கார்த்திகேய வெண்பாப் பதிகம். - மீ. விசுவநாதன்

4 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Feb 17, 2026, 2:16:30 AM (yesterday) Feb 17
to Santhavasantham, M. Viswanathan
"கார்த்திகேய வெண்பாப் பதிகம்"
          (மீ. விசுவநாதன்)

அழகனாய் ஆண்டியாய் ஆயிரம் வேடம்
குழந்தை முருகனே கொண்டு பழந்தமிழர்
வாழ்வினைப் பண்பட வைத்த குருவழியே
ஊழ்வினை நீக்கும் மருந்து.              (1)

மருந்தான கந்தனை மாதவ சித்தர்
பெருந்தேவ ரென்றேதான் பூசித் திருந்தனர் !
நோயிலா நூறாண்டு நோன்பினை நூற்றவர்
தேய்விலாப் புண்ணியர் தான்.           (2)

தானெனும் மாயையைத் தட்டி நொறுக்கிடும்
மாபலங் கொண்டவன் மால்மருகன் - காதலாய்
அன்புடன் சித்தத்தி(ல்) ஆழ்ந்து கிடக்கிற
தன்மை உணர்தல் தவம்.                       (3)

தவமெனச் சொன்னால் தவறாது நித்தம்
எவரையும் நோகா திருத்தல்! சிவ(ன்)மகன்
சிந்தனை ஒன்றே சிறப்பெனக் கொண்டுநிதம்
வந்தனை செய்தல் வரம்.                         (4)

வரந்தரும் வள்ளலின் வாசமிகு நாமம்
உரங்கூட்டும் உள்ளொளி கூட்டும் - கரங்கூப்பி
கந்தா வெனும்போதே காலன் விலக்கிடுவான் !
நிந்தனை நீக்கி நினை.                                   (5)

நினைவில் மயிலும் நிமிர்ந்தகை வேலும்
தினமெனைக் காக்குமென எண்ணு ! மனத்தின்
கவலைக் கனலைக் கருணைப் புனலால்
அவன்கை அணைக்கும் அறி.                    (6)

அறிவை அவன்தா(ள்) அடியிலே வைத்துக்
குறியாய்த் தொழில்தினம் செய்தால் வெறியாய்த்
திரியும் மனமும், திமிரு(ம்) அடங்கும் !
புரிந்தா(ல்) புலரும் புகழ்.                               (7)

புகழுக்கும் பேருக்கும் பொல்லாத தீங்கு
நிகழாது காக்குமாம் வேல்தான் - அகத்திலே
பொய்யும் திருட்டும் புரட்டையும் ஓட்டுமாம்
மைவண்ணத் தோகை மயில்.                   (8)

மயிலென நம்மன வாசமதைத் தேடி
ஒயிலாக ஓடி வருவான் - பயிலுவாய்
பக்தியை மிக்கப் பணிவாக நாளுமே
முக்தி யளிக்குங் கழல்.                     (9)

கழலிணை சேர்த்துக் கடம்பா வெனச்சொல்
பழகிடும் போது பழியாம் பழவினை
அதுவாய் விலகி அருளாய் மலரும்
புதுமை அதுவும் அழகு.                    (10)

                      (28.08.2024 03.20 am) 

Arasi Palaniappan

unread,
Feb 17, 2026, 3:55:10 AM (yesterday) Feb 17
to சந்தவசந்தம், M. Viswanathan
அருமை அண்ணா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-uR1_%2BZ8hxtN%2Bx5qrn41nBJDYXRAmB3CYC2beLKqZUt4A%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Feb 17, 2026, 5:11:13 AM (yesterday) Feb 17
to Arasi Palaniappan, சந்தவசந்தம்
நன்றி கவிஞரே...
அன்பன்
மீ.வி.

இமயவரம்பன்

unread,
Feb 17, 2026, 7:24:27 AM (yesterday) Feb 17
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Santhavasantham
மிகச் சிறப்பு!

M. Viswanathan

unread,
Feb 17, 2026, 8:41:17 AM (yesterday) Feb 17
to இமயவரம்பன், Santhavasantham
நன்றி கவிஞரே..
மீ.வி.

Siva Siva

unread,
Feb 17, 2026, 9:04:46 AM (yesterday) Feb 17
to santhav...@googlegroups.com
வாழ்க!

1. அந்தாதி என்ற குறிப்பையும் சொல்லியிருக்கலாம்.

2. ஒரு சில அடிகளில் காணும் மோனையின்மையை நீக்க இயலுமென்றால் இன்னும் சிறக்கும்.

3. / நூற்றவர் / - Typo? நோற்றவர்?

V. Subramanian

M. Viswanathan

unread,
Feb 17, 2026, 10:07:12 AM (yesterday) Feb 17
to Santhavasantham
அன்புக் கவிஞர் சிவசிவாவின் கருத்துக்கு மகிழ்ச்சி. திருத்திக் கொள்கிறேன். நன்றி.

அன்பன்,
மீ. விசுவநாதன்
17.02.2026 20.36 pm

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Feb 17, 2026, 10:52:44 AM (yesterday) Feb 17
to santhav...@googlegroups.com
wonderful  deeply    inferred  words..     vazga  mii  visu,
 yogiyar

Sai Ganesan H

unread,
Feb 17, 2026, 10:55:31 AM (yesterday) Feb 17
to santhav...@googlegroups.com
வெண்பாப் பதிகம் மிகவும் அருமை ஐயா! 

சத்ய வேழன் H சாயிகணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Feb 17, 2026, 1:00:25 PM (yesterday) Feb 17
to santhav...@googlegroups.com
அற்புதம், தரு. மீ. வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 17, 2026, at 10:55, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:



M. Viswanathan

unread,
Feb 17, 2026, 11:17:43 PM (19 hours ago) Feb 17
to Santhavasantham
கருத்துரைத்த கவிஞர் பெருமக்களுக்கு நன்றி.

அன்பன்,
மீ. விசுவநாதன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages