முள்ளங்கி

10 views
Skip to first unread message

Siva Siva

unread,
Apr 7, 2026, 5:01:02 PM (4 days ago) Apr 7
to santhavasantham

Another vegetable veNbA!


16)

2026-04-06

முள்ளங்கி

----------------

(வெண்பா)


முள்ளங்கி ஆர்சாம்பார் மூக்கு மொழிந்தவுடன்

உள்ளங்கி ளர்ந்துநா ஊறியது - வெள்ளங்கி

மாற்றிவந்தால் மோர்க்குழம்பு வார்த்தாள் அடுக்ககத்தில்

வேற்றுமனைச் சாம்பார் விரை.


பதம் பிரித்து:

முள்ளங்கி ஆர் சாம்பார், மூக்கு மொழிந்தவுடன்

உள்ளம் கிளர்ந்து நா ஊறியது; - வெள்-அங்கி

மாற்றி வந்தால் மோர்க்குழம்பு வார்த்தாள்; அடுக்ககத்தில்

வேற்றுமனைச் சாம்பார் விரை!


அங்கி - சட்டை (shirt) என்ற பொருளில்;

அடுக்ககம் - அடுக்கு அகம் - multistory apartment;

விரை - வாசனை;


V. Subramanian

Subbaier Ramasami

unread,
Apr 7, 2026, 8:07:22 PM (4 days ago) Apr 7
to santhav...@googlegroups.com
முள்ளங்கி மேலொரு முள்ளங்கி இல்லையே
வெள்ளை சிவப்பென்று வெவ்வேறு- கொள்ளக்
கிடைக்கும்,சிறிதே கிளர்காரம் உண்டு
படைக்கலாம்  , சீவியும் பார்.   

இலந்தை



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPeJ_t8Yber%3DhQWj3pcjXBBzh%2B1MLyyfwSvVsqDZu3q-Q%40mail.gmail.com.

Siva Siva

unread,
Apr 8, 2026, 8:57:44 AM (3 days ago) Apr 8
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

Rajagopalan Soundararajan

unread,
Apr 8, 2026, 6:41:49 PM (3 days ago) Apr 8
to சந்தவசந்தம்
இந்த கிழங்கிற்கு முள்ளங்கி என்ற பெயர் வரக்காரணம் என்று யோசித்தேன். வேர்ப்பகுதியை (मूल) தனக்கு அங்கமாகக் (अङ्गिन्) கொண்டதால் மூல-அங்கி என்றாகி, மருவி முள்ளங்கி ஆகியிருக்குமோ?

Siva Siva

unread,
Apr 8, 2026, 6:53:50 PM (3 days ago) Apr 8
to santhav...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages