"ஜோசியக் கிளி" - (மீ.விசுவநாதன்)

22 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Sep 20, 2015, 1:54:04 AM9/20/15
to Santhavasantham

"ஜோசியக் கிளி"

      (மீ.விசுவநாதன்)


அந்த பச்சை மரத்தில்

பச்சைக் கிளிகள் கூட்டமாய்

"கிக்கீ..கிக்கீ" என்று

கத்திக் கொண்டே பழங்களைக்

கொத்தித் தின்கிறது

சிறகடிக்கிறது வானில்..


அதே 

மரத்தடியில்

ஜோசியக் காரனின் கூண்டுக்குள்ளும்

வெளியிலுமாகப் நடந்து நடந்து

அட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து

எனக்கு ஜோசியம் சொல்லிவிட்டு

கூண்டுக்குள் அடைந்து

ஒரு நெல்லைக் கொத்தியபடி

என்னைப் பார்க்கிறது

சுதந்திரம் மறந்த கிளி.

          (20.09.2015)

Kaviyogi Vedham

unread,
Sep 20, 2015, 6:55:16 AM9/20/15
to santhavasantham
அபாரம் விசு உன் வேற்றுமை தர்சனம்!,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
எமது  ஆஸ்ரமத்தின்..அதிசய-  ‘இலக்கியவேல்’
 (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- எனக்கு அனுப்பி( வருடச்சந்தா)இதழ்
வாங்கிப்,,பின்பு உங்கள்,,இலக்கியப்படைப்பும் +கவிதை+கதை
அனுப்புங்கள்.நீங்களே உங்கள் படைப்புகளை wordpad--ல் மட்டுமே-டைப் அடித்து
chandarsu...@gmail.com எனும் ஈ மெயிலுக்கு  மாதம் 8 தேதிக்குள்
அனுப்பினால்  உடன் பிரசுரம் ஆகலாம்...
கவியோகி வேதம்,
தலைவர், ஸ்ரீலஹரி பாபாஜியோகாஸ்ரம்,
 ரெங்காரெட்டி கார்டன்,10 வது குறுக்குத்தெரு
 நீலாங்கரை, சென்னை-600115
 செல் எண் 09500088528
 








--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Pas Pasupathy

unread,
Sep 20, 2015, 7:22:24 AM9/20/15
to Santhavasantham
வேதத்தின் கிளி ஜோஸ்யம் பற்றிய கவிதை நினைவுக்கு வருகிறது!  

M. Viswanathan

unread,
Sep 20, 2015, 7:55:29 AM9/20/15
to Santhavasantham
அன்புக் கவியோகி, பேராசிரியர் பசுபதி அவர்களின் பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி. நன்றி.
அன்பன்,
மீ.வி.

N. Ganesan

unread,
Sep 20, 2015, 10:25:02 AM9/20/15
to சந்தவசந்தம்


On Sunday, September 20, 2015 at 4:22:24 AM UTC-7, பசுபதி wrote:
வேதத்தின் கிளி ஜோஸ்யம் பற்றிய கவிதை நினைவுக்கு வருகிறது!  

கவியோகி வேதம் அவர்களின் கவிதை (2000):
கிளி ஜோஸ்யம் போய்ப் பாரீர் !

கிளி ஜோஸ்யம் பார்ப்போனைக் கிறுக்(கு) என்பர்;விஞ்ஞானம் 
வெளிச்சமிட்டுக் கூச்சலிடும் வேளை இன்று! அது, மூட 

நம்பிக்கைதான்! எனினும், நண்பர்களே கெஞ்சுகிறேன்! 
கும்பிடுவேன் உம்மைநான்! கூண்டுவைத்துப் பிழைப்பவனைக் 

கிறுக்கனாகப் பாராமல் கிளி ஜோஸ்யம் பாருமய்யா! 
அருமையாய்க் குறிகேட்க அமருகிற வேளையில்தான், 

'பறவை' அதுஒருநிமிடம் பார்க்கிறது சுதந்திரத்தை! 
குறி சொல்லி முடிந்தபின் போ, கொறிக்கிறது ஒரு நெல்லை! 

எங்கெல்லாம் கிளிக்கூண்டோ அங்கெல்லாம் போம் அய்யா! 
அங்கு போய்ப் பாரும் உமதிர்ஷ்டத்தை; இறைஞ்சுகிறேன்! 

பிச்சைஎடுக்காமல் ஓர் பிழைப்பும் தெரியாமல் 
எச்சில் கூட்டி உம்வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும் 

வறுமைஎனும் கூண்டிற்குள் வத்தலைப் போல் மெலிந்திருக்கும் 
பிறருக்கே குறிசொல்லும் பித்தனையே போய்ப் பாரும்! 

அடிக்கடி போனால், இறை அடியாரே நீர் அன்றோ? 
படி அளக்கும் பரமனுக்குப் பலதொண்டு செய்வதினும், 

பறவைக்கும், மனிதனுக்கும், ஒரே சமயம் உதவுவதால் 
சொர்க்கத்தின் இரு கதவை ஒரே கையால் திறக்கின்றீர்!!  

M. Viswanathan

unread,
Sep 20, 2015, 10:37:21 AM9/20/15
to Santhavasantham
திரு. கணேசன் அவர்கள் பகிர்ந்த கவியோகியின் கிளிக்கவிதை அருமை.  முன்பே படித்து மகிழ்ந்திருக்கிறேன்.

N. Ganesan

unread,
Sep 20, 2015, 10:41:49 AM9/20/15
to சந்தவசந்தம்


On Sunday, September 20, 2015 at 7:37:21 AM UTC-7, meev1955 wrote:
திரு. கணேசன் அவர்கள் பகிர்ந்த கவியோகியின் கிளிக்கவிதை அருமை.  முன்பே படித்து மகிழ்ந்திருக்கிறேன்.

கவிஞர் பசுபதி கொடுத்த சுட்டி. ஒருங்குகுறிக்கு மாற்றி அனுப்பினேன். எதிர்காலத்தில் யாராவது துழாவும்போது சிக்கும். துய்ப்பர் என்பதற்காக. 

N. Ganesan

unread,
Sep 20, 2015, 10:46:18 AM9/20/15
to சந்தவசந்தம், Kaviyogi Vedham
 கவியோகியார், அவரது அன்பர் குழாம் ஒரு 200 (அ) 300 கவிதைகளை கால வரிசைப்படி தேர்ந்தெடுத்து ஒரு வொர்டு ஆவணம் ஆக்கி
அனுப்பித்தால் ஒரு மின்னூல் ஆக்கலாம். ஒரே இடத்தில் அவர் சிந்தனைகளை படிக்க வசதி.

அதே போல, சிவசிவா அவர்களின் தேவாரம் போன்ற செய்யுள்களும் 2, 3 தொகுப்புகள் ஆக வேண்டுகிறேன்.
திருப்புகழ் போன்ற அவரது சந்தப்பாக்கள் ஒரு தனிநூலாய் வரவேணும். நன்றி.

சிவசூரி அவர்களின் சிங்கைக் கண்ணன் பிள்ளைத்தமிழ் மின்னூல் ஆகவேண்டும்.

அன்பன்,
நா. கணேசன்

Siva Siva

unread,
Sep 20, 2015, 10:50:40 AM9/20/15
to santhavasantham
Thanks for the suggestion.

By the way, I have posted about 100+ padhigams in a blog.

"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

FYI

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

N. Ganesan

unread,
Sep 20, 2015, 10:53:45 AM9/20/15
to சந்தவசந்தம்


On Sunday, September 20, 2015 at 7:50:40 AM UTC-7, siva siva wrote:
Thanks for the suggestion.

By the way, I have posted about 100+ padhigams in a blog.


நன்றி. இன்னொரு suggestion, நீங்கள் தமிழ் வார்த்தைகளை
ஆங்கிலத்தில் எழுதும்போது. தமிழ் சிறக்க அவ் வேண்டுகோளை
உங்களுக்கும், சந்தவசந்தத்தாருக்கும் எழுதுவேன். நன்றி.

ramaNi

unread,
Sep 20, 2015, 10:53:57 AM9/20/15
to சந்தவசந்தம்
விசுவின் புதுக்கவிதையில் 'சுதந்திரம் மறந்த கிளி', யோகியாரின் மரபுக் கூண்டில் சிறகடித்துப் பறக்கிறதே?

கூண்டில் கிளியோடு குறிசொல்ல அலைபவன் வறுமையைத்
தாண்டுவழி தெரியாதே தவிப்பதேன் சொல்வாயா கிளியே!

ரமணி

M. Viswanathan

unread,
Sep 20, 2015, 10:58:34 AM9/20/15
to Santhavasantham
ஒரே கிளி இரண்டு சிந்தனைகள்.

N. Ganesan

unread,
Sep 20, 2015, 11:09:04 AM9/20/15
to சந்தவசந்தம்
சிறையாரும் மடக்கிளியே!

Pas Pasupathy

unread,
Sep 20, 2015, 11:59:25 AM9/20/15
to Santhavasantham
வேதத்தின் ‘கிளி ஜோஸ்ய’க் காலத்தில் தான் நான் அவரை முதலில் மின்வெளியில் சந்தித்தேன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Kaviyogi Vedham

unread,
Sep 20, 2015, 10:44:50 PM9/20/15
to santhavasantham
அடேங்கப்பா! இரண்டு கிளிகள் வந்தாலும் வந்தன.. எவ்வளோ  பரிமாற்றச் சிந்தனைகள்!!. என் கவியை எடுத்து வெளியிட்ட கணேசனார்க்கு மிக நன்றி., வாழ்க!,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
எமது  ஆஸ்ரமத்தின்..அதிசய-  ‘இலக்கியவேல்’
 (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- எனக்கு அனுப்பி( வருடச்சந்தா)இதழ்
வாங்கிப்,,பின்பு உங்கள்,,இலக்கியப்படைப்பும் +கவிதை+கதை
அனுப்புங்கள்.நீங்களே உங்கள் படைப்புகளை wordpad--ல் மட்டுமே-டைப் அடித்து
chandarsu...@gmail.com எனும் ஈ மெயிலுக்கு  மாதம் 8 தேதிக்குள்
அனுப்பினால்  உடன் பிரசுரம் ஆகலாம்...
கவியோகி வேதம்,
தலைவர், ஸ்ரீலஹரி பாபாஜியோகாஸ்ரம்,
 ரெங்காரெட்டி கார்டன்,10 வது குறுக்குத்தெரு
 நீலாங்கரை, சென்னை-600115
 செல் எண் 09500088528
 








M. Viswanathan

unread,
Sep 20, 2015, 11:15:54 PM9/20/15
to Santhavasantham
கவியோகியின் கிளியை நினைவு கூர்ந்த பேராசிரியர் பசுபதி அவர்களுக்கும் நன்றி.
மீ.வி.
Reply all
Reply to author
Forward
0 new messages