சிரிக்கும் குல இறையே - மீ. விசுவநாதன்

1 view
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 13, 2026, 1:36:00 AM (yesterday) Mar 13
to Santhavasantham, M. Viswanathan
"சிரிக்கும் குல இறையே"
     (மீ. விசுவநாதன்)

பச்சை மலையழகே - செல்வப்
பக்க பலம்நீயே 
உச்சம் உலகினிலே - என்றும்
உந்தன் உயிரன்பே

செக்கச் சிவந்தமுகம் - கொண்டு
சிரிக்கும் குலஇறையே 
சொக்கத் தங்கமடி - நீயென்
சொர்க்க பூமியடி

ஆழி அலைநுரையை - கையில்
அள்ளி வருமழகே
நாழி கடந்தாலும் - வந்த
ஞானப் பெருவிருந்தே

சிட்டுக் குருவியென - நீயுன்
சின்ன வாய்திறப்பாய்
எட்டுத் திசையுயிர்கள் - காட்டி
இசையில் கரைத்திடுவாய் 

பொம்மை விளையாட - என்னைப்
பொழுதும் அழைப்பாயே
இம்மை விளையாட்டில் - அந்த
இன்பம் வேறேது.

உன்னை நினைக்கையிலே - என்னுள்
ஊனம் இல்லையடி 
என்னை உன்மடியே - என்றும்
ஈர்க்கும் தேசமடி 
               (13.03.2026 10.59am)
Reply all
Reply to author
Forward
0 new messages