ஒருத்தி நிலையை உரை!

23 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 19, 2021, 10:16:33 PM9/19/21
to santhav...@googlegroups.com
.        ஒருத்தி நிலையை உரை!

              ( முகில் விடு தூது)

வானார்ந்த காரெழிலே, வண்மழைபெய் மாமுகிலே,
கானார்ந்த வேங்கடத்துக் கண்சென்று - தேனார்
திருத்துழாய்த் தாரான் செவிகேட்க, இந்த
ஒருத்தி நிலையை உரை!
                           -- தில்லைவேந்தன்

Ramamoorthy Ramachandran

unread,
Sep 20, 2021, 8:33:46 AM9/20/21
to Santhavasantham
உரைக்கின்ற வேதம் உறையாமல்  போகக் 
கரைகின்ற  காக்கையாய் ஆனேன்!-  கரைமேகம்,  
நீல  மலையான்முன்   என்னிலையை   நீயுரைத்தால்
சால  மகிழ்வேன் தழைத்து !
இப்படித் தொடரலாமா?  
 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hj2Q%3Dcz0ohsjuSMTEyRQd3OoTRmQ1sGp5kOBWdQOxKjSQ%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 20, 2021, 9:02:16 AM9/20/21
to santhav...@googlegroups.com
அசத்தல் புலவரய்யா
நன்றி

N. Ganesan

unread,
Sep 20, 2021, 5:07:06 PM9/20/21
to சந்தவசந்தம்
On Monday, September 20, 2021 at 7:33:46 AM UTC-5 rawmu...@gmail.com wrote:
உரைக்கின்ற வேதம் உறையாமல்  போகக் 
கரைகின்ற  காக்கையாய் ஆனேன்!-  கரைமேகம்,  
நீல  மலையான்முன்   என்னிலையை   நீயுரைத்தால்
சால  மகிழ்வேன் தழைத்து !
இப்படித் தொடரலாமா?  
 


கரைமேகம் என்றால் என்ன? கரையில் இருக்கும் மேகமா?

கலங்கரை விளக்கம் = Lighthouse on the sea shore.
மாக்கடல் கலம் - கப்பல்;  
கலங்கரைவிளக்கு - கலங்களைக் கரையும் (அழைக்கும்) விளக்கு.

கும்மன கரெயதிரெ, (புரந்தரர்)
http://dasar-songs.blogspot.com/2011/05/blog-post_09.html
கும்மன கரெயதிரே அம்மா நீனு
கும்மன கரெயதிரே
   (பூச்சாண்டியை கூப்பிடாதேம்மா, நீ
    பூச்சாண்டியை கூப்பிடாதேம்மா)
https://www.youtube.com/watch?v=c3eEvgJU-pk

நா. கணேசன்

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 20, 2021, 10:46:29 PM9/20/21
to santhav...@googlegroups.com
காற்றில் கரைந்து போய்த் திரிகின்ற மேகம் எனக் கொள்ளலாமே
நன்றி
     — தில்லைவேந்தன்

N. Ganesan

unread,
Sep 20, 2021, 11:03:17 PM9/20/21
to Santhavasantham
On Mon, Sep 20, 2021 at 9:46 PM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
காற்றில் கரைந்து போய்த் திரிகின்ற மேகம் எனக் கொள்ளலாமே
நன்றி
     — தில்லைவேந்தன்

காற்றில் மேகம் கரைந்தால், மேகமாக இராதே. 
கறைமேகம் - கருமேகம் ??

 
Reply all
Reply to author
Forward
0 new messages