ஈற்றடி

70 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 20, 2026, 7:53:29 PMFeb 20
to சந்தவசந்தம்
இறைவனைக் காண்ப தினிது

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 8:27:22 PMFeb 20
to santhav...@googlegroups.com
தூய மனத்தில் துயரற்ற மெய்யுணர்வில்
நேயமுடன் நித்தமும் நின்றக்கால் - ஆயும்
மறையனைத்தும் ஏத்தும் மலரடியே எண்ணில்
இறைவனைக் காண்ப தினிது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

இமயவரம்பன்

unread,
Feb 20, 2026, 8:50:12 PMFeb 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான ஈற்றடி, திரு. தங்கவேல்!

எனது முயற்சி:

வேலைப் புனல்விரிப்பில் வேலி வயற்செழிப்பில்
சோலை மலர்ச்சிரிப்பின் சுந்தரத்தில் - கோலப்
பறவையின் பாட்டிசையில் பைந்தமிழின் பண்ணில்
இறைவனைக் காண்ப தினிது.

(வேலை = கடல்)

- இமயவரம்பன்

இமயவரம்பன்

unread,
Feb 20, 2026, 8:51:01 PMFeb 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை , திரு. ராம்கிராம்! 

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 8:53:31 PMFeb 20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 20, 2026, at 20:51, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1A53F537-0AC9-4C45-81D2-CFA9B644BDD7%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 8:54:43 PMFeb 20
to santhav...@googlegroups.com
ஆகா! அற்புதம். செப்பலோசையும் மகச் சிறப்பாய் அமைந்துள்ளது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 20, 2026, at 20:50, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

அருமையான ஈற்றடி, திரு. தங்கவேல்!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Feb 20, 2026, 9:01:58 PMFeb 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு ராம்கிராம் 

N. Ganesan

unread,
Feb 20, 2026, 9:47:05 PMFeb 20
to சந்தவசந்தம்
On Friday, February 20, 2026 at 7:50:12 PM UTC-6 இமயவரம்பன் wrote:
அருமையான ஈற்றடி, திரு. தங்கவேல்!

எனது முயற்சி:

வேலைப் புனல்விரிப்பில் வேலி வயற்செழிப்பில்
சோலை மலர்ச்சிரிப்பின் சுந்தரத்தில் - கோலப்
பறவையின் பாட்டிசையில் பைந்தமிழின் பண்ணில்
இறைவனைக் காண்ப தினிது.

விரிப்பு, செழிப்பு, சிரிப்பு இருப்பதால்,
"பாட்டிசைப்பில்" என இருக்கலாமோ?

இமயவரம்பன்

unread,
Feb 20, 2026, 9:50:06 PMFeb 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான பரிந்துரைக்கு மிக்க நன்றி, திரு. கணேசன். ஆம், பாட்டிசைப்பு மிகவும் பொருந்தும்.

Siva Siva

unread,
Feb 20, 2026, 10:07:53 PMFeb 20
to santhav...@googlegroups.com
Good,

2026-02-20

ஈற்றடிக்கு வெண்பா - இறைவனைக் காண்ப தினிது

----------------

(வெண்பா)

அங்கண் அடிகளை ஐம்பூதம் ஆகியண்டம்

எங்கும் நிறைந்தானை எந்தையைக் - கங்கை

பிறையணி பிஞ்ஞகனைப் பெண்பாதி ஆன

இறைவனைக் காண்ப தினிது.

V. Subramanian

Sai Ganesan H

unread,
Feb 20, 2026, 10:10:04 PMFeb 20
to santhav...@googlegroups.com
எனது முயற்சி! 

எங்கும் நிறைந்தும் எவர்க்கும் மறைந்திருக்கும்

சங்கரனைக் காண்பது சாத்தியமே - எங்கள்

குறைதீர்க்கும் புண்யதலக்  கோவில் களிலே 

இறைவனைக் காண்ப தினிது. 

—- சத்ய வேழன் H சாயி கணேசன் 

21-02-2026

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 10:12:08 PMFeb 20
to santhav...@googlegroups.com
மிக நல்ல முயற்சி. பாராட்டுகள்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 20, 2026, at 22:10, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 10:13:41 PMFeb 20
to santhav...@googlegroups.com
அருமை, திரு. சிவசிவா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 20, 2026, at 22:10, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:

--

N. Ganesan

unread,
Feb 20, 2026, 11:51:29 PMFeb 20
to santhav...@googlegroups.com
  வாழ்த்து

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Feb 20, 2026, 11:52:47 PMFeb 20
to santhav...@googlegroups.com
நலமா?

இயன்றளவு ஊக்கவரும்   ஏழை சிரிப்பில்
இறைவனைக் காண்பது இனிது

முடிந்த அளவு உதவி, ஊக்கம் அளித்தால் தோன்றும் ஓர் ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்பது இன்பம் அளிப்பதாகும்.

NG

On Fri, Feb 20, 2026 at 6:53 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
இறைவனைக் காண்ப தினிது

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Feb 21, 2026, 12:45:01 AMFeb 21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி! ஐயா! 

Sai Ganesan H

unread,
Feb 21, 2026, 12:46:58 AMFeb 21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி! ஐயா! 

Govindaraju Arunachalam

unread,
Feb 21, 2026, 1:57:13 AMFeb 21
to santhav...@googlegroups.com

தறிபடும் பாட்டில் தவித்து வதங்கும்

வறியவர்க் கீந்துநாம் வாழ்வோம் -வறுமைச்

சிறையினில் வாடுவோர் சிந்தும் சிரிப்பில்

இறைவனைக் காண்ப தினிது.

-கருவூர் இனியன்.

--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Sai Ganesan H

unread,
Feb 21, 2026, 2:16:28 AMFeb 21
to santhav...@googlegroups.com

N. Ganesan

unread,
Feb 21, 2026, 6:52:55 AMFeb 21
to santhav...@googlegroups.com
On Sat, Feb 21, 2026 at 12:57 AM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
தறிபடும் பாட்டில் தவித்து வதங்கும்
வறியவர்க் கீந்துநாம் வாழ்வோம் -வறுமைச்
சிறையினில் வாடுவோர் சிந்தும் சிரிப்பில்
இறைவனைக் காண்ப தினிது.

 - கருவூர் இனியன்.

🙏
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ? தறிபடுமோ? யார்படுவார்?
    - பாரதி வரிகளை நினைவூட்டும் வெண்பா!

நா. கணேசன்

Ram Ramakrishnan

unread,
Feb 21, 2026, 8:10:07 AMFeb 21
to santhav...@googlegroups.com
மிக அருமை, இனியனாரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 21, 2026, at 06:52, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 21, 2026, 4:17:46 PMFeb 21
to சந்தவசந்தம்
ஆஹா அனைவரது கவிதையிலும் ஆண்டவனைக் கண்டேன்.
அனைவருக்கும் நன்றி 

On Saturday, February 21, 2026 at 10:22:47 AM UTC+5:30 N. Ganesan wrote:
நலமா?

நலம் ஐயா 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 21, 2026, 7:36:54 PMFeb 21
to சந்தவசந்தம்
2) புத்தம் புதிய புவி

Siva Siva

unread,
Feb 21, 2026, 11:30:26 PMFeb 21
to santhav...@googlegroups.com
Did you write any verse for your earlier last line?

V. Subramanian

Parthasarathy S

unread,
Feb 22, 2026, 8:06:55 AMFeb 22
to santhav...@googlegroups.com
நேற்றைய ஈற்றடிக்கு அடியேனின் வெண்பா

நிறைவினைத் தேடி நெடும்பயணம் கொண்டு
துறைபல பின்துறப்ப தேனோ? - முறையாய்
மறைவழி நிற்போர் மலரடி ஆழ்ந்தே

இறைவனைக் காண்ப தினிது

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Ram Ramakrishnan

unread,
Feb 22, 2026, 9:31:49 AMFeb 22
to santhav...@googlegroups.com

ஈற்றடி: புத்தம் புதிய புவி

அறவழி நாடி அகமலந்  தீர்த்துப்

பிறர்நலம்  இன்புறப் பேணி- உறவொளிரச்

சித்தங்கொள் நேசர்கள் இத்தலத்தில் தோன்றிலஃதே

புத்தம் புதிய புவி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 21, 2026, at 19:36, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

2) புத்தம் புதிய புவி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Feb 22, 2026, 9:42:14 AMFeb 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
ஈற்றடிக்கு மிகப் பொருத்தமான கருத்தமைந்த வெண்பா அருமை, திரு. சிவசிவா. 

இமயவரம்பன்

unread,
Feb 22, 2026, 9:51:03 AMFeb 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை திரு சத்யவேழன்

இமயவரம்பன்

unread,
Feb 22, 2026, 9:51:55 AMFeb 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு திரு இனியன்

இமயவரம்பன்

unread,
Feb 22, 2026, 9:52:47 AMFeb 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை திரு பார்த்தசாரதி 

இமயவரம்பன்

unread,
Feb 22, 2026, 9:56:34 AMFeb 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை, திரு ராம்கிராம்!

“உண்டால் அம்ம இவ் உலகம் … 
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே” என்னும் புறநானூற்றுச் செய்யுள் நினைவுக்கு வருகிறது.

Ram Ramakrishnan

unread,
Feb 22, 2026, 9:59:09 AMFeb 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.

ஆம். கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் அற்புதமான பாடல் நினைவிற்கு வருவது அதிசயம் இல்லையே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 22, 2026, at 09:56, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Feb 22, 2026, 10:07:11 AMFeb 22
to சந்தவசந்தம்
புத்தம் புதிய புவி 

பொல்லாங்(கு) ஒழியப் புனிதம் தழைத்தோங்க 
நல்லார் குழாம்இந்த நாடாள - எல்லோர்க்கும் 
நித்தம் மனங்கள் நிறைய, மலரட்டும் 
புத்தம் புதிய புவி!

அரசி. பழனியப்பன் 

On Sun, 22 Feb 2026, 1:36 am தங்கவேல் காஞ்சிபுரம், <k.thanga...@gmail.com> wrote:
2) புத்தம் புதிய புவி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Feb 22, 2026, 10:53:21 AMFeb 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை, அரசியாரே!

எனது முயற்சி:

தேசப் பிரிவறுந்தால் தீதில் அறம்வளர்ந்தால்
மோசக் கடும்போர் முரணொழிந்தால் - நேசத்தில்
சித்தம் சிறக்கச் செயலிணைந்தால் தோன்றாதோ
புத்தம் புதிய புவி.

- இமயவரம்பன்

Arasi Palaniappan

unread,
Feb 22, 2026, 11:22:47 AMFeb 22
to சந்தவசந்தம்
ஆஹா! அருமை இளவலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Feb 22, 2026, 11:26:39 AMFeb 22
to santhav...@googlegroups.com

எனது முயற்சி! 

புத்தம் புதிய புவி

*****************

குப்பை மிகுந்ததொரு கோளென மாறியபின்

இப்புவி வாழ இனிவேண்டாம்- சொப்பனமாம்

சுத்தம் நிறைந்தொரு சூழலுடன் தோன்றட்டும்

புத்தம் புதிய புவி. 

- சத்ய வேழன் H  Sai Ganesan

22-02-2026

இமயவரம்பன்

unread,
Feb 22, 2026, 11:33:31 AMFeb 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி!

இமயவரம்பன்

unread,
Feb 22, 2026, 11:35:09 AMFeb 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மாசற்ற வையம் படைக்க விரும்பும் வெண்பா சிறப்பு! 

-  இமயவரம்பன் 

Sai Ganesan H

unread,
Feb 22, 2026, 11:36:18 AMFeb 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Feb 22, 2026, 2:06:16 PMFeb 22
to santhav...@googlegroups.com

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 22, 2026, 3:09:47 PMFeb 22
to சந்தவசந்தம்
குருவே வணக்கம்  🙏

On Sunday, February 22, 2026 at 10:00:26 AM UTC+5:30 Siva Siva wrote:
Did you write any verse for your earlier last line?

V. Subramanian
எதுவும் எழுதவில்லை.

Sai Ganesan H

unread,
Feb 22, 2026, 4:54:10 PMFeb 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா!

சத்ய வேழன் H Sai Ganesan

Siva Siva

unread,
Feb 22, 2026, 5:28:38 PMFeb 22
to santhav...@googlegroups.com
ok.

When one proposes a last line, I expect that the person proposing that last line would have written a verse for that.

V. Subramanian

Parthasarathy S

unread,
Feb 22, 2026, 9:45:46 PMFeb 22
to santhav...@googlegroups.com
அடியேனின் முயற்சி!

அத்தன் அளித்தமைத்தான் ஆங்குநாம் காப்பாளர்
சித்தம் பிறழாமல் சீரிட்டே - எத்திசையும்
தத்தம் மனதைத் தடையின்றித் தான்விரிக்கப்

புத்தம் புதிய புவி
புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 26, 2026, 2:45:55 AMFeb 26
to சந்தவசந்தம்
ஈற்றடிக்குப் பாடல் இது

1)
துன்மார்க்கம் எல்லாம் தொலைய அடியேனும்
சன்மார்க்கச் சங்கத்தைத் சார்ந்தினிதே - என்னுள்
மறைந்திருக்கும் மாமணியாம் வற்றாக் கருணை
இறைவனைக் காண்ப தினிது.

2)
செத்துப் பிறக்கும் செயலொழித்துச் சாகாத
வித்தையைக் கற்றறிந்து மேன்மையாய்-  நித்திய 
சுத்த சமரச தூய மனிதர்வாழ்
புத்தம் புதிய புவி

Siva Siva

unread,
Feb 26, 2026, 8:35:45 AMFeb 26
to santhav...@googlegroups.com
இரண்டாம் பாடலில் வினைமுற்று எது?

வி. சுப்பிரமணியன்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 22, 2026, 7:35:42 PM (3 days ago) Apr 22
to சந்தவசந்தம்
வாக்களிக்க வாரீர் மகிழ்ந்து.

( செங்கம் வாக்குச்சாவடியில் பணியில் இருக்கும் போது தோன்றியது)

Rajagopalan Soundararajan

unread,
Apr 23, 2026, 6:44:46 AM (2 days ago) Apr 23
to சந்தவசந்தம்
வாக்களித்த வண்ணம் செயற்பாலர் என்றறிந்து
வாக்களிக்க வாரீர் மகிழ்ந்து.

Sai Ganesan H

unread,
Apr 23, 2026, 11:34:13 AM (2 days ago) Apr 23
to santhav...@googlegroups.com

ஈற்றடிக்கு அடியேன் எழுதும் வெண்பா! 

ஆயிரத்தில் ரூபாய் அரைபவன் மூக்குத்தி

கோயிலுக்குப் பொன்னும் கொடுப்பாரே- நோயினைப்போல்

வாக்கினை விற்கும் வழக்கத்துள் வீழாமல்

வாக்களிக்க வாரீர் மகிழ்ந்து. 

— சத்ய வேழன் H சாயிகணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 23, 2026, 11:40:43 AM (2 days ago) Apr 23
to santhav...@googlegroups.com
/  கோயிலுக்குப் பொன்னும் கொடுப்பாரே   /

Which party does that?
==

Sai Ganesan H

unread,
Apr 23, 2026, 11:46:28 AM (2 days ago) Apr 23
to santhav...@googlegroups.com
Many candidates promise gold/ silver ornaments to local temples so that the devotees may vote for them. 

சத்ய வேழன் H சாயி கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajagopalan Soundararajan

unread,
Apr 24, 2026, 6:54:11 AM (yesterday) Apr 24
to சந்தவசந்தம்

பொய்யுரைக்கும் புன்மையினோர் புறம்தள்ளி வைத்து

மெய்யுரைக்கும் வேட்பாளர் விருப்பமுடன் வேண்டி

மையிட்ட விரலொன்றால் வாக்களித்த இன்று

செய்தவோர் நற்செயலே தீர்ப்பாகும் கண்டீர்!

ஸௌந்தர் 
On Thursday, 23 April 2026 at 11:46:28 UTC-4 Sai Ganesan H wrote:

Reply all
Reply to author
Forward
0 new messages