திருஞான
சம்பந்தர் குருபூஜை -
வைகாசி
மூலம் -
2009-06-08 (USA)
2009-06-07
திருஞான
சம்பந்தர் துதி
---------------------------------
1)
-- (எழுசீர்ச்
சந்த விருத்தம் -
"தனதான
தான தனதான தான தனதான தான தனனா")
--
அழுகைக்கி
ரங்கி அகிலங்கள் ஈன்ற அனைவந்து
தந்த அமுதால்
முழுஞானம்
எய்தி வழுவில்ல தான மொழிகொண்டு
பாடி அமணர்
கழுவேற
வென்று கடல்நஞ்சை உண்ட கருநீல
கண்டன் அடியே
தொழுகாழி
மன்னர் மலர்ப்பாதம் உற்ற
துணையாகும் இல்லை துயரே.
பதம்
பிரித்து:
அழுகைக்(கு)
இரங்கி,
அகிலங்கள்
ஈன்ற அனை வந்து தந்த அமுதால்
முழு
ஞானம் எய்தி,
வழு
இல்லதான மொழிகொண்டு பாடி
அமணர்
கழு
ஏற வென்று,
கடல்
நஞ்சை உண்ட கருநீல கண்டன்
அடியே
தொழு
காழி மன்னர் மலர்ப்பாதம்
உற்ற துணை ஆகும்;
இல்லை
துயரே.
2)
-- (வஞ்சி
விருத்தம் -
மா மா
காய்)
--
சைவம்
தழைக்க என்றென்றும்
தெய்வத்
தமிழும் சிறந்திருக்க
வையத்(து)
உதித்த
சம்பந்தர்
செய்ய
மலர்த்தாள் பணிவோமே.
செய்ய
- சிவந்த;
3) -- (நாலடித்
தரவு கொச்சகக் கலிப்பா)
--
மூவரண்கள்
சுட்டெரித்த முக்கண்ணன்
தலம்பலபோய்ப்
பாவவினை
சுட்டெரிக்கும் பாமாலை
பலபாடி
யாவருமே
உய்யவழி அமைத்தளித்த
சம்பந்தர்
சேவடிகள்
என்றுமென்றன் சிந்தையினில்
உள்ளனவே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-05-29
திருஞான
சம்பந்தர் குருபூஜை - (வைகாசி
மூலம் - 29/30 May 2010)
------------------
('எழுசீர்
விருத்தம் - 'விளம்
மா விளம் மா விளம் விளம் மா'
என்ற வாய்பாடு)
1)
தேனமர் கொன்றை
திகழ்முடி மீது
.. திங்களும்
கங்கையும் சூடும்
மானமர்
கரத்தன் மைந்நிறக் கண்டன்
..
மான்விழி மங்கையோர்
பங்கன்
வானவன்
கழலை வாழ்த்திய தமிழால்
..
மறைவழி நிலைபெறச்
செய்த
ஞானசம்
பந்தர் நாண்மலர்த் தாளை
..
நான்பணிந் தேத்துகின்
றேனே.
2)
வந்திருள்
தன்னை ஒளியெனச் சொன்ன
..
மதியிலார் வாதினை
வென்று,
சந்திரன்
தன்னைச் சடைமிசை அணியும்
..
சங்கரன், நான்மறை
போற்றும்
செந்தழல்
உருவன், சிவபெரு
மான்சீர்
.. செப்பிய
ஆளுடைப் பிள்ளை
பந்தனின்
கமலப் பாதமி ரண்டைப்
..
பரவிடப் பரகதி
திடமே.
பந்தன்
- ஞானசம்பந்தன்
என்பதன் ஒருபுடைப் பெயர்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
திருஞான சம்பந்தர் குருபூஜை - 2011 (வைகாசி மூலம்) - (USA 19th May / India 20th May)
2011-05-02
திருஞான சம்பந்தர் குருபூஜை - 2011 (வைகாசி மூலம்
)
- (USA 19th May / India 20th
May)
--------------------------------------------
1)
மண்ணுலகு
வாழ மலர்வாய் திறந்தழுது
வெண்ணிலவு
சூடியும் வெற்பரையன் -
பெண்ணும்
புகட்டியமெய்ஞ்
ஞானமாம் போனகம் உண்ட
புகலியர்கோன்
பொற்றாள் புகல்.
*
அம்மையப்பரால்
ஞானப்பால் உண்பிக்கப்பெற்றதைச்
சுட்டியது.
வெற்பு
அரையன் பெண் -
இமவான் மகள் -
பார்வதி;
போனகம்
- உணவு;
(ஞானமாம் போனகம்
- ஞானப்பால்);
புகலியர்கோன்
- திருஞான
சம்பந்தர்;
(புகலி -
சீகாழி);
புகல்
- சரண்;
துணை;
புகல்தல்
- சொல்லுதல்;
திருஞான சம்பந்தர் குருபூஜை - 2011 (வைகாசி மூலம்) - (USA 19th May / India 20th May)
பெரிய புராணத்திலிருந்து ஒரு பாடல்:
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
2)
பாங்குறக்
கையிரண்டால் ஒத்தறுத்துப்
பாடும்போ(து)
ஆங்கையன்
இன்னருளால் அஞ்செழுத்துத்
-
தாங்கித்
தகதகக்கும்
தாளமொன்று தம்கையில்
பெற்ற
புகலியர்கோன்
பொற்றாள் புகல்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2011-05-02
திருஞான சம்பந்தர் குருபூஜை - 2011 (வைகாசி மூலம்) - (USA 19th May / India 20th May)
--------------------------------------------
1)
அன்புடன்,
தங்கமணி.
On May 8, 11:11 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011-05-02
> திருஞான சம்பந்தர் குருபூஜை - 2011 (வைகாசி மூலம்) - (USA 19th May / India
> 20th May)
> --------------------------------------------
> 1)
> மண்ணுலகு வாழ மலர்வாய் திறந்தழுது
> வெண்ணிலவு சூடியும் வெற்பரையன் - பெண்ணும்
> புகட்டியமெய்ஞ் ஞானமாம் போனகம் உண்ட
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> * அம்மையப்பரால் ஞானப்பால் உண்பிக்கப்பெற்றதைச் சுட்டியது.
>
> வெற்பு அரையன் பெண் - இமவான் மகள் - பார்வதி;
> போனகம் - உணவு; (ஞானமாம் போனகம் - ஞானப்பால்);
> புகலியர்கோன் - திருஞான சம்பந்தர்; (புகலி - சீகாழி);
> புகல் - சரண்; துணை;
> புகல்தல் - சொல்லுதல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/5/7 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > திருஞான சம்பந்தர் குருபூஜை - 2011 (வைகாசி மூலம்) - (USA 19th May / India
> > 20th May)
>
> > பெரிய புராணத்திலிருந்து ஒரு பாடல்:
>
> > வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
> > பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
> > சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
> > பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
>
> --http://nayanmars.netne.net/
3)
இறையும்
எமபயம் இல்லை வினையும்
பறையும்
இரவும் பகலும் -
இறைவன்
புகழ்நாமம்
போற்றும் அகத்தினர்க்
கென்ற
புகலியர்கோன்
பொற்றாள் புகல்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
புகழினையே தேவார என்று
ஒற்றுநீக்கி இட்டேன்.
அன்புடன்,
தங்கமணி.
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -
அன்புடன்,
தங்கமணி.
On May 10, 5:43 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> பாங்குறக் கையிரண்டால் ஒத்தறுத்துப் பாடும்போ(து)
> ஆங்கையன் இன்னருளால் அஞ்செழுத்துத் - தாங்கித்
> தகதகக்கும் தாளமொன்று தம்கையில் பெற்ற
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/5/8 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2011-05-02
> > திருஞான சம்பந்தர் குருபூஜை - 2011 (வைகாசி மூலம்
> > ) - (USA 19th May / India 20th May)
> > --------------------------------------------
> > 1)
>
> --http://nayanmars.netne.net/
பொங்கலை வானதிப் பூண்ட சடையனைத்
தங்கரங் கொட்டியே சாற்றகையில்--எங்கும்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அன்புடன்,
தங்கமணி.
On May 11, 12:58 pm, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:
> அன்புடையீர்!
>
> வணக்கம். உங்கள் இருவரின் பாடல்களையும் நிதானமாகப் படித்து இன்புற்று
> வருகிறேன். அடியார்களின் புகழினைப் பாடிப் பரவுகின்ற பெரும் பேறு உங்கள்
> இருவருக்கும் கிட்டியுள்ளது; அதைப் படித்து மகிழும் பாக்கியம் என்
> போன்றோர்க்குக் கிடைத்துள்ளது. . உங்களின் கவித்துவம் மெய்சிலிர்க்க
> வைக்கின்றது: வாழ்க உங்கள் திருப்பணி!
>
> எங்கும் புகழ் ஒலிக்கப் பொற்றாளம் பெற்றது என்பதையும், அஞ்செழுத்துத்
> தாங்கித் தகதகக்கும் தாளம் என்பதையும் படிக்கும் போதே கண்கள் குளமாகி
> விடுகின்றன.
>
> நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!
>
> நன்றி.
>
> சிவ.சூரியநாராயணன்.
>
> 2011/5/11 thangamani <tvthangam...@gmail.com>
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -
4)
மழைமிடறா
மங்கையை வாடமயல் செய்வ(து)
அழகா
அருளென்று கொல்லி -
மழவன்
மகளின்நோய்
தீர்தமிழ் மாலை உரைத்த
புகலியர்கோன்
பொற்றாள் புகல்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On May 11, 5:04 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> இறையும் எமபயம் இல்லை வினையும்
> பறையும் இரவும் பகலும் - இறைவன்
> புகழ்நாமம் போற்றும் அகத்தினர்க் கென்ற
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/5/9 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/
5)
வாள்விழிமா
தோர்பால் மகிழ்எந்தை
மாதேவன்
தாள்பணியும்
அன்பர்க்குக் கோள்களொடு -
நாள்கள்
மிகநல்ல
என்றுதமிழ் வேதம் மொழிந்த
புகலியர்கோன்
பொற்றாள் புகல்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
"துணிவளர் திங்கள்"எனத்தொடங்கும் பதிகம்.
அன்புடன்,
தங்கமணி.
On May 12, 4:44 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> மழைமிடறா மங்கையை வாடமயல் செய்வ(து)
> அழகா அருளென்று கொல்லி - மழவன்
> மகளின்நோய் தீர்தமிழ் மாலை உரைத்த
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/5/10 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/
அன்புடன்,
தங்கமணி.
On May 13, 3:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> வாள்விழிமா தோர்பால் மகிழ்எந்தை மாதேவன்
> தாள்பணியும் அன்பர்க்குக் கோள்களொடு - நாள்கள்
> மிகநல்ல என்றுதமிழ் வேதம் மொழிந்த
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/5/11 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/
அன்பர்க்கே*ச்* சாலுமென்றார்
ஒற்றுநீக்கி அன்பர்க்கே சாலுமென்றார் என்று இட்டேன்.
>
> அன்புடன்,
> தங்கமணி.
>
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
6)
தீயை
அடியார் திருமடத்தில்
இட்டஅத்
தீயரொடு
தென்னாட்டைப் பீடித்த -
மாயை
அகலப்
பதிகம் அருளிப் புரந்த
புகலியர்கோன்
பொற்றாள் புகல்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அன்புடன்,
தங்கமணி.
On May 14, 3:30 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> தீயை அடியார் திருமடத்தில் இட்டஅத்
> தீயரொடு தென்னாட்டைப் பீடித்த - மாயை
> அகலப் பதிகம் அருளிப் புரந்த
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/5/12 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/
7)
பூவையுயிர்
பெற்றுப் பொடியினின்று
மீண்டெழப்
பாவையொரு
பங்கனைப் பண்டெயில்கள் -
வேவ
நகைசெய்த
நம்பனை நற்றமிழால் போற்று
புகலியர்கோன்
பொற்றாள் புகல்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
ஒரு சந்தேகம்:மண்குடம் என்று இடலாமா?
மட்குடம் என்றுதான் இடவேண்டுமா?
அன்புடன்,
தங்கமணி.
On May 14, 11:51 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> பூவையுயிர் பெற்றுப் பொடியினின்று மீண்டெழப்
> பாவையொரு பங்கனைப் பண்டெயில்கள் - வேவ
> நகைசெய்த நம்பனை நற்றமிழால் போற்று
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/5/13 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/
1. நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர, னகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் முறையே டகரமாகவும், றகரமாகவும் திரியும்.
சான்று:
மண் + குடம் = மட்குடம்
சிறுகண் + களிறு = சிறுகட்களிறு
பொன் + காசு = பொற்காசு
பொன் + குடம் = பொற்குடம்
(மட்குடம் – மண்ணால் ஆகிய குடம். மூன்றாம் வேற்றுமைத் தொகை; சிறுகட்களிறு – சிறிய கண்ணை உடைய களிறு. இரண்டாம் வேற்றுமைத் தொகை; பொற்காசு – பொன்னால் ஆகிய காசு; பொற்குடம் – பொன்னால் ஆகிய குடம். இவை மூன்றாம் வேற்றுமைத் தொகை.)
இச்சான்றுகளில் வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவும் திரிந்தன.
2. வேற்றுமைப் புணர்ச்சியில் ணகர, னகரங்கள் மெல்லினமும், இடையினமும் வந்தால் இயல்பாகும்.
சான்று:
மண் + மேடை = மண்மேடை
பொன் + முடி = பொன்முடி
கண் + வலி = கண்வலி
பொன் + வளையல் = பொன்வளையல்
(மண்மேடை – மண்ணால் ஆகிய மேடை; பொன்முடி – பொன்னால் ஆகிய முடி; முடி – கிரீடம்; இவை இரண்டும் மூன்றாம் வேற்றுமைத் தொகை. கண்வலி – கண்ணில் வலி. ஏழாம் வேற்றுமைத் தொகை; பொன்வளையல் – பொன்னால் ஆகிய வளையல். மூன்றாம் வேற்றுமைத் தொகை.)
இச்சான்றுகளில் வேற்றுமைப் புணர்ச்சியில் ணகர னகரங்கள் மெல்லினமும், இடையினமும் வர இயல்பாயின.
8)
தகவின்றி
மாமலையைத் தானசைத்த
பத்து
முகத்தன்தன்
தோள்வலியை முன்பு -
நகத்தால்
துகள்செய்த
தூமதி சூடி மகனார்
புகலியர்கோன்
பொற்றாள் புகல்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
சிறிது மாற்றி இட்டேன்.
அன்புடன்,
தங்கமணி.
On May 14, 11:51 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> பூவையுயிர் பெற்றுப் பொடியினின்று மீண்டெழப்
> பாவையொரு பங்கனைப் பண்டெயில்கள் - வேவ
> நகைசெய்த நம்பனை நற்றமிழால் போற்று
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/5/13 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/
அன்புடன்,
தங்கமணி.
On May 16, 2:24 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> தகவின்றி மாமலையைத் தானசைத்த பத்து
> முகத்தன்தன் தோள்வலியை முன்பு - நகத்தால்
> துகள்செய்த தூமதி சூடி மகனார்
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/5/14 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
>
> --http://nayanmars.netne.net/
இத்தொடரின்
கடைசி 3 பாடல்களையும்
இன்றே இடுகிறேன்.
9)
அரியும்
அயனும் அடிமுடி காணா
எரியின்
உருவன் கரியின் -
உரியன்
பகவன்
கழலைப் பரவு மகனார்
புகலியர்கோன்
பொற்றாள் புகல்
.
10)
பரசமயப்
புல்நீக்கிப் பைந்தமிழ்நீர்
பாய்ச்சித்
தரையினில்
சைவம் தழைக்க -
அரவம்
திகழ்முடியன்
சீர்பாடித் தேசமெங்கும்
சென்ற
புகலியர்கோன்
பொற்றாள் புகல்
.
11)
தேசன்
திருக்கயிலை வாசன் மலைமங்கை
நேசன்
வினைநாசன் நெற்றிக்கண் -
ஈசன்
புகழைத்
தமிழ்பாடிப் போற்றிப்
பணிந்த
புகலியர்கோன்
பொற்றாள் புகல்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
சைவ நெறிகள் தழைத்தோங்கச் செய்தவர்
மெய்யாம் வழியில் வென்றவர்-- தெய்வ
மகவாய்த் தலங்கள் வழிபடு தொண்டர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்.
அன்புடன்,
தங்கமணி.
On May 17, 6:39 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> இத்தொடரின் கடைசி 3 பாடல்களையும் இன்றே இடுகிறேன்.
>
> 9)
> அரியும் அயனும் அடிமுடி காணா
> எரியின் உருவன் கரியின் - உரியன்
> பகவன் கழலைப் பரவு மகனார்
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> 10)
> பரசமயப் புல்நீக்கிப் பைந்தமிழ்நீர் பாய்ச்சித்
> தரையினில் சைவம் தழைக்க - அரவம்
> திகழ்முடியன் சீர்பாடித் தேசமெங்கும் சென்ற
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> 11)
> தேசன் திருக்கயிலை வாசன் மலைமங்கை
> நேசன் வினைநாசன் நெற்றிக்கண் - ஈசன்
> புகழைத் தமிழ்பாடிப் போற்றிப் பணிந்த
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/5/15 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தவறுதலாக எழுதியதற்கு வருந்துகிறேன்.
சரிசெய்துள்ளேன்.
மிக்கநன்றி!சிவா!
சைவ நெறிகள் என்று,
திருநீறு திகழ் மேனியுடன்,அஞ்செழுத்தை சிந்தித்தல்,
நித்திய சிவபூசனை செய்தல் போன்றவற்றை
சைவ நெறிகள் என்று எழுதினேன்.
விளக்கமாகத் தெரியாது.
அன்புடன்.
தங்கமணி.
On May 17, 4:33 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> மறைக்காட்டில் கதவம் திறக்கப் பாடியவர் அப்பர். பின்னர்ப் பாடி அடைப்பித்தவர்
> சம்பந்தர்.
>
> நெறிகள் என்று பன்மையில் சொன்னதன் காரணம் புரியவில்லை.
>
> 2011/5/17 thangamani <tvthangam...@gmail.com>
>
>
>
> > மணிக்கதவம் தாள்நீங்க மட்டிலா அன்பில்
> > அணிசரமாய்ப் பாடல் அருளிப் --பணிவன்
> > புகையெரிகான் தீயாடும் புண்ணியன் மைந்தன்
> > புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> > சைவ நெறிகள் தழைத்தோங்கச் செய்தவர்
> > மெய்யாம் வழியில் வென்றவர்-- தெய்வ
> > மகவாய்த் தலங்கள் வழிபடு தொண்டர்
> > புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.- Hide quoted text -
எல்லாப்
பாடல்களும் குறிப்புகளோடு
தொகுப்பாக:
2011-05-02
(USA 19th
May / India 20th May
2011)
--------------------------------------------
1)
*
அம்மையப்பரால்
ஞானப்பால் உண்பிக்கப்பெற்றதைச்
சுட்டியது.
*
திருக்கோலக்காவில்
பொற்றாளம் பெற்றதைச்
சுட்டியது.
ஒத்தறுத்தல்
- தாளவரையறை
செய்தல் ((Mus.) To
measure time);
தாளம்
- கைத்தாளக்கருவி
(A small cymbal for keeping time
in music);
*
பஞ்சாக்கரப்
பதிகத்தைச் சுட்டியது.
இறை
- சிறிது;
பறைதல்
- அழிதல்;
அகத்தினர்
- மனத்தினர்;
(சம்பந்தர்
தேவாரம் - 3.22.1 -
துஞ்சலும்
துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம்
நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம்
அற்றடி வாழ்த்த வந்தகூற்று
அஞ்சவு
தைத்தன அஞ்செ ழுத்துமே.
3.22.4
நல்லவர்
தீயர் எனாது நச்சினர்
செல்லல்
கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல
நமன்றமர் கொண்டு போமிடத்து
அல்லல்
கெடுப்பன அஞ்செ ழுத்துமே.)
*
திருப்பாச்சிலாச்சிராமத்தில்
கொல்லி மழவனின் மகளின் முயலகன்
நோயைத் தீர்த்ததைச்
சுட்டியது.
மழைமிடறா
- நீலகண்டனே;
(மழை -
கருமை;
மேகம்;
மிடறு -
கழுத்து;);
மயல்
- மயக்கம்;
(சம்பந்தர்
தேவாரம் -
1.44.1
துணிவளர்திங்கள்
துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை
சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர்
பாரிடஞ்சூழ ஆரிடமும்
பலிதேர்வர்
அணிவளர்கோல
மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா
மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ
மங்கையைவாட மயல்செய்வதோ
இவர்மாண்பே.)
*
திருமறைக்காட்டில்
கோளறுபதிகம் பாடியருளியதைச்
சுட்டியது.
(சம்பந்தர்
தேவாரம் -
2.85.1
வேயுறு
தோளிபங்கன் விடமுண்டகண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு
திங்கள்கங்கை முடிமேல்
அணிந்தென் உளமே புகுந்த
அதனால்
ஞாயிறு
திங்கள்செவ்வாய் புதன்வியாழம்
வெள்ளி சனிபாம் பிரண்டு
முடனே
ஆசறு
நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா
ரவர்க்கு மிகவே.)
*
மதுரையில்
சமணர்களை வாதில் வென்றதைச்
சுட்டியது.
மாயை
- வஞ்சகம்;
பொய்த்தோற்றம்
(Illusion, unreality);
புரந்த
- காத்த;
(புரத்தல்
-காத்தல்);
(சம்பந்தர்
தேவாரம் -
3.51.1
செய்ய னேதிரு
வாலவாய் மேவிய
ஐய
னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய
ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பைய
வேசென்று பாண்டியற்
காகவே.)
(சம்பந்தர்
தேவாரம் -
3.54.1
வாழ்க அந்தணர்
வானவர் ஆனினம்
வீழ்க
தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க
தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க
வையக மும்துயர் தீர்கவே.)
*
மயிலாப்பூரில்
குடச்சாம்பலிலிருந்து
பூம்பாவையை எழச்செய்ததைச்
சுட்டியது.
*
கயிலையைப்
பெயர்க்க முயன்ற இராவணனைச்
சிவபெருமான் தன் கால்விரல்
நுனியால் நசுக்கியதைச்
சுட்டியது.
தகவு
- தகுதி;
பொருத்தம்;
அறிவு;
பத்துமுகத்தன்
- பத்துத்
தலைகள் உடைய இராவணன்;
தோள்வலி
- புஜபலம்;
தூமதி
சூடி மகனார் -
தூய வெண்திங்களைச்
சூடும் சிவபெருமானின் திருமகனார்
சம்பந்தர்;
9)
அரியும்
அயனும் அடிமுடி காணா
எரியின்
உருவன் கரியின் -
உரியன்
பகவன்
கழலைப் பரவு மகனார்
புகலியர்கோன்
பொற்றாள் புகல்.
எரி
- சோதி;
கரி
- யானை;
உரி
- தோல்;
பரவுதல்
- புகழ்தல்;
துதித்தல்;
பாடுதல்;
10)
பரசமயப்
புல்நீக்கிப் பைந்தமிழ்நீர்
பாய்ச்சித்
தரையினில்
சைவம் தழைக்க -
அரவம்
திகழ்முடியன்
சீர்பாடித் தேசமெங்கும்
சென்ற
புகலியர்கோன்
பொற்றாள் புகல்.
அரவம்
- பாம்பு;
ஒலி;
சீர்
- புகழ்;
11)
தேசன்
திருக்கயிலை வாசன் மலைமங்கை
நேசன்
வினைநாசன் நெற்றிக்கண் -
ஈசன்
புகழைத்
தமிழ்பாடிப் போற்றிப்
பணிந்த
புகலியர்கோன்
பொற்றாள் புகல்.
தேசன்
- ஒளியுருவினன்;
(தேசு -
ஒளி);
வினைநாசன்
- நம்
வினைகளை அழிப்பவன்;
(சம்பந்தர்
தேவாரம் - 3.8.11
-
வெந்தவெண்
ணீறணி வீரட்டா னத்துறை
வேந்தனை
அந்தணர்
தங்கட வூருளா னைஅணி காழியான்
சந்தமெல்
லாம்அடிச் சாத்தவல் லமறை
ஞானசம்
பந்தன
செந்தமிழ் பாடியா டக்கெடும்
பாவமே.)
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
இத்தொடரின் கடைசி 3 பாடல்களையும் இன்றே இடுகிறேன்.
எல்லாப் பாடல்களும் குறிப்புகளோடு தொகுப்பாக:
2011-05-02திருஞான சம்பந்தர் குருபூஜை - 2011 (வைகாசி மூலம்) -(USA 19th May / India 20th May 2011)
--------------------------------------------
பாதிமதி சூடி பதத்தென்றும் வாடாப்பைம்
போதிடுவான் பூவிற் புகுந்துறைந்த - கோதில்
புகலியர்கோன் பொற்றாள் புகழ்சொன்னப் பாட்டாற்
புகலுவரா ரெம்மணியைப் போல்.
********************
> 2011/5/16 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > இத்தொடரின் கடைசி 3 பாடல்களையும் இன்றே இடுகிறேன்.
>
> --http://nayanmars.netne.net/
********************
(நேரிசை வெண்பா)
பாதிமதி சூடி பதத்தென்றும் வாடாப்பைம்
போதிடுவான் பூவிற் புகுந்துறைந்த - கோதில்
புகலியர்கோன் பொற்றாள் புகழ்சொன்னப் பாட்டாற்
புகலுவரா ரெம்மணியைப் போல்.
********************
பாடலை சரிசெய்தமைக்கு மிக்கநன்றி!சிவசிவா!
அன்புடன்,
தங்கமணி.
> > - Show quoted text -- Hide quoted text -
புகழினை ஏத்து ஏ ஆர
ஏ ஆரம்=சிவபெருமானுக்கு ஆரம் (ஏ=சிவன்; 'ஏமேவு கோபால கிருட்டினபா
ரதியென்னும் இசைவல் லோனே' - பிள்ளையவர்கள் வாக்கு)
********************
On May 11, 1:29 am, thangamani <tvthangam...@gmail.com> wrote:
> அம்மே எனவழுதார் அன்றுண்ட ஞானப்பால்
> பெம்மான் உமைபங்கர் பேரருளால்-- எம்மான்
> புகழினையே தேவாரப் புத்தமுதாய்த் தந்த
> புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> புகழினையே தேவார என்று
> ஒற்றுநீக்கி இட்டேன்.
>
> அன்புடன்,
> தங்கமணி.
>
> On May 10, 11:59 pm, thangamani <tvthangam...@gmail.com> wrote:
>
> > அம்மே எனவழுதார் அன்றுண்ட ஞானப்பால்
> > பெம்மான் உமைபங்கர் பேரருளால்-- எம்மான்
> > புகழினையேத் தேவாரப் புத்தமுதாய்த் தந்த
> > புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> > On May 8, 11:11 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
>
> > > 2011-05-02
> > > திருஞான சம்பந்தர் குருபூஜை - 2011 (வைகாசி மூலம்) - (USA 19th May / India
> > > 20th May)
> > > --------------------------------------------
> > > 1)
> > > மண்ணுலகு வாழ மலர்வாய் திறந்தழுது
> > > வெண்ணிலவு சூடியும் வெற்பரையன் - பெண்ணும்
> > > புகட்டியமெய்ஞ் ஞானமாம் போனகம் உண்ட
> > > புகலியர்கோன் பொற்றாள் புகல்.
>
> > > * அம்மையப்பரால் ஞானப்பால் உண்பிக்கப்பெற்றதைச் சுட்டியது.
>
> > > வெற்பு அரையன் பெண் - இமவான் மகள் - பார்வதி;
> > > போனகம் - உணவு; (ஞானமாம் போனகம் - ஞானப்பால்);
> > > புகலியர்கோன் - திருஞான சம்பந்தர்; (புகலி - சீகாழி);
> > > புகல் - சரண்; துணை;
> > > புகல்தல் - சொல்லுதல்;
>
> > > அன்புடன்,
> > > வி. சுப்பிரமணியன்
>
> > > 2011/5/7 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > > > திருஞான சம்பந்தர் குருபூஜை - 2011 (வைகாசி மூலம்) - (USA 19th May / India
> > > > 20th May)
>
> > > > பெரிய புராணத்திலிருந்து ஒரு பாடல்:
>
> > > > வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
> > > > பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
> > > > சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
> > > > பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
>
> > > --http://nayanmars.netne.net/
> > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
அன்புடன்,
தங்கமணி.
> > > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hidequoted text -
>
> > > - Show quoted text -- Hide quoted text -
அம்மை அமுதருந்தி அப்பா லமுதனபா
அம்மைம் மிடறோற் களித்துவந்த - செம்மைப்
புகலியர்கோன் பூந்தாட் புகழ்பத்தி பூண்டு
புகலிவர்பேர் போற்கவியும் பொன்.
********************
திருஞான
சம்பந்தர் குருபூஜை -
2012 (வைகாசி
மூலம்)
-------------------------------------
(நாலடித்தரவு
கொச்சகக் கலிப்பா)
குறைமலிந்த
மொழிகளையே கூறியுழல் மதியீனர்
மறைவழியைப்
பழித்தலைவார் வஞ்சனையை
முறியடித்துப்
பிறைமதியம்
சூடியுமை பிரியாத சிவபெருமான்
கறைமிடறன்
புகழ்பாடு காழியர்கோன்
கழல்போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
எல்லாப் பாடல்களும் குறிப்புகளோடு தொகுப்பாக:
2011-05-02திருஞான சம்பந்தர் குருபூஜை - 2011 (வைகாசி மூலம்) -(USA 19th May / India 20th May 2011)
--------------------------------------------
திருஞான சம்பந்தர் குருபூஜை - 2012 (வைகாசி மூலம்)
-------------------------------------
(நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா)
குறைமலிந்த மொழிகளையே கூறியுழல் மதியீனர்
மறைவழியைப் பழித்தலைவார் வஞ்சனையை முறியடித்துப்
பிறைமதியம் சூடியுமை பிரியாத சிவபெருமான்
கறைமிடறன் புகழ்பாடு காழியர்கோன் கழல்போற்றி.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2)
--- (அறுசீர்
விருத்தம் --
'5 மா +
காய்'
என்ற
வாய்பாடு)
--
கையைப்
பிசைந்து கலங்கி அழுது காழி
நகர்தன்னில்
ஐயன்
ஆகம் பாகம் உடையாள் அளித்த
பாலுண்டு
கையில்
தாளம் பெற்று நாளும் காதல்
மிகப்பாடி
வையம்
தன்னிற் சைவம் தழைக்க வந்தார்
கழல்போற்றி.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
திருச்சிற்றம்பலம்
உன்பால் ஈர்த்துன் புகழ்பாட
.. உமைப்பால் ஏந்தாய் பாலகருக்(கு)
இன்பால் அனைய பதிகம்அப்பால்
.. இசைத்தல் கேட்ட களிப்பால்நீ
தன்பால் வருமச் சிறுவருக்குத்
.. தந்தாய் சிவிகை; அடியவர்மேல்
அன்பால் புரிந்த நின்செயலால்
.. ஆலாய்த் தழைத்தது சைவ(ம்)ஐயே!.
அனந்த் 5-6-2012
திருச்சிற்றம்பலம்
உன்பால் ஈர்த்துன் புகழ்பாட
.. உமைப்பால் ஏந்தாய் பாலகருக்(கு) /உமைப்பால் ஈந்தாய் பாலகருக்(கு)
அன்புடன்,
தங்கமணி.
On Jun 5, 3:12 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2012/6/4 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > திருஞான சம்பந்தர் குருபூஜை - 2012 (வைகாசி மூலம்)
> > -------------------------------------
> > (நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா)
>
> > குறைமலிந்த மொழிகளையே கூறியுழல் மதியீனர்
> > மறைவழியைப் பழித்தலைவார் வஞ்சனையை முறியடித்துப்
> > பிறைமதியம் சூடியுமை பிரியாத சிவபெருமான்
> > கறைமிடறன் புகழ்பாடு காழியர்கோன் கழல்போற்றி.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>
> 2) --- (அறுசீர் விருத்தம் -- '5 மா + காய்' என்ற வாய்பாடு) --
> கையைப் பிசைந்து கலங்கி அழுது காழி நகர்தன்னில்
> ஐயன் ஆகம் பாகம் உடையாள் அளித்த பாலுண்டு
> கையில் தாளம் பெற்று நாளும் காதல் மிகப்பாடி
> வையம் தன்னிற் சைவம் தழைக்க வந்தார் கழல்போற்றி.
>
>
>
> --http://nayanmars.netne.net/
திரு.அனந்த் அவர்களுக்கு,
உங்கள் சுட்டலுக்கும்,கருத்துக்கும் மிக்கநன்றி!
மாற்றி இட்டுள்ளேன்.பார்க்கவும்.
இறைவனவன் குளிர்பூந்தாள் எண்ணிநெகிழ் மனங்கொண்ட
மறையவன்சம் பந்தனுக்கு மாற்றலர்செய் இடர்நீங்க
நிறையன்பில் பதிகங்கள் நெஞ்சுருக இசைத்தமிழில்
கறைமிடறன் புகழ்பாடு காழியர்கோன் கழல்போற்றி!
அன்புடன்,
தங்கமணி.
On Jun 6, 8:02 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> மறைஞானப் பிள்ளையார் என்பது காழியர் கோனைக் குறிப்பதால், மறைஞானப்
> பிள்ளையாரின் இன்னல் தீர்த்த கறைமிடற்றனைப் பாடும் காழியர் கோனின் கழல் போற்றி
> என்பது சரியாகப் படவில்லை. வேறு வகையாகப் பொருள் கொள்ள வேண்டுமெனில் கூறவும்.
>
> அனந்த்
> 2012/6/6 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
>
>
> > அழகான பாடல்.
>
> > அனந்த்
>
> > 2012/6/6 thangamani <tvthangam...@gmail.com>
>
> >> இறைவனவன் குளிர்பூந்தாள் எண்ணிநெகிழ் ம்னங்கொண்ட
> >> மறைஞானப் பிள்ளையார்க்கு மாற்றலர்செய் இன்னலெலாம்
> >> பொறையன்பில் நல்லனவாய்ப் பொலியவைத்த அருள்நிதியன்
> >> கறைமிடறன் புகழ்பாடு காழியர்கோன் கழல்போற்றி!
>
> >> அன்புடன்,
> >> தங்கமணி.
>
> >> On Jun 5, 3:12 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> >> > 2012/6/4 Siva Siva <nayanm...@gmail.com>- Hide quoted text -
//மறைஞானப் பிள்ளையார் என்பது காழியர் கோனைக் குறிப்பதால், மறைஞானப்
பிள்ளையாரின் இன்னல் தீர்த்த கறைமிடற்றனைப் பாடும் காழியர் கோனின் கழல்கூறவும். //
போற்றி
என்பது சரியாகப் படவில்லை. வேறு வகையாகப் பொருள் கொள்ள வேண்டுமெனில்
அனந்த்.
திரு.அனந்த் அவர்களுக்கு,
உங்கள் சுட்டலுக்கும்,கருத்துக்கும் மிக்கநன்றி!
மாற்றி இட்டுள்ளேன்.பார்க்கவும்.
இறைவனவன் குளிர்பூந்தாள் எண்ணிநெகிழ் மனங்கொண்ட
மறையவன்சம் பந்தனுக்கு மாற்றலர்செய் இடர்நீங்க
நிறையன்பில் பதிகங்கள் நெஞ்சுருக இசைத்தமிழில்
கறைமிடறன் புகழ்பாடு காழியர்கோன் கழல்போற்றி!
அன்புடன்,
தங்கமணி.
அன்புள்ள ஐயா,
எளிய நடையில் அமைந்த இனிய பாடலை ரசித்தேன்.
இப்பாடலுக்கான வாய்பாட்டின்படி ஈற்றடியில் விளம் அமையலாமா?
நன்றி.
அர்விந்த்
-
//மறையவன்சம் பந்தனுக்கு மாற்றலர்செய் இடர்நீங்க /
'மறையவன்முன் மதுரையிலே வல்லமணர் வாதுவென்று' என்பது போல் இருந்தால்
இன்னும்
சிறக்கும்.//
அவ்வாறே இட்டேன்.நன்றி சிவா!
//முதல் அடியில் 'நெகிழ்மனம் கொண்ட' என்றபின் 3ம் அடியில் 'நெஞ்சுருக'
என்றதும்
ஏனோ?//
எண்ணிநெகிழ்வுறு மனம்,இசையில் உருகிடும்!
அடியார்கள் எடுத்துக்காட்டு!
"எங்கும் நிறைநாத பிரம்மம்"நாத உபாசனையில் இறைவனை
அடைதல் எளிது!என்று சொல்லக்கேட்டிருக்கேன். நன்றி சிவா!
(மின் தடை,க்ணினி சரியாக இயங்காதது எல்லாம் சேர்ந்து
எழுத முடியவில்லை.)
அன்புடன்,
தங்கமணி.
On Jun 7, 12:17 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2012/6/6 thangamani <tvthangam...@gmail.com>
அன்புடன்,
அர்விந்த்
2012/6/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
திருஞான
சம்பந்தர் குருபூஜை -
வைகாசி
மூலம் -
2013-05-26 USA / 2013-05-27 India
2012-05-25
----------------
தந்தந்
..
தனதான
முந்தும்
பினுமானான்
..
முண்டம்
பலிதேர்வான்
கந்தங்
கமழ்தாளன்
..
கண்டங்
கரியானான்
வந்தங்
கமுதீயும்
..
மந்தந்
திகழ்காழிப்
பந்தன்
தமிழ்பாடப்
..
பந்தம்
பொடியாமே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
திருஞான
சம்பந்தர் குருபூஜை -
வைகாசி
மூலம் -
(2013-05-26
USA / 2013-05-27 India)
2012-05-25
----------------
2)
தந்தந்த
தனத்தன
தந்தந்த
தனத்தன
தந்தந்த
தனத்தன ..
தனதான
(இவ்வமைப்பில்
திருப்புகழ் உள்ளதா என்று
அறியேன்.)
அம்பொன்று
தொடுக்கவொர்
குன்றன்று வளைத்தவன்
..
அங்கொன்றை
எருக்கிள
..
மதிசூடி
பம்பம்ப
மெனப்பறை சங்கங்க
ளொலிப்பொடு
..
பண்டங்க
நடிப்பவ ..
னுமைகேள்வன்
கம்பங்கொள்
சுரர்க்கருள்
நஞ்சுண்ட
மிடற்றினன்
..
நம்பன்ற
னடித்தல ..
மதுநாடிச்
சம்பந்த
னுரைத்தருள்
சந்தங்கொள்
தமிழ்த்தொடை
..
தஞ்சிந்தை
நினைப்பவர் ..
வினைபோமே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
திருஞான சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - (2013-05-26 USA / 2013-05-27 India)
2012-05-25
----------------
2)
தந்தந்த தனத்தன தந்தந்த தனத்தன
தந்தந்த தனத்தன .. தனதான
(இவ்வமைப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்.)
அம்பொன்று தொடுக்கவொர் குன்றன்று வளைத்தவன்
.. அங்கொன்றை எருக்கிள .. மதிசூடி
பம்பம்ப மெனப்பறை சங்கங்க ளொலிப்பொடு
.. பண்டங்க நடிப்பவ .. னுமைகேள்வன்
கம்பங்கொள் சுரர்க்கருள் நஞ்சுண்ட மிடற்றினன்
.. நம்பன்ற னடித்தல .. மதுநாடிச்
சம்பந்த னுரைத்தருள் சந்தங்கொள் தமிழ்த்தொடை
.. தஞ்சிந்தை நினைப்பவர் .. வினைபோமே.
பதம்
பிரித்து:
அம்பு
ஒன்று தொடுக்க ஒர் குன்று
அன்று வளைத்தவன்;
..
அம்
கொன்றை,
எருக்கு,
இள
மதி சூடி;
"பம்
பம் பம்"
எனப்
பறை சங்கங்கள் ஒலிப்பொடு
..
பண்டங்கம்
நடிப்பவன்;
உமைகேள்வன்;
கம்பம்கொள்
சுரர்க்கு அருள் நஞ்சு உண்ட
மிடற்றினன்;
..
நம்பன்றன்
அடித்தலம் அது நாடிச்
சம்பந்தன்
உரைத்து அருள் சந்தம்கொள்
தமிழ்த்தொடை
..
தம்
சிந்தை நினைப்பவர் வினை
போமே.
ஒர்
-
ஓர்
-
குறுக்கல்
விகாரம்;
அம்
கொன்றை -
அழகிய
கொன்றைமலர்;
பண்டங்கம்
-
பண்டரங்கம்
-
சிவன்
கூத்து.
(2.6.12: "பலிதி
ரிந்துழல் பண்டங்கன்..."
- பண்டங்கன்
-
பாண்டரங்கம்
என்னுந்திருக்கூத்தை
ஆடுபவன்);
நடித்தல்
-
கூத்தாடுதல்;
கம்பம்
-
நடுக்கம்
-
இங்கே
அச்சத்தைச் சுட்டியது.
சுரர்
-
தேவர்;
நம்பன்
-
சிவன்;
அடித்தலம்
-
பாதம்;
சங்கரன்
பாண்டரங்கம் என்பது சிவபெருமான் வேடம் பூண்டு ஆடப்படும் ஆட்டங்களில் ஒன்று.
சிவபெருமான் மூவெயில் முறுக்கியவன் எனபது ஒரு கதை.
மூன்று கோட்டைகளை அவன் தன் நெற்றிக் கண்ணால் எரித்தானாம். அதனை எரித்த
சாம்பலைத் தன் மேனியெல்லாம் பூசிக்கொண்டு சுடுகாட்டில் தாண்டவம்
ஆடினானானாம். பாண்டு என்பது வெள்ளை நிறம்.[1]
வெள்ளைநிறச் சாம்பல் காட்டை அரங்க மேடையாகக் கொண்டு ஆடும் ஆட்டம் 'பாண்டரங்கம்'
சிவ்வெருமானுக்கு எட்டுக் கைகளாம். ஒரு கையால் துடி முழக்குவானாம். இரண்டு
கைகளால் தோளில் தொங்கும் முழவை முழக்குவானாம். இப்படிப் பல இசைக்கருவிகளை
முழக்கிக்கொண்டு, பல வகையான உருவங்களைக் காட்டி அவன் பாண்டரங்க நடனம்
ஆடுவானாம்.[2]
http://tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=2688&book_id=118&head_id=67&sub_id=2564 -இல்
ஒரு குறிப்பு உள்ளது.
-
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தேர்முன் நின்ற திசைமுகன் காணப் பாரதியாடிய வியன் பாண்டரங்கமும்” (சிலம்பு 6:44-45) என்று குறிப்பிடுகின்றது.
பாரதி என்றால் சரஸ்வதி என்றுதான் பொதுவாகச் சொல்லுவர். இது குழம்புகிறது அல்லவா?
இதற்கும் ஒரு ’தினுசாய்க்’ கதை ஒன்று நிலவுகிறது.”பிரம்மன் சிவபெருமானுக்கு தேர் சாரதியாக இருந்து ரதத்தை ஓட்டும் போது அவன் சரஸ்வதியின் பிரிவால் தளர்ந்த சமயம் இதை உணர்ந்த சிவபெருமான் சரஸ்வதியின் உருவமெடுத்து ஆடிய நடனம் இது.” ;-)பார்க்கவும்.( சிலம்புக்கு அடியார்க்கு நல்லார் உரை என்னிடம் எங்கோ இருக்கிறது.... பார்க்கவேண்டும்!)
மேலும்:
விக்கிப்பீடியாவில் இருந்து.பாண்டரங்கம் என்பது சிவபெருமான் வேடம் பூண்டு ஆடப்படும் ஆட்டங்களில் ஒன்று.
சிவபெருமான் மூவெயில் முறுக்கியவன் எனபது ஒரு கதை.
மூன்று கோட்டைகளை அவன் தன் நெற்றிக் கண்ணால் எரித்தானாம். அதனை எரித்த சாம்பலைத் தன் மேனியெல்லாம் பூசிக்கொண்டு சுடுகாட்டில் தாண்டவம் ஆடினானானாம். பாண்டு என்பது வெள்ளை நிறம்.[1]
வெள்ளைநிறச் சாம்பல் காட்டை அரங்க மேடையாகக் கொண்டு ஆடும் ஆட்டம் 'பாண்டரங்கம்'
சிவ்வெருமானுக்கு எட்டுக் கைகளாம். ஒரு கையால் துடி முழக்குவானாம். இரண்டு கைகளால் தோளில் தொங்கும் முழவை முழக்குவானாம். இப்படிப் பல இசைக்கருவிகளை முழக்கிக்கொண்டு, பல வகையான உருவங்களைக் காட்டி அவன் பாண்டரங்க நடனம் ஆடுவானாம்.[2]
- ↑ பாண்டவர்களின் தந்தை பாண்டு வெள்ளை நிறத்தவன்.
>>தேர்முன் நின்ற திசைமுகன் காணப் பாரதியாடிய வியன் பாண்டரங்கமும்” (சிலம்பு 6:44-45)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>>அடியார்க்கு நல்லார் உரையில், இந்த வரிக்குக் குறிப்புகள் இல்லை.
பாண்டரங்க ஆட்டத்திற்கு வேல்வகுப்பு உரைதரும் ‘ சிவன் சரஸ்வதி உருவெடுத்து ஆடிய நடனம்’ என்ற குறிப்பைவிட, சிவனின் ஒரு பாகமாகிய பைரவியின் உருவெடுத்து ஆடிய நடனம் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகிறது. சிலப்பதிகார உரையில் (வரிகள் 39, 45 ஆகிய இரண்டு இடங்களிலும்) பாரதி பைரவியைக் குறிப்பதாக இருப்பதோடு, ’பாரதி வடிவாய இறைவன்’ வெண்ணீற்றை அணிந்தாடிய’’ என்ற குறிப்பும் திருநீறு பூசிய பைரவியின் உருவத்தோடு ஒத்துப் போகிறது. சிலம்பின் 42-43 ஆம் வரிகளில் காணும் ”உமையவள் ஒருதிறனாக ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டி யாடலும் ” என்ற தொடர், இந்த வடிவம் கொடுகொட்டியாடலிலும் உள்ளதெனக் குறிப்பிடுகிறது.
பாரதி என்னும் சொல்லுக்கு, சரஸ்வதி மட்டுமன்றி, பைரவி என்ற பொருளும் உள்ளதுபோல், பகவதி என்பது சரஸ்வதியையும் லக்ஷ்மியையும் கூடக் குறிப்பதுண்டு (ஸா மாம் பாது ஸரஸ்வதீம் பகவதீம்..(சரஸ்வதி ஸ்லோகம்).; பகவதீம் ஹரிவல்லபே மனோஞ்ஞே (கனகதாராஸ்தவம்). அறிவும் புலமையும் மிக்க பெரியோர்களை சரஸ்வதி என்ற அடைமொழி குறிப்பதும் உண்டு.
நீங்கள் சொல்வது போல, சிவன் சரஸ்வதி உருவெடுத்து ஆடிய நடனம் என்ற வேல்வகுப்பு உரையின் குறிப்பிற்கு ஆதாரமான சமய நூல் எது என்று ஆராயலாம்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
2014-04-22
(சம்பந்தர்
குருபூஜை -
வைகாசி
மூலம் -
2014-06-13 USA / 2014-06-14
India)
--------------------
"தனந்தன
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
தனந்தன தனம்"
என்ற
சந்தக்குழிப்பு அமைந்த
வண்ணச்சந்த விருத்தம்.
(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"ஸத₃ஞ்சித
முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ
ஜ₂லஜ₂லஞ்சலித
மஞ்ஜு கடகம்")
1)
வனந்தழு
விடுங்கழு மலந்தனி
லலர்ந்தவ
னிரைந்தழு
திடும்பொழு துடன்
அனந்தந டிகன்புடை அமர்ந்தவ ளருந்தவ முதந்தர அயின்றபு கழன்
சினந்தெதி ரமண்பத ருரங்கெட அருந்தமி ழிரும்புன லெதிர்ந்திட விடும்
தினந்தின மவன்கழ னினைந்திட அறுந்துய ருறுந்திரு பெரும்புக ணலம்.
பதம்
பிரித்து:
வனம் தழுவிடும் கழுமலந்தனில் அலர்ந்தவன்; இரைந்து அழுதிடும்பொழுது உடன்
அனந்த நடிகன்புடை அமர்ந்தவள் அருந்த அமுதம் தர அயின்ற புகழன்;
சினந்து எதிர் அமண் பதர் உரம் கெட, அரும் தமிழ் இரும் புனல் எதிர்ந்திட விடும்;
தினம்
தினம்
அவன்
கழல்
நினைந்திட,
அறும்
துயர்,
உறும்
திரு
பெரும்புகழ்
நலம்.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
திருஞான சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - (2013-05-26 USA / 2013-05-27 India)
2012-05-25
----------------
2)
தந்தந்த தனத்தன தந்தந்த தனத்தன
தந்தந்த தனத்தன .. தனதான
(இவ்வமைப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்.)
அம்பொன்று தொடுக்கவொர் குன்றன்று வளைத்தவன்
.. அங்கொன்றை எருக்கிள .. மதிசூடி
2)
மடந்தையி னரந்தையை அறிந்தவ ணணங்கொரு புறந்திக ழரன்துணை யுடன்
விடந்தணி யவுந்தனை விரும்பவ னுடன்திரு மணம்புரி யவுந்தரு பவன்
குடந்தனி லிருந்தவு டலின்பொடி திரும்பவு மெழுந்தெழி லிலங்குவ டிவம்
அடைந்திட அரும்பதி கமன்றுரை இளங்களி றுபந்தன பதந்தொழ லிதம்.
பதம்
பிரித்து:
மடந்தையின் அரந்தையை அறிந்து அவண், அணங்கு ஒரு புறம் திகழ் அரன் துணையுடன்,
விடம் தணியவும், தனை விரும்பு அவனுடன் திருமணம் புரியவும் தருபவன்;
குடந்தனில் இருந்த உடலின் பொடி திரும்பவும் எழுந்து எழில் இலங்கு வடிவம்
அடைந்திட அரும் பதிகம் அன்று உரை இளம் களிறு பந்தன பதம் தொழல் இதம்.
அடிகள்
1-2:
திருமருகலில்
வணிகனை விடம் தீர்த்து
உயிர்ப்பித்த வரலாறு;
அடிகள்
3-4:
மயிலாப்பூரில்
பூம்பாவையை உயிர்ப்பித்த
வரலாறு;
அன்பொடு,
வி.
சுப்பிரமணியன்
2014-04-22 (சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2014-06-13 USA / 2014-06-14 India)
--------------------
"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்")
1)
2)
மடந்தையி னரந்தையை அறிந்தவ ணணங்கொரு புறந்திக ழரன்துணை யுடன்
விடந்தணி யவுந்தனை விரும்பவ னுடன்திரு மணம்புரி யவுந்தரு பவன்
குடந்தனி லிருந்தவு டலின்பொடி திரும்பவு மெழுந்தெழி லிலங்குவ டிவம்
அடைந்திட அரும்பதி கமன்றுரை இளங்களி றுபந்தன பதந்தொழ லிதம்.
பதம் பிரித்து:மடந்தையின் அரந்தையை அறிந்து அவண், அணங்கு ஒரு புறம் திகழ் அரன் துணையுடன்,
விடம் தணியவும், தனை விரும்பு அவனுடன் திருமணம் புரியவும் தருபவன்;
குடந்தனில் இருந்த உடலின் பொடி திரும்பவும் எழுந்து எழில் இலங்கு வடிவம்
அடைந்திட அரும் பதிகம் அன்று உரை இளம் களிறு பந்தன பதம் தொழல் இதம்.
அடிகள் 1-2: திருமருகலில் வணிகனை விடம் தீர்த்து உயிர்ப்பித்த வரலாறு;அடிகள் 3-4: மயிலாப்பூரில் பூம்பாவையை உயிர்ப்பித்த வரலாறு;
அரந்தை
-
துன்பம்;
விதனம்
(-
துக்கம்
-
Sorrow, distress);
அவண்
-
அவ்விடம்;
தனை
-
தன்னை
-
அவளை;
(தான்
-
படர்க்கை
ஒருமைப்பெயர் -
அவன்
/
அவள்
/
அது
-
He, she or it);
பொடி
-
சாம்பல்;
இளம்
களிறு பந்தன -
இளம்
களிறு போன்ற திருஞான சம்பந்தனுடைய;
(பந்தன்
-
திருஞானசம்பந்தன்
என்பதன் ஏகதேசம் -
ஒருபுடைப்பெயர்);
(அ
-
ஆறாம்
வேற்றுமை உருபு);
இதம்
-
இன்பமானது;
நன்மை;
ஞானம்;
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்2014-06-12 20:49 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:
2014-04-22 (சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2014-06-13 USA / 2014-06-14 India)
--------------------
"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்")
1)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
குளக்கரையில் அழும்பிள்ளை குரல்கேட்டுப் பக்கத்தில்
அளப்பரிய அன்புடனே அன்னையவள் பார்வதியும்
பளபளக்கும் ஜோதியென பரவசத்தில் பால்கொடுக்க
மளமளெனப் பாட்டிசைத்த மணிக்குழந்தை அடிபணிவோம் !
திருஞானசம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம்
(03-06-2015)
(மீ.விசுவநாதன்)
குளக்கரையில் அழும்பிள்ளை குரல்கேட்டுப் பக்கத்தில்
அளப்பரிய அன்புடனே அன்னையவள் பார்வதியும்
பளபளக்கும் ஜோதியென பாலூட்டப் பரவசத்தில்
மளமளெனப் பாட்டிசைத்த மணிக்குழந்தை அடிபணிவோம் !
பிள்ளையவன் தேன்சொல்லைப் பிரியமுடன் தான்கேட்டு
அள்ளியள்ளி வரங்களையே அந்தசிவன் கொடுத்திடுவார் !
நள்ளிரவில் சுடலையிலே நடனமிடும் நமச்சிவாயம்
உள்ளிருக்கும் கவியன்றோ உயிர்ஞான சம்மந்தன் !
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
2) ------ அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு -----
மலரும்
நிலவும் செஞ்சடைமேல் ..
மகிழ்ந்த
ஈசன் தனைநோக்கிப்
புலரும்
பொழுதில் மருகலிலே ..
புலம்பி
நின்றாள் தனக்கிரங்கித்
தலைவ
தகுமோ இவ்வடியாள் ..
தன்னுள்
வருத்தம் எனப்பாடிக்
கலியைத்
தீர்த்து வாழ்வித்த ..
காழி
யூரர் கழல்போற்றி.
"தலைவ
தகுமோ இவ்வடியாள்தன் உள்
வருத்தம்"
எனப்
பாடி -
"தலைவனே,
இந்த
அடியவளுடைய மனவருத்தம்
உனக்குத் தகுமோ"
என்று
பதிகம் பாடி;
கலி
-
துன்பம்;
வாழ்வித்தல்
-
வாழச்செய்தல்;
காழியூரர்
-
சீகாழியில்
அவதரித்த திருஞான சம்பந்தர்;
(சம்பந்தர்
தேவாரம் -
2.18.1
சடையா
யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா
யெனுமால்வெருவா விழுமால்
மடையார்
குவளை மலரும் மருகல்
உடையாய்
தகுமோ இவள்உண் மெலிவே.)
அன்பொடு,
வி.
சுப்பிரமணியன்
2015-05-15
திருஞானசம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2015-06-03
---------------------------------
1) ------ நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா -----
3) ---
திருவிருக்குக்குறள்
அமைப்பு ---
(வஞ்சித்துறை)
---
ஊனம்
தீர்த்தின்ப
வானம்
தான்நல்கும்
ஞான
சம்பந்தன்
மானத்
தாள்போற்றி.
ஊனம்
- குறைவு;
குற்றம்;
மானத்தாள்
- பெருமை
பொருந்திய திருவடி;
(மானம்
- பெருமை
-
eminence);
11.34.42
- ஆளுடைய
பிள்ளையார் திருவந்தாதி
பெறுவது
நிச்சயம்,
அஞ்சல்நெஞ்
சே,பிர
மாபுரத்து
மறுவறு
பொற்கழல் ஞானசம் பந்தனை
வாழ்த்துதலால்,
வெறியுறு
கொன்றை மறியுறு செங்கை
விடையெடுத்த
பொறியுறு
பொற்கொடி யெம்பெரு மானவர்
பொன்னுலகே.
('ஞான
சம்பந்தரை வாழ்த்தினாலே
சிவலோகத்தை அடைதல் நிச்சயம்'
என்பது
கருத்து)
அன்பொடு,
வி.
சுப்பிரமணியன்
2) ------ அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு -----
2015-06-01 19:53 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:2015-05-15
திருஞானசம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2015-06-03
---------------------------------
1) ------ நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா -----
2016-05-13
திருஞான சம்பந்தர் குருபூஜை (வைகாசி மூலம் - 24-May-2016)
"சம்பந்தர் செந்தமிழை நாவே நீ செப்பு."
---------------------------------
(வெண்பா)
(எல்லாப் பாட்டுகளும் ஒரே ஈற்றடி)
1)
மடைதிறந்தாற் போல்கண்ணீர் மல்கியழக் கண்டு
சடையானும் மாதும் தனிவெள் விடையேறி
வந்துபால் ஊட்ட மகிழ்ந்துண்ட சம்பந்தர்
செந்தமிழை நாவேநீ செப்பு.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2015-05-15
திருஞானசம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2015-06-03
---------------------------------
1) ------ நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா -----
2)
கையதனால் ஒத்தறுத்துப் பாடுதலைக் கண்டிரங்கி
ஐயன்கோ லக்கா அமரிறை செய்யவன்
தந்தபொற் றாளம் தனையேந்து சம்பந்தர்
செந்தமிழை நாவேநீ செப்பு.
3)
பாத வருத்தத்தைப் பாரா மகனார்க்குச்
சீதமுடி ஈசன் சிவிகைதரக் காதலொடு
சந்தவிசை பாடியரன் தாள்பணிந்த சம்பந்தர்
செந்தமிழை நாவேநீ செப்பு.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
4)
புகலியில் அம்மையப்பன் பொன்னடியைப் போற்றி
அகமகிழ்ந்து வாழ்நாளில் யாப்பில் மிகவரிய
அந்தொடை மாலைமாற் றாக்கியருள் சம்பந்தர்
செந்தமிழை நாவேநீ செப்பு.
5)
ஓதவிடம் உண்ட ஒருவன் உமைபங்கன்
தாதைபுகழ் பாடித் தனியேக பாதமெனும்
கந்தமலி ஆரம் கழலிட்ட சம்பந்தர்
செந்தமிழை நாவேநீ செப்பு.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
6)
நாரிபங்கன் சீர்பாடு நாவுக் கரசருக்
கூரினர்முன் அப்பரெனும் ஒப்பில்லாப் பேரினைத்
தந்தவர் தண்பூந் தராய்மன்னம் சம்பந்தர்
செந்தமிழை நாவேநீ செப்பு.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
7)
கொல்லி மழவன் குமரி முயலகன்நோய்
ஒல்லையற இன்பதிகம் ஒன்றினைச் சொல்லியருள்
கந்த மலர்ப்பொழில்சூழ் காழியர்கோன் சம்பந்தர்
செந்தமிழை நாவேநீ செப்பு.
8)
கொடிமாடச் செங்குன்றூர் தன்னிற் சுரம்தீர்ந்
தடியார் மகிழஅரக் கன்றன் முடிகணெரி
எந்தைதிரு நீலகண்டம் என்றோது சம்பந்தர்
செந்தமிழை நாவேநீ செப்பு.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
திருஞான சம்பந்தர் குருபூஜை (வைகாசி மூலம் - 24-May-2016)
9)
மருகலில் மாண்ட வணிகன் உயிரை
இருவர்க் கரியானை ஏத்தித் தரவல்லார்
அந்தமிலா ஈசன் அடிமறவாச் சம்பந்தர்
செந்தமிழை நாவேநீ செப்பு.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
திருஞான சம்பந்தர் குருபூஜை (வைகாசி மூலம் - 24-May-2016)
10)
நமனையுதை நம்பனை நாளும் வணங்கு
தமர்மடத்தில் தீவை தகவில் அமணரை
வெந்தழல் வாதினில் வெற்றிகொள் சம்பந்தர்
செந்தமிழை நாவேநீ செப்பு.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்