--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhL%2BLv0S3jm6KhPMZZXrhQiJ3KfGqJwjrvR100FDUg3_A%40mail.gmail.com.
அருமை
சொல்லருந் தொல்புகழ்சேர் கங்கைத் தொழுதேத்தும்
தில்லைமன் வெண்பா சிறப்பு.
On Nov 20, 2025, at 18:06, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgCJJhQ4PYUt%3DLBEYJ_JTxn5Kgnh1de_dDLQ2F_pE-yjQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhGXOyijLiTUnOUaK47OYVL6tG8YzN1fr%3DRiu4TvhFe7g%40mail.gmail.com.
venba arputham thillai,yogiyar
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhL%2BLv0S3jm6KhPMZZXrhQiJ3KfGqJwjrvR100FDUg3_A%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1q2uN-pyEOEJrM7MOSiPZ4_mDXCEtR5EhQX-vDzk40ag%40mail.gmail.com.
உ
<> ஆர்த்திஹரத் துதி <>
(இது, திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேசாச்சாரியர் சமஸ்கிருதத்தில் அருளிய ”ஆர்த்திஹர ஸ்தோத்ரம்” என்னும் துதியின் தமிழாக்கம். பிழையிருப்பின் பொறுத்தருவும்.)
தண்ணமு தாம்உன் தயைசொரி பார்வைஇத் தாரணியில்
புண்படும் பேதைபால் வீழ்ந்திடச் செய்தியேல் புண்ணிய!என்
திண்ணிய துன்பெலாம் தீர்க்கும் திறனுன் திருவருளுக்(கு)
உண்டெனக் கண்டிடு வேன்உயர் சங்கர! உண்மையிலே (1)
நொந்த மனத்தடி யேன்நின் நலங்கள் நுவன்றுனதாள்
வந்தடைந் தும்என் வருத்தம் இனியும் விலக்கிலையே
அந்த கனுக்கொரு அந்தக! யானிங் கவதியுறல்
எந்த வகைநின் இயல்புக் குகந்த தியம்பிடுமே! (2)
தேவ! நினையுளில் சிந்திப் பவர்களைச் சிந்திப்பவர்
பாவம் சிதைந்து பதவி புகழ்பெறல் பார்த்ததுண்டே
ஆவி துடிக்க அரனே எனவிங்(கு) அலறிஉன்னைக்
கூவி அழைத்துமே துன்புறல் எங்ஙனோ கூறும்ஐயே! (3)
சாற்றிடத் தக்க குணங்களைக் கொள்ளாச் சழக்கனெனத்
தூற்றிநீ என்றனைத் தள்ளல் முறையோ? சொல்லிடில்யான்
ஆற்றிடுஞ் செய்கையை ஐய!நீ உள்ளிருந்(து) ஆக்குவதால்
ஈற்றில் உனைவிட்(டு) எவரைக் குறைசொல ஏலுமிங்கே? (4)
அறிவிலா அற்பருள் யான்முதல் உன்றன் அருள்பெறற்குச்
சிறிதும் அருகதை யில்லேன் எனவே தெரிந்திருந்தும்
மறைநூல் சொலவொணா மாண்பினோய் உன்னை வலித்திழுக்கும்
பொறையுண் டெளியனின் புன்மைக் கெனநான் புரிந்துளனே! (5)
புகலும் அறிவின் பொலிவுநீ ஈசன்நீ பூரணன்நீ
இகழும் கடையனேன் ஈனரில் ஈனனேன் இவ்வுலகில்
நிகழ்த்தும் நெறியிலாச் செய்கையை நீயோர் பொருட்டெனநின்
அகத்தில் நினைத்திடில் யாரிடம் சென்றிங்(கு) அரற்றுவனே (6)
அண்டினோர் துன்பம் அகற்றிடும் வல்லவன் ஆகவுனைக்
கண்டுநான் வந்தனன் கொஞ்சமும் என்னைக் கடைக்கணியேல்
தொண்டரைக் காப்போன் துயரினைத் தீர்ப்பவன் தூயனென
அண்டமும் போற்றல் அடுக்குமோ? தீனனை ஆதரியே! (7)
இயலா(து) 'அரண்'என்(று) இயம்பும் ஒருவனை இங்குநமை
நயந்தே 'அரன்'என் றழைத்தான் எனப்பல நன்மைகளைப்
பயக்கும் உனையான் பரம சிவஎனப் பல்வகையாய்
அயர்ந்திங் கழைத்தும் அருளாத தேனென்(று) அறைகுவையே! (8)
பரமனே நின்பதம் பற்றினால் தீர்ந்திடும் பாழ்துயரென்(று)
உரைத்தது கேட்டுயான் ஓடிவந் தேன்இங்(கு) உன்னிடம்யான்
அரவணி வோயுனக்(கு) ஆங்கவர் மேலுள ஆதுரத்தின்
உரத்தினை உன்னி உதவிடு வாயெனக்(கு) உன்னருளே! (9)
… அனந்த் ஆகஸ்ட் 2014
ஐயாவாள் அவர்களின் சரித்திரத்தை அறிய: https://sanskritdocuments.org/doc_shiva/Artihara.html
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia15YzeqPN2k8t11_dOOCo0HdbEc2--pZOHivVrBN4hW7g%40mail.gmail.com.
இராஜபாட்டையில் கட்டளைப் பாட்டு, மொழிபெயர்த்துவேட்டையார் தந்த விருந்து!அற்புதம்!On Sun, 23 Nov 2025, 9:13 am VETTAI ANANTHANARAYANAN, <gan...@gmail.com> wrote: