மூலவிதை அவனே - மீ. விசுவநாதன்

2 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
May 13, 2026, 7:50:48 PM (2 days ago) May 13
to Santhavasantham, M. Viswanathan
"மூலவிதை அவனே"
(மீ. விசுவநாதன்)

நான் விதைக்க வில்லை
எந்தப் 
பறவையின் எச்சமோ
என் வீட்டுக் கொல்லையை
பூஞ்சோலை ஆக்கியிருக்கிறது
மழை, வெயிலுடன்
என்கையும் 
அதன் 
வேருக்கு அன்பு நீர்தருகிறது
அவ்வளவுதான்.

ஒருநாள் 
ஒரு குழந்தையை
யாரோ
என்வீட்டு ரேழிப் பாயில்
போட்டுப் போக
என்னைப் பார்த்த பிஞ்சு
சிரித்தது..அழுதது
மனம் விரிந்தது
அள்ளி எடுத்தேன்

இன்று
என்வீடே பூவும் காயும் பழமுமாய்
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"ராக
செழிப்பாகக்
கலகலவென இருக்கிறது.
          (14.04.2026 04.45 am)

Kaviyogi Vedham

unread,
May 13, 2026, 8:58:44 PM (2 days ago) May 13
to santhav...@googlegroups.com
abaram, vazga
yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-shECjGC4i9q_fhaan5UCJaPpG49T%3DW6mV1UeXoTDyKCQ%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
May 13, 2026, 11:33:35 PM (2 days ago) May 13
to Santhavasantham
அன்புக் கவியோகியாரின் கருத்துக்கும் ஆசிக்கும் மகிழ்ச்சி. நன்றி.

அன்பன்,
மீ.விசுவநாதன்
14.05.2026 09.03am

Reply all
Reply to author
Forward
0 new messages