிவை யாவும் குரு. ... 2

குறிலொரு மாத்திரை என்றே ஒலிக்கக்
குறில்பினே ஒற்றிரு மாத்திரை யோசை
நெடிலிரு மாத்திரை என்றே ஒலிக்க
நெடில்பினே ஒற்றும் இருமாத் திரையாம்.
குறிலடி யீற்றில், சமமாய் ஒலிக்கும்
அரையடி யீற்றில், இருமாத் திரையாம்.
குறிலிணை யென்றால் இருலகு வாமே
குறிலிணை யொற்றெனில் முன்னால் லகுவும்
அதன்பின் குருவும் என. ... 3

ப-வெனில் லகுவென் றொருமாத் திரைபெறும்
பா-வாம் குருவென் றிருமாத் திரைபெறும்
பல்-மாத் திரையாம் இரண்டு குருவென
பால்-மாத் திரையாம் இரண்டு குருவாம்
பல-மாத் திரையாம் தனித்தனி ஒன்றாம்
பவொரு குறிலாம், லவொரு குறிலாம்
பலம்-எனும் சொல்லில் ப-குறில் லகுவென
லம்-குறில் ஒற்று குரு. ... 4

சந்தங்கள் மாத்திரை எல்லை மொழிவதாய்
வந்ததொல் வெண்பா விது. ... 5

குற்றெழுத்துச் செவ்வி லகுவாகும் நெட்டெழுத்தும்
குற்றொற்றும் நெட்டொற்றும் கோணமாய்த் - தெற்றக்
குருவென்ப தாகும் குறிலும் குருவாம்
ஒருகால் அடியிறுதி யுற்று. ... 6

***
2. அடிப்படைச் சந்தங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தத்த தாத்த தந்த தாந்த
தன-தான தன்ன தய்ய என்றே
அடிப்படைச் சந்தம் எட்டென வாமே. ... 1

பட்டு பாக்கு பந்து பாங்கு 
பரி-பாவி கும்மி பல்லி என்பன
அடிப்படைச் சந்தச் சொற்களென் றறிக. ... 2

அடிப்படைச் சந்தம் இறுதியை நீட்டும்
சார்புச் சந்தம் எட்டென வருமே.
தத்தா தாத்தா தந்தா தாந்தா
தனா-தானா தன்னா தய்யா என்றே
சார்புச் சந்தம் எட்டென வாமே. ... 3

அக்கா காற்றா அந்தோ காங்கோ
நிலா-மானா அண்ணா அய்யா என்பன
சார்புச் சந்தச் சொற்களென் றறிக. ... 4

மேலுள சந்தம் பதினா றாவதில்
தன-வும் தனா-வும் நிரையசை யாகும்
மற்றவை யெல்லாம் நேரசை யாமே. ... 5

சீர்களின் இடைவரும் இடையின வொற்றும்
சிறுபான் மையாக னணம வொற்றும்
மாத்திரை பெறாதே தொலிப்பதும் அறிக.
முக்தி பித்தா மட்டம் உய்த்து
பொய்ப்பல் கர்த்தர் சொற்கள் யாவும் 
மாத்திரை மூன்றாய் ஒலிபெற வருமே. ... 6

***
3. அரைச் சந்தங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிப்படை களுடன் இணைவதா மென்றே
அரைச்சந் தங்கள் கீழுள் ளவையாம்
தகரமெய்(த்) நகரமெய்(ந்) னகரம்(ன) தகரம்(த)
னாகாரம்(னா) தாகாரம்(தா) எனுமா றெழுத்தும்
னத்-தத் னாத்-தாத் னந்-தந் னாந்-தாந்
என்னும் எட்டாம் எழுத்துத் தொடர்களும்
அரைச்சந் தமென அழைக்கப் படுமே. ... 1

அரைச்சந் தங்கள் அடிப்படை யுடனே
ஒன்றோ பலவோ கூடி இசைக்கும்
தத்-எனும் அரையாம் தத்த வுடன்சேர
தத்தத்த என்னும் ஒலியில் இசைக்கும்
இதுபோல் மிகப்பல சந்தம் செய்யலாம். ... 2

[அரைச் சந்தங்கள்: த்,ந்,,ன,த,னா,தா,
னத்,தத்,னாத்,தாத்,னந்,தந்,னாந்,தாந். 
இவை ஒன்றுடனோ, பலவற்றுடனோ கூடிச் சந்தம் இசைக்கும்.
சான்றாக, தத் என்ற அரைச்சந்தம், தத்த என்பதுடன் கூடித்
’தத்தத்த ’என்று இசைக்கிறது. 
இவ்வாறு கோடிக்கணக்கான சந்தங்களை உருவாக்கலாம்.
--பாவலர் மா.வரதராசன்]

சந்தம் வண்ணம் இலக்கணம் விவரமாக அறிய:
பசுபதியாரின் ’கவிதை இயற்றிக் கலக்கு’ 
நூலில் இயல்கள் 37-45, 49-51 படித்தறிக.

***
4. சந்தமும் வண்ணமும்

சந்தம் வண்ணம் குறியொன் றெனினும்
சந்தம் என்பது மாத்திரை பொறுத்தே
வண்ணம் என்பது மாறாச் சந்தமே. ... 1

தத்த சந்தம் சந்தப் பாடலில்
குரு-லகு தொடராய் மும்மாத் திரையாம்
கட்டு கந்து கன்னி கள்ளி 
சந்தப் பாடலில் தத்த வாமே. ... 2

வண்ணப் பாவெனில் மேலுள சொற்களில்
கட்டு பதத்தில் தத்த சந்தம்
கந்து பதத்தில் தந்த சந்தம்
கன்னி என்பது தன்ன சந்தம்
கள்ளி என்பது தய்ய சந்தமாம். ... 3

தத்த சந்தம் வண்ணப் பாடலில்
குறில்வல் லொற்று வல்லின உயிர்மெய்க்
குறிலெனும் வரையறை கொள்ளுவ தாமே
மக்கி மச்சு பட்டு பத்து
தப்பி வற்றி யாவும் தத்த. ... 4

தந்த சந்தம் வரையறை யென்றே
குறில்மெல் லொற்று வல்லினக் குறிலாம்
அங்கு அஞ்சி அண்டு அந்தி
அம்பு அன்று யாவும் தந்த. ... 5

தன்ன சந்தம் வரையறை யென்றே
குறில்மெல் லொற்று மெல்லிடைக் குறிலாம்
அங்ஙன் அஞ்ஞன் அண்ணன் சந்நி(யாசி) 
அம்மி மென்வி யாவும் தன்ன. ... 6

தய்ய சந்தம் வரையறை யென்றே
குறிலிடை யொற்று இடைவல் குறிலாம்
நெய்தல் கர்மம் அல்லி செவ்வி
(நி)கழ்தல் வள்ளல் யாவும் தய்ய. ... 7

தன-எனும் சந்தம் வரையறை யென்றே
இருகுறில் இணைந்துடன் மெல்லிடை யொற்றாம்
குரு-லகு சுவர் வனம் படம் 
அறம் நிழல் யாவும் தன-வாம். ... 8

நெடிலில் தொடங்கும் பிறசந் தங்கள்
இதுபோல் வரையறை உள்ளி யுணர்க
விவரம் இன்னும் வேண்டுவ தானால்
மேலுள நூலில், தளத்தில் காண்க. ... 9

*****

11.68.முடுகு வெண்பா இலக்கணம்
(வெண்பா)

அடிப்படை யோடே அரைச்சந் தமென
வடித்தொரு சந்தமாய் வண்ணம் - நடைகொளும்
வெண்பா விலக்கணம், மோனை எதுகையும்
கொண்டெழுவெண் பாமுடு கு. ... 1

ஆளும்சந் தத்தின் அரைச்சந் தமெனவே
நாள்மலர் காசு பிறப்பென் றமையும்
முழுமுடுகு வெண்பாவின் ஈற்றுச்சீர் கொள்ளும்
வழுவிலாச் சந்த வகை. ... 2

தத்தனத்த சந்தத்தின் ஈற்றுச்சீர் தத்துவாம்
தந்தந்த சந்தத்தில் ஈற்றுச்சீர் தந்து
தனத்தத் எனும்சந்தம் ஈற்றில் தனத்துவாம்
தானெனில் ஈற்றுச்சீர் தானு. ... 3

முன்முடுகு வெண்பாவில் முன்பா திமுடுகு
பின்முடுகு வெண்பாவில் பின்பாதி - என்றுவரும்
முற்றும் முடுகொலி யேற்று வருவது
முற்று முடுகுவெண் பா. ... 4

***
முடுகுவெண்பா இலக்கணம் பற்றிச் சில கருத்துகள்

இலந்தை இராமசாமி
முடுகு என்பது வண்ணப் பாடல்களில் வரும்போது பெரும்பாலும் 
.. இருகுறிலில் தொடங்கும் சீர்களாக வரும். 
.. அது வேகம் கொடுக்கும். 
.. அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

முடுகு வெண்பாக்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தாது.
.. முடுகு வெண்பாக்களில் பெரும்பாலான சீர்கள் 
.. காய்ச்சீர்களாக வரும். அப்படி வரும்போடு 
.. முதல் சீர் இருகுறில் தொடங்கி காய்ச்சீரானால் 
.. அடுத்தசீர் நேரசையில்தான் தொடங்கவேண்டியிருக்கும்.
.. எனவே வெண்பாவைப் பொறுத்தமட்டில், 
.. அது முன்முடுகானாலும் பின்முடுகானாலும், 
.. முழுமுடுகானாலும் விரைவு வேண்டும்.
.. சந்தக்குழிப்புக்கு ஒத்துவரவேண்டும். இறுதிச்சீரில் ஓட்டம் இயல்பாக உடைபடாமல் 
.. சென்று முடியவேண்டும்

முடுகுடைய பாடல் குடுகுடென ஓடி
முடிவடையக் கூறல் முறை.

முடுகுடைய பாடல் குடுகுடென ஓடி
முடிவடைத லேநல் முறை

இரண்டாவது குறள் வெண்பாவில் வேநல் என்பது 
.. இலக்கணப்படியும் சந்த அமைப்புப் படியும் சரியே 
.. என்றாலும் பாடல் என்பது இயல்பாக நடப்பது போல 
.. வேநல் நடக்கவில்லை. அதில் ஒரு வே க்கும் நல்லுக்கும் 
.. இடையே ஒரு நெருடல் வந்துவிடுகிரது.

முடுகுடைய பாடல் குடுகுடென ஓடி
முடிவடையக் கூறல் முடிபு.

.. முடிபு சற்று ஒதுங்கிவிடுகிறது
.. எனவே முதற் குறள் ஒழுங்கான முடுகு.

*****

11.69. முடுகு வெண்பா இலக்கியச் சான்றுகள்
(பசுபதியாரின் க.இ.க. நூல் மற்றும் இணையத்தில் இருந்து)

1. முன்முடுகு வெண்பா

பாம்பன் சுவாமிகள்
ஞானவயில் வேலிறைவ நாகமயி லேறிறைவ
வானவர்பி ரானிறைவ மாலிறைவ - கோனிறைவ
என்றுதுத் திப்பா ரிருமையு மேல்வாழ்க்கை
ஒன்றுவ ருள்ளே யுணர்.

**
கடிகைமுத்துப் புலவர்
கன்னிமுக நன்னிலவு கன்னலித ழின்னிலவு
பன்னுநகை வன்னமுலை பன்னிருகை - மன்னவநின்
மின்னயிலை யன்னவிழி மின்னலிடை பின்னுசடை
அன்னநடை யின்னவறி வாய்.

***
2. பின்முடுகு வெண்பா

அபிராமி பட்டர்
பற்றிப் பணிந்து பரவ வரந்தருவாய்
கற்றைச் சடையா கடவூரா - வெற்றிநெடுங்
கொண்டலொக்குங் கண்டசத்தங் கொண்டெதிர்த்தங் கஙருக்கும்
சண்டனைக்கண் டன்றுதைக்கும் தாள்.

(தளை தட்டும், விளாங்காய்ச்சீர் கொண்ட சில பின்முடுகு வெண்பாக்களுக்கு
பசுபதியார் நூலில் கண்க.)

காளமேகம்
விரவு சிறுகுயிலே, வெண்மதியே மாரன் 
வரவு தனித்திருக்க மாட்டாள்-இரவதனில் 
கண்டங்கத் தரிக்கொத்துக் காயங்கம் தரிக்கப்பின் 
கண்டங்கத் தரிக்கொத்துக் காய்.

[பின்முடுகு வெண்பாவில் தனிச்சீருக்குப் பின் தளைபார்க்க வேண்டியதில்லை
என்றோர் கருத்துளது.]

பட்டினத்தார்
வரைதெரியா இன்பக் கடலில்மூழ் காதே
வரைகடந்த வாழ்வைநத் தாதே - உரையிறந்த
ஓசைவிந்து வேமனமே உற்றசபை யாலறிந்து
நேசமுள்ள பாக்கியத்தில் நில்.

பாரதிதாசன்
சீர்மணக்கும் தென்மயில வெற்பில் திருமுருகன்
பேர்மணக்கும் பாட்டில் பிழையகல - ஓர்மணக்கு
எத்தனப்ப னற்களிற்றி ணைப்பதத்தி னைத்துதிப்ப
னெத்தனப்ப டிக்குவெற்றி யெற்கு.

பாம்பன் சுவாமிகள்
நினைத்தார் வினைத்தா நெரிக்குமரு ளைத்தா
வெனைத்தா வுனைத்தா வெனத்தா - வனத்தார்கள்
சேர்புவளர் மாதரசி சேர்தலைவ வாசிறலை
யேர்புமயி லேறிறைவ னே.

வேம்பத்தூர் பெருமாளையர்: நெல்லை வருக்கக் கோவை
தேரோரும் வீதியெலாஞ் செங்கயலும் சங்கினமும் 
நீரோடுலாவி வரும் நெல்லையே! - காரோடும் 
கந்தரத்த ரந்தரத்தர் கந்தரத்த ரந்தரத்தர் 
கந்தரத்த ரந்தரத்தர் காப்பு!

[காரோடும் = கருமையான 
கந்தரத்தர் = கழுத்து உடையவர் 
அந்தரத்தர் = ஆகாயத்தில் உள்ளவர் 
கந்து அரத்தர் = முடியில் நீர் அணிந்தவர் 
அம் தரத்தர் = உயர்வான தரத்தையுடையவர் 
கந்தர் அத்தர் = முருகனுக்கு தந்தை 
அந்தரத்தர் = ஆகாயத்தை மேனியாகக் கொண்டவர்]

*****

11.70. முடுகு வெண்பா இன்று
(வெண்பா)

(சந்தவசந்தம் கூகிள் குழுமம், பைந்தமிழ்ச் சோலை முகநூல் 
குழுமப் பதிவுகளிலிருந்து)

மா.வரதராசன் (முன்முடுகு)
வெற்றுப்ப யற்சொற்ற இற்றுச்சொ லுட்பட்டு
முற்றுப்பெ றற்கெற்று மொத்தத்தி - லிற்றைக்கு
நாட்டை இழந்து நலங்கெட்ட எந்தமிழர்
மீட்சி யடைவர் மிளிர்ந்து.

***
மா.வரதராசன் (பின்முடுகு)
காணும் பொருள்மறக்கக் காணாப் பொருளினிக்கப் 
பூணும் மொழிதுறக்கப் புத்தியிலே - காணும் 
முற்றிவிடு பித்துநிலை முப்பொழுது முற்றலக 
நெற்றிவிழி பற்றுகவென் நெஞ்சு!

***
அ. ராஜகோபாலன் (பின்முடுகு)
வேண்டித் தமிழ்கேட்டாய் வெண்பாவிற் பின்முடுகாய்
நீண்ட நெடுநாள்கள் நீவாழ்க - ஈண்டு
மலையு மலையு மதியு மொளியு
முலகி னிலவு மளவு.

***
(முற்றுமுடுகு வெண்பா)
தனன தனன: குருநாதன் ரமணி

இமய கிரியி லுதிந தியது
நமது வளமு மெமது மதமு 
மெனுவி தமெழு முடுகொ லியினில்
தனன தனன வணம்.

***
தத்தனத்த: இலந்தை ராமசாமி

அத்தனத்தன் தத்தனத்தன் நர்த்தனத்தை எத்தனிக்க
மத்தளத்தை மொத்தெனத்தன் சத்தனைத்தும் - ஒத்திசைக்க
எத்திறத்தும் இத்தரத்தை ஒத்திருக்க மத்தொருத்தன்
இத்தலத்தும் எத்தலத்தும் இல்.

***
தந்ததன: குருநாதன் ரமணி

இங்குமுள வங்குமுள வெங்குமுள வங்கணனி
னங்கமதி லெங்குமுள வங்கதம டங்கிவர
மங்கையிட மிங்குசிவ மங்கலமி லங்குமவ
ளிங்குமன வங்குவினி லெங்கு?

***
தந்தனந்த: மா.வரதராசன்

கொண்டுவந்த தென்னவென்று குன்றமர்ந்த வன்றெளிந்து
மண்டலம்பி றந்துநைந்து மங்குமுன்பு - நண்பிணைந்த
தங்கரங்கொ டும்புரிந்து தங்குமென்ற பண்புணர்ந்து
பொங்குமன்பு முண்ணிறைந்து பொன்று!

***
தந்தனா: சியாமளா ராஜசேகர்

இந்தநா ளன்றுபோ லின்பமே தந்ததோ 
பந்தபா சங்களே பஞ்சமோ? - சொந்தமோ
நஞ்சுபோ லெண்ணுதே நன்றியே யின்றியே
வஞ்சமோ நெஞ்சிலே வம்பு.!

***
தனத்தத்: வெங்கடேசன் சீனிவாச கோபாலன்

சினத்தைத் தடுத்துத் தெவிட்டத் தெவிட்டத்
தனித்துக் களித்துத் தரத்திற் - கனத்துப்
பிடிப்பைத் துடைத்துப் பிறப்பைத் தொலைக்கப் 
படிப்பைக் கொடுத்துப் பழக்கு!

***
தானன: சுதர்சனா

மீனெனவொ ராமையென மேதினியி லேபெரிய
ஏனமொடு வீறுடைய ஏறரியு - மானபல
வானவுரு தானுடைய வானவுரு வானபெரு
மானுடைய மாயவனெ னாறு 

*****

தனதனன தான: இலந்தை ராமசாமி

கடகடென நீரும் கடகடெனப் பாயும்
கடகடென நீயும் கட.
(கடந்துசெல்‌என்று சொல்லும் வண்ணம் நீரும் கடகட என்று வேகமாகப் பாயும் . நீயும் 
வேகமாகச் சென்று கட)

*****
 

Pas Pasupathy

unread,
Sep 5, 2017, 8:11:50 AM9/5/17
to Santhavasantham
நல்ல தொகுப்பு. பாராட்டுகள்! 

முடுகு வெண்பா --- வண்ண நோக்கில் அறியப் படுகிறது. 
( முடுகு வெண்பா ‘ வண்ணத்தில்’ தான் இருக்கவேண்டும் என்று யார் முதலில் இலக்கணம் சொன்னார்கள்? )

முடுகு சந்தத்திலும் வரும் என்ற கோணத்திலும் முடுகு சந்த வெண்பாக்கள் என்றும் ஒரு வகையை அறிமுகம் செய்யலாம் என்று தோன்றுகிறது.

வண்ணத்தை விட எளிதாய் இருக்குமல்லவா?

முடுகு உள்ள வண்ணம், முடுகு உள்ள சந்தம் என்று இரு வகைகள் இருக்கலாம் அல்லவா? 

அறிஞர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.


 

2017-09-05 1:35 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
11.66. முடுகு வெண்பா
(நிலைமண்டில ஆசிரியப்பா)

1. முடுகு, முடுகியல், முடுகு வண்ணம், முடுகியல் வண்ணம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)





ramaNi

unread,
Sep 5, 2017, 9:58:17 AM9/5/17
to சந்தவசந்தம்
பாராட்டுக்கு மிக்க நன்றி, பசுபதி ஸார்.

முடுகியல் அடிகள் அகவற்பாவில் இயல்பாகக் கருவிளச் சீர்களில் வரும்போது,
.. கலிப்பாவில் அராகம் உறுப்பில் வரும்போது,
.. பரணித் தாழிசை போன்ற அகவற் றாழிசைகளில் வரும்போது,
.. வெண்பாவில் மட்டும் அது ஏன் வண்ணமாக வரவேண்டும் என்று விளங்கவில்லை.

முன்பொரு முறை இலந்தையார் கவிஞர் இக்குவனம் பற்றிய தம் பின்முடுகு வெண்பாவைப் பின்முடுகு வெண்கலிப்பா என்றழைக்கலாம் என்றார்:

இக்குவனம் என்னும் இனியதமிழ்ப் பாவாணர் 
எக்கணமும் பாடல் இயற்றுகிறார்- இக்கால 
கட்டத்தமிழ் கட்டத்தமிழ் கட்டத்தமிழ் என்றத்தமிழ் 
இட்டத்தமிழ் என்றிட்டனர் இன்று. 

பசுபதியார் சொல்லுவதுபோல் சந்த முடுகு வெண்பாக்களையும் அறிஞர்கள் புனைந்து அறிமுகப்படுத்த வேண்டும்.
.. வண்ணத்தில் எழுதப்படும் எல்லா வெண்பாக்களும் முடுகு வெண்பா ஆகாதே?
.. வண்ணம் இருந்தாலும் இருகுறில் அருகில் போன்ற முடுகியல் கூறுகள் இருந்தால்தான் அது முடுகு வெண்பாவாகும்?
.. வெண்பாவின் காய்ச்சீர்களில் வருவதுபோல் முடுகியல் இருகுறில் நடுவில்தான் வரவேண்டும் என்றும் இல்லையல்லவா?
.. புளிமா, கருவிளம், கனிச்சீர்களைக் கொண்டும் முடுகியல்ச் செய்யுள் புனையலாம் அல்லவா?

எனவே, சந்தம், வண்ணம் போல், முடுகைத் தனி இயலாகவே கொண்டு,
.. பல்வேறு விதமான பாவகைகள், பாவினங்கள், இசைப்பாடல்களிலும் 
.. செய்யுள்கள் புனையலாம் என்று தோன்றுகிறது.

சந்தவசந்தம் குழுமத்தில் அறிஞர்கள் இந்த வகையில் ஓரிழை தொடங்கிப் புதிய மரபிலக்கியம் படைத்துப் பயிற்றுவிக்கலாம் என்பது என் தாழ்மையான பரிந்துரை.

அன்புடன்,
ரமணி

*****

Subbaiyar Ramasami

unread,
Sep 5, 2017, 5:53:50 PM9/5/17
to santhav...@googlegroups.com
முடுகு ,  வண்ணம் சந்தம் பற்றிய நல்ல தொகுப்பு. பசுபதியார் கூற்று ஆராயப்படவேண்டியதே. என்னுடைய கருத்தை இன்னும் ஒருவாரம் கழித்து எழுதுகிறேன். இப்பொழுது அதிகப் பணிச்சுமை.

சந்த இலக்கணம் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்  .  அதற்கான தகவல்களையும் திரட்டினேன்.  இரமணி அவர்கள்  விரிவாக எழுதியிருப்பதால் இனி அது தேவையில்லே. சந்தத்திற்கு  என்று ஓரிழையை திரு. இரமணியே தொடங்கட்டும்.   நாமும் ஒத்துழைப்போம்.

இலந்தை.



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ramaNi

unread,
Sep 6, 2017, 1:20:52 AM9/6/17
to சந்தவசந்தம்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, ஆசான் அவர்களே. 

சந்தவிலக்கணம் பற்றிய உங்கள் திரட்டுபற்றி அறிந்திருந்தால் நான் என் பதிவை இட்டிருக்கமாட்டேன். உங்கள் திரட்டுப் பால் நிச்சயம் இன்னும் சுவையாக இருக்கும் என்பதால் அதையும் ஓரிழையில் இட வேண்டுகிறேன். அதன் பின் புதுவிழை நான் தொடங்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் தொடங்குகிறேன், முடுகியல் மரபு பற்றிநம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு உருவேற்ற.

அன்புடன்,
ரமணி


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Sep 6, 2017, 7:52:54 AM9/6/17
to santhav...@googlegroups.com
நான் திரட்டியிருப்பதை விட நீங்கள் கொடுத்திருப்பது  இன்னும் விரிவாகவே இருக்கிறது தமிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு  - ஆலந்தூர் கோ மோகனரங்கம் வசந்தா பதிப்பகம்   ஆலந்தூர் வெளியீடு மிக நல்ல புத்தகம்.  
பூபதீயம் என்னும் கையெழுத்துப்பிரதியாக இருந்தது. வெளிவந்திருக்கிறதா என்று தெரியவில்லை. முனைவர் சௌந்தரபாண்டியன்  தமிழ்ப்பண்பாட்டு வரிசை தொகுப்பின் கீழ் வண்ணங்கள் என்னும் தலைப்பில் புத்தகம் எழுதியிருக்கிறார். நான் சென்னை மத்திய நூலகத்தில் எடுத்துப்  படித்தேன்.  நல்ல புத்தகம் ஸ்டார் பிரசுரம் வெளியீடு.    வண்ணச் சரபத்தின்  வண்ணத்தியல்பு   இணையத்தில் கிடைக்கிறது.    அவரது வண்ணப்பாடல்கள் வெளியீடுகள் எங்கே கிடைக்கும் என்று ஆலந்துர் மோகனரங்கத்திடம் கேட்டால் தெரியும். திருவாமாத்தூர் மடாலயஹ்ட்தில் கிடைக்கும். ஒலியலந்தாதி மிகச் சிறந்த பாடல்.   எல்லாவற்றுக்கும் மேலாக திருப்புகழ். பாம்பன் சுவாமிகள் பல வண்ணப்பாடல்கள் எழுதியிருக்கிறார்.  பஞ்சாமிர்த வண்ணம்  .   பாவலர் வரதராசன்  ச்ந்த யிலக்கணம்  எழுதியிருப்பதாக அறிகிறேன். 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Pas Pasupathy

unread,
Sep 6, 2017, 11:03:22 AM9/6/17
to Santhavasantham
1) உங்கள் தொகுப்பை ( 11.70 ) நீங்கள் மீண்டும் கவனமாகப் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

வெண்பாவில் ”குறிலிணை” இல்லாதவை ‘முடுகு’ என்று எனக்குத் தோன்றவில்லை. (அவை வண்ணமாய்/சந்தமாய் இருக்கலாம்.  ) 

இது என் கருத்து. 

இதைப் பற்றி முன்பே 2015-இல்  பேசியிருக்கிறோம் ..என்று இப்போது தான் எனக்கு நினைவு வந்தது! 
==
2) நான் எழுதியது :
” முடுகு வெண்பாவின் இலக்கணம் : சந்தம், முடுகு, வண்ணம் .... இவற்றில் மேலும் தெளிவு பெற நாம் சிந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவரை இரா.திருமுருகன் ஒருவர்தான் இதன் இலக்கணத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் அதில் “சந்தம்” என்ற சொல்லைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்.  

பின்முடுகு வெண்பாவில் : தத்தனத்த, தானதத்த, தானதன, தாதந்த, தத்தந்த தத்ததன என்பன போன்றவை வரலாம் என்கிறார்.

இவற்றில் , குறிலிணை வராத சந்தங்களை  முடுகு என்று சொல்லலாமா? என்ற ஐயம் வருகிறது. 
( அவருடைய காட்டுகளில் ..தத்தனத்த போன்ற குறிலிணைகளே அதிகமாய் வந்தாலும், “குறிலிணை” என்ற சொல்லை அவர் இந்த விளக்கத்தில் பயன்படுத்த வில்லை.  ஆனால், பொதுவில் மற்ற இலக்கியங்களில் ‘முடுகு’ என்பதுடன் குறிலிணைத் தொடர்பைச் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம்.) 

சந்தம் எல்லாம் முடுகு ஆகுமா?  வண்ணம் ( அதன் கடுமையான இலக்கணத்துடன்) முடுகு வெண்பாவிற்கு வேண்டுமா?
என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. 

 ”சாதாரண” முடுகு, சந்த முடுகு, வண்ண முடுகு என்று வெவ்வேறு  வகைகளைக் குறித்தல் நன்றோ?  இது யாப்பில் ஒரு  நெகிழ்வைக் கொணர்ந்து, மேலும் பலர் இவ்வகையில் இயற்ற உந்துதல் தரலாம். 

அன்பர்கள்  சிந்திக்க, ஆராய, விளக்க இந்த ஐயங்களை  முன்வைக்கலாம் என்று தோன்றியது. 

ஓர் உரத்த சிந்தனை. அவ்வளவுதான். 
====
3) முழு இழை :
4)
பாவலர் பண்ணை ...அந்தப் பக்கத்தை இணைத்துள்ளேன்.
pAvalaR_paNNai_pinmudugu_1.jpg

Subbaiyar Ramasami

unread,
Sep 6, 2017, 4:44:41 PM9/6/17
to santhav...@googlegroups.com
என்னைப் பொறுத்தமட்டில் வெண்பாவில் குறிலிணை மட்டும் வரும் வெண்பாக்களை அமைக்க இயலாது. அப்படி அமைத்தால் தளை தட்டும். ஆனால் கரு விளம் மா கருவிளம்  என்று இன்னிசை வெண்பாவில் முடுகு அமைக்கலாம். . நேரிசை வெண்பாவில் தனிச்சீருக்குமுன்  இடறும்.  இணைகுறில் முடுகு கலிப்பா.
நம் இங்கே இலக்கியத்தில் காணப்படுபவை, புதிதாக கருதப்படவேண்டியவை பற்றி ஆராயலாம்.


கருமாரி நன்மை தருமாரி  மண்ணில்
உருமாரி என்றும்  அருள்மாரி தொன்மைத்
திருமாரி  விந்தை  புரிமாரி   அன்பில்
வருமாரி  நல்க வளம்.

என்று சொல்கிற போது ஒருவகையான முடுகு வருகிறது , ஆனால் எல்லா மாச்சிர்களும் மென்மையான அதவது மெல்லின மெய் இடையில் வரும் மாச்சீர்களாக இருப்பதைக் கவனிக்கவும். நடுவில் வல்லினம் வரும் மாதிரியும் அமைக்கலாம். 

தனதந்த  த்த்த தனதந்த தத்த் 
தனத்ந்த தத்த தனன     எனச் சந்தம் அமைக்கலாம்

உளமொன்று  பக்தி உணர்வில்தி ளைத்துப்
புள்கம்ப டைக்கும்  புனிதம்     - இது சந்தமும் முடுகும் கலந்து வந்த முன்முடுகு

அத்தனத்தன்  என்று தொடங்கும் எனது நேரிசை வெண்பா அருகுற்லிணை இன்றி வந்த முழுமுடுகு    வல்லினச்சார்புடையது

மின்னைத்தான் என்னும் பாடல்  மெல்லினச் சார்புடைய முடுகு.


மொழியசையச் செய்தி முகமசையச் சொல்லின்
வழியசைய இல்லை வசை
இலந்தை 

--

Pas Pasupathy

unread,
Sep 6, 2017, 5:19:41 PM9/6/17
to Santhavasantham
நன்றி, இலந்தை.

1) >>மின்னைத்தான் என்னும் பாடல்  மெல்லினச் சார்புடைய முடுகு.>>

எந்தப் பாடல் இது?  

2) இரா.திருமுருகன்,
பின்முடுகு வெண்பாவில் : தத்தனத்த, தானதத்த, தானதன, தாதந்த, தத்தந்த தத்ததன என்பன போன்றவை வரலாம் என்கிறார்.

இவற்றில்  தத்தந்த, தாதந்த .... “வெறும்” சந்தம் தான் என்று தோன்றுகிறது.
முடுகு இல்லை என்றே தோன்றுகிறது.

முன்/பின் சந்த, முன்/பின் வண்ண வெண்பாக்கள் அமைக்கலாம். ஆனால் , முன்/பின் முடுகு வெண்பா என்றால் ‘முடுகு’ப் பகுதியில் ...சந்தத்திலோ, வண்ணத்திலோ .... குறிலிணை வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு விளக்கம் வேண்டுமானால் கொடுக்கலாம்:  தத்தந்த தத்தந்த 
என்று இரு சீர்கள் வரும்போது, குறிலிணை நடுவில் வருகிறது. அதனால் ‘முடுகோசை’ உண்டு எனலாம்.

ஆனால், தாதந்த ... எப்படி முடுகோசை தருகிறது?  இல்லை என்றே தோன்றுகிறது.



2017-09-06 16:44 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
என்னைப் பொறுத்தமட்டில் வெண்பாவில் குறிலிணை மட்டும் வரும் வெண்பாக்களை அமைக்க இயலாது. அப்படி அமைத்தால் தளை தட்டும். ஆனால் கரு விளம் மா கருவிளம்  என்று இன்னிசை வெண்பாவில் முடுகு அமைக்கலாம். . நேரிசை வெண்பாவில் தனிச்சீருக்குமுன்  இடறும்.  இணைகுறில் முடுகு கலிப்பா.
நம் இங்கே இலக்கியத்தில் காணப்படுபவை, புதிதாக கருதப்படவேண்டியவை பற்றி ஆராயலாம்.


கருமாரி நன்மை தருமாரி  மண்ணில்
உருமாரி என்றும்  அருள்மாரி தொன்மைத்
திருமாரி  விந்தை  புரிமாரி   அன்பில்
வருமாரி  நல்க வளம்.

என்று சொல்கிற போது ஒருவகையான முடுகு வருகிறது , ஆனால் எல்லா மாச்சிர்களும் மென்மையான அதவது மெல்லின மெய் இடையில் வரும் மாச்சீர்களாக இருப்பதைக் கவனிக்கவும். நடுவில் வல்லினம் வரும் மாதிரியும் அமைக்கலாம். 

தனதந்த  த்த்த தனதந்த தத்த் 
தனத்ந்த தத்த தனன     எனச் சந்தம் அமைக்கலாம்

உளமொன்று  பக்தி உணர்வில்தி ளைத்துப்
புள்கம்ப டைக்கும்  புனிதம்     - இது சந்தமும் முடுகும் கலந்து வந்த முன்முடுகு

அத்தனத்தன்  என்று தொடங்கும் எனது நேரிசை வெண்பா அருகுற்லிணை இன்றி வந்த முழுமுடுகு    வல்லினச்சார்புடையது

மின்னைத்தான் என்னும் பாடல்  மெல்லினச் சார்புடைய முடுகு.


மொழியசையச் செய்தி முகமசையச் சொல்லின்
வழியசைய இல்லை வசை
இலந்தை 


VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 6, 2017, 8:09:15 PM9/6/17
to சந்தவசந்தம்
முற்பகுதியில் தத்தத் தனதனத்த, பிற்பகுதியில் தந்தத் தனதனந்த குழிப்பில் அமைத்த நேரிசை வண்ண வெண்பா ஒன்று:  

வற்றித் தரைவெடித்துச் சுற்றிப் புரைநிறைத்து
முற்றிப் புவிதுடித்துத் தெற்றுகையில்  -  வெற்றிமுகில்
முன்னிக் கடலெழுந்து மின்னிச் சுடரெரிந்து
மன்னித் தரைவிழுந்த தே. 

முற்பகுதியில் தத்தத் தனதனத்த, பிற்பகுதியில் தந்தத் தனதனந்த குழிப்பில் அமைத்தது. இந்தச் சந்த வேறுபாடு  பாடலில் குறிக்கும் சூழ்நிலை மாற்றத்தோடு ஒத்துப் போகும்.  

அனந்த்

Subbaiyar Ramasami

unread,
Sep 6, 2017, 9:23:13 PM9/6/17
to santhav...@googlegroups.com
மின்னையிரு கண்ணிலுறு கன்னிமனம் என்னபடும்
என்னநினை என்னையவள் எண்ணினளோ-தின்னுகிற
கெண்டைவிழி கண்டவழி உண்டுபழி கொண்டயெனை
தண்டைமொழி விண்டுவிழைந். தாள்.



Subbaiyar Ramasami

unread,
Sep 6, 2017, 9:31:00 PM9/6/17
to santhav...@googlegroups.com
முடுகுபற்றி ஏற்கனவே நாம் விவாதித்ததன் தொகுப்பு.

முடுகு வெண்பாக்களைப் பற்றிச் சந்தவசந்தத்தில் முன்பும் பேசியுள்ளோம். 2003-லிருந்து
இதுவரை என் கோப்பிலிருந்து பொறுக்கிய இடுகைகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கி
றேன். புதிதாய் வந்துள்ளோர்க்கு இது பயன்படலாம்.

மேலும், முன்பு ஒருகால் தனிப்பாடல் திரட்டு (இராமசாமிப் புலவர் தொகுத்த கழக வெளி
யீடு) நூல்களில் 50, 60 முடுகு வெண்பாக்களைப் பார்த்ததும் அவற்றில் சிலவற்றை
குழுவில் இடலாமென வைத்திருந்தேன். இதுவரை செய்யவில்லை. வேண்டுமென்றால்
மே மாதம் கானடா திரும்பியதும் இடுகிறேன். (பெரும்பாலானவை பணம்
கொடுக்கும் 'வள்ளல்'களைத் திருப்திப் படுத்தும் 'வர்ணனைகள்' கொண்டவற்றைத் தவி
ர!:-))
..அனந்த் 20-1-2007

பி.கு. இந்த இடுகை இங்கு இடத்தை அடைக்கிறதென்று தோன்றினால், வெட்டி வி
டலாம் அல்லது கோப்புப் பகுதியில் ஒட்டிவிடலாம்.
Mail users: Sorry to have posted this twice. I made some additions
to the first posting.

=================================
From:
  "ELANDHAI RAMASAMI" <kavitharamasami@e...>
Date:
 Mon Mar 17, 2003  5:13 pm
Subject:
 mudugu


அத்தனத்தன் தத்தனத்தன் நர்த்தனத்தை எத்தனிக்க
மத்தளத்தை மொத்தெனத்தன் சத்தனைத்தும்-ஒத்திசைக்க

எத்திறத்தும் இத்தரத்தை ஒத்திருக்க மத்தொருத்தன்
இத்தலத்தும் எத்தலத்தும் இல்.

(அத்தனத்தன் - சிவன், தத்தெனத்தன் - தத்தன எனத் தன்
மத்தளத்தை- நந்தி தனது திறமையெலாம் கூட்டி மத்தளத்தை மொத்து மொத்து என்று
மொத்தி வாசிக்க
இந்த நடனத்துக்கு ஈடாக ஆட மற்றொருவர் எந்த உலகிலும் இல்லை)


கடகடென நீரும் கடகடெனப் பாயும்
கடகடென நீயும் கட.
(கடந்துசெல்என்று சொல்லும் வண்ணம் நீரும் கடகட என்று வேகமாகப் பாயும் . நீயும்

வேகமாகச் சென்று கட)

மின்னையிரு கண்ணிலுறு கன்னிமனம் என்னபடும்
என்னநினை என்னையவள் எண்ணினளோ-தின்னுகிற
கெண்டைவிழி கண்டவழி உண்டுபழி கொண்டயெனை
தண்டைமொழி விண்டுவிழைந். தாள்.

இலந்தை
<TSCII>
இலந்தை: மிக அழகான, திறமையுடன் இட்ட முடுகுகள். கடகடவைத் தொடர்ந்து:

விடுவிடென நீயும் விடுதலையை நாடி
விடு;விடநோய் விட்டு விடும்

(விரைவாக முத்தியை நாடு; விடம்போன்ற பவநோய் (பிறப்பு இறப்பு என்னும் சுழல்)
உன்னை விட்டு நீங்கும்)
அனந்தன்</TSCII>
=================
From: ramasami (@ cpe-66-87-104-223.il.sprintbbd.net) on: Mon Mar 24

மேலும் சிந்தித்ததில் பின்முடுகு வெண்பாவில் எல்லாச்சீர்களிலும் ஒரே மாதிரி
சீரமைப்பு அவசியம் என்று தோன்றவில்லை. முதல் இரண்டு சீர்களில் வருகிற முடுகு
தொடர்ந்து அடுத்த சீர்களில் தவழ்ந்து சைன் வேவ் மாதிரி மேலும் கீழும்
பாய்ந்து அடுத்த அடியின் முதல் இரண்டு சீர்களில் துள்ளி வருகிற அமைப்பையும் காண்கி
றேன்.

காளமேகத்தின்


விரவு சிறுகுயிலே, வெண்மதியே மாரன்
வரவு தனித்திருக்க மாட்டாள்-இரவதனில்
கண்டங்கத்தரிக்கொத்துக் காயங்கம் தரிக்கப்பின்
கண்டங்கத்தரிக்கொத்துக் காய்.

என்பது அந்தவகை.

ஒரே சொல் பல சீர்களில் பயின்றுவரும் வெண்பாவை இனிப் பார்ப்போம். அப்படி
நீங்கள் அமைத்திருந்தாலோ அல்லது அமைத்தோ இங்குப் படைக்கலாம்.

நெஞ்சம் அசைய, நினைவசைய அந்நினைவில்
விஞ்சையென எந்நா விரைந்தசைய-செஞ்சொல்
மொழியசைய செய்தி முகமசைய, வாழ்க்கை
வழியசைய எந்நாவில் வா!

கருமாரி நன்மை தருமாரி, மண்ணில்
உருமாரி ஜோதி உருவாய்- அருள்மாரி
பூமாரி, சொல்மாரி, போர்மாரி, காந்தாரி
தீமாரி, நெஞ்சில் சிரி.

இலந்தை

From: ananth (@ cache7.156ce.scvmaxonline.com.sg) on: Wed Mar 26,
2003

நானாரோ நீயாரோ நாமாரோ உள்ளிருக்கும்
தானாரோ அந்தத் 'தனி'யாரோ என்றிங்ஙன்
பாரோர்தாம் ஓராரோ பார்த்துண்மை தேராரோ
தாராரோ தம்மைப் பிறர்க்கு?

முற்றுச் சீரெதுகை (ஆகையால் முற்றடியெதுகை) அமையுமாறு வெண்பாவியற்ற நாமும்
முயன்றாலென்ன என்று எண்ணியதன்
விளைவு பின்வரும் பாடல்:

   கட்டிமடி யிட்டுடலைத் தட்டியபின் கட்டியவள்
   தொட்டிலதில் இட்டவெழில் சுட்டியினைக்-கிட்டப்போய்
   இட்டமுடன் தொட்டகணம் எட்டிநின்றேன் சுட்டநீர்
   விட்டவக் குட்டியை விட்டு. (அனந்த், 2003)

=======================
From:
 SUBBAIER RAMASAMI <subbaierramasami@y...>
Date:
 Wed Feb 2, 2005  10:47 pm
Subject:
 Re: mudugu veNbA[was;Re: [santhavasantham] Re: pattinathar
venba]

முடுகு என்பது வண்ணப்பாடல்களில் வரும்போது பெரும்பாலும் இருகுறிலில் தொடங்கும்
சீர்களாக வரும். அது வேகம்
கொடுக்கும். அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
முடுகு வெண்பாக்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தாது.
முடுகு வெண்பாக்களில் பெரும்பாலான சீர்கள் காய்ச்சீர்களாக வரும். அப்படி
வரும்போடு முதல் சீர் இருகுறில்
தொடங்கி காய்ச்சீரானால் அடுத்தசீர் நேரசையில்தான் தொடங்கவேண்டியிருக்கும்.
எனவே வெண்பாவைப் பொறுத்தமட்டில், அது முன்முடுகானாலும் பின்முடுகானாலும்,

முழுமுடுகானாலும் விரைவு வேண்டும்.
சந்தக்குழிப்புக்கு ஒத்துவரவேண்டும். இறுதிச்சீரில் ஓட்டம் இயல்பாக உடைபடாமல்
சென்று முடியவேண்டும்
முடுகுடைய பாடல் குடுகுடென ஓடி
முடிவடையக் கூறல் முறை.
முடுகுடைய பாடல் குடுகுடென ஓடி
முடிவடைத லேநல் முறை

இரண்டாவது குறள் வெண்பாவில் வேநல் என்பது இலக்கணப்படியும் சந்த அமைப்புப்
படியும் சரியே என்றாலும் பாடல் என்பது
இயல்பாக நடப்பது போல வேநல் நடக்கவில்லை. அதில் ஒரு வே க்கும் நல்லுக்கும்

இடையே ஒரு நெருடல்
வந்துவிடுகிரது.
முடுகுடைய பாடல் குடுகுடென ஓடி
முடிவடையக் கூறல் முடிபு.
முடிபு சற்று ஒதுங்கிவிடுகிறது
எனவே குறள் 1 ஒழுங்கான முடுகு
இலந்தை
====================================================
நாம் முன்பு கண்ட முடுகு வெண்பாக்கள் சில:


தேரோரும் வீதியெலாஞ் செங்கயலும் சங்கினமும்
நீரோடுலாவி வரும் நெல்லையே! - காரோடும்
கந்தரத்த ரந்தரத்தர் கந்தரத்த ரந்தரத்தர்
கந்தரத்த ரந்தரத்தர் காப்பு!     (வேம்பத்தூர் பெருமாளையர் "நெல்லை வருக்கக்
கோவை"யில்)
(காரோடும் = கருமையான

கந்தரத்தர் = கழுத்து உடையவர்
அந்தரத்தர் = ஆகாயத்தில் உள்ளவர்
கந்து அரத்தர் = முடியில் நீர் அணிந்தவர்
அம் தரத்தர் = உயர்வான தரத்தையுடையவர்
கந்தர் அத்தர் = முருகனுக்கு தந்தை
அந்தரத்தர் = ஆகாயத்தை மேனியாகக் கொண்டவர்)

பாரோர் புகழவரும் பங்குனி உத்தரத்தில்
ஆரூரர் வீதி அணுகினார்- நேரே
பணச்சர்ப்பந் தரித்துப்பொற் பதக்கிண் கிணிச்சத்தம்
கிணுக்குக்கிண் கிணுக்கென்ன வே

ஆதரவாய் என்னருகில் அஞ்சலென்று வந்துநின்று
போதரவு செய்யும்எப் போதுமே - ஓதுதமிழ்ச்
சந்தமுந்த லங்கிர்தம்செ றிந்துநன்கு யர்ந்துதங்கு
விந்தைகொண் டிலங்குசெந்தில் வேல்
 (இயற்றிவர் பெயர் தெரியவில்லை)


சீர்மணக்கும் தென்மயில வெற்பில் திருமுருகன்
பேர்மணக்கும் பாட்டில் பிழையகல -- ஓர்மணக்கு
ளத்தனப்ப னற்களிற்றி ணைப்பதத்தி னைத்துதிப்ப
னெத்தனப்ப டிக்குவெற்றி யெற்கு.
    (பாரதி தாசன்)


பற்றிப் பணிந்து பரவ வரந்தருவாய்
கற்றைச் சடையா! கடவூரா! - வெற்றிநெடுங்
கொண்டலொக்குங் கண்டசத்தங் கொண்டெதிர்த்(து)அங் கங்கருக்கும்
சண்டனைக்கண் டன்றுதைக்கும் தாள்.
  (அபிராமிபட்டர்: திருக்கடவூர்க் காலசங்கார
மூர்த்தி பின்முடுகு வெண்பா)

ஆர்வமுடன் பாவலரும் ஆறுகால் வண்டினமும்
காவலரைச் சூழும் கலைசையே- மேவி
அரிவையம் பாகத்தான் அரணொரு மூன்றெய்தோன்
அரிவையம் பாகத்தான் அகம்.
       (கலைசைச் சிலேடை வெண்பா)
(3 வது அடி= அரி+வை+அம்பு+ஆகத்தான் - திருமாலைக் கூரிய அம்பாகத்தான்
கொண்டு
4 வது அடி- அரிவை+அம்+பாகத்தான் - பார்வதியை அழகிய இடப்பாக)

கல்லிவர் முல்லையும் மெல்லியலார் பல்லரும்பும்
புல்லார்ந்து கொல்லேறு நல்லானைப் -புல்லின
பல்கதிரோன் எல்லைக்கட் செல்லுமா றில்லைகொல்
சொல்லியார் சொல்லிய சொல்.
 (யாப்பருங்கல விருத்தியுரை பற்றிய ஒரு நூலிலிருந்து)
---------------------
From:
 "ELANDHAI RAMASAMI" <subbaierramasami@y...>
Date:
 Fri Feb 4, 2005  7:52 am
Subject:
 munmudugu pinmudugu
பட்டினத்தாரின் பின்முடுகு வெண்பா

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ? நெஞ்சகமே
வைப்பிருக்க, வாயின் மனையிருக்கச்- சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பை
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.

(விக்கி, பற்கிட்ட, கண்மெத்தப் பஞ்சிட்டு அப்பைக் கக்கிச் செத்து (பறை) கொட்டக்
கண்டு-
அப்பு என்றால் நீர்- கோழை , கண்ணீர், எச்சில்)

மேலும் இருக்க விரும்பினையே, வெள்விடையோன்
சீலம் அறிந்திலையே, சிந்தையே- கால்கைக்குக்
கொட்டையிட்டு, மெத்தையிட்டு குத்திமொத்தப் பட்டவுடல்
கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு.
(கால்கைகக்குச் சிறு திண்டிட்டு, மெத்தையிட்டுக் கிடத்தி குத்தி மொத்தப்பட்ட வுடல் )

ஒன்பதுவாய்த் தோற்பைக் கொருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள்
தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக்குத் தித்தின்னக் கண்டு.

(கழுகுகள் தத்தித் தத்தி மெதுவாய் அருகில்வந்து சிறகுகளைத் தட்டி ஒன்றோடொன்று
கட்டிச் சண்டையி
ட்டு, பிளந்து சத்தமிட்டு குத்தித் தின்கின்ற உடலைக் கண்டும் ஒன்பதுவாய் உடல்மேல்
ஆசைகொண்டு அலைந்தாயே என்று
பொருள்)

கூவிளங்காயன்றித் தேமாங்காயாக வந்தாலும் சுகமாகத்தானிருக்கிறது ............சரி
யாகப்
படித்தால்!

இலந்தை

எத்திக்கும் சித்திக்கும் எத்தகு வித்தைக்கும்
சக்திக்கும் புத்திக்கும் சத்துள பத்திக்கும்
நித்தநித்தம் ஒத்திருக்கும் சித்தமுடன் அத்தனையே
சுத்தமொடு வைத்திருக்கச் சொல்.(இலந்தை)

=================
கிறுக்கல்:
புளிமாங்காயை விடுவானேன்? இதோ உங்களுடைய தித்திக்கும் 'எத்திக்கும்' பாடலைப்
பற்றி ஒரு புளிமாங்காய் முடுகு/தொக்கு:

முடுக்குற்றுப் படித்தற்கோர் முறுக்குற்ற படிச்செப்பி
மிடுக்குற்று வடித்திட்டீர் போம்!
..அனந்த்
====================================
http://groups.yahoo.com/group/santhavasantham/message/17963
அத்தனத்தன் வித்தகத்துப் புத்தகத்தை சித்தமகிழ்ந்(து)
எத்தனித்துப் பத்திரமாய் வைத்திருந்தேன் - மெத்தநல்ல
சொத்தெனவே நித்தநித்தம் பொத்திவைத்த அத்தையிவள்
கத்தையென வித்தபணம் பத்து.
இலந்தை

அத்தனத்தன் - அத்தனுக்கு அத்தன் பாட்டன்
வித்து- விற்று
-------------------
அருமை.

எனது முயற்சி.

2007-01-15
ஒன்றுமிலார்க்(கு) ஒன்றிட ஒன்றாநெஞ்(சு) உன்றனுக்(கு)
ஒன்றுரைப்பேன்; என்றனென்றன் என்றென்றும் - நின்றுண்டி
தின்றதனால் குன்றினை வென்றஉடல் ஒன்றுபெற்றாய்;
நன்றன்றே; இன்றேஈ சென்று.

பதம் பிரித்து:
ஒன்றும் இலார்க்(கு) ஒன்(று) இட ஒன்றா நெஞ்(சு) உன்றனுக்(கு)
ஒன்(று) உரைப்பேன்; என்றன் என்றன் என்(று) என்றும் நின்(று) உண்டி
தின்றதனால் குன்றினை வென்ற உடல் ஒன்று பெற்றாய்;
நன்(று) அன்றே; இன்றே ஈ சென்று.

ஒன்றுதல் - சம்மதித்தல்;
நிற்றல் - உறுதியாய் இருத்தல்;
உண்டி - உணவு;
வெல்லுதல் - ஒத்தல்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
----------------
இம்மாதிரி வெண்பாக்களில் முடுகுக்காக கடைசிச் சீரைத் தவிர எல்லாம் காய்ச்சீராக ,
குறிப்பாகக்
கூவிளங்காய்ச் சீராய் இருந்தால் நலம்.
கருவிளங்காய் முடுகும் பயனடுத்தலாம்

படபடத்து நின்றேன் மொடமொடத்த பையை
இடமெடுத்து வந்தான் இடித்தான் - கடுகடுத்து,
கற்றைமுடி பற்றிஉடன் ஒற்றையடி எற்றிவிட்டேன்
சுற்றினன்பல் சுற்றுடன்பல் சுற்று.

இலந்தை
==================
http://groups.yahoo.com/group/santhavasantham/message/17975
முடுகு வெண்பாக்களைப் பற்றி இலந்தையுடன் சிறிது பேச நேர்ந்தது.
இன்னும் பல விஷயங்கள் எழுதவேண்டியது உள்ளன என்றார்.

அப்போது இதை இடுகிறேன் என்று சொன்னேன்.
(இதில் ஒன்றிரண்டு முன்பே காட்டாகச் சொல்லியிருக்கிறேன்
என்று நினைவு.) வெண்டளை விதிகள் மீறப் பட்டிருப்பதைக்
கவனிக்கவும்! விளாங்காய்களையும் பார்க்கலாம்!)

திருக்கடவூர்க் காலசங்கார மூர்த்தி பின்முடுகு
வெண்பா என்ற பெயரில் உள்ள பாக்கள் இவை.
என்னிடம் இருந்த வடிவில் இட்டிருக்கிறேன்; மீண்டும் படிக்கவில்லை.

(அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது என்று நம்பப்படுகிறது)

என்று தொழுவேன் எளியேன்; அளிமுரலும்
கொன்றைஅணி தென்கடவூர்க் கோமானே! - துன்றும்
கனற்பொறிகட் பகட்டிலுற்றுக் கறுத்ததெற்குத் திசைக்குளுரத்
தனைச்சினத்திட் டுதைத்தபத்மத் தாள். 1.

தொண்டருடன் கூடித் துதித்திரண்டு கண்ணாரக்
கண்டு தொழுவேனோ? கடவூரா! - பண்டோர்
அமுதிருக்குஞ் சிறுகடத்(து) அன்றெழும் உனக்(கு)அன் பரைமருட்டும்
எமனையெற்றும் பரிபுரச்செந் தாள். 2.


பற்றிப் பணிந்து பரவ வரந்தருவாய்
கற்றைச் சடையா! கடவூரா! - வெற்றிநெடுங்
கொண்டலொக்குங் கண்டசத்தங் கொண்டெதிர்த்(து)அங்ககங்கருக்கும்
சண்டனைக்கண் டன்றுதைக்கும் தாள். 3.

மேகங் கவிந்ததுபோல் மேலெழுந்த காலனைக் கண்(டு)
ஆகந் தளர்ந்துநெஞ்சம் அஞ்சாமுன் - மாகடவூர்ப்
பூதநாதா! வேதகீதா! பூவிதாதா! தேடுபாதா!
மாதுபாகா! காலகாலா! வா. 4.

அன்றயன்மால் காணா அடிமுடியைக் காண்பதற்குத்
தென்றிசைக்கோன் என்னதவஞ் செய்தானோ? - வென்றிதிகழ்
ஆடரவாளா? நீறணிதோளா! ஆதிரைநாளா! மாதுமணாளா!
தோடவிர்காதா! மாகடவூரா! சொல். 5.

ஆற்றுமோ நெஞ்சத் தடங்குமோ கொண்டமையல்
கூற்றுதைத்த தென்கடவூர்க் கோமானே! - மாற்றுயர்பொற்
கும்பமுலைத் திங்கள்நுதற் கொந்தளகக் கொம்பைவெறுத்(து)
அம்புதொடுத்(து) அங்கசன்விட் டால். 6.

தென்றல் உலவுந் திருக்கடவூர் எம்பெருமான்
மன்றல் செறிந்தே மதுவூறும் கொன்றைக்காப்
பொன்பரவுந்திண் கொங்கையிரண்டும் புண்பட நொந்தும் துன்பமிகுந்தும்
அன்புதிரண்டும்பெண் கொடிநெஞ் சும். 7.

சுடுமோ
ளந்தென்றல் தோகையின்மேல் அம்பு
படுமோமெய் வாதை படுமோ? - கடவூரா!
நீரணங்கார் வேணிநம்பா! நீலகண்டா! மேனியின்பால்
ஆரணங்கார் காலசங்கா ரா. 8.

பாலனுக் காவன்று பகடேறி வந்தெதிர்த்த
காலனுக்குக் காலா! கடவூரா! - மேலோர்
கரும்புகொண்டங்(கு) எதிர்ந்துவந்(து)அங் கசன்பொருஞ் செஞ்சரங்கள்கண்டு
மருண்டுநெஞ்சங் கலங்குமென்றன் மான். 9.

நீதிநெறி வேதியர்கள் நீங்கா மறைபயிலும்
ஆதிகட வூரிலுறை அம்மானை - பாதம்
பரவியங்கம் புளகி வணங்கும் பொழுதுநெஞ்சங்
கரவுதுஞ்சுஞ் சமனஞ்சுங் காண். 10.

பசுபதி
16-1-07
============
http://groups.yahoo.com/group/santhavasantham/message/17978
பசுபதிசொல்வது சரி . பல பின்முடுகு வெண்பாக்களில் முடுகு வருமிடங்களில் தளை
பார்ப்பதில்லை.

நான் ஏற்கனவே முன்னர்க் கொடுத்துள்ள
விரவு சிறுகுயிலே வெண்மதியே காலன்

வரவு தனித்திருக்க மாட்டாள் -இரவதனில்
கண்டங்கத் தரிக்கொத்துக் காயங்கம் தரிக்கப்பின்
கண்டங்கத் தரிக்கொத்துக் காய்.

என்ற பாடலில் முடுகில் தளை தட்டுகிறது. முடுகில் எல்லாமே ஒத்த வி
ளாங்காய்ச்சீராக அமைந்துவிட்டால்
முடுகு இலக்கணத்தைச் சீர்செய்துவிடும்
எ.கா பசுபதி காட்டிய பாடல்

மேகங் கவிந்ததுபோல் மேலெழுந்த காலனைக் கண்(டு)
ஆகந் தளர்ந்துநெஞ்சம் அஞ்சாமுன் - மாகடவூர்ப்
பூதநாதா! வேதகீதா! பூவிதாதா! தேடுபாதா!
மாதுபாகா! காலகாலா! வா. 4.

இலந்தை
===================
இலந்தையின் முழு முடுகு வெண்பா மிக அருமை!

நான் இப்படிச் செய்த ஒரே முயற்சி இதோ:

கட்டளைக் கலித்துறைக்கே இலக்கணம் போல் தோன்றும், அபிராமி பட்டரின்
அபிராமி அந்தாதியைப் பற்றியது. ஒரு 'தசரா' ( பத்திரவு) சமயம்
எழுதியது:

அபிராமி அந்தாதி
=============

கட்டளைக்க லித்துறைக்குக் கட்டமின்றி யுக்திசொல்லிப்
பட்டரன்று தந்தனர்சொற் பெட்டகத்தை -- துட்டரஞ்சும்
பத்திரையைப் பத்திரவில் பத்திசெய யுக்திசொலும்
வித்தகரின் நற்கவிதை மெச்சு.

பசுபதி
16-01-07
=========================
தித்திக்கும் பத்திக்குச் சித்திக்கும் நித்தனவன்
எத்திக்கும் சத்திக்க ஏத்திடுவோம்!--சித்தனருள்
பத்திநகை புத்தொளியாம்;பத்துவிடும் சத்திதரும்;
முத்திக்கும் உத்திதரும் முத்து.
தங்கமணி
-------------
சுற்றுமுல கிற்றிரியு மற்பரவர் சுற்ற(ம்)நிலை
யற்றததை முற்றிலும கற்றிவிடு - நற்றமிழைக்
கற்றறிவு முற்றியுர முற்றவரைப் பற்றிமகிழ்
வுற்றுதுய ரற்றிருநீ சற்று

..அனந்த் 19-1-2007
--------------
http://groups.yahoo.com/group/santhavasantham/message/17998
முத்துநிகர் பத்திநகை முத்தையனின் வித்தகத்தை
பத்திமனச் சுத்தியுடன் பத்திடுவோம்!---நித்தனவன்
சத்திசிவன் சித்தமகிழ் சத்குருவாய் உத்தவனோர்
வித்தையொளிர் கத்தைகனல் வித்து.

முற்று முடுகு வெண்பா என நினைத்து செய்தேன்.
பிழை சுட்டவும்.மிகவும் நன்றி.
அன்புடன்.
தங்கமணி.
---------------------------------------------------


--- In santhav...@yahoogroups.com, "ELANDHAI
 RAMASAMI"
<subbaierramasami@...> wrote:
>
> --- In santhav...@yahoogroups.com, siva siva <nayanmars@>
> wrote:
> >இம்மாதிரி வெண்பாக்களில் முடுகுக்காக கடைசிச் சீரைத் தவிர
 எல்லாம்
காய்ச்சீராக ,
> குறிப்பாகக்
> கூவிளங்காய்ச் சீராய் இருந்தால் நலம்.
>
> கருவிளங்காய் முடுகும் பயனடுத்தலாம்
>
>
> படபடத்து நின்றேன் மொடமொடத்த
 பையை
> இடமெடுத்து வந்தான்
 இடித்தான் - கடுகடுத்து,
> கற்றைமுடி பற்றிஉடன் ஒற்றையடி எற்றிவிட்டேன்
> சுற்றினன்பல் சுற்றுடன்பல் சுற்று.
>
> இலந்தை
>
> > அருமை.
> >
> >
  எனது முயற்சி.
> >
> >
  2007-01-15
> >
  ஒன்றுமிலார்க்(கு) ஒன்றிட ஒன்றாநெஞ்(சு) உன்றனுக்(கு)
> >
  ஒன்றுரைப்பேன்; என்றனென்றன் என்றென்றும் - நின்றுண்டி
> >
  தின்றதனால் குன்றினை வென்றஉடல் ஒன்றுபெற்றாய்;
> >
  நன்றன்றே; இன்றேஈ சென்று.
> >
> >
> >
  பதம் பிரித்து:
> >
  ஒன்றும் இலார்க்(கு) ஒன்(று) இட ஒன்றா நெஞ்(சு) உன்றனுக்(கு)
> >
  ஒன்(று) உரைப்பேன்; என்றன் என்றன் என்(று) என்றும் நின்(று) உண்டி
> >
  தின்றதனால் குன்றினை வென்ற உடல் ஒன்று பெற்றாய்;
> >
  நன்(று) அன்றே; இன்றே ஈ சென்று.
> >
> >
> >
  ஒன்றுதல் - சம்மதித்தல்;
> >
  நிற்றல் - உறுதியாய் இருத்தல்;
> >
  உண்டி - உணவு;
> >
  வெல்லுதல் - ஒத்தல்;
> >
> >
> >
  அன்புடன்,
> >
  வி. சுப்பிரமணியன்
> >
> >
> > SUBBAIER RAMASAMI <subbaierramasami@> wrote:
> >
> >
 அத்தனத்தன் வித்தகத்துப் புத்தகத்தை சித்தமகிழ்ந்(து)
> > எத்தனித்துப் பத்திரமாய் வைத்திருந்தேன் - மெத்தநல்ல
> > சொத்தெனவே நித்தநித்தம் பொத்திவைத்த அத்தையிவள்
> > கத்தையென வித்தபணம் பத்து.
> >
> > இலந்தை
> >
> >
> >
  அத்தனத்தன் - அத்தனுக்கு அத்தன் பாட்டன்
> >
  வித்து- விற்று

ramaNi

unread,
Sep 6, 2017, 10:39:17 PM9/6/17
to சந்தவசந்தம்
அறிஞர்கள் பங்கேற்பில் இந்த இழை சூடுபிடித்து ஒளிர்வது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்விழையில் நாம்

* முடுகுவெண்பா வகைகள் 
.. முன்முடுகு, பின்முடுகு, முழுமுடுகு
.. நடுமுடுகு => அடிகள் இரண்டும் மூன்றும் => உண்டா?
.. இடைமுடுகு => நாற்சீரில் சில மட்டும் முடுகுதல் => உண்டா?
.. பழந்தமிழ் இலக்கியத்தில் முடுகுவெண்பா
.. பழந்தமிழ் இலக்கியத்தில் முழுமுடுகு வெண்பா உள்ளதா?

* முடுகுவெண்பாவில் முடுகியல் சந்தம்
* முடுகுவெண்பாவில் முடுகியல் வண்ணம்
* முடுகுவெண்பாவில் முடுகியல் வேறுவிதம் (இருப்பின்)
* முடுகுவெண்பாவில் ஒற்றுகள் => முடுக்குமா, தடுக்குமா?
* முடுகுவெண்பா => சந்த, வண்ணவெண்பா வேறுபாடு
* முடுகுவெண்பா பற்றிப் பேசும் இலக்கண நூலகள்

என்றெல்லாவற்றையும் விவாதித்து வரையறுக்கலாம் என்று தோன்றுகிறது. முடுகியலும் பிற பாவகை, பாவினங்களைத் தனி இழையில் விவாதிக்கலாம்.

அன்புடன்,
ரமணி


ramaNi

unread,
Sep 7, 2017, 11:56:15 PM9/7/17
to சந்தவசந்தம்
சந்தமோ வண்ணமோ கருத்தில் கொள்ளாது குறிலிணை விளச்சீர்கள்
முழுதுமோ பெரிதுமோ அமைய அடியேன் புனைந்த கீழுள்ள வெண்பாக்கள்
எந்த அளவுக்கு முடுகு வெண்பா வகையாகும் என்று
அறிஞர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

புளிமா (முன்முடுகு):
வருடா வருடம் மழையில் குறையென்?
வருமா ரியதில் வளம்சேர் விலையேன்?
இருளே தினமென் றிவர்வாழ்வு செல்லும்
எருவிடுவோர்க் கென்னதான் தீர்வு?

கூவிளம் (முன்முடுகு):
கொள்முதல் மீக்குறை கொள்ளுமி டைத்தர
கள்ளுவ தென்றிவர் கள்ளுணும் வாழ்வினில்
ஏரைப் பிடித்தோர் இழிநிலை ஆகவே
வேரை அரிக்கும் அரசு.

கருவிளம் (முற்று முடுகு):
உருவினி லுள்நின் றொளிதரும் தெய்வம்
கருவினி லாழ்ந்து களிகொளும் தெய்வம்
திருவரு ளாண்டே செறிவினை கொள்ளும்
ஒருமுக மாக்கு மொளி.

--ரமணி, 08/09/2017

*****

Subbaiyar Ramasami

unread,
Sep 9, 2017, 7:44:19 AM9/9/17
to santhav...@googlegroups.com
இருகுறிலிணைந்ததாலேயே  முடுகு வரவேண்டுமென்ற அவசியமில்லை. உங்கள் வெண்பாக்கள் எதிலும் முடுகு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை..   முடுகில் முடுகு வேண்டும்.  விரைவும் துள்ளலும்(துள்ளலோசை அல்ல)வேண்டும்

இலந்தை


ramaNi

unread,
Sep 9, 2017, 10:52:12 AM9/9/17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி. திருத்த முயல்கிறேன். 
ரமணி
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 9, 2017, 11:20:27 AM9/9/17
to santhavasantham
எவ்வகைப் பாடலிலும் முடுகு ஓசை அமையப் பாடலாம் அன்றோ? "வெண்பாவில் முடுகு" என்று விசேஷமாக ஆராய்வதற்கு என்ன காரணம்?

சம்பந்தர் பதிகங்களில் முடுகோசை உள்ள பதிகங்களும் உள்ளன.

உதாரணமாக:
சம்பந்தர் தேவாரம் - 1.20.1

தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட வரவுகொ
டடலசு ரரொடம ரர்களலை கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே.


அன்போடு,

வி. சுப்பிரமணியன்

2017-09-09 10:52 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
மிக்க நன்றி. திருத்த முயல்கிறேன். 
ரமணி

On Saturday, September 9, 2017 at 4:44:19 AM UTC-7, கவிமாமணி wrote:
இருகுறிலிணைந்ததாலேயே  முடுகு வரவேண்டுமென்ற அவசியமில்லை. உங்கள் வெண்பாக்கள் எதிலும் முடுகு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை..   முடுகில் முடுகு வேண்டும்.  விரைவும் துள்ளலும்(துள்ளலோசை அல்ல)வேண்டும்

இலந்தை


2017-09-07 23:56 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
சந்தமோ வண்ணமோ கருத்தில் கொள்ளாது குறிலிணை விளச்சீர்கள்
முழுதுமோ பெரிதுமோ அமைய அடியேன் புனைந்த கீழுள்ள வெண்பாக்கள்
எந்த அளவுக்கு முடுகு வெண்பா வகையாகும் என்று
அறிஞர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன்.




--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

ramaNi

unread,
Sep 9, 2017, 11:54:19 AM9/9/17
to சந்தவசந்தம்
விளம் முன் விளம் வரலாம் என்பதுபோல் வாய்பாடு அமையும் விருத்தங்களில் எல்லாச் சீர்களிலும் முடுகியல எழுதுவதுபோல் வெண்பாவில் எழுதமுடியாது அல்லவா? எனவே, வெண்பாவில் அதிகபட்சம் முடுகியலாக என்ன வகையில் எழுதலாம் என்பது பற்றிய ஆய்வு சுவாரஸ்யமாகிறது.
ரமணி

Siva Siva

unread,
Sep 9, 2017, 11:58:45 AM9/9/17
to santhavasantham
வெண்டளை பிறழாமல் அமையவேண்டுமெனில், 

தனன தனன தனன தனன
தனன தனன தனன தனன
தனன தனன தனன தனன
தனன தனன தன(/தனன).

என்ற  ஓர் அமைப்பு மட்டுமே நாலடி உள்ள வெண்பாவில் வருமன்றோ!


ramaNi

unread,
Sep 9, 2017, 1:43:36 PM9/9/17
to சந்தவசந்தம்
நீங்கள் சொல்லும் தனன தனன சந்தம் பயிலும் இவ்வெண்பா முடுகியல்வதுதானே?

தனன தனன: 
இமய கிரியி லுதிந தியது
நமது வளமு மெமது மதமு 
மெனுவி தமெழு முடுகொ லியினில்
தனன தனன வணம்.

--ரமணி

Vis Gop

unread,
Sep 11, 2017, 12:58:52 AM9/11/17
to santhav...@googlegroups.com
நானும் ஒருமுறை முடுகு வெண்பா முயன்றிருக்கிறேன், திரு  இலந்தை நடத்திய வெண்பாப் பயிற்சியின் போது.

2013/9/16 Vis Gop <vis...@gmail.com>
திரு இலந்தை, அனந்த், ரமணி ஆகியோரின் ஆலோசனைப் படி திருத்தப் பட்ட வெண்பா:

வெண்பாப்பயிற்சி (வல்லின முடுகு)

புத்தகக்கி ழத்திகைப்பி டித்தவற்கும் பத்துதிப்பு
வித்தகற்கும் அத்தனெத்தன் சித்துசத்துத் தத்துவத்தின்
வித்துவித்தை அத்தமித்து தித்தலற்ற நித்தசத்தி;
சுத்தமுற்று  ளத்துபத்தர் சொத்து!

புத்தகக் கிழத்தி (சரஸ்வதி) கைப்பிடித்தவற்கும் (பிரம்மாவிற்கும்),
பத்துதிப்பு வித்தகற்கும் (பத்துமுறை அவதரித்த விஷ்ணுவுக்கும்) அத்தன் (தோன்றல் கொடுத்தவன்);
எத்தன் (புரிதற்கு அகப்படாதவன்)

சித்துசத்துத் தத்துவத்தின் வித்து (சச்சிதானந்த தத்வத்தின் ஆதாரம்);
வித்தை (ஞான ஸ்வரூபன்);
அத்தமித்து உதித்தல் அற்ற நித்தசத்தி (பிறப்பு இறப்பு இல்லாத நித்தியமான சக்தி)
சுத்தமுற்(ற ) உளத்து பத்தர் சொத்து! (சுத்தமான உள்ளம் கொண்ட பக்தர்களுக்குச் சொந்தமானவன்)

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages