Pradhosham

213 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 4, 2017, 10:59:46 PM8/4/17
to சந்தவசந்தம்

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                      திருச்சிற்றம்பலம்


           
           

              <> குடி கொண்டதுவே <>


பஞ்சினின் மென்தாள் பாவையொடு

.. பரமன் பனிவரை மீதினிலே


குஞ்சர முகத்தோன் குமரனுடன்

.. கூடி நடத்திடும் குடித்தனத்தை 


நெஞ்சினில் இருத்த நினைத்தேன்நான்

.. நிகழ்ந்த தேதென அறிவீரோ


தஞ்சமென் றெனது நெஞ்சமவன்

.. தாளின் கீழ்குடி கொண்டதுவே!

                

                        ****


தாடரும் தண்மை இதத்தினிலே

.. தாபம் தணிந்தவென் நெஞ்சினிலே


ஆடிடக் கண்டேன் அரன்குடும்பம்

..  அனைத்தும் அவனுடன் சேர்ந்(து)அந்த


நாடகம்  அதனின் அழகையென்னால்

.. நவிலல் எங்ஙனம்? அவருடனே


கூடியென் நெஞ்சும் குதித்திடக்கை

.. கூடும் நாள்வரக் காத்திருப்பேன்.

(தாடரும் = தாள்தரும்)

 

                        ****


நாடொறும் இந்த வகையாக

.. நானென் நனவிலும் கனவிலுமாய்


ஆடலின் அரசே! உன்னைநினைத்(து)

.. அரற்றல் கண்டினி மேலுமிங்ஙன்


வாடிட லாகா வழியொன்றை

.. வகுத்தல் எளி(து)இனி வெளியிலுனைத்


தேடிட வேண்டா(து) என்னுள்ளே

.. திகழும் உன்னுரு தெரியவைப்பாய்.


                          ****

                                         ..அனந்த் 5-8-2017

-----------------

2017-07-20 22:05 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

இன்று பிரதோஷ நன்னாள்.


திருச்சிற்றம்பலம் 



<> வேடம் <>


ஏதங்கள் என்னை எடுத்து விழுங்கிடும்

வேதனையில் யான்விடும் ஓலமுன் – காதினுக்கு

எட்டினால் ஈசன்நீ எல்லார்முன் ஆடுமந்த

நட்டந்தான் நட்டமா மோ?  1

(ஏதம் – துன்பம்நோய்)

 

....................

 

மேன்மேலும் கூட்டும் வினைகள் விளைவிக்கும்

நானாம்  அகந்தை நசித்திடக் – கோனுன்றன்

தாளென் அகத்துள்ளே  தங்கவைப்பின் வாழுகின்ற

நாளெல்லாம் நன்னாளா மே.  10

 

அனந்த் 21-7-2017

(அந்தாதி வெண்பாப் பதிகம்)






Vis Gop

unread,
Aug 4, 2017, 11:37:31 PM8/4/17
to santhav...@googlegroups.com
நெஞ்சுன தாடற் களமாக 
   நிமலம் அங்கே நடமாட 
விஞ்சிட ஒண்ணாப் பேறொன்றை 
   விமலன் அளிக்கப் பெற்றதனைக் 
கொஞ்சிடும் தமிழில் இதமாகக் 
   கூறக் கிடைத்தது வும்பேறே!
பஞ்சினை ஒத்தவள் பாதம்போல் 
   பாடல் மென்மை மிகஅழகே!

நல்வாழ்த்துகளுடன் 
கோபால். 

2017-08-05 8:29 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                      திருச்சிற்றம்பலம்


Vis Gop

unread,
Aug 5, 2017, 12:15:11 AM8/5/17
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் [5 Aug 2017]

பித்தவுன் பேரருட் பெருமையைப் பேசவே பேறெனப் பேச்சளித்தாய் 
கத்தவும் கதறவும் கற்றயான் நின்புகழ் கழறவும் எனதுநாவில் 
சத்தியும் சித்தமும் தந்துநீ பாடிடத் தண்டமிழ்ச் சொல்வளந்தா!
பத்தரின் நெஞ்சினில் பதமிடும் பரமஇப் பாமரன் பாட்டிலாடே!        (1)

தந்தையே மின்னிடும் தங்கமாம் அம்பலத் தட்டினில் ஆடும்நீயென் 
சிந்தையில் வந்தவண் சிறிதுநின் றா(டு)உனைச் சிக்கெனப் பிடிக்கமாட்டேன் 
அந்தழற் கண்ணினால் அங்குநீ கண்டிடும் ஆணவம் சுட்டுவிட்டால் 
பிந்திடும் நாளெலாம் பித்தொடு பித்தனாய்ப் பின்னியே ஒன்றுவேனே!  (2)

சொற்பொருள் தேர்ந்தவர் சுந்தரத் தமிழினில் சொக்கிடும் சோமநாதா 
அற்பனுக்(கு) அத்தனை அறிவிலை ஆயினும் அரற்றுதல் கேட்டிலாயோ?
தற்பதம் கண்டிடும் தவமெனக் கில்லைநீ தயவுடன் கண்டிடாயேல் 
சிற்பர ஊழினில் சிக்குவேன் சிக்கிடில் சிவவுனைச் சேர்வதென்றே!           (3)

அப்பநீ அறிவினை அழகினில் கூட்டியோர் அறுமுகக் கடவுளென்னும் 
சுப்பனைத் தந்தவன்; சொல்முதல் ஒலிமுதல் சூக்குமப் பிரணவத்தைத் 
தொப்பையில் வைத்தமா தும்பியும் தந்தவன்; துளியறி(வு) எனக்குமீய 
ஒப்பிடில் உன்புகழ் உணர்வுடன் பாடுவேன் ஒருதினைக் கருணைசெய்யே!   (4)

ஆடுவாய், ஆலவாய் ஐயனே ஆலடி அமர்ந்தவா(று) அகிலமெல்லாம் 
ஊடுவாய் ஆற்றலால், உண்மைஞா னந்தனை ஊட்டுவாய், சித்தினோடே 
கூடுவாய், சித்தரின் கூட்டமே நாடுவாய், கூத்திலா னந்தமாவாய்,
மூடுவாய் யாதையும், மோனமே யாகுவாய் முடியடி இலாதவாறே!       (5)

என்(று)அருள் பெற்றவர் எந்தை நினைப்புகழ்ந்(து) ஏத்துவர், ஆய்ந்தபோதும் 
ஒன்றும் உணர்ந்திலன்; உன்பெயர் கேட்கிலோ உள்மனம் பூக்கலானேன்!
கொன்றை விரும்பி!நின் கோவிலின் வாயிலில் கும்பிடும் போ(து)உவந்தேன்!
மன்றில் நடம்புரி மன்னவ நின்னெழில் மண்ணவர் பெற்றபேறே!                          (6)

சம்புநின் சந்நிதித் தரிசனம் கிட்டியான் சங்கர உன்னைஅன்னை 
அம்பிகை பார்வதி அங்கயற் கண்ணியோ(டு) ஆடிடக் காணவேண்டும் 
உம்பருக் காகநீ உரகனின் கடுவிடம் உண்ணவும் தயங்கவில்லை!
நம்புவேன் உன்னையே நம்புவேன் நீமனம் நைந்தருள் செய்வையென்றே!       (7)

கங்கையைச் சடையினில் கசடிலாத் திங்களின் கலையுடன் ஏந்துமீச!
தங்கிநீ வாழ்ந்திடத் தக்கதென் நெஞ்சிலை, தாங்கொணாப் பாவமண்டி!
பொங்கிடும் ஆற்றுநீர் புல்லையும் காத்திடப் பொசிவதைப் போலஐயே 
கங்கிலாக் கருணையே கதியிலா எனைக்கணம் காலினால் தீண்டுவாயே!     (8)

நல்வாழ்த்துகளுடன் 
கோபால்.

Siva Siva

unread,
Aug 5, 2017, 9:31:46 AM8/5/17
to santhavasantham
Nice.

A couple of minor typos in sandhi (so I think).

/தாளின் கீழ்குடி கொண்டதுவே/
தாளின் கீழ்க்குடி....

/உன்னுரு தெரியவைப்பாய்/
உன்னுருத் தெரியவைப்பாய்


2017-08-04 22:59 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                      திருச்சிற்றம்பலம்


VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 5, 2017, 11:49:42 AM8/5/17
to சந்தவசந்தம்
நன்றி, கோபால். 
உங்கள் பின்னூட்டப் பாடலின் நயத்தை இரசித்தேன்.

அனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 5, 2017, 11:56:10 AM8/5/17
to சந்தவசந்தம்
Thanks for pointing out the slips.

ananth

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 5, 2017, 12:15:54 PM8/5/17
to சந்தவசந்தம்
பொங்கும் உணர்வுகளைச் சொல்லில் வடிக்கும் அற்புதம் இது!

அனந்த் 
"நீ தயவுடன் கண்டிடாயேல் .. சிற்பர ஊழினில் சிக்குவேன் சிக்கிடில் சிவவுனைச் சேர்வதென்றே" -  சிவன் சிற்பர வத்துவானவன்.  இங்கு, ஊழை அவ்வாறு சொல்வது ஏன்? ஊழ் அவ்விதம்  எனில் சிவனை உடன் சேருமன்றோ?  
ஒருதினைக் கருணைசெய்யே! - இதன் பொருள் என்ன? தினை போலச் சிறியவனாகிய எனக்கு என்பதா?

Rajja Rajagopalan

unread,
Aug 5, 2017, 12:44:57 PM8/5/17
to santhav...@googlegroups.com
இரு பாடல்களும் அருமை. உள்ளத்தால்உவந்து கசிந்து முகிழ்ந்த பாடல்கள் என்பது சொல்லோட்டத்திலேயே தெளிவாகப் புரிகிறது.  அப்படி அமைவன மட்டுமே பெரும் தாக்கத்தை விளைக்கும். 
தாகத்தை வளரக்கும். 

பாராட்டுக்கள் 

மீ. ரா

Sent from my iPhone
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Vis Gop

unread,
Aug 5, 2017, 1:46:15 PM8/5/17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. சிற்பர என்பது இறைவனைக் குறித்த விளிச்சொல்.
ஒரு தினை என்பதைச் சிறிதளவு என்ற பொருளில் பயன் படுத்தினேன். 
'ஒருதினைக் கருணைசெய்யே' - ஒற்று வராதோ?
கோபால்.

Sent from my iPad

Vis Gop

unread,
Aug 5, 2017, 1:51:09 PM8/5/17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ரஜ்ஜா.
கோபால்

Sent from my iPad

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 5, 2017, 3:38:53 PM8/5/17
to சந்தவசந்தம்
விளக்கத்திற்கு நன்றி. சிவ என்று அவ்வடியில் பின்னர் விளிப்பதால் முதலில் காணும் சிற்பர என்பது ஊழை குறிக்கும் அடைச்சொல் என்ற எண்ணம் எழுந்தது. தினைக் கருணை- தினையளவு கருணை என்னும்போது ஒற்று வரும்.

அனந்த்

Ram Ramakrishnan

unread,
Aug 5, 2017, 3:42:20 PM8/5/17
to santhav...@googlegroups.com
Yes, Ananth Ji. Certainly I missed you on that day.

Best,

Ram V Ramakrishnan

"If you cannot be a poet, be the poem"
- David Carradine
--

அவனடிமை

unread,
Aug 6, 2017, 11:38:43 PM8/6/17
to சந்தவசந்தம்
எழுசீர் விருத்தப்பா வட்டகம் அட்டகாசமாய் கொட்டியிருக்கிறது பக்தனின் உள்ளத்திலிருந்து. நெஞ்சை நெகிழ்த்தி அந்த நீலகண்டனிடம் சேர்க்கும் நிச்சயம்.
பலமுறை படித்து மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி, பணிவுடன் நமஸ்காரங்கள், விஸ் கோபால் அவர்களே.

//பித்தொடு பித்தனாய்ப் பின்னியே ஒன்றுவேனே// -
பித்துவிட் டுனைநேர் பித்தனாக் கினையருள்
....பித்தந் தெளிமருந் தருணாசலா! - என்கிற பகவான் இரமண மஹர்ஷியின் கண்ணியை நினைவூட்டுகிறது.

Vis Gop

unread,
Aug 7, 2017, 12:52:03 AM8/7/17
to santhav...@googlegroups.com
நான் உண்மையில் கொடுத்து வைத்தவன். ஹரிகி இங்கே இட்ட பலவற்றுள் நானும் ஒன்று.
உங்கள் பின்னூட்டம் உற்சாகம் அளிக்கிறது.
நான் அந்தப் பாடலை எழுசீர் விருத்தம் என்று தெரிந்து கொள்ளவில்லை. இரண்டு ஈரடிச் சீர்களை ஒன்றாக இணைத்து ஒவ்வோர் அடியிறுதியிலும் எழுதி இருப்பது நீங்கள் சொல்லியே அறிகிறேன். மிக்க நன்றி, திரு அவனடிமை மூர்த்தி.
கோபால்.

அவனடிமை

unread,
Aug 7, 2017, 1:14:15 PM8/7/17
to சந்தவசந்தம்
பேராசிரியர் அனந்த் ஐயாவின் சிவஸ்துதி ஒவ்வொன்றும் பக்தர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் வரப்பிரசாதம். சிவபெருமானை குடும்ப சகிதம் மனத்தில் இருத்த பக்தர் நினைக்க, மனமோ அவன் காலடியில் போய் உட்கார்ந்துகொள்கிறது.
திருவிளையாடல் செய்யும் பெருமான் அல்லவா?
தாளில் உள்ள பக்தன் மனத்தில் நாட்டிய போஸ் கொடுப்பதாக கனவில் காண்பிக்கிறார்.
‘ஏன் இப்படித் தினமும் என் அரற்றலைக் கேட்டு அவஸ்தை படறே? ஈஸியா ஒரு வழி சொல்றேன்: பேசாம என் மனசுக்குள்ள வந்து உட்கார்ந்துகொள்’ என்று முடிக்கிறார் பக்தர். ஆஹா, என்ன அழகு!

//

தாடரும் தண்மை இதத்தினிலே

.. தாபம் தணிந்தவென் நெஞ்சினிலே// - இவ்வரி ‘சித்தம் குளிர கதிர் அத்தம் வைத்து’ என்று பகவான் இரமண மஹர்ஷியின் அக்ஷரமணமாலை கண்ணியில் வருவது நினுவூட்டுகிறது


//யென்னால் நவிலல் எங்ஙனம்?// - ‘நான் நவிலல் எங்ஙன்?’ என்றே உரைநடைக் கட்டுரைகளில் உபயோகிப்பதாக நினைவு; பாடலாசிரியர் ‘என்னால் எப்படிச் சொல்ல முடியும்?’ என்ற பொருள் காட்ட வருவது புரிகிறது, ஆனால் ’என்னால் நவிலல் எங்ஙனம்?’ என்ற பயன்பாடு சரியா என்ற ஐயம்...

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 7, 2017, 7:15:53 PM8/7/17
to சந்தவசந்தம்
மூர்த்தி அவர்களின் பின்னூட்டத்திற்கு என் நன்றி. நீங்கள் சுட்டியபடி,  என்னால் நவிலல் எங்ஙனம்? என்பதற்குப் பதிலாக நான் நவிலல் எங்ஙனம் என்றிருப்பதே சரியான பிரயோகம்*.   அதன்படி திருத்திய பாடல் வடிவம்:

தாடரும் தண்மை இதத்தினிலே

.. தாபம் தணிந்தவென் நெஞ்சினிலே


ஆடிடக் கண்டேன் அரன்குடும்பம்

..  அனைத்தும் அவனுடன் சேர்ந்(து)அந்த


நாடகம்  அதனின் அழகினைநான்

.. நவிலல் எங்ஙனம்அவருடனே


கூடியென் நெஞ்சும் குதித்திடக்கை

.. கூடும் நாள்வரக் காத்திருப்பேன்.


மீண்டும் என் நன்றி.


அனந்த் 

Vis Gop

unread,
Aug 8, 2017, 1:40:41 AM8/8/17
to santhav...@googlegroups.com
நவிலல் எங்ஙனம்?
என் அறியாமைக்கு இப்போது தான் இது பற்றிய ஐயம் வருகிறது.
நவிலல்  என்பது நவில் என்ற வினையின் பெயர்ச் சொல் வடிவம் தானே? வாக்கியத்தில் வினைச்சொல் ஒன்று வேண்டும் அல்லவா?
"நான் நவிலல் எங்ஙனம்?" என்றால் "நான் நவிலல் என்னும் செயலை எங்ஙனம் செய்வேன்?" என்று தொக்கி நிற்கும் சொற்களைச் சேர்த்தே முழு வாக்கியத்தின் பொருள் கொள்ள முடியும் அன்றோ?
அப்படியானால்,
"என்னால் நவிலல் எங்ஙனம்?" என்கையில் "என்னால் நவிலல் என்னும் செயல் எங்ஙனம் செய்யப்பட முடியும்?" என்றும் பொருள் கொள்ள முடியும் அன்றோ?
பணிவுடன் நன்றியுடன்
கோபால்.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 8, 2017, 7:49:07 AM8/8/17
to சந்தவசந்தம்
நீங்கள் சுட்டிய பொருளிலேயே "என்னால் நவிலல் எங்ஙனம்?" என்று முதலில் அமைத்தேன். எனினும் 'நான் நவிலல் எங்ஙனம்’ என்பது நேரடியாகப் பொருளைத்தருமென்பதால் அவ்வாறு மாற்றினேன். இருவருக்கும் நன்றி.

அனந்த்


-- 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 18, 2017, 10:54:24 PM8/18/17
to சந்தவசந்தம்

இன்று மீண்டும் சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்


                 திருச்சிற்றம்பலம்

 

            <> திருவடிப் பெருமை <>


          

நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்

பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த

சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த

வன்னெமன் கண்டனன் மன்னவநீசெயும் மாயமென்னே.

                                    *****


          

மாயை விலக்கும் மருந்தெனச் சாற்றுமுன் மாவடிக்கீழ்

தோயும் சுரர்தம் முடியெனச் சொல்வர் துதிப்பதற்கு

வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்

தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே!

                                    *****




காலற்குன் காலுமந்தக் காமற்குக் கண்ணும்விண்

பாலலைந் தோர்க்குனது புன்சிரிப்பும் – சாலப்

பரிந்தளித்தாய் நீஎனக்குப் பாருள் இரக்கத்

திரிகையிலுன் தாள்தூசி தா.

 

விண்பால்… புன்சிரிப்பும்திரிபுர சம்ஹாரத்தைக் குறிப்பதுபரிந்தளித்தாய் –  தண்டித்தருளுவதைக் குறித்ததுதாள்தூசிபுணர்ந்தபின்தாட்டூசி.)

                                    *****

         


அடியார் எனும்சிலர் ஐயனேஉன்னை

அடிப்பார் செருப்பால்கல் வில்லால் – அடியேன்நான்

உன்னை அடியேன் உவந்துன் அடியிணையை

என்னுள்ளே வைப்பேன்இரு.

 

..அனந்த் 19-8-2017


2017-08-04 22:59 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                      திருச்சிற்றம்பலம்


           
           

 <> குடி கொண்டதுவே <>


பஞ்சினின் மென்தாள் பாவையொடு

.. பரமன் பனிவரை மீதினிலே


குஞ்சர முகத்தோன் குமரனுடன்

.. கூடி நடத்திடும் குடித்தனத்தை 


நெஞ்சினில் இருத்த நினைத்தேன்நான்

.. நிகழ்ந்த தேதென அறிவீரோ


தஞ்சமென் றெனது நெஞ்சமவன்

.. தாளின் கீழ்க்குடி கொண்டதுவே!

                

                        ****


தாடரும் தண்மை இதத்தினிலே

.. தாபம் தணிந்தவென் நெஞ்சினிலே


ஆடிடக் கண்டேன் அரன்குடும்பம்

..  அனைத்தும் அவனுடன் சேர்ந்(து)அந்த


நாடகம்  அதனின் அழகையென்னால்

.. நவிலல் எங்ஙனம்? அவருடனே


கூடியென் நெஞ்சும் குதித்திடக்கை

.. கூடும் நாள்வரக் காத்திருப்பேன்.

(தாடரும் = தாள்தரும்)

 

                        ****


நாடொறும் இந்த வகையாக

.. நானென் நனவிலும் கனவிலுமாய்


ஆடலின் அரசே! உன்னைநினைத்(து)

.. அரற்றல் கண்டினி மேலுமிங்ஙன்


வாடிட லாகா வழியொன்றை

.. வகுத்தல் எளி(து)இனி வெளியிலுனைத்


தேடிட வேண்டா(து) என்னுள்ளே

.. திகழும் உன்னுரு தெரியவைப்பாய்.


                          ****

                                         ..அனந்த் 5-8-2017

Vis Gop

unread,
Aug 19, 2017, 1:07:06 AM8/19/17
to santhav...@googlegroups.com
காலத்தைக் காலற்கும் காட்டியவன் கண்ணப்பன்
காலொத்தி வைக்கத்தன்  கண்பெற்றான் - ஆலத்தால்
நீலத்தை ஏந்துகிற நெஞ்சுடையான் காலழகுச்
சீலத்தைச் சொன்னவிதம் சீர்!

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

2017-08-19 8:24 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

இன்று மீண்டும் சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்


                 திருச்சிற்றம்பலம்

 

            <> திருவடிப் பெருமை <>


நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்

பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த

சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த

வன்னெமன் கண்டனன் மன்னவநீசெயும் மாயமென்னே.

                                    *****

மாயை விலக்கும் மருந்தெனச் சாற்றுமுன் மாவடிக்கீழ்

தோயும் சுரர்தம் முடியெனச் சொல்வர் துதிப்பதற்கு

வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்

தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே!

                                    *****

காலற்குன் காலுமந்தக் காமற்குக் கண்ணும்விண்

பாலலைந் தோர்க்குனது புன்சிரிப்பும் – சாலப்

பரிந்தளித்தாய் நீஎனக்குப் பாருள் இரக்கத்

திரிகையிலுன் தாள்தூசி தா.

 

விண்பால்… புன்சிரிப்பும்திரிபுர சம்ஹாரத்தைக் குறிப்பதுபரிந்தளித்தாய் –  தண்டித்தருளுவதைக் குறித்ததுதாள்தூசிபுணர்ந்தபின்தாட்டூசி.)

                                    *****

அடியார் எனும்சிலர் ஐயனேஉன்னை

Vis Gop

unread,
Aug 19, 2017, 1:20:47 AM8/19/17
to santhav...@googlegroups.com

प्रदोषस्तवम् - பிரதோஷப் பாடல் [19 ஆகஸ்டு 2017]

[பாவினம்: இந்த்ரவஜ்ரம்;  ஒவ்வோர் அடியிலும் ஒற்று நீங்கலாக 11 எழுத்துகள்;

(தமிழ் போல் அடியெதுகை முயற்சி.)]


क्वाहो शिव त्वं तव किं स्वरूपं ?

श्वाहं न जाने तव पादगन्धम् |  1

मोहान्धकारे  चिरमेव मग्नः

नाहं तु जाने तव दृष्टिकान्तिम् | 2

काकोस्म्यपक्षः प्ररुदन् प्रजल्पन्

मूकोस्म्यहं ते लघुनामगाने |   3

वृक्षस्तु सम्यक् चरति स्वधर्मं

कुक्षिप्रवृत्तिः भुवि मे प्रधानम् |  4

शीलाः स्तुवन्ति प्रणमन्ति च त्वां 

कालव्ययो मे सहजप्रभावः  |     5

क्षुद्दाह शान्त्यै पशुवच्चरामि

विद्या विहीनः परतत्व मूढः |   6

शम्भोzसि नित्यं नटने रमन् त्वं

दंभाव भागिन् कुरु मे च किञ्चित् |  7

हे पार्वतीशिन् करुणाभिधान

पापात् अविद्यात् मम देहि मुक्तिम् |  8


க்வாஹோ ஶிவ த்வம் தவ கிம் ஸ்வரூபம் ?
ஶ்வாஹம் ந ஜானே தவ பாதகந்தம் |   1
[க்வ அஹோ ஶிவ த்வம் = சிவனே, நீ எங்குதான் இருக்கிறாய்?  தவ கிம் ஸ்வரூபம் = உன் வடிவமென்ன ?
ஶ்வா அஹம் ந ஜானே தவ பாத-கந்தம் = நான் உன் திருவடியின் மணமறியாத நாயானேன்.]

மோஹாந்தகாரே  சிரமேவ மக்ன​:
நாஹம் து ஜானே தவ த்ருஷ்டிகாந்திம் |  2
[மோஹ-அந்தகாரே = ஆசை மயக்கமான இருளில்;  சிரமேவ மக்ன​: = நிரந்தரமாக மூழ்கி இருக்கிறேன்.
ந அஹம் து ஜானே தவ த்ருஷ்டி-காந்திம் = உன் பார்வையின் ஒளியை நான் அறிந்திலேன்.]

காகோஸ்ம்யபக்ஷ​: ப்ரருதன் ப்ரஜல்பன்
மூகோஸ்ம்யஹம் தே லகு நாம கானே |    3
[காக: அஸ்மி அபக்ஷ​: ப்ரருதன் ப்ரஜல்பன் = அரற்றிக் கொண்டும் பிதற்றிக் கொண்டும் இறக்கையற்ற ஒரு காக்கையாக இருக்கிறேன்;    மூக: அஸ்மி அஹம் தே லகு-நாம-கானே = உன்னுடைய எளிய பெயர் சொல்லிப் பாடுவதில் ஊமையாகி விட்டேன்.]

வ்ருக்ஷஸ்து ஸம்யக் சரதி ஸ்வதர்மம்
குக்ஷிப்ரவ்ருத்தி​: புவி மே ப்ரதானம் |   4
[வ்ருக்ஷ: து ஸம்யக் சரதி ஸ்வதர்மம் = மரம் கூடத் தன் கடமையை நன்றாகக் கடைப்பிடிக்கிறது;
குக்ஷி-ப்ரவ்ருத்தி​: புவி மே ப்ரதானம் = எனக்கோ இந்தப் பூமியில் வயிற்றுக்கான வேலைகளே முதன்மை பெறுகின்றன.]


ஶீலா​: ஸ்துவந்தி ப்ரணமந்தி ச த்வாம்
காலவ்யயோ மே ஸஹஜப்ரபாவ​:  |      5
[ஶீலா​: ஸ்துவந்தி ப்ரணமந்தி ச த்வாம் = சான்றோர்கள் உன்னைப் புகழ்ந்துகொண்டும் வணங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்; கால-வ்யய: மே ஸஹஜ-ப்ரபாவ​: = காலத்தை (வீணாய்க்) கழித்துக் கொண்டிருப்பதே என் இயல்பின் சிறப்பு!]

க்ஷுத்தாஹ ஶாந்த்யை பஶுவச்சராமி
வித்யா விஹீன​: பரதத்வ மூட​: |    6
[க்ஷுத் தாஹ ஶாந்த்யை பஶுவத் சராமி = பசி தாகம் இவைகளைத் தணித்துக் கொள்வதற்காக விலங்குபோல் அலைந்து கொண்டிருக்கிறேன்;  வித்யா விஹீன​: = கல்வியறிவு அற்றவனாவேன்;   பரதத்வ மூட​: = இறையுண்மையின் தெளிவற்றவனாவேன்.]

ஶம்போzஸி நித்யம் நடனே ரமன் த்வம்
தம்பாவ பாகின் குரு மே ச கிஞ்சித் |   7
[தம்பாவ பாகின் ஶம்போ = மங்கையோர் பாகனான சம்புவே! அஸி நித்யம் நடனே ரமன் த்வம் = எப்போதும் நீ நடனம் ஆடுவதிலேயே களித்துக் கொண்டிருக்கிறாயே!   குரு மே ச கிஞ்சித் = எனக்கும் சிறிது செய்யே!]

ஹே பார்வதீஶின் கருணாபிதான
பாபாத் அவித்யாத் மம தேஹி முக்திம் |   8
[ஹே பார்வதீஶின் = ஓ பார்வதியின் மணாளனே! கருண அபிதான = கருணையுடையவன் என்று பெயர் பெற்றவனே! பாபாத் அவித்யாத் = பாவத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும்; மம தேஹி முக்திம் = எனக்கு விடுதலை கொடு.]

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

M. Viswanathan

unread,
Aug 19, 2017, 3:55:32 AM8/19/17
to Santhavasantham
அன்புக் கவிஞர் அனந்த் அவர்களின் பிரதோஷக் கவிதை, தொண்டர்களின் சிறப்பைச் சொல்வதோடு 
அத்தொண்டில் தன்னையும் இணைக்க ஏங்கும் மனத்தைக் காட்டுவது மிக அழகு. 


அடியார் எனும்சிலர் ஐயனேஉன்னை

அடிப்பார் செருப்பால்கல் வில்லால் – அடியேன்நான்

உன்னை அடியேன் உவந்துன் அடியிணையை

என்னுள்ளே வைப்பேன்இரு................................அருமையான கவிதை.


அன்பன்,

மீ.விசுவநாதன்


Siva Siva

unread,
Aug 19, 2017, 12:41:48 PM8/19/17
to santhavasantham
Nice!
Good effort to use edhugai in each couplet.

Vis Gop

unread,
Aug 20, 2017, 11:42:19 AM8/20/17
to santhav...@googlegroups.com
Thank you. I had attempted edhugai in the poem on Tricolour too.
gopal

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 2, 2017, 11:27:11 PM9/2/17
to சந்தவசந்தம்

இன்று பிரதோஷ நன்னாள்.


                           திருச்சிற்றம்பலம் 




                          <> தவறாமோ? <> 

 

வான்கொண்ட தேவர்களும் மறைகண்ட முனிவரும்

.. மாலுமய னாரு மறியாத்

தேன்கண்ட பாதமலர் சிரம்கொண்ட அடியவர்

.. தினமெலாம் காணு(ம்) விதமாய்

மான்கொண்ட கரமுமொரு மழுக்கொண்ட கரத்தொடு

.. மன்றில்நீ ஆடு மெழிலை

ஏன்கண்டு களிக்கின்றாய் எனக்கேட்க லாகுமோ?

.. இதுவுமொர் களியுன் றனுக்கோ?                                                        1.

 

கார்கொண்ட குழலியின் கைகொண்ட தேவன்நீ

.. கயிலையின் மேல தெனவோர்

சீர்கொண்ட தில்லையாம் பேர்கொண்ட ஊரதில்

.. சித்தெனும் வத்து வடிவில்

நேர்கொண்ட  ஞானியர் அகங்கண்டு மகிழ்வதை

.. நேரிலே எவரும் காணத்

தார்கொண்ட தாளொடு சதிர்கொண்டு நடித்தல்நான்

.. தரிசனம் செய்தல் தவறோ?

 

(சித்மெய்யறிவு, பரம்பொருள்வத்துவஸ்து, இங்கு, பருப்பொருள் சிதம்பரத்தில் சிதாகாசமாகவும்நடராச வடிவாகவும் ஐயன் காட்சி தருவதைக் குறிப்பதுநேர் = உண்மைதகுதி)                                                                          2. 

 

சூல்கொண்ட தாய்தரு ஊண்கொண்டு வளர்ந்தொரு

.. துயரிலா திருக்கும் கருப்போல்

கோல்கொண்டு நோய்பல குடிகொண்ட எனக்கும்நீ

.. குறைவிலா தருள்வை எனவுன்

பால்கொண்ட நம்பலால் நீகொண்ட பாலன்நான்

.. பாங்குடன் கனக சபையில்

கால்கொண்டு தாண்டவம் களிகொண்டு நீசெயல்

.. காண்பதோர் பெரிய தவறோ?  

 

(நம்பல் நம்பிக்கைபாங்குஅழகுஒழுங்கு)                         3.

  

ஊன்கொண்ட உடலமிஃ(து) உயிர்கொண்ட போதிலே

.. உன்நினைப் பென்னு மொன்றை

நான்கொண்டு வந்திலேன் நீகொண்டு வைத்தனை

.. ன்(கு)இதை அறிவை முன்னம்

தேன்மண்டு கூந்தலாள் துணைகொண்டிவ் வெளியனைத்

.. தில்லையில் ஆண்ட பாங்கைக்

கூன்கொண்ட பிறையினை முடிகொண்ட கூத்தனே      

.. கூறுவாய் உலகி னுக்கே.                                                               4.

 

கான்கொண்டு சென்றிடக் கோல்கொண்டென் மேனியைக்

.. கடத்திடும் வேளை நெருங்கி

ஊன்கொண்ட உருவமும் நான்கொண்ட தம்பமும்

.. உதவிடாப் போதில் இவனை

வான்கொண்டு வா’வென நீதண்ட னுப்பிட

.. மார்க்கமொன் றுள்ள தெனவே

நான்கண்டு கொண்டனன் நீநடம் ஆடலை

.. நாடொறும் காணல் அதுவே.            

 

(தம்பம் = வீண்/தற்பெருமைதண்டு = சிவிகை)                    5.

 

அனந்த் 3-9-2017


(எழுசீர் ஆசிரிய விருத்தம்.  படம்: ‘நடராசப் பெருமான்’ திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2001) 


அனந்த் 3-9-2017

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 2, 2017, 11:43:21 PM9/2/17
to சந்தவசந்தம்
Typo correction:
களியுன் றனுக்கோ?  - களியுன் றனக்கோ

M. Viswanathan

unread,
Sep 3, 2017, 1:57:31 AM9/3/17
to Santhavasantham
ஆற்றுநீர் ஓட்டம் போன்ற மிக அழகான மரபில் சிவனை அமர்த்தி அழகு பார்த்த கவிஞரைப் போற்றுகிறேன்.

Swaminathan Sankaran

unread,
Sep 3, 2017, 7:43:06 AM9/3/17
to santhav...@googlegroups.com
'ஊன்கொண்ட உடலமிஃ(து) உயிர்கொண்ட போதிலே

.. உன்நினைப் பென்னு மொன்றை

நான்கொண்டு வந்திலேன் நீகொண்டு வைத்தனை'


'                                                              இவனை

வான்கொண்டு வா’வென நீதண்ட னுப்பிட

.. மார்க்கமொன் றுள்ள தெனவே

நான்கண்டு கொண்டனன் நீநடம் ஆடலை

.. நாடொறும் காணல் அதுவே. '


நான் மிகவும் ரசித்த வரிகள். அருமை, அனந்த்.


சங்கரன்            





--
 Swaminathan Sankaran

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 3, 2017, 10:45:54 PM9/3/17
to சந்தவசந்தம்
பிரதோஷப் பாடலைப் படித்தோர்க்கும், ரசித்துப் பின்னூட்டம் தந்தோர்க்கும் எனது நன்றி🙏. 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 16, 2017, 10:01:55 PM9/16/17
to சந்தவசந்தம்
          இன்று பிரதோஷ நன்னாள்

                         <> துணையாய்த் தேர் <>

           


பாரானை விண்ணானைப் பற்றினோர் தம்குறையைப்

பாரானை முக்கட் பரமனைச் –சீர்க்கொன்றைத்

தாரானைத் தன்னடிசேர் அன்பர்க்கு மீள்பிறவி

தாரானை யாரேத்தா தார்?


வார்கடல் சூழுலகின் மையமெனக் காட்சிதரும்

பேரூரென் றூரார்சொல் தில்லையிலே – பேராளன்

தானந்தம் ஆதியிலாத் தன்மையன் என்றுணர்வோர்

ஆனந்தம் கூறவல்லார் ஆர்?


ஓரடியை மண்ணில்வைத் தோரடியை மேற்றூக்கிச்

சீராக ஆடும் சிதம்பரத்தான் – பேர்சொல்லி

ஆறாய்க்கண் நீர்சொரிய அங்கம் புளகிக்கும்

பேறடைந்தார்க் கார்நிகரா வார்?


ஆரார் அவன்பேர் அறையார் அவனழகைப்

பாராதார் யாரே? பதம்பணிந்து – ஏறேறி

ஊரார்முன் ஊரும் ஒருவனைத் தில்லையெனும்

ஊரானை ஓராதார் ஆர்?


பேரானைத் தோலுடுத்தும் பேயானைப் பித்தனெனும்

பேரானைத் தன்னிலையில் பேரானை – தேராரைச்

சேரானைச் செல்வி சிவகாமி நேயனெனுஞ்

சீரானை உன்துணையாய்த் தேர்.


(தேரார் – தெளிந்த அறிவில்லாதார், பகைவர்.  படம்:  திரு. கணபதி ஸ்தபதி,  ’நடராசப் பெருமான்’  திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2001 

.. அனந்த் 17-9-2017

M. Viswanathan

unread,
Sep 16, 2017, 11:26:40 PM9/16/17
to Santhavasantham
அருமையான சிவத்துதி படைத்த கவிஞர் அனந்த் அவர்களுக்கு நமஸ்காரம்.

"செந்தீயைக் கையேந்திச் செந்தீயாய் நிற்பானை
மந்திரத்தைத் தந்தானை மாசிவனை சந்திரனைச் 
சொந்தமுடன் ஏற்றானைச் சொக்குகிற வெண்பாவில்
வந்தனைதான் செய்தானை வாழ்த்து."......அன்பன் மீ.விசுவநாதன் 

Saranya Gurumurthy

unread,
Sep 17, 2017, 2:02:54 AM9/17/17
to santhav...@googlegroups.com
உருக வைக்கும் அருமையான வெண்பாக்கள் ஐயா.

அடியேனின் அர்ப்பணம்.

மழுவேந்தும் மாதேவன் வார்சடையன் வெள்ளைக்
குழையணி காதுடையன் கொன்றைத் தொடையன்
வழுவையின் தோலை வடகமெனப்  பூணும்
அழகன் சிவனை அடை.

சரண்யா
17-09-17

2017-09-17 7:31 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
          இன்று பிரதோஷ நன்னாள்

Vis Gop

unread,
Sep 17, 2017, 5:31:51 AM9/17/17
to santhav...@googlegroups.com
திரு அனந்தின் பாடலில் உருகாதார் ஆர்?

தானந்தம் ஆதியிலான் தாண்டவத்தில் அல்பகலாய் 
ஆனந்தம் தான்காண்பான்! அங்கென்றும் கானந்தான் 
வேதந்தான் கோஷந்தான் மேளந்தான் என்றுணர்த்தும் 
நீதந்த நேரிசைவெண் பா!


[5 ஆகஸ்ட் 2017இல் இடப்பட்ட 8 பிரதோஷப் பாடல்களுடன், அவற்றின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட புதிய 12 பாடல்களையும் சேர்த்து இங்கே பணிவுடன் இடுகிறேன்.]
 
பிரதோஷப் பாடல் [5 Aug 2017]

பித்தவுன் பேரருட் பெருமையைப் பேசவே பேறெனப் பேச்சளித்தாய் 
கத்தவும் கதறவும் கற்றயான் நின்புகழ் கழறவும் எனதுநாவில் 
சத்தியும் சித்தமும் தந்துநீ பாடிடத் தண்டமிழ்ச் சொல்வளந்தா!
பத்தரின் நெஞ்சினில் பதமிடும் பரமஇப் பாமரன் பாட்டிலாடே!        (1)

தந்தையே மின்னிடும் தங்கமாம் அம்பலத் தட்டினில் ஆடும்நீயென் 
சிந்தையில் வந்தவண் சிறிதுநின் றா(டு)உனைச் சிக்கெனப் பிடிக்கமாட்டேன் 
அந்தழற் கண்ணினால் அங்குநீ கண்டிடும் ஆணவம் சுட்டுவிட்டால் 
பிந்திடும் நாளெலாம் பித்தொடு பித்தனாய்ப் பின்னியே ஒன்றுவேனே!  (2)

சொற்பொருள் தேர்ந்தவர் சுந்தரத் தமிழினில் சொக்கிடும் சோமநாதா 
அற்பனுக்(கு) அத்தனை அறிவிலை ஆயினும் அரற்றுதல் கேட்டிலாயோ?
தற்பதம் கண்டிடும் தவமெனக் கில்லைநீ தயவுடன் கண்டிடாயேல் 
சிற்பர ஊழினில் சிக்குவேன் சிக்கிடில் சிவவுனைச் சேர்வதென்றே!           (3)

அப்பநீ அறிவினை அழகினில் கூட்டியோர் அறுமுகக் கடவுளென்னும் 
சுப்பனைத் தந்தவன்; சொல்முதல் ஒலிமுதல் சூக்குமப் பிரணவத்தைத் 
தொப்பையில் வைத்தமா தும்பியும் தந்தவன்; துளியறி(வு) எனக்குமீய 
ஒப்பிடில் உன்புகழ் உணர்வுடன் பாடுவேன் ஒருதினைக் கருணைசெய்யே!   (4)

ஆடுவாய், ஆலவாய் ஐயனே ஆலடி அமர்ந்தவா(று) அகிலமெல்லாம் 
ஊடுவாய் ஆற்றலால், உண்மைஞா னந்தனை ஊட்டுவாய், சித்தினோடே 
கூடுவாய், சித்தரின் கூட்டமே நாடுவாய், கூத்திலா னந்தமாவாய்,
மூடுவாய் யாதையும், மோனமே யாகுவாய் முடியடி இலாதவாறே!       (5)

என்(று)அருள் பெற்றவர் எந்தை நினைப்புகழ்ந்(து) ஏத்துவர், ஆய்ந்தபோதும் 
ஒன்றும் உணர்ந்திலன்; உன்பெயர் கேட்கிலோ உள்மனம் பூக்கலானேன்!
கொன்றை விரும்பி!நின் கோவிலின் வாயிலில் கும்பிடும் போ(து)உவந்தேன்!
மன்றில் நடம்புரி மன்னவ நின்னெழில் மண்ணவர் பெற்றபேறே!                          (6)

சம்புநின் சந்நிதித் தரிசனம் கிட்டியான் சங்கர உன்னைஅன்னை 
அம்பிகை பார்வதி அங்கயற் கண்ணியோ(டு) ஆடிடக் காணவேண்டும் 
உம்பருக் காகநீ உரகனின் கடுவிடம் உண்ணவும் தயங்கவில்லை!
நம்புவேன் உன்னையே நம்புவேன் நீமனம் நைந்தருள் செய்வையென்றே!       (7)

கங்கையைச் சடையினில் கசடிலாத் திங்களின் கலையுடன் ஏந்துமீச!
தங்கிநீ வாழ்ந்திடத் தக்கதென் நெஞ்சிலை, தாங்கொணாப் பாவமண்டி!
பொங்கிடும் ஆற்றுநீர் புல்லையும் காத்திடப் பொசிவதைப் போலஐயே 
கங்கிலாக் கருணையே கதியிலா எனைக்கணம் காலினால் தீண்டுவாயே!     (8)

பிரதோஷப் பாடல் தொடர்ச்சி:  17 செப் 2017

நாரணன் பன்றியாய் நான்முகன் பட்சியாய் நனிமுயன்(று) அலைந்தபோதும் 
பூரண! நின்முடி பூவடி கண்டிலர் புல்லனுக் கொண்ணுமோகொல்!
ஓரணங் கோடுறைந்(து) ஒன்றிடும் நின்புகழ் ஓதிடும் அடியவர்கால் 
சூரணம் சென்னியில் சூடவே வினையெலாம் சூரண மாகுமன்றே !             (9)

சுடுதழல் ஏந்திடும் சுந்தரச் சொக்கனே சொன்னவம் பலத்திலேறி 
நடுவினில் ஆடிடும் நாயக நீநின நானிலம் மறக்கலாமோ?
அடுகளத் திடையினில் ஆடுபோல் நல்லறம் ஆனதை நோக்கியின்னே 
நெடுதுயில் செய்யும்உன் நெற்றியின் கண்ணினால் நீதியை நிறுவுகையே!    (10)

நாத்திகம் கூடியே நல்லறம் நாட்டினில் நலிந்திடும் நாளிலுன்னைத் 
தோத்திரம் பாடிடத் தூண்டினை ஆதலால் தூத்தமிழ்ச் சொல்லமைத்தே 
யாத்திடும் ஞானமும் யானுறத் தருகவென் யாப்பினில் இன்பமாகக்  
கூத்திடும் சந்தமாய்க் கொஞ்சிடும் மொழியுமாய்க் கூடிநீ ஆடவாவே!    (11)

சோதிநீ என்றனர் சுத்தமெய்ஞ் ஞானம்நீ சொல்லொணாச் சத்தியென்றார் 
ஒதிடும் மறையெலாம் உன்னருள் மூச்சதன் உள்ளுறை உண்மையெட்டா 
ஆதிநீ என்றனர் அந்தமே அற்றதோர் ஆற்றலென்(று) அவருரைத்தார்!
யாதிவை என்றிவண் யாண்டுணர் வெட்டுவேன் யாக்கையெத் தனையெடுத்தே?  (12)

ஆவுடை அம்மையின் அணைப்பில்இ லிங்கமாய் அங்கமாய் ஆனஈசா!
நோவுடை நண்புமாய் நோயினுக்(கு) உறவுமாய் நூறென வாழ்ந்தபோதும் 
சாவுடைச் சொந்தமாய்ச் சகதியில் சொக்கிடும் சடவுடல் தந்ததென்றன் 
கோவுடைச் சித்தமோ கூத்தனின் உத்தமோ கொள்கையோ சாக்குமுண்டோ?   (13) [உத்தம் = பித்தேறுகை]

பஞ்சபூ தங்களால் பாரெலாம் யாத்(து)அதில் பல்லுயிர் சேர்த்தவுன்னை 
விஞ்சவோ வீட்டவோ விள்ளவோ மண்ணிலோ விண்ணிலோ யாருமுண்டோ?
அஞ்செழுத் தாகநீ அழலகற் சுடரென அடங்குவை அன்பினாலே!  [(பெருந்)தீ ஒரு அகலில் (சிறு) சுடராவது போல]
தஞ்சமுன் அன்புதான் தாளடித் தூளிதான் தகவிலா அடியனுக்கே!    (14)

தோடணிந்(து) ஆடிடும் சுந்தர என்னையுன் தொண்டினுக் காகவன்றோ
கூடணிந்(து) உலகினில் கும்பிடக் கையுடன் குரலுடன் தோற்றுவித்தாய்!
நாடமைக் கழித்துனில் நாட்டமே அற்றுநான் நாயெனப் போயினேனே!                 [நாள் தம்மை]
காடணைந்(து) ஓயுமுன் காலமும் நின்துதி கைவரச் செய்குவாயே !      (15)

மாமரக் கீழானாய் மாநகர் காஞ்சியில் மன்னனாய்க் கோவில்கொண்டு 
காமமார் கண்ணினாள் கைப்பிடித் தெழிலுடன் காளையின் மீதமர்வோய்      [காமாட்சி]
சோமனை வேணியில் சூட்டிய சுந்தர சோமநின் பேரழைக்க        [சோமன்=நிலவு, உமையோடு கூடியவன்]
நாமணம் பெற்றிடும் நாடிகள் நினையுறும்; நாமமச் சோமமன்றே!     (16)   [சோமம்=தேவர்கள் களிக்கும் பானம்]

என்பிலாப் புழுவையும் என்னலம் கருதிநான் இரக்கமற்(று) அழித்ததுண்டு 
தின்பதற் காகவும் தீயதென்(று) அறிந்துமே திருடிய துண்டுயாண்டும் 
அன்பகன்(று) அறிகிலா அன்னையத் தன்சொலை அலட்சியம் செய்ததுண்டிங்(கு) 
இன்பமென்(று) எண்ணியே ஈசனே நினைமறந்(து) இழிவெலாம் ஈட்டினேனே!    (17) 

காசினிக் கரசனாய்க் காசியில் கசடவிழ் கங்கையின் கரையில்வாழ்வோய்!
மாசினில் ஊறியே மானிடப் பிறவியின் மாண்பினை மாய்த்துவிட்டேன்.
ஈசியின் பங்கனே இண்றுனைக் கெஞ்சிடும் ஏழைமேல் நின்பதத்தின் 
தூசிவீழ்ந்(து) அன்றியான் தூய்மைஎன்(று) எய்துவேன் தூவெனா(து) ஆட்கொளாயே!  (18)

கற்றிலேன், பிறப்பிதின் காரணம் ஓர்ந்திலேன், கடமையும் அறிகிலேனே 
உற்றிலேன் உண்மையென்(று) ஒன்றையும், இதுவரை உய்வழி தெரிந்திலேனே 
எற்றிகம் நீத்தபின் இன்னொரு வாழ்வென எள்ளனைத்(து) உணர்ந்திலேனே!       [எற்று = எத்தன்மையது]
வற்றியான் வீழ்கையில் வாய்நினைக் கூப்பிடும் வரஞ்சிறி(து) அருளுவாயே!    (19) 

தந்தையாய் அண்ணலே தாயுமாய் ஆனவ தரணியுன் மகவுதானே 
எந்தையுன் பிள்ளைகள் எண்ணிலர் என்பதால் என்னைநீ முனியமாட்டாய்! 
விந்தையே ஐயநீ விண்ணையும் மண்ணையும் விதியுடன் ஆட்டுமாற்றல்!
இந்தவோர் ஏழையன் எளியனின் விதியுனோ(டு) இணைவதே ஆகுகையே!       (20) 

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

------


2017-09-17 7:31 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
          இன்று பிரதோஷ நன்னாள்

                         <> துணையாய்த் தேர் <>

      பாரானை விண்ணானைப் பற்றினோர் தம்குறையைப்

பாரானை முக்கட் பரமனைச் –சீர்க்கொன்றைத்

தாரானைத் தன்னடிசேர் அன்பர்க்கு மீள்பிறவி

தாரானை யாரேத்தா தார்?

. . . .

Saranya Gurumurthy

unread,
Sep 17, 2017, 7:31:35 AM9/17/17
to santhav...@googlegroups.com
அருமை ஐயா. சிறிய அளவில் ஒன்று தோன்றியது. 

சுடுதழல் ஏந்திடும் சுந்தரச் சொக்கனே சொன்னவம் பலத்திலேறி 
நடுவினில் ஆடிடும் நாயக நீநின நானிலம் மறக்கலாமோ?
அடுகளத் திடையினில் ஆடுபோல் நல்லறம் ஆனதை நோக்கியின்னே 
நெடுதுயில் செய்யும்உன் நெற்றியின் கண்ணினால் நீதியை நிறுவுகையே!    (10)

சுந்தரச் சொக்கனே என்று வந்ததால், சொன்ன அம்பலத்திற்குப் பதில் வெள்ளி அம்பலம் என்று அமைக்கலாமோ? 

சுடுதழல் ஏந்திடும் சுந்தரச் சொக்கனே வெள்ளியம் பலத்திலேறி 

சரண்யா. 

Vis Gop

unread,
Sep 17, 2017, 9:41:28 AM9/17/17
to santhav...@googlegroups.com

நீங்கள் சொல்வது பொருந்தாமல் போக வாய்ப்பில்லை. இந்த இழை பெரும்பாலும் தில்லைக்கானது. மேலும் ஐந்தாம் சீரில் நான் மோனை அமைத்திருக்கிறேன். ஆகவே சொக்கன் தில்லை ஐயனே ஆனான்!
நன்றியுடன் கோபால்.

Saranya Gurumurthy

unread,
Sep 17, 2017, 9:54:18 AM9/17/17
to santhav...@googlegroups.com
Ok sir. Fine. Thank you. 

Regards, 
Saranya. 

Siva Siva

unread,
Sep 17, 2017, 11:57:36 AM9/17/17
to santhavasantham
அழகிய பாடல்கள்.

முதற்பாடலிலும் ஈற்றுப் பாடலிலும் மடக்கு நயத்தை இன்னும் கூட்டுகின்றது.


2017-09-16 22:01 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
          இன்று பிரதோஷ நன்னாள்

                         <> துணையாய்த் தேர் <>

           

பாரானை விண்ணானைப் பற்றினோர் தம்குறையைப்

Kaviyogi Vedham

unread,
Sep 17, 2017, 1:22:08 PM9/17/17
to santhavasantham

  அன்பரே அநந்த்,

 வாழ்க உம் ப்ரதோஷப் பாடற் சுடர்ப்புகழ்! பரவசமும் சிலிர்ப்பும் அடைந்த என் நா இதோ சில வரிகள் விடுத்ததே!,.
 .
 மீள்பிறவி தாரானைப் பாடியென் மீதும்
 ..மிகப்பாச மதுவைத்த நண்பர் அநந்த்!--சிவன்
தாள்பற்றில் கைப்பற்றித் தாள்--பெற்றி வரைந்தகவி!
 ..தன்னாலே  நெகிழ்ந்து நெகிழ்ந்(து) ஆறாகச்சொரிய,
தாள்உண்ட கண்ணீரால்  ஆநந்தம் எனவே குதித்து,
 ...தானும் புகழறைந்து சிவன்புகழைப் பகிர்ந்தகவி வாழி!
 யோகியார்
( வரி வந்த வேகத்தில் மரபு அடங்க வில்லை திமிறியது.. மன்னிக்க.. அவர் வரிகளால்
 அவரைப்பாடிய சிறுவன் யான்!)-
 யோகியார்



ramaNi

unread,
Sep 18, 2017, 12:02:13 AM9/18/17
to சந்தவசந்தம்
இலந்தையாரின் 'ஆனை'களை நினைவூட்டும்,  'ஆனை'களை வைத்துச் செய்த சிவத்துதி வெண்பாக்கள் அருமை, அனந்த் ஸார். 
ரமணி

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 19, 2017, 6:32:08 PM9/19/17
to சந்தவசந்தம்
பிரதோஷத் துதியைப் படித்தோர்க்கும் பின்னூட்டம் அளித்தோர்க்கும் என் மனமார்ந்த  நன்றி. 

அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 26, 2017, 11:16:10 PM9/26/17
to சந்தவசந்தம்
கோபாலின் எழுசீர் விருத்தங்கள் அனைத்தும் மிக அழகு, அருமை. கருத்தும், உருக்கமும் சொல்லோடு கைகோத்து ஆடுகின்றன. 

அனந்த்
தாமதமான பின்னூட்டம் தருமாறு நேர்ந்தது. மன்னிக்கவும்
முடியடி இலாதவாறே!       (5)  - முடியடி அற்றவாறே என்றால் ஓசை சிறக்கும்.
இண்றுனைக் கெஞ்சிடும்.. (18) - தட்டச்சு 

Vis Gop

unread,
Sep 27, 2017, 12:51:56 AM9/27/17
to santhav...@googlegroups.com
இப்போதுதான் என் பிரதோஷப் பாடல்களின் பயன் கிடைத்தது. மிக்க நன்றி.
இரண்டு திருத்தங்களுக்கும் நன்றி.

திருத்தப்பட்ட பாடல்கள்:

ஆடுவாய், ஆலவாய் ஐயனே ஆலடி அமர்ந்தவா(று) அகிலமெல்லாம் 
ஊடுவாய் ஆற்றலால், உண்மைஞா னந்தனை ஊட்டுவாய், சித்தினோடே 
கூடுவாய், சித்தரின் கூட்டமே நாடுவாய், கூத்திலா னந்தமாவாய்,
மூடுவாய் யாதையும், மோனமே யாகுவாய் முடியடி அற்றவாறே!       (5)

காசினிக் கரசனாய்க் காசியில் கசடவிழ் கங்கையின் கரையில்வாழ்வோய்!
மாசினில் ஊறியே மானிடப் பிறவியின் மாண்பினை மாய்த்துவிட்டேன்.
ஈசியின் பங்கனே இன்றுனைக் கெஞ்சிடும் ஏழைமேல் நின்பதத்தின் 

தூசிவீழ்ந்(து) அன்றியான் தூய்மைஎன்(று) எய்துவேன் தூவெனா(து) ஆட்கொளாயே!  (18)
நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 2, 2017, 9:53:50 PM10/2/17
to சந்தவசந்தம்

<> பூத உடல் <>


 

நீரில் மிதந்து கருவாகி

.. நிலத்தில் விழுந்து காற்றிழுத்துப்

பாரில் திரிந்து பல்லோரும்

.. பாவி யென்னும் படியாய்வாழ்ந்(து)

ஊரின் வெளியே தீயில்புகும்

.. உடலம் இதனைக் கொண்டுன்னை

நேரில் காணல் எனும்விந்தை

.. நிகழ வைத்தல் நின்கடனே

 

எல்லாம் அறிந்த வல்லோன்நீ

.. எனக்கோர் உடலம் தந்தசெயற்

குள்ளே ஒளிந்த காரணத்தை

.. உணரா திருந்திந் நாள்வரையில்

பொல்லா நினைப்போ(டு) உரை,செயலைப்

.. புரிந்து வந்தோன் எனஅறிந்தும்

நல்லோய் எனையும் நின்னடியை

.. நாட வைத்தல் நின்கடனே

 

குழியில் விழுந்து தவிப்பவனின்

.. கூச்சல் கேட்டுக் கைதரல்போல்

அழிவை நோக்கி விரையுமென்னை

.. அன்பின் வடிவே நீதடுத்துன்

எழிலைக் காட்டி ஈர்த்துன்றன்

.. இணையடி தன்னைச் சார்வதற்கு

வழியைக் குறித்துன் அடியவனாய்

.. வாழ வைத்தல் நின்கடனே.

 

காற்றும் நீரும் நெருப்புமிவன்

.. கயவன் நல்லோன் எனப்பாரா(து)

ஊற்றம் தருமாப் போலாகும்

.. உன்றன் கருணை எனப்பெரியோர்

சாற்றல் கேட்(டு)இன்(று) உன்கமலச்

.. சரணம் நாடி வந்தேனைத்

தூற்றா தென்றன் மனமாசைத்

.. தொலைத்துக் காட்டல் நின்கடனே

 

நாட்டம் எல்லாம் என்றனுக்கு

.. நலிவைக் கொடுக்கும் நினைவுகளில்

தேட்டம் எல்லாம் என்றனுக்குச்

.. சீரைக் கெடுக்கும் செல்வத்தில்

வாட்ட மடைந்தேன் இவற்றாலே

.. வழியொன் றிதுவென் றுன்னடியார்

கூட்டம் சொல்கேட்(டு) உன்முன்கை

.. கூப்பி நின்றேன் ஏற்பாயே.


(காற்றிழுத்து - காற்றைச் சுவாசித்து)


.. அனந்த்

2/3-10-2017                 


2017-09-16 22:01 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
          இன்று பிரதோஷ நன்னாள்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 2, 2017, 9:57:20 PM10/2/17
to சந்தவசந்தம்

முன்னிடுகையின் தலைப்பு விட்டுப் போனது:


இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

M. Viswanathan

unread,
Oct 2, 2017, 10:39:55 PM10/2/17
to Santhavasantham
மிக அருமையான பிரதோஷக் கவிதை. 

"காற்றும் நீரும் நெருப்புமிவன்

.. கயவன் நல்லோன் எனப்பாரா(து)

ஊற்றம் தருமாப் போலாகும்

.. உன்றன் கருணை எனப்பெரியோர்

சாற்றல் கேட்(டு)இன்(றுஉன்கமலச்

.. சரணம் நாடி வந்தேனைத்

தூற்றா தென்றன் மனமாசைத்

.. தொலைத்துக் காட்டல் நின்கடனே"...........உள்ளம் தொட்ட வரிகள்.


அன்பன்,

Siva Siva

unread,
Oct 2, 2017, 11:03:53 PM10/2/17
to santhavasantham
Nice. 

2017-10-02 21:53 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

<> பூத உடல் <>


--> /கூட்டம் சொல்கேட்(டுஉன்முன்கை
கூட்டம் சொலக்கேட்(டுஉன்முன்கை?

Kaviyogi Vedham

unread,
Oct 2, 2017, 11:18:11 PM10/2/17
to santhavasantham
 Enakkup pdiththa varikaL.

காற்றும் நீரும் நெருப்புமிவன்

.. கயவன் நல்லோன் எனப்பாரா(து)

ஊற்றம் தருமாப் போலாகும்

.. உன்றன் கருணை எனப்பெரியோர்

சாற்றல் கேட்(டு)இன்(றுஉன்கமலச்

.. சரணம் நாடி வந்தேனைத்

தூற்றா தென்றன் மனமாசைத்

.. தொலைத்துக் காட்டல் நின்கடனே

 mika abaramana song.

 yogiyar

ramaNi

unread,
Oct 2, 2017, 11:25:41 PM10/2/17
to சந்தவசந்தம்
மேனிப் பற்றினை மெய்ஞ்ஞானப் புலம்பலாய்
ஊனுருக விளக்கி உரைத்தது மிகவழகு!
ரமணி


On Tuesday, October 3, 2017 at 7:23:50 AM UTC+5:30, ananth wrote:

<> பூத உடல் <>

Vis Gop

unread,
Oct 3, 2017, 1:14:50 AM10/3/17
to santhav...@googlegroups.com
மிக அருமை. குறிப்பாக முதல் பாடல் நெகிழ வைக்கிறது. நீரில், நிலத்தில், பாரில், ஊரின் வெளியே, தீயில், நேரில் .... படிப்படியாக! அருமை! அருமை!

மாசுற் றுலகில் உழலுகிற
   மனிதப் பிறவி தந்தவனே
தூசும் தட்டிக் குறைநீக்கித்
   தூய்மை யாக்கி உள்ளத்தில்
தேசும் கூட்டித் திருவடியில்
   சேர்த்துக் கொளவும் வேண்டுமெனப்
பேசும் பாடல் அந்தமிலான்                [அந்தமிலான் அளித்த, அந்தமிலான் அடைந்த]
   பேறே அன்றி யாதென்பேன்?

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

2017-10-03 7:26 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

முன்னிடுகையின் தலைப்பு விட்டுப் போனது:


இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

2017-10-02 21:53 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

<> பூத உடல் <>


Vis Gop

unread,
Oct 3, 2017, 1:23:18 AM10/3/17
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் [3 அக்ட் 2017]
புல்லர்க்கும் தெய்வம் 

எல்லாமே நீயென்(று) இயம்பினர் முற்றுணர்ந்தோர் !
கல்லாத நானும் கடவுளா? - சொல்லாயோ
மண்ணினால் ஆன மதியேனை மெய்ப்பொருளாய்
எண்ணத் தகுமோ இவண்?                                          (1)

பெற்றேன் உயிரை, பிழைத்திருக்கப் பூமியிலே
குற்றம் மிகுந்த கொடுவழிகள் - கற்றுழல்வேன்!
சற்றும் நிலையாச் சலனத்தால் ஆனநான்
எற்றுன் இறைமைக்(கு) இணை!                                 (2)

எழுதிரைக் கப்பால் என்னுள்நீ உள்ளாய்!
பழுதறக் கற்றோர் பகன்றார்! - முழுக்கார்
இருட்டினுள் சோதி இருக்குமோ? எங்ஙன்
பொருப்பொரு புல்லினுள் போம்?                         (3)

அல்லலும் ஆசையும் ஆட்டிக் குலுக்கிடத்
தொல்லையில் பாடுறும் தூசெங்கே? - தில்லையில்
நில்லா நடத்தில் நிலைபெற்ற நீயெங்கே?
புல்லல் புரியாப் புதிர்!                                          (4)

ஊனைச் சமைத்தாங்(கு) உயிரை அமைத்தநீ
வானை நிகர்த்தவன்! வாரிதிநீ! - ஏனைய!
ஊனேதான் நானென்(று) உழம்புமோர் சிற்றுயிர்
கோனேயும் ஆகுமோ கொல்!                              (5)

அற்பன் அறிகில்லேன், ஆனால் அனுபூதிப்
பொற்புடையோர் சொற்களென்றும் பொய்யாகா! - அற்புதமாய்க்
காலணிநா(டு) ஆண்ட கதையுண்டு! நானென்றுன்
மேலணியும் நீறாகு வேன்?                                 (6)

என்னென்பேன் உன்னோக்கில் ஏற்றமிலை தாழ்வுமிலை!
என்னென்பேன் உன்னாடற்(கு) ஈடுண்டோ! - என்னென்பேன்
இச்சகம் காக்கின்ற ஈசுரன்றான் ஓடேந்திப்
பிச்சை எடுக்கின்ற பித்து!                                   (7)

என்னுள்நீ உண்டென்றால் ஏழு திரையிட்டே
உன்னை மறைக்கா(து) ஒளிமயமாய் - முன்னெழுந்து
பொங்கிப் பெருமிதமாய்ப்  புல்லர்க்கும் தெய்வமென
இங்குப் பறைசாற்ற ஏகு!                               (8)

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.  [3 Oct 2017]

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 3, 2017, 2:54:31 PM10/3/17
to சந்தவசந்தம்
பிரதோஷப் பாடல் பற்றி அன்புடன் கருத்துக் கூறிய அனைவருக்கும் என் நன்றி.

அனந்த்
பி.கு. மூன்றாம் பாடலின் மூன்றாம் அடியில் நான்காம் சீரை மாச்சீராகத் திருத்திய வடிவம்:

எழிலைக் காட்டி ஈர்த்துன்றன்

.. இருதாள் தம்மைச் சார்வதற்கு

 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 3, 2017, 11:16:49 PM10/3/17
to சந்தவசந்தம்
> இருட்டினுள் சோதி இருக்குமோ? எங்ஙன் 
> பொருப்பொரு புல்லினுள் போம்?

> ஊனேதான் நானென்(று) உழம்புமோர் சிற்றுயிர் 
> கோனேயும் ஆகுமோ கொல்!      

உங்கள் வினாக்களால்  இறைவனைத் தர்மசங்கடத்தில்  மாட்டி வைத்த அழகை இரசித்தேன்!  தொடர்ச்சியான எண்ண ஓட்டமும் இறுதி வேண்டுகோளும்  அழகு.

அனந்த்
எற்றுன் இறைமைக்(கு) இணை!     --  எற்று (= எது, யாது, எத்தன்மைத்து) என்பது இங்குப் பொருந்துமா எனத் தெரியவில்லை.

 


2017-10-03 1:23 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:
பிரதோஷப் பாடல் [3 அக்ட் 2017]
புல்லர்க்கும் தெய்வம் 

எல்லாமே நீயென்(று) இயம்பினர் முற்றுணர்ந்தோர் !
கல்லாத நானும் கடவுளா? - சொல்லாயோ
மண்ணினால் ஆன மதியேனை மெய்ப்பொருளாய்
எண்ணத் தகுமோ இவண்?                                          (1)


என்னுள்நீ உண்டென்றால் ஏழு திரையிட்டே
உன்னை மறைக்கா(து) ஒளிமயமாய் - முன்னெழுந்து
பொங்கிப் பெருமிதமாய்ப்  புல்லர்க்கும் தெய்வமென
இங்குப் பறைசாற்ற ஏகு!                               (8)

நல்வாழ்த்துகளுடன்,

Vis Gop

unread,
Oct 4, 2017, 1:17:45 AM10/4/17
to santhav...@googlegroups.com
எற்றுன் இறைமைக்(கு) இணை!     --  எற்று (= எது, யாது, எத்தன்மைத்து) என்பது இங்குப் பொருந்துமா எனத் தெரியவில்லை.
மிக்க நன்றி.
எற்று  என்பதை எவ்வாறு என்ற பொருளில் பயன் படுத்தினேன். மாற்ற முயல்கிறேன்.
நன்றியுடன் கோபால்.

2017-10-04 8:46 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 16, 2017, 10:25:10 PM10/16/17
to சந்தவசந்தம்

இன்று பிரதோஷ நன்னாள்

 திருச்சிற்றம்பலம்

 

             

​              

நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்

பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த

சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த

வன்னெமன் கண்டன் மன்னவ! நீசெயும் மாயமென்னே.

 

மாயை விலக்கும் மருந்தெனச் சாற்றுமுன் மாவடிக்கீழ்

தோயும் சுரர்தம் முடியெனச் சொல்வர் துதிப்பதற்கு

வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்

தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே!

 

காலற்குன் காலுமந்தக் காமற்குக் கண்ணும்விண்

பாலலைந் தோர்க்குனது புன்சிரிப்பும்  சாலப்

பரிந்தளித்தாய் நீஎனக்குப் பாரெல்லாம் ஏற்றில்

திரிந்திடுமுன் தாட்டூசி  தா.

 

(விண்பால் அலைந்தோர் = விண்ணில் மூன்று கோட்டைகளில்  (திரிபுரம்) அலைந்த அசுரர்கள்; பரிந்தளித்தாய்   தண்டித்தருளுவதைக் குறித்தது; தாட்டூசி = தாள்தூசி.)


அனந்த் 17-10-2017 

ramaNi

unread,
Oct 16, 2017, 10:34:18 PM10/16/17
to சந்தவசந்தம்
பாடல் அருமை. ஈற்றுச் செய்யுள் இனிமை.
ரமணி

Vis Gop

unread,
Oct 17, 2017, 1:24:17 AM10/17/17
to santhav...@googlegroups.com

. . . . . .வேடன் மிதியடியைத்

தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னேஅற்புதம்!


கால்காண மாலற்குத் தந்திலைநீ! கண்ணப்பன்

கால்கண்ணில் தாங்கிக் கனிந்ததென்னே! - கால்தூக்கிக்

கால்வைத்து நீயாடக் காணத்தா! யானுய்வேன் 

கால்மண்ணால் நீதொட்டக் கால்!


நல்வாழ்த்துகளுடன்

கோபால்.


2017-10-17 7:54 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

இன்று பிரதோஷ நன்னாள்

 திருச்சிற்றம்பலம்

 ​              

நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்

பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த

சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த

வன்னெமன் கண்டன் மன்னவ! நீசெயும் மாயமென்னே.

 

Vis Gop

unread,
Oct 17, 2017, 1:28:16 AM10/17/17
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் [17 Oct 2017]
[கூவிளம் கூவிளம் தேமா கூவிளம் புளிமாங்கனி]

நம்மவன் நடராசனே!
மாமலை யான்மகள் கொண்டு வாமபா கமிணைத்தவன்
காமனைக் கண்ணனல் வீசிக் காய்ந்தவன் கருணாகரன்
சோமனை வேணியில் வைத்த சுந்தரன் சுடரானவன்
நாமமார் சொல்லினும் இன்பம் நல்குவன் நடராசனே!   (1)

வேலனை மேலெனக் கொண்டு வேதமந் திரமேற்றவன்
மாலனை வேதனை எத்தும் மாபரம் பொருளானவன்
காலனை எற்றிஅன் பன்மார்க் கண்டனுக் கருளீந்தவன்
நாலனைத் தண்டமும் காக்கும் நாயகன் நடராசனே!    (2) [நாலும் அண்டங்கள் அனைத்தும்]

வேடனாய் வில்லுடன் தோன்றி வீரனுக்(கு) அசிதந்தவன்
பாடலால் துள்ளிடும் ஏமன் பாங்கினுக்(கு) அடிதந்தவன்
ஆடலால் கண்டவர் நெஞ்சை அள்ளிடும் அழகானவன்
நாடவே றாருளர் நம்பி? நம்மவன் நடராசனே!      (3)

தும்பியோ(டு) அம்பியும் கொஞ்சித் தோய்ந்திடத் தொடைமீதினில் 
அம்பிகை அன்பினிற் சேர ஆமிசை அமரும்பரன்
பம்பரம் நாடிடச் சுற்றிப் பாட்டுடன் நடமாடுவான்
நம்பினோர் கேட்டதை ஈயும் நல்லவன் நடராசனே!    (4)

பெண்ணினைப் பங்கினிற் கொண்டு பெற்றநம் பெருமானவன்
அண்ணலே ஈசனே என்றவ் அப்பனின் அடிநாடினால்
பண்ணிய பாவமும் போக்கிப் பார்வையின் அருளூட்டுவான்
நண்ணுவான் நம்மிடம் தானே நட்புடன் நடராசனே!   (5)

பொன்னெழில் அம்பலத் தேறிப் பூதலம் புனிதப்படத்
தன்னிடக் காலினைத் தூக்கித் தாண்டவச் சதிராடுவான்
சென்னிமேல் சற்றதை வைத்தால் சீவனும் சிவமாகுமே!
நன்னடை நன்னயம் கொண்டோர் நாவெலாம் நடராசனே! (6)

நல்வாழ்த்துகளுடன்,
கோபால் [17 Oct 2017]

Siva Siva

unread,
Oct 17, 2017, 8:38:45 AM10/17/17
to santhavasantham
அழகிய பாடல்கள்.
2017-10-16 22:24 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

இன்று பிரதோஷ நன்னாள்

 திருச்சிற்றம்பலம்

 

                

நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்

பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த

சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த

வன்னெமன் கண்டன் மன்னவ! நீசெயும் மாயமென்னே.


--> /வன்னெமன் 
வன்னமன்?

 

மாயை விலக்கும் மருந்தெனச் சாற்றுமுன் மாவடிக்கீழ்

தோயும் சுரர்தம் முடியெனச் சொல்வர் துதிப்பதற்கு

வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்

தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே!


--> /வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்
"வாயில் புனலொடு வந்தவொர் வேட்டுவன் வார்ச்செருப்பை" என்று இருந்தால் 5-ஆம் சீரிலும் மோனை அமையுமோ?

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 18, 2017, 5:42:30 PM10/18/17
to சந்தவசந்தம்
என் பாடலுக்குப் பின்னூட்டம் தந்தோர்க்கு என் நன்றி.

அனந்த்

சிவசிவா கேட்டவை: வன்னெமன் = வன் எமன். 
வேடன் மிதியடியை -- வேட்டுவன் வார்ச்செருப்பை" என்று இருந்தால் 5-ஆம் சீரிலும் மோனை அமையுமோ? -- எழுதும்போது அவ்விடத்தில் மகர ஓசையன்றி மோனை பற்றிக் கருதவில்லை.  நீங்கள் சுட்டியபடியோ வேறு விதமாகவோ மாற்றப் பார்க்கிறேன். நன்றி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 18, 2017, 6:46:32 PM10/18/17
to சந்தவசந்தம்

சந்த ஓசையோடு, - குறிப்பாக, ஈற்று இரு சீர்களில் விளம்- கனி ஓசையுடன், நன்கு அமைந்த பாடல்.

 

அனந்த்

 

> வாமபா கமிணைத்தவன் – வகையுளியத் தவிர்த்தால் ஓசை சிறக்கும். 

 

> மாலனை வேதனை எத்தும் மாபரம் பொருளானவன் 

எத்தும் (எவ்விதத்திலும்) –  சுந்தரரின் எத்தான் மறவாதே நினைவுக்கு வந்தது. எத்தும் விஞ்சும் என்பது போல இருக்க வேண்டுமோ?

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 31, 2017, 11:07:28 PM10/31/17
to சந்தவசந்தம்

இன்று பிரதோஷ நன்னாள்.


திருச்சிற்றம்பலம்




<> தொலைவு உளதோ? <>

 

கடவுளை நீங்கள் அடைவதற்குக்

.. காண்பீர் இதுவோர் வழிஎன்பார்

 

கடந்து செல்லத் தொலைவின்றிக்

.. கணமும் பிரியா வணமாய்என்

 

உடனி ருக்கும் நடத்தரசை

.. ஒன்றத் தொலைவென் றேதுளது?

 

கடல்மீன் தாகத் தால்வாடக்

.. கண்டார் உளரோ சொல்வீரே!**

 

                    ******


கல்லி னுள்ளே மரத்துள்ளே 

.. கடலுள் ஐந்து பூதத்துள்

 

எல்லாப் பொருள்கள் தம்முள்ளும்

..  இயல்பாய் நிற்கும் பேருணர்வு,

 

நல்லோர் உள்ளக் குகையினுள்ளே

.. நாளும் ஒளிரும் விளக்(கு)இங்கே

 

தில்லைப் பதியின் நாயகனாய்த்

.. திகழும் அழகைக் காண்பீரே.

 

                    ******


வில்வம் திகழும் அணிசடையில்

.. வீழும் புனலும் நிலவொளியும்

 

சொல்லற் கரிய எழில்பொதிந்த

..சுடர்செம் பவளத் திருமுகத்தில் 

 

மெல்ல அரும்பும் புன்னகையும்

.. வேதத் தொலியாய்க் காலெழுப்பும்

 

சல்சல் ஒலியும் சேரநமைச்

.. சேர்ப்பான் மெய்ம்மைச் சிவத்துள்ளே.

 

(** இந்த உவமை பரமஹம்ஸ யோகானந்தா அவர்களின் ஆங்கில உரையொன்றில் கண்டது.)


..
அனந்த் 1-11-2017
----------------------------------

ramaNi

unread,
Nov 1, 2017, 10:05:07 AM11/1/17
to சந்தவசந்தம்
அருமை, அனந்த் ஸார்.
நடத்தரசை => சொல்லாட்சி அருமை. நடத்துனர், ஓட்டுனர் எல்லாம் ஈசன் தானே!
குகையினுள்ளே => குகையுள்ளே எனலாமோ?

அன்புடன், ரமணி


On Wednesday, November 1, 2017 at 8:37:28 AM UTC+5:30, ananth wrote:

இன்று பிரதோஷ நன்னாள்.


திருச்சிற்றம்பலம்



VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 1, 2017, 11:09:54 AM11/1/17
to சந்தவசந்தம்
நன்றி, ரமணி. ’குகையுள்ளே’ ஓசை நன்று, அப்படி மாற்றுகிறேன்.

அனந்த் 

Ramamoorthy Ramachandran

unread,
Nov 2, 2017, 7:24:20 AM11/2/17
to santhav...@googlegroups.com

[க்வ அஹோ ஶிவ த்வம் = சிவனே, நீ எங்குதான் இருக்கிறாய்?  தவ கிம் ஸ்வரூபம் = உன் வடிவமென்ன ?
ஶ்வா அஹம் ந ஜானே தவ பாத-கந்தம் = நான் உன் திருவடியின் மணமறியாத நாயானேன்.]


[மோஹ-அந்தகாரே = ஆசை மயக்கமான இருளில்;  சிரமேவ மக்ன​: = நிரந்தரமாக மூழ்கி இருக்கிறேன்.
ந அஹம் து ஜானே தவ த்ருஷ்டி-காந்திம் = உன் பார்வையின் ஒளியை நான் அறிந்திலேன்.]

காக: அஸ்மி அபக்ஷ​: ப்ரருதன் ப்ரஜல்பன் = அரற்றிக் கொண்டும் பிதற்றிக் கொண்டும் இறக்கையற்ற ஒரு காக்கையாக இருக்கிறேன்;    மூக: அஸ்மி அஹம் தே லகு-நாம-கானே = உன்னுடைய எளிய பெயர் சொல்லிப் பாடுவதில் ஊமையாகி விட்டேன்.]

வ்ருக்ஷ: து ஸம்யக் சரதி ஸ்வதர்மம் = மரம் கூடத் தன் கடமையை நன்றாகக் கடைப்பிடிக்கிறது; 
குக்ஷி-ப்ரவ்ருத்தி​: புவி மே ப்ரதானம் = எனக்கோ இந்தப் பூமியில் வயிற்றுக்கான வேலைகளே முதன்மை பெறுகின்றன.]

[ஶீலா​: ஸ்துவந்தி ப்ரணமந்தி ச த்வாம் = சான்றோர்கள் உன்னைப் புகழ்ந்துகொண்டும் வணங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்; கால-வ்யய: மே ஸஹஜ-ப்ரபாவ​: = காலத்தை (வீணாய்க்) கழித்துக் கொண்டிருப்பதே என் இயல்பின் சிறப்பு!]

[க்ஷுத் தாஹ ஶாந்த்யை பஶுவத் சராமி = பசி தாகம் இவைகளைத் தணித்துக் கொள்வதற்காக விலங்குபோல் அலைந்து கொண்டிருக்கிறேன்;  வித்யா விஹீன​: = கல்வியறிவு அற்றவனாவேன்;   பரதத்வ மூட​: = இறையுண்மையின் தெளிவற்றவனாவேன்.]

[தம்பாவ பாகின் ஶம்போ = மங்கையோர் பாகனான சம்புவே! அஸி நித்யம் நடனே ரமன் த்வம் = எப்போதும் நீ நடனம் ஆடுவதிலேயே களித்துக் கொண்டிருக்கிறாயே!   குரு மே ச கிஞ்சித் = எனக்கும் சிறிது செய்யே!]

ஹே பார்வதீஶின் = ஓ பார்வதியின் மணாளனே! கருண அபிதான = கருணையுடையவன் என்று பெயர் பெற்றவனே! பாபாத் அவித்யாத் = பாவத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும்; மம தேஹி முக்திம் = எனக்கு விடுதலை கொடு.]


எங்குளாய்,  நீநின்றன்   வடிவென்ன   என்பதை   என்றுமுண  ராதநாயேன்!
      இகத்தாசை     இருளிலே   மூழ்கினேன்!   நின்பார்வை   எல்லொளியுள் நான்மூழ்கிலேன்!
வெங்காக   மிறகின்றிக்  குழறல்போல்  கரைந்துநின்  பேர்சொலா   மூங்கையானேன்!
       விருட்சங்கள்   கனிதர  வீண்வயிற்  றுணவுக்கே  வெவ்வேறு  பணிசெய்கிறேன்!
 இங்குள்ள  சான்றோர்நின் புகழ்போற்றக்    காலத்தை  இழிவாக்கிப்  பாழாக்கினேன் !
        என்தாகம்  பசிபோக்க  எங்கெங்கும் ஓடுவேன்! இறைநின்னை  அறிந்திடேன் நான்!
மங்கையோர்  பங்கனே!  மகிழ்ச்சியோ   டாடுவாய்!   வழங்குவாய்  எனக்குமதையே!
         வளரருட்  பெயரனே! அவிச்சைபா வம்போக்கும் மலைமகள்  மணவாளனே!

சும்மா மொழி பெயர்த்துப் பார்த்தேன் ! அன்புடன் புலவர் இராமமூர்த்தி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Vis Gop

unread,
Nov 3, 2017, 12:58:31 AM11/3/17
to santhav...@googlegroups.com
தங்கள் தமிழ்ப் பாடல் மூலத்தை விடச் சிறப்பாக இருக்கிறது.
நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.


2017-11-02 16:54 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:

. . . . .

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 3, 2017, 10:17:48 AM11/3/17
to சந்தவசந்தம்
> தங்கள் தமிழ்ப் பாடல் மூலத்தை விடச் சிறப்பாக இருக்கிறது. நல்வாழ்த்துகளுடன்,
> கோபால்.

  ஆம். மொழியாக்கத்தில் இத்தனை தேர்ச்சிபெற்ற  நீங்கள் இதுபோல் இன்னும் பல  இயற்றி இங்கிடல் நன்று.

>  இகத்தாசை     இருளிலே   மூழ்கினேன்!   நின்பார்வை   எல்லொளியுள் நான்மூழ்கிலேன்! அருமை. 

அனந்த்  

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 14, 2017, 10:49:03 PM11/14/17
to சந்தவசந்தம்

இன்று பிரதோஷ நன்னாள்.


     திருச்சிற்றம்பலம்



     <> மறக் கருணை <>

 

(வாய்பாடு: மா மா காய் மா மா காய்)


அழித்தல் உன்றன் தொழிலென்றிங்(கு)

.. அனைவர் சொல்லக் கேட்டுள்ளேன்


விழிப்பில் தொடங்கித் தொலைவிண்ணில்

.. மீன்கள் மறையும் வேளைவரை


பழிக்கும் செயலே புரியுமென்றன்

.. பாவச் சுமையை நீதயைசெய்(து)


அழிக்கின் உலகோர்க் குன்தொழிலுள்

.. அடங்கும் கருணை விளங்கிடுமே.


                       ***********


தோன்றல் நிலைத்தல் அழிதலெனும்

.. சுழலில் சிக்கி மாயையுள்வேர்


ஊன்றி அவருள் உறைமெய்யை

.. உணரா தென்றும் உழல்வதுபோல்


தோன்ற வைக்கும் உன்ஜாலம்

.. தெரிந்தோர்க் குண்டோ பிறப்பிறப்பு?


ஆன்ற அந்த அறிவையெனக்(கு)

.. அருளும் நாளும் எந்நாளோ?


                      ***********


ஒட்டி உன்னோ டுறைமங்கை

.. உன்றன் இடக்கை ஏந்தியதீச்


சட்டி தன்னை விடுத்துச்செந்

.. தாமரை தாங்கி நிற்கையிலுன்


இட்டம் போல அழிக்கும்வினை

.. எவ்வா றாற்று வாய்அறியேன்


நட்டம் பயிலும் நாத!உனை

.. நன்க றிந்தார் எவருளரே!


                      ***********

செய்தற் கான தொழிலொன்றைச்

.. சீராய் இறுதி வரைஆற்றல்


வையத் தோர்க்கு வழங்கும்நல்

.. வார்த்தை; இங்கு நீஎன்னை


உய்விப் பதற்குத் தொடங்கிவைத்த

.. உன்றன் தொழிலை முடித்திலையேல்


ஐய! எனக்குக் கதிதரஇங்(கு)

.. ஆருள் ளார்?யான் என்செய்வேன்?


                      ***********


(வாய்பாடு: காய் மா காய் மா மா காய்)

 

அளித்தாலும் என்னை அழித்தாலும்

.. அருள்தந் தாலும் தராயெனினும்


களித்தாடும் ஞான நடத்தோய்!உன்

.. கழலின் நிழல்விட் டகலாமல்


விளிப்பேனுன் தேனார் திருநாமம்

.. வினையேன் பாலுன் திருவிழிகள்


துளியேனும் வீழும் வரைஎன்னைத்

.. துரத்த முயலல் ஆகாதே.

 

(படம்: “நடராசப் பெருமான்”, திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2001)


.. அனந்த் 15-11-2017

Ramamoorthy Ramachandran

unread,
Nov 14, 2017, 11:28:29 PM11/14/17
to santhav...@googlegroups.com
என்னை   நானே    உணராமுன்   என்னுள்   நீயே    இருப்பதனை 
முன்னே   உணர்த்தி  எனைமீட்டல் முதல்வா நின்றன் செயலன்றோ?
பின்னும்    பிணிகள்   பெருகாமல்   பீழை   யில்லாப்   பிரதோஷ 
நன்னாள்  இன்றுன்    நயனத்தால்    நாயேற்  கருடான்   நல்காயோ?

இன்னும்  இன்னும்   பலபாவம்  ஏழை  நாயேன்   இயற்றுவதோ?
முன்னே   நிற்கும்    திருநந்தி     மூச்சுக்   காற்றால்  ஊஞ்சலதும் 
பின்னும்   முன்னும்   அசையுங்கால்  பெருகும்  கருணை  விழியாற்றில்   
முன்னைப்   பாவ   மூட்டைகள்   முழுதும்   மூழ்கிக்  கரையாவோ?

சிவாய நம:   - பணிவுடன்,  புலவர் இராமமூர்த்தி        


Vis Gop

unread,
Nov 15, 2017, 12:10:13 AM11/15/17
to santhav...@googlegroups.com
திரு அனந்தின் பாடல் மிக அருமை!

வையம் படைத்தல் காத்தலெலாம்
...வள்ளல் அருளின் பயனன்றே!
மெய்யில் அனைத்தும் அவனோடே
...மீண்டும் இணையப் பிறந்தவையே!
ஐயன் நடத்தின் விளைவாலே
...அருள மறந்தே போகாமல்
பைய அழைத்தே உய்வருளப்
...பாடிக் கேட்ப(து)உம்  பக்குவமே!

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.
 
...

2017-11-15 9:18 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

இன்று பிரதோஷ நன்னாள்.


     திருச்சிற்றம்பலம்


Vis Gop

unread,
Nov 15, 2017, 2:18:03 AM11/15/17
to santhav...@googlegroups.com
புலவரின் பாடல் மிக அழகு!
என்னை   நானே    உணராமுன்   என்னுள்   நீயே    இருப்பதனை 
முன்னே   உணர்த்தி  எனைமீட்டல் முதல்வா நின்றன் செயலன்றோ?
......  பெருகும்  கருணை  விழியாற்றில்   
முன்னைப்   பாவ   மூட்டைகள்   முழுதும்   மூழ்கிக்  கரையாவோ?    மூட்டை..கள்? - 'டை' யைச் சற்று நீட்டிப் படிக்கவேண்டுமோ?

எழுத்தை உடுக்கை உகுக்கையிலே எம்மான் சொற்கள் படைத்திட்டான்
பழுதாய் மொழிகள் பெருகாமல் பார்த்தல் அன்னான் கடன்தானே?
விழுதாய்த் தெரியும் துணையாவும் வேரை அரிக்கும் பிணியானால்
முழுதாய் அவற்றைக் கரைத்துயிரின் மூலம் காப்ப(து) அவன்பணியே!

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

Vis Gop

unread,
Nov 15, 2017, 2:53:52 AM11/15/17
to santhav...@googlegroups.com
பிரதோஷம் [15Nov 2017]

திருநாளைப் போவாரும் தில்லைக்குப் போந்தார்!
ஒருநாள் எனக்குந்தான் உண்டு!

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

ramaNi

unread,
Nov 15, 2017, 7:37:56 AM11/15/17
to சந்தவசந்தம்
அனந்த் ஸார் பாடல் மிகவும் அழகு.

அரக்கரை அழித்தே ஆட்கொண்டார்
. அருள்செய் யாமல் போவாரோ?
குரக்கரைத் திரட்டிக் கூட்டுவித்தார்
. குறைகள் களைந்தே கொள்வாரே
மரக்கரி இருளாய் மருள்சூழும்
. மனத்துக் கொளியைத் தந்தாரை
ஒருகணம் விடாமல் நினைத்திருக்கும்
. உங்கள் துதியில் இளகாரோ?

--ரமணி

*****


On Wednesday, November 15, 2017 at 9:19:03 AM UTC+5:30, ananth wrote:

இன்று பிரதோஷ நன்னாள்.


ramaNi

unread,
Nov 15, 2017, 7:40:58 AM11/15/17
to சந்தவசந்தம்
புலவரின் பாடலில் பொதிந்த வேண்டுதல் அருமை.
அன்புடன், ரமணி


Siva Siva

unread,
Nov 15, 2017, 8:46:46 AM11/15/17
to santhavasantham
2017-11-14 22:48 GMT-05:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

இன்று பிரதோஷ நன்னாள்.


     திருச்சிற்றம்பலம்


     <> மறக் கருணை <>

 

(வாய்பாடு: மா மா காய் மா மா காய்)


அழித்தல் உன்றன் தொழிலென்றிங்(கு)

.. அனைவர் சொல்லக் கேட்டுள்ளேன்


விழிப்பில் தொடங்கித் தொலைவிண்ணில்

.. மீன்கள் மறையும் வேளைவரை


--> மீன்கள் மறையும்வேளை = காலை?
--> அருள்செய் தாலும் செயாவிடினும்?

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 15, 2017, 2:54:55 PM11/15/17
to சந்தவசந்தம்
மிக அருமை.
அனந்த்
.. இரண்டாவது பாடலின் பிற்பகுதியில் உள்ள கருத்தை விளக்க வேண்டுகிறேன்.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 15, 2017, 3:08:44 PM11/15/17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி. 

> மீன்கள் மறையும்வேளை = காலை? 
ஆம்- ஒருநாள் தொடங்கி மறுநாள் புலரும் வரை.
>அ ருள்செய் தாலும் செயாவிடினும்? அவ்வா  றும் கூறலாம்.  
அருள்தந் தாலும் தராயெனினும் -  . தராயெனினும் - தாராயெனி னும் என்பதன் குறுக்கமாகக் கொள்க.;  தராவிடினும் என்னலாம்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 15, 2017, 3:09:45 PM11/15/17
to சந்தவசந்தம்
பிரதோஷப் பாடல் பற்றிப் பின்னூட்டம் தந்தோர்க்கு எனது நன்றி.

அனந்த்

-

Vis Gop

unread,
Nov 16, 2017, 5:51:44 AM11/16/17
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் (ஒரு நாள் தாமதித்து) [16 நவ 2017]

கூச்சலெலாம் கூப்பாடே!

வாவென் றுனையழைக்க மட்டுந்தான் வாய்தந்தாய்; ஆயினுமென்
நாவென்ன நான்முகனின் நாயகியே நட்டமிடும் நல்லிடமா?
நீவந்து நித்தியமாய் நிற்க நினைக்கும் நிருமலமா?
கூவிக் குரல்கொடுத்துக் கூச்சற் கிடையேதான் கூப்பிடுமே!  (1)

நற்பண் மழைதன்னில் நாயன்மார் உன்னை நனைத்தார்கள்
கற்பனையில் கண்டவர்கள் காவியம் பாடிக் களித்தார்கள்
சிற்பரமாய்த் துய்த்தவர்கள் சீவன் கரைந்துன்னில் சேர்ந்தார்கள்
அற்பன் அடியேனுக்(கு) அஃதெல்லாம் ஆகா தறிகிலையோ? (2)

நாத வடிவாக நன்றாய் உணர்ந்தோர்க்கும், நான்மறையாம்
வேத விழுப்பொருளின் வித்தென் றறிந்தோர்க்கும், வீச்சடங்கிப் 
போதம் அடைந்துன்னைப் பொத்திப் புணர்ந்தோர்க்கும் போல்,இழிந்த
ஏதம் மலிந்தேனுக்(கு) என்று புரியும் இறைவடிவே?  (3)

அமிழ்திருந்தும் ஆலம் அருந்தியவ! நீயிவ் அதமனுடைத்
தமிழ்திருந்திப் பேசுவரை தாமதித்தால் ஆகாது! தப்புகளே
குமிந்துருவாய் வந்தேனின் கூச்சலெலாம் கூப்பாடே!  கூசாதே!
நிமித்தமிது நேரமிது நீயருள வாசடிதி நீசனுக்கே!    (4)

நல்வாழ்த்துகளுடன்,
கோபால். [16 நவ 2017]

--

ramaNi

unread,
Nov 16, 2017, 7:32:48 AM11/16/17
to சந்தவசந்தம்
அருமை, அழகு!
ரமணி

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 19, 2017, 11:12:05 PM11/19/17
to சந்தவசந்தம்
கருத்துச் செறிந்த பாடல். 

அனந்த்

சில குறிப்புகள்:


வாவென் றுனையழைக்க மட்டுந்தான் வாய்தந்தாய்; ஆயினுமென் 

ஈற்றுச் சீரில்  மோனையமைந்தால் சிறக்கும்

 

நாவென்ன நான்முகனின் நாயகியே நட்டமிடும் நல்லிடமா?

நாயகியே நாயகியாள்  எனலாம்         (1)

 

சிற்பரமாய்த் துய்த்தவர்கள் சீவன் கரைந்துன்னில் சேர்ந்தார்கள் 

கரைந்துன்னில் கரைந்துன்னுள்?  (2)

 

 

ஏதம் மலிந்தேனுக்(கு) என்று புரியும் இறைவடிவே?

புரியும் - புரிவாய்? (3) 

தமிழ்திருந்திப் பேசுவரை தாமதித்தால் ஆகாது! தப்புகளே 

பேசுவரை தாமதித்தால் பேசுவதைத் தாமதித்தல்

 

குமிந்துருவாய் வந்தேனின் கூச்சலெலாம் கூப்பாடே!  கூசாதே!

எல்லாச் சீர்களும் நெடிலாய் அமைவதைத் தவிர்க்கலாம்.; ஈற்றுச் சீரில் விளங்காய் வருதல் நன்று.

 

அனந்த்

 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 30, 2017, 8:12:40 PM11/30/17
to சந்தவசந்தம்

இன்று பிரதோஷ நன்னாள்.


                                திருச்சிற்றம்பலம்


                               <> எது தவம்? <>



 ​


 

உம்பர் உலகை அடைவனென

.. உஞற்றும் தவமும் உலகுதரும்

 

இன்பம் பலவும் பெறுதற்கென்(று)

.. இயற்றும் தவமும் தவமல்ல

 

துன்பம் மலிந்த பிறப்பிறப்புச்

... சுழலை விடுத்துக் கதியடையச்

 

செம்பொற் சுடராய்த் திகழ்வோன்தாள்

.. தேடல் ஒன்றே தவமாமே.

  

                    

தவத்தின் உண்மைப் பயனடைந்தோர்

..தம்முள் உறையும் பரமறிவார்

 

அவத்தை விழிப்பு கனவுள்ளும்

.. ஆழ்ந்த சுழுத்தி அதனுள்ளும்

 

சிவத்தி னின்று தாமகலாச்

.. சித்தில் நிலைப்பார் சுழன்றுவரும்

 

பவத்தை வென்றோர் அவர்பெருமை

.. சாற்றல் எவர்க்கே சாத்தியமே.

 


​                  


கோவணம் தரித்துப் பெருந்துன்பம்

.. கொளினும் உடலைக் குறியாது

 

யாவரும் வியக்க அருணையிலே

.. அமர்ந்த முனிவர் ஆர்நானென்(று)

 

ஓவா துள்ளே தேடெனவே

.. உபதே சித்து வானுறையும்

 

தேவரும் அறியா அறிவொளியில்

... திளைத்தார் அதுமெய்த் தவமாமே.

 

 

... அனந்த் 1-12-2017



2017-11-14 22:48 GMT-05:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

இன்று பிரதோஷ நன்னாள்.


     திருச்சிற்றம்பலம்



     <> மறக் கருணை <>

Ramamoorthy Ramachandran

unread,
Nov 30, 2017, 9:59:55 PM11/30/17
to santhav...@googlegroups.com
                                                               2
                                                               =                            
                                               திருச்சிற்றம்பலம் 


         பார்க்கின்ற  ,இடமெங்கும்  பரிவைக்  காட்டிப் 
               பசிக்கின்ற   போதெல்லாம்  உணவைத்த தந்தாய் ;
      வேர்க்கின்ற    உழைப்பாக   தியானந்   தன்னை 
               விதித்தென்னை  மேல்நோக்கிக்   காண வைத்தாய்;
      ஆர்க்கின்ற    சிலம்போசை   செவியை  நண்ண 
             ஆகமத்தை  உபதேசித்   தாட்சி   செய்தாய்;
     ஈர்க்கின்ற   திருநந்தி  மூச்சுக்  காற்றில் 
              இயங்குகின்றாய்   என்னுள்ளே   என்று சேர்வாய்?

     நல்லுடம்பை  கரணத்தை  நாட்டை இன்ப 
            நாட்டத்தை   அளித்திட்ட   நன்மை தன்னை 
     இல்லையெனும்   சிற்றறிவால்   இகழ்ந்தேன், மேலும்
             இருப்பதனைப்  புலன்களின்பால்  ஏற்றிக்  கொண்டே 
     வல்லவன்நான்  என்கின்ற  மனச் செருக்கால் 
             மதிக்காமல்  இறுமாந்தேன்;  மதிப்பைக்  காட்டும் 
     சொல்லறியேன்  எனக்குள்என்    துரிசை   நீக்கிச்  
             சுடராகி   நுழைந்ததுமேன்   சொல்வாய்  ஐயா!

      - அன்புடன்  புலவர் இராமமூர்த்தி. 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 30, 2017, 10:03:43 PM11/30/17
to சந்தவசந்தம்
ஈர்க்கின்ற   திருநந்தி  மூச்சுக்  காற்றில் 
              இயங்குகின்றாய்   என்னுள்ளே   என்று சேர்வாய்?

 >  சொல்லறியேன்  எனக்குள்என்    துரிசை   நீக்கிச்  
             சுடராகி   நுழைந்ததுமேன்   சொல்வாய்  ஐயா!

அடியாரின் ஏக்கத்தைக் கண்ணாடி போலப் பிரதிபலிக்கும் வரிகள்.

அனந்த்

Vis Gop

unread,
Dec 1, 2017, 12:23:54 AM12/1/17
to santhav...@googlegroups.com
தவஞ்செய்தல் ஈசனுடைத் தாளை மட்டும்
  தனித்துள்ளி இருத்தலென அனந்தன் சாற்ற
அவஞ்செய்தும் சோதியென அகத்துள் வந்த 
  ஆண்டவனின் அழகைச்சீ ராமன் சொன்னார்!
எவணிந்த நற்றமிழோ டீசன் சேரும்
   எழிலைநாம் இவ்வாறாய்க் காணக் கூடும்!
சிவனெமக்காய்ப் புண்ணியத்தைச் செய்திட் டானோ!
   சிற்சபையில் ஆடுபவன் சேட்டை தானோ!

நல்வாழ்த்துகளுடன்
கோபால்.

Siva Siva

unread,
Dec 1, 2017, 12:25:01 AM12/1/17
to santhav...@googlegroups.com
Nice. 
In the context of உனைத்தினம் தொழுதிலன் song, I was recently thinking about what Thavam is!


     <> மறக் கருணை <>

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Vis Gop

unread,
Dec 1, 2017, 12:28:09 AM12/1/17
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் [1 Dec 2017]
கண்டவரார் விண்டவரார்
சண்டனையும் முண்டனையும் சாய்த்தவளைச் சாமளையை
அண்டமெலாம் பெற்றவளை அன்னையளைத் தன்னிடமாய்க்
கொண்டவனே கங்கையினைக் குடுமியினில் தேன்சுவைக்க
வண்டமரும் கொன்றையொடு வளர்மதியோ டேற்றவனே
கண்டமிகக் கருத்துமினக் கைத்தகொடுங் காலவிடம்
உண்டவனே நெற்றியுறை உக்கிரமாம் கண்திறந்து
கண்டெரித்து முப்புரமும் காமனையும் தீர்த்தவனே
எண்டிசையை மேலுடையாய் ஏற்றவனே கையிலொரு
மண்டையெலும் போட்டுடனே மாடேறி ஊர்பவனே
கொண்டலிலே வெண்பனியில் குளிர்ந்திருக்க வேட்பவனே
தொண்டருடை நெஞ்சினிலும் தூயமறைப் பொருளினிலும் 
வெண்டிருநீற் றாற்றலிலும் வித்தினிலும் வாழ்பவனே
தண்டமிழுக் காகவருஞ் சங்கமமைத் திட்டவனே
தண்டையணிந் தம்பலத்தில் தாண்டவமா டாண்டவனே
பண்டைக்கும் பழையவனே பரமவுனைக் கண்டவரார்
விண்டவரார் சோதியென வெளியனைத்து மானவனே ! 

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

ramaNi

unread,
Dec 1, 2017, 1:00:59 AM12/1/17
to சந்தவசந்தம்
தவத்தின் தன்மை விரித்ததும் அதில் ரமணரைக் கொணர்ந்ததும் அழகு.
ரமணி


On Friday, December 1, 2017 at 6:42:40 AM UTC+5:30, ananth wrote:

இன்று பிரதோஷ நன்னாள்.


                                திருச்சிற்றம்பலம்


                               <> எது தவம்? <>



ramaNi

unread,
Dec 1, 2017, 1:02:57 AM12/1/17
to சந்தவசந்தம்
புண்ணியனின் அருளை விரிக்கும் புலவரின் பாடல் அருமை.
ரமணி

ramaNi

unread,
Dec 1, 2017, 1:35:22 AM12/1/17
to சந்தவசந்தம்
அண்ணலவன் தண்ணருளை விண்னவரின் கண்ணருளை
யெண்ணியெண்ணி நண்ணுவகை பண்ணியதும் பண்ணழகு!
ரமணி

Vis Gop

unread,
Dec 1, 2017, 1:47:19 AM12/1/17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ரமணி.
கோபால்.

Vis Gop

unread,
Dec 1, 2017, 6:54:04 AM12/1/17
to santhav...@googlegroups.com
இன்றைய பிரதோஷப் பாடலின் தொடர்ச்சி:

சோதியென வேசொலிக்கும் சொன்னநிற மானவனே
ஆதியென அந்தமென அகவையென அற்றவனே
பாதியுடல் மாதினது பங்குடைய பாங்கினனே
மேதினியு மேலுலகு மேய்ப்பவனே சுச்சுரமாய்
வேதியனின் நாவதனில் மேவுகிற மந்திரமே
காதிலதை யேவிழைந்து கந்தனிடம் கேட்டவனே
நீதிசொலிச் சுந்தரனை நீடடிமை கொண்டவனே
வாதிடநக் கீரனுடை வாய்கிளற  வேட்டவனே   
ஓதிவரு மன்பர்களின் உள்ளொளி மிகுத்துமனு
பூதிபெற வைத்துமவர் புந்தியினில் பூப்பவனே
கோதிலனுன் அன்பனுனைக் கும்பமதில் பூசையிட
பீதிமிகு மாறணுகிப் பிள்ளையின்மேல் பாசமிட
மேதியினில் ஊர்பவனை மேனிபட மாய்த்தவனே
தாதிமித்த லாங்குதக்கத் தையவெனத் தில்லையினில்
நீதினமும் ஆடுகையில் நீணிலமும் ஆட்டுகிறாய்!
யாதிறைவ நின்னிலக்கு யாரறிவார் யாண்டுகொலோ!

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 1, 2017, 10:49:08 PM12/1/17
to சந்தவசந்தம்
பிரதோஷப் பாடலைப் படித்த, பின்னூட்டம் தந்த அனைவருக்கும் என் நன்றி.

அனந்த்

2017-12-01 0:24 GMT-05:00 Siva Siva <naya...@gmail.com>:
Nice. 
In the context of உனைத்தினம் தொழுதிலன் song, I was recently thinking about what Thavam is!


On Thu, Nov 30, 2017 at 8:12 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

இன்று பிரதோஷ நன்னாள்.


                                திருச்சிற்றம்பலம்


                               <> எது தவம்? <>




 

உம்பர் உலகை அடைவனென

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 1, 2017, 10:58:36 PM12/1/17
to சந்தவசந்தம்
ஒருவிகற்பத் துதிப் பாடல் அருமை. 

அனந்த்
கண்டமிகக் கருத்துமின - கறுத்துமின
கண்திறந்து  கண்டெரித்து - கண்திறந்து கண்டான் என்று சொல்வதுண்டா?
மண்டையெலும் போட்டுடனே - மண்டையெலும் *போடுடனே  - மண்டையெலும்போ டுடனோர் (மாடேறி) - எனலாம் 
தொண்டருடை - தொண்டரது  எனலாம்.

அனந்த்

Vis Gop

unread,
Dec 2, 2017, 12:14:50 AM12/2/17
to santhav...@googlegroups.com
கண்டமிகக் கருத்துமின - கறுத்துமின        நன்றி. மாற்றிக் கொள்கிறேன். பலமுறை சிவசிவாவும் சொல்லியிருக்கிறார். கவனிக்கவில்லை.
கண்திறந்து  கண்டெரித்து - கண்திறந்து கண்டான் என்று சொல்வதுண்டா? கண்ணைத் திறந்து 'பார்வையாலேயே' எரித்தான் என்று பொருள் வரவழைத்துக் கொள்ளலாம். 'கண்ணைத்திறந்து பார்' என்று வழக்கில் உண்டல்லவோ? கோபங்கொண்ட அனுமான் உக்கிரக் கண்களால் பார்த்திருக்கக் கூடும்; எரித்தது வாலால்! இருப்பினும் இவ்வாறு சிந்தித்து நான் எழுதவில்லை. நுட்பமாகக் கண்டு சுட்டியதற்கு நன்றியுடன் திருத்திக்கொள்கிறேன்.
மண்டையெலும் போட்டுடனே - மண்டையெலும் *போடுடனே  - மண்டையெலும்போ டுடனோர் (மாடேறி) - எனலாம். அருமை! திருத்திக்கொள்கிறேன்.
தொண்டருடை - தொண்டரது  எனலாம். சரி.
பாடலின் இரண்டாம் பாகமும் தங்கள் பார்வைக்கு வந்திருக்கும்; பிழைகள் தெரிந்துகொள்ள ஆவல்.
பணிவுடன் கோபால்.  திருத்தப்பட்ட பாடல் கீழே:

பிரதோஷப் பாடல் [1 Dec 2017]
கண்டவரார் விண்டவரார்
சண்டனையும் முண்டனையும் சாய்த்தவளைச் சாமளையை
அண்டமெலாம் பெற்றவளை அன்னையளைத் தன்னிடமாய்க்
கொண்டவனே கங்கையினைக் குடுமியினில் தேன்சுவைக்க
வண்டமரும் கொன்றையொடு வளர்மதியோ டேற்றவனே
கண்டமிகக் கறுத்துமின கைத்தகொடுங் காலவிடம்                <----
உண்டவனே நெற்றியுறை உக்கிரமாம் அக்கினியால்            <----
கண்டெரித்து முப்புரமும் காமனையும் தீர்த்தவனே
எண்டிசையை மேலுடையாய் ஏற்றவனே கையிலொரு
மண்டையெலும்போ டுடனோர் மாடேறி ஊர்பவனே            <----
கொண்டலிலே வெண்பனியில் குளிர்ந்திருக்க வேட்பவனே
தொண்டரது நெஞ்சினிலும் தூயமறைப் பொருளினிலும்        <----
வெண்டிருநீற் றாற்றலிலும் வித்தினிலும் வாழ்பவனே
தண்டமிழுக் காகவருஞ் சங்கமமைத் திட்டவனே
தண்டையணிந் தம்பலத்தில் தாண்டவமா டாண்டவனே
பண்டைக்கும் பழையவனே பரமவுனைக் கண்டவரார்
விண்டவரார் சோதியென வெளியனைத்து மானவனே ! 

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 2, 2017, 4:40:47 PM12/2/17
to சந்தவசந்தம்
ஆஹா!  மிக அருமை. 
இரசித்த பல செய்திகளில் சில:
வேதியனின் நாவதனில் மேவுகிற மந்திரமே 
காதிலதை யேவிழைந்து கந்தனிடம் கேட்டவனே 

வாதிடநக் கீரனுடை வாய்கிளற  வேட்டவனே 
யாதிறைவ நின்னிலக்கு யாரறிவார் யாண்டுகொலோ!   

அனந்த்

பூசையிட*ப்  பீதிமிகு;  
அன்பனுனைக் கும்பமதில் பூசையிட - மார்க்கண்டேயன் சிவனைக் கும்ப வடிவில் வழிபட்டதாகச் சொல்வதுண்டா?

Vis Gop

unread,
Dec 4, 2017, 12:12:48 AM12/4/17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
பூசையிட*ப்  பீதிமிகு;           நன்றி!
அன்பனுனைக் கும்பமதில் பூசையிட - மார்க்கண்டேயன் சிவனைக் கும்ப வடிவில் வழிபட்டதாகச் சொல்வதுண்டா?
மார்க்கண்டேயன் அருகிலிருந்த குடத்தைச் சிவனாக எண்ணியதாக வரும் கதை கும்பத்தைப் பூசை செய்ததாக ஏதோ ஒரு வேகத்தில் வந்துவிட்டது. சுட்டியதற்கு மிக்க நன்றி.
கீழ்க்கண்டவாறு மாற்றுவது பொருந்துமா?

கோதிலனுன் அன்பனுனைக் குடவடிவிற் கண்டணைக்கப்
பீதிமிகு மாறணுகிப் பிள்ளையின்மேல் பாசமிட
மேதியினில் ஊர்பவனை மேனிபட மாய்த்தவனே

பணிவுடன் கோபால்.

Vis Gop

unread,
Dec 4, 2017, 3:38:29 AM12/4/17
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடலின் தொடர்ச்சி (பாடல் 3):

நின்னிலக்கிங் காரறிவார்? நீள்சடையில் கங்கையெனும்
கன்னிதனை ஏந்தியவண் கட்டியவ! காரிருளில்
மின்னுபவன் கலையொன்று மிளிர்ந்திடவே கூட்டியவ!
வன்னிதனைக் கண்ணுதலாய் வைத்தவனே! சங்கரனே!
அன்னைசிவ காமியுமங் கானைமுகத் தானுடனும்
பன்னிருகை யானுடனும் பார்த்திருக்கத் தூக்கிவைத்த
உன்னொருகால் இன்றொருக்கால் ஓய்வெடுத்தால் தாங்கிடத்தம்
சென்னிதர அல்பகலாய்ச் சித்தமெனக் காத்திருந்தே
உன்னினைவில் உள்ளுருகி உம்பருக்கும் கிட்டியிலா
உன்னதமாம் உணர்வுடனங் குன்னடியார் சூழ்ந்திருக்கப்
பொன்னிதனிப் போக்கெடுத்துப் புண்ணியத்தைத் தேடிவரும்
தென்னகத்துத் திருவூராம் தில்லைதனில் எழிலுருவாய்ப்
பொன்னிலங்கும் சிற்சபையில் புவியியக்க ஆடுபவ!
என்னையுமோர் மூலையிலே ஏங்கியுனை எண்ணிடவும்
பன்னிடவும் பேறருளும் பரிவுதனை என்னுரைப்பேன்!
சன்னிதியே புகலெனநான் சார்ந்திருக்க அருளுகவே!

நல்வாழ்த்துகளுடன்,
கோபால். [4 Dec 017]

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 4, 2017, 3:28:53 PM12/4/17
to சந்தவசந்தம்
> பிரதோஷப் பாடலின் தொடர்ச்சி 
முற்றெதுகை வெள்ளமும் தொடர்ந்து ஓடுகிறது!
 
 >> காரிருளில் மின்னுபவன் கலையொன்று மிளிர்ந்திடவே கூட்டியவ! --    கலைதலைமேல் ஒளிவீசக் கூட்டியவ என்னலாம் (அது ஏகாரத்தைத் தவிர்க்கும், மற்றவற்றைச் சிவன்  ஏந்திய அங்கங்களைச் சொன்னது போல  மதியின் இடத்தையும் தெளிவாக்கும். 

>> அன்னைசிவ *காமியுமங் கானைமுகத் *தானுடனும் 
பன்னிருகை *யானுடனும் பார்த்திருக்கத் தூக்கிவைத்த

சிவகாமியும் என்ற உம்மைக்குப் பின், உடனும் என்ற ஆட்சி பொருந்தவில்லை.  ஆனைமுகத் தானுமுடன் பன்னிருகை வேலவனும் பார்த்திருக்க  என்னலாம்.

>> உன்னொருகால் இன்றொரு*க்கால் ஓய்வெடுத்தால் தாங்கிடத்தம் -  ஒற்றுமிகை
 
>> பொன்னிதனிப் போக்கெடுத்துப் புண்ணியத்தைத் தேடிவரும் 
தென்னகத்துத் திருவூராம் தில்லைதனில்   -   தில்லையருகில் காவிரி ஓடுகிறதா?
 
அனந்த்
---------
பிரதோஷப் பாடலின் தொடர்ச்சி (பாடல் 3):
 
நல்வாழ்த்துகளுடன்,
கோபால். [4 Dec 017]

Vis Gop

unread,
Dec 5, 2017, 12:10:31 AM12/5/17
to santhav...@googlegroups.com
திருத்தங்களுக்கு நன்றி. திருத்திய வடிவத்தைப் பிறகு இங்கு இடுகிறேன்.
பொன்னிதனிப் போக்கெடுத்துப் புண்ணியத்தைத் தேடிவரும் 
தென்னகத்துத் திருவூராம் தில்லைதனில்   -   தில்லையருகில் காவிரி ஓடுகிறதா?
காவிரி கொள்ளிடமாகப் பிரிந்து (தனிப் போக்கெடுத்து) ஓடுகையில் சிதம்பரத்தைத் தொடுகிறது.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81

கொள்ளிடம்

ஆற்றின் போக்கு

திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி, முட்டம் வழியே பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்

கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.[1]. சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.

பணிவுடன்,
கோபால்.

Vis Gop

unread,
Dec 5, 2017, 3:19:49 AM12/5/17
to santhav...@googlegroups.com
திரு அனந்த் அவர்களின் அறிவுரைப்படி திருத்தப்பட்ட பின்:

2017-12-04 14:08 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:
பிரதோஷப் பாடலின் தொடர்ச்சி (பாடல் 3):

நின்னிலக்கிங் காரறிவார்? நீள்சடையில் கங்கையெனும்
கன்னிதனை ஏந்தியவண் கட்டியவ! காரிருளில்
மின்னுபவன் கலைதலைமேல் ஒளிவீசக் கூட்டியவ!            <----
வன்னிதனைக் கண்ணுதலாய் வைத்தவனே! சங்கரனே!
அன்னைசிவ காமியுமங் கானைமுகத் தானுமுடன்            <----
பன்னிருகை வேலவனும் பார்த்திருக்கத் தூக்கிவைத்த        <----
உன்னொருகால் இன்றொருகால் ஓய்வெடுத்தால் தாங்கிடத்தம்   <----
சென்னிதர அல்பகலாய்ச் சித்தமெனக் காத்திருந்தே
..
நன்றியுடன் கோபால்.
It is loading more messages.
0 new messages