"ஸ்ரீ வாழவுகந்த அம்மே"
(மீ. விசுவநாதன் )
சக்தியே இயக்கம் சக்தியே மூச்சு
சக்தியே அன்பு வெள்ளம்
நித்தியே கால நீட்சியே நீதான்
நீலவான் நீலி தோற்றம்
சுத்திடும் கோள்கள் சுந்தரி உந்தன்
சோதியின் பிள்ளை யாக
பத்திர மாகக் காத்திடும் தாயே
பரிதியின் பாதை நீயே!
எத்திறம் இல்லா பித்தனாம் நானும்
இன்றுனைப் பற்றிக் கொண்டேன்
வெத்திவன் என்றே வெறுத்தவள் என்ற
பேரினைக் கொள்ள வேண்டாம்
நெத்தியாம் புருவ மத்தியில் உன்னை
நித்தமும் எண்ணு வேனே
சூழ்கவே சாந்தி ஊரெலாம் வேண்ட
சொடுக்கிடும் வேளை வந்து
வாழவே வைக்கும் வண்மையின் சூலி
வாழவு கந்த அம்மே.
(14.03.2026 20.21 pm)