அவலோகிதம் - புதிய AI சிறப்பம்சங்கள்

16 views
Skip to first unread message

Vinodh Rajan

unread,
Jun 22, 2026, 1:30:31 PM (13 days ago) Jun 22
to santhav...@googlegroups.com, freetamil...@googlegroups.com, vall...@googlegroups.com
தமிழ் யாப்பிலக்கணம் கற்கவும், ஆராயவும், இயற்றவும் உதவிய அவலோகிதம் இப்போது மேலும் புதிய AI சிறப்பம்சங்களுடன்!

வெண்பா AI (https://www.avalokitam.com/ai)
எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும், நொடிப் பொழுதில் உங்களுக்காக வெண்பா இயற்றித் தரும். இது சாதாரண AI போல சொற்களை மட்டும் அடுக்காது, அவலோகிதத்தின் பிரத்யேக யாப்பு சரிபார்ப்பு நிரலியின் மூலம், வெண்பாவின் விதிகளுடன் பொருந்தும் பாக்களை மட்டும் வெளியிடும். பாவினுடன் சந்திபிரிப்பும் பொழிப்புரையும் தெளிவுரையும் கூட வெளியிடும்.

image.png

உங்களிடம் தளை தட்டிய பிழையான வெண்பாக்கள் இருக்கிறதா? அதை அப்படியே கொடுத்தால், இலக்கணப்படி சரிசெய்து கொடுக்கும்.

வெண்பா திருத்தி (https://www.avalokitam.com/venpa-fixer)
உங்களுக்கு AI-ஐ உபயோகிக்க விருப்பமில்லாதபட்சத்தில் வெண்பா இயற்றியை உபயோகித்து படிப்படியாக நீங்கள் வெண்பாவை எளிதாக இயற்றலாம் அல்லது திருத்தலாம். தவறான வாய்ப்பாடுகளையும் தளை தட்டும் இடங்களையும் எவ்வாறு சரிசெய்யவேண்டும் என்பதை பரிந்துரைகளுடன் காட்டும். யாப்பு கற்க விரும்புவோருக்கு இதுவொரு சிறந்த பயிற்சிக் கருவி.

image.png

image.png


சேமி & பகிர்
நீங்கள் பாக்களை 'சேமி' பொத்தான் மூலம் நிரந்தர இணைப்பாக மாற்றலாம். Facebook, X (Twitter), WhatsApp-ல் எளிதாகப் பகிரலாம். Instagram-க்காக அழகான படமாகவும் தரவிறக்கலாம்!

image.png

image.png

Vinodh

N. Ganesan

unread,
Jun 23, 2026, 6:37:43 AM (12 days ago) Jun 23
to santhav...@googlegroups.com, freetamil...@googlegroups.com, vall...@googlegroups.com, Vinodh Rajan, housto...@googlegroups.com
அன்பார்ந்த வினோத்ராஜன்,

சிறப்பான முயற்சி. கரிமம் (Carbon) அடிப்படையாகக் கொண்ட மனித மூளை இந்நாள் வரை வெண்பா போன்ற யாப்பிலக்கணத்தில் அமைந்த மரபுச் செய்யுள்களை இயற்றிவந்தது. இப்போது, வினோத் ராஜன் முயற்சியால், மணல் (Silicon) அடிப்படையாகக் கொண்ட கணினியும் யாப்பிலக்கணத்தில் அவலோகிதம் செய்யறிவுத் துணைகொண்டு மரபுச் செய்யுள்களை இயற்றத் தொடங்கியுள்ளது!

என்னே அறிவியல் செய்யும் செய்யறிவின் விந்தை! வாழ்க! மேலும் வளப்பம் உறுக!

      அவலோகிதன் வாழ்த்தும் அருமை. 

அமிதா பனின்பெயரை அன்போடு நாளும் அமிழ்தாக நெஞ்சத் தமைத்தே – உமிழ்கின்ற துன்ப உலகொழிந்து தூய சுகாவதியாம் இன்ப உலகடைவர் இன்று.

கொடுத்த தூண்டி (Prompt):
<<< காப்பிக் கொட்டை மாட்டுக் குளம்பின் வடிவத்தை ஒத்தது. எனவே, தமிழில் குளம்பி எனப் பெயர் உண்டு.
மாட்டின் குளம்புக்கும், காப்பிக் கொட்டைக்கும் சிலேடை வெண்பாத் தருக. >>>

தடந்தாங்கி மண்ணில் தடம்வைக்கும் மாட்டின்
குடம்போலும் மென்குளம்பும் கொள்ளும் - உடன்பெயராய்க்
காப்பிக் குடமுண்ணும் கார்ப்புனல்சேர் மென்குளம்பி
கோப்பில் வடிவாற் குறித்து.

பொழிப்புரை:
உலகத் தடத்தைத் தாங்கி மண்ணிலே தன் தடம் பதிக்கின்ற மாட்டினது குடம் போன்ற மென்மையான குளம்பும், தன்னோடு ஒத்த பெயரைக் கொண்டு காப்பியாகிய குடத்தில் நிறைந்து உண்ணப்படும் கரிய நீர் சேர்ந்த மென்மையான குளம்பி எனப்படும் கொட்டையும் தத்தமது அமைப்பில் வடிவத்தால் ஒப்புமை உடையனவாகும்.

தெளிவுரை:
பாரமான உடலைத் தாங்கி நிலத்தில் நடக்கும் மாட்டினுடைய குடம் போன்ற வளைந்த குளம்பு வடிவத்தில் சிறியதாக இருக்கிறது. அதேபோன்று, காப்பிக் கோப்பையில் ஊற்றிப் பருகப்படும் கரிய நீர்மமாகிய பானத்திற்கு அடிப்படையான காப்பிக் கொட்டையும் தன் வடிவத்தால் மாட்டின் குளம்பினை ஒத்திருக்கிறது. இதனால், மாட்டின் குளம்பும் காப்பிக் கொட்டையும் வடிவ ஒற்றுமையால் ஒரே பெயரையும் வடிவத்தையும் பகிர்ந்து கொள்கின்றன.

நா. கணேசன்
Tiger Symbol in the Indus Script - Symbol of the Great Goddess of India, 4000 years ago

Indus-Vāṉi Civilization religion and astronomy:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CANwwB-J9C-7ga%3DaAtbzQRGvXBSu8%2B5c_cyR-M3d_0ZXWBt1JHA%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jun 23, 2026, 9:39:47 AM (12 days ago) Jun 23
to santhav...@googlegroups.com, vinodh.vinodh
நல்ல முயற்சி & தொண்டு. 
வாழ்க!


Here are my notes / comments from a few attempts I made using the tool:

Attempt-1:
I gave the following topic: கடலில் புயலில் சிக்கிய படகு

The tool created the following veNbA:
கார்வழங்கும் வான்கருதிச் சீறிப் புயலடிக்க
நீர்வழங்கு பேரலையில் நின்றலைந்து - கார்வண்ணப்
பேராழி யுட்சிக்கிப் பேரலைமேல் தள்ளாடிச்
சாராது வாடும் கலம்.

1) While lines 2 & 3 have mOnai, lines 1 & 4 do not have mOnai.
2) It gave the தெளிவுரை as:
இயற்கையின் சீற்றத்தால் வானம் இருண்டு புயலாக மாறித் தாக்க, கடலில் எழும் பிரம்மாண்டமான அலைகளுக்கு இடையே சிக்கிய ஒரு படகு தன் கட்டுப்பாட்டை இழந்து தவிக்கிறது. கரிய கடலின் ஆழத்திலும் கொந்தளிக்கும் அலைகளின் மீதும் மோதித் தள்ளாடும் அந்தப் படகு, பாதுகாப்பான கரையைச் சென்றடைய வழி தெரியாமல் திசைமாறி அழிவை எதிர்நோக்கி வாடி நிற்கிறது.

Attempt-2 
I copied and pasted the above தெளிவுரை as the topic for the next veNbA attempt. It created the following veNbA:

காரிருள் வானம் கதறி யடிக்கவே
பேரிருள் கொள்ளும் பெருங்கடலில் - நீர்மறுகித்
தத்தளிக்கும் தோணி தளர்ந்து சுழன்றதே
கொத்தலைகள் மோதும் குலைந்து.

1) This has mOnai in all 4 lines.
2) It gave the தெளிவுரை as:
கரிய மேகங்கள் சூழ்ந்த வானம் பேரிரைச்சலோடு புயலாக மாறித் தாக்கத் தொடங்கியதும், அடர்ந்த இருள் சூழ்ந்த பெருங்கடலின் நீர் கொந்தளித்து நிலைகுலைகிறது. இந்த இயற்கைச் சீற்றத்திற்கு இடையே சிக்கிக்கொண்ட ஒரு படகு, தன் கட்டுப்பாட்டை இழந்து வலிமையற்றுத் தத்தளித்துச் சுழல்கிறது. கடலின் ஆழத்திலிருந்து எழும் வலிமையான அலைகள் கூட்டமாகத் தொடர்ச்சியாக வந்து மோதிக் குலைப்பதால், அந்தப் படகு திசைதெரியாமல் தவிக்கிறது.

Attempt-3:
I gave the following topic: ஊழல் பற்றி ஓர் இன்னிசை வெண்பா

The tool wrote the following:
அறமிலா நெஞ்சத்தார் ஆளும் அரசு
திறமிலா வன்கண்ணர் கூடிப் பெறலே
மறநெறி நின்றொழுகும் மாண்பிலார் செல்வம்
விறலின்றி வீழ்ந்து கெடும்

1) It created an இன்னிசை வெண்பா as specified. But I think it can also be seen as a ஒருவிகற்ப நேரிசை வெண்பா.
2) Line-2 has no mOnai.
3) It gave the தெளிவுரை as:
அற உணர்வு இல்லாத தீயவர்கள் நடத்தும் அதிகாரமும், தகுதியற்ற வஞ்சகர்கள் கூட்டுச் சதியால் கொள்ளையடிக்கும் ஊழல் பணமும் தற்காலிகமாகப் பெருகினாலும் நிலைக்காது. நேர்மையற்ற தீய வழிகளில் வாழ்பவர்களின் இத்தகைய முறைகேடான செல்வங்கள் அனைத்தும் இறுதியில் தமக்கான வலிமையையும் பெருமையையும் இழந்து முற்றிலும் நாசமடைந்து போகும்.

Attempt-4:
I gave the following topic நேசமாய் வந்த நெருப்பு - என்று ஈற்றடி அமையும் வெண்பா

The tool wrote the following:
வாசமாய் நெஞ்சில் வளர்கின்ற காதலது
வீசுகின்ற தென்றலாய் வீழ்ந்ததே — நேசமாய்
வாட்டிடும் நோயாய் வளர்ந்ததே நெஞ்சினில்
நேசமாய் வந்த நெருப்பு

1) It created a veNbA with the specified last line.
2) All lines have mOnai.
3) It gave the தெளிவுரை as:
உள்ளத்தில் இதமான நறுமணத்தோடு தோன்றி வீசிய தென்றல் போன்ற காதல், காலப்போக்கில் நெஞ்சை வருத்தி வாட்டும் நோயாக உருவெடுத்தது. இன்பமாகத் தொடங்கித் துன்பத்தில் முடிந்து, நெஞ்சினில் அன்போடு புகுந்து இறுதியில் மொத்தமாக எரித்து அழிக்கும் நெருப்பாக அது மாறிவிட்டது.

General comments:
1) The (X) button to clear the "தலைப்பு அல்லது கருத்து" field does not seem to work.
2) There is no facility to easily copy the verse along with its associated contents generated by the tool - சந்திபிரித்த செய்யுள், பொழிப்புரை, & தெளிவுரை.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Jun 23, 2026, 9:55:02 AM (12 days ago) Jun 23
to santhav...@googlegroups.com
புதிய முயற்சி வரவேற்கத் தக்கது - இதில் ஐயமில்லை.

ஆனால் சுயமாகச் சிந்தித் தெழுதும் முயற்சியைக் கைவிடல் சாத்தியமல்லவா?

புதிய நுண்ணறிவுச் செயலி, வெண்பா மட்டுமே இயற்றுவதா அல்லது மற்ற பாவினங்களுமா?

முன்பிருந்த செயலி, விருத்தத்தைச் சரியாக அலகிடாமல் இருந்தது. மற்றும் புணர்ச்சி விதிகளைக் கருத்தில் கொள்ளாமல் பாட்டின் இலக்கணத்தை அறித்தது. ஆசிடையிட்ட எதுகையைக் கணக்கெடுக்காமல் பலவித விகற்ப வெண்பா போன்ற இறுதிக் கணிப்பைச் செய்தது. இவையெல்லாம் புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியுடன் கூடிய செயலி சரிதெய்ததா?


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 23, 2026, at 09:39, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages