வண்ணமழை கொள்ளாதோ வாழ்வு

9 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Mar 8, 2026, 8:08:30 AMMar 8
to santhav...@googlegroups.com
08-03-26  ஞாயிற்றுக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷

நாளும் இலக்கியத்தை நன்றாய் அனுபவித்து
வேளை தவறாமல் விண்டுரைத்து - நீளுமந்த
எண்ணமது வேறிதிலும் எட்டாது நிற்குமெனில்
வண்ணமழை கொள்ளாதோ வாழ்வு


   _

-
S. Parthasarathy
9980794542/
+91 98441 24542

Parthasarathy S

unread,
Mar 10, 2026, 10:19:45 AMMar 10
to santhav...@googlegroups.com
09-03-26  திங்கட்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷


முன்னை வினையை முடிக்கப் பிறந்துமே
பின்னும் புறவழியில் பேர்வதோ - பின்னலிடும்
எண்ணமெலாம் நல்லறத்தில் என்றும் இருத்திட

வண்ணமழை கொள்ளாதோ வாழ்வு


   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Parthasarathy S

unread,
Mar 10, 2026, 10:21:30 AMMar 10
to santhav...@googlegroups.com
10-03-26  செவ்வாய்க்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷

நல்லோர் அருகிருக்க நன்மை நிகழ்ந்திடுமே
சொல்லும் சுருதிவழி சூழ்ந்திடுமே - பல்வகையில்
திண்ணமாய் உண்மை உரைசெய்யத் தீதின்றி

வண்ணமழை கொள்ளாதோ வாழ்வு

 புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Parthasarathy S

unread,
Mar 11, 2026, 7:35:12 AMMar 11
to santhav...@googlegroups.com
11-03-26  புதன்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
கண்ணில் தெரிவதைக் கைப்பொருளாய்க் கொள்ளாமல்
திண்ணம் அடைந்தபின் தேறுமின் - கொண்டதைக்
கண்டவழி கொட்டாமல் காத்துக் கொடுத்திடவே

வண்ணமழை கொள்ளாதோ வாழ்வு


   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 13, 2026, 12:57:38 AMMar 13
to சந்தவசந்தம்
12-03-26  வியாழக்கிழமை
🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
பிண்டம் பெருக்காமல் பேருயிரைப் பேணினால்
அண்டம் விடுத்தபின் ஆளாவோம் - கண்ணெனவே
பண்ணில் பரம்பொருளைப் பாடிப் பழகிட

வண்ணமழை கொள்ளாதோ வாழ்வு


  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 13, 2026, 1:00:29 AMMar 13
to சந்தவசந்தம்

13-03-26  வெள்ளிக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
அன்பே விரிந்து அருளாய்ப் பெருகிட
இன்பம் இதயம் இருத்துமே - துன்பமும்
வண்மையிலே வீழ வருந்தா விருந்தோடு

வண்ணமழை கொள்ளாதோ வாழ்வு


  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 14, 2026, 3:05:26 AMMar 14
to santhav...@googlegroups.com
14-03-26 சனிக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
கல்வியொடு கேள்வியது காலத்தும் நிற்குமே
பல்வகையில் காட்டுமிதைப் பாரதமே -  நல்லோரின்
கண்ணெதிரில் காலம் கழித்தலே காப்பாகி

வண்ணமழை கொள்ளாதோ வாழ்வு

   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/e9e8536a-cebc-4bba-988c-8fa90c244111n%40googlegroups.com.

Parthasarathy S

unread,
Mar 14, 2026, 9:21:06 PMMar 14
to santhav...@googlegroups.com
15-03-26 ஞாயிற்றுக்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷

உணவை மருந்தாய் உரியவகைக் கொள்ளப்
பிணக்கே வருவதில்லை பின்னும் - கணக்குடன்
நண்ணுதலைப் போற்றி நலமிட்டு நின்றிடவே

வண்ணமழை கொள்ளாதோ வாழ்வு
                                                                                                                                                                                                                                                                                                
  ( நண்ணுதல் -கிட்டுதல்)


   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 16, 2026, 6:57:43 AMMar 16
to santhav...@googlegroups.com
16-03-26 திங்கட்கிழமை

🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
நல்லோரின் சேர்க்கை நலமூட்டும் நானிலத்தில்
வல்லானாய் வைத்து வரமீயும் - பொல்லாங்கே
எண்ணத்தில் வாராமல் எண்ணியதை எட்டவைக்க

வண்ணமழை கொள்ளாதோ வாழ்வு


   _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Mar 18, 2026, 2:41:08 AMMar 18
to சந்தவசந்தம்

17-03-26 செவ்வாய்க்கிழமை


🪷🪷🪷 _அடியேனின் இன்றைய வெண்பா –_ 🪷🪷🪷
ஆன்றோர் அருளுவழி ஐயமின்றிக் கற்றபின்
தோன்றாத்  திகைப்பும் திடமிதுவே - ஊன்றியே
திண்ணமாய் நல்லதுண்டு தீதைவிட நாளுமே

வண்ணமழை கொள்ளாதோ வாழ்வு



  _புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_
Reply all
Reply to author
Forward
0 new messages