பங்குனி உத்திர நன்னாள்

1 view
Skip to first unread message

Parthasarathy S

unread,
Apr 1, 2026, 3:13:37 AM (yesterday) Apr 1
to santhav...@googlegroups.com
_நமஸ்காரம்! இன்று பங்குனி உத்திர நன்னாள். ஸ்ரீராமன் சீதா தேவி, ஆண்டாள் ரங்கமன்னார் போன்ற பல தெய்வத் திருமணங்கள் நடைபெற்றப் புனிதத் திருநாள். உடையவர் ஸ்ரீராமானுஜர் இந்த பங்குனி உத்திரச் சேர்த்தி நாளில்தான் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் என்ற மூன்று கத்யங்களை நம்பெருமாள் ரங்கநாச்சியார் முன் சமர்ப்பித்தார். இந்த உத்தமமான நாளை நினைத்தலே புண்ணியம். இந்நாளில் எம்பெருமானைச் சென்று சேவித்தல் இன்னும் விசேஷம். அனைவருக்கும் எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கவும், உலகத்தில் அமைதி நிலவவும், இன்பம் மேலிடவும் எம்பெருமானைப் பிரார்த்திப்போம்!_

பங்குனி உத்திர நன்னாளாம்
          பார்புகழ்ப் புண்ணியத் திருநாளாம்
மங்களம் பொங்கிடத் திருவுடனே
          மாலும் மணங்கொள் நன்னாளாம்
பங்கயத் தாளின் சேர்த்தியிலே
                பாங்கிடு கத்தியம் மூன்றையுமே
எங்குமே இன்பமே தங்கிடவே
        இறையின் அருளை இறைஞ்சுவமே!


_தாஸன் புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_


--
S. Parthasarathy
9980794542/9844124542

Reply all
Reply to author
Forward
0 new messages