"இரட்டை மாட்டு வண்டி" (மீ.விசுவநாதன்)

3 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Jul 10, 2026, 9:37:53 AM (19 hours ago) Jul 10
to Santhavasantham, M. Viswanathan
மீள் பதிவு:

"இரட்டை மாட்டு வண்டி"
(மீ.விசுவநாதன்)

இரட்டை மாட்டு வண்டி - அதில்
இருக்கும் சுகமோ வண்டி
அரட்டை அடித்துக் கொண்டு - சென்ற
அந்தக் கால வண்டி

அம்மா அப்பா அக்கா - என்
அண்ணா வோடு நானும்
பெம்மாம் குடும்பத் தோடு - குல
தெய்வம் பாக்கப் போவோம்

கருப்பு வெள்ளைக் காளை - அதன்
கழுத்து மணியின் ஓசை
விருப்பு வெறுப்பு மாற்றி - மனம்
வெள்ளை யாக்கி வைக்கும்.

வைக்கோல் வைத்த மெத்தை - அது
வண்டிக் குள்ளே சொர்க்கம்
பொய்க்கால் குதிரை போல – ஆடிப்
போகும் அழகு சொக்கும்

ஆடி மாத காலம் - நமை
அடித்து வீசும் காற்றில்
ஆடிப் பாடிச் செல்வோம் - குளிர்
அருவி குளிக்க வேண்டி

கூட்ட மான கூட்டம் - அதில்
குதித்தே ஓடும் மாடு
வாட்ட மெல்லாம் போக்கும் - வில்லு
மாட்டு வண்டி ஜோரு!

ரயில டிக்குப் போக – நம்
ராமை யாவின் வண்டி
மயிலு வாக னம்போல் - தன்
மடியில் வச்சுப் பாயும்

பிணிகள் போக்க வேண்டி - தினம்
பெரிய மனது வைத்து
மணிடாக் டருமே வருவார் - குண
மருத்து கண்டு தருவார்


சரியாய்க் கொண்டு சேர்க்கும் – நம்
தர்மச் சக்ர வண்டி
அரிய தாகிப் போச்சு - அந்த
அன்புப் பயண வண்டி.
(07.11.2020 13.01 pm)

Swaminathan Sankaran

unread,
Jul 10, 2026, 11:01:32 AM (17 hours ago) Jul 10
to santhav...@googlegroups.com, M. Viswanathan
சரியாய்க் கொண்டு சேர்க்கும் – நம்
தர்மச் சக்ர வண்டி
அரிய தாகிப் போச்சு - அந்த
அன்புப் பயண வண்டி.

உண்மை!
சங்கரன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vqCraynS0YsPtS_t%3DHXrXNUWF5EUWKrxWDZ%2BrNardF2A%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

Arasi Palaniappan

unread,
Jul 10, 2026, 11:46:57 AM (16 hours ago) Jul 10
to சந்தவசந்தம், M. Viswanathan
அருமை அண்ணா!

இமயவரம்பன்

unread,
Jul 10, 2026, 1:51:42 PM (14 hours ago) Jul 10
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Santhavasantham
அருமையான பாட்டு

M. Viswanathan

unread,
Jul 10, 2026, 2:07:45 PM (14 hours ago) Jul 10
to இமயவரம்பன், Santhavasantham
மிக்க நன்றி.
அன்பன் ,
மீ. விசுவநாதன்

Ram Ramakrishnan

unread,
Jul 10, 2026, 7:13:06 PM (9 hours ago) Jul 10
to santhav...@googlegroups.com
மிக அருமை, தரு. மீ. வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 10, 2026, at 13:51, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

அருமையான பாட்டு
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages