ஈற்றடி

17 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 20, 2026, 7:53:29 PM (11 hours ago) Feb 20
to சந்தவசந்தம்
இறைவனைக் காண்ப தினிது

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 8:27:22 PM (11 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com
தூய மனத்தில் துயரற்ற மெய்யுணர்வில்
நேயமுடன் நித்தமும் நின்றக்கால் - ஆயும்
மறையனைத்தும் ஏத்தும் மலரடியே எண்ணில்
இறைவனைக் காண்ப தினிது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

இமயவரம்பன்

unread,
Feb 20, 2026, 8:50:12 PM (10 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான ஈற்றடி, திரு. தங்கவேல்!

எனது முயற்சி:

வேலைப் புனல்விரிப்பில் வேலி வயற்செழிப்பில்
சோலை மலர்ச்சிரிப்பின் சுந்தரத்தில் - கோலப்
பறவையின் பாட்டிசையில் பைந்தமிழின் பண்ணில்
இறைவனைக் காண்ப தினிது.

(வேலை = கடல்)

- இமயவரம்பன்

இமயவரம்பன்

unread,
Feb 20, 2026, 8:51:01 PM (10 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை , திரு. ராம்கிராம்! 

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 8:53:31 PM (10 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 20, 2026, at 20:51, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1A53F537-0AC9-4C45-81D2-CFA9B644BDD7%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 8:54:43 PM (10 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com
ஆகா! அற்புதம். செப்பலோசையும் மகச் சிறப்பாய் அமைந்துள்ளது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 20, 2026, at 20:50, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

அருமையான ஈற்றடி, திரு. தங்கவேல்!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Feb 20, 2026, 9:01:58 PM (10 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு ராம்கிராம் 

N. Ganesan

unread,
Feb 20, 2026, 9:47:05 PM (9 hours ago) Feb 20
to சந்தவசந்தம்
On Friday, February 20, 2026 at 7:50:12 PM UTC-6 இமயவரம்பன் wrote:
அருமையான ஈற்றடி, திரு. தங்கவேல்!

எனது முயற்சி:

வேலைப் புனல்விரிப்பில் வேலி வயற்செழிப்பில்
சோலை மலர்ச்சிரிப்பின் சுந்தரத்தில் - கோலப்
பறவையின் பாட்டிசையில் பைந்தமிழின் பண்ணில்
இறைவனைக் காண்ப தினிது.

விரிப்பு, செழிப்பு, சிரிப்பு இருப்பதால்,
"பாட்டிசைப்பில்" என இருக்கலாமோ?

இமயவரம்பன்

unread,
Feb 20, 2026, 9:50:06 PM (9 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான பரிந்துரைக்கு மிக்க நன்றி, திரு. கணேசன். ஆம், பாட்டிசைப்பு மிகவும் பொருந்தும்.

Siva Siva

unread,
Feb 20, 2026, 10:07:53 PM (9 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com
Good,

2026-02-20

ஈற்றடிக்கு வெண்பா - இறைவனைக் காண்ப தினிது

----------------

(வெண்பா)

அங்கண் அடிகளை ஐம்பூதம் ஆகியண்டம்

எங்கும் நிறைந்தானை எந்தையைக் - கங்கை

பிறையணி பிஞ்ஞகனைப் பெண்பாதி ஆன

இறைவனைக் காண்ப தினிது.

V. Subramanian

Sai Ganesan H

unread,
Feb 20, 2026, 10:10:04 PM (9 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com
எனது முயற்சி! 

எங்கும் நிறைந்தும் எவர்க்கும் மறைந்திருக்கும்

சங்கரனைக் காண்பது சாத்தியமே - எங்கள்

குறைதீர்க்கும் புண்யதலக்  கோவில் களிலே 

இறைவனைக் காண்ப தினிது. 

—- சத்ய வேழன் H சாயி கணேசன் 

21-02-2026

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 10:12:08 PM (9 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com
மிக நல்ல முயற்சி. பாராட்டுகள்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 20, 2026, at 22:10, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 10:13:41 PM (9 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com
அருமை, திரு. சிவசிவா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 20, 2026, at 22:10, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:

--

N. Ganesan

unread,
Feb 20, 2026, 11:51:29 PM (7 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com
  வாழ்த்து

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Feb 20, 2026, 11:52:47 PM (7 hours ago) Feb 20
to santhav...@googlegroups.com
நலமா?

இயன்றளவு ஊக்கவரும்   ஏழை சிரிப்பில்
இறைவனைக் காண்பது இனிது

முடிந்த அளவு உதவி, ஊக்கம் அளித்தால் தோன்றும் ஓர் ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்பது இன்பம் அளிப்பதாகும்.

NG

On Fri, Feb 20, 2026 at 6:53 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
இறைவனைக் காண்ப தினிது

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
12:45 AM (6 hours ago) 12:45 AM
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி! ஐயா! 

Sai Ganesan H

unread,
12:46 AM (6 hours ago) 12:46 AM
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி! ஐயா! 

Govindaraju Arunachalam

unread,
1:57 AM (5 hours ago) 1:57 AM
to santhav...@googlegroups.com

தறிபடும் பாட்டில் தவித்து வதங்கும்

வறியவர்க் கீந்துநாம் வாழ்வோம் -வறுமைச்

சிறையினில் வாடுவோர் சிந்தும் சிரிப்பில்

இறைவனைக் காண்ப தினிது.

-கருவூர் இனியன்.

--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Sai Ganesan H

unread,
2:16 AM (5 hours ago) 2:16 AM
to santhav...@googlegroups.com

N. Ganesan

unread,
6:52 AM (21 minutes ago) 6:52 AM
to santhav...@googlegroups.com
On Sat, Feb 21, 2026 at 12:57 AM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
தறிபடும் பாட்டில் தவித்து வதங்கும்
வறியவர்க் கீந்துநாம் வாழ்வோம் -வறுமைச்
சிறையினில் வாடுவோர் சிந்தும் சிரிப்பில்
இறைவனைக் காண்ப தினிது.

 - கருவூர் இனியன்.

🙏
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ? தறிபடுமோ? யார்படுவார்?
    - பாரதி வரிகளை நினைவூட்டும் வெண்பா!

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages