தினமணியின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய தமிழாய்வோரே இல்லையா ?
Posted on by Sankara RamaSamy with No comments
"சங்கப்பலகை' - என்ற இப்புதிய பகுதிக்கு, தமிழ் இலக்கியத்தை முதன்மைப் பாடமாக (இளங்கலை, முதுகலை, இளம் முனைவர், முனைவர்) எடுத்துப் படிக்கும் மாணவர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் இந்த சங்கப்பலகையில் ஏறும் தகுதிபெறும்.
மாணவர் பெயர், முழு முகவரி, தொ.பே.எண், படிக்கும் கல்லூரி / பல்கலைக்கழகத்தின் பெயர், அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை இணைத்து மூன்று பக்கங்களுக்கு மிகாமல் (500 சொற்களுக்குள்) எழுதி அனுப்பவும். கட்டுரைக்கான அடிக்குறிப்புகள் (புஃட்நோட்), மற்றும் கட்டுரை தொடர்பான ஆதாரங்கள் (படங்கள், கல்வெட்டு, செப்பேடு போன்றவை) இணைக்க வேண்டும்.
மின்னஞ்சலில் அனுப்புவோர் WORD மற்றும் PDF ஃபைல் இணைத்து அனுப்ப வேண்டும்.
-ஆசிரியர்
தமிழ்மணி-தினமணி-15-09-2013-

