Re: [வல்லமை] Re: [MinTamil] அஷ்டசாசிரம் = எண்ணாயிரம் ~ காளமேகத்தின் ஊர்

86 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 16, 2016, 9:30:23 AM8/16/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham

*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேராகராதி விளக்கத்தை மொழியியல் பேராசிரியர் Th. பர்ரோ போன்றோரும் எழுதியுள்ளனர். 
நான் கொடுத்திருப்பது சாயிரம் என்ற சொல் கன்னடத்தில் இருப்பது என்பதற்கான இலக்கிய, நிகண்டு ஆதாரம்.

பழைய தமிழ்ப் பேராசிரியர்கள் பலரும்  ஆராய்ந்து எழுதியிருப்பது ஸஹஸ்ரம் என்பது தமிழில் ஆயிரம் ஆயிற்று என. 
ஒப்பீடு: ஸமணர்  அமணர் என்று தமிழில் ஆவது போல. நான் பார்த்தவரை கடல் போன்றவற்றின் மணலுக்கும் ஸஹஸ்ரம் ஆயிரம் ஆவதற்கும் தொடர்பு ஒன்றுங் காணோம்.
தமிழின் மூத்த பேராசிரியர்கள் ஆயிரம் என்ற சொற்பிறப்பை எழுதியிருப்பது சரிதான் என்பது என் துணிபு. அவர்கள் கன்னடத்தில் சாயிரம் என ஆயிரம் வழங்குதலைக் கொடுக்கவில்லை.
அதையும் சேர்த்தால் மேலும் உறுதிப்படுகிறது: எனவே தான் கிட்டலின் கன்னட இலக்கியச் சான்று அளித்துள்ளேன்.

ஸஹஸ்ர- : பாரசீக மொழி, ஸம்ஸ்கிருதம் என மிகப் பரந்த நிலங்களில் வழங்கும் இந்தோ-ஈரானியச் சொல். தமிழில் ஆயிரம் என மருவி வழங்குகிறது
என்பது தமிழின் பழம்பேராசிரியர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர். 
ஆச்சார்ய- என்னும் சம்ஸ்கிருதச் சொல், ஜைநர்கள் சொல்லும் வணக்கத்திலே ஆயிரிய- என வழங்குகிறது.
ஆச்ரிதம் என்னும் சொல் ஆய்தம்/ஆயிதம் என்று ஃ எழுத்துக்குப் பெயராக தொல்காப்பியத்தில் வழங்குவது அறிவோம். ஆச்ரிதம் = விசருக்கம்.

சென்னைப் பல்கலை அகராதியில், கன்னடத்தின் சாவிரத்துடன், சாயிரம் என்ற ஸஹஸ்ரம் பற்றியும் குறிப்பிடல் சிறப்பு. சொற்பிறப்பு சட்டென மாணவர்க்குப் புரியும்.
*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, sāyira M. āyiram.] The number 1,000; 

On Tuesday, August 2, 2016 at 5:51:08 PM UTC-7, N. Ganesan wrote:

தமிழின் எண்ணுப்பெயர் 1000: ஆயிரம் < சாயிரம் < சாசிரம் (ஸஹஸ்ரம்)

 

கல்நாடு என நிலவியலமைப்பால் அழைக்கப்பட்ட கர்நாடகத்திற்கும், இன்றைய தமிழ்நாட்டுக்கும் உள்ள 2500 ஆண்டுத் தொடர்புகள் இன்னும் முறையாக ஆராயப்படவில்லை. முக்கியமான சான்று, வடக்கே உருப்பெற்ற ப்ராமி கர்நாடகம் வழியாக,  கொங்குநாட்டு கொடுமணம், பொருந்தல் போன்ற ஊர்களில் விரிவாவதும், அதன் பின்னர் மதுரை சென்று சேர்வதும், தொல்லியலால் நிரூபணம் ஆகிவருகிறது. உ-ம்: பேரா. கா. ராஜன், பாண்டிச்சேரிப் பல்கலை, கொங்குநாட்டு முதல்  பானையோடுகளில் ப்ராமி - BTW, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்களில் இதுதான் தொன்மையானது.

 

இலக்கியம் என்று பார்த்தால், தமிழின் முதல் நாவல் என வஞ்சி ஊரின் சேரமன்னர் இளங்கோ அடிகள் செய்த சிலப்பதிகாரம். இதில் புகார்க்காண்டத்தின் இறுதியில் கோவலன் கொலையுறுகிறான் எனக் காட்ட, அப்பிரதக்சிணமாக (anti-clockwise) தெய்வக்காவிரி நாட்டை - சோழர் ஆட்சியில் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார் - நாடுகாண் காதையில் காட்டிவிட்டு, பிறகு மதுரைக்காண்டம் தொடங்குகிறார்.

 

கன்னட நாட்டில், இளங்கோ தலைநகர் ஆகிய வஞ்சிக்கு அருகே சமணம் பயின்ற அடிகள், அம் மதத்தை விளக்குமுகத்தான்  கௌந்தி அடிகள் என்னும் கதாபாத்திரத்தைப் படைத்து நாடுகாண் காதையில் http://tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=12 காவிரிநாட்டையே காட்டி, அந்நதியால்  உண்டாகும் வேளாண்மை வளத்தைப் பாடுகிறார். அவரே காவிரி பாயும் நாடு முழுதும் பாடுகிறேன் என்று குறித்துள்ளார். நாடு காண் காதையில் இளங்கோ அடிகள் பாடுவது வெறும் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் மட்டுமல்ல என்பது தெளிவு. இதனைப் புரிந்துகொள்ள சுதனன் என்னும் செட்டி கலியாணமித்திரர்களை சந்திக்கச் செல்லும் கண்டவியூக சூத்திரம் பார்த்தால் அறிந்துகொள்ளலாம். கோவலன், கண்ணகி செட்டியார் ஜாதி எனப் பாடியது கண்டவியூகத்தில் சுதனன் என்னும்  வணிக  இளைஞன் வகுப்பால் ஏற்பட்ட தாக்கம். கண்டவியூகம் முழுதும் பார்க்க போரோபுதூர் (இந்தோனேசியா) இருக்கிறது.

 

பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,

விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,

ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்

குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம்

தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும்,

பொய்யா வானம் புதுப் புனல் பொழிதலும்;  (நாடுகாண் காதை - கட்டுரை)

 

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் புதுப்புனல் பொழிதலால் தெய்வக் காவிரி நாடு வளம்பெறுதல் முழுதும் வர்ணிக்க ஒருவழியாக கவுந்தி அடிகள் தவப்பள்ளியை மதுரைக்கு வடக்கே ~360 மைல் (= 30 காவதம்) என்கிறார். காவதம்/காதம் என்னும் கர்நாடகத்தில் வழங்கும் நீட்டலளவையைத் தமிழில் அறிமுகம் செய்பவர் இளங்கோ அடிகள் தாம். காவதம்/காதம் என்ற சொல் கன்னடம் பேசும் கன்னாட்டில்  12 முதல் 14 மைல்கள் எனப் பல அறிஞர்கள் காட்டியுள்ளனர். காவதம்/காதம் என்னும் வார்த்தை எருதுகளைப் பூட்டி ஒருநாள் ஓட்டும் தொலைவு என்னும் பொருள் அமைந்த வடமொழிச் சொல் ஆகும். எனவே, 30 காதம் = ~ 360 மைல் எனச் சிலம்பு குறிப்பிடுகிறது.

https://groups.google.com/forum/#!msg/mintamil/k2vENrVBilc/vQkiC6BABwAJ


இன்னொரு முக்கியமான கர்நாடக-தமிழகத் தொடர்பு:

ஆயிரம் < சாயிரம் < சாசிரம் (ஸஹஸ்ரம்)

 

ஸஹஸ்ர- என்னும் சம்ஸ்கிருதச் சொல் ஹசார் என்று பெர்சியா/உர்து போன்ற மொழிகளில் வழங்கும் இந்தோ-இரானிய மொழியின் சொல். ஸஹஸ்ர > சாசிரம்/சாவிரம் > ஆயிரம். பார்க்க: Thomas Burrow, pg. 151, Collected Papers on Dravidian Linguistics, Annamalai University, 1968. ஆனால், பேரா. பர்ரோ அவர்கள் சாயிரம் என்ற சொல்லும் கன்னடத்தில் இருப்பதனை மேற்கோள் காட்டவில்லை. இந்தக் கன்னடச் சொல்லே, சாயிரம் > ஆயிரம் எனத் தமிழில் ஆகியுள்ளது. கன்னடத்தில், சமணர் > அமணர் (தமிழில்) வழங்குவது போல.

http://srilalitambikaiparnasalai.blogspot.com/2012/05/blog-post.html

“ஸம்ஸ்கிருதத்துக்கே உரிய சகார, ரகாரக் கூட்டெழுத்து drop ஆகி, ஆவணியாகிறது.  இப்படி ஏகப்பட்ட எழுத்துக்கள் தமிழில் உதிர்வதற்கு 'ஸிம்ஹளம்'என்பது 'ஈழம்'என்றானது ஒரு திருஷ்டாந்தம். ஸ வரிசையம் ச வரிசையும் தமிழில் அ வரிசையாய் விடும்.  'ஸீஸம்' என்பதுதான் 'ஈயம்'என்றாயிருக்கிறது. 'ஸஹஸ்ரம்'என்பது கன்னடத்தில் 'ஸாஸிரம்' என்றாயிருக்கிறதென்றால், அந்த 'ஸாஸிரம்' தமிழில் 'ஆயிரம்'என்று ஸகாரங்களை உதிர்த்துவிட்டு உருவாயிருக்கிறது.” (பர்ரோவை தமிழில் சொல்கிறார் காஞ்சி முனிவர்.)

 

Kittel's Kananda dictionary:

ಸಾಸಿರ sāsira.

Tbh. of ಸಹಸರ. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. ಆಯಿರ). [ತಮಬತತಾರು ಸಾಸಿರ ಗೋಪಕುಮಾರರಡನ ಕೂಡಿ ಕಳಿಪಿ Pb. 9, 12 va.]. ದೇವರಕಲ ಸಾವಿರ ಯುಗಂಗಳು ಬರಹಮನ ದಿವಸ (Hlā. I, 115). ಸುರರ ರಡು ಸಾಸಿರ ಯುಗಂ ಬರಹಮಂಗ ದಿನಮ ನಿಕಕುಂ (Mr. 71). - ಸಾಸಿರಗಯಯ. -ಕಯಯ. the sun (ಬಿಸಿಗದಿರ, etc., ಸಪತಾಶವ Kk.).

 

sāsira sāsira.

Tbh. of sahasara. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. āyira). [tamabatatāru sāsira gōpakumāraraḍana kūḍi kaḷipi Pb. 9, 12 va.]. dēvarakala sāvira yugaṁgaḷu barahamana divasa (Hlā. I, 115). surara raḍu sāsira yugaṁ barahamaṁga dinama nikakuṁ (Mr. 71). - sāsiragayaya. -kayaya. the sun (bisigadira, etc., sapatāśava Kk.).

 

------------------

 

ಸಾಯಿರ sāyira.

Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71 va.]. ಸಾಯಿರ ಮನಗಳ (Śmd. 111).

 

sāyira sāyira.

Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).

 

ஸஹஸ்ரம் என்னும் இந்தோ-ஈரானியச் சொல் கன்னட நாட்டிலும், அதன்பின்னர் தமிழ்நாட்டிலும் சாயிரம் > ஆயிரம் என அடையும் மாற்றம் இது.

 

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Aug 16, 2016, 10:19:43 AM8/16/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, Santhavasantham

2016-08-16 19:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேராகராதி விளக்கத்தை மொழியியல் பேராசிரியர் Th. பர்ரோ போன்றோரும் எழுதியுள்ளனர். 
நான் கொடுத்திருப்பது சாயிரம் என்ற சொல் கன்னடத்தில் இருப்பது என்பதற்கான இலக்கிய, நிகண்டு ஆதாரம்.

கன்னடத்தில் 'ஸாவிரா' என்றால் ஆயிரம்.  கன்னடத்துச் சொற்கள் -ன், ர், ம் போன்ற மெய்யெழுத்துகளோடு முடிவதில்லை.  அது 'ஸாயிரா' கூட இல்லை; ஸாவிரா.  ஸாவிரா=ஆயிரம்; ஸாவிரத=ஆயிரத்து.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Aug 16, 2016, 10:38:17 AM8/16/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Santhavasantham
2016-08-16 7:19 GMT-07:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2016-08-16 19:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேராகராதி விளக்கத்தை மொழியியல் பேராசிரியர் Th. பர்ரோ போன்றோரும் எழுதியுள்ளனர். 
நான் கொடுத்திருப்பது சாயிரம் என்ற சொல் கன்னடத்தில் இருப்பது என்பதற்கான இலக்கிய, நிகண்டு ஆதாரம்.

கன்னடத்தில் 'ஸாவிரா' என்றால் ஆயிரம்.  கன்னடத்துச் சொற்கள் -ன், ர், ம் போன்ற மெய்யெழுத்துகளோடு முடிவதில்லை.  அது 'ஸாயிரா' கூட இல்லை; ஸாவிரா.  ஸாவிரா=ஆயிரம்; ஸாவிரத=ஆயிரத்து.

ஸாயிர, ஸாவிர : கிட்டல் அகராதி, இலக்கிய மேற்கோள் முழுதும் கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்
 



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Aug 16, 2016, 10:44:56 AM8/16/16
to santhavasantham, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

2016-08-16 20:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஸாயிர, ஸாவிர : கிட்டல் அகராதி, இலக்கிய மேற்கோள் முழுதும் கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்

கர்நாடகாவில் பதினோறு ஆண்டுகளாக இருக்கிறேன்.  ஒந்து ஸாவிரா, எரடு ஸாவிரா என்று உச்சரிக்கிறார்களே தவிர, ஸாயிர, ஸாயிரம் என்று யாரும் உச்சரித்துக் கேட்டதில்லை.  கன்னடக்காரர்களுடைய உச்சரிப்பு தவறானதென்று ஏதேனும் மேற்கோள் இருக்கலாம்.

Ramamoorthy Ramachandran

unread,
Aug 16, 2016, 11:38:26 AM8/16/16
to santhav...@googlegroups.com

காளமேகத்தின் ஊர். ஏண்ணாயிரம் பிம்மதேசம். என்று பிற்காலச் சோழர்களால் அந்தணர்களுக்கு பிரம்மதேயமாய் அளிக்கப்பெற்றது. இப்போது அஷ்டசகஸ்ரம் (அஷ்டசாஸ்திரம்)என்ற அந்தணர் பிரிவு உள்ளது. அப்பிரிவைச் சேர்ந்தோரே. டாக்டர் உ.வே.சா. கி. வா.ஜ. ஆகியோர்.- புலவர் இராமமூர்த்தி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Swaminathan Sankaran

unread,
Aug 16, 2016, 6:47:39 PM8/16/16
to santhav...@googlegroups.com
ஆம். இந்த எண்ணாயிரம்-பிரம்மதேசம் திண்டிவனத்திலிருந்து செஞ்சிக்குப் போகும் வழியில் இருக்கிறது. (இதற்கு எதிர் திசையில் வேறொரு எண்ணாயிரம் இருக்கிறது. 'அது வேறு, இது வேறு.' இரண்டிற்கும் வித்தியாசம் காட்டுவதற்கு இதை எண்ணாயிரம்-பிரம்மதேசம் என்ற கூட்டுப் பெயரால் அழைக்கிறார்கள்.) சங்கராபரணம் ஆற்றைக் கடந்து எசாலம் என்ற கிராமத்தைத் தண்டிப் போக வேண்டும். ஊருக்கு அருகில் ஒரு குன்றின் மேல் சமணர் காலத்துக் குகை, இடிபாடுகள் இன்றும் உள்ளன. அஷ்ட ஸஹஸ்ரம் என்ற உட்பிரிவினர் சைவர்கள் (அய்யர்), வைணவர்கள் (அய்யங்கார்) இரு பிரிவினரிலும் உண்டு. எண்ணாயிரம் கிராமத்தில் ஒரு இருளடைந்த நிலத்திற்கு கீழே சிவலிங்கத்துடன் ஒரு சைவக் கோவிலும், அதை ஒட்டியிருக்கும் பிரம்மதேசம் கிராமத்தில் ஒரு வைணவக்கோவிலும் இன்றும் இருக்கின்றன. சமணர்களாக இருந்தவர்களுக்கு மஹேந்திர பல்லவன் மதம் மாறிய பிறகு இரு மாற்று வழிகள் கொடுக்கப் பட்டன: (1) இந்துக்களாக மாறுவது; (2) கழுவேற்றப்படுவது. பெரும்பாலானோர் (எண்ணாயிரம் நபர்கள்?), தாங்களந்தணர்களாக ஏற்றுக் கொள்ளப்  படவேண்டுமென்று வெற்றிகரமாகப் பேரம் பேசி மதம் மாறினார்கள். அவர்களை முன்மாதிரியாக வைத்து புதுக்கோட்டை, குடுமியாமலை பகுதியிலும், தென்பாண்டி நாட்டில் மதுரை, மதுரை சார்ந்த பகுதிகளிலும் (கூன் பாண்டியன் சம்பந்தரால் மதம் மாற்றப் பட்ட பிறகு) இருந்த சமணர்களும் அவ்வாறே அஷ்ட ஸஹஸ்ரம் ஆகி விட்டார்கள். சோழர்களால் பல்லவர்கள் பின் தள்ளப் பட்ட பிறகு வட ஆற்காடுப் பகுதியில் இருந்தவர்கள் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிப் பகுதிகளில் குடியேறினார்கள். இதைப் பற்றி தொ, மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களும் அவருடைய 'வேங்கடம் முதல் குமாரி வரை' புத்தகம் ஒன்றில் சுருக்கமாக எழுதியிருக்கிறார். இப்படி மாறியவர்கள் சமண சாத்திர அறிஞர்களாகவும், கல்வி, அருங்கலை  விற்பன்னர்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம். சரிததிரச் சான்றுகள் ஒன்றும் என்னிடம் கிடையாது.

உ.வே.சா. தவிர, கணம் கிருஷ்ணையர், மதுரை புஷ்பவனம், மதுரை மணி, டி.வி. சங்கரநாராயணன், டி.எல். வெங்கடராம ஐயர், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கவி குஞ்சர பாரதி, கோடீஸ்வர அய்யர், நாடக, திரைப்பட இயக்குனர் பாலச்சந்தர், வீணை எஸ். பாலச்சந்தர், அவர் தமையன் ஓவியர்/ இசைக் கலைஞர் எஸ். ராஜம், எழுத்தாளர் சிவசங்கரி, விஞ்ஞானி எம். எஸ். ஸ்வாமிநாதன், எழுத்தாளர் 'கிருத்திகா,' தியாகி சுப்பிரமணிய சிவா, தேசபக்தர்-மருத்துவர் திருச்சி சுவாமிநாத சாஸ்திரி, பேராசிரியர் கே. ஸ்வாமிநாதன், அவருடைய தம்பி மருத்துவர் சஞ்சீவி, தென்னிந்தியக் கோயில் கட்டிடக்கலை ஆய்வாளர் கே. ஆர். ஸ்ரீனிவாசன் ஆகியோரும் இப்பிரிவைச் சேர்ந்தவர்களே. ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கூட இருக்கலாம். இதனால் தான் முந்தைய பத்தியில் நான் கூறிய என்னுடைய அனுமானம்.

சங்கரன் 

N. Ganesan

unread,
Aug 16, 2016, 8:04:52 PM8/16/16
to சந்தவசந்தம், mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 7:44:56 AM UTC-7, Hari Krishnan wrote:

2016-08-16 20:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஸாயிர, ஸாவிர : கிட்டல் அகராதி, இலக்கிய மேற்கோள் முழுதும் கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்

கர்நாடகாவில் பதினோறு ஆண்டுகளாக இருக்கிறேன்.  ஒந்து ஸாவிரா, எரடு ஸாவிரா என்று உச்சரிக்கிறார்களே தவிர, ஸாயிர, ஸாயிரம் என்று யாரும் உச்சரித்துக் கேட்டதில்லை.  கன்னடக்காரர்களுடைய உச்சரிப்பு தவறானதென்று ஏதேனும் மேற்கோள் இருக்கலாம்.


பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.
*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:

sāyira sāyira.

Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).

 

sāsira sāsira.

Tbh. of sahasara. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. āyira). [tamabatatāru sāsira gōpakumāraraḍana kūḍi kaḷipi Pb. 9, 12 va.]. dēvarakala sāvira yugaṁgaḷu barahamana divasa (Hlā. I, 115). surara raḍu sāsira yugaṁ barahamaṁga dinama nikakuṁ (Mr. 71). - sāsiragayaya. -kayaya. the sun (bisigadira, etc., sapatāśava Kk.).

NG 


N. Ganesan

unread,
Aug 16, 2016, 8:38:14 PM8/16/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tuesday, August 16, 2016 at 8:38:26 AM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:

காளமேகத்தின் ஊர். ஏண்ணாயிரம் பிம்மதேசம். என்று பிற்காலச் சோழர்களால் அந்தணர்களுக்கு பிரம்மதேயமாய் அளிக்கப்பெற்றது. இப்போது அஷ்டசகஸ்ரம் (அஷ்டசாஸ்திரம்)என்ற அந்தணர் பிரிவு உள்ளது. அப்பிரிவைச் சேர்ந்தோரே. டாக்டர் உ.வே.சா. கி. வா.ஜ. ஆகியோர்.- புலவர் இராமமூர்த்தி.



அஷ்டசாசிரம் என்பதில் ஸாஸிரம் (=1000) என்றால் என்ன ஸ்ரீமான் பொதுஜனத்திற்கு விளங்காததால் அஷ்டசாஸ்திரம் ஆகிவிட்டது :) 

எண்ணாயிரம் சிவன் கோயில் - கீலமடைந்த நிலையில்,

எல்லோரும் சேர்ந்தால் கட்டிவிடலாம்.

----------

நன்றி, புலவர் ஐயா. என் சரித்திரத்தில் தன் குலத்தைப் பற்றி தமாஷாக உவேசா அவர்களே சொல்லியிருக்கிறார்.
காளமேகம் எங்கே சித்திரமடல் பாடினார் என திருச்செங்கோடு அஷ்டாவதானம் முத்துசாமிக் கவிராயர்
ஒரு நூற்றாண்டு முன்னர் எழுதிய வரலாற்றைக் குறிப்பிட்ட மடலில் என் சரித்தரம்” உவேசா எழுதினதும் தந்தேன்.
கடிச்சம்பாடியார் தந்த பட்டியலுடன் பட்டணம் சுப்பிரமணிய ஐயரும் சேர்த்தலாம். மண்கொம்பு (MSS) - பட்டர்கள்,
எம். எஸ். சுவாமிநாதன் சி.எஸ். அமைச்சராக இருந்த காலத்தில் எங்கள் இல்லம் வந்திருக்கிறார்.
அவர்கள் குலதெய்வம்: மண்கொம்பிலம்மா http://orkut.google.com/c33756112-t12c9fd73249108eb.html

அவனுக்கு ஊர் அரங்கம் ஒண்ணே ஒண்ணுதான், எனக்கூர் 8000 என்று நகைச்சுவையாகச் சொல்லிய வெண்பா
காஞ்சிபுரம் கோவில் ராஜகோபுரக் கல்வெட்டு. இரா. நாகசாமி தலைமையில் இயங்கிய குழு கண்டுபிடிப்பு.
அவர் எனக்குத் தந்த கல்வெட்டு வெண்பா இது,

         மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்த 
         கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன் 
         அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே; 
         இவனுக்கூர் எண்ணா யிரம்! 

இந்த வெண்பா அறியப்படாதிருந்த காலத்திலேயே, உவேசா இதுபோல் நகைத்துணுக்கு சொல்லியுள்ளார்கள்.
அவர் குலம் அஷ்டசஹஸ்ரம் தான்.
“அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம். இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்த துண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத்
தோன்றியபடி அர்த்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள். அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்டஸகஸ்ரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. ஸ்மார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.” (உவேசா, என் சரித்திரம்).

[...]

அஷ்டசகசிரம் - அஷ்டசாசிரம் என்று பேச்சுவழக்கில் ஆகும். கன்னடத்தில்
சாசிரம் என்றால் தான் ஆயிரம். தமிழிலும் சஹஸ்ரம் > சாசிரம் > ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்.
கன்னடத்திலே கூட, சாயிரம் என்று சாசிரத்தை (1000) சொல்கின்றனர்.
இது, ஆசிருதம் என்னும் வடசொல் ஆசிதம் என்றாகி ஆயிதம்/ஆய்தம் என ஆய்த எழுத்துக்கு ஆவதுபோல.
அஷ்டசாசிர பிராமணர்களின் குலதெய்வ ஊர் எண்ணாயிரம் தான்.

காளமேகத்தின் முன்னோர்கள் இந்த எண்ணாயிரம் பெருமாள் கோயிலில் வழிபட்டிருப்பர்:

எண்ணாயிரம் என்ற ஊரில் ஸ்ரீவைஷ்ணவ பிராமண குலத்தில் பிறந்து,
சீரங்கத்தில் மடைப்பள்ளியில் பரிசாரகராய் பணிபுரிந்து, ஆனைக்கா தாசியிடம் உறவாடி, 
பின்னர் கொங்குநாடு போந்து, பாசூர் மட தீக்ஷிதர்கள் பரிந்துரையின் பேரில் நிலக்கொடை பெற்று
வாழ்ந்தவர் காளமேகம். இன்றும் அவர் வாழ்ந்த ஊர் காளமங்கலம்
என விளங்குகிறது. காளமேகமங்கலம் சுருங்கிக் காளமங்கலம் ஆகிவிட்டது.
கற்றான்காணியாக அளித்த நிவந்தம். மங்கலம் என்பது பிராமணர்களுக்கு
அளித்த நிலக்கொடை: சதுர்வேதிமங்கலம், .... போன்றன. காளமேகம்,
பாசூர் மடம் தொடர்புகளை திருச்செங்கோடு அஷ்டாவதானி முத்துசாமிக்
கோனாரவர்கள் “கொங்குநாடு” என்னும் நூலில் ஒரு நூற்றாண்டுமுன்னர்க்
குறிப்பிட்டுள்ளார்கள். தமிழின் மிகப் பெரிய satirist பாசூர் வந்தவரலாறு.
அங்கே அவர் எழுதிய சித்திரமடல் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்
கவுண்டர் சுவடி, ம. பெ. தூரன் அவர்கள் வழியாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம் அச்சிட்டது. யாராவது அதனை பிடிஎப் ஆக்கி அளிக்கலாம்.

நா. கணேசன்
பாசூர் மடத்து ஆதரவில் கவி காளமேகம்: திருச்செங்கோடு அ. முத்துசாமிக்கோனார், 


N. Ganesan

unread,
Aug 16, 2016, 9:17:52 PM8/16/16
to சந்தவசந்தம், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
கல்கி கலைமகளில் எழுதிய சிறுகதை. ஆண்டு தெரியவில்லை.

அஷ்டசஹஸ்ரம் - சொல் வருகிறது.

ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம், கல்கி,

நா. கணேசன்

உவேசா  நகைத்துணுக்கு சொல்லியுள்ளார்கள். அவர் குலம் அஷ்டசஹஸ்ரம் தான்.

N. Ganesan

unread,
Aug 16, 2016, 9:48:15 PM8/16/16
to சந்தவசந்தம், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
மேலும், இரு அஷ்டசகசிரவரைப் பற்றி அறிவோம்.

கம்பராமாயண அறிஞர் V. வசிஷ்டபாரதி (1872 - 1945).
கம்பன் எண்ணாயிரர் (அஷ்டசாசிரம்) பற்றிய பாடலைத் தந்துள்ளார்:

இருபிறப்பாளர் எண்ணா
   யிரர்.
மணிக் கலசம் ஏந்தி.
அரு மறை வருக்கம் ஓதி.
   அறுகு நீர் தெளித்து வாழ்த்தி.
வரன்முறை வந்தார். கோடி
   மங்கல மழலைச் செவ் வாய்ப்
பரு மணிக் கலாபத்தார். பல்
   லாண்டு இசை பரவப் போனான். - கம்பர்


கனம் கிருஷ்ணையர்: உவேசாவின் உறவினர்,
மும்மணிகளில் முதலானவர் புகழ் பெற்ற இசைப் புலவர் கிருஷ்ணையர். இசைத் துறையில் மிகக் கடினமான கன மார்க்கத்தில் சிறந்து விளங்கியதால், ‘கனம் கிருஷ்ணையர்’என்றழைக்கப்பட்டவர்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 16, 2016, 9:54:28 PM8/16/16
to சந்தவசந்தம், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
அஷ்டசகஸ்ரப் பாட்டி ஒருவர் உவேசாவுக்கு சோற்றுத்துறை என்னும் ஊரைப் பற்றிச் சொல்லிய புராணம்.

அன்னம் படைத்த வயல் *


* கலைமகள்

கும்பகோணத்தில் நான் இருந்த காலத்தில் ஒருமுறை திருவையாற்றில் நடைபெறும் ஸப்த ஸ்தானஉத்ஸவத்திற்குப் போகவேண்டு மென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. இற்றைக்குச் சற்றேறக் குறைய 45 வருஷங்களுக்குமுன் நிகழ்ந்த செய்தி இது. ஸப்தஸ்தானம் சித்திரை மாதத்துப் பௌர்ணிமையில் நடைபெறும்.

ஸப்தஸ்தானத்திற்கு முதல்நாள் நான் புறப்பட்டேன். ஐயம்பேட்டை என்னும் ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கிக் காவிரிக்கரை மார்க்கமாகச் சென்றேன். இடையிலேயுள்ள ஸ்தலங்களில் சில நேரம் தங்கி அந்த அந்த ஸ்தல சம்பந்தமான விஷயங்களை விசாரித்து நன்கு தெரிந்து கொண்டேன். எந்த ஊருக்குப் போனாலும் அவ்வூரில் இருந்த புலவர்கள் பிரபுக்கள் முதலியவர்கள் வரலாறுகளையும், சரித்திரம் புராணம் என்பவற்றையும், கர்ண பரம்பரைச் செய்திகளையும் விசாரித்துத் தொகுப்பது எனது வழக்கம். இதனால் பலநாளாகத் தெரியாமலிருந்த பல அரிய விஷயங்கள் மிக எளிதில் விளங்கியதுண்டு.

போகும் வழியில் திருச்சோற்றுத்துறை யென்பதொரு சிவஸ்தலம் உண்டு. திருச்சத்துறையென்று இப்பொழுது அது வழங்குகிறது. அது தேவாரப் பாடல் பெற்றது. * ஓதனவனமென வடமொழியிற் கூறப்படும். அங்கே எழுந்தருளியுள்ள ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீஓதனவனேசுவர ரென்பது; அம்பிகையின் திருநாமம் அன்னபூர்ணி யென்பது. திருவையாற்றோடு சம்பந்தப்பட்ட ஸப்தஸ்தான க்ஷேத்திரங்களுள் அதுவும் ஒன்று. அத்தலத்தைப் பற்றிய சில வரலாறுகளை நான் முன்பே அறிந்திருந்தேன். கௌதம மகரிஷி அங்கே இருந்து தவம் புரிந்ததாக ஓர் ஐதிஹ்யம் உண்டு. அதனால் அத்தலம் கௌதமா சிரமமென்றும் வழங்கப்படும்.
------
* ஓதனம் - அன்னம்.

பஞ்சகாலம் ஒன்றில் அம்பிகை அங்கே பல ஏழைகளுக்கு அன்னம் படைத்ததாகச் சொல்வார்கள். சில வயல்களில் அன்னமே விளைந்ததாம். இது பழைய வரலாறு. இவ்வரலாற்றுக்குரிய அடையாளங்களாகச் சில இடங்கள் அத்தலத்தில் உள்ளன. எல்லாவற்றையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பது என்னுடைய அவா.

வழியிலே சந்தித்த சில பேரை " ஸ்தல சம்பந்தமாக ஏதாவது தெரியுமா?" என்று கேட்டேன். அவர்களிற் சிலர் என் கேள்விகளுக்கு விடையே சொல்ல வில்லை. சிலர், " குருக்களையாவைக் கேளுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள். கோவிலைப்பற்றித் தெரிந்தவர் குருக்களை யன்றி வேறில்லை யென்பது அவர்கள் எண்ணம் போலும்!

நான் அவ்வூர் அக்கிரகாரத்திற்குச் சென்றேன். அங்கே ஓர் ஓட்டுவில்லை வீடு இருந்தது. அவ்விடம் சென்று வெளியில் நின்றபடியே உள்ளே இருப்பவர்களைப் பார்த்தேன். ஸப்த ஸதான உத்ஸவத்தின் பொருட்டு வருவோர் போவோர்களுக்கு உபசாரம் செய்து உணவளிக்கும் காரியத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

"யார் ஐயா உள்ளே? " என்று நான் கூப்பிட்டேன். யாரோ ஒருவர் வந்தார். வரும்போதே, "தீர்த்தம் வேணுமா?" என்று கேட்டுக்கொண்டு வந்தார். அதைத்தான் நான் கேட்பேனென்று அவர் நினைவு. நான், "அதுவுந்தான் வேணும்" என்றேன்.

அவர் தீர்த்தம் கொணர்ந்து கொடுத்துவிட்டு, "வேறு என்ன வேணும்?" என்று கேட்டார்.

" ஒன்றும் இல்லை. இந்த ஸதலத்தைப் பற்றிச் சில சமாசாரங்கள் தெரியவேண்டும். இங்கே அம்பிகை ஒரு சமயம் எல்லோருக்கும் அன்னம் அளித்துண்டாம். அதைப்பற்றி ஏதாவது தெரிந்தால் சொல்ல வேண்டும்" என்றேன்.

" அதுதான், நீங்களே சொல்லுகிறீர்களே; நான் வேறு என்ன சொல்லவேண்டும்?"

"அது சம்பந்தமான அடையாளம் ஏதாவது இந்த ஊரில் இருக்கிறதா? தெரிந்தால் அநுகூலமாக இருக்கும்"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டு அவர் தம்முடைய வேலையைக் கவனிக்க உள்ளே சென்றார்.

அப்பொழுது, "யாரையா அது?" என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. வெயிலிலே வந்த களைப்பினால் என் கண்கள் சரியானபடி பார்க்கும் சக்தியை இழந்திருந்தன. சற்று நிதானித்தேன்.

"என்ன ஐயா தெரிந்துகொள்ளவேணும்?" என்று மறுபடியும் ஒரு கேள்வி வந்தது. திரும்பிப் பார்த்தேன். எனக்கு அருகில் இருந்த நீளமான திண்ணையின் ஒரு கோடியில் ஒரு கிழவி காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அந்தக் கிழவிதான் என்னைக் கேட்டாளென்பதை உணர்ந்தேன்.

"என்னைத்தான் கேட்கிறீர்களா?" என்று சொல்லிக்கொண்டே அந்தத் திண்ணையின் கோடிக்குச் சென்றேன்.

"ஆமாம்" என்றாள் கிழவி.

அவளுடைய பிராயம் எண்பதுக்குமேல் இருக்கும். கண் ஒளி இல்லை; ஒரு தடிக்கம்பை அருகிலே வைத்துக் கொண்டு சில கந்தைத் துணிகள், ஒரு கொட்டாங்கச்சியில் ஜபம் செய்வதற்கான கூழாங் கற்கள், ஓர் அழுக்கடைந்த செம்பு, ஏதோ தின்பண்டத்தை மூடிவைத்திருந்த சிறிய தகரப் பாத்திரம் ஒன்று ஆகிய இவற்றோடு அக்கிழவி அங்கே வீற்றிருந்தாள். அவளுக்குத் திரையிட்டது போல ஒரு நிரைச்சல் இருந்தது. அதன்மேல் வெள்ளை அழுக்குப் புடைவை யொன்று காய்வதற்காகக் கட்டப்பட்டிருந்தது. கிழவி எதையோ மென்றுகொண்டே கூழாங்கற்களை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணி ஜபம் செய்து கொண்டிருந்தாள்.

நான் அருகில் நின்றேன்.

"என்னவோ உள்ளே கேட்டீரே; என்ன கேட்டீர்?" என்று என் காலடி யோசையை அறிந்து கிழவி வினவினாள்.

"இந்த ஊரைப்பற்றித்தான் கேட்டேன். கோவிலைப்பற்றி விசாரித்தேன்" என்றேன்.

"இப்படி உட்காரும். அதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது; அவர்களுக்குத் தலை பின்னிக் கொள்ளத் தெரியும்; பூ வைத்துக் கொள்ளத் தெரியும். கோவிலாவது! குளமாவது! அதெல்லாம் எனக்குத் தான் தெரியும். உங்களுக்கு அவர்கள் பதில் சொன்னார்களா?"

"தெரியாதென்று சொல்லிவிட்டார்கள்."

"அவர்களுக்குத்தான் தெரியாதென்று சொல்கிறேனே. நீர் அவர்களைப் போய்க் கேட்கப்போனீரே! என்னை யார் லக்ஷியம் பண்ணுகிறார்கள்? ஏதோ பசித்த வேளைக்குச் சோறு போடுவதோடு சரி. என்னைக் கேட்டு என்ன காரியம் நடக்கிறது? பழைய காலமா?"

பாட்டி சிறிது நேரம் பேசவில்லை. அவளுடைய மனோரதம் பழைய காலத்தில் சஞ்சாரம் செய்வதாகத் தெரிந்தது. மறுபடியும் பாட்டி நிகழ்காலத்துக்கு வந்தாள்.

"குழந்தைக்கு ஜ்வரம் வரட்டும்; அப்பொழுது பாட்டி வேணும்; மருந்து, மாத்திரை, பச்சிலை சொல்ல வேணும். சரி, அது கிடக்கட்டும். உமக்கு எந்த ஊர்?"

"நான் உத்தமதானபுரம்."

"உத்தமதானபுரமா? அங்கே எங்களுக்குக்கூடச் சொந்தக்காரர்கள் இருக்கிறார்களே. நீர் என்ன ?"

"நான் அஷ்டஸஹஸ்ரம்."

"அடே! எங்கள் ஜாதிதான். நீர் யார் பிள்ளை?"

நான் சொன்னேன். விரைவிலே ஸ்தல வரலாறுகளைக் கேட்டுக்கொண்டு திருவையாறு போகலாமென்றெண்ணிய நான் அந்தக் கிழவியின் பேச்சுக்கும்
கேள்விகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டியதாயிற்று. என்ன செய்வது!

"எங்கள் தகப்பனாருடைய பாட்டியின் மாமியார் இந்த ஊரிலே பிறந்தவள்" என்று நான் சொன்னேன்.

"சரிதான். எல்லாம் பந்துக்களாகத் தான் இருக்கும். கிட்டி முட்டிப் பார்த்தால் சொந்தமாய்விடும். இந்தக் காலத்தில் உறவு, ஒட்டு இதெல்லாம் யார் கவனிக்கிறார்கள்? பழைய காலமா? இப்பொழுது ரயில் போட்டுவிட்டான் வெள்ளைக்காரன். பம்பாயாம், கல்கத்தாவாம், அங்கெல்லாம் சம்பந்தம் செய்கிறார்கள்.
பக்கத்தில் இருக்கிற பந்துக்களை யார் ஐயா கவனிக்கிறார்கள்?"

பாட்டிக்கு உத்ஸாகம் உண்டாகிவிட்டது. அவளோடு யாரும் பேசுவதில்லை! எத்தனையோ நாட்களாகக் கட்டுக் கிடையாக மனத்துக்குள் புதைத்து வைத்திருந்த அபிப்பிராயங்களை யெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துவிட ஆரம்பித்தாள். பொறுமையோடு கேட்பதற்கு நான் ஒருவன் அகப்பட்டுக் கொண்டேன்.

பேசாமல் எழுந்துபோய் விடலாம். அப்படிச் செய்ய என் மனம் துணியவில்லை. 'கல உமி தின்றால் ஓர் அவலாவது கிடைக்காதா?' என்று எதிர்பார்ப்பவன் நான்; முதியவர்களிடத்திலே பொறுமையோடு விசாரித்தால் பல செய்திகளை அறியலாமென்பது என் அனுபவம். ஆதலால் நான் அந்தக் கிழவியின் கேள்விகளுக்கெல்லாம் தக்கபடி பதில் சொல்லி வந்தேன்.

ஊர், சாதி, குலம், கோத்திரம், வேலை, சம்பளம், குழந்தை, கல்யாணம், குடும்ப சமாசாரம் முதலிய பல விஷயங்களை அந்தக் கிழவியிடம் நான் சொல்ல வேண்டி யிருந்தது.

இப்படியே போய்க் கொண்டிருந்தால் இந்தக் கிழவியின் கேள்விகளுக்கும் பிரசங்கத்துக்கும் ஒரு முடிவு இராதென் றெண்ணி, "பாட்டீ, இந்த ஊரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லவேண்டும்" என்று ஞாபகப் படுத்தினேன்.

"ஆமாம். ஞாபகம் இருக்கிறது. சொல்லுகிறேன்: இங்கே அம்பிகை ஒரு பஞ்ச காலத்திலே ஏழைகளுக்கெல்லாம் பெரிய வயல் ஒன்றில் அன்னம் போட்டாளாம். அந்த வயல்கூட இருக்கிறது. அதற்கு அன்னம் படைத்த வயல் என்று பேர்."

நான் எதிர்பார்த்த விஷயம் வெளிவந்தவுடன்
எனக்கு, 'இவ்வளவு நேரம் வீணாகப் பேச்சிலே கழிந்ததே?' என்றிருந்த வருத்தம் மறைந்து விட்டது.

"அப்படியா! அந்த வயல் எங்கே இருக்கிறது?" என்று ஆவலுடன் கேட்டேன்.

"எனக்குக் கண் தெரிந்தால் நான் அழைத்துக் கொண்டு போய்க் காட்டிவிடுவேன்" என்று சொல்லிவிட்டு அந்த வயல் உள்ள இடத்திற்குரிய அடையாளங்களைமட்டும் அந்தக் கிழவி சொன்னாள்.

"இந்த ஊரில் சோறுடையான் வாய்க்காலென்று தெற்கே ஒன்று இருக்கிறது. சோறுடையான் என்பது இந்த ஊர் ஸ்வாமி பெயர்" என்று மற்றொரு செய்தியை வெளியிட்டாள் கிழவி. இப்படி அந்தக் கண்ணில்லாத முதியாள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல நான் கேட்டு என் மனத்துள் தொகுத்துக் கொண்டேன். இடையிடையே எனக்கு வேண்டாத சமாசாரங்களும் பாட்டியால் விரிவாகச் சொல்லப்
பட்டன. அவற்றை அந்த நிமிஷத்திலேயே மறந்து விட்டேன்.

"இந்தக்காலத்தில் இப்படிப்பட்ட கர்நாடக சமாசார மெல்லாம் யார் கேட்கிறார்கள்? கேட்டாலும் யார் சொல்லப்போகிறார்கள்? ஏதாவது பழுத்த கட்டையா யிருந்தால் உளறிக் கொண்டிருக்கும்" என்று கிழவி பெருமூச்சு விட்டுக்கொண்டு சொன்னாள்.

அவளுடைய பேச்சிலே இரக்கத்தொனி இருந்தது. அந்தப் 'பழுத்த கட்டை' உளறிய செய்திகளை நான் அப்பால் குறித்து வைத்துக் கொண்டேன். அவற்றை வேறு வகையால் அறிதல் இயலாத காரியம்.

பிறகு அந்தப்பாட்டி, "இன்னும் ஏதாவது தெரிய வேணுமா?" என்று கேட்டாள்.

அவளுக்குச் சலிப்பில்லை. எனக்கோ திருவையாற்று ஞாபகம் வந்துவிட்டது. "நான் போய் வருகிறேன்" என்று விடை பெற்றுக் கொண்டேன். அப்பொழுது என்னை அறியாமலே எனக்கு அந்தக் கிழவியிடத்தில் ஓர் அன்பும், காரணந்தெரியாத
துக்கமும் உண்டாயின. அவளைப் போன்ற 'பழுத்த கட்டைகள்' எவ்வளவு பேர், எத்தனை விஷயங்களைக் கேட்பார் இல்லாமல் மனத்துக்குள்ளே புதைத்து
வைத்து மறைந்தார்களோ!

[குறிப்பு:- இத்தலத்தில் இப்பொழுது வழங்கும் செய்திகளைக் குறித்து எழுதிக் கேட்டபோது, திருவையாற்று ராஜா காலேஜில் தமிழாசிரியராகவுள்ள ஸ்ரீமான் வித்துவான் டி.ஜி. சோமசுந்தர தேசிகரவர்கள் தெரிவித்த விஷயங்கள் வருமாறு:-

திருவையைற்றுப் புராணத்தில் இத்தலத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கின்றது. அன்னாவதாரஸ்தலம் என்பதும் இதன் பெயர். இங்கே கௌதமர் தவம் புரிந்தனர்; பன்னிரண்டு வருஷம் பஞ்சம் உண்டான காலத்தில் சிவபெருமானைப் பிரார்த்தித்து இத்தலத்திற் சில வயல்களில் அரிசியாகவே விளைய அவர் வேண்டினார். அங்ஙனமே இறைவன் வரமருள, கௌதமர் அவ்வாறு விளைந்த அரிசியினால் அன்னதானம் செய்து வந்தார். கோயிலுக்குத் தென்மேற்கிலுள்ள அல்லிக்குளத்தின் கரையில் இருக்கும் வயலொன்றை அரிசி விளைந்த வயலாகக் கூறுகின்றனர். சோறுடையான் வாய்க்காலென்பது சோடறான் வாய்க்காலென்று இப்போது வழங்குகின்றது]
------------------- 

Hari Krishnan

unread,
Aug 16, 2016, 9:54:29 PM8/16/16
to vallamai, சந்தவசந்தம், mintamil
2016-08-17 5:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.
*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது.  ஸாயிர என்று இல்லை.


கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:

sāyira sāyira.

Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).



இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது.  இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.


கன்னட மொழியில் கன்னடர்களுக்கே இல்லாத தேர்ச்சியைத் தாங்கள் அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.  வாழ்த்துகள்.

N. Ganesan

unread,
Aug 16, 2016, 10:01:11 PM8/16/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 6:54:29 PM UTC-7, Hari Krishnan wrote:

2016-08-17 5:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.
*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது.  ஸாயிர என்று இல்லை.


கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:

sāyira sāyira.

Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).



இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது.  இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.


கன்னட மொழியில் கன்னடர்களுக்கே இல்லாத தேர்ச்சியைத் தாங்கள் அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.  வாழ்த்துகள்.

நான் கொடுத்திருப்பது கிட்டெல் பற்றி அறிமுகம் ஆக விக்கிபீடியா எண்ட்ரி.

அவரது கன்னட அகராதியில் இருந்து ஸாவிர, ஸாயிர - இலக்கியச் சான்றுகளை கிட்டல் கொடுதுள்ளவாறு அறிய:

Kittel's Kananda dictionary:

ಸಾಸಿರ sāsira.

Tbh. of ಸಹಸರ. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. ಆಯಿರ). [ತಮಬತತಾರು ಸಾಸಿರ ಗೋಪಕುಮಾರರಡನ ಕೂಡಿ ಕಳಿಪಿ Pb. 9, 12 va.]. ದೇವರಕಲ ಸಾವಿರ ಯುಗಂಗಳು ಬರಹಮನ ದಿವಸ (Hlā. I, 115). ಸುರರ ರಡು ಸಾಸಿರ ಯುಗಂ ಬರಹಮಂಗ ದಿನಮ ನಿಕಕುಂ (Mr. 71). - ಸಾಸಿರಗಯಯ. -ಕಯಯ. the sun (ಬಿಸಿಗದಿರ, etc., ಸಪತಾಶವ Kk.).

 

sāsira sāsira.

Tbh. of sahasara. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. āyira). [tamabatatāru sāsira gōpakumāraraḍana kūḍi kaḷipi Pb. 9, 12 va.]. dēvarakala sāvira yugaṁgaḷu barahamana divasa (Hlā. I, 115). surara raḍu sāsira yugaṁ barahamaṁga dinama nikakuṁ (Mr. 71). - sāsiragayaya. -kayaya. the sun (bisigadira, etc., sapatāśava Kk.).

 

------------------

 

ಸಾಯಿರ sāyira.

Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71 va.]. ಸಾಯಿರ ಮನಗಳ (Śmd. 111).

 

sāyira sāyira.

Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).

 


ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம் கன்னட இலக்கிய, இலக்கணங்களில் இல்லை, ஸாவிர, ஸாயிர மட்டும் தான் உள்ளது.

நா. கணேசன்



 
--

N. Ganesan

unread,
Aug 16, 2016, 10:07:37 PM8/16/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 6:54:29 PM UTC-7, Hari Krishnan wrote:

2016-08-17 5:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.
*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது.  ஸாயிர என்று இல்லை.


கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:

sāyira sāyira.

Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).



இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது.  இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.


Kittel's Kannada dictionary has saayira and saavira literary examples. No Kannada literature has saayiraa or saaviraa. FYI.
 

கன்னட மொழியில் கன்னடர்களுக்கே இல்லாத தேர்ச்சியைத் தாங்கள் அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.  வாழ்த்துகள்.

Thanks. 

Hari Krishnan

unread,
Aug 16, 2016, 10:24:23 PM8/16/16
to vallamai, சந்தவசந்தம், mintamil

2016-08-17 7:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

திரு கணேசன்,


*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

இது நீங்கள் கொடுத்த சென்னைப் பேரகராதி அல்லது அகராதியின் சுட்டி.  இதில் ஸாயிர என்ற காட்டு இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள்.  எங்கே இருக்கிறது?  

ಸಾಯಿರ sāyira.

Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71

இதில் ஸாயிர என்றுதான் எழுதியிருப்பதாக மைசூரில் பிறந்து வளர்ந்த என் மனைவி தெரிவிக்கிறார்.


ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம் கன்னட இலக்கிய, இலக்கணங்களில் இல்லை, ஸாவிர, ஸாயிர மட்டும் தான் உள்ளது.


அடேயப்பா.  கன்னட இலக்கிய இலக்கணங்களிலெல்லாம் கரைகண்டிருப்பதற்குப் பாராட்டு, வாழ்த்து.  (ஸாவிர என்பதே சரி.  நான் தட்டியது தவறுதான்.)

N. Ganesan

unread,
Aug 16, 2016, 10:25:41 PM8/16/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 6:54:29 PM UTC-7, Hari Krishnan wrote:

நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது.  ஸாயிர என்று இல்லை.



இதனையே நானும் இன்றைய முதல் மடலிலே குறிப்பிட்டுள்ளேன்.
சாவிரம் என்பதுடன் சாயிரம் என்ற சொல்லும் சேர்த்தால் ஆயிரம் < சாயிரம் என சட்டெனப் புரியும் என எழுதினேன்.

MTL, and following it, Th. Burrow missed mentioning the word, saayira (=1000) in Kannada as leading to Tamil's aayiram. They only mention saavira from Kannada.
In addition to saavira, we must include the Kannada attestation of saayira as well to understand the formation of aayira in Tamil.

Kittel's dictionary of Kannada language gives "saayira" and literary usage:

sāyira sāyira. Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).

( I have converted Kannada script to Roman ISO 15919 standard)


நா. கணேசன்

Hari Krishnan

unread,
Aug 16, 2016, 10:26:47 PM8/16/16
to vallamai, சந்தவசந்தம், mintamil

2016-08-17 7:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது.  இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.


Kittel's Kannada dictionary has saayira and saavira literary examples. No Kannada literature has saayiraa or saaviraa. FYI.

கணேசன்,

இந்தப் பிழைநோண்டும் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளலாம்.  ஸாயிரா, ஸாவிரா என்று இல்லை என்று நீங்கள் சொல்லியிருக்கும் இடத்தில் நான் ஸாயிர என்றுதான் தட்டியிருக்கிறேன். 

N. Ganesan

unread,
Aug 16, 2016, 10:35:43 PM8/16/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 7:26:47 PM UTC-7, Hari Krishnan wrote:

2016-08-17 7:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது.  இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.


Kittel's Kannada dictionary has saayira and saavira literary examples. No Kannada literature has saayiraa or saaviraa. FYI.

கணேசன்,

இந்தப் பிழைநோண்டும் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளலாம்.  ஸாயிரா, ஸாவிரா என்று இல்லை என்று நீங்கள் சொல்லியிருக்கும் இடத்தில் நான் ஸாயிர என்றுதான் தட்டியிருக்கிறேன். 


யார் பிழைநோண்டுவது? ஸாவிர, ஸாயிர என்று கிட்டல் அகராதி தரும் இலக்கியக் குறிப்புகளை முதல் மடலிலேயே கொடுத்துள்ளேன்.

ஸாவிரா என்று தாங்கள் எழுதி,  ”கன்னட மொழியில் கன்னடர்களுக்கே இல்லாத தேர்ச்சியைத் தாங்கள் அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.  வாழ்த்துகள்.” 
உங்கள் வாழ்த்து கிடைத்தது.

ஸாயிரம் என்ற வார்த்தையின் முக்கியத்துவம் ஆயிரம் என்ற சொல்லுக்கு இருக்கிறது. ஸாவிரா, ஸாயிரா என்று இருந்தால் கன்னடத்தில்
தமிழில் ஆயிராம் என்றல்லவா ஆகும்?

ராதாகிருஷ்ணா, பண்டாரநாயகா என்றெல்லாம் பேச்சிலே இருந்தாலும், ராதாகிருஷ்ண, பண்டாரனாயக என்று கன்னடம், தெலுங்கில் எழுதுகிறார்கள்.

நா. கணேசன்



N. Ganesan

unread,
Aug 16, 2016, 10:47:11 PM8/16/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 7:24:23 PM UTC-7, Hari Krishnan wrote:

2016-08-17 7:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

திரு கணேசன்,

*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

இது நீங்கள் கொடுத்த சென்னைப் பேரகராதி அல்லது அகராதியின் சுட்டி.  இதில் ஸாயிர என்ற காட்டு இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள்.  எங்கே இருக்கிறது?  

ಸಾಯಿರ sāyira.

Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71

இதில் ஸாயிர என்றுதான் எழுதியிருப்பதாக மைசூரில் பிறந்து வளர்ந்த என் மனைவி தெரிவிக்கிறார்.

ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம் கன்னட இலக்கிய, இலக்கணங்களில் இல்லை, ஸாவிர, ஸாயிர மட்டும் தான் உள்ளது.


அடேயப்பா.  கன்னட இலக்கிய இலக்கணங்களிலெல்லாம் கரைகண்டிருப்பதற்குப் பாராட்டு, வாழ்த்து.  (ஸாவிர என்பதே சரி.  நான் தட்டியது தவறுதான்.)

காலையி இருந்து கன்னடியர்கள் பேச்சில் ஸாவிரா என்று சொல்வதை எழுதிக் கொண்டுள்ளீர்கள். ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம்
கன்னடியர்கள் பேச்சு சரியெனில், கன்னட இலக்கண, இலக்கிய, நிகண்டுகள் ஏன் அவ்வாறு எழுதுவதில்லை. இன்றைய கன்னட நூல்களிலும் காணோம்.

ஸாவிரா, ஸாயிரா என்பதெல்லாம் நீங்கள் குறிப்பிடுவது சரியாயின், தமிழ் 1000 = ஆயிராம் எனச் செய்திருக்கும்.
எனவே தான், ஸாயிர என்ற சொல்லும் சேர்த்தால் ஆயிரம் என்ற சொல் தமிழில் பிறப்பு விளங்கும் என எழுதியுள்ளேன்.

அன்புடன்
நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 17, 2016, 9:17:23 AM8/17/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
அயிர் என்றால் நுண்ணிய மணல். மணல் ஓரத்திலே, நீரின் அடியிலே உள்ள மீன்கள் அயிரை. சில அயிரை மீன்கள் உப்பங்கழியில் வாழும்,
பல அயிரை மீன்கள் ஆற்று நன்னீரிலே வாழும். அயிரை (அ) நொய்ம்மீன் இனங்கள்: https://en.wikipedia.org/wiki/Cypriniformes 

“பெருங்கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை ஆரும்” (ஐங்குறுநூறு)

“கடலங் காக்கை  செவ்வாய்ச் சேவல்
கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்கு
இருஞ்சேற்று அயிரை தேரிய தெண்கழிப்
பூவுடைக் குட்டந் துழவுந் துறைவன் ” (நற்றிணை)

அயிரை என்பது மணலை, சேறை ஒட்டி வாழும் எல்லா மீன்களுக்குமான பொதுப்பெயர். அயிர் = மணல். கொக்கு, நாரை, ... என்பதில் பல ஜாதிகள் போல,
அயிரை என்பதும் பொதுப் பெயர். சில அயிரை இனங்கள் இன்று அழிந்திருக்கும். அகில், யா மரம், ... புதா/போதா (adjutant) ... இன்றும் தமிழ்நாட்டில் இல்லை.
அதுபோல, சில அயிரை மீன்வகைகளும் இன்று இருக்காது.

அயிரை = all fishes that live near the mud, sand.
Some are fresh water fishes, while others live in brackish waters. This has nothing to do with establishing Kumari as a major river in Adiyarkku Nallar's 14th century. He is from Kongu region
and Kumari is only the Cape, and the river is a myth.

In my view, the Himalayn geese (annam), sea gulls (ciRu veN kAkkai), sea crows (cormarants, kaTalaG kAkkai)  eating "ayirai" means several species of both fresh and brackish bayous.
Some "ayirai" (mudskippers, loaches, ...)

Some brackish water "ayirai":

அயிர் = நுண் மணல். கடற் கரையிலோ, வேறெங்குமோ நுண்ணிய மணல் இருக்கும் இடத்தில் ஒரு கைப் பிடியளவு எடுத்துக்கொண்டு,
அதில் எவ்வளவு அயிர் உள்ளன என எண்ணிப்பார்த்தால் தெரியும். லக்ஷம், மில்லியன் கணக்கில் கைப்பியிலே வரும். அப்பொழுது
கடற்கரையில் உள்ள மணலின் எண்ணிக்கை எவ்வளவு பேரெண்ணாக இருக்கும்? - என்று யோசிக்கலாம். இதனால் தான்,
அயிர் என்ற சொல்லுக்கும், ஸாயிரம் > ஆயிரம் என்ற சொல்லுக்கும் எத் தொடர்புமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
என தமிழ் மொழியியற் பேராசிரியர்கள் விளக்குகின்றனர். கடல்மணல் ஃஜில்லியன் கணக்கில் என்று சங்ககாலச் சான்றோர் அறியாரா?
அறிவிற் சிறந்த சங்கப் புலவோர் கடல் மணல் தான் ஸாயிரம்/ஆயிரம் என ஒருக்காலும் எண்ணார். எண்ணிப் பார்த்து கன்னட
நாட்டு வடசொல்லை ஆண்டவர்கள் அப் புலவோர்.

மேலும், இந்த அயிர் “நுண் மணல்” இதிலிருந்து ஆயிரம் என்பவர்கள் கூறும் கூற்று ச்+ ஆயிரம் சாவிரம், சகஸ்ரம் என்றாயிற்று என்பர்.
இதுவும் தவறே. திடீர் என்று ஏன் ச் என்னும் மெய்யெழுத்து ஆயிரத்தோடு சேர்கிறது? சாயிரம் > ஆயிரம், சமணர் > அமணர் என்பதுபோல.
நீர் > ஈரம், நுண்ணி > உண்ணி, மலர் > அலர், மாசு > ஆசு, விடங்கர் > இடங்கர் “முதலை, இலிங்கம்”, யாமை > ஆமை, யானை > ஆனை ....
ச், ந், ம், வ், ய் என்னும் சொன்முதல் எழுத்துக்கள் மறைவது தமிழில் இயங்கும் பண்டை விதி.

சாவிரம் = 1000 என புரந்தரதாசர் ஏராளமாகப் பாடியுள்ளார். ஹரியை முன்வைத்து பாடிய அழகான பாடல். 
’ஹத்து சாவிர ஹொன்னு’ = 10,000 பொன் என வருகிறது. எம்.எஸ். பிறந்தநாள் இன்று. இப்பாடலைப் பாடியுள்ளாரா எனப் பார்க்கணும்.
எம்எல்வி பாடியிருப்பார். http://dasar-songs.blogspot.com/2014/03/blog-post.html

சிலப்பதிகாரம் பிற்கால நூல். சீனம், ஜப்பானிய மொழிகளில் எழுந்த நாவல்கள் போல, முத்தமிழில் எழுந்த முதல் நாவல். சமணர் ஆன
இளங்கோ அடிகள் தலைநகர் வஞ்சிக் கருவூரில் (கொங்குநாடு) இருந்து எழுதியது. இது வடமொழியின் பிருகத்கதாவை கொங்குவேளிர்
பெருங்கதை என்னும் இலக்கியம் ஆக்கிய பின்னர் இளங்கோ அடிகள் எழுதின இலக்கியம் என்பார் பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள்.
அதற்கடுத்து வந்த மணிமேகலையிலே சங்க கால குட்டுவன் என்னும் அரசனுக்கு 9 தலைமுறை கழித்துப் பிறந்தவன் கோவலன் என்று
காலத்தைக் கணிக்கும் செய்தி இருக்கிறது. மேலும், செங்குட்டுவன் என்ற பேரே சங்க இலக்கியத்தில் இல்லை. தமிழ்ச் சொற்கள் மிகப்
பிற்கால வளர்ச்சியை சிலம்பில் காட்டுகின்றன. வடமொழிச் சொற்களும், நடையும் மிகுந்து வருவன இரட்டைக் காவியங்கள். எனவே,
சங்க காலத்திற்குப் பின்னர் உருவாவது தமிழின் காவியகாலம். சிலப்பதிகாரத்திலே (சங்க கால நூலுக்கு வடமொழிச் சொல்லில் பெயர் வைப்பரோ?
கணிகையர் வசம் இசையும் நாட்டியமும் இருந்ததாக சங்கப் பாடல்களில் உண்டோ?) உள்ள வடசொல்: காவதம். இது எருதுகளைப்
பூட்டி ஓட்டும் போது ஒரு நாள் கடக்கும் தூரம். 9 - 18 மைல் என்பது பண்டைக் கணக்கு. சுமார் 12 மைல் எனக் கொள்ளலாம். சென்னைப் பேரகராதி
காவதம் ~10 மைல் என்கிறது.  காவதம் என்பது தமிழ்ச் சொல் என்பது பிழை, ஸாயிரம் > ஆயிரம் என்பதை
தமிழ்ச்சொல் எனக் காட்டும் முயற்சி போல என்க. காவதம் - நீட்டலளவையும், வடசொல்லின் சொல்லாய்வும்:

காவதம் என்ற வடசொல்லின் பொருளையும், அதன் அளவையும் தந்தவர்களில் பி. எல். ரைஸ் என்னும் கன்னட இலக்கிய, கல்வெட்டு அறிஞர்
முக்கியமானவர். அவரது எபிக்ராபிக்கா கர்நாட்டிக்கா நூலில் - பல கல்வெட்டுக்களில் ஸாயிர- என்னும் சொல் இருக்கிறது. பழங்கன்னடத்தில்
சாயிரம். தற்போது சாவிரம் என்றாகிவிட்டது போலும். பழங்கன்னட காலத்தில் கர்நாடக - தமிழக தொடர்பு காரணமாக, உ-ம்: ப்ராமி எழுத்தை
கன்னட நாடு கொங்குநாட்டுக்கு தருகிறது. உ-ம்: கொடுமணம், அங்கிருந்து மதுரைக்கு ப்ராமி, சமண சமயம் செல்கிறது - 
பழங் கன்னடத்தில் சாயிரம் என்ற சொல்லைக் கல்வெட்டுக்களில் இருந்து தொகுக்க வேண்டும். இலக்கியச் சான்றுகளில் ஒன்றை
கிட்டல் தன் கன்னட - ஆங்கில அகராதியில் கொடுத்துள்ளார். முதல் மடல் SV ggroup thread,

நா. கணேசன்

சாயிரம், பின்னர் சாவிரம் = 1000. புரந்தரர் பாட்டைப் படிப்போம்.



N. Ganesan

unread,
Aug 20, 2016, 10:53:07 AM8/20/16
to சந்தவசந்தம்
On Friday, August 19, 2016 at 11:42:43 PM UTC-7, mukunthan wrote:
​சங்ககாலம் - மணலினும் பலவே

>> சங்ககாலப் பாடல்களில் மணலுடன் ஒப்பிட்டு நீண்டநாள் வாழவேண்டும் என்னும் வாழ்த்து மற்றும் நிறைய எனப் பொருள்படும் வகையில் சில பாடல்களில் காணப்படுகின்றது. அப்பாடல்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.


இப்பாடல்களைப் பல காலமாக தமிழர்கள் அறிவர். இந்தோ-ஈரானியச் சொல் ஸஹஸ்ரம் சாயிரம்/ஆயிரம் என்று தென்திராவிட பாஷைகளில் ஆவதற்கும்
இப் பாடல்களுக்கும் ஒரு தொடர்புமில்லை. உதாரணமாக, செங்குட்டுவன் என்ற சிலம்பின் மன்னன் சங்க இலக்கியப் பாடல்களில் ஒன்றிலிலுமில்லை.
எனவே தான் தமிழ்ப் பேராசிரியர்கள் சிலப்பதிகாரச் செங்குடுட்டுவன் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பர். அதுபோல, ஆயிரம் என்பதற்கும், இந்த மணல்
பாட்டுகளுக்கும் ஒரு தொடர்புமில்லை. காரணங்கள் பல, முக்கியமானவை இரண்டு:

(1) நீங்கள் கொடுத்துள்ள ஒரு பாட்டிலும் அயிர், அயிரை, அயிர என்று மணலைக் குறிப்பிடும் வார்த்தைகள் இல்லை. 
உபசார வழக்காய் ட்ரில்லியன் கணக்கில் உள்ள மணலைப் பாடியுள்ளனர். 
மேலும், இந்த அயிர் “நுண் மணல்” இதிலிருந்து ஆயிரம் என்பவர்கள் கூறும் கூற்று ச்+ ஆயிரம் சாவிரம், சகஸ்ரம் என்றாயிற்று என்பர்.
இதுவும் தவறே. திடீர் என்று ஏன் ச் என்னும் மெய்யெழுத்து ஆயிரத்தோடு சேர்கிறது? சாயிரம் > ஆயிரம், சமணர் > அமணர் என்பதுபோல.
நீர் > ஈரம், நுண்ணி > உண்ணி, மலர் > அலர், மாசு > ஆசு, விடங்கர் > இடங்கர் “முதலை, இலிங்கம்”, யாமை > ஆமை, யானை > ஆனை ....
ச், ந், ம், வ், ய் என்னும் சொன்முதல் எழுத்துக்கள் மறைவது தமிழில் இயங்கும் பண்டை விதி.

(2) தென்திராவிட பாஷைகளில் பழமையான கன்னடம் - தமிழ் ஒப்பீட்டில் புதிய சான்று அளித்துள்ளேன்.
தற்கால கன்னடத்தில் ஸாவிரம் (அ) ஸாசிரம். ஆனால் பழங்கன்னடத்தில் (ஹளகன்னடம் என்பர்)
ஸஹஸ்ரம் ஸாயிரம் என்றிருப்பதை பழங்கன்னடச் சிலாலிகிதங்கள் காட்டுகின்றன. பழைய இலக்கியங்களிலுமுண்டு.
எப்பிகிராபிக்கா கர்னாட்டிக்கா போன்ற வால்யூஸில் தொகுத்தால் புரியும். சிலப்பதிகாரத்தில் நாடுகாண் காதையில்
மதுரைக்கு வடக்கே 30 காவதத்தில் (= ~ 350+ மைல்) கன்னாடகத்தில் கவுந்தி அடிகளைச் சந்திக்கிறார்கள் கோவலன் தம்பதியர்.
மதுரைக்கு வருகையிலே சீரங்க பட்டினத்தில் “அந்த சரணர்” என்னும் அந்நாட்டுச் சமயம் ஆகிய ஜைந வானவரைச்
சந்தித்து வணங்குகின்றனர். காவிரி பாயும் தெய்வத் திருநாட்டின் மருதத்திணை வளம் இக்காதை.
அதன்பின், மதுரையில் மரணம் அடைதலால், காடு காண் காதை திருச்சியில் இருந்து தொடங்குகிறது. நாடு  vs. காடு
- இளங்கோ அடிகள் பெயரைத் தேர்ந்த அழகைச் சிந்திக்க. தெய்வச் சிலையாரின் தொல்காப்பிய உரையில்
சிலப்பதிகாரத்தைச் சுருக்கமாய்க் குறிக்கும் வெண்பா உண்டு. “ஏதம் உறுதல் வினை” என மதுரையில், மதுரைக் காண்டத்தில்
கோவலனுக்கு  நடக்கும் நிகழ்வைச் சுட்டுகிறது. 

ஸமணர் > அமணர் என்பது கன்னடம் : தமிழ் மொழிகளில் மாறுவது போல,
ஸாயிரம் (கன்னடம்) > ஆயிரம் எனத் தமிழ் ஆகிறது. 
இதன் துணைத்தேற்றம் ( http://www.merriam-webster.com/dictionary/corollary ) என்னவெனில்
ஆயிரம் < ஸாயிரம் எண்ணுப்பெயர் தென்த்ராவிட பாஷைகளில் ஆர்ய ஸம்பந்தம் உடையது.
மணல் என்ற சொல் அன்று.

நா. கணேசன்
 
>> புறநானூறு  -  9 
முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே
இங்கே பஃறுளி ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது. இங்கே முந்நீர் விழா கொண்டாடப்பட்டிருக்கலாம்.
 
பதிற்றுப் பத்து-  ஐந்தாம் பத்து
காஞ்சிஅம் பெருந் துறை மணலினும் பலவே!
காஞ்சி ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது. இங்கே தீம் நீர் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.
 
சிலப்பதிகாரம் - நடுகல் காதை
நின் வாழ்நாட்கள்
தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க!
 
அகநானூறு 93
தண் ஆன்பொருநை மணலினும் பலவே
 
புறநானூறு   387
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்   
பல் ஊர் சுற்றிய கழனி   
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.
 
ஆன்பொருநை ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது
 
புறநானூறு   55
செந்தில் நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,   
கடு வளி தொகுப்ப ஈண்டிய   
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!   
இங்கே கடற்கரை மணல் குறிப்பிடப்படுகின்றது.
 
புறநானூறு  43
சிறக்க நின் ஆயுள்   
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி   
எக்கர் இட்ட மணலினும் பலவே!
காவிரி ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது.

புறநானூறு  136 
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை   
நுண் பல மணலினும் ஏத்தி,   
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே.
துறையூர் ஆற்று மணல் குறிப்பிடப்படுகின்றது. (காவிரியுடன் கலக்கும் சிற்றாறுகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்.)

இங்கே குறிப்பிடப்பட்ட பாடல்கள் முழுமையாக்க் கீழே தரப்பட்டுள்ளது.

புறநானூறு  -  9 - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை  நெட்டிமையார் பாடியது

ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே

ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
இத்தொடரும்
சிலப்பதிகாரம் - வஞ்சின மாலையில் வரும்
பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க
எனும் தொடரும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.

 பதிற்றுப் பத்து-  ஐந்தாம் பத்து -  கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை பரணர் பாடியது
பைம் பொன் தாமரை பாணர்ச் சூட்டி,
ஒள் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி,
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ, நீர் புக்கு,
கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ!
'ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு, இவர்
கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன், எனத் தத்தம்
கை வல் இளையர் நேர் கை நிரைப்ப,
வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை,
முனை சுடு கனை எரி எரித்தலின், பெரிதும்
இதழ் கவின் அழிந்த மாலையொடு, சாந்து புலர்
பல் பொறி மார்ப! நின் பெயர் வாழியரோ
நின் மலைப் பிறந்து, நின் கடல் மண்டும்
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின்,
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை,
மேவரு சுற்றமோடு உண்டு, இனிது நுகரும்,
தீம் புனல், ஆயம் ஆடும்,
காஞ்சிஅம் பெருந் துறை மணலினும் பலவே!

சிலப்பதிகாரம் - நடுகல் காதை
செங்குட்டுவனை மாடலன் வாழ்த்தியது
புரையோர்-தம்மொடு பொருந்த உணர்ந்த
அரைசர் ஏறே! அமைக, நின் சீற்றம்!
மண் ஆள் வேந்தே! நின் வாழ்நாட்கள்
தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க!

அகநானூறு 93 - வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார்
 கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,    
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,    
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து;    
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்    
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன    
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்    
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;    
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,    
வாடா வேம்பின், வழுதி கூடல்    
நாள் அங்காடி நாறும் நறு நுதல்    
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,    
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,    
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை    
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,    
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,    
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்    
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,    
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,    
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,    
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை    
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை    
தெண் நீர் உயர் கரைக் குவைஇய    
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.
    
(இங்கே கோதை எனும் அரசன் குறிப்பிடப்படுகின்றான். கருவூர் குறிப்பிடப்படுகின்றது . இங்கே பொருநை ஆறு ஓடுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய மற்றைய அரசர்களை வைத்து கோதை பற்றிப் பார்க்கவேண்டும்)


புறநானூறு   55 - பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,    
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,    
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த    
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்    
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,    
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற!    
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்,    
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என    
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட    
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;    
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,    
'பிறர்' எனக் குணம் கொல்லாது,    
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,    
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,    
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,    
உடையை ஆகி, இல்லோர் கையற,    
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்    
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்    
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,    
கடு வளி தொகுப்ப ஈண்டிய    
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!    
 
    

(ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,    
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,   
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த   
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்   
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,   
இங்கே பாற்கடல் கடந்த செயலையும்
சிலப்பதிகாரம் - ஆய்ச்சியர் குரவை
பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
....................................
வடவரையை மத்து ஆக்கி, வாசுகியை நாண் ஆக்கி,
கடல் வண்ணன்! பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே
சிலப்பதிகாரம் கூறுவதையும் ஒப்பிடலாம்.
 
சிலப்பதிகாரம்  குன்றக் குரவை
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமு நீங்கா இறைவன்கை வேலன்றே
பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே)



 புறநானூறு   387 -  சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.   
வள் உகிர வயல் ஆமை    
வெள் அகடு கண்டன்ன,    
வீங்கு விசிப் புதுப் போர்வைத்    
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும்    
மாறு கொண்டோர் மதில் இடறி,    
நீறு ஆடிய நறுங் கவுள,    
பூம் பொறிப் பணை எருத்தின,    
வேறு வேறு பரந்து இயங்கி,    
வேந்துடை மிளை அயல் பரக்கும்    
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை,    
திருந்து தொழில் பல பகடு    
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின்    
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி,    
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று,    
யான் இசைப்பின், நனி நன்று எனா,    
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?.........    
மருவ இன் நகர் அகன்.................................    
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி,    
வென்று இரங்கும் விறல் முரசினோன்,    
என் சிறுமையின், இழித்து நோக்கான்,    
தன் பெருமையின் தகவு நோக்கி,    
குன்று உறழ்ந்த களிறு என்கோ?    
கொய் உளைய மா என்கோ?    
மன்று நிறையும் நிரை என்கோ?    
மனைக் களமரொடு களம் என்கோ?    
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின்    
நல்கியோனே, நசைசால் தோன்றல்,    
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்!    
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள்
செல்வக் கடுங்கோ வாழியாதன்    
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண்    
விடுவர் மாதோ நெடிதே நி    
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும்    
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்    
பல் ஊர் சுற்றிய கழனி    
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.
(இங்கே செல்வக் கடுங்கோ வாழியாதன் குறிப்பிடப்படுகின்றான். புல் இலை வஞ்சி எனக் குறிப்பிடப்படுவதால் வஞ்சி மரமே குறிப்பிடப்பட்டிருக்கலாம்… வஞ்சி ஊர் எனக் கொள்ளலாமா தெரியவில்லை. இங்கே பொருநை ஆறு ஓடுவதாக்க் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
 
பூவா வஞ்சி - ஊர்
புல்லிலை வஞ்சி – மரம்??
பூத்த வஞ்சி - பூ  
 )


புறநானூறு  43 -   சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.
 நிலமிசை வாழ்நர் அலமரல் தீர,    
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி,    
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும்    
அவிர்சடை முனிவரும் மருள, கொடுந்சிறைக்    
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ,    
தன் அகம் புக்க குறு நடைப் புறவின்    
தபுதி அஞ்சிச் சீரை புக்க    
வரையா ஈகை உரவோன் மருக!    
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின்    
தேர் வண் கிள்ளி தம்பி! வார் கோல்,    
கொடுமர மறவர் பெரும! கடு மான்    
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்:    
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்    
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது    
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி,   
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்,    
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே;    
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்    
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என,    
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,    
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள்    
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி    
எக்கர் இட்ட மணலினும் பலவே! 
   
புறநானூறு  136  அவனைத் (ஆய் அண்டிரன்) துறையூர் ஓடைகிழார் பாடியது.
 யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப    
இழை வலந்த பல் துன்னத்து    
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ    
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த    
பேஎன் பகை என ஒன்று என்கோ?    
உண்ணாமையின் ஊன் வாடி,    
தெண் நீரின் கண் மல்கி,    
கசிவுற்ற என் பல் கிளையொடு    
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ?    
அன்ன தன்மையும் அறிந்து ஈயார்,    
'நின்னது தா' என, நிலை தளர,    
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில்,    
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர்    
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ?    
'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்'    
எனக் கருதி, பெயர் ஏத்தி,    
வாய் ஆர நின் இசை நம்பி,    
சுடர் சுட்ட சுரத்து ஏறி,    
இவண் வந்த பெரு நசையேம்;    
'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்;    
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என,    
அனைத்து உரைத்தனன் யான் ஆக,    
நினக்கு ஒத்தது நீ நாடி,   
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும்,    
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை    
நுண் பல மணலினும் ஏத்தி,    
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே. 
   
(குரங்கு அன்ன புன் குறுங் கூளியர்   - இங்கே குரங்கு போன்ற கூளியர் என்று கூறப்படுபவர்களுக்கும் புறநானூறு 378 கூறும் குரங்கு மற்றும் இராமாயணத்தில் வரும் வானரர்களுக்கும் தொடர்புண்டா எனப் பார்க்கவேண்டும். 
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, 
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்   
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,)

நன்றி,
முகுந்தன்

Reply all
Reply to author
Forward
0 new messages