அரன்-இராமன் சிலேடை
காட்டை விழைந்தேற்றுக் கையில்உயர் வில்லில்நாண்
பூட்டிஅப் பொல்லார் புரமெரித்து - நாட்டிய
நன்னடத்தை மேவி நவில்வான் நரர்சுரர்க்கு
இன்னருள்செய் ஈசன்இரா மன்.
... அனந்த் 9-4-2014 (இங்கு டொராண்டோவில் இன்று ஸ்ரீராமநவமி)
ஓர்இல்லோ(டு) ஓரம்(பு) ஒருசொல்* உடையனெனப்
பாரோர் புகழ்ராமன் பால்நன்கு - சேர்ந்தனகாண்
நாணயமும் நாண்ணயமும் நாநயமும்; நாநயக்கும்
நாணயமும் ஆமோ நயம்.
(*'ஏகபத்னி, ஏகபாணம், ஏகவாக்கு' என்று வடமொழியில் இராமனைப்
பற்றிப் புழங்கும் புகழுரை.
நாணயம்= நேர்மை; காசு; நாண்ணயம்=நாண்நயம், நாணேற்றும் நுண்மை; நாநயக்கும்=நாம் நயக்கும்; நயக்கும்=விரும்பும்; நயம்=மேன்மை, நுண்மை, பயன்)
.. அனந்த் 19-4-2013/ 26-3-2026
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia3nb0uoquHpC88NgA9cfTihL0Vs9%3DYVaRGwVY5nZkOC5w%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-L_WE0Rh%2BfJC6Vb4Lqx%3DFEpuCJSoS0psitwK%3DGa5Kjoxg%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tBo2yDmPAta1nRRz67_KWSaBXJvsX0O_ozCs7vObGsxQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9PeW2DNjAN6xSeUA9_u347w4JmgSODVR2Tu7tkBQmkB7Jg%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1QjfHJ%3DACq2%2BCo7tzSRiDDThVQv_qpTqC0AtT25YdzfQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9PcqYx4yry3Ad%3D7Jd_BvG6rkqtnY4Yf9e5vVFn5ywNWEoA%40mail.gmail.com.