சொலவடை

1,250 views
Skip to first unread message

SUBBAIER RAMASAMI

unread,
May 15, 2009, 2:26:23 PM5/15/09
to சந்தவசந்தம்
திருநெல்வேலிப் பக்கத்தில்  'சொலவடை' என்ற சொல் புழக்கத்தில் உண்டு. பழமொழி அல்லது வழக்கத்தில் உள்ள வாசகம் ஒன்றைக் குறிப்பதற்கு அச்சொல்லைப் பயன்படுத்துவார்கள்.
 
"கூந்தலுள்ள சீமமட்டி அள்ளிமுடிஞ்சுக்குவா" ன்னு ஒரு சொலவடை உண்டு என்று பேசுவார்கள்.
 
இந்தச் சொல் எதிலிருந்து வந்தது என்று யாராவது சொல்ல முடியுமா?"
 
 
இலந்தை
 

Siva Siva

unread,
May 15, 2009, 5:47:28 PM5/15/09
to santhav...@googlegroups.com
அகராதியில் கண்டது:

சொலவடை
, n. < சொலவு + அடை¹-. See சொலவு, 2. Loc.

சொலவு
, n. < சொல்¹-. 1. Saying, telling; சொல்லுகை. சொற்செல்லாவழிச் சொலவு (முது. காஞ். 87). 2. Proverb; பழமொழி. ஆயிரங் காக்கைக்கு ஓர் கல் என்று ஒரு சொலவு உண்டு. Loc.


(Loc. = Local usage)



2009/5/15 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>



--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Dr Subramanian

unread,
May 15, 2009, 9:41:11 PM5/15/09
to santhav...@googlegroups.com
நம்ம ஊர்ல " பழமொழிக்கு"த்தான் இந்தப் பெயர். சொல்லுக்கு/ சொலவுக்கு ( சொல்லும் செய்திக்கு) அடைவாக- துணையாக அல்லது அடையாளம் காட்டுகின்ற வகையாக வருவது என்று கொள்ளலாம்.
வவேசு

2009/5/16 Siva Siva <naya...@gmail.com>

Madhurabharathi

unread,
May 15, 2009, 10:41:17 PM5/15/09
to santhav...@googlegroups.com


2009/5/15 SUBBAIER RAMASAMI elan...@gmail.com

 
"கூந்தலுள்ள சீமமட்டி அள்ளிமுடிஞ்சுக்குவா" ன்னு ஒரு சொலவடை உண்டு என்று பேசுவார்கள்.
 
 
இதன் முழு வடிவம் இப்படி என்று எனக்கு நினைவு:
 
“கூந்தலுள்ள சீமாட்டி கொண்டையும் போடுவா, அள்ளியும் முடியுவா”
 
அதாவது கூந்தல் நிறைய இருந்தால் அதை எப்படி வேண்டுமானாலும் அணி செய்யலாம், செய்யாமல் விட்டாலும் (அப்படியே தூக்கிச் செருகினாலும்) அழகுதான் என்பது பொருள்.
 
சொல்லவரும் பொருள்?
 
அன்புடன்
மதுரபாரதி 

செல்வா

unread,
May 16, 2009, 8:12:02 AM5/16/09
to சந்தவசந்தம்
சிவா அவர்கள் தந்த சுட்டே நான் புரிந்து கொண்டதும்.
சொல் என்னும் சொல் சமசுக்கிருத சுலோகம் என்னும் சொல்லுடனும்
ஓர் நுட்ப உறவுண்டு.

சொல் என்னும் தமிழ்ச் சொல் உருசிய மொழியில் слово ru(ru) (slóvo, ஸ்லொவொ)
எனப்படும்
சிலாவிய (Slavic) மொழிகள் பலவற்றுள்ளும் சொல் என்பதற்கான சொல்
தமிழ்ச்சொல்லுடன்
ஒலி வடிவிலும் பொருள் வடிவிலும் மிக ஒற்றுமை கொண்டது.
எ.கா: சுலோவாக்கிய (Slovak) மொழியில்
சொல் என்னும் சொல்லுக்கான சொல் slovo. போலந்திய மொழியில்
słowo என்பார்கள். (நெருக்கம்மான ஒலி) .

தமிழில் சொல் என்பதற்கு சிறிது, சிற்றளவு என்னும் பொருள் உண்டு.
"உப்பு ஒரு சொல் கூட" என்பதற்கு உப்பு சற்று கூடுதலாக உள்ளது என்று
பொருள்.
நிறம், அடர்த்தி போன்ற கருத்துகளிலும் "ஒரு சொல் கூட" என்னும் சொல்லாட்சி
பயன்படும்.

அன்புடன்
செல்வா


On May 15, 5:47 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> அகராதியில் கண்டது:
>
> சொலவடை , n. < சொலவு + அடை¹-. See சொலவு, 2. Loc.
>
> சொலவு , n. < சொல்¹-. 1. Saying, telling; சொல்லுகை. சொற்செல்லாவழிச் சொலவு (
> முது. காஞ். 87). 2. Proverb; பழமொழி. ஆயிரங் காக்கைக்கு ஓர் கல் என்று ஒரு
> சொலவு உண்டு. Loc.
>
> (Loc. = Local usage)
>

> 2009/5/15 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>


>
> > திருநெல்வேலிப் பக்கத்தில்  'சொலவடை' என்ற சொல் புழக்கத்தில் உண்டு. பழமொழி
> > அல்லது வழக்கத்தில் உள்ள வாசகம் ஒன்றைக் குறிப்பதற்கு அச்சொல்லைப்
> > பயன்படுத்துவார்கள்.
>
> > "கூந்தலுள்ள சீமமட்டி அள்ளிமுடிஞ்சுக்குவா" ன்னு ஒரு சொலவடை உண்டு என்று
> > பேசுவார்கள்.
>
> > இந்தச் சொல் எதிலிருந்து வந்தது என்று யாராவது சொல்ல முடியுமா?"
>
> > இலந்தை
>

> --http://www.geocities.com/nayanmars

செல்வா

unread,
May 16, 2009, 8:20:17 AM5/16/09
to சந்தவசந்தம்
சொற்கள் வரிசைப் படுத்தி அடுக்கிய அகரமுதலி, அகராதியை
உருசிய மொழியில் словарь (slovár’ ஸ்லொவர்) என்கிறார்கள்.
போலந்திய மொழியில் słownik என்கிறார்கள்
சுலோவாக்கிய மொழியில் slovník
சுலோவேனிய மொழியில் slovar (சுலோவேனிய மொழி = Slovene)
துருக்கி மொழியில் söz என்றால் சொல் ஆகவே sözlük என்றால்
அகராதி என்று பொருள்.

இவற்றையும் கருத்தில் கொள்ளலாம்.

அன்புடன்
செல்வா

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

RAJAGOPALAN APPAN

unread,
May 16, 2009, 9:50:38 AM5/16/09
to santhav...@googlegroups.com

பழமொழிக்கும் சொலவடைக்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதாகத் தெரிகிறது. 1994ல் பேராசிரியர் சாலை இளந்திரையன் தினமணியில் எழுதியிருந்த ஒரு கட்டுரையில், அரசாங்கம் சீரமைப்புக்களுக்காக அரசு ஒதுக்குகிற நிதி, அதிகாரிகளாலும், ஒப்பந்தக்காரர்களாலும் சுரண்டப்படுவதால் வருகிற நஷ்டத்தை காந்தி கணக்கில்தான் எழுதவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தச் சொலவடை எப்படி ஏற்பட்டிருந்தாலும், அது, நேர்மையின் உறைவிடமான மஹாத்மா காந்திக்கு மரியாதை சேர்ப்பதாக இல்லையென்று நான் எழுதியிருந்த கடிததிற்கு, கி.ராஜநாராயணன் பதில் எழுதியிருந்தார். வருத்தப்படுவதற்கு எந்த அடிப்படையும் இல்லாத போதும், வருத்தப்படுவதாகச் சொல்லிக்கொண்டு அலைகிறவர்களை 'இவன் வேதநாயகம் பிள்ளை சடைச்சிக்கிற மாதிரி சடைச்சிக்கிறான்' என்று கரிசல் காட்டுப் பகுதியில் கூறுவதுண்டு என்றும், இதற்கும் வேதநாயகம் பிள்ளைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஃப்ரென்ச் மொழியில் இத்தகைய சொலவடைகளைப் பொருள் விளக்கத்தோடு அகரமுதலியாகத் தொகுத்து
வைத்திருக்கிறார்களாம். நாம் அதுபோற் செய்வதில்லை என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.
காந்தி கணக்கில் எழ்துவதும், வேதநாயகம் பிள்ளை சடைச்சிக்கிற மதிரி சடைச்சிக்கிறதும்
பழமொழிகள் அல்லவே?

அ.ரா.

2009/5/16 Dr Subramanian <vav...@gmail.com>

செல்வா

unread,
May 16, 2009, 1:39:17 PM5/16/09
to சந்தவசந்தம்
1) காந்தி கணக்கில் எழுதுதல் என்பது காந்திக்குப் பெருமை சேர்ப்பது!
எல்லா வரவு செலவுகளையும் துல்லியமாய்க் குறித்தல் வேண்டும் என்னும்
நன்மரபை வலியுறுத்திய காந்திக்குப் பெருமை சேர்ப்பதாகும். சிறு
தொகையானாலும் குறிக்கக்கூறுவார் என்பதால் காந்திக் கணக்கு என்று ஆகியது.
"ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு" என்னும் தமிழ்ச் சொலவடை போன்றதே
இதுவும்.

2) பிரான்சிய மொழியில் இருப்பது போலவா என்பது தெரியாது, ஆனால் தமிழில்
பழமொழிகள் தொகுப்பு நூல்கள் பலவுண்டு.
திருவாட்டி செ. மீனாட்சிசுந்தரம் (மூதறிஞர் சி.ஆர். இராசகோபாலாச்சாரியின்
அமைச்சரவையில் இருந்த வி.சி பழனிசாமி அவர்களின் பெயர்த்தி) அவர்கள்
எழுதிய "Konku Proverbs - A Study" என்னும் நூலில் தமிழ்ப்
பழமொழிகள் 1263 ஐ தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கங்களோடு
பதிவு செய்திருக்கின்றார். இந்நூல் 1984 இல் M.Guhn & M. Adi
(Vellakkinaru, Coimbatore 641 029) என்பவர்களால்
வெளியிடப்பட்டது. மொத்த பக்கங்கள் 340.

3) மேலுள்ள புத்தகத்தின் கடைசியில் தந்திருந்த நூற்பட்டியலில் உள்ள சில
நூலகள்:

3.1) T. Chelvakesavaraya Mudaliyar, "Parallel Proverbs ". Tamil and
English.
S.P.C.K. Press Vepery, Madras, 1903
3.2) Herman Jensen, "A Classical Collection of Tamil Proverbs' 1897
3.3) P. Percival, "Tamil Proverbs with theri English Translation" 2nd
Editio,
Dinavartamani Press, Mylapore 1874

(மொத்தம் 24 நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன ஆனால் அவற்றுள் மேலுள்ள 3 உம்
குறிப்பாக தமிழ் பழமொழி பற்றியது).

4) இவையன்றி மேலும் பல நூல்கள் பழமொழிகளைத் தொகுத்து தந்துள்ளன.
குறைந்தது
மேலும் 5-6 புத்தகங்களாவது இருக்கும். 10-15 இருந்தாலும் வியப்பில்லை.
பல கட்டுரைகளும் இருக்க வேண்டும்.

அன்புடன்
செல்வா

On May 16, 9:50 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:


> பழமொழிக்கும் சொலவடைக்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதாகத் தெரிகிறது. 1994ல்
> பேராசிரியர் சாலை இளந்திரையன் தினமணியில் எழுதியிருந்த ஒரு கட்டுரையில்,
> அரசாங்கம் சீரமைப்புக்களுக்காக அரசு ஒதுக்குகிற நிதி, அதிகாரிகளாலும்,
> ஒப்பந்தக்காரர்களாலும் சுரண்டப்படுவதால் வருகிற நஷ்டத்தை காந்தி கணக்கில்தான்
> எழுதவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தச் சொலவடை எப்படி
> ஏற்பட்டிருந்தாலும், அது, நேர்மையின் உறைவிடமான மஹாத்மா காந்திக்கு மரியாதை
> சேர்ப்பதாக இல்லையென்று நான் எழுதியிருந்த கடிததிற்கு, கி.ராஜநாராயணன் பதில்
> எழுதியிருந்தார். வருத்தப்படுவதற்கு எந்த அடிப்படையும் இல்லாத போதும்,
> வருத்தப்படுவதாகச் சொல்லிக்கொண்டு அலைகிறவர்களை 'இவன் வேதநாயகம் பிள்ளை
> சடைச்சிக்கிற மாதிரி சடைச்சிக்கிறான்' என்று கரிசல் காட்டுப் பகுதியில்
> கூறுவதுண்டு என்றும், இதற்கும் வேதநாயகம் பிள்ளைக்கும் ஒரு தொடர்பும் இல்லை
> என்றும் குறிப்பிட்டிருந்தார். ஃப்ரென்ச் மொழியில் இத்தகைய சொலவடைகளைப் பொருள்
> விளக்கத்தோடு அகரமுதலியாகத் தொகுத்து
> வைத்திருக்கிறார்களாம். நாம் அதுபோற் செய்வதில்லை என்று வருத்தப்பட்டு
> எழுதியிருந்தார்.
> காந்தி கணக்கில் எழ்துவதும், வேதநாயகம் பிள்ளை சடைச்சிக்கிற மதிரி
> சடைச்சிக்கிறதும்
> பழமொழிகள் அல்லவே?
>
> அ.ரா.
>
> 2009/5/16 Dr Subramanian <vav...@gmail.com>
>
>
>
> > நம்ம ஊர்ல " பழமொழிக்கு"த்தான் இந்தப் பெயர். சொல்லுக்கு/ சொலவுக்கு (
> > சொல்லும் செய்திக்கு) அடைவாக- துணையாக அல்லது அடையாளம் காட்டுகின்ற வகையாக
> > வருவது என்று கொள்ளலாம்.
> > வவேசு
>

> > 2009/5/16 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > அகராதியில் கண்டது:
>
> >> சொலவடை , n. < சொலவு + அடை¹-. See சொலவு, 2. Loc.
>
> >> சொலவு , n. < சொல்¹-. 1. Saying, telling; சொல்லுகை. சொற்செல்லாவழிச் சொலவு
> >> (முது. காஞ். 87). 2. Proverb; பழமொழி. ஆயிரங் காக்கைக்கு ஓர் கல் என்று ஒரு
> >> சொலவு உண்டு. Loc.
>
> >> (Loc. = Local usage)
>

> >> 2009/5/15 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>


>
> >>> திருநெல்வேலிப் பக்கத்தில்  'சொலவடை' என்ற சொல் புழக்கத்தில் உண்டு. பழமொழி
> >>> அல்லது வழக்கத்தில் உள்ள வாசகம் ஒன்றைக் குறிப்பதற்கு அச்சொல்லைப்
> >>> பயன்படுத்துவார்கள்.
>
> >>> "கூந்தலுள்ள சீமமட்டி அள்ளிமுடிஞ்சுக்குவா" ன்னு ஒரு சொலவடை உண்டு என்று
> >>> பேசுவார்கள்.
>
> >>> இந்தச் சொல் எதிலிருந்து வந்தது என்று யாராவது சொல்ல முடியுமா?"
>
> >>> இலந்தை
>
> >> --
> >>http://www.geocities.com/nayanmars

Pas Pasupathy

unread,
May 16, 2009, 2:26:55 PM5/16/09
to santhav...@googlegroups.com
மிகப் பெரிய ஒரு பழமொழித் தொகுப்பு நூல் . கி.வா.ஜ -வின் 'தமிழ்ப் பழமொழிகள்'. (4 தொகுதிகள்) . 25000-க்கும் மேற்பட்ட பழமொழிகள் அடங்கியது. அவர் 50 ஆண்டுகளாய்ச் சேகரித்தவை.
 
பசுபதி
16-5-09

2009/5/16 செல்வா <c.r.sel...@gmail.com>

Siva Siva

unread,
May 16, 2009, 3:02:42 PM5/16/09
to santhav...@googlegroups.com
கி.வா.ஜ-வின் 'தமிழ்ப் பழமொழிகள்' நூலிலிருந்து:

மயிர் உள்ள சீமாட்டி இடக்கையாலும் முடிவாள்; வலக்கையாலும் முடிவாள்;  (17940)
மயிர் உள்ள சீமாட்டி எப்படி முடிந்தாலும் அழகுதான். (எப்படி முடிந்தால் என்ன).
மயிர் உள்ள சீமாட்டி வலக்கொண்டையும் போடுவாள்; இடக்கொண்டையும் போடுவாள்.
மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/5/16 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

செல்வா

unread,
May 16, 2009, 7:05:32 PM5/16/09
to சந்தவசந்தம்
அன்புள்ள பேரா. பசுபதி,

மிக்க நன்றி. இவ்வளவு பெரிய, 4-தொகுதி நூலாக இருந்தும்,
நான் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டது இல்லை (இது
என் குறைபாடே). இத்தனைக்கும் தமிழ்மீது பற்று உள்ளவன் நான்!
என்னால் இயன்ற அளவு, தமிழ்நூல்களைத் தேடிச்சென்று
வாங்குபவன்! இந்நிலை ஒன்றே போதும் தகவல்
எந்த அளவுக்குச் சிதறிக் கிடக்கிறதென்று.
தமிழர்க்ளாகிய நாம் பலவற்றை மிக இரகசியமாக வைத்திருப்போம்
போல்தெரிகிறது :)

நீங்கள் அருள்கூர்ந்து இந்த 4-தொகுதி நூலைப் பற்றிய
குறிப்புகள் தாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவில்
ஒரு பதிவு இடுகின்றேன். எவ்வாண்டு
இத் தொகுப்பு வெளியானது?

மீண்டும் ஒரு முறை என்னிடம் இருந்த
நூல்களில் இத் தொகுப்பைச் சுட்டியிருக்ககூடிய
சுட்டியிருக்க வேண்டிய நூல்களில்
துணைநூற்பட்டியல்களில் யாரேனும் கொடுத்து
இருக்கிறார்களா என்றும் பார்த்தேன் (மொழி வரலாறு, மரபுத்தொடர் அகராதி,
அகராதிகள் முதலியன). இல்லை! கவிஞர் ப. முருகையா
"நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதி" என்னும் நூலுக்கு
முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கள் கூட
அணிந்துரை தந்துள்ளார்கள். இந்நூலின் கடைசியில் சொலவடைகள்
சிலவும் இணைத்தும் இருக்கின்றார். ஆனால் துணைநூற்பட்டியல்
இல்லை!

எங்கே இந்தத் தொகுப்பு கிடைக்கும் என்னும் தகவலைத் தந்தாலும்
உதவியாக இருக்கும். இன்று ஒரு நல்ல செய்தியைத் தெரிந்து
கொண்டேன். நன்றி.


அன்புடன்
செல்வா

மே 16, 2009

On May 16, 2:26 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> மிகப் பெரிய ஒரு பழமொழித் தொகுப்பு நூல் . கி.வா.ஜ -வின் 'தமிழ்ப் பழமொழிகள்'.
> (4 தொகுதிகள்) . 25000-க்கும் மேற்பட்ட பழமொழிகள் அடங்கியது. அவர் 50
> ஆண்டுகளாய்ச் சேகரித்தவை.
>
> பசுபதி
> 16-5-09
>

> 2009/5/16 செல்வா <c.r.selvaku...@gmail.com>

> > > >> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > > - Show quoted text -- Hide quoted text -

Pas Pasupathy

unread,
May 16, 2009, 10:24:26 PM5/16/09
to santhav...@googlegroups.com
கி.வா.ஜகந்நாதன், "தமிழ்ப் பழமொழிகள், " ( 4 தொகுதிகள்),
 
அல்லயன்ஸ் கம்பெனி,
ப.எண்.244, ராமகிருஷ்ண மடம் சாலை,
தபால் பெட்டி எண்: 617
மயிலாப்பூர், சென்னை - 600 004
Rs.300/-
 
தொலைபேசி: 24641314
 
ஒரு பெட்டியில் நான்கு தொகுதிகளும் இருக்கும். நான் 4,5 ஆண்டுகளுக்கு முன்பே
இதைப் பார்த்த நினைவு. 2007-இலும் இருந்தது. இப்போது அச்சில் இருக்கிறதா என்று தெரியாது.
 
 
பசுபதி
16-4-09

2009/5/16 செல்வா <c.r.sel...@gmail.com>
அன்புள்ள பேரா. பசுபதி,

செல்வா

unread,
May 16, 2009, 11:22:35 PM5/16/09
to சந்தவசந்தம்
மிக்க நன்றி.

முதல் பதிப்பு எவ்வாண்டு என்னும் தகவல் உள்ளதா?
ஏன் இந்நூல் பிற புத்தகங்களில் குறிப்பிடவில்லை
என்பது எனக்கு கேள்விக்குறியாக உள்ளது. 25,000 உக்கும் மேற்பட்ட
பழமொழிகள் உள்ள 4-தொகுதி என்பது அவ்வளவு சாதாரணம்
இல்லையே,அதுவும் புகழ் மிக்க ஒருவரால் தொகுத்தெழுதப்பட்ட
ஒரு நூலாயிற்றே!

அன்புடன்
செல்வா

On May 16, 10:24 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> கி.வா.ஜகந்நாதன், "தமிழ்ப் பழமொழிகள், " ( 4 தொகுதிகள்),...
>
> read more »


>
> அல்லயன்ஸ் கம்பெனி,
> ப.எண்.244, ராமகிருஷ்ண மடம் சாலை,
> தபால் பெட்டி எண்: 617
> மயிலாப்பூர், சென்னை - 600 004
> Rs.300/-
>
> தொலைபேசி: 24641314

> email: sriniva...@alliancebook.com


>
> ஒரு பெட்டியில் நான்கு தொகுதிகளும் இருக்கும். நான் 4,5 ஆண்டுகளுக்கு முன்பே
> இதைப் பார்த்த நினைவு. 2007-இலும் இருந்தது. இப்போது அச்சில் இருக்கிறதா என்று
> தெரியாது.
>
> பசுபதி
> 16-4-09
>

> 2009/5/16 செல்வா <c.r.selvaku...@gmail.com>

> > பதில்- Hide quoted text -

Pas Pasupathy

unread,
May 17, 2009, 9:53:59 AM5/17/09
to santhav...@googlegroups.com
சென்னையில் நகைக்கடைகள் பார்த்திருக்கிறீர்களா? வாசலில் ஒரு காவல்காரன் இருப்பான். கடையிலிருந்து நான்கு பேர் வெளியில் சென்றால், நான்கு பேரை உள்ளே அனுப்புவான். நான் அந்த நிலையில் இருக்கிறேன்:-)) நான்கு நூல்கள் வாங்க வேண்டுமானால் , நான்கு நூல்களை நான் வெளியேற்ற வேண்டும்! :-))
 
அதாவது, நூல்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் வாங்கவில்லை!
 
கி.வா.ஜ சேகரிக்கிறார் என்பது ஓரளவு தமிழழார்வலர்களுக்குத் தெரிந்த விஷயம் தான். அந்தத் தொகுப்பை எந்த நூலகத்திற்குக் கொடுப்பார் என்ற கேள்விக்குறியும் இருந்தது. எப்போது தொகுப்பு வெளிவந்தது? அவருடைய மறைவிற்குப் பிறகா? முன்பா? என்பது போன்ற விவரங்கள் ஒருகாலத்தில் எனக்குத் தெரியும். இப்போது நினைவில்லை!:-))
 
 பதிப்பகத்திற்கு மின்னஞ்சல் செய்து கேளுங்கள்!
பதில் வரலாம்.
 
 
பசுபதி
17-5-09
 
 
 


 
2009/5/16 செல்வா <c.r.sel...@gmail.com>
மிக்க நன்றி.

Siva Siva

unread,
May 17, 2009, 10:31:40 AM5/17/09
to santhav...@googlegroups.com
என்னிடம் உள்ள பதிப்பு ஜெனரல் பப்ளிஷர்ஸ் 2001-ல் வெளியிட்டது.
(244 RK Mutt Rd, Mylapore, Chennai 600 004)
முன்னுரையில் கி.வா.ஜ.வின் கையெழுத்துத் தேதி - "4-5-88".

இங்கே கிடைக்கலாம்:
http://www.tamilnool.com/keyboard_search/field_list.php?field=Author&q=%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%9C

குறிப்பு எண் 30641
தலைப்பு தமிழ்ப் பழமொழிகள் 1-4
பாடம்
பொன்மொழி
ஆசிரியர்
கி வா ஜ
விலை
300

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/5/16 செல்வா <c.r.sel...@gmail.com>
மிக்க நன்றி.

செல்வா

unread,
May 17, 2009, 10:47:19 AM5/17/09
to சந்தவசந்தம்
பேரா. பசுபதிக்கும் சிவசிவா வி.சு அவர்களுக்கும்
நீங்கள் தந்த தகவல்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன்
செல்வா

On May 17, 10:31 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> என்னிடம் உள்ள பதிப்பு ஜெனரல் பப்ளிஷர்ஸ் 2001-ல் வெளியிட்டது.
> (244 RK Mutt Rd, Mylapore, Chennai 600 004)
> முன்னுரையில் கி.வா.ஜ.வின் கையெழுத்துத் தேதி - "4-5-88".
>

> இங்கே கிடைக்கலாம்:http://www.tamilnool.com/keyboard_search/field_list.php?field=Author&...


>
> குறிப்பு எண் 30641  தலைப்பு தமிழ்ப் பழமொழிகள் 1-4  பாடம்
> பொன்மொழி  ஆசிரியர்
> கி வா ஜ  விலை
> 300
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/5/16 செல்வா <c.r.selvaku...@gmail.com>

> > > > > 16-5-09- Hide quoted text -

ram

unread,
May 17, 2009, 9:37:28 PM5/17/09
to சந்தவசந்தம்
I HAVE A COLLECTION OF 'PAZAMOZI' . thanjai tamil palkalaik kazagam or
ulakath thamizaraychi wiruvanam. It is in Chennai. I think the
pazamozi by KIVAJA was first published by Amudha nilayam.

> > - Show quoted text -- Hide quoted text -

Pas Pasupathy

unread,
May 17, 2009, 10:52:49 PM5/17/09
to santhav...@googlegroups.com


2009/5/17 ram <ELAN...@gmail.com>

I HAVE A COLLECTION OF 'PAZAMOZI' . thanjai tamil palkalaik kazagam or
ulakath thamizaraychi wiruvanam. It is in Chennai. I think the
pazamozi by KIVAJA was first published by Amudha nilayam.
 
This is quite possible; many KVJ books originally published by Amudha Nilayam
have been republished by Alliance ( e.g. Kandhar Alankaram urai ) now. 
( General Publishers is essentially the same as Alliance)
The date 4-5-88 on KVJ's foreword ( indicated by Mani ) possibly indicates the first edition by Amudha Nilayam. ( KVJ passed away on 4th Nov, 88 )
 
I have another collection from Amudha Nilayam ( 10, 760 Tamil proverbs) called :
 
பழமொழி அகராதி
 
அனவரதநாயகம் பிள்ளை அவர்களால் பரிசோதிக்கப்பட்டது
அமுத நிலையம்
17, ஸ்ரீபுரம் இரண்டாவது தெரு, இராயப்பேட்டை, சென்னை - 600 014
 
நான்காம் பதிப்பு 2007
பக்கம் 424, ரூபாய் 150/-
 
 
பசுபதி
17-5-09

RAJAGOPALAN APPAN

unread,
May 18, 2009, 12:04:00 AM5/18/09
to santhav...@googlegroups.com
சொலவடை பழமொழிதான் என்றால் நம் முன்னோர்களே, பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகப் 'பழமொழி  நானூறு' தொகுத்து வைத்திருக்கிறார்களே. சொலவடை, 'கம்பி நீட்டுதல்', 'உண்டியல் பொரட்டல்' , 'கம்பி எண்ணுதல்', 'அளந்து விடுதல்' போன்ற வழக்காறுகள். அது இடத்துக்கு இடம் மாறுபடுவது. வட்டார வழக்கு என்று சொன்னால் சரியாக இருக்குமோ? தமிழில் அது போன்ற வழக்குகள் தொகுக்கப் படவில்லை என்பதே என் கருத்து.
அ.ரா.

2009/5/16 செல்வா <c.r.sel...@gmail.com>
1) காந்தி கணக்கில் எழுதுதல் என்பது காந்திக்குப் பெருமை சேர்ப்பது!

SUBBAIER RAMASAMI

unread,
May 18, 2009, 7:41:09 AM5/18/09
to santhav...@googlegroups.com
 
திரு. கணேசன் தனது ஆய்வுக் கருத்தைச் சொல்லுவாரென்று நினைத்தேன். அவரிதைப்பற்றி ஒன்றும்  சொல்லவில்லையே!
 
இலந்தை
 
On 5/17/09, RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com> wrote:
சொலவடை பழமொழிதான் என்றால் நம் முன்னோர்களே, பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகப் 'பழமொழி  நானூறு' தொகுத்து வைத்திருக்கித்றார்களே. சொலவடை, 'கம்பி நீட்டுதல்', 'உண்டியல் பொரட்டல்' , 'கம்பி எண்ணுதல்', 'அளந்து விடுதல்' போன்ற வழக்காறுகள். அது இடத்துக்கு இடம் மாறுபடுவது. வட்டார வழக்கு என்று சொன்னால் சரியாக இருக்குமோ? தமிழில் அது போன்ற வழக்குகள் தொகுக்கப் படவில்லை என்பதே என் கருத்து.

செல்வா

unread,
May 18, 2009, 8:56:22 AM5/18/09
to சந்தவசந்தம்
"ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு" என்னும் பொழுது அதில் ஏதோ ஒரு
கொள்கை, கருத்து முழுவதாக இருக்கின்றது. அதனைச் சொலவடை எனலாம்
என நினைக்கிறேன்"காந்திக் கணக்கு" என்பது ஒரு சொலவடை அல்ல ஆனாலும்
ஒரு கருத்தைச் சொல்லும் குறிப்பு மொழி. "கம்பி நீட்டுதல்", "கம்பி
எண்ணுதல்"
என்பதும் ஒருவகையான திருகலான குறிப்புமொழி :) ஆங்கிலத்தில் slang
expression,
idiomatic expression என்று கூறுவதை ஒத்ததாக இருக்குமா என்று அறியேன்.
ஆனால் பழமொழி அல்ல, ஒருவகையான குறிப்புமொழி. சில இடங்களில்
இடக்கரடக்கல் மொழியாகவும் இருக்கும். இவற்றைத் தொகுப்பதும்
ஓர் அருமையான பணியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்படி எத்தனை நூறு, அல்லதுஆயிரம் இருக்கும் என்று தெரியவில்லை.

10, 760 பழமொழிகள் கொண்ட பழமொழி அகராதி
பற்றி பேரா. பசுபதி அளித்த செய்திக்கும்
இராம் அவர்கள் அளித்த இன்னும் ஒரு பழமொழி நூல் (தஞ்சை பல்கலை
அல்லது உலக தமிழாராய்ச்சி நிறுவனம் பதிப்பு) பற்றிய
செய்திக்கும் நன்றி.

ஆம் இலந்தை அவர்களே, கணேசனிடம் மேலும் பல தகவல்கள்
இருக்கும். அவர் இந்த இழையை இன்னும் பார்க்கவில்லையோ
என்னவோ.

அன்புடன்
செல்வா

On May 18, 12:04 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:


> சொலவடை பழமொழிதான் என்றால் நம் முன்னோர்களே, பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்
> ஒன்றாகப் 'பழமொழி  நானூறு' தொகுத்து வைத்திருக்கிறார்களே. சொலவடை, 'கம்பி
> நீட்டுதல்', 'உண்டியல் பொரட்டல்' , 'கம்பி எண்ணுதல்', 'அளந்து விடுதல்' போன்ற
> வழக்காறுகள். அது இடத்துக்கு இடம் மாறுபடுவது. வட்டார வழக்கு என்று சொன்னால்
> சரியாக இருக்குமோ? தமிழில் அது போன்ற வழக்குகள் தொகுக்கப் படவில்லை என்பதே என்
> கருத்து.
> அ.ரா.
>

> 2009/5/16 செல்வா <c.r.selvaku...@gmail.com>

> > > >> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > > -
>

> ...
>
> read more »- Hide quoted text -

Pas Pasupathy

unread,
May 18, 2009, 10:16:45 AM5/18/09
to santhav...@googlegroups.com

பழமொழி, சொலவடை இவற்றைப் பற்றி அண்மையில் வந்த ஓர் ஆய்வுநூலைப் பற்றிய அறிமுகம்; ஜெயமோகன் எழுதியது.

http://jeyamohan.in/?p=2240

பேராசிரியர் அண்ணன் பசுபதி ( தேவமைந்தன் ) ( சந்த வசந்த உறுப்பினர் ) புதுச்சேரி பழமொழிகளைப் பற்றி
நிறைய எழுதியுள்ளார். அவருடைய சில கட்டுரைகள்:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60608252&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60802073&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60609012&format=html

எனக்குத் தெரிந்து, பல தொகுப்பு நூல்களில் சொலவடை, பழமொழி .. யாவும் சேர்ந்துதான் உள்ளன.
 
இன்னும் பல தொகுப்புகள் உள்ளன.
 
பசுபதி
18-5-09

2009/5/18 செல்வா <c.r.sel...@gmail.com>

Dr Subramanian

unread,
May 18, 2009, 10:19:03 AM5/18/09
to santhav...@googlegroups.com
ஆங்கிலத்தில் Phrase என்று சொல்வதை 'சொலவடை" எனலாமா? It is not proverb however..
வவேசு

2009/5/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

சௌந்தர்

unread,
May 18, 2009, 12:54:08 PM5/18/09
to சந்தவசந்தம்
அ. ரா. சொல்வது போல் சொலவடை என்பது பழமொழியைக் குறிக்காது. பழமொழிகளில்
ஒரு நீதியினை அல்லது ஓர் அறிவுரையைச் சொல்லும் வகையாக அமைந்து வருவதைக்
காண்கிறோம். சொலவடையில் இந்த மாதிரியான அறிவுரை கிடையாது. வட்டார
வழக்கு அல்லது குழூஉக்குறி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

என்னடா இந்த கும்பகோணத்தான் இடையில் வந்து திருநெல்வேலிச் சொலவடையில்
மூக்கை நுழைத்து எங்களுக்கே அல்வா கொடுக்கிறான் என்று
நினைக்கிறீர்களா? கும்பகோணத்தில் தேள் கொட்டினால் குற்றாலத்திலே
நெறிகட்டும் என்கிற சொலவடை கேட்டதுண்டு அல்லவா? அதனால் தான் இங்கே
எல்லோருக்கும் கடுக்காய் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

சொலவடை பற்றி ஒரு ப்ளாக் பக்கம் இங்கே பார்க்கலாம்

http://satamilselvan.blogspot.com/2009/04/blog-post_06.html?showComment=1239047160000


On May 18, 12:04 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:

nahupoliyan

unread,
May 19, 2009, 7:08:24 AM5/19/09
to சந்தவசந்தம்
ஏற்கெனவே புழக்கத்திலுள்ள இலக்கணவகராதிப்படி
phrase = சொற்றொடர் -
ஒரு வாக்கியத்தின் [அர்த்தமற்றதல்லாத] பாகம். குறிப்பாக,
வினைமுற்றில்லாத பகுதி.

பழமொழிக்கு ஈடான சொல் proverb. ஒரு முழு வாக்கிய உருவினது.
முன்னோர் உரைத்துச்சென்றுள்ள பொருணயமிக்க வாக்கியங்களை
மூதுரை என்றழைப்பதுமுண்டல்லவா? அதற்கிணையாக ஆங்கிலத்திலும் சொல்லுள்ளது
- adage.

'கம்பி நீட்டல்' 'அல்வா கொடுத்தல்', 'எப்பம் விடுதல்', பழந்தின்று
கொட்டை உமிழ்ந்திருத்தல்.
கும்பலோடு கோவிந்தா[போடல்], 'ஜகா வாங்கல்', 'ஒத்தூதுதல்',
'வயிறெரிதல்', 'நெஞ்சு வேகாமை',
இன்ன வகைச் சொற்றொடர்கள் பழமொழிகக்ளாகா, ஆனால் வெறும் phrase
மட்டுமல்ல, பின்,
பொருளில் / நடையில் ஒரு நயம் தொனிக்கும் சொலவடையெடுத்துக்காட்டுகள் -
idioms [செல்வா குறிப்பிட்டபடி].

ஆடல்மன்.இளமுருகுவின் சொற்படி நகுபோலியன் உபயம்.
-------------------------------------------------------

On May 18, 7:19 pm, Dr Subramanian <vav...@gmail.com> wrote:
> ஆங்கிலத்தில் Phrase என்று சொல்வதை 'சொலவடை" எனலாமா? It is not proverb
> however..

> வவேசு...
>
> read more »
>
> 2009/5/18 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>


>
>
>
>
>
> > திரு. கணேசன் தனது ஆய்வுக் கருத்தைச் சொல்லுவாரென்று நினைத்தேன்.
> > அவரிதைப்பற்றி ஒன்றும்  சொல்லவில்லையே!
>
> > இலந்தை
>

> > On 5/17/09, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com> wrote:
>
> >> சொலவடை பழமொழிதான் என்றால் நம் முன்னோர்களே, பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்
> >> ஒன்றாகப் 'பழமொழி  நானூறு' தொகுத்து வைத்திருக்கித்றார்களே. சொலவடை, 'கம்பி
> >> நீட்டுதல்', 'உண்டியல் பொரட்டல்' , 'கம்பி எண்ணுதல்', 'அளந்து விடுதல்' போன்ற
> >> வழக்காறுகள். அது இடத்துக்கு இடம் மாறுபடுவது. வட்டார வழக்கு என்று சொன்னால்
> >> சரியாக இருக்குமோ? தமிழில் அது போன்ற வழக்குகள் தொகுக்கப் படவில்லை என்பதே என்
> >> கருத்து.
>
> >> அ.ரா.
>

> >> 2009/5/16 செல்வா <c.r.selvaku...@gmail.com>

> >>> பழமொழி- Hide quoted text -

RAJAGOPALAN APPAN

unread,
May 19, 2009, 10:17:26 AM5/19/09
to santhav...@googlegroups.com
ஆங்கிலத்தில் idiom     போலத் தமிழில் வருவது சொலவடை என்று கொள்ளலாம். Idiom என்பதற்கு , தனி மொழி மரபு, நடைமுறையில் வழங்கும் சொற்றொடர்கள், words group whose meaning should be taken as a whole    என்று அகராதியில் பொருள் தரப்பட்டுள்ளது. சொலவடையானால் அதில் சொற்களுக்கான நேரடியான பொருளைக் கொள்ளமுடியாது. தொடர் முழுவதற்குமான கருது பொருள் அந்தந்த வட்டாரத்தில் எப்படி வழங்கப்படுகிறதோ அப்படியே கொள்ள வேண்டும். Leading a dog's life என்றால், சோற்றுக்க்கலைகிற கடுமையான வாழ்க்கை வாழ்வதாகப் பொருள் கொள்ளவேண்டும்.  நாய்க்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும்  கிடையாது.
 
அ.ரா.

visit arajagopalan.blogspot.com

2009/5/18 Dr Subramanian <vav...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages