சக்கரம் சுற்றுதடா!

7 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jun 14, 2026, 11:08:05 PM (2 days ago) Jun 14
to santhavasantham
மரபின் வ்லிமை 
   மீள்பதிவு

சக்கரம் சுற்றுதடா!

 

ஒளியம்பு புள்ளிவட்ட ஊசல்களாய் ஆட

நெளிவதுபோல் தோன்றும் நீலத் தரைக்கடலில்

வாடல் சருகுகளின் வாதச் சலசலப்பு

காடுவளர் மோனத்துக் கட்டியங்கள் கூறிவர

காய்ச்சிவைத்த செந்தூரக் கப்பரையில் மின்னொளியைப்

பாய்ச்சிவைத்த தோரணையில் பட்டொளிமேல் வான்கரைய

செக்கரிலே சேர்வெண்மை தொக்க, கரும்பாம்பு

பக்கத்தில் வாய்பிளந்து பாரின் ஒளி வாங்க

மின்குழம்புச் சாறு பரிமாறி வீதியிலே

பின்பிழம்பு வட்டப் பெரியநிலா தோன்றியது.

அந்நாளில், ஏதோ அதிசயத்தில் ஒன்றாகி

செந்நெருப்பு தேகச் சிலிர்ப்பில் தெறிக்கவிட்டு

நீளக் கருங்கல்லில் நேரான பக்கத்தில்

பாளை விரிந்ததெனப் பாவை படுத்திருக்க

பார்த்த நெருக்கத்தின் பாவனையி லேமரங்கள்

ஆர்த்து, நெருங்கி,அணைத்தணைத்துப் பூசலிட

கள்ளுண்ட கற்பனையில் காளையவன் கல்லெடுத்து

உள்ளுண்ட காதல் உருவத்தின் உந்துதலால்

பக்கக் கருங்கல்லில் பக்குவமாய்த் தட்டிவர

நெக்குவிட்ட சில்லுகளின் நீக்கத்தில் ஓருருவம்

சிக்கிவிட்ட சேதி அவன் சிந்தனையில் தட்டியது

அக்கணத் தேகலையின் ஆரம்பம் கட்டியது

கல்லும் ரும்பாகிக் கல்லைக் கடைசலிட

கல்மலர்ந்த காவியங்கள் கைகுவிக்க வைத்தனவால்

ஏதோ உருவத்தில் எக்களித்து நின்றவன்தான்

பாதாதி கேசம்வரை பார்க்கும் உருவமைத்தான்

கல்லினைத் தட்டியவன்   கண்ணைத் திறந்து வைத்தான்

சொல்கடந்த சூத்திரத்தின் சூக்குமத்தைத் தேக்கிவைத்தான்

ன்னபடி தேர்ந்தெடுப்பாய், ன்னபடி வார்ப்பெடுப்பாய்

என்றே லக்கணங்கள் ஏட்டில் எழுதிவைத்தான்

நாள்கடக்க நாள்கடக்க நாடும் கலையதுவும்

ஆள்கடந்து ஆள்கடந்து யாப்பமைதி பெற்றதுவால்

ன்னொருநாள் ன்னொருவன் ஏதோ சிலையமைக்க

சொன்ன முறையினிலே சோதித்துக் கல்லெடுத்தான்

தட்டினான், தட்டிச் சரியாய் உடல்சமைத்தான்

எட்டிலே ஓரளவு ஏற்ற முகம்பிடித்தான்

ஆக்கங்கள் யாவும் அழகாய் அமைகையிலே

மூக்குடைந்து போயிற்று , மூளியாய் ஆயிற்று

மூக்கின்றிப் போனால்தான் முந்தும் அழகென்று

வாக்கொன்று சொல்லி வரலாற்று வித்திட்டான்.

(தொடரும்)

 

ன்னொருநாள் ன்னொருவன் ந்தவழி பின்பற்றி

தன்மனத்துக் கற்பனையைத் தாங்கும் சிலையமைத்தான்

மூக்கில்லா நல்லமுகம் மும்முரமாய்த் தானமைக்கும்

ஏக்கத்தில் சிற்பி ராப்பகலாய்ப் பாடுபட்டான்

சாதகமாய் யாவும் சமைந்து வரும்போது

காதுடைந்து போயிற்று, காதுமூக் கில்லாத

சிற்பந்தான் நல்லழகு சேர்ந்ததெனத் தான்கூறி

கற்பனையின் விற்பனைக்குக் கட்டியங்கள் கூறிவிட்டான்

ன்னொருவன் கையொடித்தான்,ன்னொருவன் காலொடித்தான்

ன்னொருவன் கண்ணெதற்கு என்றே எடுத்துவிட்டான்

எண்ணச் சுமைதாங்க ஏன்வடிவம்? கற்பனையின்

வண்ணங்கள் சின்னதொரு வார்ப்பில் டம்பெறுமா?

கூட்டுக்குள் தானா கொலுவேற்றம்? பாட்டென்ன

ஏட்டுக்குள் தானா சைந்துவரும்? சின்னதொரு

வட்டத்துக் குள்ளே  வலுவேற்றக் கூடிடுமா?

சட்டிக்குள் காற்றைச் சமைப்பதுவா, போடா,போ

தூக்கி எறியந்தச் சூத்திரங்கள்: கற்பனையில்

வாக்கை வடிப்பதற்கு வாயெதற்கு?, தத்துவத்தின்

அற்புதங்கள் கற்றின் அசைவே கொடுக்காதோ?

சிற்பத்தைக் காண்பவனின் சிந்தனைக்கு ஏற்றபடி

கூட்டி ரசிக்கக் கொடுப்பதன் றோசிறப்பு!

பாட்டியிடம் போயாவாய்ப் பல்லெண்ணிப் பார்க்கிறது,

வட்டமாய்த் தோசையினை வார்ப்பதிலே தான்சுவையா?

ட்டலி சற்றேஓர் எண்கோண மாகிவிட்டால்

தூக்கி எறிவதுவா, தோற்றம் சுவைதருமா?

தூக்கமென்ன மெத்தை சுகத்திலே தான்வருமா?

ப்படித்தான் என்றிங்கே ஏன்விலங்கு போடுகிறீர்?

செப்பிடு வித்தைகளா சிந்தைப் பிரசவங்கள்!

மேகக் கிழிசல்களை மின்னலிழை தைக்கையிலே

பாகம் பிரித்தாநாம் பார்க்கின்றோம்? சிந்திப்பாய்

என்றெல்லாம் பேசிவிட்டு ன்னொருவன் சென்றுவிட்டான்

அன்றொருநாள் யாரோ அமைத்த முழூருவம்

வீதி முனையினிலே மேடைத் தவம்செய்ய

ஈதென்று சொல்லி எடுத்துரைக்க ஒண்ணாத

மொந்தைப் பெருங்கல்ஓர் முச்சந்திக் கூட்டினிலே

சித்தத்திற் கேற்ற தெளிவுரையாய்த் தான் நின்றே

அர்த்தமாய்,ஜீவிதமாய் ஆர்ப்பரித்து நின்றதுவால்.

மூர்க்கமும் கால முதுகில் அமர்ந்துவிட

தாக்கும் புயலொன்று சாதனையைக் காட்டியது.

 

(தொடரும்)

 

மண்ணும் மணலும் மழையாக, பக்கத்தில்

விண்புரண்டு வந்ததுபோல் மேகப் படலங்கள்

வீதி திரிந்து விளையாட, கட்டவிழ்த்த

பூதங்கள் வாய்ப்புப் பொருந்தக் கிடைத்ததென

சேதங்கள் ஆக்கித் திமிர்ந்து நடமாட

மோதி,புடைத்து, மிதித்து, வெளிதூக்கி

வாரி, றைத்து, மறைத்து, வகைமாற்றி

வேரைப் பிடுங்கி மிதித்து விளையாடி

விண்ணுக்கும் மண்ணுக்கும் வீதி உருவாக்கி

கண்ணிமைக்கும் நேரத்தில் காட்சிகளை மாற்றுவதாய்

காற்று விரைந்து கவிபாடிப் பின்ஓய

மாற்றம் விளைந்தெங்கும் மண்மேடாய் ஆகியது

நின்றமுழுச் சிலையும், நீளக் கருங்கல்லும்

அன்றோர் மணல்மேட்டின் ஆழத்தில் தூங்கிவிட

காலக் குதிரை கடுவேகம் காட்டியது

கோல மணல்மேடு கொஞ்ச கொஞ்ச மாய்க் கரைய

வாய்த்த அழகு வடிவச் சிலையுருவும்

தேய்த்த கருங்கல்லும் சின்னங்க ளாய்த் தெரிய

பார்த்தான் ஒருவன், பலப்பலவாய் ஆராய்ந்தான்

வார்ப்புச் சிலையை, வணக்கங்கொள் தெய்வதமாய்

ஆலயம் கட்டி அழகாய் நிறுத்திவைத்தான்

மூலையிலோர் கல்தூணாய் மொந்தைக்கல் ஆகியது.

ன்னொருவன் பார்த்தான், எழில்கொள் சிலையைப் போல்

மன்னும் சிலைகள் வடிப்பேன் எனவெழுந்தான்

கையில் உளியெடுத்தான், கல்லொன்றைத் தேர்ந்தெடுத்தான்

மெய்வருத்தம் பாராமல் வேலை தனில்முனைந்தான்

மூக்குடைந்து போயிற்ரு, மூளியாய் ஆயிற்று

மூக்கின்றிப் போனால்தான் முந்தும் அழகென்றான்

ஞாலம் புதிதாய் ஓர் நாடகத்தை ஆடியது

காலம் சிரித்துக் கடகடென ஓடியது.


Arasi Palaniappan

unread,
Jun 15, 2026, 7:28:24 AM (yesterday) Jun 15
to சந்தவசந்தம்
அற்புதம் தலைவரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBvn%2BBK0zQD-ze50aoBcSQqem0osUYQFnmHjNqzs3eAtw%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Jun 15, 2026, 8:16:38 AM (yesterday) Jun 15
to santhav...@googlegroups.com
அடரடா, என்னே ஓர் ஓட்டம் கவிதையிலே.

அற்புதம் தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 15, 2026, at 07:28, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Kaviyogi Vedham

unread,
Jun 15, 2026, 10:57:15 AM (yesterday) Jun 15
to santhav...@googlegroups.com

Siva Siva

unread,
Jun 15, 2026, 11:23:18 AM (24 hours ago) Jun 15
to santhav...@googlegroups.com
Very nice.

/ செக்கரிலே சேர்வெண்மை தொக்க  /
தொக்கு? தொங்க?

சிற்சில இடங்களில் எழுத்துகள் ஒளித்துக்கொண்டன. எழுத்துரு மாற்றத்தில் மாயமாயினபோல்.

உதாரணமாக:
ன்னொருவன் கையொடித்தான்,ன்னொருவன் காலொடித்தான்
ன்னொருவன் கண்ணெதற்கு என்றே எடுத்துவிட்டான் /

ட்டலி சற்றேஓர் எண்கோண மாகிவிட்டால்
தூக்கி எறிவதுவாதோற்றம் சுவைதருமா/

நல்ல கருத்து.

வி. சுப்பிரமணியன்



On Sun, Jun 14, 2026 at 11:08 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
மரபின் வ்லிமை 
   மீள்பதிவு

சக்கரம் சுற்றுதடா!

 

ஒளியம்பு புள்ளிவட்ட ஊசல்களாய் ஆட

நெளிவதுபோல் தோன்றும் நீலத் தரைக்கடலில்

வாடல் சருகுகளின் வாதச் சலசலப்பு

காடுவளர் மோனத்துக் கட்டியங்கள் கூறிவர

காய்ச்சிவைத்த செந்தூரக் கப்பரையில் மின்னொளியைப்

பாய்ச்சிவைத்த தோரணையில் பட்டொளிமேல் வான்கரைய

செக்கரிலே சேர்வெண்மை தொக்க, கரும்பாம்பு

.....

Subbaier Ramasami

unread,
Jun 15, 2026, 3:55:18 PM (19 hours ago) Jun 15
to santhav...@googlegroups.com
தொக்க  என்றால் மறைய  -

ஆமாம். டிஸ்கியிலிருந்து ஊனிகோடுக்கு மாற்றியதில் நேர்ந்த சிதைவு.

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jun 15, 2026, 3:56:00 PM (19 hours ago) Jun 15
to santhav...@googlegroups.com

Subbaier Ramasami

unread,
Jun 15, 2026, 3:56:33 PM (19 hours ago) Jun 15
to santhav...@googlegroups.com
நன்றி

On Mon, Jun 15, 2026 at 8:16 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அடரடா, என்னே ஓர் ஓட்டம் கவிதையிலே.

Subbaier Ramasami

unread,
Jun 15, 2026, 3:57:04 PM (19 hours ago) Jun 15
to santhav...@googlegroups.com
நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages