Another vegetable veNbA!
11)
2026-03-13
தேங்காய்-2
----------------
(வெண்பா)
கடைக்கண் கிடைக்கின்ற காய்கோயில் தன்னில்
படைக்கும்காய் நேர்ந்துகொண்டு பட்டென்(று) - உடைக்கும்காய்
பூரணத்தை ஆக்கும்காய் பூதலத்தோர் போற்றிடும்
காரணத்தைக் காட்டும்தேங் காய்.
பதம் பிரித்து:
கடைக்கண் கிடைக்கின்ற காய்; கோயில்-தன்னில்
படைக்கும் காய்; நேர்ந்துகொண்டு பட்டென்(று) உடைக்கும் காய்;
பூரணத்தை ஆக்கும் காய்; பூதலத்தோர் போற்றிடும்
காரணத்தைக் காட்டும் தேங்காய்.
V. Subramanian