கவியரங்கம் 60 அழைப்பு- கோபால்

12 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Sep 15, 2025, 9:49:55 AM (4 days ago) Sep 15
to santhavasantham
ஏற்கனவே இந்த அழைப்பைக் கொடுத்தும் அதை ஏனோ மற்றவர்கள் கவனிக்கவில்லை
அடுத்த அழைப்பு கவிஞர் விஸ் கோபால்

 ஆன்மீகத் தோடிங்கே அறிவியலும் பேசுபவர்
        தான்கவியில் பற்பலவாம் தத்துவங்கள் வீசுபவர்
        தேன்கவியில் சிந்தியதோ எனவெண்ணத்தீட்டுபவர்
        வான் கவியில் இறங்கிவர வண்ணத்தில் காட்டுபவர்

        அணுவுக்குள் ளும் நுழைவார் அண்டத்தும் போய்வருவார்
        தணல்தண்ணீர் ஆகாயம் காற்றுபுவி ஆய்வுசெய்வார்
         இணக்கமுடன் வண்ணத்தில் ஏராளம் எழுதுபவர்
        மணக்கும்வகை விஸ்கோபால் மன்றத்தில் கவிதருக!
இலந்தை

கவிஞர் கோபால் நேரடியாக எனக்கு அனுப்பிய கவிதையை வெளியிடுகிறேன்

சந்தவசந்தக் கவியரங்கம் (60)
[செப்டம்பர் - அக்டோபர் 2025]

தலைவர்: கவிவேழம் இலந்தையார்
தலைப்பு: போராடவா இந்தப் போது?

வசந்தம் வரும்பின்னே சந்தமதன் முன்னே!
நிசந்தான் இலந்தை நிழலில்! - குசஞ்செல்
வழிசென்று வேழம் வகுத்த சுகந்தம்
அழியாத் தமிழ்ப்பாதை அஃது!

[குசம் = புல் (நாணல்)]

கைம்மா அரசாளும் கானத்தில் வேங்கையிடைச்
சும்மா நுழைந்ததிச் சுண்டெலி - அம்மம்மா
சீராட்டிப் பாராட்(டு) அளிப்பாரோ சீறுவரோ!
போராட்டம் தானிந்தப் போது!

[கைம்மா = வேழம்]

பாடல்: (கலிவெண்பா)

போராடிப் போராடிப் பொன்னான போதெல்லாம்
பேராசைப் பேயிடமே தோற்றிழந்தும், - வாராத
பேயின் வழிநோக்கிப் பித்தாகிப் பெற்றவொரு
தாயின் மகவுகளும் தம்முள்ளே - வாயின்
வரம்பறப் பேசி வருத்திப் பகைத்தோ
இரந்தோ பிடுங்கியோ ஏய்த்தோ - தரங்கெட்டுக்
காசுபணம் ஈட்டிக் கடனுக்கே அத்தனையும்
வீசுகிற வாழ்க்கைவெகு வேடிக்கை! - மாசு
விடமாகி மன்பதையை வேரறுக்க, வாழும்
சடமாகி எல்லாம் தனக்கென்(று) - அடம்பிடித்தால்
ஆண்டவன் தந்த அழகும் எளிமையும்
மாண்டுவிடும்! காலமெல்லாம் மாக்கள்போல் - ஈண்டுலகில்
கற்றவரும் வேண்டுவதோ காட்டின் இருள்வாழ்வு?
சுற்றமெலாம் நம்முடைய சொந்தமென - உற்றபல
செல்வத்தை ஆன்றோர்கள் செப்பும் முறைகண்டு
நல்வழியில் துய்த்தல் நலமாகும்! - கல்வி
அறியாமை தன்னை அகற்றட்டும்! வாழ்க்கை
நெறிகாட்டும் தீபமாய் நின்று - தறிகெட்டுப்
போகாமல் காக்கட்டும்! பூமியில் எவ்வுயிரும்
நோகாமல் வாழ்வை நுகரட்டும்! - சோகாத்துச்
சேராத சொத்தெல்லாம் சேர்க்க உழல்வதே
போராட்டம் என்பாயேல் போதுமது! - நீரார்
கொடுத்தாரோ, வாழக் குடிலும் நிலமும்
உடுத்தவும் உண்ணவும் ஈங்கார் - கொடுத்தாரோ,
அன்னாருக்(கு) அன்றோ உரிய(து) அனைத்துமே!
உன்னி உணர்க உலகத்தின் - மன்னனவன்
யாதும் அளித்திங்கே யாமமும் நாளுமாய்ப்
போதும் அளித்திருக்கப் போற்றாமல் - வாதுநீ
செயலாமோ? வேண்டா! செயற்கரிய செய்ய
இயலுமனைத்(து) இன்னே முயல்க - செயக்கடன்
ஓரா யிரமிருக்கத் தன்னலம் ஒன்றெண்ணிப்
போராட வோஇந்தப் போது?

நல்வாழ்த்துகள்
கோபால்.

सर्वे जना: सुखिनो भवन्तु ।

Siva Siva

unread,
Sep 15, 2025, 9:56:07 AM (4 days ago) Sep 15
to santhav...@googlegroups.com
I did receive your other post yesterday - in the kaviyarangam thread. I replied to it as well.

V. Subramanian

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 15, 2025, 10:47:16 AM (4 days ago) Sep 15
to santhav...@googlegroups.com
எனக்குக் கிடைத்தது. நான் பின்னூட்டம் இட்டேன் 
நன்றி 

                     —தில்லைவேந்தன்

Ram Ramakrishnan

unread,
Sep 15, 2025, 10:54:53 AM (4 days ago) Sep 15
to santhav...@googlegroups.com
நானும் பின்னூட்டமிட்டேன். ஆனால், ஒலேயிழையில் அனைத்தையும் காண இயலவில்லை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 15, 2025, at 10:47, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


எனக்குக் கிடைத்தது. நான் பின்னூட்டம் இட்டேன் 
நன்றி 

                     —தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hir8P2d85PV2ZRvPTA%3De78V9FhnZt-Rdav%3D874UYcMXqg%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Sep 15, 2025, 10:56:19 AM (4 days ago) Sep 15
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com

Looks like the kaviyarangam thread somehow landed in my Promotions folder instead of Inbox or Forums, so I ended up missing it.

Now I am able to see it.


On Sep 15, 2025, at 10:47 AM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


எனக்குக் கிடைத்தது. நான் பின்னூட்டம் இட்டேன் 
நன்றி 

                     —தில்லைவேந்தன்

--

Swaminathan Sankaran

unread,
Sep 15, 2025, 11:38:55 AM (3 days ago) Sep 15
to santhav...@googlegroups.com
I also find some- actually quite a few, placed in my promotions or even Junk folders. Sometimes, 
 they appear both in my Inbox and one of the above. The allocation seems to be idiosyncratic, 
doesn't seem to follow any pattern or rule.

Sankaran

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Ram Ramakrishnan

unread,
Sep 15, 2025, 11:46:43 AM (3 days ago) Sep 15
to santhav...@googlegroups.com
This is another thread  (கவியரங்கம் 60 அழைப்பு - கோபால்). This is not part of the main thread (கவியரங்கம் 60) in my computer.

I think there is a third thread started by Dr. Pushpa Christy, which stands alone in my inbox.

Not sure if it is my computer (and mobile) problem.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 15, 2025, at 11:38, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:



Dr. Pushpa Christy Canada

unread,
Sep 16, 2025, 4:54:42 PM (2 days ago) Sep 16
to santhav...@googlegroups.com

அருமையான கவிவரிகள் கோபால் ஐயா
வாழ்த்துகள். 
சோதரி புட்பா கிறிட்டி.  


Reply all
Reply to author
Forward
0 new messages