நம்மாழ்வார் காட்டும் 26

12 views
Skip to first unread message

Rajagopalan Soundararajan

unread,
Jan 1, 2026, 10:02:19 AM (7 days ago) Jan 1
to சந்தவசந்தம்

நம்மாழ்வார் காட்டும் 26

எம்பெருமான் அடியார்களுக்கு எப்படியெல்லாம் காட்சி தருகின்றார்?  தியாகைய்யர் போன்ற பரம பக்தர்களுக்கு முகங்காட்டுவதுபோலவே எண்ணிக்கையினால்  தன்னைக் குறிப்பிடுமவர்களுக்கும் முகங்காட்டுந்தன்மை யுள்ளதென்று 1-10-2 என்னும் திருவாய்மொழியில் காட்டியருளுகிறார். (காதன்மையால் தொழில் கண்ணுள்ளே நிற்கும்) காதன்மையாவது பக்தி; அத்தகைய பக்தியோடு தொழுதால் அவர்களது கண்வட்டத்துக்கு அப்பால் போகமாட்டாதேயிருப்பான். 

ஆனால் நம் போன்றருக்கு, (எண்ணிலும் வரும்) ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணிக்கொண்டே போனால் “இருபத்தாறு” என்னுமளவில் தன்னைக்குறித்ததாகக் கொண்டுவந்து நம் முன்னே நிற்பன் என்கிறார். அவ்வளவு ஸுலபன். 

ஏனிந்த 26?

 “பொங்கையம்புலனும் பொறியைந்துங் கருமேந்திரிய மைம்பூதம், இங்கிவ்வுயிரேய் பிரகிருதிமானாங்காரமனங்களே” (திருவாய்மொழி 10-7-10) என்கிறபடியே இருபத்தினான்கு தத்துவங்களுக்குமேல் இருபத்தைந்தாவது தத்துவம் ஜீவாத்மா, இருபத்தாறாவது தத்துவம் பரமாத்மா என்பது ஶாஸ்திர ஸித்தாந்தமாதலால், ஒருவன் இதனையறியாமல் ஏதோ காரியப்பாடாக ஒன்று முதலாக எண்ணிக்கொண்டு போந்து இருபத்தாறவளவிலே வந்தால் அந்த எண் தன்னைக் குறித்ததாக எம்பெருமான் வந்து நிற்பான் என்கிறார். 

ஏதேனுமொரு காரணத்தை இட்டு,  எம்பெருமான் நம்மைக் கைக்கொள்வதில் மிக்க வூற்றமுடையவன் என்பதைக் காட்டும். 

ஸ்ரீவசநபூஷணத்தில் நான்காவது பிரகரணத்தில் “த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க” என்று தொடங்கும் முதல் சூர்ணிகையிலே இவ்வர்த்தம் விரியக்காணத்தக்கது.

எம்பெருமானை நம்மிடையே அநுபவிக்க இவ்வாண்டைவிட மேலான ஆண்டு உண்டோ? மேலை நாட்டு கணித ரீதியிலூம் 26 பெருமை மிக்கதே!

26 is a gematric number for GOD with the corresponding substitutions in English (i.e. A=1, B=2, C=3, etc.) Let's see.  G(7)+O(15)+D(4) is 26.

அனைவருக்கும் 2026 புத்தாண்டு வாழ்த்துகள்.

ஸௌந்தர் 


இமயவரம்பன்

unread,
Jan 1, 2026, 12:25:55 PM (7 days ago) Jan 1
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
“எண்ணற்கு அரியான்” ஆன பகவான், பரமாத்ம தத்துவத்தைக் குறிக்கும் 26 என்னும் எண் ஒன்றை நாம் சொன்னால், தன்னையே அழைத்ததாகக் கொண்டு “என்?” என்று முன் நிற்பான் என்று திரு. ஸெளந்தர் அவர்கள் விளக்கிச் சொன்ன விதம் மிக அருமை!

Subbaier Ramasami

unread,
Jan 1, 2026, 2:24:57 PM (7 days ago) Jan 1
to santhav...@googlegroups.com
26க்கு என்னே பெருமை

இதனை உணர்ந்து அது நடந்தால் அருமை

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1db4fc96-c93f-4d95-a24a-6cb8625d471dn%40googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Jan 1, 2026, 8:42:35 PM (7 days ago) Jan 1
to santhav...@googlegroups.com
mika arumai saundar. vazga. en puthu vazththu umaku,
 yogiyar

Reply all
Reply to author
Forward
0 new messages