மஞ்சு தவழும் மலை!

5 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Jun 13, 2026, 6:54:06 PM (3 days ago) Jun 13
to சந்தவசந்தம்
பச்சை மரங்கள் பனிமுடியைச் சூடியொளிர் 
இச்சைதரும் காட்சிக்(கு) இணையுண்டோ? - இச்சகத்தில் 
விஞ்சும் அழகு விரவிக் கிடக்கின்ற 
மஞ்சு தவழும் மலை!

அரசி. பழனியப்பன் 
IMG-20260613-WA0092.jpg

Siva Siva

unread,
Jun 13, 2026, 7:02:20 PM (3 days ago) Jun 13
to santhav...@googlegroups.com
Nice.

Did you visit any specific place where you took this picture?

V. Subramanian

Arasi Palaniappan

unread,
Jun 13, 2026, 7:07:45 PM (3 days ago) Jun 13
to சந்தவசந்தம்
Thanks 

I haven't visited any specific place. It's a google picture!


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN7ms4B10%3Dj_DWXiE8s92Ac0H9cbX26LNj9gnm%3DpEweBw%40mail.gmail.com.

Girija Varadharajan

unread,
Jun 13, 2026, 10:23:44 PM (3 days ago) Jun 13
to santhav...@googlegroups.com
மஞ்சுதவழ் மாமலையின் மாண்பு  மலர்ந்தவகை

நெஞ்சுதனில் நிற்கும் நிலைபெற்று. -கொஞ்சுதமிழ்ப் 

பாடல் அளித்தீர்! பழனியப்பன் நீரென்றும் 

வாடலறக் காண்பீர்நல் வாழ்வு. 


From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of Arasi Palaniappan <arasipala...@gmail.com>
Sent: Sunday, 14 June 2026 07:07:31
To: சந்தவசந்தம் <santhav...@googlegroups.com>
Subject: Re: மஞ்சு தவழும் மலை!
 

Ram Ramakrishnan

unread,
Jun 14, 2026, 8:38:29 AM (2 days ago) Jun 14
to santhav...@googlegroups.com
அற்புதம் திரு. பழனியப்பன்.

மாமலையிற் சூழ்மஞ்சை மாண்பில் உரைத்திட்டீர்

பாமரனென் உள்ளமகிழ் பாட்டு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 13, 2026, at 22:23, Girija Varadharajan <girij...@hotmail.com> wrote:



Arasi Palaniappan

unread,
Jun 14, 2026, 8:54:29 AM (2 days ago) Jun 14
to சந்தவசந்தம்
வெல்லு கவிபாடும் வெள்ளைப்பா வேந்தர்நீர் 
நல்ல இசையறிந்த நாவல்லீர்! - சொல்தேடி(நான் )
பெற்றபெரும் பேறே பெரியீர்!உம்  பாராட்டு 
நற்றமிழே வாழ்த்தும் நலம் 🙏

பணிவன்புடன் 
அரசி. பழனியப்பன் 

Arasi Palaniappan

unread,
Jun 14, 2026, 9:00:02 AM (2 days ago) Jun 14
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணலே!

பாமரரா நீர்!அல்ல பைந்தமிழிற் பாவாளும் 
நாமறவர் நீர்என்பேன் நான்!

இமயவரம்பன்

unread,
Jun 14, 2026, 9:16:23 AM (2 days ago) Jun 14
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமையான இயற்கை வருணனை, அண்ணலே!

Arasi Palaniappan

unread,
Jun 14, 2026, 9:28:02 AM (2 days ago) Jun 14
to சந்தவசந்தம்
மிக்க நன்றி இளவலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages