“மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்..."
- இந்தப் பாடல் பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ளது.
இப்பாடல் சொல்ல வருவது :-
"இதில் தண்ணீருக்குள்ள இருக்குற மீனைக் கொத்தி உண்பதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியிலேயே நீரைவிட்டு மேலே பறந்து வருகிற சிரல் பறவையைப் போல, ஒரு பெரிய ஊசி புண்ணுக்குள்ள நுழைந்து வெளியே வருதாம்"
என்று ஒரு இணைய தளத்தில் விளக்கம் படித்தேன். மேலும், இந்த மருத்துவ முறை இன்றைய நவீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கேள்விப்பட்டேன். இதைப் பற்றிய தெளிவும் இன்ன பிற விவரங்களும் வேண்டும்.
தெரிந்தவர்கள் அருள் கூர்ந்து சொல்ல வேண்டுகிறேன்.