அகத்தோடுரையாடல் - 12. பேரகமாய்….
அகமுறைவை யகலுமட வகவிழைவி லிகமடுவை யகமெனவுழ
லகமுளையின் சிகைநிமிர புகழ்பொருளும் தகையுமறு மகநகலினா
லகமகழ வகமொளியு மகநசிவிற் திகழொளிநம் மகரமணனா
லகமொளிரும் முகிழிதயம் நெகிழ்வடையும் மகிழ்வலரு மகமதகமே.
பதம்பிரித்த வடிவம்:
அகமுறைவை அகலு(ம்)மட அகவிழைவில் இகமடுவை அகமெனவுழல்
அகமுளையின் சிகைநிமிர புகழ்பொருளும் தகையும் அறும் அகநகலினால்
அகம் அகழ அகமொளியும் அகநசிவில் திகழொளிநம் அகரமணனால்
அகமொளிரும் முகிழ் இதயம் நெகிழ்வடையும் மகிழ்வு அலரும் அகமதகமே.
பொருள்: அகமாகிய (Self) வீடுபேற்றில் வசிப்பதை அகலும் மட அகத்தின் (ego) விழைவில் இகவுலகமாகிய மடுவிதனை அகமாகக் (home) கருதி உழலும் அகத்தின் (ego) முளை கட்டித் தலை தூக்கி நிமிர புகழும், பொருளும் தகைந்து வரும் பின் தொடர்பறுத்து ஓடும். அத்தகைய அக நகலினாலேயே (ego
which is an imitation of Self) அகத்தை (ego) அகழ, அகம் ஓடி ஒளிந்து தலை சாயும்; அதன் நசிவில் உள்ளிருந்து திகழும் அகத்தின் (Self) ஒளி வெளிப்படும். அவ்வொளி நம் அகத்தில் (heart) உறையும் ரமணனே,. அவனால் அகம் (heart) ஒளிரும். மொட்டாகக் குவிந்த இதயம் நெகிழ்ந்து விரியும்.
மகிழ்ச்சி மலரும். அதுவே அகம் (Self) எனது அகமே (Heart).
[அகம் - Self அகம் - ego அகம் - home மடு - pit உழலுதல் - wander முளை - sprout சிகை - crown தகைதல் - happen நகல் - copy or duplicate முகிழ் - bud ]
With the impetus from the phantom ego, we perform the ignorant action of leaving our abidance in the Self, and we take this worldly pit as the real home and wander. Our ego sprouts, perks its head up, runs after worldly things. Because of that, fame and wealth
follow; but they do not stay; they break their ties with us. But using this phantom copy of Self, i.e., the ego, if we dig deep into our self, the ego will hide and get annihilated. What shines forth then is our inner Ramana. Because of Him our Self lights
up. The bud of our heart loosens and blossoms. Bliss follows. That is the real Self, Oh my heart!
Always in Bhagavan
Sathiya
--
சும்மா இரு. Be Still.