நீலக் கடலின் கரையில் - மீ.விசுவநாதன்

0 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 7, 2026, 2:04:18 PM (3 days ago) Mar 7
to Santhavasantham, M. Viswanathan
"நீலக் கடலின் கரையில்"
        (மீ. விசுவநாதன்)

கடலின் கரையில் நிற்கிறேன்
கடவுள் படைப்பில் கரைகிறேன்
இடமும் வலமும் பார்க்கிறேன்
எங்கும் எழிலில் தோய்கிறேன்
கிடக்கும் ஜீவ கோடிகள்
கீழே நீருக் கடியிலே
தொடக்கம் முடிவி லாதவன்
தூய உருவாய் உணர்கிறேன்.

நீலம் பச்சை கருமையாய்
நீண்டு கிடகும் சமுத்திரம்
ஆல கால விடமுடன்
அமுதம் தந்த பாத்திரம்
ஓலம் செய்யும் தனக்கென
ஓடம் கப்பல் அணிகலன்
கால கால மாகவே
கடல்தான் மீன வநண்பனே.

உப்பு நீரை மாற்றியே
சுத்த மழையாய்ப் பொழிகிறான்
அப்ப டியேதான் நதிகளாய்
அனைவர் தாகம் போக்கியே
உப்புக் கடலில் கலக்கிறான்
தோன்றும் உயிர்கள் முடிவிலே
இப்ப டித்தான் என்னிடம்
இணையு மென்றான் படைத்தவன்.
                   (08.3.2026.) 

Sai Ganesan H

unread,
Mar 7, 2026, 7:06:48 PM (3 days ago) Mar 7
to santhav...@googlegroups.com
அருமை! 

— சத்யவேழன் H சாயி கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vYd8T7iEYdtZAEwmd8yk%3D2FxsHjFw6B2VCsX_NQkwH6w%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Mar 7, 2026, 7:09:11 PM (3 days ago) Mar 7
to santhav...@googlegroups.com
மிக அருமையான கருத்து, திரு. மீ. வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 7, 2026, at 19:06, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:



M. Viswanathan

unread,
Mar 7, 2026, 9:49:28 PM (3 days ago) Mar 7
to Santhavasantham
அன்புக் கவிஞர்களின் கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்
08.03.2026 08.19am

Reply all
Reply to author
Forward
0 new messages