ஆறுமுகத்தின் பொருளாழம் வேறல்லவா?
சண்முகம் என்பது ஆறுமுகம் என்னும்
சொல்லின் மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்.
ஆறுமுகம் என்னும் சொல்லின் முழுப்பொருள்
சண்முகம் என்பது தருமா? தராது என
நினைக்கிறேன் (ஏன் அப்படி நினைக்கின்றேன்
என்று பின்னர் கூறுகிறேன்).
முருகன் அன்பர்கள் பலர் இக்குழுவில் இருப்பதால்
வளமான ஒரு உரையாடல் நிகழ இடம் நல்வாய்ப்பு
இருக்கின்றது.
அன்புடன்
செல்வா
ஒரு கேள்வி: ஆறுமுகம் என்பதும் சண்முகம் என்பதும் ஒரு பொருள் தருமா?
ஓம் சண்முக பதயே நமோ நம!
ஓம் ஷண்மத பதயே நமோ நம!
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம!
ஓம் ஷட்கோண பதயே நமோ நம!
ஓம் ஷட்கோச பதயே நமோ நம!
ஓம் நவநிதி பதயே நமோ நம!
ஓம் சுபநிதி பதயே நமோ நம!
ஓம் நரபதி பதயே நமோ நம!
ஓம் சுரபதி பதயே நமோ நம!
ஓம் நடச்சிவ பதயே நமோ நம!
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம!
ஓம் கவிராஜ பதயே நமோ நம!
ஓம் தபராஜ பதயே நமோ நம!
ஓம் இகபர பதயே நமோ நம!
ஓம் புகழ்முநி பதயே நமோ நம!
ஓம் ஜயஜய பதயே நமோ நம!
ஓம் நயநய பதயே நமோ நம!
ஓம் மஞ்சுள பதயே நமோ நம!
ஓம் குஞ்சரி பதயே நமோ நம!
ஓம் வல்லீ பதயே நமோ நம!
ஓம் மல்ல பதயே நமோ நம!
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!
ஓம் இஷ்டி பதயே நமோ நம!
ஓம் அபேத பதயே நமோ நம!
ஓம் கபோத பதயே நமோ நம!
ஓம் வியூஹ பதயே நமோ நம!
ஓம் மயூர பதயே நமோ நம!
ஓம் பூத பதயே நமோ நம!
ஓம் வேத பதயே நமோ நம!
ஓம் புராண பதயே நமோ நம!
ஓம் ப்ராண பதயே நமோ நம!
ஓம் பக்த பதயே நமோ நம!
ஓம் முக்த பதயே நமோ நம!
ஓம் அகார பதயே நமோ நம!
ஓம் உகார பதயே நமோ நம!
ஓம் மகார பதயே நமோ நம!
ஓம் விகாச பதயே நமோ நம!
ஓம் ஆதி பதயே நமோ நம!
ஓம் பூதி பதயே நமோ நம!
ஓம் அமார பதயே நமோ நம!
ஓம் குமார பதயே நமோ நம!
ஆறுமுகத்தின் பொருளாழம் வேறல்லவா?
நினைக்கிறேன் (ஏன் அப்படி நினைக்கின்றேன்
என்று பின்னர் கூறுகிறேன்).
குமாரன் பிறந்துவிட்டான். வேண்டித்தவங்கிடந்த பிள்ளை.
சீராட்டலுக்குக்கேட்கவேண்டுமா!
அப்பனும் அம்மையும் ஆனந்தப் புன்னகையுடன் நோக்க, எதிரே குதித்தாடிச்
சுற்றிவரும் செல்லக்குழந்தை,
சட்டென்று நின்று , குட்டிப்பயல், எனக்கும் 1,2,எண்ணத்தெரியுமே என்று
காட்டுவது போல்,
தன் முகம் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து முன் நீட்டி,
"ஒண்ணூ! ஒம்போதூ! ரெண்டு! பத்து! அஞ்சு! ஏழு!" என
எண்ணிக்காட்டுகிறானாம்!
"eko nava dvau dasa pancha sapthe'thi ajiigaNan aathmukhaan prasaarya"
2.
His genesis itself shows him as KaartikEya, with the six krttikaas as
his joint mothers whence he is also referred to as "saaN maatura",
'six-mothered'. Compare Dvai-matura, tha last-as-of-date avataar, the
great Mahabharata-maker, Sri Krishna!
nb
********************************************************************
> நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை முதலில் சொல்வது அல்லவா அறிவுப் பகிர்வு!
முருகன் மீது பத்தி உள்ளோர் இருக்கும் அவையாதலால், முந்திரிக்கொட்டை
போல்,அதிகப்பிரசஙகித்தனமாக முதலில் ஏதும் சொல்ல வேண்டாமே என
நினைத்தேன். மேலும் எப்பொழுதிலிருந்து ஆறுமுகம் - சண்முகம் என்னும்
சொற்கள் தமிழ்-சமசுக்கிருதம் ஆகிய மொழிகளில் வழக்கில் இருந்து
வந்திருக்கின்றன என்பதனையும் அறியேன்.
தமிழில் ஆறு என்னும் சொல் எண்ணிக்கையத் தவிர பிற பொருள்களையும்
சுட்டும். ஆறு என்பது வழி. ஆறலைக் கள்வன் என்பது வழிபறிக் கள்வன்.
ஆகாறு போகாறு என்பன வரும் வழி போகும் வழி. இவ்வாறு செய்,
எவ்வாறு செய்ய? என்பனவும் "வழி"யை உணர்த்துவன.
பிறவிப்பிணி தீர வழியளிப்பவன் ஆறுமுகன். பிறவிப்பிணியை
அறுத்து ஆறளிப்ப்வன் முருகன. ஆறாப்புண் என்பது தீராப் புண்.
தீராதா நோயால் அல்லலுறுவோர் படுவது ஆறாட்டம். சூடு
தணிந்து சூடு தீர்வது (தண்மை பெருவது) ஆறுதல்.
துன்பம் தணிய கூறும் அன்புமொழிகள் ஆறுதலாகக் கூறுதல்.
அருளுள்ளம் கொண்ட ஒருவன் உதவிகள் வழங்குவான் என பரிசில்கள்
பெற்ற புலவன் மற்றவர்களுக்கு வழிகாட்டுவது ஆற்றுப்படை. திருமுருகாற்றுப்
படை நூலே எடுத்துக்காட்டு. ஆமாறு என்றால் உதவி என்று பொருள்.
ஆறு என்பதற்கு முறை, முறைமை
சீர்மை, ஒழுக்கம், செந்நெறி.. எனப் பல பொருள்கள் உண்டு.
வரலாறு என்பது order of events. வழக்காறும் வழுகாறும் தெரியாதவர்கள்
என்றால் எது முறை, வழக்கம், வழிவழியாய் வரும் நல்லாறு என்றும்,
எது பிழையான பாதை, கெடுதி தரும் தீய நெறி என்றும் அறியாதவர்கள்
என்று பொருள். இலக்கண வழுவில்லாமல் சீராக அமைந்ததை வழாறு
என்பர்.
முகம் என்பதும் துறைமுகம் என்பது போல உள்வாங்க (கரையேற)
அல்லது வெளிச்செல்ல, (விடுபாட்டுத்) திறவு.
முகப்பது என்பது திறந்தா வாயால் ("கொள்"கலம், ஏனம், பாத்திரம்)
கொள்வது. முகத்தல் அளவை என்று கேள்விப்பட்டிருக்கலாம்.
நாம் முகம் என்பது புலன் உணர்வுகளால் உள்வாங்கும்
"கருவி" உள்ள (புற உலகத்தை உணரும் "திறவு"கோலாகாக) விளங்கும்
தலையின் "முன்" புறம். முன்னுவது முகம் (முன்னுவது
என்பது எண்ணுவது, அளந்தறிவது, உய்த்தறிவது என்றெல்லாமும்
பொருள் கொள்ளும்). முகம் என்பது வேறு சில நுட்பப்பொருளும்
கொள்ளும்.
சுருக்கமாக ஆறுமுகம் என்பது பிறவிக் கடலாகிய பிணிதீர வழி
தரும் திறவாம் அவன் முருகன். ஆறுமுகன் வழி நல்குவோன்.
ஆகவே ஆறுமுகன் என்பதும் சண்முகன் என்பதும் ஒரே பொருள்
தராது என்பது என் கருத்து. குற்றம் குறைகள் இருப்பின்
பெரியோர்கள் பொருத்தருள்க.
அன்புடன்
செல்வா
On Oct 22, 4:33 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/10/22 செல்வா <c.r.selvaku...@gmail.com>
>
> > ஒரு கேள்வி: ஆறுமுகம் என்பதும் சண்முகம் என்பதும் ஒரு பொருள் தருமா?
>
> எனக்குத் தெரிந்தவரையில் இரண்டும் ஒரேபொருள் கொண்ட பெயர்கள்தாம்.
>
> பாம்பன் சுவாமிகள் இயற்றிய குமாரஸ்தவத்தை இடுகிறேன்:
>
> *ஓம் சண்முக பதயே நமோ நம!
> ஓம் குமார பதயே நமோ நம!*
நன்றி அரி கிருட்டினன் அவர்க்ளே.
--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சண்முகமும் ஆறுமுகமும் ஒன்றல்ல.
ஷண்முகமும் ஆறுமுகமும் ஒன்று.
ஆறு முகத்தில் ஆறுதல் என்ற பொருளோ ஆறு, வழிகாட்டி என்ற பொருளோ வர வாய்ப்பில்லை. ஆறுகின்ற முகம் ஆறும் முகம் ஆறிய முகம் என்று வேண்டுமானால் வினைத்தொகையாகக் கொண்டாலும் அது அந்த முகத்துக்கு ஏற்றப்பட்டு அது அந்த முகத்தின் செயலாகக்காட்டுப்படுவதால் சிலாக்கியமில்லை. எனவே ஆறுமுகமும் ஷண்முகமும் ஒன்றுதான் என்பது என்கருத்து
இலந்தை
நன்றி அரி கிருட்டினன் அவர்க்ளே.
ஒரு கேள்வி: ஆறுமுகம் என்பதும் சண்முகம் என்பதும் ஒரு பொருள் தருமா?
நன்றி அரி கிருட்டினன் அவர்க்ளே.
முருகன் மீது பத்தி உள்ளோர் இருக்கும் அவையாதலால், முந்திரிக்கொட்டை
> நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை முதலில் சொல்வது அல்லவா அறிவுப் பகிர்வு!
போல்,அதிகப்பிரசஙகித்தனமாக முதலில் ஏதும் சொல்ல வேண்டாமே என
நினைத்தேன். மேலும் எப்பொழுதிலிருந்து ஆறுமுகம் - சண்முகம் என்னும்
சொற்கள் தமிழ்-சமசுக்கிருதம் ஆகிய மொழிகளில் வழக்கில் இருந்து
வந்திருக்கின்றன என்பதனையும் அறியேன்.
வணக்கம். உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
குற்றம் இருப்பின் மன்னிக்க.
என் கட்டளை இடுவது.
கேள்வி அவன் அருள்.
அன்புடன்
செல்வா
On Oct 22, 11:06 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>
wrote:
> 2009/10/22 செல்வா <c.r.selvaku...@gmail.com>...
>
> read more »
> > பொருள் கொள்ளும்). முகம் என்பது வேறு சில- Hide quoted text -
>
> - Show quoted text -
ஆறுதலை அளிக்கும் ஆறுதலைக் கடவுள் பற்றியது.
ஆறு சடைக்கரந்தான் அப்பனவன் ஆங்கவரோ
ஆறுமுகம் தாம்கொண்டார் அழகுடன்காண் அம்மானை.
ஆறுமுகம் தாம்கொண்டார் அழகுடனே ஆமாயின்
ஆறுவகை எம்முகமாய் அருளிடுவார் அம்மானை?
. . ஆறுதலை ஆறுதலை அளித்திடுமே அம்மானை!
சௌந்தர்
தலையானா ஆறுதலை அளித்திடுவான் முருகன்.
அன்புடன்
செல்வா
மிக அருமை! சுவைபட உரையாடலாக எழுதியுள்ளீர்கள்.
பூரணன், முதல் பூரண எண் எல்லாம் அருமை.
"இந்தப் பாடலை இட்டுக் குணசாகரர்
“ இஃது எல்லாக் குற்றமும் தீர்ந்த செய்யுள் ”
என்று சொல்கிறார்!" என்றும், எப்படி முதன்மை பெற்ற
பாட்டு என்று நீங்கள் பஞ்ச் லைன் எல்லாம்
போட்டும் அசத்தினீர்கள் என்று வியக்கின்றேன்!
அன்புடன்
செல்வா
On Oct 23, 1:31 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> 'ஆறடி ஆறுமுகன்'
>
> http://www.thinnai.com/?module=displaystory&story_id=60905213&format=...
Hari Krishnan,
I hope you'll have kindness in your heart to forgive me.
I remember that you had said okay to address you as I did,
in one of the previous mails in min tamil group. I searched
for it and couldn't find it. In any case, I'll refrain
from addressing you by name in Tamil. About your
threat, you're welcome to address me as you see fit.
I didn't come into this world with any name and I'm
called by different names, anyways.
Sincerely
Selva
On Oct 22, 11:16 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2009/10/22 செல்வா <c.r.selvaku...@gmail.com>
>