வண்டா/வண்டான் ( = Pelican)

59 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 11, 2015, 11:38:01 AM9/11/15
to மின்தமிழ், Santhavasantham, vallamai, housto...@googlegroups.com, Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, V Murugan, Ramachandran Nagaswamy, Theodore Baskaran


On Saturday, August 15, 2015 at 3:49:47 AM UTC-7, Suba.T. wrote:
ஓட்டப்பிடாரத்தில் இருக்கும் வ.உ.சி நினைவு இல்லத்திற்கு நான் சென்றிருந்த போது த.ம.அ விற்காகச் செய்த பதிவுகள் 3 பகுதிகளாக இங்குள்ளன.


சுபா


நன்றி. ஒட்டப்பிடாரத்தில் கப்பலோட்டிய தமிழர்  வாழ்ந்த வீடு இது. ஒட்டப்பிடாரம் அருகே
வண்டானம்  என்பது அவர்களது பூர்வீக கிராமம். அங்கே தாய்வீட்டில் பிறந்தவர். பின்னர் மாமன்மகளை மணந்தார்.


Name

V.O.Chidambaram Pillai

Born

05.09.1872

Vandanam

Near Ottapidaram  Thoothukudi District



-ஆ/-ஆன் என்ற விகுதி பெற்ற பறவைப் பெயர்கள் மிகுதி:
தாரா, போதா, வாலா/வாலான், ஆலா/ஆலான், வக்கா/வக்கான், ....

வண்டா/வண்டான் = Pelican  https://en.wikipedia.org/wiki/Pelican
Pelicans are a genus of large water birds that makes up the family Pelecanidae. They are characterised by a long beak and a large throat pouch used for catching prey and draining water from the scooped up contents before swallowing. They have predominantly pale plumage, the exceptions being the brown and Peruvian pelicans. The bills, pouches and bare facial skin of all species become brightly coloured before the breeding season.

-ஆ விகுதி பெற்ற காயா மரம்: (காயம் - ஆகாயம் - தொல்காப்பியத்தில் விண்ணுக்குப் பெயர்விளக்கம்):

-ஆ விகுதி செடி, கொடிகளுக்கும், பறவைகளுக்கும் நிறைய வரும். வண்டு கட்டுதல் என்றால் துணி போன்றவற்றால் சாற்றை வடித்தல், எனவே,பெலிகன் பறவைக்கு ஒரு தமிழ்ப் பெயர் வண்டா. வண்டா என்னும் பெயரால் ஏற்பட்ட நெய்தல் திணைப்பெயர்கள் பல. வண்டானம்: கப்பலோட்டிய தமிழர் வண்டானம் உலகநாதபிள்ளை சிதம்பரனார் (வ.உ.சி.). கலிங்கத்துப்பரணிக் கதாநாயகன் முதற் குலோத்துங்கனின் சேனாபதி கருணாகரத் தொண்டமான் ஊர் வண்டாழஞ்சேரி.  கோவையிலே வாலாங்குளம் பெரிய குளம். வாலா - இரண்டாகப் பிளவுபட்ட Pin-tail ducks.
ஆமா/ஆமான், மரையா/மரையான், ... போல வண்டா/வண்டான், வாலா/வாலான், ...

கேரளாவில் ஆலப்புழையில் மருத்துவக் கல்லூரி உள்ள இடம் வண்டானம். வ. உ. சி. பிறந்த ஊர் வண்டானம் (இது ஒட்டப்பிடாரம் அருகே).
கல்வெட்டில் வண்டாழஞ்சேரி எனப்படும் ஊர்தான் கலிங்கத்துப் பரணி நாயகன் கருணாகரனின் ஊர் என முதலில் நிறுவியவர்
மு. இராகவையங்கார் அவர்கள். வண்டா/வண்டான் என்னும் பெலிக்கன் பறவைகள் வரும் நெய்தல் திணையின் ஊர்கள் 
வண்டானம், வண்டாழம் எனப் பெயர் பெறுகின்றன. கருணாகர தொண்டமானின் ஊர் நாச்சியர்கோவில் அருகே உள்ளது.
இன்றும் வண்டுவாஞ்சேரி என்கின்றனர். வண்டுவாய்ஞ்சேரி = வண்டுவாஞ்சேரி. வண்டு கட்டும் வாயை உடைய பெலிக்கன் பறவைக்கு
வண்டுவாய் எனவும் பெயர்போலும். பெலிக்கனால் வண்டுவாய்ஞ்சேரி, வண்டாழஞ்சேரி எனப் பெயர் பெற்ற ஊர் இது.
இன்று ஓர் பஞ்சாயத்து ஊர்.



இரை குத்த நீரில் பாயும் வண்டா/வண்டான் 















மீனை வண்டு கட்டி உண்ணும் வண்டா/வண்டான் (Pelican):






தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் வண்டு = வண்டல் என்ற பொருள் உண்டு,
குஞ்சு, குஞ்சி ஒருபொருள் தருமாப்போல, வண்டு, வண்டி (மண்டி) = வண்டல் ‘residue, sediment'.
வண்டு என்றால் தெலுங்கு, கன்னட மொழிகளில் வண்டல் தான்.
எனவே, தன் துணிப்பை போன்ற அலகால் வண்டு கட்டி மீன்களை இரையாக்கும்
பெலிக்கன் பறவைக்கு வண்டா (அ) வண்டான் எனப் பழந்தமிழர் எவ்வளவு நேர்த்தியாக
பெயர் அமைத்துள்ளனர் என வியக்காமல் இருக்கமுடியாது.

வண்டு = வண்டல் என்ற பொருள்படும் தமிழ் இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் பார்க்கவேண்டும்.
பாவாணர் அவர்கள் வண்டு = வண்டல் எனத் தெளிவாகக் காட்டும் பாடல்கள்
இரண்டு தருகிறார்:

(1)
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் ஸ்வாமி அருளிச் செய்த தனியன்:

                 மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னியசீர்
                 தொண்ட ரடிப்பொடி தொன்னகரம் - வண்டு
                 திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப்
                 பள்ளிஉணர்த்தும் பிரான்உதித்த ஊர்

வண்டு திணர்த்த வயல் = வண்டல் மண்ணினால் வளமாகப் பயிர்கள் விளையும் வயல்கள் சூழந்த திருவரங்கம்.

(2) வண்வண்டூர் - நம்மாழ்வார் பாசுரம்:

    உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,
    திணர்த்த வண்டல் கண்மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,
    புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,
    புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே
இங்கே நம்மாழ்வார் வண்வண்டூர் என்னும் ஊர்ப்பெயர்க் காரணத்தை விளக்குகிறார்.
வளமான வண்டல் மண்சேர்ந்த வயல்கள் கொண்ட ஊர். வண்டு/வண்டல் கண்மேல் சங்கு
சேர்கிறது. கண் = இடம் எனப் பொருள் இங்கே. 

பறித்த வெண்தலைக் கடுப் படுத்த மேனியார் தவம் 
வெறித்த வேடன், வேலை நஞ்சம் உண்ட கண்டன், 
                                                       மேவும் ஊர் 
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் 
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே.

வண்ட லார்வயற் சாலி யாலைவ ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை
கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டெ லாந்துதி செய்ய நின்ற தொழில னேகழ லால ரக்கனை
மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே.  (தேவாரம்)

கொண்டல் வானத்தின் மணிசொரி வனகுல வரைப்பால்
தண்டு ணர்க்கொன்றை பொன்சொரி வனதள வயற்பால்
வண்டல் முத்தநீர் மண்டுகால் சொரிவன வயற்பால்
கண்டல் முன்துறைக் கரிசொரி வனகலங் கடற்பால்  (பெ.பு.)

ஒண்டிறலி னான்முகனு மாலுமிக நேடியுண ராதவகையால்
அண்டமுற வங்கியுரு வாகிமிக நீண்டவர னாரதிடமாம்
கெண்டையிரை கொண்டுகெளி றாருட னிருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டன்மணல் கெண்டிமட நாரைவிளை யாடுமயி லாடுதுறையே. (தேவாரம்)

வண்டல் பாய்பொன்னி நாடனை வாழ்த்திமா
    மதுரை வெங்களத் தேமது ரிக்கஅட் 
டுண்ட கூழொடு நாவுஞ்சு ருண்டுபுக்கு 
   உள்வி ழுந்தற ஊமைக ளானவும்  (க.ப.)


 
2015-08-15 11:26 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கோவைச் சிறையில் செக்கு இழுத்துச் சுற்றியபோது பாரதமாதா திருக்கோவிலைச் சுற்றிவருவதாக
எண்ணிச் செக்கிழுத்தவர் கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சி. வங்கத்தில் எழுந்த பாரதமாதா, வந்தேமாதரம் முழக்கம்
இவற்றையெல்லாம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர். சுதந்திர வேள்வியில்
பொருள் இழந்த நிலையில் நண்பர்க்கு எழுதிய கடிதத்தில் வ.உ.சி. சொல்லிய வெண்பா:

  வந்த கவிஞர்க்கெலாம் மாரியெனப் பல்பொருளும்

  தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று - சந்தமில்வெண்

  பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்

  நாச்சொல்லும் தோலும் நலிந்து.



வ உ சி வழக்கில் தீர்ப்பு தினம் 7 ஜூலை 1908:

 

இன்று இந்தியா விடுதலை பெற்ற நாள்.


நா. கணேசன்

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article740138.ece

https://sites.google.com/site/links2pages/home/v-o-chithambaram-pillai



-- 

N. Ganesan

unread,
Sep 14, 2015, 12:07:11 AM9/14/15
to மின்தமிழ், santhav...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tamiz...@gmail.com, sirpip...@gmail.com, vmuru...@yahoo.com, urnag...@gmail.com, theodore...@gmail.com
2015-09-11 22:28 GMT-07:00 Dr.Krishnaswamy Nachimuthu <tamiz...@gmail.com>:
நல்ல கட்டுரை ,ஓம் சக்தியில் வெளியிடலாம்.வண்டானம் கிருஷ்ணையர் பற்றி உ.வே.சா.என் சரித்திரத்தில் உண்டு.
கி.நாச்சிமுத்து

வண்டானம் முத்துசாமி ஐயர் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். சந்தவசந்தம் குழுவில் வெண்பாவிரும்பியார் உவேசா
கட்டுரையை தட்டச்சித் தந்தார். அதைக் கொடுத்துள்ளேன். காளமேகம் போல சிலேடை வல்ல வண்டானம் கவிஞரை
அவருக்கு திருமணம் ஆனபின் பார்க்கவில்லை என்கிறார் உவேசா. இதுபோல், எத்தனை ஆயிரம் மரபுக் கவிகள்
எழுதப்படாமல் போனதோ. வண்டானம் கவிஞர் அதிருஷ்டசாலி, உவேசா அவரைப் பற்றி எழுதிவிட்டார். கண்ணதாசன்
கூட்டங்களில் சொல்லும் கதை உவேசா இதில் கொடுத்ததுதான்.

வண்டு² vaṇṭu , n. cf. bandhaLoc. 1. Small coil of twisted straw used to catch what drops out while measuring grain; தானியம் அளக்கையில் கீழேவிழும் தானியத்தைப் பிடித்துக் கொள்ளும் வைக்கோற்கூடு. 2. Twist or bundle of straw thrown over the cover of a bullock-cart, as fodder for bullocks during the journey; பிர யாணத்தில் மாடுகளின் உணவாக வண்டியின் மேலிடும் வைக்கோற்பழுதை.
வண்டுகட்டு-தல் vaṇṭu-kaṭṭu- , v. tr. < வண்டு² +. To cover and tie up the mouth of a pot with cloth, in preserving things; பானையின் வாயைச் சீலையால் மூடிக் கட்டுதல்.

வண்டு = residue, sediment என்ற பொருளைப் பார்த்தான் வண்டா/வண்டானம் என்னும் பெலிக்கன் பறவைக்குப் பண்டைத் தமிழர் கொடுத்த பெயர் விளங்கும். தெலுங்கு, கன்னடம் எல்லாவற்றிலும் வண்டு = வண்டல். வண்வண்டூர் என்று
சொல்லும் திவ்யக்ஷேத்ரத்தின் பெயரில் உள்ள வண்டு என்பது வண்டல் மண்
என எழுதியுள்ளேன். 

வண்டு = வண்டல் என்ற பொருள்படும் தமிழ் இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் பார்க்கவேண்டும். பாவாணர் அவர்கள் வண்டு = வண்டல் எனத் தெளிவாகக் காட்டும் பாடல்கள் இரண்டு தருகிறார்:

(1)
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் ஸ்வாமி அருளிச் செய்த தனியன்:

                 மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னியசீர்
                 தொண்ட ரடிப்பொடி தொன்னகரம் - வண்டு
                 திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
                 உணர்த்தும் பிரான்உதித்த ஊர்

வண்டு திணர்த்த வயல் = வண்டல் மண்ணினால் வளமாகப் பயிர்கள் விளையும் வயல்கள் சூழந்த திருவரங்கம்.

(2) வண்வண்டூர் - நம்மாழ்வார் பாசுரம்:

    உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,
    திணர்த்த வண்டல் கண்மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,
    புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,
    புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே
இங்கே நம்மாழ்வார் வண்வண்டூர் என்னும் ஊர்ப்பெயர்க் காரணத்தை விளக்குகிறார்.
வளமான வண்டல் மண்சேர்ந்த வயல்கள் கொண்ட ஊர். வண்டு/வண்டல் கண்மேல் சங்கு
சேர்கிறது. கண் = இடம் எனப் பொருள் இங்கே. 

வண்டு என்பது வண்டல் என்ற பொருள் உண்டு என்பது மறந்ததால் தான்
நமக்கு வண்டா/வண்டான்/வண்டானம் = Pelican (அதுபோல அலகு கொண்ட Pelican Ibis நாரை)
பொருள்புரிவதில் சிக்கல் இருந்திருக்கிறது. 
------------------------------------

ஆநிரை கவர்தல் பற்றிய கல்வெட்டு தான் - ஆகோட்பூசல் கல்வெட்டு தேனியருகே
பேரா. கா. ராஜன் குழுவினர் கண்டுபிடித்தது - தமிழ் எழுத்தில் உள்ள கல்வெட்டுக்களில்
பழமையானது. ஆநிரை களவாடும் கள்ளர் என்ற பெயர் மறவர்க்களுக்கு இருக்கலாம்.
ஸ்ரீகள்ள சோழன், திருமங்கையாழ்வார், ... பின்னர் வேளாண்மைக்கு மாறும் நிலையை
பழமொழி: கள்ளன், மறவன், கனத்ததோர் அகம்படியன், மெள்ள மெள்ள வெள்ளாளன் ஆனான்.

ஆநிரை களவாடிக் கவர்ந்து செல்லும் மறவர்கள் மழைக்காலம் முடிந்து மாடுகளை
ஓட்டிச் செல்கிறார்கள். மழை நின்று சில வாரங்கள் சென்ற பின்னர் மாடுகளைக்
கவர்ந்து செல்லும் வழிப்பாதை எல்லாம் வண்டல்சேறாக மேல்மண்ணில் இருக்கிறது
என ஒரு புறப்பாடல் சொல்கிறதாம். பழைய உரையினில் வண்டு என்றால் வண்டுகள் (beetles)
என்று உள்ளது. 



பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
இரும்பறை யிரவல சேறி யாயிற்
றொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே
பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா விளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே.

திணை - கரந்தை; துறை - கையறுநிலை.

................... ...................... ..............

(இ - ள்.) பெரிய களிற்றின் அடிபோலத் தோன்றும் ஒரு கண்ணினை யுடைத்தாகிய பெரிய பறையினையுடைய இரவலனே! நீ போகின்றாயாயின் தொழாயாய்ப் போதலைப் பரிகரிப்பாயாக; தவறாதே.........யிடைவிடாது வண்டுகள் மேம்பட்டு வாழும், இக்கொடிய வழி; பல ஆக்களாகிய திரண்ட நிரை மீண்டு தன்னோடு போதரப் போந்து இயல்பாகிய போர்த் தொழிலையுடைய வீரர் இரிந்தோடத் தான்போகானாய் வில் உமிழப்பட்ட விரைந்த அம்பு குளிப்பக் கரையைக் கொல்லும் புனலின் கண் அணைபோல எதிர்நின்று விலக்கியவனது கல்லை-எ - று.

ஆனால், வண்டு = வண்டல் மண் என முனைவர் ராஜம் சொல்லியுள்ளார்
என வைதேகி ஹெர்பர்ட் குறிப்பிடுகிறார்.

"Puranānūru 263, Poet: Unknown, King: Unknown, Thinai: Karanthai, Thurai: Kaiyaru Nilai
You who has come in need carrying a large drum
with an eye like the foot of a huge male elephant!
If you go that way, do not fail to worship the
memorial stone on the parched path where bees
flourish.  It was erected for the man who brought
back herds of cattle that were seized, not moving,
when his untrained young men fled.  He blocked
the enemies, like a shore of a flooding river
and rapid arrows shot from bows sank him.

Notes:  I have translated the phrase வண்டு மேம் படூஉம் இவ் வற நிலை யாறே according to the traditional interpretation.  However, Dr. V. S. Rajam interprets it as ‘the dry river bed where sand comes up on the surface’.  The word வண்டு could imply வண்டல் மண்.    Memorial stones were erected for warriors and kings.  Puranānūru poems 221, 223, 232, 260, 261, 263, 264, 265, 329, and 335 have references to memorial stones.  In 222, the poet Pothiyār speaks to the memorial stone of King Kōperunchōlan.  The Puranānūru poems written by poets whose names we do not know are 244, 256, 257, 263, 297, 307, 323, 327, 328, 333, 339 and 355.

Meanings:  பெருங்களிற்று அடியின் தோன்றும் – appearing like the feet of a large male elephant, ஒரு கண் இரும் பறை – large drum with one eye, இரவல – one who asks for help, சேறி ஆயின் – if you go, தொழாதனை கழிதல் ஓம்புமதி – don’t go away not worshipping, வழாது – without fail, வண்டு மேம் படூஉம் – where the sand (வண்டல்) is dry, or where bees flourish, or where a tribe called Vandars live, இவ்வற நிலை யாறே – this path/river which is parched, பல் ஆத் திரள் – many cattle herds, நிரை பெயர் தரப் பெயர் தந்து – brought back herds, கல்லா இளையர் – untrained youngsters, நீங்க – to leave, நீங்கான் – did not move, வில் உமிழ் கடுங் கணை மூழ்க – was sunk by rapid arrows shot by fast bows, கொல் புனல் சிறையின் – shore of a flooding river that ruins the banks, விலங்கியோன் கல்லே – the memorial stone of one who blocked "

ஆநிரைக் கள்ளர்கள் ஆகோட்கொண்டு செல்லும் பாதையில் வண்டு = வண்டல் என்பது
பொருத்தமான விளக்கம்.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages