புன்னகைக்கக் கற்பிக்கும் பூ! - என் முயற்சி

9 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jul 12, 2026, 10:30:13 PM (2 days ago) Jul 12
to Santhavasantham


புன்னகைக்கக் கற்பிக்கும் பூ!” என்னும் ஈற்றடிக்கு நான் எழுதிய வெண்பா:


நன்றாம் பொருள்மணக்க ஞான மடல்விரிக்கும்

குன்றாப் புகழ்சேர் குறள்மலராம் - என்று(ம்)நாம்

இன்னலுற்று வாட இடுக்கண் வரும்போதும்

புன்னகைக்கக் கற்பிக்கும் பூ. 


- இமயவரம்பன் 

Sai Ganesan H

unread,
Jul 12, 2026, 10:40:46 PM (2 days ago) Jul 12
to santhav...@googlegroups.com
அருமை! 

— சத்ய வேழன் H சாயி கணேசன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E251A67D-1F4A-4DEF-B4E0-379E19FC4C01%40gmail.com.

Arasi Palaniappan

unread,
Jul 13, 2026, 2:34:40 AM (yesterday) Jul 13
to சந்தவசந்தம்
ஆஹா! அருமை!

--

Parthasarathy S

unread,
Jul 13, 2026, 2:42:22 AM (yesterday) Jul 13
to சந்தவசந்தம்
அருமை
புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Parthasarathy S

unread,
Jul 13, 2026, 3:31:34 AM (yesterday) Jul 13
to சந்தவசந்தம்
அன்பெனும்பூ பண்பெனும்பூ இன்பெனும் பூதரும்
மன்புநமை நல்ல மனமிருத்தும் - என்னாளும்
தன்னம்பிக் கைத்தளரத் தான்தாங்கும் நட்பெனும்பூ
புன்னகையைக் கற்பிக்கும் பூ!

புதுஅக்ரஹாரம் எஸ்.பார்த்தசாரதி, பெங்களூர்

இமயவரம்பன்

unread,
Jul 13, 2026, 5:10:11 AM (yesterday) Jul 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை!

மன்பு - பொருள்?

தன்னம்பிக்கை தளர - ஒற்று மிகாது என்று நினைக்கிறேன்

Sai Ganesan H

unread,
Jul 13, 2026, 6:56:37 AM (yesterday) Jul 13
to santhav...@googlegroups.com
அருமை! 

சத்ய வேழன்H சாயிகணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Jul 13, 2026, 6:58:28 AM (yesterday) Jul 13
to சந்தவசந்தம்
அருமை!

மன்பு?

எந்நாளும் 

தன்னம்பிக்கை தளர 


--

Siva Siva

unread,
Jul 13, 2026, 8:09:38 AM (24 hours ago) Jul 13
to santhav...@googlegroups.com
Nice.

என்று(ம்)நாம் இன்னலுற்று வாட  /

துன்றிநாம் ... ?

V. Subramanian

Siva Siva

unread,
Jul 13, 2026, 8:12:31 AM (24 hours ago) Jul 13
to santhav...@googlegroups.com
மன்புநமை நல்ல மனமிருத்தும் - என்னாளும்   /

மன்பு = ?
என்னாளும் = ?

பாடல் கூறும் கருத்து என்ன?

வி. சுப்பிரமணியன்

Parthasarathy S

unread,
Jul 13, 2026, 8:56:23 AM (23 hours ago) Jul 13
to சந்தவசந்தம்
நன்றி திரு.இமயவரம்பன், திரு. சத்ய வேழம் , திரு அரசியார் மற்றும் திரு சிவசிவா! மன்பு என்பது மன் - நிலை என்பதின் அடியாகக் கொண்டு நிலைத்து நல்ல மனமிருத்தும் என்ற பொருளில் அமைத்தேன். என்னாளும் எந்நாளும் இரண்டையும் ஒரே பொருளைத் தரும் சொல்லாகத்தான் நினைத்திருந்தேன். அது தவறு என்றால் இரண்டிற்கும் வித்தியாசத்தைத் தயைகூர்ந்து விளக்கவும். 

அன்பும் பண்பும் இன்பத்தைத் தரும். நிலையாய் நம்மை நல்ல மனநிலையில் இருத்தும்.எந்தக்காலத்திலும் தன்னம்கிக்கைத் தளர நட்பெனும் பூ நம்மை தாங்கும். அதுவே புன்னகையைக் கற்பிற்கும் பூ என்ற பொருளில் பாடலை அமைத்திருக்கிறேன். 

தாஸன் புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Siva Siva

unread,
Jul 13, 2026, 9:00:35 AM (23 hours ago) Jul 13
to santhav...@googlegroups.com
இயன்ற மட்டும் புதிய சொற்களைப் படையாமல் எழுதுவது நன்று.

என் + நாளும் - என்னாளும்; (எனது நாளும்);
எ + நாளும் - எந்நாளும்; (எந்த நாளும்);

வி. சுப்பிரமணியன்


Parthasarathy S

unread,
Jul 13, 2026, 9:05:36 AM (23 hours ago) Jul 13
to சந்தவசந்தம்
நன்றி திரு சிவசிவா! தாஸன்

Anand Ramanujam

unread,
5:28 AM (2 hours ago) 5:28 AM
to santhav...@googlegroups.com
Thank you. “துன்றிநாம்” fits well. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages